search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rotary Club"

    • நிகழ்ச்சி சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.
    • இயக்குநர் என். லிங்குசாமி கலந்து கொண்டார்.

    ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை கர்நாடிக் புதிய தலைவராக பார்க் எலான்ஸா குழுமத்தின் நிர்வாக இயக்குநர் புவனா ரமேஷ் பொறுப்பேற்றுக் கொண்டார். இது தொடர்பாக நிகழ்ச்சி சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இவருடன் செயலாளராக ஜெயந்தா ஈஸ்வரன் பொறுப்பேற்றுக் கொண்டார்.

     


    இவர்களை தொடர்ந்து நிர்வாக குழு பொறுப்பேற்றுக் கொண்டது. இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக என்.எஸ். சரவணன், பாரதி ஆகியோர் கலந்து கொண்டனர். சிறப்பு அழைப்பாளர்களாக ஏ2பி குழுமத்தின் நிர்வாக இயக்குநர் கே.டி. ஸ்ரீனிவாச ராஜா மற்றும் திரைப்பட இயக்குநர் என். லிங்குசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்கள் உரையாற்றினர். இவர்களை தொடர்ந்து ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை கர்னாடிக் மேற்கொள்ள இருக்கும் பணிகள் குறித்தும், எதிர்கால திட்டங்கள் பற்றியும் அறிவிக்கப்பட்டன.

    • கீழக்கரை ரோட்டரி சங்கம் சார்பில் ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடந்தது.
    • முஹம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி துணை முதல்வர், பேராசிரியர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை ரோட்டரி சங்கம் சார்பில் மத நல்லிணக்க புனித ரமலான் நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்ச்சி ஹமீதியா தொடக்கப்பள்ளி வளாகத்தில் நடந்தது.

    கீழக்கரை ரோட்டரி சங்கத்தலைவர் சுல்தான் சம்சூல் கபீர் வரவேற்றார். ராமநாதபுரம் மாவட்ட டவுன் தலைமை ஹாஜி அல்ஹாஜ் சலாகுதீன் ஆலிம், ஓய்வு பெற்ற ஆசிரியர் காசி கணேசன், மக்கள் சேவை அறக்கட்டளை நிறுவனர் உமர் ஆகியோர் நோன்பின் மகிமை பற்றி பேசினர்.

    இதில் கீழக்கரை நகராட்சி தலைவர் செஹானஸ் ஆபிதா, சுகாதார ஆய்வாளர் பரக்கத்துல்லா, நகராட்சி மேற்பார்வையாளர் சாம்பசிவம், தில்லையேந்தல் ஊராட்சி தலைவர் கே.ஆர்.டி.கிருஷ்ணமூர்த்தி, கீழக்கரை நகர் மன்ற உறுப்பினர்கள் மீரான்அலி, பயாஸ், முஹம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி துணை முதல்வர் ஷேக் தாவூது, பேராசிரியர்கள் மரியதாஸ், பாலகிருஷ்ணன், எபன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

    ரோட்டரி சங்க செயலாளர் சுப்ரமணியன் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை பொருளாளர் சிவகார்த்திக் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • விழாவுக்கு வள்ளியூர் மேக்ரோ கல்லூரி சேர்மனும், சென்ட்ரல் ரோட்டரி சங்க தலைவருமான டாக்டர் பொன் தங்கதுரை தலைமை தாங்கினார்.
    • சங்கம் கடந்து வந்த பாதையினை பட்டைய தலைவர் எஸ்.என்.தங்கத்துரை விரிவாகவும் விளக்கமாகவும் எடுத்துரைத்தார்.

    வள்ளியூர்:

    வள்ளியூர் சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் சார்பாக பட்டய நாள் கொண்டாட்டம் ரோட்டரி சங்க கட்டிடத்தில் நடை பெற்றது.

    விழாவில் தலைமை விருந்தினராக முன்னாள் மாவட்ட ஆளுநர் ரோட்டே ரியன் ஜே.கே.குமார் கலந்து கொண்டார். விழாவுக்கு வள்ளியூர் மேக்ரோ கல்லூரி சேர்மனும், சென்ட்ரல் ரோட்டரி சங்க தலைவருமான டாக்டர் பொன் தங்கதுரை தலைமை தாங்கினார். பட்டய தலைவர் எஸ்.என்.தங்கதுரை, பட்டய செயலர் முன்னாள் மாவட்ட ஆளுநர் நவமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ரோட்டேரியன் அந்தோணி செல்லத்துரை ரோட்டரி இறைவணக்கம் வாசித்தார். பின்பு ரோட்டே ரியன் முன்னாள் துணை ஆளுநர் முத்துகிருஷ்ணன் விருந்தினர்களை வரவேற்றுப் பேசினார். தொடர்ந்து சங்கத்தின் தலைவர் டாக்டர் பொன் தங்கதுரை விழாவின் சிறப்பினை பற்றி எடுத்துரைத்து வாழ்த்துரை வழங்கினார்.

    பட்டைய தலைவர் எஸ்.என்.தங்கத்துரை சங்கம் கடந்து வந்த பாதையினை விரிவாகவும் விளக்கமாகவும் எடுத்துரைத்தார்.

    முன்னாள் மாவட்ட ஆளுநர் பட்டய செயலாளர் நவமணி இந்த சங்கத்தின் முன்னாள் தலைவர்களின் சிறப்பினையும் கூறி வாழ்த்துக்களை தெரி வித்தார். பட்டய தலைவர் எஸ்.என். தங்கத்துரை, பட்டய செயலர் முன்னாள் மாவட்ட ஆளுநர் நவமணி ஆகியோருக்கு சந்தன மாலை, பொன்னாடை அணிவித்தனர்.

    முதன்மை விருந்தினர் முன்னாள் மாவட்ட ஆளுநர் ஜே.கே.குமாரை முன்னாள் துணை ஆளுநர் ரோட்டேரியன் ரமேஷ் வலங்கை புலி அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் ஜே.கே.குமார் சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சின்போது முன்னாள் சங்க தலைவர்களுக்கு பரிசு பொருட்களை பட்டய தலைவர், செயலர் வழங்கினர். மாவட்ட துணை ஆளுநர் வாழ்த்தி பேசினார். விருந்தினர் அனைவருக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவினை ரோட்டேரியன் மேஜர் எல்.சுப்பிரமணியன் தொகுத்து வழங்கினார்.

    நிகழ்ச்சியில் திசையன்விளை எலைக்ட் ரோட்டரி சங்கம், கன்னியாகுமரி ரோட்டரி சங்கம், நாகர்கோவில் மிட்டவுன் ரோட்டரி சங்கம், நாகர்கோவில் சவுத் ரோட்டரி சங்கம், நாகர்கோவில் சென்ட்ரல் ரோட்டரி சங்கம், வள்ளியூர் ரோட்டரி சங்கம், திருநெல்வேலி தாமிரபரணி ரோட்டரி சங்கம், பேர்ல்ஸ் சிட்டி தூத்துக்குடி ரோட்டரி சங்கம், திருநெல்வேலி வெஸ்ட் ரோட்டரி சங்கம், நாகர்கோவில் ரோட்டரி சங்கம் ஆகிய சங்கங்களில் இருந்து உறுப்பினர்கள் கலந்து ெகாண்டனர்.

    கலந்து கொண்ட அனைவருக்கும் தலைவர் டாக்டர் பொன் தங்கதுரை சிறப்பு பரிசுகளை வழங்கினார். செயலர் சுதிர் கந்தன் நன்றி கூறினார்.

    • ரோட்டரி கிளப் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
    • 20 குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, பலசரக்கு பொருட்களும், 5 மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவியும் வழங்கப்பட்டது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் ரோட்டரி கிளப் நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது. மாவட்ட ஆளுநர் முத்து சிறப்புரையாற்றினார்.

    தலைவராக ஜெய கண்ணன், செயலாளராக ராம்குமார், துணைத் தலைவராக ரவி, இணைச் செயலாளராக கார்த்திக், பொருளாளராக ஸ்ரீராம், உடனடி முன்னாள் தலைவராக கண்ணன் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் பதவி ஏற்றனர். சிறப்பு அழைப்பாளராக லட்சுமி நாராயணன், துணை ஆளுநர் முத்துராமலிங்ககுமார் ஆகியோர் பங்கேற்று பேசினர். 20 குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, பலசரக்கு பொருட்களும், 5 மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவியும் வழங்கப்பட்டது.

    மூத்த உறுப்பினர்கள் முத்து, லட்சுமணன், பெரியசாமி, கருமாரி முருகன், வெங்கடாசலம், அழகர்சாமி கிருஷ்ணன், முனிராஜ், சசி கண்ணன், நடராஜன் புதிய உறுப்பினர்கள் பாலசுப்ரமணியம், ராம்குமார், வினோத் நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ×