search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "robbing"

    முத்துப்பேட்டையில் மொபட்டில் சென்ற பெண்ணிடம் வழிப்பறி செய்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

    முத்துப்பேட்டை:

    முத்துப்பேட்டை அருகே குன்னலூர் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார் மனைவி சித்ரா (வயது 32). இவர் கடந்த 29-ந்தேதி மொபட்டில் முத்துப்பேட்டைக்கு வந்தார். அப்போது அவரை மோட்டார் சைக்கிளில் இருவர் பின் தொடர்ந்து வந்து வழி மறித்து அவரது கைப்பையை பறித்து சென்றனர். இது குறித்து சித்ரா இடையூர் போலீசில் புகார் செய்தார். கைப்பையில் செல்போன், செக், பணம் இருந்ததாக தெரிவித்து இருந்தார்.

    இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் நேற்று முத்துப்பேட்டையில் வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார் அவ்வழியே மோட்டார் சைக்கிளில் வந்த இருவரை நிறுத்தி சந்தேகத்தின் பேரில் விசாரித்தனர். விசாரணையில் இருவரும் முத்துப்பேட்டை சேர்ந்த அசாரூதீன் (16), முகமது அலி உசேன் (22). என்பதும் இருவரும் சித்ராவிடம் வழிபறியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    தஞ்சை அருகே பெண்ணை கட்டிப்போட்டு 12 பவுன் - ரூ.60 ஆயிரம் பணத்தை முகமூடி கும்பல் கொள்ளையடித்து சென்ற சம்பவம் வல்லம்புதூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    வல்லம்:

    தஞ்சையை அடுத்த வல்லம்புதூர் ஓம் சக்தி நகரை சேர்ந்தவர் நீலமேகம் (வயது 65). இவரது மனைவி தனலட்சுமி (60). நீலமேகம் ஆடுகளை ஒவ்வொரு பகுதிக்கும் கொண்டு சென்று கிடைபோடும் தொழில் செய்து வருகிறார்.

    தற்போது அவர் ஆடுகளுடன் வெளியூர் சென்று தங்கி உள்ளார். இந்த நிலையில் தனலட்சுமி நேற்று இரவு வீட்டின் முன்பக்க கதவையும், பின் பக்க கதவையும் பூட்டிவிட்டு திண்ணையில் படுத்து தூங்கியுள்ளார்.

    இந்த நிலையில் இரவு 2 மணியளவில் முகத்தை துணியால் மறைத்து கொண்டு வந்த 2 மர்ம நபர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து 12 பவுன் நகைகளை திருடி உள்ளனர். பின்னர் திண்ணையில் படுத்திருந்த தனலட்சுமி அணிந்திருந்த தாலிக்கயிறை அறுக்க முயன்றுள்ளனர். அப்போது விழித்துக் கொண்ட தனலட்சுமி திருடன் திருடன் என்று சத்தம் போட்டுள்ளார். அவரை 2 பேரும் மிரட்டி வீட்டுக்குள் தூக்கி சென்று நாற்காலியில் கட்டி வைத்து மீண்டும் பணம் கேட்டுள்ளனர். பணம் தராவிட்டால் கொலை செய்து விடுவோம் என்றும் மிரட்டி உள்ளனர். இதனால் பயந்து போன தனலட்சுமி வீட்டில் வைத்திருந்த ரூ.60 ஆயிரத்தை கொடுத்துள்ளார். அதன் பின்னர் கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

    இந்த துணிகர சம்பவம் குறித்து தனலட்சுமி வல்லம் போலீசில் இன்று புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்ணை மிரட்டி நகை-பணத்தை பறித்து சென்ற கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    வல்லம்புதூரில் முகமூடி கொள்ளையர்கள் அட்டகாசம் பற்றி அறிந்த பொதுமக்கள் இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி கொள்ளையர்களை பிடித்து நகை-பணத்தை மீட்க வேண்டும். இரவில் போலீஸ் ரோந்துக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இந்த சம்பவம் வல்லம்புதூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருவையாறு அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சதி திட்டம் தீட்டிய 6 வாலிபர்களை போலீசார் கைது செய்து அவர்கள் பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.
    திருவையாறு:

    திருவையாறு அருகே பொன்னாவரை 4 கால் மண்டபம் அருகில் சம்பவத்தன்று அதிகாலை திருவையாறு இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர் ஆர்த்தி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கலியமூர்த்தி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது சந்தேகத்திற்க்கு இடமான வகையில் சிவப்பு கார் ஒன்று அங்கு நின்று கொண்டிருந்தது. இதையடுத்து அதன் அருகில் சென்று பார்த்தபோது காருக்குள் 6 பேர் அமர்ந்து இருந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியபோது, அரியலூர்-தஞ்சை செல்லும் லாரிகளை மறித்து வழிப்பறி செய்ய சதி திட்டம் தீட்டிக் கொண்டிருந்தது தெரியவந்தது. 

    உடனடியாக இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் 6 பேரையும் பிடித்து திருவையாறு போலீஸ் நிலையம் அழைத்து வந்து மேலும் விசாரணை நடத்தினார். அதில் அவர்கள் பொன்னாவரை மேலத்தெரு ராஜேந்திரன் மகன் அசோக்குமார் (வயது26), அதே ஊர் காளியம்மன் கோவில் தெரு அமர்சிங் மகன் விஜய்(22), திருவையாறு ஸ்ரீராம் நகர் ராமானுஜம் மகன் சக்திகணேஷ்(27), பாவா அக்ரஹாரம் சுந்தரமூர்த்தி மகன் பிரசாந்(26), மேலவீதி திருஞானசம்பந்த மூர்த்தி மகன் நிதிஸ்(எ) கலியபெருமாள்(23), ஆக்கிநாதபுரம் உத்திராபதி மகன் சுரேந்தர்(25) ஆகியோர் என்பது தெரியவந்துள்ளது. 

    இதையடுத்து 6 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்தனர். மேலும் அவர்கள் பயன்படுத்திய கார் மற்றும் அதில் இருந்த ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர்.
    வடசேரி அருகே வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து பொருட்களை கொள்ளையடித்து சென்றனர்.

    நாகர்கோவில்:

    வடசேரியை அடுத்த ஆலம்பாறை கிரேஸ் தெரு பகுதியை சேர்ந்தவர் ராஜகோபால கிருஷ்ணன் (வயது 37).

    இவரது மனைவி பிரசவத்திற்காக கடந்த சில நாட்களுக்கு முன் தாயார் வீட்டிற்கு சென்று இருந்தார். மனைவியை பார்ப்பதற்காக ராஜகோபால கிருஷ்ணனும் வீட்டை பூட்டிவிட்டு அங்கு சென்றார். வீட்டில் யாரும் இல்லை.

    இந்த நிலையில் நேற்று காலை வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் முன் பக்க கதவு உடைக்கப்பட்டு வீடு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து வடசேரி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு சப்-இன்ஸ்பெக்டர் அனில்குமார், சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் சங்கரகுமார் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர்.

    வீட்டினுள் சென்று பார்க்கும்போது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்களும் சிதறிக் கிடந்தது. மேலும் வீட்டில் இருந்த வெள்ளி விளக்கு ஒன்று, தம்ளர்-1, கப்பு-4 மற்றும் விலை உயர்ந்த காமிரா-1, டி.வி.டி. பிளேயர்-1, வாட்ச்-1 ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரியவந்தது.

    மேலும் கைரேகை நிபுணர்களும் அங்கு வந்தனர். அவர்கள் பூட்டு உடைக்கப்பட்ட இடம், பீரோ ஆகிய இடங்களில் கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். இதில் கொள்ளையரின் கைரேகை சிக்கியது.

    இந்த கைரேகைகளை கொண்டு போலீசார் பழைய கொள்ளையர்களின் கைரேகைகளுடன் ஒப்பிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் குறித்து வடசேரி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆள் இல்லாததை நோட்டமிட்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதால், உள்ளூர் கொள்ளையர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருப்பார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அரியலூரில் கட்ட பஞ்சாயத்து மற்றும் வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

    அரியலூர்:

    அரியலூர் அருகே உள்ள பள்ளிகிருஷ்ணபுரத்தை சேர்ந்தவர் செல்வக்குமார். இவருக்கு கடந்த 3 வருடங்களுக்கு முன்பு கும்பகோணத்தை சேர்ந்த அருள்செல்வி (வயது 21) என்பவருடன் திருமணம் நடைபெற்றது. பின்னர் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் பிரிந்துள்ளனர். மேலும் அருள்செல்வி குடும்பத்தினர் திருமணத்தின் போது சீர்வரிசையாக கொடுத்த பொருட்களை திருப்பி கேட்டுள்ளனர்.

    அப்போது அதே ஊரை சேர்ந்த அரசியல் பிரமுகர் நீதி நெப்போலியன் (வயது 57) என்பவர் இருவீட்டாரையும் அழைத்து கட்டப்பஞ்சாயத்து செய்துள்ளார். அப்போது இருவருக்கும் உடன்பாடு ஏற்படாததால் செல்வக்குமார் குடும்பத்தினர் சீர்வரிசை பொருட்களை திருப்பி தருவதாக கூறியுள்ளனர்.

    அந்த பொருட்களை நீதி நெப்போலியன் அபகரித்ததாக கூறப்படுகிறது. இதனால் அருள்செல்வி மற்றும் அவரது குடும்பத்தினர் நீதிநெப்போலியனின் வீட்டிற்கு சென்று கேட்டுள்ளனர். அப்போது அருள் செல்விக்கு நீதி நெப்போலியன் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.

    இது குறித்து அரியலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நீதி நெப்போலியனை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் அவரை மாவட்ட எஸ்.பி.அபினவ் குமார் பரிந்துரையின் பேரில் குண்டர் சட்டத்தில் கைது செய்யுமாறு மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி உத்தரவிட்டார். 

    இதேபோல் அரியலூர் பகுதியில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட மத்து மடத்தியை சேர்ந்த சுந்தர் ராஜன் (41), மேலூரை சேர்ந்த பாலமுருகன் (38) ஆகியோரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அதன்பேரில் 3 பேரின் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.

    ×