search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "power saving"

    • சிவகிரி பாலவிநாயகர் உயர்நிலைப் பள்ளியில் மின் சிக்கன வார விழா நடைபெற்றது.
    • மின் சிக்கனம் குறித்து மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    சிவகிரி:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் சார்பில் சிவகிரி பாலவிநாயகர் உயர்நிலைப் பள்ளியில் மின் சிக்கன வார விழா நடைபெற்றது.

    விழாவில் நகர்ப்புற உதவி மின் பொறியாளர் பவாணி சங்கரி, கணக்கீட்டு ஆய்வாளர் காளிதாஸ், வணிக ஆய்வாளர் திருமுருகன் ஆகியோர் மின் சிக்கனம் குறித்து மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதனைத் தொடர்ந்து கவிதை, பேச்சு, ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டன. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் கேடயம் வழங்கி பாராட்டினர். இதில் தலைமை ஆசிரியர் மாரியப்பன், ஆசிரியர்கள் , மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • வயர்களின் மேற்புறத்தில் கடினத்தன்மை ஏற்பட்டு சீக்கிரமாக உதிர்ந்து விடும்.
    • அதிகப்பட்சமாக 7 ஆண்டுகளுக்கு ஒருமுறையாவது வயர்களை மாற்ற வேண்டும்.

    அவிநாசி:

    அவிநாசி பேரூராட்சி பகுதியில் நான்கு ரத வீதிகள், சேவூர் ரோடு, மெயின் ரோடு ஆகிய பகுதிகளில் அரசு அலுவலகங்கள் மற்றும் ஏராளமான வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. இவற்றுக்கு அருகிலுள்ள கம்பங்களில் இருந்து மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. அதற்கான வயர்கள் பல ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டவை.

    இதனால் ஆண்டுக்கணக்கில் வெயில், மழையில் நனைந்து சேதம் அடைந்து நாள்தோறும் ஏதாவது ஒரு வீதியில் மின் வயர் பழுதால் மின்சாரம் துண்டிக்க காரணமாக அமைகிறது. இதற்காக மின்நுகர்வோர் ஜெனரேட்டர், யு.பி.எஸ்., பயன்படுத்தும் போது செலவு அதிகரிக்கிறது.

    இது குறித்து மின்வாரிய சிறப்பு நிலை முகவர் அருள்பிரகாசம் கூறியதாவது:- மின்நுகர்வோரில் ஒரு சிலர் ஐ.எஸ்.ஓ., தரச்சான்றிதழ் பெற்ற வயர்கள், மின் சாதனங்களை வாங்கி பொருத்து கின்றனர். ஆனால் பலர் விலை மலிவான பொருட்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். இதனால் வயர்களின் மேற்புறத்தில் கடினத்தன்மை ஏற்பட்டு சீக்கிரமாக உதிர்ந்து விடும். அதிலிருந்து மின்சாரம் லீக்கேஜ் ஆக வாய்ப்புகள் அதிகம். அதிகப்பட்சமாக 7 ஆண்டுகளுக்கு ஒருமுறையாவது வயர்களை மாற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    • இணைய தளம் வாயிலாக பள்ளி மாணவர்களுக்கு, மின் சிக்கனம் குறித்த கட்டுரை போட்டி மற்றும் ஓவியப்போட்டி நடத்தப்பட்டது.
    • மின்வாரிய அலுவலர்கள், பணியாளர்கள்,மாணவ, மாணவிகள் பொதுமக்கள், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பல்லடம் :

    பல்லடத்தில், மின் சிக்கன வார விழாவைநொட்டி பல்லடம் மின் பகிர்மான வட்டத்தின் சார்பில் கடந்த ஒரு வார காலமாக மின் சிக்கனம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இதில் இணைய தளம் வாயிலாக பள்ளி மாணவர்களுக்கு, மின் சிக்கனம் குறித்த கட்டுரை போட்டி மற்றும் ஓவியப்போட்டி நடத்தப்பட்டது.

    இந்த நிலையில் மின் சிக்கனத்தை வலியுறுத்தி பல்லடம் தாலுகா அலுவலகத்தில் இருந்து, உடுமலை சாலையில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் வரை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    இந்தப் பேரணிக்கு பல்லடம் மின் பகிர்மான வட்ட செயற்பொறியாளர் ரத்தினகுமார் தலைமையில், மின்வாரிய பொறியாளர்கள், மற்றும் அலுவலர்கள்,போர்மென்கள்,லைன் மேன்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    இதைத் தொடர்ந்து பல்லடம் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் மின் சிக்கனம் குறித்த விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு கோப்பை,பாராட்டு சான்றிதழ், நினைவுப் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    பல்லடம் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் ஜவகர் தலைமை வகித்து மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி மின் சிக்கனம் குறித்து விளக்கிப் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் பல்லடம் மின்வாரிய செயற்பொறியாளர்கள் ரத்தினகுமார், திருஞானசம்பந்தர், உதவிப் பொறியாளர்கள் தண்டபாணி, கார்த்திகேயன்,லதா, கவிதா, மற்றும் பல்லடம் நகர மின் உதவிப் பொறியாளர்கள் தங்கராஜ், வேலுச்சாமி, பாலசுப்பிரமணியம், மற்றும் மின்வாரிய அலுவலர்கள், பணியாளர்கள்,மாணவ, மாணவிகள் பொதுமக்கள், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • விளையாட்டின் மூலம் எல்.இ.டி. பல்ப் பயன்படுத்துதல், நட்சத்திர குறியீடு பொருட்கள் பயன் படுத்துதல், குளிர் சாதன பெட்டி பயன்படுத்தும் முறை, சூரிய ஆற்றல் மேம்பாடு குறித்து மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
    • மின் சிக்கனம், மின் சேமிப்பு, மின் பாதுகாப்பின் மூலம் எதை செய்யலாம், எதை செய்யக் கூடாது என்பதனை மாணவ-மாணவிகளுக்கு தெளிவுப்படுத்தப்பட்டது.

    நெல்லை:

    சென்னை சிட்சன் கன்ஸ்யுமர் அண்ட் சிவிக் ஆக்‌ஷன் குரூப் மற்றும் சங்கர் மேல்நிலைப்பள்ளி ஆற்றல் கழகம் சார்பில் மின் சிக்கனம், மின் சேமிப்பு, மின் பாதுகாப்பு குறித்து விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.

    தலைமை ஆசிரியர் கணேசன் போட்டியை தொடங்கி வைத்தார். உதவி தலைமை ஆசிரியர் ரெங்கநாதன், ஆற்றல் கழக பொறுப்பாளர்கள் கணபதி சுப்பிரமணியன், தனலெட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    விளையாட்டின் மூலம் எல்.இ.டி. பல்ப் பயன்படுத்துதல், நட்சத்திர குறியீடு பொருட்கள் பயன் படுத்துதல், குளிர் சாதன பெட்டி பயன்படுத்தும் முறை, சூரிய ஆற்றல் மேம்பாடு ஆகியவற்றின் மூலம் மின் சிக்கனம், மின் சேமிப்பு, மின் பாதுகாப்பின் மூலம் எதை செய்யலாம், எதை செய்யக் கூடாது என்பதனை மாணவ-மாணவிகளுக்கு தெளிவுப்படுத்தப்பட்டது.

    நிகழ்ச்சிக்கான ஆலோசனைகளை சுமணா, வர்ஷா ஆகியோர் செய்திருந்தனர்.

    ×