என் மலர்
நீங்கள் தேடியது "pocso act"
- பள்ளி சீருடைக்கு அளவெடுப்பதற்காக ஒரு ஆண் டெய்லரும், பெண் டெய்லரும் பள்ளிக்கு வந்தனர்.
- இந்த சம்பவம் குறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கவிதா விசாரணை நடத்தினார்.
மதுரை நகர் அனைத்து மகளிர் போலீசில் மாணவி ஒருவர் புகார் அளித்து இருந்தார். அந்த புகாரில், நான் தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறேன். பள்ளி சீருடைக்கு அளவெடுப்பதற்காக ஒரு ஆண் டெய்லரும், பெண் டெய்லரும் பள்ளிக்கு வந்தனர். அவர்களிடம் அளவு எடுப்பதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்தேன். இதுதொடர்பாக வகுப்பு ஆசிரியையிடம் கூறினேன். ஆனால், அவர் கண்டிப்பாக சீருடைக்கு அளவெடுக்க வேண்டும் என கூறிவிட்டார். இதுபற்றி பள்ளி நிர்வாகத்தினரிடம் புகார் கூறினேன். அவர்களும் அது பற்றி கண்டுகொள்ளவில்லை.
பள்ளிக்கு வந்த ஆண் டெய்லர் அளவெடுத்தபோது என்னிடம் அத்துமீறினார். உடல் பாகங்களை தொட்டு, பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். எனவே, அவர் மீதும் அவருக்கு உடந்தையாக இருந்த ஆசிரியை மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கவிதா விசாரணை நடத்தினார்.
இதில், பள்ளிக்கு வந்து சீருடைக்காக அளவெடுத்தபோது மாணவியிடம் அத்துமீறியதாக 60 வயதுடைய டெய்லர் மற்றும் அவரது சகோதரியான மற்றொரு டெய்லர், இதற்கு உடந்தையாக இருந்ததாக ஆசிரியை ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து மாணவியிடமும், அந்த 3 பேரிடமும் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் மாணவிகளுக்கு சீருடை அளவெடுத்த விவகாரம் தொடர்பாக 3 பேர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளனர். 2 டெய்லர்கள், அளவெடுக்க வைத்த ஆசிரியை உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாணவி அளித்த புகாரின் பேரில் டெய்லர்கள் பாரதி மோகன், கலாதேவி, மாணவியை கட்டாயப்படுத்தியதாக ஆசிரியை சாராவும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
- சின்னசாமி 14 வயதுடைய சிறுமியை திருமணம் செய்தார்.
- மேலும் அந்த சிறுமி தற்போது 4 மாத கர்ப்பமாக உள்ளார்.
பெரம்பலூர் :
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, பசும்பலூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னசாமி ( வயது37). கொத்தனாரான இவர் 14 வயதுடைய சிறுமியை திருமணம் செய்தார்.
மேலும் அந்த சிறுமி தற்போது 4 மாத கர்ப்பமாக உள்ளார். இந்த திருமணத்திற்கு சின்ன சாமியின் தாயும், சிறுமியின் தாயும் உடந்தையாக இருந்துள்ளனர்.
இது குறித்து பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் சின்னசாமி, அவரது தாய் மற்றும் சிறுமியின் தாய் ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிந்து குழந்தை திருமண செய்த சின்னசாமியை கைது செய்தனர்.
- போக்சோ சட்டத்தில் நடவடிக்கை
- திருமண ஆசைகாட்டி துணிகரம்
குடியாத்தம்:
குடியாத்தம் செருவங்கி புதுதெரு பகுதியைச் சேர்ந்தவர் தேவேந்திரன் இவரது மகன் பிரதீப் (வயது 22) வெல்டிங் கடையில் வேலை செய்து வருகிறார். இவர் 16 வயதான மாணவியை காதலித்து வந்தார். மாணவியிடம் திருமண ஆசைகாட்டி பிரதீப் நெருக்கமாக இருந்துள்ளார்.
இந்நிலையில் அந்த மாணவிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது இதனையடுத்து மாணவியை அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு பரிசோதனை செய்ததில் மாணவி 3 மாத கர்ப்பமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் தீவிரமாக விசாரித்தபோது வாலிபர் பிரதீப் ஆசை வார்த்தைகள் கூறி நெருக்கமாக இருந்ததாக கூறி உள்ளார்.
இதனை தொடர்ந்து அவர்கள் குடியாத்தம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அத ன்பேரில் குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் நிர்மலா ஆகி யோர் போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து பிரதீப்பை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விக்னேஷ், மாணவியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகளை அள்ளி வீசியுள்ளார்.
- வாலிபர் விக்னேஷ் மீது ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெரம்பூர்:
புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ். 19 வயது வாலிபரான இவருக்கும், வியாசர்பாடியைச் சேர்ந்த பிளஸ்-1 மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு உள்ளது.
புரசைவாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வரும் மாணவி, தினமும் பள்ளிக்கு பஸ்சில் சென்று வந்தார். வாலிபர் விக்னேசும் பஸ்சிலேயே வேலைக்கு சென்று வந்தார். அப்போது தான் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.
விக்னேஷ், மாணவியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகளை அள்ளி வீசியுள்ளார். தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மாணவியை, விக்னேஷ் வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். இருவரும் தனிமையில் இருந்த போது விக்னேஷ், மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார்.
இதில் பிளஸ்-1 மாணவி கர்ப்பம் ஆனார். இதுபற்றி தெரிய வந்ததும் மாணவியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக புளியந்தோப்பு மகளிர் போலீசில் புகார் அளித்தனர்.
இதையடுத்து வாலிபர் விக்னேஷ் மீது 'போக்சோ' சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தப்பி ஓடிய அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கர்ப்பமான மாணவி எழும்பூர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலையை டாக்டர்கள் பரிசோதித்து வருகிறார்கள்.
- பள்ளி மாணவிக்கு அதே பகுதியில் வசித்து வரும் லாரி கிளீனரான லோகேசுடன் பழக்கம் ஏற்பட்டது.
- கடந்த 20-ந் தேதி பள்ளிக்கு சென்ற மாணவி திடீரென மாயமானார்.
கும்மிடிப்பூண்டி:
புதுகும்மிடிப்பூண்டியை சேர்ந்த 14 வயது மாணவி அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு அதே பகுதியில் வசித்து வரும் லாரி கிளீனரான லோகேசுடன் (22) பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இது காதலாக மாறியது.
இது பற்றி அறிந்த மாணவியின் பெற்றோர் கண்டித்தனர். மேலும் மாணவிக்கு கட்டுப்பாடுகள் விதித்ததாக தெரிகிறது.
இதற்கிடையே கடந்த 20-ந் தேதி பள்ளிக்கு சென்ற மாணவி திடீரென மாயமானார். அவரை பெற்றோர் தேடி வந்தனர். இது குறித்து போலீசிலும் புகார் செய்யப்பட்டது. இந்த நிலையில் மாணவி, காதலன் லோகேசுடன் திண்டிவனத்தில் விடுதியில் அறை எடுத்து தங்கி இருப்பது தெரிந்தது. போலீசார் விரைந்து சென்று மாணவியை மீட்டனர். மேலும் லோகேசை கைது செய்தனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மாணவியை திருத்தணி கோவிலுக்கு அழைத்து சென்று தாலி கட்டி திருமணம் செய்து இருப்பது தெரிந்தது. பின்னர் அவர்கள் திருப்பூர், திண்டிவனம் சென்று தங்கி உள்ளனர்.
மாணவியை திருமணம் செய்த லோகேஷ் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- இவர்கள் இருவரும் 6 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக காஞ்சிபுரத்தில் உள்ள குழந்தைகள் நல அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
- கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் அவர்கள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சோமங்கலம்:
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அடுத்த சோமங்கலம் நல்லூர் பகுதியை சேர்ந்தவர்கள் ராஜேந்திரன் (வயது 60) மற்றும் தேவராஜ் (55). இவர்கள் இருவரும் 6 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக காஞ்சிபுரத்தில் உள்ள குழந்தைகள் நல அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இது குறித்த புகாரின் பேரில் கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் அவர்கள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- கே.ஜி.சாவடி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட எட்டிமடை பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து சிறுமியுடன் தங்கி அங்கு வேலைக்கு சென்று வந்தார்.
- போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஒடிசா போலீசார் தெரிவித்தனர்.
கோவை:
ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 21 வயது வாலிபருக்கு, அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. இந்த காதல் விவகாரம் சிறுமியின் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதுகுறித்து சிறுமி தனது காதலனிடம் கூறியதாக தெரிகிறது. இதனையடுத்து வாலிபர் கடந்த ஜூன் மாதம் 13-ந் தேதி ஆசை வார்த்தை கூறி சிறுமியை ஒடிசாவில் இருந்து கோவைக்கு கடத்தி வந்தார்.
பின்னர் கே.ஜி.சாவடி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட எட்டிமடை பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து சிறுமியுடன் தங்கி அங்கு வேலைக்கு சென்று வந்தார். அப்போது வாலிபர் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி அவரை பாலியல் பலாத்காரம் செய்தார்.
சிறுமி மாயமானது குறித்து அவரது பெற்றோர் ஒடிசாவில் உள்ள சதார் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.
அப்போது சிறுமி கோவையில் இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. இதனையடுத்து ஒடிசா மாநிலம் சதார் போலீசார் நேற்று கோவைக்கு வந்தனர். அவர்கள் கே.ஜி.சாவடி போலீசாரின் உதவியுடன் எட்டிமடையில் வாலிபருடன் தங்கி இருந்த சிறுமியை மீட்டனர். பின்னர் அவர்கள் 2 பேரையும் ஒடிசாவுக்கு அழைத்து சென்றனர். வாலிபர் சிறுமியை கடத்தி வந்து 7 மாதமாக அவருடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார்.
எனவே வாலிபர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஒடிசா போலீசார் தெரிவித்தனர்.
- சிறுமியின் சித்தப்பா மகன்களில் ஒருவருக்கு 10 ஆண்டு சிறையும், மற்றொருவருக்கு 5 ஆண்டு சிறையும் விதித்து நீதிபதி தீர்ப்பு.
- பாதிக்கப்பட்ட 13 வயது சிறுமிக்கு தமிழக அரசு சார்பாக ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று நீதிபதி கூறினார்.
சென்னை:
சென்னை மயிலாப்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பெற்றோரை பிரிந்து வாழும் நிலையில் தாத்தாவின் பாராமரிப்பில் வசித்து வந்த 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார்.
இது சம்பந்தமாக அவர் படிக்க கூடிய பள்ளி நிர்வாகம் அளித்த தகவல் அடிப்படையில் மாவட்ட குழந்தைகள் நலக்குழு மையிலாப்பூர் போலிசாரில் புகார் அளித்தார்கள்.
இந்த புகாரின் அடிப்படையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக சிறுமியின் தாத்தா, 3 சித்தப்பாக்கள், சித்தப்பாக்களின் மகன்கள் 2 பேர் உட்பட 6 பேருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றம் விசாரித்தது. வழக்கை விசாரித்த ராஜலட்சுமி இந்த குற்றம்சாட்டப்பட்ட அனைவருக்கும் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்து சந்தேகத்திற்கிடமில்லாமல் நிரூபிக்கப்பட்டுள்ளதால், போக்சோ சட்டத்தின் கீழ் சிறுமியின் தாத்தா, 3 சித்தப்பா ஆகிய 4 பேருக்கு ஆயுள் தண்டனையும், 1 லட்சத்மு 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்திருக்கிறார்.
மேலும் சிறுமியின் சித்தப்பா மகன்களில் ஒருவருக்கு 10 ஆண்டு சிறையும், மற்றொருவருக்கு 5 ஆண்டு சிறையும் விதித்து நீதிபதி தீர்பளித்திருக்கிறார்.
இது தவிர பாதிக்கப்பட்ட 13 வயது சிறுமிக்கு தமிழக அரசு சார்பாக ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் நீதிபதி தீர்ப்பளித்தள்ளார். தீர்ப்பு அளிக்கப்பட்ட குற்றவாளிகள் அனைவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
- ரிபா கடந்த சில நாட்களுக்கு முன்பு தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- ரிபாவின் தற்கொலைக்கான கடிதம் சிக்கியது. இதனை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
திருவனந்தபுரம்:
கேரளா மாநிலம் கொயிலாண்டி பகுதியை சேர்ந்தவர் ரிபா. இவர் கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் ரிபா கடந்த சில நாட்களுக்கு முன்பு தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது தொடர்பாக கொயிலாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது ரிபாவின் தற்கொலைக்கான கடிதம் சிக்கியது. இதனை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
கடிதத்தில், காப்பாட்டை சேர்ந்த அவரது தாத்தா அபுபக்கர் பாலியல் பலாத்காரம் செய்ததால் மனவேதனையடைந்து தற்கொலை செய்வதாகவும் குறிப்பிட்டு உள்ளார். இதையடுத்து அபுபக்கரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
- சூரமங்கலம் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சுரேஷ்பாபுவை கைது செய்தனர்.
- அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆய்வக உதவியாளராக பணிபுரிந்த வீரவேலை சஸ்பெண்டு செய்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி முருகன் உத்தரவிட்டு உள்ளார்.
சேலம்:
சேலம் அஸ்தம்பட்டி எம்.டி.எஸ். நகர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்பாபு (வயது 48). இவர் சேலம் அருகே சேலத்தாம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 5-ம் வகுப்பு ஆசிரியராக பணியாற்றினார். இவர் மதுபோதையில் பள்ளிக்கு வந்து மாணவிகளுக்கு தொந்தரவு கொடுத்து வந்து உள்ளார்.
இது குறித்து பல்வேறு புகார்கள் எழுந்தன. இந்த நிலையில் கடந்த 23-ந் தேதி அவர் மதுபோதையில் பள்ளிக்கு வந்து மாணவிகளுக்கு தொந்தரவு கொடுத்து உள்ளார். இதை பார்த்த பெற்றோர் அவரை சரமாரியாக தாக்கினர்.
இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் ஆசிரியர்கள், கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது அவர், மாணவிகளுக்கு தொந்தரவு கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சூரமங்கலம் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சுரேஷ்பாபுவை கைது செய்தனர். இந்த நிலையில் அவரை பணி இடைநீக்கம் செய்து மாவட்ட கல்வி அலுவலர் சந்தோஷ் உத்தரவிட்டு உள்ளார்.
சேலம் இரும்பாலை அருகே உள்ள கீரபாப்பம்பாடி அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆய்வக உதவியாளராக கருப்பூரை சேர்ந்த வீரவேல் (38) என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக கூறி போக்சோ சட்டத்தின் கீழ் சேலம் டவுன் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீரவேலை கைது செய்தனர். இந்த நிலையில் வீரவேலை சஸ்பெண்டு செய்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி முருகன் உத்தரவிட்டு உள்ளார்.
- டாக்டர்கள் பரிசோதித்தபோது மாணவி 4 மாத கர்ப்பமாக இருப்பது தெரிந்தது.
- மாணவியை கர்ப்பமாக்கிய பிளஸ்-2 மாணவர் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் 6-வது பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
பெரம்பூர்:
வியாசர்பாடியை சேர்ந்த 17 வயது மாணவி, புரசைவாக்கத்தில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். வயிற்று வலியால் அவதிப்பட்ட அவரை பரிசோதனைக்காக எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல ஆஸ்பத்திரிக்கு தாய் அழைத்து சென்றார்.
டாக்டர்கள் பரிசோதித்தபோது மாணவி 4 மாத கர்ப்பமாக இருப்பது தெரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் தாய் செம்பியம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.
விசாரணையில் மாணவியை புரசைவாக்கத்தில் உள்ள மற்றொரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வரும் மாணவர், கர்ப்பம் ஆக்கியது தெரிந்தது.
ஒரே பகுதியில் உள்ள பள்ளிக்கு செல்லும்போது அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு நெருங்கி பழகி உள்ளனர். இந்த நிலையில் மாணவியை கர்ப்பமாக்கிய பிளஸ்-2 மாணவர் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் 6-வது பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். மேலும் விசாரணை நடந்து வருகிறது.
- போக்சோ சட்டத்தில் நடவடிக்கை
- போலீசார் விசாரணை
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் தாலுகா வேளானந்தல் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை மகன் மணிகண்டன் (வயது 25).
இவர், 17 வயது இளம் பெண்ணை ஒரு தலைபட்சமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணிடம் தன்னை காதலிக்க வேண்டும் என்றும், திருமணம் செய்து கொள்ளுமாறும் கட்டாயப்படுத்தியதாக தெரிகிறது.
இதுகுறித்து இளம்பெண் நேற்று திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர்.