search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sivan Temples"

    • திருநெடுங்களம் கோவிலை வணங்கினால் தீரா துயர் தீரும்.
    • திருமணஞ்சேரி தலத்தில் வழிபட்டால் திருமண தோஷம் விலகும்.

    சென்னை:

    கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது பழமொழி. நமது ஊரில் உள்ள கோவில்களுக்குச் சென்று சாமியை தரிசனம் செய்து வரவேண்டும் என முன்னோர் வலியுறுத்தி உள்ளனர்.

    அதன்படி, எந்த ஊருக்குச் சென்று எந்த சாமியை வணங்கினால் என்ன பலன்கள் கிடைக்கும் என்பதை இங்கு பார்க்கலாம்.

    திருக்கருக்குடி கோவிலை வணங்கினால் குடும்ப கவலை நீங்கும்.

    திருக்கருவேலி கோவிலை வணங்கினால் குழந்தை பாக்கியம் பெறலாம். வறுமை நீங்கும்.

    திருவழுந்தூர் கோவிலை வணங்கினால் முன்ஜென்ம பாவம் விலகும்.

    திருப்பராய்துறை கோவிலை வழிபட்டால் கர்வத்தால் கெட்டவர்கள் நலம் பெறலாம்.

    திருநெடுங்களம் கோவிலை வணங்கினால் தீரா துயர் தீரும்.

    திருவெறும்பூர் கோவிலை வழிபட்டால் அதிகார மோகத்தால் வீழ்ந்தவர்கள் தெளிவு பெறலாம்.

    திருப்பைஞ்ஞீலி கோவிலை வணங்கினால் எம பயம் விலகும்.

    திருவையாறு கோவிலை வழிபட்டால் அக்னி தோஷம் விலகும்.

    திருவைகாவூர் கோவிலில் வில்வ அர்ச்சனை செய்தால் பாவங்கள் விலகும்.

    திருமங்கலங்குடி ஈசனை வணங்கினால் குழந்தை பாக்கியம் பெறலாம்.

    திருமணஞ்சேரி தலத்தில் வழிபட்டால் திருமண தோஷம் விலகும்.

    திருமுல்லைவாயல் ஈசனை வணங்கினால் சந்திர தோஷம் விலகும்.

    திருவெண்காடு கோவிலை வழிபட்டால் ஊழ்வினை தோஷம் நீங்கும்.

    திருநெல்வேலி நெல்லையப்பரை வணங்கினால் மகான்களுக்கு செய்த குற்றம் விலகும்.

    திருக்குற்றாலம் குற்றால நாதரை வேண்டினால் முக்தி கிடைக்கும்.

    திருவாலவாய் கோவிலை வணங்கினால் நட்சத்திர தோஷம் நீங்கும்.

    திருப்பரங்குன்றத்தை வழிபட்டால் வாழத் தெரியாது தவிப்பவர்களுக்கு வழி கிடைக்கும்.

    திருவாடானை தலத்தை வணங்கினால் தீராத பாவம் நீங்கும்.

    திருமுருகநாத சுவாமி கோவிலை வழிபட்டால் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் தோஷம் விலகும்.

    திருப்பாதிரிபுலியூர் தலத்தை வணங்கினால் தாயை விட்டுப் பிரிந்திருக்கும் குழந்தைக்கு தோஷம் நீங்கும்.

    திருவேற்காடு ஈசனை வணங்கினால் வாணிப பாவம் விலகும்.

    திருமயிலாப்பூர் கபாலீஸ்வரரை வழிபட்டால் 3 தலைமுறை தோஷம் நீங்கும்.

    • லெட்சுமி நரசிம்மர், ராமவிநாயகர் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை தொல்லியல் ஆலோசர் மணி ஆய்வு செய்தார்.
    • கோவிலுக்கு தேவையான கோரிக்கைகளை அறங்காவலர்கள் தொல்லியல் ஆலோசகரிடம் மனுவாக அளித்தனர்.

    செய்துங்கநல்லூர்:

    ஸ்ரீவைகுண்டம் ஆய்வாளர் அலுவலகத்துக்கு உட்பட்ட இந்து அறநிலையத்துறை கோவில்களில் தற்போது அறங்காவலர்கள் நியமிக்க ப்பட்டுள்ளனர்.

    ஒவ்வொரு கோவில்களை யும் முன்னேற்றப்படுத்த இந்து அறநிலையத்துறை தொல்லியல் ஆலோசகர் ஆய்வு மேற்கொண்டு கோவிலுக்கு தேவையான வேலைகள் தொடர்பான அறிக்கை சமர்பிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதற்காக ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள முத்தாலங்குறிச்சியில் உள்ள மிகவும் பழமையான வீரபாண்டிஸ்வரர், லெட்சுமி நரசிம்மர், ராமவிநாயகர் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை தொல்லியல் ஆலோசர் மணி ஆய்வு செய்தார்.

    சிவன் கோவிலை புதிதாக கல் கட்டிடமாக கட்டவும், கோவில் ஆகம விதிபடி தெட்சிணாமூர்த்தி, கன்னி விநாயகர், வள்ளி தெய்வானை சமேத முருகன், சனீஸ்வரன், கஜலெட்சுமி, பைரவர், நந்தீஸ்வரர், நவகிரகங்கள், கொடி மரம் பிரதிட்சை செய்வது குறித்தும், ராமவிநாய கரை சுற்றி கல் பிரகாரம் அமைக்கவும், லெட்சுமி நரசிம்மர் கோவிலையும் கல்கட்டிடமாக கட்டி முன்னால் கருட வாகனம் மற்றும் கொடி மரம் அமைக்கவும் அறங்கா வலர் காமராசு மனு கொடுத்தார். இதுகுறித்து அறிக்கையை அரசுக்கு சமர்பிப்பதாக அவர் கூறினார். அப்போது அவருடன் ஸ்ரீவைகுண்டம் இந்து அறநிலையத்துறை ஆய்வாளர் நம்பி, உதவியாளர் விசுவ நாதன், அர்ச்சகர் சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் சிங்காத்தா குறிச்சி அரியநாச்சியம்மன், வல்லநாடு செல்வ விநாயகர், ஆழிவிளங்கும் பெருமாள், வசவப்பபுரம் ராமசாமி கோவில், விட்டிலாபுரம் விட்டீலேஸ்வரர் செய்துங்க நல்லூர் வியாக்கிரபாதீஸ்வரர், ஸ்ரீவைகுண்டம் சூடிகொடுத்த நாச்சியார் கோவிலும் அறநிலையத்துறை தொல்லியல் ஆலோசகர் மணி ஆய்வு செய்தார்.

    அறங்காவலர்கள் நாரயண சாமி, கேசவன், நாச்சியார், கோமதி, குருமாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டு கோவிலுக்கு தேவையான கோரிக்கைகளை தொல்லியல் ஆலோசகரிடம் மனுவாக அளித்தனர். அப்போது ஆய்வாளர் நம்பி உள்பட பலர் அவருடன் சென்றனர்.

    • தோரணமலை முருகன் கோவிலிலும் ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது.
    • நடராஜருக்கு சிறப்பு அபிஷேகங்கள் அலங்காரம் மற்றும் தாண்டவ தீபாராதனை நடைபெற்றது.

    கடையம்:

    கடையம் பகுதி சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசன விழா இன்று காலை நடைபெற்றது.

    கடையம் நித்திய கல்யாணி அம்மன் - வில்வ வன நாதர் கோவில், சிவசைலம் சிவசைலநாதர் கோவில், ஆழ்வார்குறிச்சி வன்னியப்பர் கோவில், தோரணமலை முருகன் கோவிலிலும் ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது.

    தோரண மலை முருகன் கோவிலில் நடராஜருக்கு திருவாதிரை ஆருத்ரா தரிசன பூஜை நடைபெற்றது.அதிகாலையில் மலை அடிவாரத்தில் உள்ள பிள்ளையார் கோவில் அருகே நடராஜருக்கு சிறப்பு அபிஷேகங்கள் அலங்காரம் மற்றும் தாண்டவ தீபாராதனை நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    மேலும் மார்கழி மாத பவுர்ணமியை முன்னிட்டு மலையை சுற்றி சுமார் 4 கிலோமீட்டர் தூரம் நடக்கும் கிரிவலம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனை வருக்கும் அன்னதானம் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் செய்திருந்தார்.

    ×