search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "real estate agent"

    • மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ளது மேவின் ரியல் எஸ்டேட் எனும் நிறுவனம்
    • அழகான ஆஸ்திரேலியாவை இந்தியாவை போன்று சுகாதாரமற்று மாற்றி விடாதீர்கள்

    ஆஸ்திரேலியாவில் பணிபுரிய தனியாகவோ அல்லது குடும்பத்துடனோ செல்லும் இந்தியர்களுக்கு வாடகைக்கு நல்ல வசிப்பிடங்கள் கிடைப்பது அரிதாக உள்ளது.

    இதனால் இவர்களுக்கு உதவுவதற்கு ரியல் எஸ்டேட் துறையை சேர்ந்த தனியார் நிறுவனங்கள் அங்கு செயல்படுகின்றன. இவை அந்நாட்டு சட்டதிட்டங்களின்படி உரிமம் பெற்று இயங்க வேண்டும்.

    அவற்றில் ஒன்று, மேற்கு ஆஸ்திரேலியாவின் விக்டோரியா பார்க் பகுதியில் உள்ளது மேவின் ரியல் எஸ்டேட் எனும் நிறுவனம். இதன் இயக்குனர் ப்ரான்வின் பாலிட் எனும் பெண்மணி.

    சில வருடங்களுக்கு முன், இவர் மூலமாக வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கியவர் இந்தியாவை சேர்ந்த சந்தீப் குமார். அப்போது இவரது முன்பணத்தில் இருந்து சுத்தம் மற்றும் சுகாதார செலவுக்கான கட்டணங்கள் என குறிப்பிட்டு ஒரு தொகையை ப்ரான்வின் பிடித்தம் செய்திருந்தார். இதற்கு சந்தீப் எதிர்ப்பு தெரிவித்தார்.

    இருவருக்கும் இது குறித்து மின்னஞ்சல் தொடர்பில் சச்சரவு தொடங்கியிருந்தது. 2021-இல் இது குறித்த வாக்குவாதத்தில் ப்ரான்வின், சந்தீப்பை இனரீதியாக விமர்சித்து அவருக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினார்.

    அதில் ப்ரான்வின் கூறியிருந்ததாவது, "நான் ஒரு வெள்ளை இன ஆஸ்திரேலிய பெண். உங்களை போலுள்ள பல இந்தியர்களும் நாங்கள் அனுபவிக்கும் தரமான ஆஸ்திரேலிய வாழ்க்கை முறையை அனுபவிக்கவே இங்கு வருகிறீர்கள். குறைவான மக்கள்தொகை, சுத்தமான காற்று, நல்ல சம்பளத்துடன் வேலை மட்டுமின்றி ஒரு வேளை வேலையில்லை என்றாலும் சமூக பாதுகாப்பு, மருத்துவ காப்பீடு போன்றவை இங்கு உங்களுக்கு கிடைக்கிறது."

    "கூட்டம் கூட்டமாக வரும் உங்கள் இந்தியர்களின் வருகையால் அழகான எங்கள் நாடு, உங்கள் இந்தியாவை போலவே நாடெங்கிலும் சாலைகளில் பிணங்கள், நதிகளில் பாதி எரிந்த பிணங்கள், சேரிகளில் வாழும் மக்கள், ஒருவர் மீது ஒருவர் ஏறி கும்பலில் சண்டையிட்டு பெறும் தரமற்ற மருத்துவ உதவி ஆகியவை அடங்கிய நாடாக மாற்றி விட மாட்டீர்கள் என நம்புகிறேன். நீங்கள் வீடு மாறி செல்லும் போது விட்டு செல்லும் நிலையை சுத்தம் செய்வது அவசியம். அதிலிருந்துதான் அனைத்தும் தொடங்குகிறது," என்று இந்திய நாட்டையும், வாழ்க்கை முறையையும் விமர்சித்தார்.

    இந்த மின்னஞ்சலை கண்ட சந்தீப் குமார், மேற்கு ஆஸ்திரேலியாவின் நிர்வாக தீர்ப்பாயத்திடம் இதை சமர்ப்பித்து புகார் அளித்தார். தனது தரப்பில், கோவிட் தொற்றுக்கான காலகட்டத்தில் தான் மிகவும் மனஅழுத்தத்தில் இருந்ததாக தீர்ப்பாயம் முன் ப்ரான்வின் கூறியிருந்தார்.

    ப்ரான்வில் வேறொரு மின்னஞ்சலில், "நான் இனவெறியுடன் பேசவில்லை. அவ்வாறு தோன்றினால் என்னை மன்னியுங்கள்" எனவும் குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இப்புகாரை முழுவதும் விசாரித்த தீர்ப்பாயம், செப்டம்பர் 1-இல் இருந்து 8 மாதங்களுக்கு ப்ரான்வின்னுக்கு அளிக்கப்பட்ட ரியல் எஸ்டேட் உரிமம் ரத்து செய்யப்பட்டதாக உத்தரவிட்டது.

    • கொடைக்கானலில் வட்டார ரியல்எஸ்டேட் ஏஜெண்ட் சங்கத்தின் பொது க்குழு கூட்டம் நடைபெற்றது.
    • சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் வட்டார ரியல்எஸ்டேட் ஏஜெண்ட் சங்கத்தின் பொது க்குழு கூட்டம் தலைவர் வரதராஜ் தலைமையில் நடைபெற்றது. செயலாளர் திரவியம் கூட்டத்தின் நோக்கம் குறித்து விளக்கி பேசினார்.

    கொடைக்கானல் வட்டாட்சியர் பட்டா நிலங்களை மாறுதல் செய்ய மறுப்பதையும், அரசு அதிகாரிகளிடம் கொடுத்த மனு சம்பந்தமாக எந்தவித நடவடிக்கை எடுக்காததால் தொழில் பாதிக்கப்படுவதாக வும் கூறி தங்களது பல்வேறு கோரிக்கைகளை நிைறவேற்ற ஆகஸ்டு 5-ந்தேதி ஆர்ப்பா ட்டம் நடத்த முடிவு செய்ய ப்பட்டது.

    கலையரங்கம் முதல் அண்ணாசாலை வழியாக கோட்டாட்சியர் அலுவலகம் வரை அறவழி ப்போராட்டம் மேற்கொண்டு சிறப்பு கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு எடுக்கப்பட்டது. கூட்டத்தில் பொருளாளர் ராஜாமுகமது, கவுரவதலைவர் சுதாகர், துணைச்செயலாளர்கள் ராஜன், ஜான்சகாயநாதன், தலைமை நிலைய செயலாளர் பிச்சை, ரவி உள்பட சங்கநிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    திருவாரூர் ரியல் எஸ்டேட் அதிபர் கடத்தப்பட்ட புகாரில் அரசு பள்ளி ஆசிரியர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்
    திருவாரூர்:

    திருவாரூரை சேர்ந்தவர் நீதிமோகன் (வயது 52). ரியல் எஸ்டேட் நிறுவன அதிபர். இவர் கடந்த 9-ந்தேதி மோட்டார் சைக்கிளில் தனது உதவியாளர் ராஜேந்திரன் என்பவருடன் திருவாரூர் வடக்கு வீதியில் உள்ள ரியல் எஸ்டேட் அலுவலகத்துக்கு சென்று கொண்டிருந்தார். பிடாரி கோவில் தெரு அருகே சென்றபோது அந்த வழியாக காரில் வந்த மர்ம நபர்கள், நீதிமோகனை குண்டுகட்டாக தூக்கி கடத்தி சென்றனர்.

    இதுகுறித்து ராஜேந்திரன், திருவாரூர் டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். நீதிமோகனை கடத்திய கும்பலை பிடிக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    கடத்தப்பட்ட நீதிமோகன் மாத தவணை திட்டத்தில் நிலம் வழங்குவதாக கூறி பலரிடம் மோசடி செய்ததாக வழக்குகள் உள்ளன. இதனால் பாதிக்கப்பட்டவர்களால், நீதிமோகன் கடத்தப்பட்டாரா? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    இதற்கிடையே நீதிமோகனை விடுவிக்க கடத்தி சென்றவர்கள் ரூ.10 கோடி கேட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் மன்னார்குடி, தஞ்சாவூர், கும்பகோணம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடுதல் வேட்டை நடத்தினர்.

    அப்போது கும்பகோணம் சாக்கோட்டை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நீதிமோகன் அடைத்து வைக்கப் பட்டு இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்றனர். போலீசார் அங்கு வருவதை அறிந்த கடத்தல்காரர்கள், நீதிமோகனை அந்த வீட்டிலேயே விட்டு விட்டு தப்பி ஓடிவிட்டனர்.

    இந்த நிலையில் சாக்கோட்டையில் உள்ள வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த நீதிமோகனை நேற்று தனிப்படை போலீசார் மீட்டு, திருவாரூர் அழைத்து வந்தனர். அப்போது அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக கோட்டூரை சேர்ந்த வெங்கடாச்சலம், ஜான்கென்னடி ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இதில் வெங்கடாச்சலம், கோட்டூர் அருகே குருவாடி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர் நீதிமோகனிடம் கமி‌ஷன் அடிப்படையில் ஏஜெண்டாக வேலை பார்த்து வந்தார்.

    இதனால் திருவாரூர், கோட்டூர் பகுதிகளில் தவணை முறையில் பணத்தை வசூலித்து நீதிமோகனிடம் ஆசிரியர் வெங்கடாச்சலம் வழங்கியுள்ளார். அந்த வகையில் ரூ.7 கோடி வரை அவர் கொடுத்துள்ளார்.

    ஆனால் நீதி மோகன், நிலத்தை வழங்காமலும், பணத்தையும் திருப்பி கொடுக்காமலும் ஏமாற்றி வந்ததால் பாதிக்கப்பட்டவர்கள் ஆசிரியர் வெங்கடாச்சலத்திடம் புகார் கூறினர். இதனால் ஆத்திரம் அடைந்த வெங்கடாச்சலம், கூலிப்படையினருடன் நீதிமோகனை காரில் கடத்தியது தெரிய வந்தது.

    இந்த வழக்கில் மேலும் ஒருவரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    ×