என் மலர்
நீங்கள் தேடியது "Poisoning"
- பெண்கள் அதிக அளவில் தொடர்ந்து கும்பாபிஷேக நிகழ்வுகளுக்கான வேலைகளை செய்து வந்தனர்.
- பூச்சி மருந்து குடித்த 6 பேரையும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம், தொப்பூர் அருகே வேப்பமரத்தூர் கிராமம் அமைந்துள்ளது. இங்கு சுமார் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்த கிராமத்தில் கோவில் கும்பாபிஷேகம் கடந்த 2013-ம் ஆண்டு நடத்த முற்பட்டபோது அதே பகுதியைச் சேர்ந்த கலப்பு திருமணம் தம்பதியினரை கலந்து கொள்ளக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில் அந்த தம்பதியினர், தங்களை கோவிலுக்குள் அனுமதிக்க மறுக்கின்றனர். காதல் கலப்பு திருமணம் செய்ததால் தான் இவ்வாறு செய்கின்றனர் என்று கிராமத்தை சேர்ந்த 22 பேர் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.
வழக்கு நீதிமன்றத்தில் 13 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் கடந்த மாதம் நீதிமன்றத்தில் கிராம மக்கள் நாங்கள் கோவிலுக்கு வரும் யாரையும் தடுக்கவில்லை.
மேலும் இது அனைவருக்குமான கோவில் தனிப்பட்ட நபர் அவருடைய சொந்த வெறுப்புகளின் காரணமாக தவறான வழக்கு தொடுத்துள்ளார் என கிராம மக்கள் கொடுத்த விளக்கத்தின் அடிப்படையில் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த தடை இல்லை என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதாக கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து கிராம மக்கள் அனைவரும் ஒன்று கூடி கோவில் இந்த வருடம் கும்பாபிஷேகம் நடத்துவது என முடிவெடுத்துள்ளனர். இதற்காக அப்பகுதியை சேர்ந்த பெண்கள் அதிக அளவில் தொடர்ந்து கும்பாபிஷேக நிகழ்வுகளுக்கான வேலைகளை செய்து வந்தனர்.
இந்நிலையில் கோவில் கும்பாபிஷேகத்திற்கு கலப்பு திருமணம் செய்த தம்பதியினரிடம் வரி வாங்கவில்லை என்றும், தங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்து விட்டதாக பொம்மிடி போலீஸ் நிலையத்தில் மீண்டும் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து பொம்மிடி போலீசார் இருதரப்பினரையும் அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது போலீசார் கோவில் கும்பாபிஷேகம் நடத்த அனுமதி வழங்க முடியாது விழா ஏற்பாடுகளை நிறுத்தி வையுங்கள் என்று கிராம மக்களிடம் தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து 13 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறும் என்ற மகிழ்ச்சியில் பணிகளில் ஈடுபட்டு வந்த பெண்கள் கலப்பு திருமணம் செய்தவர்களால் கோவில் கும்பாபிஷேகம் மீண்டும் நிறுத்தி வைக்கப்பட்டதை தாங்க முடியாமல் மனம் உடைந்து கிராம மக்கள் அனைவரும் சேர்ந்து நேற்று இரவு ஊர் நடுவில் பாயாசத்தை காய்ச்சினர்.
பின்னர் அவர்கள் அதில் செடிக்கு அடிக்கும் பூச்சி மருந்தை கலந்து கிராம மக்களில் 6 பேர் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர். உடனே போலீசார் தடுக்க முயன்றனர்.
அதற்குள் அந்த பாயசாத்தை வேப்பமரத்தூரைச் சேர்ந்த ராமு (வயது35), கவிதா (35), அமுதா (35), அலமேலு, விஜயா, தேன்மொழி ஆகிய 6 பேர் குடித்துள்ளனர்.
இதனால் பதறிப்போன போலீசார் 108 ஆம்புலன்ஸ் மூலம் பூச்சி மருந்து குடித்த 6 பேரையும் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து பொம்மிடி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 6 பேரையும் பாப்பிரெட்டிப்பட்டி எம்.எல்.ஏ. கோவிந்தசாமி மற்றும் தருமபுரி தி.மு.க. மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன் ஆகியோர் நேரில் சந்தித்து அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.
இச்சம்பவத்தால் அக்கிரமத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- 108 ஆம்புலன்சு உதவியாளர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
- வச்சகாரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் அருகே உள்ள முதலிப்பட்டிைய சேர்ந்தவர் சமுத்திரகனி. இவரது மகன் சண்முககனி(வயது29). இவர் 108 ஆம்புலன்சில் உதவியாளராக பணியாற்றி வந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சண்முககனி தான் ஒரு பெண்ணை காதலிப்ப தாகவும் திருமணம் செய்து வைப்பதாகவும் பெற்றோரிடம் கூறியுள்ளார்.
அதற்கு அவர்கள் சிறிது காலத்திற்கு பின் திருமணம் செய்து கொள்ளலாம் என கூறியுள்ளார். இதனால் மனமுடைந்த சண்முககனி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து வச்சகாரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சில நாட்களாக அங்கு சுற்றித் தெரியும் தெரு நாய்கள், திடீரென மர்மமான முறையில் இறந்து போய் உள்ளன.
- ஒரே நேரத்தில் சுமார் 30க்கும் மேற்பட்ட நாய்கள் இறந்து போன சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர் ஊராட்சி லட்சுமி நகர், வ.உ.சி நகர், கரைப்புதூர் உள்ளிட்ட பகுதிகளில், கடந்த சில நாட்களாக அங்கு சுற்றித் தெரியும் தெரு நாய்கள், திடீரென மர்மமான முறையில் இறந்து போய் உள்ளன. மர்மமான முறையில் தெரு நாய்கள் இறந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில், அக்கம் - பக்கம் வீதிகளில் விசாரித்த போது அந்தப் பகுதிகளிலும் இதே போல தெரு நாய்கள் மர்மமான முறையில் இறந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து வ.உ.சி. நகர் பகுதியைச் சேர்ந்த ஒருவர் கூறியதாவது:- எங்களது பகுதியில், சுமார் பத்துக்கும் மேற்பட்ட தெரு நாய்கள் சுற்றித் திரியும், வீடுகள் தோறும் அவைகளுக்கு உணவு வைப்பார்கள். அதனை உண்டு விட்டு தெருக்களில் சுற்றித் திரியும். இரவில் அங்குள்ள பகுதிகளுக்கு பாதுகாப்பாக இருந்தன. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மர்மமான முறையில் அந்த நாய்கள் இறந்து கிடந்தன. தற்போது எங்கள் பகுதியில் ஒரு தெரு நாய் கூட இல்லை. இருந்த அனைத்து நாய்களுமே மர்மமான முறையில் கொல்லப்பட்டு விட்டன என்று தெரிவித்தார்.
மற்றொருவர் கூறுகையில், எங்கள் வீட்டில் 2 நாய்கள் வளர்த்து வந்தோம். மாலை நேரங்களில் தெரு நாய்களுடன் சேர்ந்து விளையாடிவிட்டு மீண்டும் வீட்டிற்கு வந்து விடும். இந்த நிலையில் நேற்று வீட்டிற்கு வந்த நாய் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தது. இதையடுத்து அதனை கால்நடை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றோம். அங்கு அது இறந்து விட்டது. இது குறித்து டாக்டர்கள் கூறுகையில், கொடிய விஷம் கலந்த உணவை சாப்பிட்டுள்ளது. அதனால் தான் உடனே இறந்து விட்டது என்று தெரிவித்தனர். நான் அதனை எங்கள் வீட்டுக்கு அருகே அடக்கம் செய்துவிட்டு வந்தபோது எங்கள் பகுதியில் இருந்த சுமார் 15க்கும் மேற்பட்ட நாய்கள் இறந்து போய் விட்டதாக அக்கம் - பக்கம் உள்ளவர்கள் தெரிவித்தனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதற்கிடையே நாய்கள் இறப்பு குறித்து பல்லடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் பேரில் கொடிய விஷம் வைத்து நாய்களைக் கொன்றவர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே நேரத்தில் சுமார் 30க்கும் மேற்பட்ட நாய்கள் இறந்து போன சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- சேலம் அம்மாபேட்டை சாஸ்திரி நகர் பகுதியை சேர்ந்த வேலு மனைவி ராமாயி வீட்டை வாங்கியவர் வீட்டை காலி செய்யுமாறு மூதாட்டியிடம் கூறியுள்ளார்.
- இதனால் மனமுடைந்த ராமாயி சம்பவத்தன்று விஷம் குடித்து மயங்கினார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
சேலம்:
சேலம் அம்மாபேட்டை சாஸ்திரி நகர் பகுதியை சேர்ந்த வேலு மனைவி ராமாயி (72). இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இவரது வீட்டை அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கு விற்று விட்டார். இருப்பினும் அதே வீட்டில் குடியிருந்து வந்தார்.
இந்த நிலையில் வீட்டை வாங்கியவர் வீட்டை காலி செய்யுமாறு மூதாட்டியிடம் கூறியுள்ளார். இதனால் மனமுடைந்த ராமாயி சம்பவத்தன்று விஷம் குடித்து மயங்கினார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த ராமாயி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சுத்தமான காற்றை சுவாசிக்க விடாமல் தடுக்க கூடாது.
- உயிர் மீட்பு சுவாச முதலுதவி தேவைப்பட்டால் செய்யலாம்.
விஷம் குடித்தவரை முதலில் சுத்தமான காற்றுள்ள பெரிய இடத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். எல்லோரும் சுற்றி நின்று அவர் சுத்தமான காற்றை சுவாசிக்க விடாமல் தடுக்க கூடாது. விஷம் குடித்து படுத்திருப்பவர் உயிரோடு இருக்கிறாரா, இல்லையா என்று உங்களால் முடிந்தவரை கண்டுபிடிக்க முயற்சி செய்ய வேண்டும். மூச்சு விடுகிறாரா, மார்பு சுருங்கி விரிகிறதா, இருமல் எதுவும் இருக்கிறதா, கண் திறந்து மூடுகிறாரா, வாய் திறந்து மூடுகிறாரா என்பதை கவனிக்க வேண்டும். உயிர் மீட்பு சுவாச முதலுதவி தேவைப்பட்டால் அதை செய்யலாம்.
விஷம் குடித்தவரின் தற்போதைய நிலை எப்படியிருக்கிறது? அறிகுறி என்னென்ன இருக்கிறது? என்ன விஷம் குடித்தார் என்று அவரால் சொல்ல முடிகிறதா? விஷம் உடலினுள் சென்றதனால், அவர் உடலில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் என்னென்ன? விஷம் குடித்தவரின் வயது என்ன? என்ன மாதிரி விஷம் குடித்திருப்பார்? எவ்வளவு அளவு விஷம் குடித்திருப்பார்? என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
விஷம் குடித்தவருக்கு உள்ள அறிகுறிகள்:
உதட்டைச் சுற்றி, வாயைச் சுற்றி சிவந்து இருக்கலாம். மூச்சு விடுவதை முகத்துக்கு கிட்டே சென்று முகர்ந்து பார்த்தால், என்ன வாசனை அடிக்கிறது என்பதை வைத்து என்ன பொருளைக் குடித்திருப்பார் என்பதை ஓரளவு கணிக்கலாம். மூச்சுத்திணறல், வலிப்பு அமைதியின்மை, ஞாபக மறதி, மயக்கம், பேச்சு உளறல், பேச்சில் தடுமாற்றம், மனநிலை குழப்பம் போன்றவற்றில் ஏதேனும் சில அறிகுறிகள் இருந்தால் விஷத்தின் பாதிப்பு உடலில் ஏறி இருக்கிறது என்று அர்த்தம். இந்த மாதிரி சூழ்நிலையில் விஷம் அருந்தியவரை உடனே அருகிலுள்ள மருத்துவமனைக்கு ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் கொண்டு செல்வது தான் நல்லது.
கடலூர்:
பண்ருட்டியை அடுத்த சிறுகிராமம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் முத்துலிங்கம் (வயது 80), முத்துலிங்கம் கடந்த சிலநாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதனால் விரக்தியடைந்த முத்துலிங்கம் கடந்த 12-ந் தேதி வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்தார். இதனால் அவருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. மயங்கிய நிலையில் இருந்து அவரை மீட்டு பண்ருட்டி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காகசேர்த்தனர்.
மேல்சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனிக்காமல் முத்துலிங்கம் பரிதாபமாக உயிரிழந்தார். இது பற்றி புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
- தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி குழந்தை ரோகித் பரிதாபமாக இறந்தான்.
- குழந்தைக்கு பிரேத பரிசோதனை செய்ய கூடாது என்று கூறி கோஷமிட்டனர்.
ஈரோடு:
ஈரோடு மொடக்குறிச்சி அடுத்த வேளாங்காட்டு வலசு, வாய்க்கால் மேடு பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (32). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி திவ்யா (26). இவர்களுக்கு 2½ வயதில் ரோகித் என்ற மகனும் உள்ளார்.
இந்நிலையில் குடும்பத் தகராறில் நேற்று இரவு திவ்யா எலி மருந்தை குடித்து தனது மகன் ரோகித்துக்கும் எலி மருந்தை கொடுத்துள்ளார். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி குழந்தை ரோகித் பரிதாபமாக இறந்தான்.
இது குறித்து தகவல் அறிந்ததும் விஜயகுமார் மற்றும் அவரது உறவினர்கள் ஈரோடு அரசு மருத்துவமனையில் திரண்டனர். குழந்தைக்கு பிரேத பரிசோதனை செய்ய கூடாது என்று கூறி கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
தொடர்ந்து அவர்கள் மருத்துவமனை வளாகத்தில் திரண்டு உள்ளனர். இந்நிலையில் திவ்யாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- அவர்களது உடலில் உள்ள தோலில் தீக்காயங்கள் ஏற்படுத்தப்படும்
- மயக்கம், தலைச்சுற்றல், உதடுகள் மற்றும் முகம் வீங்கியிருக்கும்.
தென் அமெரிக்க நாடான மெக்சிகோவில் பாரம்பரிய காம்போ [Kambo] மத சடங்கில் பங்கேற்ற 33 வயது நடிகை மார்செலா [Marcela Alcázar Rodríguez] தவளை விஷம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். உடலை தூய்மைப்படுத்துவதாக நம்பப்படும் இந்த சடங்கில் பங்கேற்ற அவர் கடுமையான வயிற்றுப்போக்கால் துடிதுடித்து இறந்துள்ளார்.
காம்போ சடங்கு
இந்த சடங்கில் பங்கேற்பவர்கள் ஒரு லிட்டருக்கு மேல் தண்ணீர் குடிக்க வேண்டும். அதன்பின் அவர்களது உடலில் உள்ள தோலில் சிறிய தீக்காயங்கள் ஏற்படுத்தப்படும். அதைத்தொடர்ந்து அந்த காயங்களின் மேல் குறிப்பிட்ட தவளை சளி தடவப்படும். இந்த சளி விஷத்தன்மை கொண்டதாக இருக்கும். இந்த சடங்கு நோய்களை அகற்றி உடலை தூய்மை செய்வதாக காம்போ வழக்கத்தின் நம்பிக்கை ஆகும்.

ஆனால் விஷத்தைக் கொண்டிருக்கும் சளி, இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். வாந்தியைத் தூண்டும் இது சில சமயங்களில் வயிற்றுப்போக்கையும் ஏற்படுத்துகிறது. மற்ற அறிகுறிகளாக மயக்கம், தலைச்சுற்றல், உதடுகள் மற்றும் முகம் வீங்கியிருக்கும். பொதுவாக, அறிகுறிகள் கிட்டத்தட்ட அரை மணி நேரம் நீடிக்கும். இருப்பினும், இரத்த ஓட்டத்தில் விஷத்தின் தாக்கம் அதிகரிப்பது வலிப்பு மற்றும் மரணத்தை ஏற்படுத்தும்.
மார்செலாவுக்கு என்ன ஆனது?
சடங்கு தொடங்கிய உடனேயே மார்செலாவுக்கு அசௌகர்யமும் அதைத் தொடர்ந்து கடுமையான வயிற்றுப்போக்கு ஏற்பட்டது . இந்த அறிகுறிகள் பெரும்பாலும் தூய்மை படுத்தும் செயல்பாட்டின்போது உடலின் எதிர்ப்பு சக்தியால் ஏற்படுகிறது என்று கருதப்படுகின்றன.
மெக்சிகோவின் துராங்கோ Durango பகுதியில் உள்ள ஒரு அறையில் வைத்து இந்த சடங்கை செய்த சாமியார் [shaman] மார்செலாவை வயிற்றுப் போக்கை தாங்கிக்கொள்ளும்படி கூறியுள்ளார். ஆனால் அவரது நிலை கவலைக்கிடமான நிலையில் அங்கிருந்து சாமியார் தப்பியோடினார்.

தோழி ஒருவர் அவருக்கு உதவ வந்தபோதிலும் மார்செலா தவளை விஷத்தால் ஏற்பட்ட வயிற்றுப்போக்கு காரணமாக உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து அந்த சாமியாரை போலீசார் தேடி வருகின்றனர். துராங்கோ பகுதியை சேர்ந்த மார்செலா அப்பகுதியில் படமாக்கப்பட்ட பல்வேறு படங்களிலும், சீரீஸ்களிலும் நடித்துள்ளார். மார்செலா மறைவுக்கு துராங்கோ பிலிம் கில்ட் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது.
- அளவுக்கு அதிகமாக குடிப்பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது.
- மன உளைச்சலுக்கு உள்ளான கார்த்தி விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.
நீடாமங்கலம்:
வலங்கைமான் அருகே உள்ள கொட்டையூர் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்தி (வயது 32). இவருக்கு அளவுக்கு அதிகமாக குடிப்பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவரது மனைவி கோபித்து கொண்டு அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.
இதில் மன உளைச்சலுக்கு உள்ளான கார்த்தி விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி கார்த்தி இறந்தார்.
இது குறித்து வலங்கைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வயது முதிர்வால்உடல்நிலை பாதித்த நிலையில் இருந்த தனது தாய் கோமளவல்லியை பார்ப்பதற்காக கடந்த 10 நாட்களுக்கு முன்னர் வீட்டிற்க்கு வந்த ரவிச்சந்திரன் நேற்று இரவு குருணை மருந்தைதாய் கோமலவள்ளிக்கு கொடுத்து விட்டு தானும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
- காலையில் வெகுநேர மாகியும் வீட்டின் கதவுகள் திறக்கப்படாததால் சந்தே கமடைந்த அக்கம்ப க்கத்தினர் சென்று பார்த்த போது ரவிச்சந்திரன், கோமளவள்ளி இருவரும் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
மன்னார்குடி:
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஜீயர்தோப்பு பகுதியை சேர்ந்த ரவிச்ச ந்திரன் (55) என்பவர் தனது தயார் கோமளவள்ளியுடன் (81) வாடகை வீட்டில் வசித்து வந்தார். திரும ணமான ஆகாத இவர் ஆயக்காரன்புலம் பகுதியில் உள்ள பண்ணை ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.
வயது முதிர்வால் உடல்நிலை பாதித்த நிலையில் இருந்த தனது தாய் கோமளவல்லியை பார்ப்பதற்காக கடந்த 10 நாட்களுக்கு முன்னர் வீட்டிற்க்கு வந்த ரவிச்சந்திரன் நேற்று இரவு குருணை மருந்தைதாய் கோமலவள்ளிக்கு கொடுத்து விட்டு தானும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
காலையில் வெகுநேர மாகியும் வீட்டின் கதவுகள் திறக்கப்படாததால் சந்தே கமடைந்த அக்கம்ப க்கத்தினர் சென்று பார்த்த போது ரவிச்சந்திரன், கோமளவள்ளி இருவரும் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மன்னா ர்குடி போலீசார் உடல்க ளை மீட்டு பிரேத பரிசோ தனைக்காக மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.
- ஜாக்சன் முக்கூடல் அருகே உள்ள அரியநாயகிபுரம் அணைக்கட்டு அருகில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.
- ஜாக்சன் சமீபத்தில் நடந்த தேர்வில் மதிப்பெண் குறைவாக எடுத்து விட்டதாகவும், இதனை அவரது பெற்றோர் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.
நெல்லை
முக்கூடல் அருகே உள்ள சிங்கம்பாறையை சேர்ந்தவர் ஞானச்செல்வன்.இவரது மகன் ஜாக்சன் (வயது 21). இவர் நெல்லை அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
சம்பவத்தன்று ஜாக்சன் முக்கூடல் அருகே உள்ள அரியநாயகிபுரம் அணைக்கட்டு அருகில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்றிரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இது தொடர்பாக முக்கூடல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஜாக்சன் சமீபத்தில் நடந்த தேர்வில் மதிப்பெண் குறைவாக எடுத்து விட்டதாகவும், இதனை அவரது பெற்றோர் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் கடந்த சில நாட்களாக ஜாக்சன் யாரிடமும் பேசாமல் இருந்து வந்துள்ளார்.இதன் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சீர்காழி:
நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள தொடுவாய் சுனாமி நகரை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது55). மீனவர் இவருடைய முதல் மனைவி மல்லிகா 2004- ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி தாக்குதலில் பலியானார். இவர்களுக்கு 5 மகள்கள் உள்ளனர்.
இதைத்தொடர்ந்து கடந்த 2005-ம் ஆண்டு ஆறுமுகம் திருமுல்லைவாசல் கிராமத்தை சேர்ந்த செல்வி(40) என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார். கடந்த சில ஆண்டுகளாக செல்வி சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் கடந்த 26-ந் தேதி ஆறுமுகத்துக்கும் செல்விக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஆறுமுகம் நோயால் அவதிப்படும் உனக்கு என்னால் அடிக்கடி மருத்துவச் செலவு செய்ய முடியாது என கூறி செல்வியின் காதில் விஷத்தை ஊற்றி விட்டு தப்பி ஓடி விட்டார்.
இதில் உயிருக்கு போராடிய செல்வியை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
இது குறித்த புகாரின் பேரில் சீர்காழி போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து ஆறுமுகத்தை கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி செல்வி உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து போலீசார் கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றி உள்ளனர். மனைவியின் காதில் விஷம் ஊற்றி மீனவர் கொலை செய்த சம்பவம் சீர்காழி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.