search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Public"

    • கடந்த சில நாட்களுக்கு முன்பு 5 கோழிகள் காணாமல் போயின.
    • விவசாயி திருடன், திருடன் என கூச்சலிட்டு உள்ளார்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள சுக்கம்பாளையம் பகுதியில், விவசாயி ஒருவர் கால்நடை மற்றும் கோழிகள் வளர்த்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 5 கோழிகள் காணாமல் போயின. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 2 மர்மநபர்கள், அவரது தோட்டத்தில் கோழிகளை திருட முயன்றுள்ளனர். கோழிகள் மற்றும் கால்நடைகளின் சத்தம் கேட்டு அங்கு வந்த விவசாயி, இவர்களைப் பார்த்து திருடன், திருடன் என கூச்சலிட்டு உள்ளார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் ஒன்று கூடி அந்த மர்ம நபர்களை பிடிக்க முயன்ற போது, அரிவாளை காட்டி அவர்கள் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து லாவகமாக அவர்களை மடக்கிப் பிடித்த பொதுமக்கள், தர்ம அடி கொடுத்து, பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவர்களை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தியபோது அவர்கள் தென்காசியை சேர்ந்த காளிதாஸ், பல்லடம் லட்சுமி மில்ஸ் பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் என்பது தெரிய வந்தது. 2பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தொடர் கொள்ளை சம்பவங்களால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
    • 3 கடைகளில் கதவுகளை உடைத்து கொள்ளை சம்பவம் அரங்கேறி உள்ளது.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சமீப காலமாக தொடர் திருட்டு சம்பவங்கள் நடந்து வருகிறது. கடந்த மாதம் 11-ந்தேதி கொள்ளையர்கள் ஒரு வீட்டில் புகுந்து 2 பெண்களை கொலை செய்து 60 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர். ஒரு சிறுவனையும் கத்தியால் குத்தினர். அவன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறான்.

    இந்த கொள்ளை நடந்து ஒரு மாதம் ஆனபோதிலும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. இது தேவகோட்டை மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இதைத்தொடர்ந்து தேவ கோட்டை மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த மக்கள் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தியாகிகள் பூங்கா அருகில் உண்ணா விரதம் இருந்தனர்.

    அப்போது போலீசார் ஒரு மாதத்திற்குள் உண்மை யான குற்ற வாளிகளை கண்டுபிடிக்காவிட்டால் பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம் என்று நாட்டார்கள் மற்றும் கிராம மக்கள் அறிவித்தனர். அதன்பின்னர் டி.ஐ.ஜி. துரை தேவகோட்டையில் முகாமிட்டு இந்த வழக்கு குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

    தற்போது இந்த வழக்கு விசாரணை அதிகாரியாக ஏ.எஸ்.பி. ஸ்டாலின் பொறுப்பேற்று குற்றவாளிகளை தேடி வருகிறார். இன்ஸ் பெக்டர் சரவணன், பொது மக்களிடையே விழிப் புணர்வு ஏற்படுத்தும் வகையில் தனியார் திருமண மண்டபத்தில் நகரில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவதால் தங்களது பகுதிகளில் அதிக அளவு கண்காணிப்பு காமிரா பொருத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    மீண்டும் கொள்ளை

    இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தேவகோட்டை தியாகிகள் பூங்கா அருகே திருப்பத்தூர் சாலையில் ஒரு ஷாப்பிங் சென்டர் மற்றும் ஸ்டூடியோ, கம்ப்யூட்டர் சென்டர் என அடுத்தடுத்து 3 கடைகளில் கதவுகளை உடைத்து கொள்ளை சம்பவம் அரங்கேறி உள்ளது. இதிலும் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

    விரைவில் கொலை மற்றும் கொள்ளையில் தொடர்புடைய நபர்களை போலீசார் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

    • கழிவுநீர் வீட்டுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
    • அரை மணி நேரத்திற்கு மேலாக போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

    மதுரை

    மதுரை அவனியாபுரம் துக்காராம் தெரு, மருத்துவ காலனி பகுதியில் பல மாதங்களாக கழிவுநீர் சாக்கடையை சுத்தம் செய்யாததால் அடைப்பு ஏற்பட்டது. இதனால் கழிவு நீர் வீட்டுக்குள் புகுந்தது.

    இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்த பயனும் இல்லை. இதையடுத்து பொதுமக்கள் இன்று அவனியாபுரம் பஸ் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த அவனி யாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் உத்தரவின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் திலீபன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொது மக்கள் கலைந்து செல்ல வலியுறுத்தினார்.

    அதற்கு பொதுமக்கள் மறுத்ததால் உதவி பொறி யாளர் செல்வ விநாயகம் விரைந்து வந்து உங்கள் கோரிக்கையை சரி செய்கிறேன். சாக்கடையை சுத்தம் செய்கிறோம் என்று உறுதி அளித்ததின் பேரில் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

    • சாலை தற்போது மிகவும் சிதிலமடைந்து கருங்கல் ஜல்லிகள் பெயர்ந்தும், பலஇடங்களில் ஜல்லிகள் இல்லாமல் காணப்படுகிறது.
    • விவசாய விளை பொருட்களை கொண்டு செல்லவும் இந்த சாலை பயனுள்ளதாக இருந்தது.

    பூதலூர்:

    பூதலூர் ஒன்றியத்தில் உள்ள வெண்டயம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கிராமம் நவலூர். நவலூர் கிராமத்தின் அருகில் உள்ள உய்யக்குண்டான் நீடிப்பு வாய்க்கால் கரையில் ராயமுண்டான்பட்டியை இணைக்கும் 2.5 கிலோமீட்டர் தூர சாலை தற்போது மிகவும் சிதிலமடைந்து கருங்கல் ஜல்லிகள் பெயர்ந்தும், பலஇடங்களில் ஜல்லிகள் இல்லாமல் காணப்படுகிறது.

    வெண்டயம்பட்டி, ராயமுண்டான்பட்டி ஆகிய ஊர்களில் இருந்து நவலூர் செல்ல இந்த சாலை பயனுள்ளதாக இருந்தது.

    மேலும் விவசாய விளை பொருட்களை கொண்டு செல்லவும் இந்த சாலை பயனுள்ளதாக இருந்தது.ஜல்லிகள் பெயர்ந்து கிடப்பதோடு மட்டும் இல்லாமல் பல இடங்களில் வாய்க்கால் கரை அரித்தோடி குண்டு குழியாக காணப்படுகிறது.

    சரியானமுறையில் இந்த சாலை இல்லாததால் நவலூர் செல்ல பல கிலோமீட்டர் தொலைவு சுற்றி செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

    பொது மக்கள் மற்றும் விவசாய விளை பொருட்களை எடுத்து வரவசதியாக உள்ள நவலூர்-ராயமுண்டா ன்பட்டி இடையிலான உய்யக்குண்டான் நீடிப்பு வாய்க்கால் கரை சாலையை சீரமைத்து தார் சாலை அமைத்து தரவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • காளையார்கோவில் அருகே வருகிற 9-ந் தேதி மக்கள் தொடர்பு முகாம் நடக்கிறது.
    • மேற்கண்ட தகவலை சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி, தெரிவித்துள்ளார்.

     சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் வட்டம், பள்ளிவயல் குரூப், பள்ளித்தம்பம் கிராமத்தில் உள்ள நாடகமேடையில் வருகிற 9-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணியளவில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது. அரசுத்துறை அலுவலர்களை ஒருங்கிணைத்து அரசின் திட்டங்களை துறை சார்ந்த முதன்மை அலுவலர்களை கொண்டு, பொதுமக்களுக்கு திட்டங்கள் குறித்து எடுத்துரைத்து, தகுதி வாய்ந்த பயனாளிகளை பயன்பெறச் செய்வதே இந்த முகாமின் நோக்கமாகும். மேற்கண்ட கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் நடைபெற உள்ள மக்கள் தொடர்பு முகாமில் கலந்து கொண்டு அரசின் திட்டங்களை பெறுவதற்கான வழிமுறைகளை அறிந்து கொண்டு பயன்பெறலாம். மேற்கண்ட தகவலை சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி, தெரிவித்துள்ளார்.

    • நான்கு வழி சாலை விரிவாக்க பணிக்காக நில ஆர்ஜிதம் செய்ததில் பள்ளியின் முன் பக்க சுற்றுசுவர் இடிக்கப்பட்டு அதில் வாறுகால் அமைக்கப்பட்டுள்ளது.
    • பள்ளி நுழைவாயில் அருகே சாலை பணிக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் மூடப்படாததால் பள்ளி கேட் திறந்தே காணப்படுகிறது.

    தென்காசி:

    பாவூர்சத்திரத்தில் தென்காசி - நெல்லை மெயின்ரோடு நான்கு வழி சாலை அருகே அமைந்துள்ளது த.பி.சொக்கலால அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி. இங்கு பாவூர்சத்திரம் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். மேலும் கீழப்பாவூர் வட்டார வள மையம் இங்கு செயல்பட்டு வருகிறது.

    காலை, மாலை நேரங்களில் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் உடற்பயிற்சி செய்வதற்காக பள்ளி வளாகத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் நான்கு வழி சாலை விரிவாக்க பணிக்காக நில ஆர்ஜிதம் செய்ததில் பள்ளியின் முன் பக்க சுற்றுசுவர் இடிக்கப்பட்டு அதில் வாறுகால் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்று வரை இடிக்கப்பட்ட சுற்றுசுவர் புதிதாக கட்டப்படவில்லை. மேலும் பள்ளி நுழைவாயில் அருகே சாலை பணிக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் மூடப்படாததால் பள்ளி கேட் திறந்தே காணப்படுகிறது.

    இதனால் இரவு நேரங்களில் சமூக விரோத செயல்கள் நடைபெறுவதுடன் மா ணவர்களின் உடற்பயிற்சிக்காக அமைக்கப்பட்டுள்ள கம்பிகளையும் சேதப்படுத்தி செல்கின்றனர். அரசு உடனடி யாக பள்ளிக்கு முன்புற சுற்று சுவர் அமைத்து நுழைவு வாயில் கேட்டை சரி செய்ய பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் மூண்டது.
    • தாக்குதலில் மாணவர்கள் 13 பேர் படுகாயம் அடைந்தனர் அனைவரும் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவின் கோழிக்கோடு பகுதியில் கல்லூரி மாணவர்களுக்கும், அப்பகுதி மக்களுக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது.

    கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் அந்த பகுதியில் தங்கள் வாகனங்களை நிறுத்தி உள்ளனர். இதனை அப்பகுதி மக்கள் கண்டித்து உள்ளனர்.

    இது தொடர்பாக மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் மூண்டது.

    இந்த தாக்குதலில் மாணவர்கள் 13 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

    இந்த சம்பவத்தை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

    இது தொடர்பாக போலீசாரும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • இலங்கை சுதந்திர தின விழாவில் இந்தியா சார்பில் மத்திய வெளியுறவுத் துறை இணை மந்திரி வி.முரளீதரன் கலந்து கொண்டார்.
    • தமிழர்கள் வசிக்கும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வீடுகளில் கறுப்பு கொடியை ஏற்றி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

    கொழும்பு:

    இலங்கையில் 75-வது சுதந்திர தின விழா இன்று கொண்டாடப்பட்டது. தலைநகர் கொழும்பில் உள்ள காலிமுக திடலில் பிரதான கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடந்தது.

    அதிபர் ரணில் விக்ரம சிங்கே, பிரதமர் தினேஸ் குணவர்தன, மந்திரிகள், ராணுவ அதிகாரிகள் கலந்து கொண்டனர். சுதந்திர தின விழாவில் ராணுவ வீரர்கள், ராணுவ வாகனங்கள் அணிவகுப்பு நடந்தது.

    இலங்கை சுதந்திர தின விழாவில் இந்தியா சார்பில் மத்திய வெளியுறவுத் துறை இணை மந்திரி வி.முரளீதரன் கலந்து கொண்டார். அதே போல் வெளிநாட்டு பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.

    இந்த முறை சுதந்திர தின விழாவில் அதிபர் நாட்டு மக்களுக்கு உரை ஆற்றவில்லை. மாலை 6.45 மணிக்கு அதிபரின் உரை ஊடகங்களின் மூலம் ஒளி, ஒலிபரப்பு செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இதற்கிடையே தமிழர்களுக்கு தன்னாட்சி அளிக்காததை கண்டித்து தமிழர்கள் வசிக்கும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கறுப்பு கொடி ஏற்றி போராட்டங்கள் நடந்தது. வீடுகளில் கறுப்பு கொடியை ஏற்றி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

    யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கறுப்புக்கொடி ஏற்றப்பட்டது. இன்றைய தினத்தை கறுப்பு தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

    யாழ்ப்பாண பல்கலைக் கழக மாணவர்கள் மற்றும் சிவில் அமைப்புகள் எதிர்ப்பு பேரணி நடத்தினர். பல்கலைக்கழக மாணவர்கள், சிவில் அமைப்புகள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

    பேரணிக்கு ஆதரவாக வர்த்தகர்கள் தங்களது கடைகளை அடைத்தனர். யாழ்ப்பாணம் மாவட்டம் முழுவதும் கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. இதனால் சாலைகள் வெறிச் சோடி காணப்பட்டன.

    • முகாமை டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் தொடங்கி வைத்தார்.
    • பொதுமக்கள் தங்கள் செல்ல பிராணிகளுக்கு இலவசமாக தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை கால்நடை மருந்தக வளாகத்தில் மண்டல இணை இயக்குனர் ராமலிங்கம் அறிவுரையின் பேரில் தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் தேசிய வேளாண் அபிவிருத்தி ராஷ்டிரிய கிருஷி விகாஸ் யோஜனா 2022 -23-ம் ஆண்டு திட்டம் சார்பில் வெறிநோய் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு வட்டார கால்நடை மருத்துவர் மகேந்திரன் தலைமை தாங்கினார்.

    முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் கார்த்திக் முன்னிலை வகித்தார்.

    முகாமை டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் தொடங்கி வைத்தார்.

    இதில் கால்நடை மருத்துவர்கள் மகேந்திரன், ராஜசேகர், ராஜேஷ் குமார், கால்நடை ஆய்வாளர்கள் முருகேஷ், சாந்தி, நிர்மலா, கால்நடை உதவியாளர்கள் வீரமணி, சண்முகம், பிரசன்னா, மாதவன், மகாலட்சுமி, செல்வராஜ் ஆகியோர் கொண்ட மருத்துவ குழுவினர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து, முத்துப்பேட்டை மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களிருந்து பொதுமக்கள் தங்கள் செல்ல பிராணிகளுக்கு இலவசமாக தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

    இதில் பேரூராட்சி கவுன்சிலர் லட்சுமி செல்வம், அப்பகுதி பிரதிநிதிகள் செல்வம், பாலசுப்பிரமணியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • ஒரு மணி நேரம் பெய்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
    • கடுமையான பனிப்பொழிவு காரணமாக வாகன ஓட்டிகள், பொதுமக்கள், பள்ளி மாணவ-மாணவிகள் கடும் அவதிக்கு ஆளானார்கள்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக சுட்டெரிக்கும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது.

    காலை நேரங்களில் கடுமையான பனிப்பொழிவு இருப்பதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகிறார்கள். இந்நிலையில் வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக குமரி மாவட்டத்தில் மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

    இந்நிலையில் நேற்று மதியம் மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்தது. இரவு மாவட் டம் முழுவதும் பரவலாக மழை கொட்டி தீர்த்தது. நாகர்கோவிலில் இரவு 8 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை சுமார் ஒரு மணி நேரமாக இடைவிடாது கொட்டி தீர்த்தது. இதனால் ரோடுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வெப்பம் தணிந்து குளிர் காற்று வீசியது.

    கன்னிமார், பூதப்பாண்டி, தக்கலை, இரணியல், ஆரல் வாய்மொழி மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது. பேச்சிப்பாறை பெருஞ்சாணி அணைப் பகுதியிலும் மழை பெய்ததையடுத்து அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. திற்பரப்பு அருவி பகுதியில் சாரல் மழை பெய்து வருவதால் அங்கு ரம்யமான சூழல் நிலவுகிறது.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பேச்சிப்பாறை 1, பெருஞ்சாணி 6.8, பூதப்பாண்டி 12.6, கன்னிமார் 14.8, கொட்டாரம் 2.4, மயிலாடி 4.2, சுருளோடு 9, தக்கலை 6.2, குளச்சல் 2, இரணியல் 6.4, பாலமோர் 2.4, மாம்பழத்துறையாறு 13.6, கோழிப்போர்விளை 6.4, அடையாமடை 4.2, ஆணைக்கிடங்கு 11.4.

    இரவு மழை கொட்டி தீர்த்த நிலையில் இன்று அதிகாலையில் கடுமையான பனிப்பொழிவு இருந்தது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள், பள்ளி மாணவ-மாணவிகள் கடும் அவதிக்கு ஆளானார்கள். காலை 9 மணி வரை பனிப்பொழிவு காணப்பட்டது. இதனால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு இருந்தது. இதையடுத்து 4 சக்கர வாகனங்கள் மற்றும் பஸ்களில் முகப்பு லைட்டுகளை எரிய விட்ட வாறு டிரைவர்கள் வாகனங்களை ஓட்டி சென்றனர்.

    பள்ளி செல்லும் மாணவ-மாணவிகளும் சிரமத்திற்கு ஆளானார்கள். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் அவர்கள் பள்ளிகளுக்கு புறப்பட்டு சென்றனர். பனிப்பொழிவின் காரணமாக பெரியவர்கள் சளி தொல்லையால் அவதிப்பட்டு வருகிறார்கள். இதையடுத்து தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் புற நோயாளிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    • 2 கி.மீ சாலை சமீபத்தில் பெய்த மழையினால் தார் பெயர்ந்து குண்டும் குழியுமாக இருந்தது,
    • சைக்கிளில் செல் வோர் அடிக்கடி கீழே விழுவதாக தெரிகிறது,

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே பழம்பூண்டி கூட்டு சாலையிலிருந்து பறையந்தாங்கல் வரை சுமார் 2 கி.மீ சாலை சமீபத்தில் பெய்த மழையினால் தார் பெயர்ந்து குண்டும் குழியுமாக இருப்பதோடு ஜல்லிகள் வெளியே தெரிகின்றன. இதனால் அவ்வழியாக செல்வோர் மிகவும் சிரமப்படுகின்றனர்.

    சைக்கிளில் செல் வோர் அடிக்கடி கீழே விழுந்து செல்வதாகக் கூறுகின்றனர். இவ்வழியாக கால்நடைகள் அதிக அளவில் சென்று வருவதால் அவைகளும் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகின்றன.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பழம்பூண்டி கூட்டு சாலையிலிருந்து பறையந்தாங்கல் வரை உள்ள சாலையை சீரமைத்துத்தர வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    • நாளை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை 9 வட்டங்களிலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
    • பொதுமக்களுக்கு குறைகள் ஏதுமிருப்பின் மனுக்களை அளித்து பயன்பெறலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    பொது விநியோகத் திட்டத்தில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பின், அதனைக் மாவட்டத்தில் களைவதற்கும், மக்களின் குறைகளைக் கேட்டு அவற்றை உடனுக்குடன் நிவர்த்தி செய்வதற்கும் ஒவ்வொரு மாதமும் மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களிலும் பொது விநியோகத் திட்டம் தொடர்பாக பொது மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடத்திட சென்னை, உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையாளரால் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    அதன்படி இந்த மாதத்திற்கான பொது விநியோகத் திட்ட மக்கள் குறை தீர்க்கும் கூட்டம், நாளை ( சனிக்கிழமை) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களிலும் நடத்திட திட்டமிடப்ப ட்டுள்ளது.

    எனவே, பொது மக்களுக்கு குறைகள் ஏதுமிருப்பின் தொடர்புடைய வட்ட வழங்கல் அலுவலகத்தில் வட்ட வழங்கல் அலுவலரிடம் மனுக்களை அளித்துப் பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×