என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "poles"
- ஈரோடு மாநகர் பகுதியில் நேற்று மாலை சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்ததால் ஆங்காங்கே மின் கம்பங்கள்-மரங்கள் முறிந்து விழுந்தன.
- பஸ் நிலையம் எதிரில் உள்ள சத்தி சாலையில் மழை நீர் தேங்கி நின்றது. அப்போது அவ்வழியாக வந்த சரக்கு வாகனம் ஒன்று பாதாள சாக்கடை குழி இருப்பது தெரியாமல் சிக்கிக்கொண்டது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
ஈரோடு:
ஈரோடு மாநகர் பகுதியில் நேற்று மாலை சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்ததால் ஆங்காங்கே சாலைகளில் மழைநீர் தேங்கி நின்று குண்டும் குழியுமாக காட்சி அளித்தது.
குறிப்பாக திண்டல், செங்கோடம்பாளையம், நசியனூர், முத்தம்பாளையம், ரங்கம்பாளையம், பெருந்துறை சாலை பகுதிகளில் காற்று, மின்னல் இடியுடன் மழை பெய்தது.
பெருந்துறை சாலை செங்கோடம்பாளையம் அருகே சாலையோர மரம் விழுந்தது. நசியனூர் ராயபாளையம் உள்பட பல்வேறு இடங்களிலும் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சாலையில் முறிந்து விழுந்த மரத்தை மின் வாரிய ஊழியர்கள் அப்புறப்படுத்தினர்.
ஈரோடு முத்தம் பாளையம் ஹவுசிங் யூனிட் பகுதி 1-ல் மின்கம்பத்தின் மீது மின்னல் இடி தாக்கி மின்கம்பம் ஒடிந்தது. இதனால் மின் தடை ஏற்பட்டது. நசியனூர் ராயபாளையம் பகுதியில் டிரான்ஸ்பார்மர் சரிந்து விழுந்து முற்றிலும் மின்தடை ஏற்பட்டது.
இதேப்போல் நசியனூர் சாலை திண்டல்-ஈரோடு உள்பட பல்வேறு இடங்களில் கம்பம் சாய்ந்தும் கம்பிகளாலும் பாதிப்பு ஏற்பட்டது.
ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டப்பணிகளுக்காக தோண்டப்பட்ட குழிகள் சரிவர மூடப்படாமல் உள்ளதால் ஆங்காங்கே வாகனங்கள் சிக்கி கொள்வது வாடிக்கையாக உள்ளது. குறிப்பாக மழை பெய்யும் போது மழை நீர் ஆங்காங்கே தேங்கி நிற்பதால் பாதாள சாக்கடை குழிகள் இருப்பது தெரியாமல் சிக்கி கொள்கின்றனர்.
இந்நிலையில் நேற்றிரவு ஈரோட்டில் பெய்த மழையின் காரணமாக பஸ் நிலையம் எதிரில் உள்ள சத்தி சாலையில் மழை நீர் தேங்கி நின்றது. அப்போது அவ்வழியாக வந்த சரக்கு வாகனம் ஒன்று பாதாள சாக்கடை குழி இருப்பது தெரியாமல் சிக்கிக்கொண்டது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதையடுத்து இன்று காலை கிரேன் மூலம் சரக்கு வாகனம் மீட்கப்பட்டு போக்குவரத்து சரி செய்யப்பட்டது. இதேபோல் ஈரோடு வ.உ .சி பூங்கா காய்கறி மார்க்கெட்டில் வழக்கம்போல் மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக காட்சி அளித்ததால் காய்கறிகளை வாங்க வந்த பொதுமக்கள், வியாபாரிகள் கடும் சிரமம் அடைந்தனர்.
- சாலை விரிவாக்கத்திற்கு மின்கம்பங்கள் மாற்றி அமைக்கும் பணி நாளை நடைபெறுகிறது.
- நாளை காலை 9.30 மணிமுதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
தஞ்சாவூர்:
தஞ்சை நகர மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கருப்பையா வெளியிட்டு ள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தஞ்சை மணிமண்டபம் துணை மின் நிலைய பகுதியில் நெடுஞ்சாலை துறையால் சாலை விரிவாக்கத்திற்கு மின்கம்பங்கள் மாற்றி அமைக்கும் பணி நாளை (சனிக்கிழமை) நடைபெறுகிறது.
எனவே நாளை காலை 9.30 மணிமுதல் மாலை 5 மணி வரை அண்ணாநகர் மின் வழித்தடத்தில் உள்ள காவேரி கல்யாணமண்டபம் முதல் கல்லுக்குளம் வரை உள்ள பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
மேலும் மேரீஸ்கார்னர் மின்பாதையில் அருளானந்ததம்மாள் நகர் 1-வது தெரு வரை உள்ள பகுதிகளிலும் மின் வினியோகம் இருக்காது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மதுரை மண்டலத்தில் 6100 மின்கம்பங்கள் மாற்றம் தலைமை பொறியாளர் தெரிவித்துள்ளார்.
- இதற்காக மண்டலத்திற்கு ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இனிவரும் காலங்களில் மின்தடை பாதிப்பு பெருமளவு குறைக்கப்படும்.
திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றத்தை அடுத்த தனக்கன்குளம் பகுதியில் உதவிப் பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் பழுதான மின் கம்பங்கள் மற்றும் பணி தொடங்கியது. இதனை மதுரை மண்டல தலைமை பொறியாளர் உமாதேவி ஆய்வு செய்து நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகமெங்கும் பழுதான மின்கம்பங்களை அகற்றிவிட்டு புதிய மின்கம்பங்கள் அமைக்கும் பணியை தொடங்கியுள்ளோம். அதனடிப்படியில் முதற்கட்டமாக உயர்அழுத்த மின்பாதையில் உள்ள மின்கம்பங்களை மாற்றும் பணியை தொடங்கியுள்ளோம். மதுரை மண்டலத்தில் உள்ள மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் பழுதான மின்கம்பங்களை மாற்றும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பழுதான மின்கம்பங்கள் 3100, புதிதாக அமைக்கும் மின்கம்பங்கள் 3,000 என மொத்தம் 6 ஆயிரத்து 100 மின்கம்பங்களும் ஜூலை 15 -ம் தேதிக்குள் மாற்றிவிட இலக்கு நிர்ணயம் செய்து பணிசெய்து வருகிறோம்.
மேலும் மின்பாதைகளில் உள்ள மரங்களையும் அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றோம். இதற்காக மண்டலத்திற்கு ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இனிவரும் காலங்களில் மின்தடை பாதிப்பு பெருமளவு குறைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்