என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Seizure"
- மதுரையில் புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
- மதுரை தெற்குவாசல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அதிரடி சோதனை நடத்தினார்.
மதுரை
மதுரை தெற்குவாசல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் எழுத்தாணிக்கார தெருவில் அதிரடி சோதனை நடத்தினார்.
அப்போது அங்குள்ள ஒரு கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பது தெரியவந்தது. அப்போது அங்கிருந்த 2,229 புகையிலை பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக வில்லாபுரம் சக்திவேல் நகரைச் சேர்ந்த அசோக்குமார் (51) என்பவரை கைது செய்தனர்.
- கடைகளில் விற்பனை செய்யப்பட்ட பிளாஸ்டிக்பொ ருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
- புகையிலை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டது
புதுக்கோட்டை:
பொன்னமராவதி பஸ் நிலைய வளாகத்தில் உள்ள கடைகளில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் நாகலிங்கம் தலைமையில், சுகாதார ஆய்வாளர்கள் ரவீந்திரன், தியாகராஜன், ராமலிங்கம், உத்தமன், முகேஷ்கண்ணன், வசந்தராமன், பிரேம்குமார் ஆகியோர் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக், புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என ஆய்வு செய்தனர். அப்போது கடைகளில் தடையை மீறி விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து கடைகளுக்கு அபராதம் விதித்தனர். மேலும் கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பொருட்களையும் பறிமுதல் செய்தனர்."
- 350 கிலோ புகையிலை- குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
- பேரையூரில் உள்ள அவருடைய வீட்டில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
திருமங்கலம்
திருமங்கலம் அருகே பேரையூர் பகுதியில் தடை செய்ய ப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருட்கள் புழக்கத்தில் இருப்பதாக போலீஸ் டி.ஐ.ஜி. பொன்னிக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்ப டையில் டி.ஐ.ஜி. தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் கவுதம் தலைமையில் போலீசார் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது பேரையூர் முக்கு சாலைப் பகுதியில் குளிர்பானக் கடை வைத்திருக்கும் சம்சுதீன்(53) பதுக்கி வைத்து புகையிலை பொருட்கள் சப்ளை செய்வது தெரியவந்தத. இதையடுத்து பேரையூரில் உள்ள அவருடைய வீட்டில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
இதில் 25 மூட்டையுள்ள 350 கிலோ புகையிலை மற்றும் குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ. 6 லட்சத்து 60 ஆயிரம் ஆகும். இதுதொடர்பாக சம்சுதீனை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- அக்கினி ஆற்றில் மண் அள்ளிய மாட்டுவண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
- 5 ேபர் கைது ெசய்யப்பட்டனர்.
புதுக்கோட்டை:
கறம்பக்குடி அருகே உள்ள நெய்வேலி அக்கினி ஆற்றில் மாட்டு வண்டியில் மண் அள்ளி வருவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து மணல் கடத்தலை தடுக்க புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் உத்தரவிட்டார்.
இதையடுத்து புதுக்கோட்டை மாவட்ட எல்லையான கறம்பக்குடியை மணலுடன் மாட்டு வண்டிகள் கடக்க முயற்சி செய்த போது, புதுக்கோட்டை கறம்பக்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் யோகரெத்தினம் தலைமையிலான போலீசார் மடக்கி பிடித்தனர்.
இதில் மணல் கடத்தி வந்த 6 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் இடையாத்தி கிராமத்தை சேர்ந்த மாரியப்பன் (வயது 58), ரெங்கராஜ் (45), ரெங்கசாமி (27), சிதம்பரம் (72), பழனி (45) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
முத்துச்சாமி (47) என்பவர் மட்டும் தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள். இது தொடர்பாக கறம்பக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வனவிலங்குகளை வேட்டையாட பதுக்கிய 24 நாட்டு வெடிகுண்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
- நாட்டு வெடிகுண்டு வைத்திருந்தவர்களை வெடிபொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோபி மாவட்ட சிறையில் அடைத்தனர்.
டி.என்.பாளையம்:
ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அருகேயுள்ள வாணிப்புத்தூர், காளியூர் மற்றும் கெம்மநாயக்கன்பாளையம் ஆகிய இடங்களில் நேற்று பங்களாப்புதூர் போலீசார் ரோந்து ஈடுபட்டு வந்தனர்.
அப்போது டி.ஜி.புதூர்-கே.என்.பாளையம் சாலையில் உள்ள காளியூர் பிரிவு பேருந்து நிறுத்தம் பகுதியில் போலீசார் சென்றபோது, சந்தேகத்திற்கு இடமான வகையில் கையில் பையுடன் நின்றிருந்த கே.என்.பாளையம் பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்த வேட்டையன் (50) மற்றும் நாராயணன் (58) ஆகிய இருவரும் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓட முயன்றனர்.
இதையடுத்து போலீசார் அவர்கள் இருவரையும் விரட்டிய போது, அருகில் வந்தால் நாட்டு வெடியை வீசி கொன்று விடுவோம் என்று போலீசாரை பார்த்து மிரட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து தப்பியோட முயன்ற இருவரையும் போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
விசாரணையில், இருவரும் வனப்பகுதியில் இருந்து வரும் விலங்குகளை அச்சுறுத்தவும், காட்டு பன்றிகளை வேட்டையாடுவதற்கும், அவுட்காய்கள் எனப்படும் நாட்டுக்காயை வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் நான்கு நாட்டு வெடிகுண்டுகளை பறிமுதல் செய்து, வேட்டையன், நாராயணன் ஆகிய இருவர் மீதும் கொலை மிரட்டல், வெடிபொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோபி மாவட்ட சிறையில் அடைத்தனர்.
இதேபோல் புளியம்பட்டி பகுதியிலும் நாட்டு வெடிகுண்டுகள் சிக்கியது. மொத்தம் 24 நாட்டு வெடிகுண்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில் வனவிலங்குகளை வேட்டையாட பதுக்கி வைத்தது தெரிய வந்தது.
இதுபோன்ற சட்ட விரோதமாக வெடிபொருட்கள் வைத்திருப்பவர்கள் சம்பந்தமாக புகார் அளிக்க விரும்புபவர்கள் ஈரோடு மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தன்னிடம் நேரடியாகவோ, அல்லது தனது வாட்ஸ்அப் எண் 9655220100 என்ற எண்ணுக்கும் புகார் தெரிவிக்கலாம்.
மேலும் காவல் அலுவலகத்தில் உள்ள காவல் உதவி ஆப் மூலமாகவும் தெரிவிக்கலாம். இதுகுறித்து விசாரித்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தகவல் கொடுப்பவரின் பெயர் முகவரி ரகசியமாக வைக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் கேட்டுக் கொண்டுள்ளார்.
- குடமுருட்டி ஆற்றில் சட்டவிரோதமாக மணல் அள்ளபடுவதாக வரப்பெற்ற தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
- அதிலிருந்த ஆட்கள் தப்பி ஓடிவிட்ட நிலையில் கைப்பற்றப்பட்ட டிராக்டரை வலங்கைமான் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.
நீடாமங்கலம்:
வலங்கைமான் தாசில்தார் தலைமையிலான அதிகாரிகள் நேற்று இரவுநேர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது இனாம்கிளியூர் என்ற கிராமத்தில், குடமுருட்டி ஆற்றில் சட்டவிரோதமாக மணல் அள்ளபடுவதாக வரப்பெற்ற தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
அப்போது பதிவு எண் இல்லாத ஒரு டிராக்டர் மணலுடன் கைப்பற்றப்பட்டது. அதிலிருந்த ஆட்கள் தப்பி ஓடிவிட்ட நிலையில் கைப்பற்றப்பட்ட டிராக்டரை வலங்கைமான் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.
மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு தப்பி சென்றவர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
- டி.என்.பாளையம் அருகே கடத்த முயன்ற 2 டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
- ரேசன் அரிசி மூட்டைகளுடன் வேனை பறிமுதல் செய்த போலீசார் டிரைவர் சரணை கைது செய்து ஈரோடு மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
டி.என்.பாளையம்:
டி.என்.பாளையம் அருகே உள்ள பங்களாப்புதூர் நால்ரோடு பகுதியில் இருந்து பவானிக்கு ரேசன் அரிசி கடத்தப்படுவதாக பங்களாப்புதூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து பங்களாப்புதூர் போலீசார் சத்தி-கோபி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.
அப்போது சத்தி சாலையில் இருந்து பவானி நோக்கி சென்ற சரக்கு வேன் ஒன்றை பங்களாப்புதூர் 3 ரோடு சந்திப்பில் நிறுத்தி போலீசார் சோதனை நடத்தினர். சோதனையில் வேனில் சுமார் 2 டன் எடையுள்ள ரேசன் அரிசி 50 மூட்டைகளில் இருப்பது தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து ரேசன் அரிசியுடன் வேனை பறிமுதல் செய்த போலீசார் போலீஸ் நிலையம் சென்று வேன் டிரைவர் திருப்பூர் மாவட்டம் ரங்கநாதபுரம் திருவள்ளுவர் நகரை சேர்ந்த சரண் என்பவரிடம் விசாரணை நடத்தினர்.
போலீசார் நடத்திய விசாரணையில் பறிமுதல் செய்யப்பட்ட ரேசன் அரிசி மூட்டைகள் டி.என்.பாளையம் அருகே உள்ள நால்ரோடு பகுதியில் இருந்து வாங்கிக்கொண்டு பவானிக்கு கொண்டு செல்வது தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து ரேசன் அரிசி மூட்டைகளுடன் வேனை பறிமுதல் செய்த போலீசார் டிரைவர் சரணை கைது செய்து ஈரோடு மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
நன்னிலம்:
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அடுத்துள்ள நாடாகுடி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் உலகநாதன். இவர் கொல்லுமாங்குடி நாட்டாறு பாலம் அருகில் 60 லிட்டர் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார்.
தகவல் அறிந்து சென்ற பேரளம் போலீசார் சாராயத்தை பறிமுதல் செய்து உலகநாதனை கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்