என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Purity"
- கலெக்டர், புதிய தாக அமைய இருக்கும் தீவிர சிகிச்சை பிரிவு, சித்த மருத்துவப்பிரிவு, புறநோயாளிகள் பிரிவு ஆகிய 3 இடங்களையும் பார்வையிட்டார்.
- விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வரும்படியும் பொதுப் பணித்துறை செயற்பொறியாளரிடம் கலெக்டர் கேட்டுக் கொண்டார்.
புதுச்சேரி:
காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில், கலெக்டர் குலோத் துங்கன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது, ஆஸ்பத்திரி மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர். கண்ணகி, பொதுப்பணித்துறையை செயற்பொறியாளர் சிதம்பரநாதன் மற்றும் டாக்டர்கள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடன் சென்றனர். ஆஸ்பத்திரியின் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர், புதிய தாக அமைய இருக்கும் தீவிர சிகிச்சை பிரிவு, சித்த மருத்துவப்பிரிவு மற்றும் புறநோயாளிகள் பிரிவு ஆகிய 3 இடங்களையும் பார்வையிட்டார். பின்னர், அரசு ஆஸ்பத்திரியை மேம்படுத்துவது குறித்து சில ஆலோசனை களை வழங்கினார்.
மேலும், சிறுநீரகம் சம்பந்தப்பட்ட டயாலிசிஸ் மையத்தை பார்வையிட்ட கலெக்டர், கூடுதல் டயாலிசிஸ் மையங்களை அமைத்து, அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் அறி வுறுத்தினார். குறிப்பாக, இப்பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வரும்படியும் பொதுப் பணித்துறை செயற்பொறியாளரிடம் கலெக்டர் கேட்டுக் கொண்டார். அதேபோல், அரசு ஆஸ்பத்திரியின் அனைத்து பகுதிகளும் தினசரி தூய்மையாக பராமரிக்கவும், குடிநீர் வழங்கவும், டாக்டர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டு நர்கள் 24 மணி நேரமும் ஆஸ்பத்திரியில் இருக்கவும் கண்காணிப் பாளரிடம் அறிவுறுத்தினார்.
- கும்பாபிஷேகத்திற்கு 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள்.
- கோவிலை சுற்றி 4 வீதிகிலும் மெகா தூய்மை பணி முகாம் நடைபெற்றது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க சட்டைநாதர் ஆலயத்தில் கும்பாபிஷேகம் 32 ஆண்டுகளுக்கு பிறகு வருகின்ற மே மாதம் 24ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதற்காக கோவில் திருப்பணிகள் நடைபெற்று வரும் நிலையில் கோவில் நிர்வாகம் மற்றும் நகராட்சி அதிகாரிகளின் ஆலோசனைக்கு பின் நகராட்சி சார்பில் கும்பாபிஷேகத்தின் போது 5 லட்சத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் வரக்கூடும் என்பதால் அடிப்படை வசதிகளான குடிநீர், கழிவறை வசதி, சுகாதாரம் ஆகியவை பக்தர்களுக்கு ஏற்படுத்தும் விதமாக முதற்கட்டமாக சட்டைநாதர் ஆலயத்தில் நான்கு வீதிகளிலும் மெகா தூய்மை பணி முகாம் துவங்கியது.
இதில் சீர்காழி நகராட்சி ஆணையர் வாசுதேவன், நகர் மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி ராஜசேகர் ஆகியோர் பார்வையிட்டு பணிகளை விரைவு படுத்தினர்.
மேலும் நகராட்சி சார்பில் கும்பாபிஷேகத்தின் போது நான்கு விதிகளிலும் நகராட்சி தூய்மையான குடிநீர் பக்தர்களுக்கு கிடைக்கவும், நான்கு வீதிகளிலும் தற்காலிக கழிப்பறை அமைக்கவும், நகர் முழுவதும் தூய்மையாக வைத்துக் கொள்ளவும் அதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாக நகராட்சி ஆணையர் வாசுதேவன் தெரிவித்தார்.
- ஆகாய தாமரைகள் படர்ந்தும் நீரோட்டம் தடைப்பட்டு கழுமலை ஆறு தூய்மையை இழந்து வருகிறது.
- குப்பைகள் மற்றும் தண்ணீர் வேகமாக ஓடுவதற்கு தடையாக உள்ள பொருட்களை அகற்றி தூய்மை செய்யும் பணி நடைபெற்றது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் பிரதான கழுமலை பாசன ஆறு உள்ளது. கொண்டல் பகுதியில் உருவாகும் கழுமலையாறு கொண்டல், வள்ளுவக் குடி, அகனி, சீர்காழி, திட்டை, தில்லைவிடங்கன், திருத்தோணிபுரம், செம்மங்குடி உள்ளிட்ட சுமார் 15க்கு மேற்பட்ட கிராமங்களில் சுமார் 6000 ஏக்கரில் பாசன வசதி நடைபெறுகிறது.
சீர்காழி நகர் பகுதியில் கழுமலை பாசன ஆறு நகர் பகுதியில் உள்ள குடியிருப்புகள் வணிக நிறுவனங்களில் இருந்து கழிவுநீர் மற்றும் நகர் பகுதியில் இருந்து குப்பைகள், பிளாஸ்டிக் பொருட்கள் உடைந்த பாட்டில்கள் ஆகியவை கொட்டப்பட்டும், ஆகாயத் தாமரைகள் படர்ந்தும் நீரோட்டம் தடைப்பட்டு கழுமலை ஆறு தூய்மையை இழந்து வருகிறது.
இதனிடையே நகர் பகுதியில் கழுமலை ஆற்றில் தேங்கி இருந்த குப்பைகள், மண்டி கிடந்த ஆகாயத் தாமரை செடிகள், மழைக்காலம் வர உள்ளதால் நகர் பகுதியில் உள்ள குப்பைகள் மற்றும் தண்ணீர் வேகமாக ஓடுவதற்கு தடையாக உள்ள பொருட்களை அகற்றி தூய்மை செய்யும் பணி நடைபெற்றது.
இதனை நகர் மன்ற தலைவர் துர்காபரமேஸ்வரி ராஜசேகரன், ஆணையர் (பொ) ராஜகோபால், ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பணி மேற்பார்வையாளர் விஜயேந்திரன், எழுததர் ராஜகணேஷ், திமுக நகர இளைஞரணி அமைப்பாளர் ராஜசேகரன் ஆகியோர் உடனிருந்தனர்.
- பேரணியில் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்கவும், மழைநீரை சேமித்து வைக்கவும் வலியுறுத்தினர்.
- மாணவர்கள் பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மெலட்டூர்:
தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா பண்டாரவாடை கிரசண்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சார்பில் நம்ம ஊரு சூப்பரு திட்டத்தின் கீழ் தூய்மை பணிக்கான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பண்டாரவாடை ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சுல்தானாபர்வீன் தலைமை வகித்தார்.
பள்ளி நிர்வாகக்குழு தலைவர் ஜபரூல்லா, செயலாளரும் தாளாளருமான முஹமதுபா ட்சா, பள்ளி முதல்வர் கோமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் பண்டாரவாடை அரசு ஆரம்ப சுகாதாரநிலைய மருத்துவர் தீபக் கலந்து கொண்டு தூய்மைக்கான விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பேரணியில் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்க வலியுறுத்தியும், மழைநீரை சேமித்து வைக்கவும், மரங்களை நடவு செய்ய வலியுறுத்தியும் மாணவர்கள் பதாகைகளை ஏந்தி, கோஷங்களை எழுப்பி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
பேரணி பள்ளி அருகே தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்று இறுதியில் பள்ளியை வந்தடைந்தது.
இதில் பள்ளியின் நிர்வாக அலுவலர் கரிகாலன், நிர்வாககுழு உறுப்பினர் முகமது பாரூக் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் செய்து இருந்தனர்.
- வீட்டு உபயோக பொருட்களை தனியாக சேகரித்து அவற்றை தினசரி வீடு தோறும் வரும் நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் வசம் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது.
- வீட்டில் உருவாகும் மக்கும் குப்பைகளை பச்சை நிற தொட்டியிலும் மக்காத குப்பைகளை நீல நிற தொட்டியிலும் சேகரித்து தூய்மைப் பணியாளர்கள் வசம் ஒப்படைக்க வேண்டும்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் நகராட்சியின் சார்பில் தூய்மைக்கான மக்கள் இயக்க விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.இந்த விழிப்புணர்வு பேரணியை வேதாரண்யம் நகர்மன்றத் தலைவர் புகழேந்தி தொடக்கி வைத்தார்.முன்னதாக தூய்மைக்கான மக்கள் இயக்க தூய்மை உறுதிமொழி நகராட்சி கமிஷனர் ஹேமலாதா தலைமையில் எடுத்துக் கொண்டனர்.
இந்த விழிப்புணர்வு பேரணியில் வேதாரண்யம் நகராட்சி என் குப்பை என் பொறுப்பு என்ற வாசகத்தோடு நகராட்சியை தூய்மையாக வைத்துக்கொள்ள பொதுமக்கள் தங்கள் வீட்டில் உருவாகும் மக்கும் குப்பைகளை பச்சை நிற தொட்டியிலும் மக்காத குப்பைகளை நீல நிற தொட்டியிலும் மற்றும் தீங்கு விளைவிக்கும் வீட்டு உபயோக பொருட்களை தனியாக சேகரித்து அவற்றை தினசரி வீடு தோறும் வரும் நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் வசம் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது.
இதில் நகர்மன்றத் துணைத் தலைவர் மங்களநாயகி, நகராட்சி பொறியாளர் முகமது இப்ராஹிம்,நகர்மன்ற உறுப்பினர்கள் ரோட்டரி சங்க உறுப்பினர்கள் பள்ளி மாணவ -மாணவிகள் மற்றும் நகராட்சி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
- தூய்மைக்கான மக்கள் இயக்க பேரணி நடைபெற்றது.
- நகர்மன்ற உறுப்பினர்கள், நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள், கல்லூரி என்.சி.சி. மாணவர்கள் கலந்து கொண்டனர்.
தேவகோட்டை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகராட்சி சார்பில் நகரங்களின் உரிமைக்கான மக்கள் இயக்கம் என்ற விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதை நகர்மன்ற தலைவர் சுந்தரலிங்கம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஆணையாளர் சாந்தி, நகர்மன்ற துணைத்தலைவர் ரமேஷ் முன்னிலை வகித்தனர்.
பேரணி பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று நகராட்சி அலுவலகத்தை வந்தடைந்தது. குப்பைகளை மழைநீர் கால்வாய் மற்றும் பொது இடங்களில் போடக்கூடாது.
புதன்கிழமைதோறும் உடற் கழிவுகளை மட்டும் தனியாக பிரித்து வாங்கும் திட்டம் தற்போது நகராட்சியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்கள் இல்லங்களில் தினசரி குப்பை கழிவுகள் மக்கும் குப்பைகள் மற்றும் மக்காத குப்பைகள் என தனியாக பிரித்து தங்கள் வீட்டுக்கு வரும் நகராட்சி தூய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும்.
ஒவ்வொரு புதன்கிழமையும் வீட்டுக்கு வரும் நகராட்சி தூய்மை பணியாளர்களிடம் பிளாஸ்டிக், பாலித்தீன், பைகள், கண்ணாடி தெர்மாகோல், பேப்பர் அட்டை, பழைய இரும்பு, பழைய துணி, மரச்சாமான்கள், ரப்பர் மற்றும் தோல் பொருள்கள், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் கழிவுகள் என மக்காத குப்பைகளை வழங்க வேண்டும்.
புதன்கிழமை தவிர மற்ற நாட்களில் மக்கும் குப்பைகளான உணவுக் கழிவுகள், பழ கழிவுகள், காய்கறி கழிவுகள், மலர் கழிவுகள், இறைச்சி கழிவுகள், முட்டை ஓடு, தோட்டக் கழிவுகள் போன்றவற்றை வீட்டுக்கு வரும் நகராட்சி தூய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும் போன்ற வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை அனைத்து வீடுகளிலும் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினர்கள், நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள், கல்லூரி என்.சி.சி. மாணவர்கள் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்