search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Saplings were planted"

    • கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடந்தது
    • பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கினர்

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் வடக்கு ஒன்றியம் தி.மு.க மற்றும் சுற்று சூழல் அணி சார்பாக கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மரக்கன்றுகள் நடவு செய்யும் விழா நேற்று பாணாவரம் சந்தைமேட்டு பகுதியில் நடைப்பெற்றது.

    காவேரிப்பாக்கம் வடக்கு ஒன்றிய சுற்று சூழல் அணி அமைப்பாளா் வெங்கடேசன் தலைமை தாங்கினார்.

    துணை அமைப்பாளா்கள் ராஜேஷ்,அசோக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தி.மு.க காவேரிப்பாக்கம் வடக்கு ஒன்றிய செயலாளா் தெய்வசிகாமணி, மாவட்ட துணைசெயலாளா் துரைமஸ்தான், மாவட்ட சுற்று சூழல் அணி துணை அமைப்பாளர், பாணாவரம் ஊராட்சிமன்ற தலைவர் அா்ஜீனன் ஆகியோா் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினர்.

    மேலும் பாணாவரம் வாரசந்தை பகுதியில் வேப்பம், பூங்கை உள்ளிட்ட 9 வகையான 50-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நடவு செய்தனா். இதில் திமுக காவேரிப்பாக்ம் ஒன்றிய துணை செயலாளா் சங்கா், பொருளாளா் ரவி, மாவட்ட பிரிதிநிதி பாஸ்கா், ஒன்றிய தகவல் தொழில் நுட்ப அணி சுமன், சாமு, பாணாவரம் ஊராட்சிமன்ற துணைதலைவர் சரண்யா, ஓய்வு பெற்ற முன்னால் தலைமை ஆசிரியை ஜெகதாம்பாள், பாணாவரம் கிளை கழக பொருப்பாளா் பாலன், ஆசிரியர் சரவணன், வார்டு உறுப்பினா்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனா்.

    பாணாவரம் முன்னால் ஒன்றியகுழு உறுப்பினா் சரவணன் நன்றி கூறினாா்.

    • முதலமைச்சர் பிறந்த நாள் முன்னிட்டு ஏற்பாடு
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ஆற்காடு:

    ஆற்காடு உட்கோட்ட தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் மரக்கன்றுகள் நடும் இயக்கம் சார்பில் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

    இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக மாநில துணைப் பொதுச் செயலாளர் பெருமாள் கலந்து கொண்டு இன்று காலை முப்பது வெட்டி கிராமம் பகுதிக்கு உட்பட்ட செய்யாறு சாலையில் உள்ள பாலாற்றங்கரை ஓரம் 100 மரக்கன்றுகள் நடப்பட்டன.

    இதில் உட்கோட்ட செயலாளர் கோவிந்தராஜுலு, உட்கோட்ட துணைத் தலைவர்கள் பிரகாஷ், ரகோத்தமன், சீனிவாசன், உட்கோட்ட இணைச்செயலாளர்கள் பவுனு, மணி, மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் விநாயகம், சேட்டு, சம்பத், மாவட்ட தலைவர் வெங்கடேசன், மாவட்டத் துணைத் தலைவர்கள் நமச்சிவாயன், லோகநாதன், மாவட்ட இணை செயலாளர்கள் ரவி, ரேணு ஆகிய அனைவரும் கலந்து கொண்டனர்.

    • பசுமை ஊராட்சியாக மாற்ற ஏற்பாடு
    • அதிகாரி ஆய்வு

    வாணியம்பாடி:

    திருப்பத்தூர் மாவட்டத்தில் அம்பலூர் ஊராட்சி மரக்கன்றுகள் நடுவதில் முன் மாதிரியாக செயல்பட்டு வருகிறது. அதன்படி கடந்த 6 மாதத்தில் 5 ஆயிரம் மரக்கன்றுகள் ஊராட்சியில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து நடப்பட்டு வருகிறது.

    இந்த ஊராட்சியை பசுமை ஊராட்சியாக மாற்ற இதற்கான பணிகளை அந்த ஊராட்சி மன்ற தலைவர் ஏ.பி. முருகேசன் செய்து வருகிறார்.

    பல்வேறு கட்டங்களாக செயல்படுத்தி வரும் இந்த பணியை நேற்று திருப்பத்தூர் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி நேரில் சென்று பார்வையிட்டு மரக்கன்றுகளை அம்பலூர் பகுதியில் நட்டார்.

    அப்போது உள்ளாட்சி பிரதிநிதிகள், ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • ரூ.2 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டது
    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்

    சேத்துப்பட்டு:

    திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு போளூர் சாலையில் உள்ள நிர்மலா நகர் பகுதியில் தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் மூலம் ரூ.2 கோடி மதிப்பீட்டில் சேத்துப்பட்டு வட்டார ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்கம் மையம். புதிய கட்டிடம் கட்டப்பட்டது.

    இந்த கட்டிடத்தை கடந்த 9-ந் தேதி திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வருகை தந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

    இதைத்தொடர்ந்து நேற்று ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையக் கட்டிடம் வளாகத்தில் திருவண்ணாமலை மாவட்டவேளாண் துணை இயக்குனர் (நுண்ணீர் பாசனம்) சேத்துப்பட்டு வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் நாராயணமூர்த்தி, சேத்துப்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலர் ரேணுகோபால், வேளாண்மை அலுவலர் இலக்கிய, ஆகியோர் மரக்கன்று, அலுவலகத்தில் இனிப்பு, வழங்கினர்.

    நிகழ்ச்சியில் சேத்துப்பட்டு பேரூராட்சி மன்ற தலைவர் சுதா முருகன், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் திலகவதி செல்வராஜன், ஆரணி வேளாண்மை செயற்பொறியாளர் கிருஷ்ணன், மற்றும் மேலாண்மை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×