என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "school students"

    • மாவட்ட காவல்துறையினர் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு, போதை பொருள் தீமை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
    • சங்கர் மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு தாழையூத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்

    நெல்லை:

    நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் அறிவுரையின் படி மாவட்ட காவல்துறையினர் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு, போதை பொருள் தீமை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

    அதன்படி இன்று தாழையூத்து, பகுதியில் உள்ள சங்கர் மேல்நிலை பள்ளி மாணவ- மாணவிகளுக்கு தாழையூத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் மற்றும் காவல்துறையினர் சாலை பாதுகாப்பு குறித்தும், போதை பொருட்கள் உட்கொள்வதால் ஏற்படும் தீமைகள் குறித்தும், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும், பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், குறித்தும் பெண்கள் உதவி மையம் இலவச தொலைபேசி எண் 181 குறித்தும், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை தெரிவிக்க 1098 என்ற இலவச தொலைபேசி எண் குறித்தும், காவல் உதவி செயலி மற்றும் குழந்தை திருமணம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

    • பொதிகை செஸ் டெவலப்மெண்ட் அசோசியேஷன் நடத்திய மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டி
    • பள்ளி மாணவன் வசீகரன் கலந்து கொண்டு மாவட்ட அளவில் 2-வது இடம் பிடித்து சாதனை படைத்தார்

    தென்காசி:

    தென்காசி பொதிகை செஸ் டெவலப்மெண்ட் அசோசியேஷன் நடத்திய மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டியில் செங்கோட்டை ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளி மாணவன் வசீகரன் கலந்து கொண்டு மாவட்ட அளவில் 2-வது இடம் பிடித்து சாதனை படைத்தார். வெற்றி பெற்ற மாணவனை பள்ளி தாளாளர் டாக்டர் ஷேக் செய்யது அலி மற்றும் முதல்வர் சமீமா பர்வீன் ஆகியோர் பாராட்டினர்.

    • பள்ளி நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என்று மாணவர்கள் தெரிவித்தனர்.
    • போக்குவரத்து காவலர் பணியில் பயணித்த மாணவர்களை இறக்கிவிட்டார் .

    திருப்பூர் : 

    திருப்பூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து பெருமாநல்லூர் சாலை மார்க்கமாக ரெயில் நிலையம், புதிய பேருந்து நிலையம், பிச்சம்பாளையம், போயம்பாளையம், பெருமாநல்லூர் வழியாக கணக்கப்பாளையம் வரை செல்லக்கூடிய அரசு பேருந்தில் மாணவர்கள் தொங்கியபடி பயணித்து வந்தனர்.

    நடத்துனர் பின்னால் மற்றொரு பஸ் வருகிறது. அதில் ஏறுங்கள் என்று கூறியும் மாணவர்கள் கேட்காததால் கோபம் அடைந்த நடத்துனர் பெருமாநல்லூரில் பேருந்து நின்றவுடன் அங்கு போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரிடம் இது குறித்து புகார் தெரிவித்தார். போக்குவரத்து காவலர் பணியில் பயணித்த மாணவர்களை இறக்கிவிட்டார் . இதையடு்தது பேருந்து புறப்பட்ட சென்றது.

    இதுகுறித்து மாணவர்கள் கூறுகையில், நாங்கள் பெருமாநல்லூர் அரசு பள்ளியில் பயின்று வருகிறோம்.இந்தப் பள்ளியில் கணக்கம்பாளையம் பிரிவு, குருவாயூரப்பன் நகர், போயம்பாளையம், பெருமாநல்லூர், குன்னத்தூர் சாலை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகிறோம்.

    தினமும் காலை 8.10 மணிக்கு 54-ம் நம்பர் பேருந்தும், 9.05 மணிக்கு 43-ம் நம்பர் பேருந்தும் இயங்கி வருகிறது.இந்த இரு பேருந்துகளை விட்டால் பள்ளிக்கு செல்ல வேறு வழி இல்லை. நான்கு கிலோ மீட்டர் நடந்து செல்ல வேண்டும். பள்ளிக்கு தாமதமாக சென்றால் ஆசிரியர்கள் கண்டிக்கின்றனர். எனவே பள்ளி நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என்று மாணவர்கள் தெரிவித்தனர்.

    • திருப்பூர் மாவட்டத்தில் கணக்கெடுப்பு பணி துவங்கியது, இதற்கான பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
    • மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி, நகராட்சிகளிலும் வீடு வீடாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது.

    திருப்பூர்:

    கொரோனா பாதிப்பு குறைந்த பின் அரசுப்பள்ளிகளில் மாணவர்கள் அதிக அளவில் சேர்ந்து வருகின்றனர். மாநில அரசும் அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தர நடவடிக்கை எடுத்து வருகிறது.ஒன்று முதல் பிளஸ் 2 வரை, 100 சதவீதம் மாணவர் சேர்க்கையை உறுதி செய்யவும், தொடர்ந்து அனைவரும் கல்வியை தொடரவும், பள்ளி கல்வித்துறையால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.

    அவ்வகையில் 6 முதல் 18 வயதுடைய பள்ளி செல்லா, இடைநின்ற மாணவர்கள், மாற்றுத்திறனாளி மாணவரை கண்டறிந்து அவர்களுக்கு ஒருங்கிணைந்த சிறப்பு பயிற்சி மையம் வாயிலாக கல்வி பயில ஏற்பாடு செய்யப்படுகிறது.

    அதன்படி நடப்பாண்டு மொபைல்ஆப் வாயிலாக இக்கணக்கெடுப்பு நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் கணக்கெடுப்பு பணி துவங்கியது. இதற்கான பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    இதற்காக பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர் பயிற்றுனர், கிராம சுகாதார செவிலியர், அங்கன்வாடி பணியாளர், தன்னார்வலர்கள் அடங்கிய குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    தொடர்ந்து ஒரு மாதம் எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் பள்ளிக்கு செல்லாதவர்கள், இதுவரை பள்ளிக்கே வராத மாணவர்கள், 8-ம் வகுப்புக்கு முன்னரே பள்ளியை விட்டு இடை நின்ற மாணவர்கள் கண்டறியப்படுவர்.இதற்காக மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி, நகராட்சிகளிலும் வீடு வீடாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது.

    இதேபோல ெரயில்வே நிலையம், பஸ் நிலையம், உணவகம், மார்க்கெட், குடிசை பகுதியில் உள்ள குழந்தைகள் மீதும் சிறப்புக்கவனம் செலுத்தப்படும். வருகிற 11-ந்தேதி கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.இதற்கு மாணவர்களின் பெற்றோர்களும், பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • நெல்லை மாநகர பகுதியில் வாகனங்கள் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து திருட்டு போய் வந்தது.
    • புதிய பஸ்நிலையத்தில் உள்ள சி.சி.டி.வி. காமிராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.

    நெல்லை:

    நெல்லை மாநகர பகுதியில் மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    மோட்டார் சைக்கிள் திருட்டு

    பஸ் நிலையங்கள், ரெயில் நிலையம், தியேட்டர்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்கள் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து திருட்டு போய் வந்தது.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு நெல்லை புதிய பஸ்நிலையத்திற்கு ஒருவர் தனது மோட்டார் சைக்கிளில் உறவினரை வழி அனுப்ப வந்தார். இதற்காக மோட்டார் சைக்கிளை பஸ்நிலையம் முன்பு நிறுத்தி விட்டு சென்றார்.

    பின்னர் வந்து பார்த்த போது அது திருட்டு போய் இருந்தது. இதுதொடர்பாக அவர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    சி.சி.டி.வி. காமிரா காட்சி

    இதற்கிடையே புதிய பஸ்நிலையத்தில் உள்ள சி.சி.டி.வி. காமிராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது சில சிறுவர்கள் மோட்டார் சைக்கிளை திருடி செல்வது தெரியவந்தது. இதையடுத்து நேற்று போலீசார் பஸ்நிலைய பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    அப்போது அதே சிறுவர்கள் மீண்டும் மோட்டார் சைக்கிள்களை திருடினர். உடனடியாக அவர்களை பிடித்து மேலப்பாளையம் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

    5 மாணவர்கள் சிக்கினர்

    அதில் அவர்கள் பாளையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வரும் 5 மாணவர்கள் என்பது தெரியவந்தது.

    மேலும் இவர்கள் மாநகர பகுதியில் உள்ள பல்வேறு இடங்களில் மோட்டார் சைக்கிள்களை கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து திருடி சென்றது தெரியவந்தது. இதற்காக அவர்கள் போலியாக சாவிகளையும் தயார் செய்து வைத்திருந்தனர். அவர்களிடமிருந்து 8 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • ஆசிரியை மாணவர்களிடம், இனிமேல் ஒழுங்காக வீட்டுப்பாடம் எழுதி வரவேண்டும் என்று எச்சரித்தாக கூறப்படுகிறது.
    • புகார் கொடுங்கள் என்று மற்றொரு ஆசிரியர் கூறியபடி இங்கு புகார் கொடுக்க வந்துள்ளோம் என்று தெரிவித்தனர்.

    அவினாசி :

    திருப்பூர் மாவட்டம் அவினாசிராஜன் நகர் அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது. 5-ம் வகுப்பு வரை உள்ள இப்பள்ளியில் 256 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். 2 ஆசிரி யர்கள் உள்ளனர்.

    போலீசார் அதிர்ச்சி

    இந்தநிலையில் அப்பள்ளியில் 5-ம் வகுப்பு படிக்கும் 4மாணவர்கள் அவினாசி போலீஸ் நிலையத்திற்கு சென்றனர். அவர்களை பார்த்த போலீ சார் அதிர்ச்சியடைந்ததுடன், அவர்களிடம் ஏன் இங்கு வந்தீர்கள் என்று கேட்டனர். அப்போது அவர்கள் எங்களை ஆசிரியை ஒருவர் திட்டுகிறார். திட்டாமல் இருப்பதற்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுங்கள் என்று மற்றொரு ஆசிரியர் கூறியபடி இங்கு புகார் கொடுக்க வந்துள்ளோம் என்று தெரிவித்தனர்.

    ஆசிரியை மீது புகார்

    இதையடுத்து போலீசார் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சென்று விசாரணை மேற்கொண்டதில் மாணவர்கள் வீட்டுப்பாடம் எழுதாமல் வந்ததால் ஆசிரியை மாணவர்களிடம், இனிமேல் ஒழுங்காக வீட்டுப்பாடம் எழுதி வரவேண்டும் என்று எச்சரித்தாக கூறப்படுகிறது. இதனால் மாணவர்கள் அந்த ஆசிரியை மீது போலீ சில் புகார் கொடுக்க சென்றதும் தெரியவந்தது.

    இதையடுத்து மாணவர்களின் பெற்றோரை வரவழைத்த போலீசார், மாணவர்களை கவனமாக பார்த்து கொள்ளு மாறு அறிவுறுத்தி மாணவர்களை பெற்றோர்களுடன் அனுப்பி வைத்தனர். ஆசிரியை திட்டியதாக கூறி பள்ளி சிறுவர்கள் புகார் கொடுக்க போலீஸ் நிலையம் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.

    • பிளஸ்-2 படித்து வரும் மாணவர்கள் இரு கோஷ்டிகளாக பள்ளியில் படித்து வருகின்றனர்.
    • ஊர்களில் இருந்து ஆட்களை அழைத்து வந்து பள்ளி மைதானத்தில் இன்று காலையில் மோதி கொண்டனர்.

    கடலூர்:

    புதுப்பேட்டை அரசு மேல்நிலை பள்ளியில் பிளஸ்-2 படித்து வரும் மாணவர்கள் இரு கோஷ்டிகளாக பள்ளியில் படித்து வருகின்றனர். அவர்களுக்குள் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்தது. அந்த சமயத்தில் பள்ளி தலைமை ஆசிரியர் மாணவர்களை கண்டித்து அனுப்பி விடுவார். இந்நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் மாணவர்களுக்குள் பள்ளி வளாகத்தில் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து அந்த மாணவர்கள் அவரவர்களின் ஊர்களில் இருந்து ஆட்களை அழைத்து வந்து பள்ளி மைதானத்தில் இன்று காலையில் மோதி கொண்டனர்.

    இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த தலைமை ஆசிரியர் உடனடியாக புதுப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையிலான போலீசார் பள்ளிக்கு விரைந்து சென்றனர். மோதலில் ஈடுபட்ட மாணவர்களை அழைத்து கண்டித்தனர். பள்ளி மாணவர்களுக்குள் கருத்து வேறுபாடு வரும் போது ஆசிரியர்களிடம் கூறி தீர்த்துக் கொள்ள வேண்டும். வெளியில் இருந்து ஆட்களை அழைத்து வந்து சண்டையிடக் கூடாது என்று அறிவுரை கூறினர். பின்னர் மாணவர்களை வகுப்பறைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் புதுப்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • புல்வாமா தாக்குதலில் தமிழக வீரர் உட்பட 40 இந்திய மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    • ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உயிரிழந்த ராணுவ வீரர்களின் உருவப்படத்திற்கு மலர் தூவி மெழுகுவர்த்தி ஏற்றி மவுன அஞ்சலி செலுத்தினர்.

    எட்டயபுரம்:

    கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி 14-ந் தேதி அன்று ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் இந்திய மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்களை ஏற்றி சென்ற வாகனம் மீது தற்கொலை படையினரால் நடத்தப்பட்ட தாக்குதலில் தமிழக வீரர் உட்பட 40 இந்திய மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் ஒட்டுமொத்த நாட்டு மக்களிடையே பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியது.

    இதையொட்டி ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14-ந் தேதி நாட்டின் பல்வேறு பகுதிகளில் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்கள் நினைவாக உருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மலர்கள் தூவி, நினைவஞ்சலி செலுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் 4-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி எட்டயபுரம் அருகே உள்ள ராமனூத்து கிராமத்தில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், கிராம பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் என ஏராளமானோர் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் உருவப்படத்திற்கு மலர் தூவி மெழுகுவர்த்தி ஏற்றி மவுன அஞ்சலி செலுத்தினர். இதில் பள்ளியின் தலைமையாசிரியர் இப்ராஹிம், உதவி ஆசிரியை இந்திரா, அ.தி.மு.க. நிர்வாகி ராஜகுமார் உட்பட ஏராளமான பெற்றோர்கள் கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

    • முதுநிலை விரிவுரையாளர் சுப்ரமணியம் ஆகியோர் வினாடிவினா தேர்வு, விடைத்தாள் தயாரிப்பு குறித்து பயிற்சிகளை வழங்கினர்.
    • மாவட்டத்தில் உள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த 179 ஆசிரியர்கள் பயிற்சியில் பங்கேற்றனர்.

    திருப்பூர்:

    பள்ளி கல்வித்துறை மற்றும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் 6முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் கல்வித்தரம் குறித்து மதிப்பீடு செய்ய கம்ப்யூட்டர் வழியில் வினாடி வினா தேர்வு வாரம்தோறும் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

    தேர்வுக்கான வினாத்தாள் தயாரிப்பு தொடர்பான பயிற்சி மற்றும் ஆலோசனை கூட்டம் என்.சி.பி., மேல்நிலைப்பள்ளி தாராபுரம், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, உடுமலை, பல்லடம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அவிநாசி ஆகிய மையங்களில் நடந்தது. திருப்பூர் குமார்நகர் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில், முதுநிலை விரிவுரையாளர் பாபி இந்திரா, கே.எஸ்.சி., அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முதுநிலை விரிவுரையாளர் சுப்ரமணியம் ஆகியோர் வினாடிவினா தேர்வு, விடைத்தாள் தயாரிப்பு குறித்து பயிற்சிகளை வழங்கினர்.

    மாவட்டத்தில் உள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த 179 ஆசிரியர்கள் பயிற்சியில் பங்கேற்றனர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருவளர்ச்செல்வி, மாவட்ட கல்வி அலுவலர் பக்தவச்சலம், மாநில கல்வியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் முதல்வர் சங்கர் ஆகியோர் பயிற்சி நடக்கும் மையங்களில் ஆய்வு செய்தனர்.

    மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருவளர்செல்வி கூறுகையில், வருகிற 20ந் தேதி முதல் பள்ளி அளவில், 6 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு வினாடி - வினா தேர்வு நடத்தப்படும். நடுநிலைப்பள்ளி மாணவரின் கல்வித்தரத்தை மேம்படுத்த தேவையான முயற்சிகள் பள்ளிகல்வித்துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.

    • இடைக்காட்டூர் திரு இருதய ஆண்டவர் திருத்தலத்தில் பள்ளி மாணவர்கள் தேர்வுக்காக பிரார்த்தனை நடந்தது.
    • இதே போல் சிவகங்கை விஷ்ணுதுர்கை கோவிலில் உள்ள சரசுவதி கோவிலிலும் மாணவர்கள் வழிபாடு செய்தனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள புகழ்பெற்ற இடைக்காட்டூர் திரு இருதய ஆண்டவர் திருத்தலம் உள்ளது.இங்கு மானாமதுரை-சிவகங்கை ரோட்டில் சுந்தர நடப்பு பகுதியில் செயல்படும் தனியார் மவுன்ட் போர்டு பள்ளி மாணவர்கள் வருகிற பிளஸ்-2 மற்றும் 10-ம் வகுப்பு பொது தேர்வுக்காக தயார்படுத்தி வரும் நிலையில், மாணவர்கள் இடைக்காட்டூர் திரு இருதய ஆண்டவர் திருத்தலத்திற்கு சென்று சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

    தேர்வில் அதிக மதிப்பெண்களுடன் வெற்றி பெற வேண்டிக் கொண்டனர். மாணவர்கள் கொண்டு வந்த நுழைவு தேர்வு சீட்டினை இடைக்காட்டூர் திருஇருதய திருத்தல அருட்பணியாளர் இம்மானுவேல் தாசனிடம் கொடுத்து ஆசீர்வாதம் பெற்றனர். இதே போல் சிவகங்கை விஷ்ணுதுர்கை கோவிலில் உள்ள சரசுவதி கோவிலிலும் மாணவர்கள் வழிபாடு செய்தனர்.

    • பள்ளிப் பருவத்திலே மாணவர்கள் அன்பாகவும், இனிமையாகவும் மற்றவர்களுடன் பேச கற்றுக்கொள்ள வேண்டும்.
    • கடினமான விஷயங்களை இனிமையாக அடுத்தவர்களுக்கு கூற வேண்டும்.

    வேலூர்:

    வி.ஐ.டி. பல்கலைக்கழக குழுமத்தின் அங்கமான வேலூர் சர்வதேச பள்ளி, சென்னையை அடுத்த கேளம்பாக்கம், காயார் பகுதியில் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது.

    வேலூர் சர்வதேச பள்ளியின் முதலாம் ஆண்டு விழா பள்ளியின் வளாகத்தில் நடைபெற்றது.

    ஆண்டு விழாவிற்கு இந்திய முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.எஸ். கிருஷ்ணமூர்த்தி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

    பள்ளிப் பருவத்திலே குழந்தைகள் சகிப்புத்தன்மை, அனுதாபம், சரியான முடிவு எடுத்தல், மனிதநேயம், மனித உறவுகளுக்கு முக்கியத்துவம் மற்றும் பணிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

    ஆசிரியர்கள் பாடம் நடத்தும் போது சரியாக கவனிக்க வேண்டும்.

    கால இடைவேளையில் பாடங்களை திரும்பத்திரும்ப படிக்க வேண்டும். வகுப்பறையில் கவனமாக இருந்தால் தேர்வை கண்டு குழந்தைகள் பயப்பட தேவையில்லை. நம்பிக்கையை வளர்த்துக் கொண்டால் தேர்வில் மட்டுமல்ல வாழ்க்கையிலும் வெற்றி பெறலாம்.

    பள்ளிப் பருவத்திலே மாணவர்கள் அன்பாகவும், இனிமையாகவும் மற்றவர்களுடன் பேச கற்றுக்கொள்ள வேண்டும். கடினமான விஷயங்களை இனிமையாக அடுத்தவர்களுக்கு கூற வேண்டும். முடியாது என்பதை கூட இனிமையான முறையில் கூற மாணவர்கள் பழகிக் கொள்ள வேண்டும்.

    பள்ளிப்பருவத்திலே மாணவர்கள் சரியான முடிவை எடுக்கும் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். வாழ்வில் பல்வேறு கடினமான சூழ்நிலையை நாம் சந்திக்க நேரிடும், அவ்வாறு இன்னல்களை நாம் சந்திக்கும்போது சரியான முடிவை தகுந்த நேரத்தில் எடுக்கும்போது நாம் வாழ்வின் அடுத்த கட்டத்திற்கு செல்வோம். இவ்வாறு முடிவு எடுக்கும் திறனை மாணவர்களுக்கு பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் கற்றுக் கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    வேலூர் சர்வதேச பள்ளியின் தலைவரும் வி.ஐ.டி. துணைத்தலைவருமான ஜி.வி. செல்வம் ஆண்டு விழாவை தலைமையேற்று நடத்தி பேசுகையில்:-

    வேலூர் சர்வதேச பள்ளியின் நிர்வாகம், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் பள்ளி குழந்தைகளை நாட்டின் சிறந்த குடிமகனாக வளர கடினமாக உழைக்கிறார்கள்.

    அதே நேரத்தில் நல்லொழுக்கம், நற்பண்பு மற்றும் நல்ல குணங்களோடு மாணவர்கள் வளர ஆசிரியர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். நற்பண்பு என்பது நாம் கற்கும் கல்விக்கு ஈடானது.

    6 வருட கடின முயற்சிக்குப் பின்பு அனைத்து அம்சங்களுடன் வேலூர் சர்வதேச பள்ளி உருவானது. பல்வேறு நாடுகளுக்கு சென்று பல்வேறு பள்ளிகளை பார்வையிட்ட பிறகுதான் வேலூர் சர்வதேச பள்ளி உருவாக்கப்பட்டது.

    வேலூர் சர்வதேச பள்ளி இயற்கையோடு படிக்கும் சூழலாக குழந்தைகளுக்கு உருவாக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கலை மற்றும் விளையாட்டில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு இந்திய முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி பரிசுகளை வழங்கினார். விழாவில் பள்ளியின் அறக்கட்டளை உறுப்பினர் அனுஷா செல்வம், பள்ளியின் இயக்குனர் சஞ்சீவி, ஆலோசகர் சீனிவாசன், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • துர்நாற்றத்தால் உடல் நலம் பாதிக்கப்பட்ட மாணவர்கள் 9 பேர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதி.
    • துர்நாற்றம் எங்கிருந்து வருகிறது என பள்ளி ஊழியர்கள் சோதனை செய்து வருகின்றனர்.

    ஜப்பானின் ஹோன்சு தீவில் உள்ள ஹரேஷிமா நகரில் பள்ளிக்கூடம் ஒன்று உள்ளது. இங்கு நேற்று வழக்கம் போல் வகுப்புகள் நடந்து கொண்டிருந்தன.

    அப்போது பள்ளிக்கூடத்தில் திடீரென கடும் துர்நாற்றம் வீச தொடங்கியது. இதனால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அசவுகரியமாக உணர்ந்தனர்.

    துர்நாற்றம் எங்கிருந்து வருகிறது என பள்ளி ஊழியர்கள் சோதனை செய்து கொண்டிருந்தபோதே, மாணவர்கள் சிலருக்கு வாந்தி, மயக்கம் போன்ற உடல் உபாதைகள் ஏற்பட்டன.

    அதை தொடர்ந்து இந்த துர்நாற்றத்தால் உடல் நலம் பாதிக்கப்பட்ட மாணவர்கள் 9 பேர் அருகில் உள்ள மருத்துவமனையில் உடனடியாக சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். அவர்கள் நலமாக இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ×