என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Seizure of jewelry"
- பெண்ணிடம் நகை பறித்த மதுரை வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
- திண்டுக்கல், புதுக்கோட்டை, நாகர்கோவில் ஆகிய பகுதிகளில் பல திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் அருகே குயவன்குடி கீர்த்தி நகரை சேர்ந்தவர் முனியசாமி. இவர் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி சரஸ்வதி (வயது48).
இவர் ராமநாதபுரம் வாரசந்தை யில் காய்கறிகள் வாங்கி விட்டு பஸ்சில் குயவன்குடி யில் இருந்து வீட்டிற்கு நடந்து சென்றார். அப்போது 2 மர்ம நபர்கள் வழிமறித்து சரஸ்வதி கழுத்தில் அணிந்தி ருந்த 7 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர்.
இதில் காயமடைந்த சரஸ்வதி ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து அவர் கேணிக்கரை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்த நிலையில் நகை பறித்தவர்கள் மதுரை கூடல் புதூர் பகுதியை சேர்ந்த சாந்தக்குமார் (30), செக்கானூரணியை சேர்ந்த சிவக்குமார் (27) என்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர். இவர்கள் மீது திண்டுக்கல், புதுக் கோட்டை, நாகர்கோவில் ஆகிய பகுதிகளில் பல திருட்டு வழக்குகள் நிலுவை யில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
- அதிர்ச்சியடைந்த அவர் கடையநல்லூர் போலீசில் புகார் செய்தார்.
- கூட்ட நெரிசலை பயன்படுத்து புர்கா அணிந்து பல்வேறு இடங்களில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது.
கடையநல்லூர்:
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள சொக்கம்பட்டி திரிகூடபுரத்தை சேர்ந்தவர் இசக்கிமுத்து. இவரது மனைவி சண்முகத்தாய் (வயது58). இவர் கடந்த 3-ந்தேதி அச்சன்புதூரில் உள்ள தன்னுடைய உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக கடையநல்லூர் அரசு மருத்துவமனை பஸ் நிறுத்தத்திற்கு சென்றார்.
அப்போது இவரது கழுத்தில் கிடந்த 48 கிராம் எடை கொண்ட தங்கச் செயினை மர்மநபர்கள் பறித்து சென்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் கடையநல்லூர் போலீசில் புகார் செய்தார்.
இதுபோன்று கடந்த மாதம் 28-ந்தேதி கடைய நல்லூர் முத்துகிருஷ்ணா புரம் பெரிய தெருவை சேர்ந்த சேர்த்தியன் மனைவி ஜோதி பாலா தனது மகளை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல கடையநல்லூர் அரசு மருத்துவமனை பஸ் நிறுத்ததில் நின்றபோது அவரது மகள் கழுத்தில் கிடந்த 24 கிராம் நகையை மர்மநபர்கள் பறித்து சென்றனர்.
இதைத்தொடர்ந்து கடையநல்லூர் பகுதிகளில் கோவில் திருவிழாக்கள், பஸ் நிலைய கூட்ட நெரிசலை பயன்படுத்தி தொடர் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருவதாகவும், அது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தொடர்ந்து புகார் வந்தன.
இதையடுத்து இது குறித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் உத்தரவிட்டார். இந்நிலையில் புளியங்குடி டி.எஸ்.பி. அசோக் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
அவர்கள் பஸ் நிறுத்தத்தில் உள்ள சி.சி.டி.வி. கேமிராக்களை ஆய்வு செய்த போது 2 பெண்கள் சிறுமி கழுத்தில் கிடந்த தங்கச் செயினை பறித்து செல்லும் காட்சி இருந்தது. விசாரணையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள ராஜ கோபால்நகர் மந்தித்தோப்பு பகுதியை சேர்ந்த திருப்பதி மனைவி அய்யம்மாள் (35) என்பது தெரியவந்தது.
மேலும் அய்யம்மாள் திருவிழாக்களில் கூட்ட நெரிசலை பயன்படுத்து புர்கா அணிந்து பல்வேறு இடங்களில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து ரூ. 5 லட்சம் மதிப்புள்ள நகைகள் மீட்கப்பட்டது.
- சேத்தியாதோப்பு அருகே மூதாட்டியிடம் நூதன முறையில் நகை பறிக்கப்பட்டது.
- போலீசார் ரோந்து பணியில் இருந்தபோது சந்தேகத்திற்கு இடமாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை பிடித்து விசாரணை செய்தனர்.
கடலூர்:
சேத்தியாதோப்பு அருகே தட்டான் ஓடைபகுதியை சேர்ந்தவர் ஆபரணம் (வயது 70). இவர் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் மூதாட்டியுடன் யாரும் இல்லாததை அறிந்த மர்ம நபர் ஒருவர் சில நாட்களுக்கு முன்பு அங்கு சென்றார். அப்போது அந்த நபர் மூதாட்டியால் முதியோர் உதவி தொகை உங்களுக்கு தருவதாக கூறி நூதன முறையில் அவரிடம் இருந்து 4கிராம் காதணித்தோடு திருடி சென்றார். இது குறித்து மூதாட்டி சேத்தியாதோப்பு போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் சேத்தியாதோப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து நூதன முறையில் மூதாட்டியிடம் திருடி சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் சேத்தியா தோப்பு அருகே குறுக்கு ரோடு பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர் அப்போது சந்தேகத்திற்கு இடமாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை பிடித்து விசாரணை செய்தனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணான தகவல் தெரிவித்ததால் அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று கிடுக்கி பிடி விசாரணை செய்தனர். விசாரணையில் முடிகண்டநல்லூர் பகுதியை சேர்ந்த சரத்குமார் என்பதும் அந்த மூதாட்டி இடம் நூதன முறையில் திருடியதையும் ஒப்புக்கொண்டார். உடனே போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்