search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Plus-1 Examination"

    • மதுரையில் இன்று நடந்த பிளஸ்-1 தேர்வை 35,279 மாணவ-மாணவிகள் எழுதினர்.
    • இந்த தேர்வு 116 மையங்களில் நடந்தது.

    மதுரை

    தமிழகம் முழுவதும் இன்று பிளஸ்-1 பொதுத்தேர்வு தொடங்கியது. மதுரை மாவட்டத்தில் 326 அரசு மற்றும் தனியார் மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த 17 ஆயிரத்து 56 மாணவர்கள், 18 ஆயிரத்து 223 மாணவிகள் என மொத்தம் 35 ஆயிரத்து 279 பேர் பிளஸ்-1 பொதுதேர்வு எழுதினர்.

    இதற்காக மாவட்டத்தில் 116 தேர்வு மையங்கள் அமைக்கப்ப ட்டிருந்தன. இன்று காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கியது. ஆனால் 9.45 மாணவ, மாணவிகளின் ஹால் டிக்கெட்டுகள் ஆய்வு செய்யப்பட்டு தேர்வறைக்குள் அனுமதிக்கப் பட்டனர். இன்று தமிழ் மொழிப்பாடத் தேர்வை மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் எழுதினர்.

    முன்னதாக தேர்வு மையங்களை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி, உயர்அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். முறைகேடு நடப்பதை தடுக்க பறக்கும் படையும் அமைக்கப்பட்டிருந்தது. தேர்வு பணிக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

    இந்த ஆண்டு மாற்றுத்திறன் கொண்ட 352 மாணவ-மாணவிகளும் இன்று பிளஸ்-1 தேர்வை எழுதினர். அவர்களுக்காக தேர்வெழுத உதவியாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். இதேபோல் 4 மையங்களில் தனித்தேர்வர்கள் 1,231 பேர் தேர்வெழுதினர்.

    சிவகங்கை மாவட்டத்தில் 7 ஆயிரத்து 76 மாணவர்களும், 8 ஆயிரத்து 398 மாணவிகளும் என மொத்தம் 15 ஆயிரத்து 474 பேர் பிளஸ்-1 தேர்வு எழுதினர். இதுதவிர 158 பேர் தனித்தேர்வர்களாக பங்கேற்றனர். விருதுநகர் மாவட்டத்தில் 10 ஆயிரத்து 240 மாணவர்களும், 11 ஆயிரத்து 796 மாணவிகளும் என மொத்தம் 22 ஆயிரத்து 36 பேர் பிளஸ்-1 தேர்வு எழுதினர். இதற்காக 50-க்கும் மேற்பட்ட தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

    • 24 ஆயிரத்து 770 பேர் இத்தேர்வை எழுதினர்.
    • 157 ஆசிரியர்கள் கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ் 1 பொதுத்தேர்வு இன்று தொடங்கி ஏப்ரல் 5-ந் தேதி வரை நடக்கிறது. தமிழகம் முழுவதும் நேற்று பிளஸ் 2 தேர்வு தொடங்கிய நிலையில் இன்று பிளஸ் 1 தேர்வும் தொடங்கியது.

    அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் 93 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 217 மேல்நிலைப் பள்ளிகளை சேர்ந்த 24 ஆயிரத்து 556 மாணவ, மாணவிகள், 214 தனித்தேர்வர் என மொத்தம் 24 ஆயிரத்து 770 பேர் இத்தேர்வை எழுதினர். முதன்மை கண்காணி ப்பாளர், துறை அலுவலர், அறை கண்காணிப்பாளர் என மொத்தம் 1,608 பேர் பிளஸ் 1 பொதுத்தேர்வு பணியில் ஈடுபட்டனர்.கலெக்டர் வினீத், முதன்மை கல்வி அலுவலர் திருவளர்ச்செல்வி, மாவட்ட கல்வி அலுவலர் தலைமை யில் 157 ஆசிரியர்கள் கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் தேர்வு நடைபெறும் மையங்களில் திடீரெனில் சென்று சோதனை நடத்தினர்.

    • பிளஸ்-1 பொதுத்தேர்வினை எழுதிய 251 மாணவ-மாணவிகளும் தேர்ச்சி பெற்றனர்.
    • வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளை பள்ளி தாளாளர் ஜெயேந்திரன் வி. மணி, முதல்வர் ஜெயந்தி ஜெயேந்திரன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

    நெல்லை:

    நெல்லை மகாராஜநகர் ஸ்ரீ ஜெயேந்திரா சுவாமிகள் வெள்ளி விழா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 பொதுத்தேர்வினை எழுதிய 251 மாணவ-மாணவிகளும் தேர்ச்சி பெற்றனர்.

    மாணவி ஷ்ரேயா 594 மதிப்பெண்களும், அல்சமீனா 593 மதிப்பெண்களும், எபிஷா 591 மதிப்பெண்களும், சிவ சுப்பிரமணிய மனோஜ், ஸ்ரீராம், ஜனனி ஆகிய 3 பேரும் 589 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர்.

    மேலும் கணிதம், இயற்பியல், கணினி அறிவியல் பாடங்களில் தலா 7 பேரும், வேதியியலில் ஒருவரும், உயிரியல் பாடத்தில் ஒருவரும், வணிகவியலில் ஒருவரும், வணிக கணிதத்தில் 2 பேரும், கணக்குப்பதிவியலில் 5 பேரும் முழு மதிப்பெண்களை பெற்று சாதனை படைத்துள்ளனர்.

    வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளை பள்ளி தாளாளர் ஜெயேந்திரன் வி. மணி, முதல்வர் ஜெயந்தி ஜெயேந்திரன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

    • பாரத் மாண்டிசோரி பள்ளியில் 62 மாணவ- மாணவிகள் பிளஸ்-1 பொதுத் தேர்வு எழுதியிருந்தனர். இதில் அனைவரும் முழுத் தேர்ச்சி பெற்றுச் சாதனை படைத்தனர்.
    • வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளை பாரத் கல்விக் குழுமத் தலைவர் மோகன கிருஷ்ணன், செயலாளர் காந்திமதி, ஆலோசகர் உஷாரமேஷ், இயக்குநர் ராதாபிரியா ஆகியோர் பாராட்டினர்.

    தென்காசி:

    இலஞ்சி பாரத் மாண்டிசோரி பள்ளியில் 62 மாணவ- மாணவிகள் பிளஸ்-1 பொதுத் தேர்வு எழுதியிருந்தனர். இதில் அனைவரும் முழுத் தேர்ச்சி பெற்றுச் சாதனை படைத்தனர்.

    மாணவி ப்ரிஷா தமிழ் - 98, ஆங்கிலம் - 94, இயற்பியல் -100, வேதியியல் -85, உயிரியல் - 96, கணிதம் - 95, மதிப்பெண்கள் பெற்றுச் சாதனை படைத்தார்.

    மாணவி நிவேதிகா தமிழ் - 95, ஆங்கிலம் - 90, இயற்பியல் - 90, வேதியியல் - 84, உயிரியல் - 99, கணிதம் -100 மதிப்பெண்கள் பெற்றுச் சாதனை படைத்தார்.

    மாணவர் சக்தீஸ்வரன் தமிழ் - 87, ஆங்கிலம் -71, பொருளியல் -96, வணிகவியல் -97, கணக்குப்பதிவியல் -100, வணிகக் கணிதம் - 95, மதிப்பெண்கள் பெற்றுச் சாதனை படைத்தார்.

    பாரத் மாணவ- மாணவிகள் தமிழில் -98, சமஸ்கிருதம் -98, ஆங்கிலம் -95, கணிதம் -100, இயற்பியல் -100, கணக்குப்பதிவியல் -100, உயிரியல் -99, வணிகவியல் -97, பொருளியல் -96, வணிகக் கணிதம் -95, ஆங்கிலத் தகவல் தொடர்பு -94, கணிப்பொறி அறிவியல் -89, வேதியியல் -87, கணிணிப் பயன்பாட்டில் -86 மதிப்பெண்களும் அதிகமாக பெற்றனர்.

    வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளை பாரத் கல்விக் குழுமத் தலைவர் மோகன கிருஷ்ணன், செயலாளர் காந்திமதி, ஆலோசகர் உஷாரமேஷ், இயக்குநர் ராதாபிரியா ஆகியோர் பாராட்டினர்.

    ×