என் மலர்
நீங்கள் தேடியது "road accident"
- அதிகாலையில் வேலைக்குச் சென்று கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டது.
- இந்த சம்பவத்தில் வாகனங்கள் பலத்த சேதமடைந்தன.
மகாராஷ்டிராவில் வாகனம் ஓட்டும் போது ஒருவருக்கு மாரடைப்பு, கார் பல வாகனங்களில் மோதுவது போன்ற காட்சிகள் வீடியோவில் காட்டப்பட்டுள்ளன.
மகாராஷ்டிராவில் கார் ஓட்டும்போது நபர் ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அப்போது வாகனம் கட்டுப்பாட்டை இழந்து 10க்கும் மேற்பட்ட வாகனங்கள் மீது மோதியது. மேலும் மாரடைப்பு மற்றும் விபத்தில் ஏற்பட்ட அதிர்ச்சியின் காரணமாக கார் ஓட்டியும் பரிதாபமாக உயிரிழந்தார்.
இறந்தவர் தீரஜ் பாட்டீல் (55) என அடையாளம் காணப்பட்டுள்ளார், அவர் நேற்று (சனிக்கிழமை) அதிகாலையில் வேலைக்குச் சென்று கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டது.
மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரில் சம்பவத்தின்போது மேம்பாலம் அருகே தீரஜ் வந்துகொண்டிருந்தபோது கார் கட்டுப்பாட்டை இழந்து, ஒரு ஆட்டோ, ஒரு கார், ஒரு இரு சக்கர வாகனம் உள்ளிட்ட பல வாகனங்கள் மீது மோதியது.
இந்த சம்பவத்தில் வாகனங்கள் பலத்த சேதமடைந்தன, இது சிசிடிவியிலும் பதிவாகியுள்ளது. தீரஜ்ஜின் பிரேத பரிசோதனை அறிக்கையில், வாகனம் ஓட்டும்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும், அதுவே விபத்திற்குக் காரணமாக அமைந்து, அவரது மரணத்திற்கு வழிவகுத்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
- 18 சக்கர டிரக் வாகனம் ஒன்று கார்கள் மீது மோதி தள்ளியது.
- ஒரு குழந்தை மற்றும் ஒரு கைக்குழந்தை உட்பட ஐந்து பேர் உயிரிழந்தனர்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஆஸ்டினில் பயங்கரமான சாலை விபத்து நடந்துள்ளது. நள்ளிரவில் நடந்த இந்த விபத்தில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர். மேலும் 11 பேர் காயமடைந்தனர்.
நேற்று முன்தினம் உள்ளூர் நேரப்படி இரவு 11 மணியளவில், ஹோவர்ட் லேன் மற்றும் பார்மர் லேன் இடையே உள்ள சாலையில் 18 சக்கர டிரக் வாகனம் ஒன்று கார்கள் மீது மோதி தள்ளியதால் அவை ஒன்றோடொன்று மோதிக்கொண்டதில் இந்த விபத்து நிகழ்ந்தது. மொத்தம் 17 வாகனங்கள் இந்த விபத்தில் சிக்கின.
சம்பவ இடத்திலேயே ஒரு குழந்தை மற்றும் ஒரு கைக்குழந்தை உட்பட ஐந்து பேர் இறந்து கிடந்தனர்.

மேலும் காயமடைந்த 11 பேர் உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அதில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.
விபத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் 18 சக்கர டிரக் வாகன ஓட்டுநர் சாலமன் அரயா என்ற 37 வயது நபரை ஆஸ்டின் போலீசார் கைது செய்தனர்.
போதையில் அவர் வாகனம் ஒட்டியதாக கூறப்படுகிறது. போதைப்பொருள் பயன்பாடு மற்றும் கொலை வழக்கு பதிந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

- காரில் இருந்து வெளியே இறங்கி வந்த சௌராசியா "மாமா", "இன்னொரு ரவுண்ட்",மற்றும் "ஓம் நம சிவாய" என்று உச்சக் குரலில் கத்தத் தொடங்கினார்.
- பொதுமக்களிடம் இருந்து சௌராசியாவை மீட்டு போலீசார் அழைத்துச்சென்றனர்.
குஜராத் மாநிலம் வதோதராவில் இளைஞர் ஒருவர் குடிபோதையில் கார் ஓட்டி ஏற்படுத்திய விபத்தில் ஒரு பெண் கொல்லப்பட்டார். மூன்று பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
எம்எஸ் பல்கலைக்கழகத்தில் நான்காம் ஆண்டு சட்டம் பயிலும் மாணவர் ரக்ஷித் சௌராசியா. இவர் நேற்று இரவு வதோதராவில் அம்ரபாலி வளாகம் அருகே வேகமாக காரில் வந்துகொண்டிருந்தபோது அவ்வழியே பெண் ஒருவர் ஓட்டிவந்த ஸ்கூட்டரின்மேல் இடித்துள்ளார்.
மேலும் 2 இருசக்கர வாகனங்கள் வழிப்போக்கர்கள் மீதும் கார் இடித்துள்ளது. இதில் 1 குழந்தை உட்பட 4 பேர் வரை காயமடைந்தனர். காரில் முன்பகுதி சேதமடைந்து உள்ளே ஏர்பேக் திறக்கும் அளவுக்கு மிகவும் பலமாக ஸ்கூட்டரின் மேல் இடித்துள்ளது. இதனால் ஸ்கூட்டரை ஓட்டிச் சென்ற பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சேதமடைந்த காரில் இருந்து வெளியே இறங்கி வந்த சௌராசியா "மாமா", "இன்னொரு ரவுண்ட்", மற்றும் "ஓம் நம சிவாய" என்று உச்சக் குரலில் கத்தத் தொடங்கினார். பின்னர் தப்பியோட முயன்ற அவரை அங்கிருந்த மக்கள் பிடித்து அடித்துள்ளனர். சௌராசியா குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
காயடமைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் பொதுமக்களிடம் இருந்து சௌராசியாவை மீட்டு கைது செய்து அழைத்துச்சென்றனர்.
சௌராசியா குடிபோதையில் இருந்தானா என்பதை அறிய ரத்த பரிசோதனை நடத்தப்படும் என்றும் அவருடன் காரில் வந்த மற்றோரு இளைஞன் தப்பியோடிவிட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர். குஜராத்தில் மது விலக்கு அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
- நோயுற்ற உறவினர் ஒருவரை பார்த்துவிட்டு காரில் திரும்பியபோது விபத்து
- தப்பி ஓடிய லாரி ஓட்டுனரை தேடி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்
மத்திய பிரதேச மாநிலம் மொரேனா மாவட்டத்தில் உள்ள குவாலியர்- மொரேனா சாலையில் கார் மீது லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
குவாலியர் பகுதியில் இருந்து நோயுற்ற உறவினர் ஒருவரை பார்த்துவிட்டு மொரேனாவில் உள்ள பித்தோலி கிராமத்திற்கு காரில் 8 பேர் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது பின்னால் வந்த லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கார் மீது பயங்கரமாக மோதியது.
இதில், சம்பவ இடத்திலேயே 4 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் சம்பவ இடத்தில் இருந்து தப்பிய லாரி ஓட்டுனரை தேடி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
- விபத்தில் நசுங்கிய காரில் இருந்து மீதமுள்ள உடல்களை வெளியே எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.
- வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்தியப் பிரதேசம் மாநிலம் போபால் மாவட்டத்தில் உள்ள பெதுல் என்ற இடத்தில் நேற்று இரவு கார் ஒன்று பேருந்து மீது மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில் 11 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்துள்ளனர்.
11 தொழிலாளர்கள் மகாராஷ்டிராவின் அமராவதியிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, குட்கான் மற்றும் பைஸ்தேஹி இடையே ஜல்லார் காவல் நிலையம் அருகே அதிகாலை 2 மணியளவில் விபத்து ஏற்பட்டது.
விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்த போலீசார் மீட்பு குழுவினரின் உதவியுடன் காரில் இருந்து ஏழு பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. விபத்தில் நசுங்கிய காரில் இருந்து மீதமுள்ள உடல்களை வெளியே எடுக்கும் பணி நடைபெற்று வருவதாக பெதுல் உயர் போலீஸ் அதிகாரி சிமலா பிரசாத் கூறினார்.
மேலும் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், காரை ஓட்டியபோது டிரைவர் தூங்கியதால் விபத்து நடந்தது தெரியவந்தது. இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
- காரை ஓட்டியபோது டிரைவர் தூங்கியதால் விபத்து நடந்திருப்பதாக தெரியவந்துள்ளது.
- உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிப்பு
மத்தியப் பிரதேச மாநிலம் பெதுல் மாவட்டத்தில் இன்று அதிகாலையில் கார் ஒன்று பேருந்து மீது மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில் 11 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்துள்ளனர். காரை ஓட்டியபோது டிரைவர் தூங்கியதால் விபத்து நடந்திருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
விபத்து குறித்து தகவல் அறிந்த பிரதமர் மோடி இரங்கலையும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதலையும் தெரிவித்துள்ளார். மேலும், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் நிவாரண நிதியில் இருந்து தலா 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
- படுகாயமடைந்த 11 பேரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
- விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கர்நாடகா மாநிலம் பிதார் பகுதியில் உள்ள சிட்டகுப்பா தாலுகாவில் உள்ள கிராமத்தில் நேற்று இரவு ஆட்டோ மீது லாரி மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில் ஆட்டோ மற்றும் லாரியில் இருந்த 7 பெண்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 11 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
கூலித் தொழிலாளிகளான பெண்கள் வேலை முடிந்து ஆட்டோ ரிக்ஷாவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, பெமலகெடா அரசுப் பள்ளி அருகே விபத்து ஏற்பட்டுள்ளது.
இறந்தவர்களில் பார்வதி (40), பிரபாவதி (36), குண்டம்மா (60), யாதம்மா (40), ஜக்கம்மா (34) ஈஸ்வரம்மா (55), ருக்மணி பாய் (60) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
படுகாயமடைந்த 11 பேரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் இருவர் கவலைக்கிடமாக உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விபத்தில் உயிரிழந்தவர்களில் 8 பேர் பெண்கள் 6 பேர் சிறுவர்கள்.
- உடல்களை அடையாளம் காணும் பணி நடைபெற்றது.
கைர்பூர்:
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 20 பேர் உயிரிழந்தனர். செஹ்வான் ஷெரீப்பில் உள்ள புனித சூஃபி ஆலயத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த வேன் ஒன்று கைர்பூர் அருகே சிந்து நெடுஞ்சாலையை ஒட்டிய 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
அண்மையில் அந்த பகுதியில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பால் அந்த பள்ளம் முழுவதும் வெள்ள நீர் தேங்கியிருந்தது. இந்த விபத்தில் 8 பெண்கள், 6 சிறுவர்கள் உள்பட 20 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் அவர்களது உடல்கள் மீட்கப்பட்டு சையத் அப்துல்லா ஷா மருத்துவ அறிவியல் நிறுவன மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டது.
சடலங்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என அந்த நிறுவனத் தலைவர் டாக்டர் மொயின் சித்திக் தெரிவித்தார். எனினும் அவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்று அவர் குறிப்பிட்டார்.
கைர்பூர் மிர்ஸை சேர்ந்த அந்த வேன் ஓட்டுநர், சாலையின் நடுவே இருந்த தடுப்புகளை பார்க்க தவறியதால் இந்த விபத்து நிகழ்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஆசிப் அலி ஜர்தாரி இரங்கல் தெரிவித்துள்ளார்.
- விபத்தில் படுகாயமடைந்த 18 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
- விபத்தை கண்டித்து கிராம மக்கள் சாலை மறித்து மறியலில் ஈடுபட்டனர்.
பீகார் மாநிலம், சரண் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் உள்ள மக்கள் சிலர் இறந்த ஒருவரின் உடலை அடக்கம் செய்வதற்காக நேற்று இறுதி சடங்கு ஊர்வலம் சென்றுக் கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்று திடீரென இறுதி சடங்கு ஊர்வலத்திற்குள் வேகமாக புகுந்து விபத்துக்குள்ளானது. இதில், ஊர்வலத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் கீழே விழுந்து பலத்த காயமடைந்தனர். விபத்தில் படுகாயமடைந்த 18 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தை கண்டித்து கிராம மக்கள் சாலை மறித்து மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கிராம மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது, கார் ஓட்டுனர் போதையில் இருந்ததாக குற்றம்சாட்டினர்.
இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சாலை விபத்து தொடர்பான எச்சரிக்கை பதாகைகள் உள்ளிட்டவைகளை அமைக்க உத்தரவிட்டார்.
- விபத்துக்கள் நடைபெறுவதை தடுக்கும் வகையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார்.
நன்னிலம்:
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டம், அச்சுத மங்கலம் ஊராட்சிக்குட்பட்ட சிகார்பாளையம் வளைவு சாலையில் எதிர்பாராத சாலை விபத்துக்கள் நடைபெறுவதை தடுக்கும் வகையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் அப்பகுதியில் கள ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, நாகூர்-நன்னிலம்-நாச்சியார் கோவில் மாநில நெடுஞ்சாலையிலுள்ள சிகார்பாளையம் வளைவு சாலையில், வாகன ஓட்டிகளுக்கு தெரியப்படுத்தும் வகையில் சாலை தடுப்பாண்கள், பிரதிபலிப்பான் விளக்குகள், சாலை விபத்து தொடர்பான எச்சரிக்கை பதாகைகள் உள்ளிட்டவைகளை அமைக்க நெடுஞ்சாலைத்துறை அலுவலர்களிடம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் உத்தரவிட்டார்.
இவ்ஆய்வில், வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா, நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் சரவணன், உதவி பொறியாளர் கார்த்திகா, நன்னிலம் வட்டாட்சியர், கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர், நன்னிலம்
காவல் ஆய்வாளர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
- சாலை விபத்தில் 21 பேர் பலத்த காயமடைந்துள்ளனர்.
- உயிரிழந்தவர்களை அடையாளம் கண்டறியப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் நாக்லா கங்கர் பகுதியில் லக்னோ- ஆக்ரா விரைவுச் சாலையில் பேருந்து ஒன்று பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் ஒரு வயது சிறுவன் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 21 பேர் காயமடைந்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்கள் மருத்துவ சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
உயிரிழந்தவர்களில் ரீனா (வயது 22), அவரது ஒரு வயது மகன் அயன்ஷ், பதேபூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேஷ் (வயது 25), கவுசாம்பி மாவட்டத்தைச் சேர்ந்த சந்த் லால் (வயது 70) ஆகிய 4 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். உயிரிழந்த மற்ற இருவரின் அடையாளம் கண்டறியப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
- பெங்களூரில் இருந்து வந்த அரசு சொகுசு பேருந்து ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.
- காயமடைந்த 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருச்சி- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் வளைவில் திரும்ப முயன்றபோது பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பெங்களூரில் இருந்து வந்த அரசு சொகுசு பேருந்து ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.
விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்த போலீசார், பேருந்துக்குள் சிக்கி இருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதில் காயமடைந்த 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.