search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "road problem"

    • கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் புகார்
    • ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தல்

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் இன்று நடந்தது‌. இதில் பொதுமக்கள் மனு அளித்தனர்.

    காட்பாடி அருகே உள்ள காசி குட்டை கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சார்பில் மனு அளித்தனர். அதில் எங்கள் கிராமத்தில் 750-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்கள் ஊரில் செல்போன் டவர் கிடைக்காததால் ஆன்லைன் வகுப்பு மற்றும் தேர்வுக்கு படிக்கும் மாணவர்கள் அவதிப்படுகின்றனர். அவர்களின் நலன் கருதி செல்போன் டவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர்.

    கரி கிரி வரதராஜபுரம் பொதுமக்கள் அளித்த மனுவில் கரி கிரி பொன்னியம்மன் கோவில் தார் சாலை வழியாக செல்வதை தடுத்துள்ளனர். இதனால் எங்கள் கிராமத்தில் சாதி கலவரம் ஏற்படும் என்ற அச்சம் உள்ளது. எங்கள் பகுதிக்கு சாலை வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர்.

    பாட்டாளி மக்கள் கட்சி குடியாத்தம் நகர செயலாளர் ரமேஷ் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    குடியாத்தம் நேதாஜி சவுக்கு அருகில் இருக்கும் மதுபான கடையை அகற்ற வேண்டும். பிச்சனூர் பேட்டை கங்காதர சாமி நகராட்சி நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும்.

    குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரி ரோட்டில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்‌. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    சாயல்குடி- அருப்புக்கோட்டை மாநில நெடுஞ்சாலையில் கொக்காடி, டி.வேப்பங்குளம், டி.எம்.கோட்டை விலக்கு ரோடு வரை பல இடங்களில் சாலை பழுதடைந்துள்ளதால் அடிக்கடி விபத்து ஏற்படுவது தொடர்கிறது.

    சாயல்குடி:

    சாயல்குடி- அருப்புக் கோட்டை மாநில நெடுஞ்சாலையில் கொக்காடி, டி.வேப்பங்குளம், டி.எம்.கோட்டை விலக்கு ரோடு வரை பல இடங் களில் சமீபத்தில் மராமத்து செய்யப்பட்டது.

    இந்த சாலை பழுதாகி கரடு முரடாகவும் கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாகவும் உள்ளது. மேலும் டி.வேப்பங்குளம் அருகேயுள்ள சாலையில் நடுப்பகுதி ஒருபக்கம் தாழ்வாகவும் மற்றொரு புறம் மேடாகவும் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் சாலை விதியைப் பின்பற்றாமல் சமமான சாலையில் செல் வதையே வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

    இதனால் அடிக்கடி வாகனங்கள் ஒன்றோ டொன்று மோதிக் கொண்டு விபத்து ஏற் படுகிறது. சமீபத்தில் மரா மத்து செய்யப்பட்ட இந்த தார்ச்சாலை முறை யாக போடாததால் பல இடங்களில் குண்டும் குழி யுமாகவும், மேடு-பள்ள மும் ஏற்பட்டுள்ளது.

    சமீபத்தில் இச்சாலையை மராமத்து செய்தவர்களின் முறைகேட்டால் தற்போது முன்பு நன்றாக இருந்த சாலையும் நடு நடுவே பள்ளம் ஏற்பட்டுள்ளதாலும், கொக்காடியிலிருந்து டி.வேப்பங்குளம் வரை வளைவான பகுதி என்ப தாலும் வாகன விபத்து அடிக்கடி ஏற்பட்டு வரு கிறது.

    இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், பழுதான சாலைகளால் விபத்து ஏற்படுவதைத் தடுக்க வலியுறுத்தி பல முறை கோரிக்கைகள் விடுத்தும் சாலையை மராமத்து செய்யாமல் நெடுஞ் சாலைத்துறையினர் மெத்தனம் காட்டுவதால் தான் விபத்துகள் தொடர் கிறது என்று கூறினர்.

    எனவே மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து சாலையை மராமத்து செய்து சமமாக்கி விபத்து அபாயத்தை தவிர்க்கச் செய்ய வேண்டும் என்பதே இந்த பகுதி மக்களின் எதிர் பார்ப்பாக உள்ளது.

    பேராவூரணி அருகே நெடுஞ்சாலை துறை உடனடியாக நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பேராவூரணி:

    பேராவூரணி அடுத்த காலகம் ஆவுடையார்கோயில் சாலையில் ரெட்டவயலிலிருந்து கொளக்குடி வரை செல்லும் சாலையில் ஆங்காங்கே சாலை குண்டும் குழியுமாக உள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே பிரசித்தி பெற்ற மாணிக்கவாசகரால் புகழ் பெற்ற ஆவுடையார்கோயில் உள்ளது. பேராவூரணியிலிருந்து இக்கோயிலுக்கு செல்ல பக்தர்கள் இச்சாலை வழியாகத்தான் செல்ல வேண்டும்.

    கொளக்குடி கடைத்தெரு பகுதியில் சாலையின் மையத்தில் பெரிய பள்ளம் உள்ளது. இருசக்கர வாகனத்தில் செல்லும் பயணிகள் அடிக்கடி விழுந்து விபத்து நடக்கிறது. இதுகுறித்து மக்கள் நேர்காணல் முகாமில் ஆர்.டி.ஓ.விடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்தனர். பருவமழை தொடங்க இருப்பதால் நெடுஞ்சாலை துறை உடனடியாக நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×