என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "rally"

    • ரஷ்யப்புரட்சி ஒட்டுமொத்த மனித குலத்திற்கான நலனை முன்மொழிந்தது.
    • இங்கிலாந்து புரட்சி, அமெரிக்க புரட்சி, பிரெஞ்சு புரட்சி என உலக வரலாற்றில் பல புரட்சிகள் நிகழ்ந்துள்ளன.

    திருப்பூர் :

    திருப்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் 105- வது நவம்பர் புரட்சி தின செந்தொண்டர் பேரணி, பொதுக்கூட்டம் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- இங்கிலாந்து புரட்சி, அமெரிக்க புரட்சி, பிரெஞ்சு புரட்சி என உலக வரலாற்றில் பல புரட்சிகள் நிகழ்ந்துள்ளன. அவை அந்தந்த நாடுகளின் நலன்களை மட்டும் சார்ந்தவை. அந்த நாட்டு மக்களுக்கு மட்டுமான சில உரிமைகளைப் பெற்றுத் தந்தவை. அந்த நாடுகளின் எல்லைகளுக்குள் மட்டும் அதிர்வை உண்டாக்கியவை. ஆனால் 1917 நவம்பர் 7-ந் தேதி ரஷ்யாவில், லெனின் தலைமையில் நடைபெற்ற ரஷ்யப்புரட்சி, இவை அனைத்திலும் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஒன்று. அந்தப் புரட்சி ஒட்டுமொத்த மனித குலத்திற்கான நலனை முன்மொழிந்தது.அதனால் அந்த புரட்சியின் அதிர்வுகள் உலகம் முழுவதும் உணரப்பட்டது.

    உலகில் உரிமைகளுக்காகப் போராடும் சக்திகள் அனைத்துக்கும் பல படிப்பினைகளை கொடுத்தது.தொழிலாளர்கள் நலன், பெண் உரிமை, முற்போக்கு சிந்தனை, அறிவியல் வளர்ச்சி, திட்டமிடப்பட்ட பொருளாதாரம், உலக சமாதானம் என ரஷ்ய புரட்சி பல்வேறு தளங்களில் முன் மாதிரிகளை உருவாக்கி தந்தது. அந்தப்புரட்சியை நினைவு கூர்ந்து போற்றும் வகையில் திருப்பூர் அவினாசி சாலையில் உள்ள மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் இருந்து இன்று 27ந்தேதி மாலை 4 மணிக்கு தொடங்கும் செந்தொண்டர் பேரணி புஸ்பா தியேட்டர், குமரன் சாலை வழியாக நொய்யல் யுனிவர்சல் தியேட்டர் அருகே வந்து நிறைவு பெறுகிறது. பின்னர் அங்கு மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

    கூட்டத்திற்கு செ. முத்துக்கண்ணன் தலைமையேற்கிறார். . தெற்கு நகர செயலாளர் ஜெயபால் வரவேற்கிறார். அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், முன்னாள் எம்.பி.யுமான பிருந்தா காரத் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார் மாநில செயற்குழு ஜி. சுகுமாறன் , கோவை எம். பி., பி. ஆர். நடராஜன், மாநிலக்குழு கே. காமராஜ், தீக்கதிர் முதன்மை செயலாளர் என். பாண்டி, பொது மேலாளர் எஸ். ஏ. மாணிக்கம் , சி. மூர்த்தி, மாவட்ட செயற்குழு எஸ். ஆர். மதுசூதனன், மாவட்டக்குழு ஏ.ஷகிலா ,மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம். ராஜகோபால், கே. உண்ணிகிருஷ்ணன், கே. ரங்கராஜ், ஜி. சாவித்திரி, எஸ். சுப்பிரமணியம், ஆர். குமார். ச. நந்தகோபால், எஸ். மணிகண்டன் ஆகியோர் பங்கேற்கிறார்கள். மேலும் இடைக்குழு செயலாளர்கள் என். கனகராஜ், பி. ஆர். கணேசன், ஆர். காளியப்பன், கே. திருவேங்கடசாமி, பொறுப்பு செயலாளர் ஏ. ஈஸ்வரமுர்த்தி, கி. கனகராஜ், என்.சசிகலா, கே. தண்டபாணி, எஸ்.கே. கொளந்தசாமி, கோ. செல்வன், ஆர்.வி.வடிவேல், ஆர். பாலன் ஆகியோர் பங்கேற்கின்றனர். முடிவில் பல்லடம் தாலுகா செயலாளர் பரமசிவம் நன்றி கூறுகிறார். பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • 30 கிலோ மீட்டர் தூரம் வரை சுற்றுலா பயணிகளை அழைத்து செல்ல அனுமதி வழங்க வலியுறுத்தல்
    • ஊட்டி நகரில் மட்டுமே 1800 ஆட்டோக்கள் உள்ளன.

    ஊட்டி, :

    நீலகிரி மாவட்டத்தில் விவசாயத்துக்கு அடுத்ததாக சுற்றுலா தொழில் உள்ளது. இதை நம்பி ஆயிரக்கணக்கானோர் உள்ளனர். சுற்றுலா பயணிகளை சுற்றுலா தலங்களுக்கு அழைத்து செல்வதில் வாடகை கார் டிரைவர்களுக்கும், ஆட்டோ டிரைவர்களுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு வந்தது. இதை தீர்க்க நகர் பகுதியில் இருந்து 15 கிலோ மீட்டர் தூரத்துக்குள் மட்டுமே ஆட்டோவை இயக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

    ஆனாலும் பெரும்பாலான ஆட்டோ டிரைவர்கள் நிர்ணயித்த தூரத்தை விட அதிக தூரம் சுற்றுலா பயணிகளை அழைத்து செல்வதாக கூறப்படுகிறது. இதனால் அந்த ஆட்டோக்களுக்கு வட்டார போக்குவரத்து அலுவலர்கள் அபராதம் விதித்து வருகின்றனர்.

    இந்தநிலையில் நேற்று நகரில் இருந்து 30 கிலோ மீட்டர் தூரம் வரை சுற்றுலா பயணிகளை அழைத்து செல்ல ஆட்டோக்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஆட்டோ டிரைவர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் ஊட்டி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து கலெக்டர் அலுவலகம் வரை பேரணியாக சென்றனர். இந்த பேரணி லோயர் பஜார், காபி ஹவுஸ், கமர்சியல் சாலை, கேசினோ சந்திப்பு, டி.பி.ஓ. வழியாக கலெக்டர் அலுவலகத்தை வந்தடைந்து.பேரணியின்போது கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். அப்போது கலெக்டர் அலுவலகத்திற்குள் பேரணியை அனுமதிக்காததால் ஊட்டி மேற்கு போலீஸ் நிலையம் முன்பு ஆட்டோ டிரைவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து நீலகிரி மாவட்ட ஆட்டோ ஓட்டுனர்கள் சங்க கூட்டமைப்பு தலைவர் சண்முகம் கூறியதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கூடலூர், பந்தலூர் மற்றும் கோத்தகிரி ஆகிய பகுதிகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயங்கி வருகின்றன. 15 கிலோ மீட்டர் தூரத்துக்குள் மட்டுமே ஆட்டோக்கள் இயக்க வேண்டும் என்ற உத்தரவு உள்ளது.

    ஊட்டி நகரில் மட்டுமே 1800 ஆட்டோக்கள் உள்ளன. ஆனால் இந்த ஆட்டோக்கள் நகரின் எல்லையான 3 கிலோ மீட்டர் தூரத்திற்குள்ளேயே இயக்கப்பட வேண்டிய நிலை உள்ளது. எனவே தொலை தூரங்களுக்குள் ஆட்டோக்கள் சென்று வந்தால் மட்டுமே பிழைப்பு நடத்த முடியும். அதற்கு அதிகாரிகள் அனுமதி வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையடுத்து ஆட்டோ டிரைவர்கள் சிலர் கலெக்டர் அலுவலகத்துக்கு சென்று கலெக்டர் அம்ரித்தை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர்.

    • பாலின பாகுபாடு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
    • சுய உதவி குழு பெண்கள் கலந்து கொண்டனர்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் சர்வதேச வன்முறை ஒழிப்பு தினம் மற்றும் பாலின பாகுபாடு தொடர்பாக வட்டார அளவிலான மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் பங்கு கொண்ட விழிப்புணர்வு பேரணிநடைபெற்றது.

    மாவட்ட ஊராட்சி செயலாளர் வாசுதேவன் தலைமையேற்று தொடங்கி வைத்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்ரீதரன், திட்ட உதவி அலுவலர் ராஜா முகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பேரணி நகரில் முக்கிய வீதிகள் வழியாக சென்று ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நிறைவடைந்தது. பேரணிக்கான ஏற்பாடுகளை வட்டார இயக்க மேலாளர் சந்திரசேகரன் செய்திருந்தார். பேரணியில் நூற்றுக்கு மேற்பட்ட மகளிர் சுய உதவி குழு பெண்கள் கலந்து கொண்டுபெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என கோசங்கள் எழுப்பினர்.

    • அறந்தாங்கி கூட்டுறவு நூற்பாலை தொழிலாளர்கள் பேரணி நடைபெற்றது
    • தனியாரிடம் போடப்பட்ட ஒப்பந்தத்தை கைவிட கோரி

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே துரையரசபுரத்தில் கூட்டுறவு நூற்பாலை இயங்கி வருகிறது. இதில் 60க்கும் மேற்பட்ட நிரந்தர தொழிலாளர்கள், 300க்கும் மேற்பட்ட தற்காலிக தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். தற்காலிக தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றிற்கு 300 முதல் 420 வரை தினக்கூலியாக வழங்கப்படுகிறது.

    இந்நிலையில் கடந்த மாதம் 16ம் தேதி முதல் தற்காலிக தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் தனியார் லேபர் சப்ளை நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இதனால் தனியார் நிறுவனம் வேலையின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்போவதாகவும், தாங்கள் நிர்ணயிக்கின்ற அளவிற்கு வேலை செய்யவில்லையெனில் ஊதியம் குறைக்கப்படும் என அறிவித்துள்ளனர்.

    இதனால் ஆத்திரமடைந்த தற்காலிக தொழிலாளர்கள், தனியாரிடம் போடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும், 2 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் தற்காலிக தொழிலாளர்களை நிரந்தரமாக்க வேண்டும் என வலியுறுத்தி கண்டன பேரணியில் ஈடுபட்டனர்.

    சோதனைச் சாவடியிலிருந்து தொடங்கிய பேரணியானது பெரியகடைவீதி, கட்டுமாவடி முக்கம், பேருந்து நிலையம் வழியாக அம்மா உணவகம் அருகே நிறைவடைந்தது. அதனைத் தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. அப்போது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என அறிவுறுத்தப்பட்டது. போராட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை, சிபிஎம் மாவட்ட செயலாளர் கவிவர்மன், சிஐடியு மாவட்டத் தலைவர் அலாவுதீன், செயலாளர் கர்ணா உள்ளிட்ட தொழிலாளர்கள் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    • காற்று மாசுபாடு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
    • மாநகராட்சி ஆணையர் தலைமையில் நடந்தது

    திருச்சி

    தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் துறை திருச்சி மாநகராட்சி, தேசிய மாசு கட்டுப்பாட்டு வாரியம், பள்ளிக்கல்வித்துறை, தேசிய பசுமை படை மாணவ மாணவியர் இணைந்து நடத்திய காற்று மாசுபாடு விழிப்புணர்வு பேரணி இன்று சத்திரம் பஸ் நிலையம் தேசிய கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.

    பேரணிக்கு மாநகராட்சி ஆணையர் வைத்தியநாதன் தலைமை தாங்கினார். முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி முன்னிலையில் வகித்து பேரணியை தொடங்கி வைத்தார். மாவட்ட சுற்றுச்சூழல் அதிகாரி குணசீலன், மாவட்ட கல்வி அலுவலர் செல்வம், முதுகலை ஆங்கில ஆசிரியர் ஜேசுராஜ் திரவியம், உதவி வன பாதுகாவலர் சம்பத்குமார், பள்ளியின் தலைமை ஆசிரியர் பாலசுப்பிரமணியன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் பாரூக், பசுமை படை ஒருங்கிணைப்பாளர் கரோ கோரி, சகாயராஜ், பட்டதாரி ஆசிரியர் அந்தோணி லூயிஸ், மாநகராட்சி நிர்வாக பொறியாளர் குமரேசன், கோட்டை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கந்தசாமி, இடைநிலை பொறியாளர் ரவி, மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் இ.ஆர். மேல்நிலைப்பள்ளி, பிஷப் ஹீபர் மேல்நிலைப்பள்ளி, புனித வளனார் கல்லூரி மேல்நிலைப்பள்ளி, டவுன்ஹால் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, புனித சிலுவை பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் தேசிய பசுமை படை பொறுப்பு ஆசிரியர்கள் மற்றும் காவல் துறை போக்குவரத்து

    ஆய்வாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் திரளாக பங்கேற்றனர்.

    • மின் சிக்கனம் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
    • பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது

    புதுக்கோட்டை:

    தமிழ் நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் மின்சார சிக்கனத்தை வலியுறுத்தி முக்கிய வீதிகளில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை புதுக்கோட்டை செயற்பொறியாளர் அசோக்குமார் தொடங்கி வைத்தார். பேரணியில் மின்சாரம் சேமிப்பு, தேவையில்லாத இடத்தில் மின்சாரத்தை தவிர்த்து இயற்கையை பாதுகாப்பது, சூரிய ஒளியை பயன்படுத்துவது, மின்விரயம் தவிர்ப்பது, திறன்மிகு மின் உபகரணங்களை பயன்படுத்துவது குறித்து பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பேரணியில் கந்தர்வகோட்டை உதவி செயற் பொறியாளர்கள் வில்சன், வெங்கடேசன், மோகனசுந்தரம், சரவணகுமார் மற்றும் மின்சாரத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    • பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
    • உறுதி மொழியை ஏற்றுக் கொண்டனர்.

    கரூர்:

    கரூர் மாவட்ட மாநில ஊரக நகர்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில், பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு பேரணியை கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் கலெக்டர் பிரபு சங்கர் தலைமையில், அமைச்சர் செந்தில்பாலாஜி கொடியசைத்து தொடங்கிவைத்தார். திருவள்ளுவர் மைதானத்திலிருந்து தொடங்கிய பேணி ஜவஹர் பஜார் வழியாக கரூர் மாநகராட்சி அலுவலகம் வரை சென்றது.பேரணயில் பங்கேற்ற மகளிர் சுய உதவிக்குழுவினர் உள்ளிட்டோர் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி சென்றனர். முன்னதாக அனைவரும் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தொடர்பான உறுதி மொழியை ஏற்றுக் கொண்டனர்.

    • திருநங்கைகள் சங்கம் சார்பாக மேட்டூரில் எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
    • மேட்டூர் அரசு தொழிற்பயிற்சி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட இந்த பேரணி, அரசினர் தொழிற்பயிற்சி வளாகத்தில் இருந்து தொடங்கி முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மீண்டும் தொழில் பயிற்சி வளாகத்தை வந்தடைந்தது.

    மேட்டூர்:

    சேலம் மாவட்ட திருநங்கைகள் சங்கம் சார்பாக மேட்டூரில் எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மேட்டூர் அரசு தொழிற்பயிற்சி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட இந்த பேரணி, அரசினர் தொழிற்பயிற்சி வளாகத்தில் இருந்து தொடங்கி முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மீண்டும் தொழில் பயிற்சி வளாகத்தை வந்தடைந்தது.

    பேரணியை மேட்டூர் சதாசிவம் எம்.எல்.ஏ கொடியசைத்து தொடங்கி வைத்தார். அவர் பேசும்போது, எய்ட்ஸ் நோய் பற்றி தேவையான ஆலோசனைகளை வழங்க மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாடு மையம் உள்ளது. பொதுமக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம். பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றார். தொடர்ந்து எய்ட்ஸ் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்

    நிகழ்ச்சியில் மேட்டூர் நகர மன்ற தலைவர் சந்திரா, மேட்டூர் நகர பா.ம.க செயலாளர் மதியழகன், மேற்கு மாவட்ட மகளிர் அணி துணை செயலாளர் அமுதா, நகர வன்னியர் சங்க பொறுப்பாளர் ரமேஷ், கொளத்தூர் ஒன்றிய செயலாளர் பாபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சங்ககிரி அரசு மருத்துவமனை மற்றும் விவேகானந்தா மகளிர் செவிலியர் கல்லூரி மாணவிகள் இணைந்து எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.
    • இப்பேரணியானது சங்ககிரி பழைய பஸ் ஸ்டாண்டில் தொடங்கி புதிய இடைப்பாடி சாலை வழியாக சென்று சங்ககிரி அரசு மருத்துவமனையில் நிறைவு பெற்றது.

    சங்ககிரி:

    சேலம் மாவட்டம் சங்ககிரியில் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு, சேலம் மாவட்ட அரவாணிகள் தாய் விழுதுகள் அறக்கட்டளை, சங்ககிரி அரசு மருத்துவமனை மற்றும் விவேகானந்தா மகளிர் செவிலியர் கல்லூரி மாணவிகள் இணைந்து எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.

    இப்பேரணியை சங்ககிரி பேரூராட்சி தலைவர் மணிமொழி தலைமை வகித்து தொடங்கி வைத்தார். இப்பேரணியானது சங்ககிரி பழைய பஸ் ஸ்டாண்டில் தொடங்கி புதிய இடைப்பாடி சாலை வழியாக சென்று சங்ககிரி அரசு மருத்துவமனையில் நிறைவு பெற்றது. அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவர் திருமா வளவன் முன்னிலையில் சமப்படுத்துதல் என்ற

    உறுதிமொழி எடுக்கப்பட்டது. தொடர்ந்து சங்ககிரி வைகுந்தம் சுங்கச்சாவடியில் எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு பிரசுரங்கள் அடங்கிய ஸ்டால் நிறுவப்பட்டு வாகன ஓட்டிகள், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில், சங்ககிரி பேரூராட்சி செயல் அலுவலர் சுலைமான்சேட், பேரூராட்சி மன்றத் துணைத் தலைவர் அருண்பிரபு, சங்ககிரி பேரூர் தி.மு.க செயலாளர் முருகன், சங்ககிரி அரசு மருத்துவமனை நம்பிக்கை மைய ஆலோசகர் கோபால், ஆய்வுகள் நுட்பனர் சீனிவாசன், பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் செல்வகுமார், பேரூர் துணை செயலாளர் ரமேஷ், கல்லூரி மாணவிகள், சேலம் மாவட்ட அரவாணிகள் தாய் விழுது அறக்கட்டளை திட்ட மேலாளர் மரியாள், களப்பணியாளர்கள் சசிரேகா, திவ்யா உட்பட பலர் பங்கேற்றனர்.

    • வாலரைகேட் பகுதியில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் மற்றும் மகாதேவ வித்யாலயா பள்ளி மாணவ -மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடந்தது.
    • மாணவ-மாணவியர்கள், துப்புரவு பணியாளர்கள் என சுமார் 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    திருச்செங்கோடு:

    திருச்செங்கோடு நக ராட்சி சார்பில் புகையில்லா போகிப் பண்டிகை கொண்டாட பொது மக்களை அறிவுறுத்தும் வகையில் வாலரைகேட் பகுதியில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் மற்றும் மகாதேவ வித்யாலயா பள்ளி மாணவ -மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணியை நகர மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு கொடியசைத்து தொடங்கி வைத்தார். இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், நகராட்சி ஆணையாளர் கணேசன், நகராட்சி பொறியாளர் சண்முகம் மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள் செல்வி

    ராஜவேல், தாமரைச்செல்வி, மணிகண்டன், சினேகா ஹரிகரன், மகேஸ்வரி, புவனேஸ்வரி, செல்லம்மாள் தேவராஜன், முருகேசன் சுரேஷ்குமார், மற்றும் துப்புரவு அலுவலர் வெங்கடாசலம் துப்புரவு ஆய்வாளர் குமரவேல், மகாதேவா, வித்யாலயா பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், மற்றும்

    மாணவ-மாணவியர்கள், துப்புரவு பணியாளர்கள் என சுமார் 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    • தஞ்சாவூர்- புகையில்லா போகி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
    • பேரணியில் ஏராளமானோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி பேரணியாக சென்றனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை ரெயில் நிலையம் முன்பு இன்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி, கவின்மிகு தஞ்சை இயக்கம் சார்பில் மாசில்லா தஞ்சாவூர்-புகையில்லா போகி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    இந்த பேரணியை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இந்த பேரணியில் ஏராளமானோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி பேரணியாக சென்றனர். அரண்மனை வளாகத்தில் பேரணி முடிவு அடைந்தது.

    முன்னதாக கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சை மாவட்டத்தில் பொதுமக்கள் புகையில்லா போகி பண்டிகையை கொண்டாட வேண்டும்.

    தேவையில்லாத பொருட்–களை எரிக்க கூடாது.

    மாசில்லா தஞ்சாவூர் மாவட்டம் என்ற பெயரை நாம் எடுக்க வேண்டும். தஞ்சை மாவட்டத்தில் கடைகளில் எலி பேஸ்ட் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது.

    மீறி விற்பனை செய்தால் போலீசார் மூலம் சட்டரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    இந்தப் பேரணியில் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், மருத்துவக் கல்லூரி முதல்வர் பாலாஜிநாதன், மாநகர நல அலுவலர் சுபாஷ் காந்தி, முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார், டாக்டர்கள் சிங்காரவேலு, ராதிகா மைக்கேல்,

    இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி தஞ்சை மாவட்ட கிளை சேர்மன் டாக்டர். வரதராஜன், துணை சேர்மன் பொறியாளர் முத்துகுமார், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • நலப்பணித்திட்ட மாணவர்கள் சார்பில் டெங்கு விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சி நடைபெற்றது.
    • புதுவை மாநில ஒருங்கிணைந்த கோஜூரியோ கராத்தே சங்க மாநில செயலாளர் கராத்தே சுந்தர்ராஜன் கொடியசைத்துப் பேரணியை தொடங்கி வைத்தார்.

    புதுச்சேரி:

    புதுவை கவுண்டன் பாளையம் முத்துரத்தினம் அரங்கம் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் சார்பில் டெங்கு விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சி நடைபெற்றது.

    புதுவை மாநில ஒருங்கிணைந்த கோஜூரியோ கராத்தே சங்க மாநில செயலாளர் கராத்தே சுந்தர்ராஜன் கொடியசைத்துப் பேரணியை தொடங்கி வைத்தார். பள்ளியின் முதல்வர் கவிதா சுந்தர்ராஜன், பள்ளியின் மூத்த அலுவலக அதிகாரி மரிய ஸ்டெல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மாணவர்கள் கவுண்டன் பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு பேரணியாகச் சென்று டெங்கு நோயை விரட்டுவோம்.

    டெங்கு கொசுவை ஒழிப்போம், மழை நீர் தேங்காாமல் தடுப்போம், கொசுக்களை ஒழிப்போம் டெங்கு வராமல் தடுப்போம் போன்ற பதாகைகளை ஏந்திய வண்ணம் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ஜெயந்தி மற்றும் பள்ளியின் பொறுப்பாளர் ஜஸ்டின்மற்றும் பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

    ×