search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Seerparish"

    • ஆண்டுதோறும் கும்பாபிஷேகம் தினத்தில் திருக்கல்யாணம் நடைபெறுவது வழக்கம். .
    • சீர்வரிசைகளுடன் பக்தர்கள் கோவிலுக்கு வந்ததை தொடர்ந்து திருக்கல்யாணம் நடைபெற்றது

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் தெற்கு வீதியில் புகழ்பெற்ற கலியுக வெங்கடேச பெருமாள் அமைந்துள்ளது.திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில் கலியுக வெங்கடேச பெருமாளாகவும் சதுர்புஜ வரதராஜ பெருமாளாகவும் காட்சி தருவதாக ஐதீகம். இத்தலத்தில் ஆண்டு தோறும் கும்பாபிஷேகம் தினத்தில் திருக்கல்யாணம் நடைபெறுவது வழக்கம்.

    இத்தகைய சிறப்பு வாய்ந்த இக்கோவிலில் நேற்று 12-ம் ஆண்டு கும்பாபிஷேகம் தினவிழா விழாவை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் , அலங்காரம் தீபாராதனை நடந்தது. இதையடுத்து சீர்வரிசைகளுடன் பக்தர்கள் கோவிலுக்கு வந்தார்கள். தொடர்ந்து திருக்கல்யாணம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தார்கள்.பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே, உதவி ஆணையர் கவிதா, கோவில் செயல் அலுவலர் மாதவன் மற்றும் பணியாளர்கள் செய்து இருந்தார்கள்.

    • சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மணமேடைக்கு எழுந்தருளினர்.
    • சீர்வரிசை பொருட்களை எடுத்து கொண்டு ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே ஆச்சாள்புரம் கிராமத்தில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான திருவெண்ணீற்று மையம்மை உடனாகிய சிவலோக தியாகராஜசாமி கோவில் உள்ளது.

    இக்கோவிலில் தனி சன்னதியில் திருமண கோலத்தில் திருஞானசம்பந்த பெருமான்-தோத்திர பூரணாம்பிகையுடன் அருள்பாலிக்கிறார்.

    மேலும், பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி மாத மூல நட்சத்திரத்தில் திருஞா னசம்பந்தர் திருக்கல்யாண விழா சிறப்பாக நடைபெறும்.

    அதன்படி, இந்த ஆண்டுக்கான திருக்கல்யாண விழா நடைபெற்றது.

    முன்னதாக, திருஞான–சம்பந்தபெருமான்- தோத்திரபூரணாம்பி–கைக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று.

    சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மணமேடைக்கு எழுந்தருளினர்.

    விழாவை யொட்டி ஏராளமான பக்தர்கள் திருமண சீர்வரிசை பொருட்களை எடுத்துக் கொண்டு ஊர்வலமாக கோவிலை வந்தடைந்து திருமண சடங்குகள் தொடங்கியது.

    வேத விற்பன்னர்கள் திருமந்திரம் ஓத சிறப்பு ஹோமம் நடைபெற்று தோத்திர பூரணாம்பிக்கைக்கு சிவாச்சாரியார்கள் மங்களநாண் அணிவித்து திருக்கல்யாணம் நடைபெற்றது.

    தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    திருக்கல்யாண நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • முதல் நிகழ்வாக சோமசுந்தரர் புறப்பட்டு தீர்த்தவாரி நடைபெற்றது.
    • திரளான பெண்கள் கலந்து கொண்டு சீர்வரிசை எடுத்து வந்தனர்.

    பாபநாசம்:

    பாபநாசம் அருகே உள்ள திருநல்லூர் அருள்மிகு கிரிசுந்தரி உடனாய கல்யாண சுந்தரேஸ்வரர் கோவிலில் வைகாசி விசாக பெருவிழா நிகழ்ச்சி கடந்த 2-ந்தேதி தொடங்கப்பட்டு, முதல் நிகழ்வாக சோம சுந்தரர் சுவாமி புறப்பாடு நடைபெற்று

    தீர்த்தவாரி நடைபெற்றது. இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக சுவாமி அம்பாள் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. சுவாமி அம்பாளுக்கு திரளான பெண்கள் கலந்து கொண்டு சீர்வரிசை எடுத்து வந்தனர்.

    அதன் பின்பு மந்திரங்கள் முழங்க மேளதாளங்கள் வாசிக்க பக்தர்கள் முன்னிலையில் சுவாமி திருக்கல்யாணம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிவாச்சாரியார்கள், திருக்கோவில் பணியாள ர்கள் உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    ×