என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Shortcomings"
- நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை கூட்டம் நடைபெற உள்ளது.
- மின்நுகர்வோர் மற்றும் பொதுமக்கள் தங்களுக்கு ஏதேனும் குறைகள் இருந்தால் மனு அளிக்கலாம்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மின் வாரிய செயற்பொறியாளர் மணிவண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது:-
தஞ்சாவூர் நீதிமன்றசாலை மின் பொறியாளர் அலுவல கத்தில் மின் நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நாளை 28-ந்தேதி காலை 11.00 மணி முதல் 1.00 மணி வரை மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் நளினி தலைமையில் நடைபெற உள்ளது.
எனவே, தஞ்சாவூர் நகரிய கோட்டத்திற்கு உட்பட்ட நகர் எல்லையான தெற்கு வீதி, வடக்கு வீதி, மேல வீதி, கரந்தை, பள்ளியக்ரஹாரம், கீழவாசல், தொல்காப்பியர் சதுக்கம், மேரீஸ் கார்னர், அருளானந்த நகர், பர்மா காலனி, நிர்மலா நகர்,யாகப்பா நகர், அருளானந்தம்மாள் நகர், பழைய ஹவுசிங் யூனிட்,
காந்திஜி ரோடு, மருத்து வகல்லூரி சாலை, நீலகிரி, மானோஜிப்பட்டி, ரஹ்மான் நகர், ரெட்டிபாளையம் சாலை, சிங்கபெருமாள் கோவில், ஜெபமாலைபுரம், வித்யா நகர், மேலவெளி பஞ்சாயத்து, தமிழ் பல்கலைகழக வளாகம் குடியிருப்பு, மாதாக்கோட்டை சாலை, புதிய பேருந்து நிலையம், திருவேங்கட நகர், இனாத்துக்கான்பட்டி, நட்சத்திரா நகர், நாஞ்சிக்கோட்டை ஆகிய பகுதிகளை சார்ந்த மின் நுகர்வோர் மற்றும் பொது மக்கள் தங்களுக்கு ஏதேனும் குறை இருப்பின் நேரில் வந்து மனு அளிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை காலை 11 மணி முதல் 1 மணி வரை நடக்கிறது.
- மின்நுகர்வோர்கள் தங்களுக்கு ஏதேனும் குறைகள் இருப்பின் கூட்டத்தில் தெரிவிக்கலாம்.
தஞ்சாவூர்:
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக செயற்பொறியாளர் கலைவேந்தன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தஞ்சை மேற்பார்வை பொறியாளர் நளினி தலைமையில் நாளை (வியாழக்கிழமை) மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை தஞ்சை செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடத்தப்பட உள்ளது.
எனவே வல்லம், மின்நகர், செங்கிப்பட்டி, வீரமரசன்பேட்டை, கள்ளப்பெரம்புர், திருக்கானூர்பட்டி, வடக்கு தஞ்சாவூர், குருங்குளம், மருங்குளம், மெலட்டூர், புறநகர் திருவையாறு, நகர் திருவையாறு, பறநகர் திருக்காட்டுப்பள்ளி, நகர் திருக்காட்டுப்பள்ளி, நடுக்காவேரி, பகுதி அலுவலகங்களைச் சார்ந்த மின்நுகர்வோர்கள் தங்களுக்கு ஏதேனும் குறைகள் இருப்பின் மேற்கண்ட குறைதீர் கூட்டத்தில் தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- திருவாரூரில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது.
- இதில் மின்நுகர்வோர்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவிக்கலாம்.
திருவாரூர்:
திருவாரூர் மின்வாரிய செயற்பொறியாளர் செந்தமிழ்ச்செல்வி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருவாரூர் துர்காலயா சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் வருகிற 21-ந் தேதி (வெள்ளிக்கிழமை) மின்நுகர்வோர் குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது.
இந்த முகாமில் திருவாரூர் நகரம், புறநகர், கச்சனம், அடியக்கமங்கலம், கொரடாச்சேரி, குடவாசல், நன்னிலம், திருவாஞ்சியம், ஆலங்குடி, வலங்கைமான், பூந்தோட்டம், பேரளம், வேலங்குடி மற்றும் அதம்பார் பகுதிகளுக்கு உட்பட்ட மின்நுகர்வோர் கலந்து கொண்டு மின் வினியோகம் தொடர்பான தங்களுடைய குறைகளை விண்ணப்பம் மூலம் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மாற்றுதிறனாளிகள் குறைகளை மனுவாக எழுதி கோட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர்.
- அனைத்து மனுக்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவல கத்தில் மாற்றுத்திறனாளி களுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு கோட்டாட்சியர் (பொறுப்பு) பழனிவேல் தலைமை வகித்தார்.
இதில் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு பகுதிகளில் இருந்து மாற்றுதிறனாளிகள் குறைகளை மனுவாக எழுதி கோட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர்.
இதைத் தொடர்ந்து அனைத்து மனுக்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுப்பதாக கோட்டாட்சியர் தெரிவித்தார்.
கூட்டத்தில் மாற்று திறனாளிகள் துறை அலுவலர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
- சுற்றுப்புற சூழ்நிலைகளை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும்.
- அரசு நலத்திட்ட பணிகள் நடைபெறுவதில் குறைகள் இருந்தாலுல் தெரிவிக்கலாம்.
தரங்கம்பாடி:
தரங்கம்பாடி தாலுகா, செம்பனார்கோயில் ஒன்றியம், இளையாளூர் ஊராட்சி, அரங்கக்குடியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபா கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் சுப்ரியாபர்வின் தமிமுன் அன்சாரி தலைமை தாங்கினார்.
கிராம நிர்வாக அலுவலர் கவிநிலவரம் முன்னிலை வைத்தனர்.
ஊராட்சி செயலர் புவனேஸ்வரி வரவேற்றார்.
அப்போது சுகாதாரமான நீர் வழங்க வேண்டும்.சுற்றுப்புற சூழ்நிலைகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
குடி தண்ணீர்களை வீணடிக்க கூடாது.
சிக்கனமாக பயன்படுத்த கொள்ள வேண்டும்.
குறைகள் ஏதாவது இருந்தால் உடனடியாக ஊராட்சி மன்ற தலைவரிடம் தெரிவிக்க வேண்டும்.
அரசு நல திட்ட பணிகள் நடைபெறுவதில் குறைகள் ஏதேனும் இருந்தாலுல் தெரிவிக்கலாம் என ஊராட்சி மன்ற தலைவர் கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் வார்டு உறுப்பி னர்கள், ஊர் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் அரசியல் பிரமுகர்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் முடிவில் வார்டு உறுப்பினர் பார்த்திபன் நன்றி கூறினார்.
- மாலை நேரத்தில் பள்ளி விட்டு இரவு 8 மணிவரை பஸ்சுக்கு காத்திருக்கும் நிலை உள்ளது.
- காலை, மாலை நேரங்களில் கூடுதலாக பஸ்களை இயக்க நடவடிக்கை எடுப்பேன்.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி பகுதியில் விவசாய தொழிலாளர்கள் நிறைந்த பகுதி.
பல்வேறு கிராமங்களிலிருந்து திருத்துறைப்பூண்டி நகரப் பகுதிக்கு அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு படித்து வரும் ஏழை எளிய மாணவ மாணவிகள் அரசுப் பஸ்களில் பயணம் செய்து பள்ளிகளுக்கு தினந்தோறும் வந்து செல்கிறார்கள்.
ஆனால் மாலை நேரத்தில் பள்ளி விட்டு இரவு 8 மணிவரை பஸ்சுக்கு காத்திருக்கும் நிலை உள்ளதாக புகார் எழுந்துள்ளது.
இதை அறிந்த திருத்துறைப்பூண்டி எம்.எல்.ஏ. மாரிமுத்து திடீரென்று புதிய பஸ் நிலையத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.
மாணவிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.
உடனடியாக அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு பள்ளி கல்லூரி நேரங்களுக்கு ஏற்ற காலை மாலை நேரங்களில் கூடுதலாக பஸ்களை இயக்க நடவடிக்கை எடுப்பேன்.
இதுபோல் தொகுதிக்கு உட்பட்ட மற்ற பகுதிகளிலும் கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுப்பேன் என்றார்.
- அரசு அலுவலகங்களில் தீர்க்கப்படாமல் இருக்கும் பொதுப் பிரச்சனைகள் குறித்ததாக மனுக்கள் இருக்கலாம்.
- அரசு அலுவலர்களின் குறைகளை வெளிப்படுத்துதல் ஆகியன குறித்து இருத்தல் கூடாது.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்ட கலெ க்டர் காயத்ரிகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது,
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின், 2021-2023 ஆம் ஆண்டுக்கான மனுக்கள் குழு திருவாரூர் மாவட்டத்தில் விரைவில் கூடவுள்ளது. இதனையொட்டி திருவாரூர் மாவட்ட எல்லைக்குட்பட்ட பகுதிகளிலுள்ள தனிப்பட்ட நபரோ, சங்கங்களோ அல்லது நிறுவனங்களோ, தீர்க்கப்பட வேண்டிய பொதுபிரச்சனைகள் மற்றும் குறைகள் குறித்து மனுக்களை வழங்கலாம்.
மனுவினை தமிழில் எழுதி தேதியுடன் கையொப்பமிட்டு தலைவர், மனுக்கள் குழு, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை, சென்னை– 600009 என்ற முகவரிக்கு ஐந்து நகல்களை அக் 7ந் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
எழுதப்படும் மனுக்கள் கண்ணியமான வாக்கியத்தில் இருத்தல் வேண்டும். பலஆண்டுகளாக அரசு அலுவலகங்களில் தீர்க்கப்படாமல் இருக்கும் பொதுப் பிரச்சனைகள் குறித்ததாக மனுக்கள் இருக்கலாம்.
மனுக்கள் ஒரேயொரு பிரச்சனையை உள்ளடக்கியதாகவும், ஒரேயொருதுறையைச் சார்ந்ததாகவும் இருத்தல் வேண்டும்.
மனுக்கள் பொது முக்கியத்துவம் வாய்ந்த பொருள் ஒன்றினை உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும்.
ஆனால் மனுவில் தனிநபர் குறை, நீதிமன்றத்தின் முன் வழக்கிலுள்ள பொருள், வேலைவாய்ப்பு, முதியோர் ஓய்வூதியம், பட்டா மற்றும் அரசு வழங்கும் இலவச உதவிகள் வேண்டுதல், வங்கிக்கடன் அல்லது தொழிற்கடன் வேண்டுதல், அரசுப்பணியில் மாற்றம் வேண்டுதல், அரசு அலுவலர்களின் குறைகளை வெளிப்படுத்துதல் ஆகியன குறித்து இருத்தல் கூடாது.
சட்டமன்றப் பேரவை விதிகளின் வரம்பிற்குட்பட்ட மனுக்களை, மனுக்கள் குழு மாவட்டத்திற்கு வரும்போது ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளும்.
ஒரே மனுதாரர் பல மனுக்களைஅனுப்பி இருந்தாலும், குழு முக்கிய த்துவம் வாய்ந்ததாக கருதும் ஒரு மனு மட்டுமே ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்படும்.
மனுதாரர் முன்னிலையில் குழுக்கூட்டத்தில் கலந்துகொ ள்ளும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனுவில் உள்ள பொருள் குறித்த உண்மை நிலவரம் கேட்டறியப்படும்.
இது குறித்து, மனுதாரர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து குழு ஆய்வு செய்யும் நாள் குறித்த தகவல் தனியாக அனுப்பப்படும். 7.10.22-க்கு பின்னர் பெறப்படும் மனுக்கள் குழுவின் ஆய்வி ற்கு எடுத்துக் கொள்ளப்படாது.
இவ்வாறு கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்