search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "RTO study"

    • அரசு உதவிபெறும் கல்வி நிறுவனமான இந்த பள்ளி கடந்த 1981-ம் ஆண்டு முதல் தேவேந்திரகுல உறவின்முறை நிர்வாகத்தில் இருந்து வருகிறது.
    • இந்த பள்ளிக்கு பட்டா வழங்கக்கோரி உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியரிடம் மனு அளித்தனர்.

    சின்னமனூர்:

    சின்னமனூர் ஆலமரம் அருகே கடந்த 1955-ம் ஆண்டு திருவள்ளுவர் தொடக்கப்பள்ளி புறம்போக்கு நிலத்தில் தொடங்கப்பட்டது. அரசு உதவிபெறும் கல்வி நிறுவனமான இந்த பள்ளி கடந்த 1981-ம் ஆண்டு முதல் தேவேந்திரகுல உறவின்முறை நிர்வாகத்தில் இருந்து வருகிறது.

    இந்த பள்ளிக்கு பட்டா வழங்கக்கோரி உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியரிடம் மனு அளித்தனர். அதன் அடிப்படையில் உத்தமபாளையம் ஆர்.டி.ஓ திருவள்ளுவர் தொடக்கப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். பள்ளியின் கோப்புகளை விரிவாக பார்த்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    இந்த ஆய்வின்போது சின்னமனூர் வி.ஏ.ஓ மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் உடனிருந்தனர்.

    • பெண்ணிற்கு 18 வயதிற்குள் திருமணம் நடத்தினால் நடவடிக்கை
    • தரமான ருசியான சமையல் செய்து வழங்கவேண்டும் என ஆலோசனை

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் குழந்தை திருமண தடை விழிப்புணர்வு கட்டுரை, பேச்சு போட்டிகளில் கலந்து கொண்ட மாணவிகளுக்கு ஆரணி ஆர்டிஒ தனலட்சுமி, வருகைதந்து பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கினார்.இதில் தலைமை ஆசிரியர் (பொறுப்பு) சங்கீதா வரவேற்று பேசினார்.

    பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ரவி, ஆரணி தாசில்தார் ஜெகதீசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் ஆர்.டி.ஒ. தனலட்சுமி, பெண்கள் திருமணம் செய்து கொள்ள வேண்டிய வயது 18 ஆகும். 18 வயதிற்குள் உங்கள் ஊரில் எந்த பெண்ணுக்கும் திருமணம் நடத்தினால் உடனடியாக 1098-ஐ தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என பேசினார். தொடர்ந்து பள்ளி வளாகத்தில் மாணவிகளுக்கு வழங்கப்பட்ட சத்துணவை ஆர்.டி.ஒ. தனலட்சுமி ருசித்து பார்த்து ஆய்வு செய்தார்.

    பின்னர் அருகே உள்ள மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் நல மாணவிகள் விடுதியில் ஆர்.டி.ஒ. தனலட்சுமி தீடீர் ஆய்வு செய்து, மாணவிகளிடம் குறைகள் கேட்டார்.

    இதுகுறித்து தகவலறிந்த விடுதிக்காப்பாளர் லலிதா விடுதிக்கு வந்து ஆர் டி ஒ தனலட்சுமியிடம், விடுதியில் வழங்கப்படும் உணவுகள் குறித்து

    விளக்கம் அளித்தார். ஆர்.டி.ஒ. விடுதியில் சமையல் பதிவேடுகளை ஆய்வு செய்து தரமான ருசியான சமையல் செய்து வழங்கவேண்டும் என ஆலோசனை வழங்கினார்.

    இந்த ஆய்வின் போது ஆரணி தாசில்தார் ஜெகதீசன், கண்ணமங்கலம் வருவாய் ஆய்வாளர் ரமேஷ்பாபு, கிராம நிர்வாக அலுவலர்கள் கார்த்தி, ரமேஷ், பொன்னி, பொற்கொடி உள்பட பலர் உடனிருந்தனர்.

    • திருச்செங்கோடு ஆர்.டி.ஓ. கவுசல்யா பெண்கள் மற்றும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
    • ஆதி திராவிடர் விடுதியில் ஒரு மாணவர் கூட இல்லாத நிலையில், ஒருவருக்கு மட்டும் தூய்மைப்பணி செய்து வருவதற்கு மட்டும் சம்பளம் கொடுக்கபட்டு வருகிறது என்பதையும் கேட்டறிந்தார்.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது. இதையடுத்து திருச்செங்கோடு ஆர்.டி.ஓ. கவுசல்யா பெண்கள் மற்றும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

    ஆண்கள் மேல்நிலைப் பள்ளி பகுதியில் அருகே உள்ள கோம்பு பள்ளம், ஆக்கிரமிப்பால் குறுகியதாக மாறியதால், கோம்புபள்ளத்தின் நீர் அரசு ஆண்கள் பள்ளி வளாகத்தில் நுழைகிறது. இந்த தண்ணீர், கழிவுநீர் செல்வதற்காக அமைக்கப்பட்ட துளையின் வழியாக பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நுழைகிறது.

    இந்த பிரச்சினைக்கு கூடிய விரைவில் தீர்வு காணப்படும் என்று ஆர்.டி.ஓ கூறினார். மேலும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி பள்ளி சுற்றுச்சுவர் உடைப்பாலும் கோம்பு பள்ளம் நீர் நுழைகிறது.

    மாணவிகள் கழிப்பிடப் பகுதியில் சுற்றுச்சுவர் உயரம் குறைவாக இருப்பதால், மாணவிகள் சங்கடம் போக்க சுற்றுச்சுவர் உயரம் அதிகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை ஆசிரியர்கள் ஆய்வுக்கு வந்த அதிகாரிகளிடம் கூறினர்.

    இந்த ஆய்வின் போது, ஒரு வகுப்பில் ஆசிரியர் இல்லாமல் மாணவர்கள் விளையாடிக்கொண்டு இருப்பதை பார்த்து அந்த வகுப்பறைக்கு சென்றார். மாணவர்களிடம் கேட்டபோது தமிழ் பாட வகுப்பு என்பதும் ஆசிரியர் வரவில்லை என்பதும் தெரியவந்தது. இது குறித்து உதவி தலைமை ஆசிரியர் அங்கப்பராஜிடம் கேட்டபோது, தமிழ் ஆசிரியர் மணி விடுப்பில் உள்ளார், அவருக்கு பதிலாக மாற்று பயிற்சி ஆசிரியர் நியமித்தும், அவர் வெளியில் சென்று விட்டார் என்று கூறினார்.

    இதுபற்றி உரிய நடவடிக்கை எடுக்க கல்வி அதிகாரிக்கு ஆர்.டி.ஓ. உத்தரவிட்டார். அங்குள்ள ஆதி திராவிடர் விடுதியில் ஒரு மாணவர் கூட இல்லாத நிலையில், ஒருவருக்கு மட்டும் தூய்மைப்பணி செய்து வருவதற்கு மட்டும் சம்பளம் கொடுக்கபட்டு வருகிறது என்பதையும் கேட்டறிந்தார். ஆய்வின்போது மாவட்ட கல்வி அலுவலர் ரவி, தாசில்தார் தமிழரசி, ஆர்.ஐ. விஜய், வி.ஏ.ஓ. ஜனார்த்தனன் உள்பட பலர் உடனிருந்தனர்.

    ×