search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Public"

    • மரத்தில் வழக்கமாக இலைகள் உதிர்ந்து மீண்டும் முளைத்துவிடும்.
    • 2 மாதங்களாக இலைகள் உதிர்ந்து மீண்டும் முளைக்கவில்லை.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள மாதப்பூர் ஊராட்சி நல்லா கவுண்டம்பாளையம் விநாயகர் கோவிலில் சுமார் 200 ஆண்டுகள் பழமையான அரச மரம் உள்ளது. இந்த மரத்தில் வழக்கமாக இலைகள் உதிர்ந்து மீண்டும் முளைத்துவிடும்.

    இந்த நிலையில் கடந்த 2 மாதங்களாக இலைகள் உதிர்ந்து மீண்டும் முளைக்கவில்லை. இதைத்தொடர்ந்து அந்த அரச மரம் பட்டுப் போய் விடுமோ என பொதுமக்கள் கவலையில் உள்ளனர். இது குறித்து வேளாண் விஞ்ஞானிகள் அல்லது, விபரம் தெரிந்த விவசாயிகள், இந்த 200 வயது மரத்தை காப்பாற்றி தரும்படி வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    • நவீன எரிவாயு தகன மேடை அமைக்க அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
    • பச்சாபாளையம் பொதுமக்கள் அங்கும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

    பல்லடம் :

    பல்லடம் நகராட்சி 8-வது வார்டு பச்சாபாளையம் மயான பகுதியில், கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தில் ரூ.145 லட்சம் மதிப்பில் நவீன எரிவாயு தகன மேடை அமைக்க பல்லடம் நகராட்சி தரப்பில் முயற்சி மேற்கொள்ளும் நிலையில், நவீன எரிவாயு தகன மேடை அமைக்க அந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.தமிழக முதல்வர், தலைமைச் செயலாளர் மாவட்ட கலெக்டர் உள்ளிட்டவர்களுக்கு கோரிக்கை மனு அனுப்பியும், வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றியும், தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில், கடந்த ஆகஸ்டு மாதம் 8-ந் தேதி பல்லடத்தில், நவீன எரிவாயு தகன மேடை அமைக்க அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட பச்சாபாளையம் பொதுமக்கள் அங்கும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். அதில் அதிகாரிகள் உங்களது கருத்துக்கள் அரசுக்கு அனுப்பப்பட்டு அதன் பிறகு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவித்தனர். இந்த நிலையில், நேற்று பச்சாபாளையம் பகுதியில், நவீன எரிவாயு தகன மேடை அமைக்க நில அளவீடு செய்வதாக கூறி, பல்லடம் நகராட்சி ஆணையாளர் விநாயகம், மற்றும் கிராம நிர்வாக அலுவலர் சர்வேயர் உள்ளிட்ட அதிகாரிகள் சென்றனர். இதனை அறிந்து அங்கு கூடிய பச்சாபாளையம் பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் அதிகாரிகளை சிறை பிடித்தனர்.

    இதையடுத்து சம்பவ இடம் சென்ற தாசில்தார் மற்றும் பல்லடம் போலீசார் பொதுமக்களை சமாதானம் செய்தனர். அளவீடு பணி மட்டுமே நடைபெறுகிறது. எவ்வளவு இடம் உள்ளது. ஆய்வு செய்யவே வந்துள்ளோம். என மக்களிடம் எடுத்துக்கூறினர். இதனை ஏற்றுக்கொள்ள மறுத்த பொதுமக்கள் அமைதிப் பேச்சுவார்த்தை நடந்த பின் எந்தவித தகவலும் சொல்லாமல், நீங்கள் அளவீடு பணி செய்வது ஏற்றுக்கொள்ள முடியாது. இங்கு எரிவாயு தகன மேடை அமைப்பதால் ஏற்படும் இடையூறுகள் குறித்து நாங்கள் தெரியப்படுத்தி உள்ளோம். அதற்கான பதில் தராமல் திட்டப் பணிகளை மேற்கொள்வது எந்த வகையில் நியாயம் என ஆவேசப்பட்டனர்.

    இதையடுத்து இன்னொரு அமைதி பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்துகொள்ளலாம் என கூறிவிட்டு அதிகாரிகள் திரும்பி சென்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:- அரசு எந்த திட்டத்தை கொண்டுவந்தாலும் தொலைநோக்குப் பார்வையில் திட்டங்களை கொண்டு வர வேண்டும். இந்தத் திட்டம் அமைந்தால் தினமும் சுமார் 4 முதல் 10 உடல்கள் ஆவது அந்த பகுதிக்கு வரும். ஏற்கனவே, கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் உள்ளது. அந்த ரோடு வழியாகத்தான் உடலைக் கொண்டு வரும் வாகனங்கள் சென்று வர வேண்டும். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் திட்டம் செயல்படுத்த உள்ள பகுதியில் சுகாதார வளாகம், ரேசன் கடை, பனியன் கம்பெனி,1000க்கும்மேற்பட்ட மாணவர்கள் பயிலும் பள்ளி ஆகியவை உள்ளன. மேலும் பெண்கள் அதிகமாக நடமாடும் பகுதி, இந்த நிலையில், அங்கு இந்த திட்டத்தை செயல்படுத்தினால் பெண்களுக்கு கடும் அவதி ஏற்படும். எனவே தொலைநோக்குப் பார்வையில்,போக்குவரத்து பிரச்சனை இல்லாத, நகருக்கு ஒதுக்குப்புறமான இடத்தில், இந்தத் திட்டத்தை செயல்படுத்தினால் மக்களுக்கு நன்மை ஏற்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • உடன்குடி சந்தையடி தெருசந்திப்பு போக்குவரத்து நிறைந்த ஒரு முக்கியமான 3 சந்திப்பு சாலையாகும்.
    • திருச்செந்தூர் தூத்துக்குடியில் இருந்து வரும் பஸ்களை சந்தையடிதெரு சந்திப்புக்கு முன்பு சுமார் 100 அடிக்கு முன்னதாகவே பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்க வேண்டும்.

    உடன்குடி:

    உடன்குடி சந்தையடி தெருசந்திப்பு போக்குவரத்து நிறைந்த ஒரு முக்கியமான 3 சந்திப்பு சாலையாகும். நெல்லை இருந்து வரும் பஸ்கள், தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூரில் இருந்து வரும் பஸ்கள், உடன்குடி பஸ் நிலையத்திலிருந்து வரும் பஸ்கள் ஆகிய 3 பஸ்களும் ஓரே நேரத்தில் ஒரே இடத்தில் நின்று பயணிகளை இறக்குவதாலும், ஏற்றுவதாலும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இதனால் மக்கள் பெரிதும் அவதிப்படுகிறார்கள். போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் அந்த இடத்தில் ஒரு ரவுண்டானா அமைக்க வேண்டும்.

    மேலும் திருச்செந்தூர் தூத்துக்குடியில் இருந்து வரும் பஸ்களை சந்தையடிதெரு சந்திப்புக்கு முன்பு சுமார் 100 அடிக்கு முன்னதாகவே பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்க வேண்டும். இப்படி செய்தால் சந்தையடி தெரு சந்திப்பில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கலாம் என்பது சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் மற்றும் பல்வேறு தரப்பினரின் கோரிக்கையாகும். 

    • வீட்டின் முன் வாசல் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.
    • வெள்ளகோவில் பகுதியில் தற்போது திருட்டு சம்பவங்கள் அதிகம் நடைபெறுகிறது.

    வெள்ளகோவில் :

    முத்தூர் அருகே உள்ள முத்து மங்கலத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 40). இவர் முத்தூரில் சலூன் கடை வைத்து நடத்தி வருகின்றார். நேற்று காலை இவரும் இவரது மனைவியும் உறவினர் வீட்டு விசேஷத்திற்கு சென்று விட்டு மதியம் வீட்டிற்கு வந்து பார்க்கும்போது வீட்டின் முன் வாசல் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.உள்ளே சென்று பார்க்கும் போது பீரோவில் இருந்த செயின், மோதிரம், தோடு, ஆரம் உட்பட மொத்தம் 11.3/4 பவுன் தங்க நகைகள் திருட்டு போனது தெரிய வந்தது.

    இது குறித்து செந்தில்குமார் வெள்ளகோவில் போலீசில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கே.ராஜு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்,. வெள்ளகோவில் பகுதியில் தற்போது திருட்டு சம்பவங்கள் அதிகம் நடைபெறுவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். 

    • ராம பட்டினம் கிராமத்தில் சுமார் 2500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் குடியிருந்து வருகின்றனர்.
    • 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.

    தாராபுரம் :

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த கொளத்துப்பாளையம் பேரூராட்சி அருகே ராம பட்டினம் எனும் கிராமத்தில் சுமார் 2500க்கும்மேற்பட்ட பொதுமக்கள் குடியிருந்து வருகின்றனர். இங்குள்ள பொதுமக்கள் தினசரி கூலி வேலைக்கு சென்று வருகின்றனர்.

    இங்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள், அங்கன்வாடி பள்ளியில் 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் தற்போது அங்கன்வாடி பள்ளி சமையலறையை ஒட்டி கொளத்துப்பாளையம் பேரூராட்சிக்கு புறக்கழிப்பிடம் கட்டப்பட்டு வருகின்றன .அங்கு கழிப்பிடம் கட்ட வேண்டாம் , குழந்தைகளுக்கு தொற்றுநோய் மற்றும் காய்ச்சல் பரவும். ஆகையால் மாற்று இடங்களில் கட்ட வேண்டுமென வலியுறுத்தினர். கலெக்டரிடமும் மனு கொடுத்தனர். கொளத்துப்பாளையம் பேரூராட்சி செயல் அலுவலர், கொளத்துப்பாளையம் பேரூராட்சி தலைவி ஆகியோரிடம் வலியுறுத்தினர். ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை.இதனை கண்டித்து பேரூராட்சி வளாகம் முன்பு இன்று பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 

    • குடிநீர் குழாய் பதிப்பு, சாக்கடை கால்வாய் வசதி ஏற்படுத்துவதற்காக சாலைகள் தோண்டப்பட்டு உள்ளன.
    • ஒரே சாலையில் எதிரும், புதிருமாக வாகனங்கள் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகர பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி உள்ளிட்ட பல்வேறு பணிகளின் காரணமாக மாநகர பகுதிகளில் சாலைகள் அமைக்க, சாக்கடை கால்வாய் அமைக்க, குடிநீர் திட்ட பணிகளுக்காக குழாய் அமைக்க என பல்வேறு பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகள் பல பகுதிகளில் சரியான முறையில் திட்டமிடப்படாமல் மேற்கொள்வதால், பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வந்து கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் அனுப்பர்பாளையத்தில் இருந்து 15 வேலம்பாளையம், சோழிபாளையம் செல்லும் பிரதான சாலையில் குடிநீர் குழாய் பதிப்பு, சாக்கடை கால்வாய் வசதி ஏற்படுத்துவதற்காக சாலைகள் தோண்டப்பட்டு உள்ளன.

    இதன் காரணமாக அந்த பகுதியில் ஒரு வழி சாலையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதனால் ஒரே சாலையில் எதிரும், புதிருமாக வாகனங்கள் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதன் காரணமாக பெரிய வாகனங்கள் அந்த சாலையில் வரும் போது, போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும், எதிரெதிரே வாகனங்கள் செல்வதால் வாகன ஓட்டிகளுக்கு இடையே அவ்வப்போது தகராறும் ஏற்படுகிறது. விபத்துகளும் நடந்து வருகின்றன.

    இதுபோல் அந்த பகுதிகளில் போக்குவரத்து போலீசாரும் இல்லாமல் இருப்பதால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள். இதுபோல் மாநகராட்சி மற்றும் போக்குவரத்துத்துறை சார்பில் சாலையில் செல்ல முடியாது என்பதை தெரிவிக்கும் வகையில் விளம்பர பதாகைகள் கூட வைக்கப்படவில்லை. இதனால் பலரும் சாலையில் சென்று விட்டு பாதை இல்லாததால் திரும்பி வரும் நிலையும் உள்ளது. திருப்பூருக்கு தமிழக முதல்-அமைச்சர் வரும் போது, அந்த பகுதியில் வேலை செய்யப்பட்டது. இதன் பின்னர் மீண்டும் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இந்த சாலையை சீரமைக்கக்கோரி பலரும் போராட்டங்களையும் நடத்தினர். இருப்பினும் இதற்கு தீர்வு இன்னமும் கிடைக்கவில்லை. இதனால் நீதிமன்றத்தை நாடுவதற்கு அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் முடிவு செய்துள்ளனர்.

    • சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி கீழ் தெருவில் காளியம்மன் கோவில் உள்ளது.இந்த கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் வன காளியம்மன் சிலை உள்ளது.
    • அனுமதி இல்லாமல் மரத்தை வெட்டி இருக்க கூடாது. கோவில் நிலம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது.

    காடையாம்பட்டி:

    சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி கீழ் தெருவில் காளியம்மன் கோவில் உள்ளது.இந்த கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் வன காளியம்மன் சிலை உள்ளது. அதன் அருகில் வன்னிய மரம் ஒன்று,புங்கன் மரம் உள்ளது. அதன் அருகில் நைனா காடு பகுதியை சேர்ந்த புவனேஸ்வரி என்பவர் 1600 சதுர அடி நிலத்தை விலைக்கு வாங்கி வீடு கட்டி வருகிறார்.

    இவர் நேற்று வன காளியம்மன் சிலை அருகில் உள்ள வன்னிய மர கிளைகளை வெட்டி யுள்ளார். கோவில் மரம் என்பதால் ஆத்திரம் அடை ந்த பொதுமக்கள், கோவில் மரத்தை வெட்டியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி அப்பகுதி மக்கள் கோவில் அருகாமையில் பந்தல் அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் கூறுகையில் கோவில் அனுமதி இல்லாமல் மரத்தை வெட்டி இருக்க கூடாது. கோவில் நிலம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. அப்படி இருக்கையில் மரத்தை வெட்டியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    இப்போராட்டத்தில் பாமக மாவட்ட தலைவர் மாணிக்கம், ஒன்றிய செய லாளர் வெங்கடேஷ், வெங்கடாசலம் உள்ளி டோரும் பங்கேற்றுள்ளனர்.

    இந்த சம்பவம் தொடர் பாக குறித்து கிராம் நிர்வாக அலுவலர் ராம சந்திரன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வரு கின்றனர்.

    • பழமையான புளியமரம் ஏரி உபரிநீர் செல்லும் கால்வாயில் இருப்பதால் தண்ணீர் செல்லும்போது அரிப்பு ஏற்பட்டு வேரோடு சாயும் அபாயம் இருந்தது.
    • இதையடுத்து அந்த மரத்தை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் நகராட்சி 8-வது வார்டு வேடப்பட்டி செல்லும் சாலையோரம் இருந்த பழமையான புளியமரம் ஏரி உபரிநீர் செல்லும் கால்வாயில் இருப்பதால் தண்ணீர் செல்லும்போது அரிப்பு ஏற்பட்டு வேரோடு சாயும் அபாயம் இருந்தது. இதையடுத்து அந்த மரத்தை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்று ஆர்.டி.ஓ. உத்தரவின் படி நேற்று வருவாய்த்து றை மற்றும் நகராட்சி அதிகாரிகளால் அந்த புளியமரம் அகற்றப்ப ட்டது.

    • சேலம் மாவட்டம், ஓமலூர் தாலுகாவில், உள்ள கோட்ட கவுண்டம்பட்டி, ஊராட்சி பகுதியில் தேங்கியுள்ள மழை நீரை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • இதனால் சாக்கடை கால்வாய் வசதி இல்லாமல் போனது, மறுபுறம் மழை நீர் செல்ல கால்வாய் வசதி இல்லாத காரணத்தினால் அங்கு தண்ணீர் தேங்கி உள்ளது.

    கருப்பூர்:

    சேலம் மாவட்டம், ஓமலூர் தாலுகாவில், உள்ள கோட்ட கவுண்டம்பட்டி, ஊராட்சி பகுதியில் சேலம், ஓமலூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சுங்க சாவடி (டோல்கேட்) எதிரில் சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் அரசு மற்றும் தனியார் நிலங்களில் அண்மையில் பெய்த மழை நீர் ஏரி போல் தேங்கியுள்ளது.

    இதனால் அந்த வழியாக கோட்ட கவுண்டம்பட்டி பகுதிகளில் பள்ளி, கல்லூரிக்கு செல்ல முடியாமல் பொதுமக்கள், மாணவர்கள், தவித்து வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் மணி, ராம், ஈஸ்வரன் ஆகியோர் கூறியதாவது:-

    நெடுஞ்சாலைத் துறையினர் கடந்த 2 ஆண்டிற்கு முன்பு புதியதாக சாலை அமைத்தனர் அப்பொழுது 2 புறமும் உள்ள சாக்கடை கால்வாய்களை அப்புறப்படுத்திவிட்டு அதன் மீது புதிய தார்சாலை அமைத்தனர்.

    இதனால் சாக்கடை கால்வாய் வசதி இல்லாமல் போனது, மறுபுறம் மழை நீர் செல்ல கால்வாய் வசதி இல்லாத காரணத்தினால் அங்கு தண்ணீர் தேங்கி உள்ளது. மேலும் சுங்க சாவடியில் கட்டணம் செலுத்த வாகன ஓட்டிகள் இந்தச் சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.

    தற்போது தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் 2 கிணறுகள் நீரில் மூழ்கி உள்ளது அந்த சாலையை பயன்படுத்தும் வெளியூரில் வாகன ஓட்டிகள் தெரியாமல் கிணற்றில் விழும் அபாயம் உள்ளது, கொசு உற்பத்தியாகி பொதுமக்களுக்கு மலேரியா, டெங்கு காய்ச்சல்கள் பரவி வருகிறது.

    இங்கு தேங்கி உள்ள மழை நீரை அகற்ற நெடுஞ்சாலை துறை, ஓமலூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

    • போலீசார் கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனா்.
    • வீட்டில் திருடிய கொள்ளையர்களின் உருவம் சி.சி.டி.வி., கேமராவில் பதிவாகி உள்ளது.

    காங்கயம் :

    காங்கயம், நெய்க்காரன்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் செல்வகாா்த்திகேயன் (வயது 31). இவா் நெய்க்காரன்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே மளிகைக் கடை நடத்தி வருகிறாா்.இந்நிலையில், வழக்கம்போல கடையை பூட்டிவிட்டு நேற்று முன்தினம் இரவு வீட்டுக்குச் சென்றுள்ளாா். நேற்று காலை வந்து பாா்த்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிா்ச்சி அடைந்துள்ளாா். உள்ளே சென்று பாா்த்தபோது கல்லாவில் வைத்திருந்த ரூ.45 ஆயிரம் திருட்டுபோனது தெரியவந்தது.

    இதேபோல நெய்க்காரன்பாளையத்தை அடுத்துள்ள புதூா் பிரிவு பேருந்து நிறுத்தம் பகுதியில் தங்கவேல் (44) என்பவருக்கு சொந்தமான மளிகை கடையின் பூட்டை உடைத்து ரூ.7 ஆயிரம், புதூா் பிரிவு அடுத்துள்ள ஆலாம்பாடி பேருந்து நிறுத்தம் பகுதியில் சதீஷ்குமாா் (24) என்பவரது இருசக்கர வாகன பழுது நீக்கும் கடையின் பூட்டை உடைத்து ரூ.15 ஆயிரம் என மொத்தம் ரூ. 67ஆயிரத்தை மா்ம நபா்கள் ஒரே இரவில் திருடிச் சென்றுள்ளனா்.

    இது குறித்து காங்கயம் காவல் நிலையத்தில் கடையின் உரிமையாளா்கள் புகாா் அளித்தனா்.வழக்குப் பதிவு செய்த போலீசார் அப்பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனா். காங்கயம், தாராபுரம் பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. தாராபுரத்தில் பர்னிச்சர் கடை உரிமையாளர் வீட்டில் திருடிய கொள்ளையர்களின் உருவம் சி.சி.டி.வி., கேமராவில் பதிவாகி உள்ளது. எனவே அந்த கும்பல் காங்கயம், தாராபுரம் பகுதியில் தங்கள் கைவரிசையை காட்டியிருக்கலாம் என தெரிகிறது. எனவே கொள்ளை கும்பலை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் காங்கயம், தாராபுரம் பகுதியில் வாகன சோதனையிலும் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வருவது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

    • நெல்லை விருந்தினர் மாளிகையில் இருந்து விழா மேடைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கார் மூலம் புறப்பட்டு சென்றார்.
    • 7 கிலோ மீட்டர் தூரம் சாலை ஓரங்களில் ஏராளமான பெண்களும், பொதுமக்களும் திரண்டு நின்று முதல்-அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

    நெல்லை:

    நெல்லை விருந்தினர் மாளிகையில் இருந்து விழா மேடைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கார் மூலம் புறப்பட்டு சென்றார்.

    7 கிலோ மீட்டர் தூரம் சாலை ஓரங்களில் ஏராளமான பெண்களும், பொதுமக்களும் திரண்டு நின்று முதல்-அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

    நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க.சார்பில் அப்துல் வகாப் எம்.எல்.ஏ. தலைமையில் 25 இடங்களில் முதல்-அமைச்சருக்கு வரவேற்பு கொடுத்தனர். காரில் முதல்-அமைச்சர் சென்றபோது சாலையில் பெண்கள் ஏராளமானோர் நின்று இருந்தனர். அப்போது காரை நிறுத்தி அதிலிருந்து இறங்கி சென்று முதல்-அமைச்சர் மனுக்களை பெற்றார்.

    இதேபோல் மாற்று திறளாளிகள் நின்றிருந்தனர். அவர்களை பார்த்ததும் அருகில் சென்று நலம் விசாரித்து குறைகளை கேட்டறிந்தார்.

    பின்னர் பாளை மார்க்கெட் பகுதியில் சென்றபோது ஏராளமான சிறுவர், சிறுமிகள், திருவள்ளுவர், அன்னை தெரசா உள்ளிட்டவர்களின் வேடம் அணிந்து நின்றிருந்தனர்.

    அவர்களை பார்த்ததும் காரில் இருந்து இறங்கி சென்ற முதல்-அமைச்சர் அவர்களுக்கு கை கொடுத்து அவர்களுடன் சிறிது நேரம் கொஞ்சி பேசினார். இதேபோல் விழா மேடை வரை பல்வேறு இடங்கிளில் காரில் இருந்து இறங்கி சென்ற முதல்-அமைச்சர் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்.

    • கோகிலவாணி ஆகியோரது வீட்டு பூட்டை உடைத்து 80 ஆயிரம்,தர்மா என்பவரது வீட்டில் ரூ. 30 ஆயிரம் தங்க நகை திருடப்பட்டது.
    • ஆடு மேய்த்து கொண்டிருந்த சரோஜினி என்பவரிடம்செயின் பறிப்பு.

    அவினாசி :

    அவினாசி ராஜாஜி வீதியில் வசிப்பவர் அப்துல்வகாப். இவரது வீட்டின் பூட்டை உடைத்து அங்கிருந்த 60 பவுன் நகைகள் மற்றும் ரூ. 6 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இதே போல் கடந்த 2மாதத்தில் அவினாசி மங்கலம் ரோட்டில் நடந்து செனற பெண்ணிடம் செயின் பறிக்கப்பட்டது.அவினாசி கமிட்டியார் காலனியில் பட்டப்பகலில் சாமிநாதன் மற்றும் அவரது மகள் கோகிலவாணி ஆகியோரது வீட்டு பூட்டை உடைத்து 80 ஆயிரம்,தர்மா என்பவரது வீட்டில் ரூ. 30 ஆயிரம், தங்க நகை திருடப்பட்டது.

    கமிட்டியார் காலனி மணிகண்டன் என்பவரது வீட்டில் பணம்- நகை திருட்டு, ஆடு மேய்த்து கொண்டிருந்த சரோஜினி என்பவரிடம்செயின் பறிப்பு, அவினாசி மங்கலம் ரோட்டில் அதிகாலையில் வாசலில் கோலம்போட்டுகொண்டிருந்த பெண்ணிடம் நகை பறிப்பு, நடுவச்சேரியில் பெண்ணின் வீட்டு பூட்டு உடைத்து திருட்டு என தொடர்ந்து அவினாசி வட்டாரத்தில் திருட்டு, வழிப்பறி சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. திருட்டு கும்பல்பகல் நேரத்தில் பூட்டியிருக்கும் வீடுகளை நோட்டம் பார்த்து செல்கின்றனர். பின்னர் இரவு நேரங்களில் தங்களது கைவரிசையை காட்டுகின்றனர்.

    எனவே குற்றவாளிகளை பிடிக்க எஸ். பி., உத்தரவின்பேரில் தனிப்படையினர் திருப்பூர், அவினாசி சுற்றுவட்டார பகுதி, பெருமாநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ஒவ்வொரு முக்கிய வீதிகளில் சி.சி.டி.வி.கேமரா பொருத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் வெளியூர் செல்பவர்கள் அவினாசி போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்து செல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×