என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "rto investigation"
- உரிய ஆவணங்களுடன் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு ஆர்.டி.ஓ. அலுவலகத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டது.
- அந்த நிலத்தை கடந்த சில வருடங்களுக்கு முன்பு தனியார் ஒருவர் விற்பனைக்கு வாங்கி உள்ளார்.
உடுமலை:
உடுமலை அடுத்த ஆண்டியகவுண்டனூர் கிராமத்திற்குட்பட்ட பகுதியில் ஜம்புக்கல் மலை உள்ளது. இந்த மலைப்பகுதியில் ஏழை விவசாயிகள் பயன்பெறும் வகையில் கடந்த சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு நிலம் வழங்கப்பட்டது.
பின்னர் நிலத்தை பெற்றவர்கள் சந்தித்த பல்வேறு இடர்பாடுகளால் அதில் திறம்பட சாகுபடி பணிகளை மேற்கொள்ள இயலவில்லை என்று கூறப்படுகிறது. இந்த சூழலில் அந்த நிலத்தை கடந்த சில வருடங்களுக்கு முன்பு தனியார் ஒருவர் விற்பனைக்கு வாங்கி உள்ளார். அதன் பின்பு அவர் அதில் பராமரிப்பு பணிகள் மேற்கொண்டதாக தெரிகிறது.
இந்த சூழலில் மலைப்பகுதியில் நிலத்தை கிரையம் பெற்ற தனியார் ஆக்கிரமிப்பு செய்ததாக கூறி உடுமலை ஆர்.டி.ஓ.விடம் பொதுமக்கள் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் 2 தரப்பினரையும் உரிய ஆவணங்களுடன் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு ஆர்.டி.ஓ. அலுவலகத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து ஆண்டிய கவுண்டனூர் கிராம நிர்வாக அலுவலகத்தில் உடுமலை ஆர்.டி.ஓ. ஜஸ்வந்த் கண்ணன் புகார் அளித்தவர்களிடம் விசாரணை நடத்தினார். இதில் ஒரு சிலர் விசாரணைக்கு ஆஜராக வில்லை.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில்"ஜம்புக்கல் மலை விவகாரம் தொடர்பாக நீண்ட நாட்களாக விவாதம் நடைபெற்று வருகிறது. அதன் பேரில் விசாரணை மேற்கொண்டது வரவேற்கத்தக்க ஒன்றாகும். இதில் உண்மை நிலையை கண்டறிந்து பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டியதும் அவசியமாக உள்ளது" என்றனர். இந்த நிகழ்வின் போது உடுமலை தாசில்தார் சுந்தரம், மண்டல துணை தாசில்தார் சந்திரசேகர் உள்ளிட்ட வருவாய்த்துறையினர்,பொதுமக்கள் உடனிருந்தனர்.
- கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு ரம்யாவை சுரண்டை அருகே உள்ள ராஜ கோபாலபேரியை சேர்ந்த சரவணக்குமார் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தனர்.
- சில நாட்களுக்கு முன்பு கணவர் வீட்டில் இருந்தபோது,ரம்யா திடீரென மண்எண்ணையை குடித்துவிட்டார் என விசாரணையில் தெரியவந்தது.
தென்காசி:
தென்காசி அருகே உள்ள ஆய்குடி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் செல்லையா. இவரது மனைவி செல்வி. இவர்களுக்கு ரம்யா என்ற மகள் உள்ளார்.
கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு ரம்யாவை சுரண்டை அருகே உள்ள ராஜ கோபாலபேரியை சேர்ந்த சரவணக்குமார் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தனர். தொடர்ந்து கர்ப்பமான அவருக்கு கடந்த 45 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில் நேற்று பெற்றோர் வீட்டுக்கு சென்ற ரம்யா, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த ஆய்குடி போலீசார் ரம்யா உடலை மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். ரம்யா குழந்தை பெற்றதில் இருந்து சற்று மனதளவில் பாதிப்படைந்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு கணவர் வீட்டில் இருந்தபோது, திடீரென மண்எண்ணையை குடித்துவிட்டார்.
இதனால் அவருக்கு ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை பார்க்குமாறு கூறி அவரது கணவர் ரம்யாவை பெற்றோர் வீட்டில் விட்டுவிட்டு சென்றுவிட்டார். தொடர்ந்து ரம்யாவுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்து வீட்டுக்கு அழைத்து வந்தனர். இந்த நிலையில் தான் அவர் திடீரென தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்தது. அவருக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் கூட முடிவடையாத காரணத்தினால் தென்காசி ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தப்பட உள்ளது.
பேரையூர்:
மதுரை விளாச்சேரியை அடுத்த மொட்டமலை ஆதி சிவன் நகரைச் சேர்ந்தவர் ஜெய மாயவேலு, பெயிண்டர். இவருடைய மனைவி தனலட்சுமி (வயது 30).
இவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகின்றன. 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த சில நாட்களாக கணவன், மனைவி இடையே தகராறு இருந்து வந்தது.
இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த தனலட்சுமி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
உடல் கருகிய அவரை உறவினர்கள் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தனலட்சுமி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து தனலட்சு மியின் சகோதரர் பால் பாண்டி கொடுத்த புகாரின் பேரில் ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
திருமங்கலம் துணை சூப்பிரண்டு ராமகிருஷ்ணன் விசாரணை நடத்தினார். திருமணமாகி 4 ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடக்கிறது.
இதேபோல் திருப்பரங்குன்றம் அருகே உள்ள பாரபத்தியைச் சேர்ந்தவர் சின்னவைரம் (45), தொழிலாளி. மது பழக்கத்திற்கு அடிமையான இவர், குடித்துவிட்டு வந்ததாக மனைவி ஆண்டிச்சி கண்டித்தார்.
இதனால் மனவேதனை அடைந்த சின்ன வைரன் விஷம் குடித்து மயங்கினார். மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். கூடக் கோவில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சாந்தகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்