search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Python rescue"

    • வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்
    • காப்பு காட்டில் கொண்டு சென்று விடப்பட்டது

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி அருகே உள்ள பொதியன் வட்டம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது வீட்டு வாசலில் இன்று அதிகாலை 12 அடி நீளமுள்ள மலை பாம்பு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து கிருஷ்ணன் நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

    தீயணைப்பு நிலைய அலுவலர் ரமேஷ் தலைமையிலான வீரர்கள் சென்று, மலைப்பாம்பை பிடித்து திருப்பத்தூர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

    இதையடுத்து வனத்துறையினர் அருகில் உள்ள காப்பு காட்டில் கொண்டு சென்று விட்டனர்.

    • வனத்துறையினர் பிடித்தனர்
    • காப்பு காட்டில் விட்டனர்

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா தென்புதூர் கிராம ஒருவருக்கு சொந்தமாக மாந்தோப்பு உள்ளது.

    நேற்று மாலை அந்த மந்தோப்பில் சுமார் 8 அடி நீளமுடைய மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றது. இதனை கண்ட பொதுமக்கள் ஒடுகத்தூர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவலறிந்த வனக்காப்பாளர்கள் மனிவாசுகி, அஜித், வெங்கடேசன் ஆகியோர் விரைந்து வந்து நிலத்தில் இருந்த 30 கிலோ எடை கொண்ட மலைப்பாம்பை பிடித்து அருகே உள்ள இராசிமலை காப்பு காட்டில் விட்டனர்.

    • வனத்துறையினர் பிடித்து காப்புக் காட்டில் விட்டனர்
    • குடியிருப்பு வாசிகள் அச்சம்

    அனைக்கட்டு:

    ஒடுகத்தூர் அருகே உள்ள முத்துக்குமரன் மலை அடிவாரத்தில் இருக்கும் அட்டக்கால்வாய் எனும் பகுதியில் சுமார் 100க்கும் மேற்ப்பட்ட குடும்பங்கள் நிலத்தில் வீடு கட்டி வசித்து வருகின்றனர்.

    மலைபாம்பு

    மேலும் அப்பகுதியில் உள்ள வனப்பகுதியில் இருந்து சுமார் 15 அடி நீளமுடைய மலைப்பாம்பு ஒன்று இறைச்சியை தேடி விவசாய நிலத்தில் படுத்துக்கொண்டு இருந்துள்ளது.

    அப்போது நிலத்திற்கு கால்நடைகளை பிடித்து சென்ற விவசாயி காந்தி என்பவர் திடீரென அதனைப்பார்த்த கூச்சலிட்டுள்ளார். அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக ஒடுகத்தூர் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

    இதனையடுத்து விரைந்து சென்ற வனத்துறையினர் சுமார் 15 அடி நீளமும் 80 கிலோ எடைகொண்ட மலைப்பாம்பை பிடித்து அருகே இருந்த காப்புக்காட்டில் விட்டனர்.

    தொடர் மழை பெய்து வரும் நிலையில் குடியிருப்பு பகுதிகளை நோக்கி இரவு மற்றும் பகல் நேரங்களில் படையெடுத்து வரும் மலைப்பாம்புகளை கண்டு குடியிருப்பு வாசிகள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

    மேலும் நிலத்தில் மேச்சலுக்காக கட்டி வைக்கப்பட்டுள்ள கால்நடைகளை பாதுகாப்பதில் பெரும் சிரமம் ஏற்படுவதாக விவசாயிகள் புலம்பி வருகின்றனர்.

    இதனை கட்டுப்படுத்த பிடிப்படும் மலைப்பாம்புகளை அருகில் இருக்கும் வனப்பகுதியில் விடாமல் வன உயிரியல் பூங்காவில் விட்டால் கால்நடைகள் மட்டுமில்லாமல் பொதுமக்களுக் நிம்மதியாக இருப்போம் என அதிகாரிகளுக்கு குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தீயணைப்பு வீரர்கள் வனத்துறையிடம் ஒப்படடைத்தனர்
    • காப்புக்காட்டில் பத்திரமாக விட்டனர்

    அணைக்கட்டு:

    ஒடுகத்தூர் அருகே உள்ள குப்பம்பட்டு கிராமத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    மேலும் அப்பகுதியில் செல்லக்கூடிய உத்திரக்காவேரி ஆற்றில் இருந்து சுமார் 9 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று இறைச்சியை தேடி குடியிருப்பு பகுதியை நோக்கி ஊர்ந்து வந்துக்கொண்டு இருந்தது.

    இதனை கண்ட பொதுமக்கள் உடனடியாக ஒடுகத்தூர் வனத்துறைக்கு மற்றும் தீயனைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

    விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மலைப்பாம்பை பிடித்து வனத்துறையிடம் ஒப்படடைத்தனர். மேலும் பிடிப்பட்ட மலைப்பாம்பினை சாக்கு பையில் அடைத்து அருகே இருந்த காப்புக்காட்டில் பத்திரமாக விட்டனர்.

    ×