search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Public"

    • பொதுமக்களுக்கு அச்சுறுத்தல், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை.
    • சாலை வழியாக பயணம் செய்ய இயலாத சூழ்நிலை.

    வீரபாண்டி:

    திருப்பூர் குன்னாங்கல்பாளையம் பாரதிதாசன் நகர் ,அம்மன் நகர் பொதுமக்கள் மற்றும் கரைப்புதூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி கோவிந்தராஜ் ஆகியோர் சார்பில் திருப்பூர் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது: - எங்கள் பகுதியில் சுமார் 2000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறோம். திருப்பூரிலிருந்து டிகேடி. மில் வழியாக செல்லும் சாலை போக்குவரத்து நிறைந்த சாலையாகும். இந்த வழியாகத்தான் பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு சென்று வருகின்றனர் . பாரதிநகர் ,கெம்பே நகர் இடையே உள்ள பகுதியில் தனியார் மதுபான கடை அமைக்க சிலர் முயன்று வருவதாக தகவல் வருகிறது. கெம்பே நகர் அருகில் தேவாலயமும் தனியார் பள்ளியும் உள்ளது. இங்கு மதுக்கடை அமைந்தால் பெரும் பாதிப்பு ஏற்படும்.

    பொதுமக்கள் அந்த சாலை வழியாக பயணம் செய்ய இயலாத சூழ்நிலை ஏற்படும் . மேலும் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்படும். எனவே மதுபான கடை அமைக்க அனுமதிக்க கூடாது. இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • 4-வது வார்டு பகுதியில் குடியிருக்கும் தங்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கக் கோரி நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க செயலாளர் மனு அளித்தனர்.
    • வீட்டுமனை பட்டா வழங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பொத்தனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட வெங்கமேடு 4-வது வார்டு பகுதிகளில் வசித்து வரும் பொதுமக்கள், தாங்கள் குடியிருக்கும் வீடுகளுக்கு இதுவரை வீட்டுமனை பட்டா வழங்கப்படவில்லை.

    எனவே 4-வது வார்டு பகுதியில் குடியிருக்கும் தங்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கக் கோரி நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க செயலாளர் மதுரா செந்திலிடம் மனு அளித்தனர்.

    மனுவைப் பெற்றுக் கொண்ட மாவட்ட செயலாளர் மதுரா செந்தில், வீட்டுமனை பட்டா வழங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

    அப்போது பரமத்தி ஒன்றிய செயலாளர் தனராசு, பொத்தனூர் பேரூர் செயலாளரும்,பேரூராட்சி தலைவருமான கருணாநிதி, பேரூராட்சி துணைத் தலைவர் அன்பரசு, வார்டு கவுன்சிலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    • மன்னார்குடி சாலை ரெயில்வே கேட் சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தது.
    • பதாகைகளை ஏந்தி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    முத்துப்பேட்டை:

    முத்துப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நி லைப்பள்ளியில் மாற்றுத்தி றனாளிகள் தினத்தை முன்னிட்டு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    இதில் தலைமையாசிரியர் அமுதரசு தலைமை தாங்கி னார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் இளையராஜா முன்னிலை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மங்கள் அன்பழகன் பேரணியை தொடங்கி வைத்தார்.

    பேரணி பள்ளியிலிருந்து புறப்பட்டு மன்னார்குடி சாலை ரெயில்வே கேட்டு சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தது.

    பேரணியில் மாற்றுத்திறனாளி மாணவர்களை பள்ளிகளில் சேர்ப்பது, தொடர்ந்து கற்றலில் ஈடுபடுத்துவது உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி பொதுமக்களிடம் விழிப்பு ணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    இதில் ஆசிரியர் பயிற்றுநர் ஸ்ரீதரன் மற்றும் பள்ளி மேலாண்மைக்குழு நிர்வாகிகள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், சிறப்பாசிரியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோல்,ஆலங்காடு அரசு உயர்நிலைப்ப ள்ளியிலும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    இதில் வட்டார வளமைய மேற்பார்வையாளர் இளையராஜா, ஆசிரியர் பயிற்றுநர் ஸ்ரீதரன் மற்றும் தலைமையாசிரியர், ஆசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.  

    • பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது
    • எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் வழங்கப்பட்டது

    திருச்சி:

    மழைக்காலத்தை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி தரும் கபசுர குடிநீர் மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்வு நடந்தது. கிளை ஒருங்கிணைப்பாளர் பக்ருதீன் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் ஊடக அணி மாவட்ட செயலாளர் உபைதுர் ரஹ்மான்,தொண்டரணி மாவட்ட செயலாளர் முகமது ஆரிப்,மேற்கு தொகுதி செயற்குழு உறுப்பினர் அப்துல் ரகுமான், செயற்குழு உறுப்பினர் ஆட்டோ சையது மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • பனியன் கம்பெனி தொழிலாளர்கள், பள்ளி கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், வியாபாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் சென்று வருகின்றனர்.
    • அரசு பஸ், கார், லாரி ஆகிய வாகனங்கள் செல்கின்றன.

    அவினாசி :

    திருப்பூர் மாவட்டம் அவினாசி ஒன்றியம் பழங்கரை ஊராட்சி தேவம்பாளையம் முதல் குளத்துப்பாளையம் வழியாக அணைப்புதூர் வரை செல்லும் பாதை உள்ளது. இந்தப் பாதையில் தினசரி பனியன் கம்பெனி தொழிலாளர்கள், பள்ளி கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், வியாபாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் இருசக்கர வாகனங்களில் சென்று வருகின்றனர். மேலும் அரசு பஸ், கார், லாரி ஆகிய வாகனங்கள் செல்கின்றன. இதனால் போக்குவரத்து மிகுந்து காணப்படும். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தொடர் மழை காரணமாக குளத்துப் பாளையம் பெரிய தோட்டம் பகுதி அருகில் ரோட்டில் மழைநீர் குட்டைபோல் தேங்கி நின்றது. இதனால் வாகன ஓட்டிகள், நடந்து செல்பவர்களும் சிரமத்திற்குள்ளாகினர்.

    எனவே அப்பகுதி மக்கள் பள்ளமான அந்த ரோட்டை நெடுஞ்சாலைத்துறையினர் மேம்படுத்த வேண்டும் என்று கூறி ரோட்டில் திரண்டு நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் ஊராட்சி தலைவர் கோமதி, துணைத்தலைவர் மிலிட்டிரி நடராசன், முன்னாள் தலைவர் எம்.செந்தில்குமார், வார்டு உறுப்பினர்கள் சண்முகம், கவுரீஸ்வரி, தங்கபாண்டி, நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் கணேசன், வருவாய்துறையினர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் சம்பவ இடம் வந்து பொதுமக்களிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தி மழைநீரை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுப்பதுடன் அந்த ரோட்டில் மீண்டும் மழைநீர் தேங்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதிகூறினர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    • வடிகால் வசதி ஏற்படுத்தக்கோரி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
    • அதிகாரி பேச்சுவார்த்தை நடத்தினார்.

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள அணைக்குடம் காலனி தெருவில் மழைநீர் வடிவதில் தொடர்ந்து பிரச்சினை இருந்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் வடிகால் வசதி ஏற்படுத்தி தரக்கோரி பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்நிலையில் வடிகால் வசதி செய்து தரக்கோரி நேற்று கிராம மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் தா.பழூர் - ஜெயங்கொண்டம் சாலையில் போக்குவரத்து தடைபட்டது.

    இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதையடுத்து அங்கு வந்த துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சத்யராஜ் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    அப்போது, ஏற்கனவே அந்த இடத்தில் வடிகால் வசதி ஏற்படுத்துவதற்கு திட்டம் தயாரிக்கப்பட்டு நிர்வாக அனுமதி கிடைக்கப்பட்டுள்ளதாகவும், வடிகால் ஏற்படுத்தும் இடங்களில் சிலர் ஆக்கிரமித்து வீடு கட்டி உள்ளதால் அவற்றை அப்புறப்படுத்தி வடிகால் வசதி ஏற்படுத்தி தர வேண்டிய நிலை உள்ளதாகவும், அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் விளக்கம் அளித்தார்.

    இதனை அடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். மறியலால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது."

    • அணைந்த பெருமாள் நாடானூர் கிராம மக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
    • குவாரியில் வெடிக்கப்படும் வெடிகளால் வீடுகளில் விரிசல் விழுவதாக புகார் தெரிவித்துள்ளனர்.

    கடையம்:

    கடையம் அருகே உள்ள சொக்கலிங்கபுரம் மற்றும் அணைந்த பெருமாள் நாடானூர் கிராம பொதுமக்கள் திரண்டு வந்து மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

    எங்கள் பகுதியில் தனியார் குவாரி ஒன்றுக்கு மீண்டும் கல் உடைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த குவாரி முன்பு செயல்படும்போது வீடுகளில் விரிசல் விழுந்ததாகவும் குவாரியில் வெடிக்கப்படும் வெடிகளால் கர்ப்பிணி பெண்கள், இதய நோயாளிகள், முதியோர் போன்றோர் பாதிக்கப்படுவதாகவும் வீடுகளில் விரிசல் விழுவதாகும் புகார் தெரிவித்துள்ளனர். எனவே மாவட்ட கலெக்டர் உடனடியாக தலையிட்டு குவாரி உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதில் 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள், பஞ்சாயத்து தலைவர்கள் அழகுதுரை மற்றும் முத்தமிழ் செல்வி ரஞ்சித் ஆகியோர் தலைமையில் வந்து மனு அளித்தனர்.

    • அவனியாபுரத்தில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • ஜெ.பி.நகரில் மழைக்காலங்களில் வீடுகளை சுற்றி மழை நீர் சூழ்ந்து கொள்வது வழக்கமாக உள்ளது.

    அவனியாபுரம்

    அவனியாபுரம் பகுதியில் உள்ள ஜெ.பி.நகரில் மழைக்காலங்களில் வீடுகளை சுற்றி மழை நீர் சூழ்ந்து கொள்வது வழக்க மாக உள்ளது.

    இந்த நிலையில் தற்போது தொடர்ந்து மழை பெய்து வருவதினால் இப்பகுதியில் மழை நீருடன் கழிவு நீரும் கலந்து வீட்டுக்குள் புகுந்ததால் இப்பகுதி மக்கள் உதவி பொறியாளரிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை.

    இதனால் 3 நாட்க ளாக மழைநீருடன் கலந்த சாக்கடை நீர் வெளியேறா மல் துர்நாற்றம் வீசுகிறது. இதனை கண்டித்தும், மழை, கழிவுநீரை அகற்றக் கோரியும் இப்பகுதி மக்கள் இன்று அவனியாபுரம் பஸ் நிலையம் முன்பாக சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த அவனியாபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருண்குமார் சம்பவ இடத்திற்கு வந்து சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். இதனை ஏற்க மறுத்த பொதுமக்கள் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

    பின்னர் உதவி பொறியாளர் செல்வ விநாயகம் நேரில் வந்து மக்களின் கோரிக்கை களை உடனே நிறைவேற்று வதாகவும், தற்போது தொடர்ந்து மழை பெய்து வருவதினால் மழை நீரை வடிகால் வாய்க்காலில் எடுத்துச் செல்ல முடியவில்லை. ஆனாலும் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து மழை நீரை தேக்கத்தை அகற்றுகிறோம் என உறுதி கூறினார். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.

    • அரச மர கிளைகள் மின்வயரில் உரசுவதாக கூறி சிலர்அந்த மரத்தின் கிளைகளை வெட்டி அகற்றுவதாக பொதுமக்களிடம் தெரிவித்து உள்ளனர்.
    • பொதுமக்கள் அரசமரத்தின் கிளைகள் அனைத்தையும் வெட்டி மொட்டையாக்கி யவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி இன்று காலை குருவரெட்டியூர் பஸ் நிலையம் முன்பு கொட்டும் மழையிலும் சாலைமறியல் செய்தனர்.

    அம்மாபேட்டை:

    ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருேக உள்ள குருவரெட்டியூரில் அரசமரத்து வீதி என்ற பகுதி உள்ளது. இங்கு 150 ஆண்டுகள் பழமையான ஒரு அரச மரம் உள்ளது.

    இந்த நிலையில் அரச மர கிளைகள் மின்வயரில் உரசுவதாக கூறி சிலர்அந்த மரத்தின் கிளைகளை வெட்டி அகற்றுவதாக பொதுமக்களிடம் தெரிவித்து உள்ளனர்.

    ஆனால் அவர் மின் வயரில் உரசும் கிளைகளை மட்டும் வெட்டாமல் மரக்கிளைகள் அனைத்தையும் வெட்டி மரத்தை மொட்டையாக்கினர்.

    இதுப்பற்றி தெரியவந்ததும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர், மற்றும் வருவாய் ஆய்வாளருக்கு தகவல் கொடுத்தனர்.

    மேலும் அவர்கள் கோபிசெட்டிபாளையம் ஆர்.டி.ஓ.வுக்கும் தகவல் கொடுத்தனர்.

    இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அரசமரத்தின் கிளைகள் அனைத்தையும் வெட்டி மொட்டையாக்கி யவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி இன்று காலை குருவரெட்டியூர் பஸ் நிலையம் முன்பு கொட்டும் மழையிலும் சாலைமறியல் செய்தனர்.

    இதுப்பற்றி தெரியவந்ததும் போலீசார் மற்றும் அதிகாரிகள்விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பொதுமக்களின் போராட்டம் காரணமாக அந்த பகுதியே பரபரப்பாக காணப்பட்டது.

    • நான்கு வழிச்சாலையின் ஓரம் நெடுஞ்சாலை துறை சார்பில் கழிவு நீர் மழை நீர் செல்வதற்காக மூடப்பட்ட நிலையில் வாறுகால் அமைக்கப்பட்டுள்ளது.
    • கல்லூரி, பள்ளி பஸ்கள் மற்றும் மார்க்கெட் செல்லும் லாரிகள் செல்வதால் பெரும் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.

    தென்காசி:

    நெல்லை- தென்காசி நான்கு வழிச்சாலை பணிகள் நடைபெற்று வரும் நிலையில் பாவூர்சத்திரம் அருகே உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியின் மேல் புறம் இருந்து பாவூர்சத்திரம் மார்க்கெட் சாலை வரை செல்லும் பகுதியில் நான்கு வழிச்சாலையின் ஓரம் நெடுஞ்சாலை துறை சார்பில் கழிவு நீர் மழை நீர் செல்வதற்காக மூடப்பட்ட நிலையில் வாறுகால் அமைக்கப்பட்டுள்ளது.

    அதன் அருகே மிகவும் தாழ்வாக உயர் அழுத்த மின் வயர்கள் சென்று கொண்டு உள்ளன. நடந்து செல்லும் நபரின் தலை தட்டும் அளவிற்கு செல்வதால் உடனடியாக அதனை சம்பந்தப்பட்ட மின்சார வாரியத்தினர் சரி செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களிடம் கோரிக்கை எழுந்துள்ளது.

    மேலும் அவ்வழியே அதிகளவில் கனரக வாகனங்களான கல்லூரி, பள்ளி பேருந்துகள் மற்றும் மார்க்கெட் செல்லும் லாரிகள் செல்வதால் பெரும் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இந்த தாழ்வாக செல்லும் மின் ஒயர்களை உடனடியாக மாற்றி அமைப்பார்களா? என்ற எதிர்பார்ப்பு அப்பகுதியினர் இடையே எழுந்துள்ளது.


    • 2 நாட்களுக்கு நிலவேம்பு கசாயம் எடுத்துக் கொள்வது நல்லது.
    • குழந்தைகளுக்கு 30 மில்லியும், பெரியவர்களுக்கு 50 மில்லியும் பருக வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பாக மழைக்காலத்தில் காய்ச்சல் வருவதை தடுக்க முன்னெச்சரிக்கையாக நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியை முதன்மை மாவட்ட நீதிபதி மதுசூதனன் தொடங்கி வைத்து, அனைவருக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கினார்.

    இதில் நீதிமன்றத்திற்கு வரும் வழக்கறிஞர்கள், பொதுமக்கள் மற்றும் நீதிமன்ற பணியாளர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் கூடுதல் சார்பு நீதிபதி முருகன், வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் சசிகுமார், மனித உரிமைகள் ஆணையம் அரசு குற்றவியல் சிறப்பு வழக்கறிஞர் விவியன் அசோக் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    அப்போது கல்லுக்குளம் ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் கூறும்போது, மழைக்காலத்தில் பொதுமக்களுக்கு காய்ச்சல் வருவதை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 2 நாட்களுக்கு நிலவேம்பு கசாயம் எடுத்துக் கொள்வது நல்லது.

    குழந்தைகளுக்கு 30 மில்லியும், பெரியவர்களுக்கு 50 மில்லியும் பருக வேண்டும். காய்ச்சல் உள்ளவர்கள் தொடர்ந்து 5 நாட்களுக்கு நிலவேம்பு கசாயம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார்.

    • வி.எம்.சத்திரம் அருகே மூர்த்தி நயினார்குளத்தில் கரைகள் பலப்படுத்தப்பட்டு வருகிறது.
    • நெல்லை மாவட்டம் முழுவதும் 600 கிலோ மீட்டர் தூரத்துக்கு கால்வாய்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் தூர்வாரப்பட்டுள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை யொட்டி முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை கலெக்டர் விஷ்ணு ஆய்வு செய்து வருகிறார்.

    கலெக்டர் ஆய்வு

    வி.எம்.சத்திரம் அருகே மூர்த்தி நயினார்குளத்தில் கரைகள் பலப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பணி களை இன்று கலெக்டர் விஷ்ணு, மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்தி ஆகியோர் ஆய்வு செய்தனர்.

    பின்னர் கலெக்டர் விஷ்ணு நிருபர்களிடம் கூறியதாவது:-

    கட்டுப்பாட்டு அறை

    நெல்லை மாவட்டம் முழுவதும் 600 கிலோ மீட்டர் தூரத்துக்கு கால்வாய்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் தூர்வாரப்பட்டுள்ளது. 75 கிலோ மீட்டர் தூரத்துக்கு கரைகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.

    மழை பாதிப்பு குறித்து பொது மக்கள் புகார் செய்ய 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பொது மக்கள் தங்கள் பகுதிகளில் தேங்கும் மழை நீர் குறித்து புகார் செய்வதற்காக பிரத்யேக செயலி ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது.

    நீர் இருப்பு

    நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை 3 வகைகளில் வெள்ளப் பெருக்கு ஆபத்து ஏற்படலாம். இதில் தாமிரபரணி ஆற்றை பொறுத்தவரை 60 ஆயிரம் அடி வரை கொள்ளளவு கொண்டது. மேலும் தற்போது பாபநாசம் அணையில் 42 சதவீதம் மட்டுமே நீர் இருப்பு உள்ளது. மணிமுத்தாறு அணையில் 29 சதவீதம் மட்டுமே நீர் இருப்பு உள்ளது.

    எனவே கனமழை பெய்தாலும் ஆற்றில் பெரிய அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புகள் இல்லை.

    கடந்த ஆண்டு மாநகர பகுதியில் உள்ள குளங்களில் இயற்கையான திசை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆனால் தற்போது அவற்றை சரி செய்துள்ளோம். மேலும் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள வேய்ந்தான்குளமும் தூர்வாரப்பட்டு உள்ளது.

    மழை குறைவு

    இதனால் மாநகர பகுதியில் வெள்ளப் பெருக்கு பாதிப்பு குறித்து பொது மக்கள் அச்சப்பட தேவையில்லை. நெல்லை மாவட்டத்தில் தற்போது வரை மழை பாதிப்பு இல்லை. கடந்த ஆண்டை விட தற்போது 60 சதவீதம் மழை குறைவாகவே பெய்து உள்ளது.

    நெல்லை மாவட்டத்தில் குளங்கள், கால்வாய்கள் தூர்வாரப்பட்டுள்ளதால் 20 சதவீதம் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

    மானூர், ராதாபுரம் வட்டார பகுதிகளில் மட்டும் நிலத்தடி நீர்மட்டம் குறைவாக உள்ளது. இந்த வட்டாரங்கள் 'ரெட் பிளாக்' பகுதிகளாக அறிவிக்கப்பட்டு அங்கு நிலத்தடி நீர்மட்டத்தை பெருக்குவதற்காக 3 புதிய திட்டங்கள் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    கடந்த ஆண்டு வெள்ள பாதிப்பு அதிகம் ஏற்படும் இடங்கள் என 74 இடங்கள் கண்டறியப்பட்டிருந்தன. தற்போது அவை 63 ஆக குறைந்துள்ளது.

    பொதுமக்கள் கால் வாய்களில் குப்பைகளை கொட்டுவதால் மழை நீர் செல்லும் பாதை அடைத்து வெள்ள பாதிப்பு ஏற்படுகிறது. எனவே கால்வாய்களில் குப்பை களை கொட்ட வேண்டாம் என பொது மக்களை கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின் போது பொதுப்பணித்துறை செயற் பொறியாளர் மாரியப்பன், பாளை தாசில்தார் ஆனந்த பிரகாஷ், பேரிடர் மீட்பு தாசில்தார் செல்வன் ஆகியோர் உடனிருந்தனர்.

    ×