என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 100356"
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், திருச்சி மாநகர் மாவட்டத்தைச் சேர்ந்த தில்லைநகர் பகுதி 49-ஏ வட்ட செயலாளர் முகமதுசலீம் (எ) செக்கடி சலீம், இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன் பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர். #ADMK #EPS #OPS
ஆனால் 30-ம் தேதி வழக்கை விசாரிக்காமல், மேலும் சில நாட்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர் நேற்று கோரிக்கை விடுத்தார். இதற்கு தி.மு.க. தரப்பிலும், டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் தரப்பிலும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பு கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்தனர். ஏற்கனவே பட்டியலிட்டபடி 30-ந் தேதி (இன்று) வழக்கு விசாரணைக்கு வந்த பிறகு, அது குறித்து என்ன செய்யலாம் என்று யோசித்து முடிவெடுக்கப்படும் என்று நீதிபதிகள் கூறினார்கள்.
அதன்படி இன்று இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஓபிஎஸ் தரப்பில் வழக்கு தொடர்பான ஆவணங்களை தயார் செய்ய அவகாசம் கோரப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதிகள், வழக்கு விசாரணையை நவம்பர் 15ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். #ADMK #11MLAsCase #SupremeCourt #OPS
சென்னை:
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வ்ம ஆகியோர் இன்று காலை திடீர் என்று ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக் கழகம் வந்தனர்.
அவர்கள் அ.தி.மு.க. நிர்வாகிகள் வைத்திலிங்கம், கே.பி.முனுசாமி ஆகியோருடன் அவசர ஆலோசனை நடத்தினர்.
தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தினகரனை ஆதரிப்பவர்கள் மீண்டும் அ.தி.மு.க.வில் இணைய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் கூட்டாக அழைப்பு விடுத்து இருந்தனர்.
அதுபற்றி இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. மேலும் தினகரன் ஆதரவாளர்கள் 18 தொகுதி இடைத்தேர்தலை சந்திப்பதா? அல்லது அப்பீல் செய்வதா? என்று ஆலோசித்து வருகிறார்கள். இதுபற்றியும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. #ADMK #EdappadiPalaniswami
திருவள்ளூர்:
தகுதி நீக்கம் செய்யப்பட 18 எம்.எல்.ஏ.க்களில் ஒருவரான பூந்தமல்லி ஏழுமலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
18 எம்,எல். ஏ.க்களை தகுதி நீக்கம் செய்தது திட்டமிட்ட சதி. நாங்கள் ஆட்சியை கலைத்து விடுவோம் என்ற பயத்தில் தான் சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தார்.
முதல்-அமைச்சரை மாற்ற வேண்டும் என்றும், அம்மாவின் திட்டங்களை மக்களிடம் முதல்வர் கொண்டு சேர்ப்பதில்லை என்றும், முதல்வருக்கு நிர்வாக திறமை இல்லை என்று தான் தெரிவித்தோம்.
மக்கள் பணியாற்றுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட நாங்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் முதல்-அமைச்சர் முதல் அனைவரும் பணம் சம்பாதிக்கும் மன நிலையில் உள்ளனர்.
சபாநாயகர் ஒரு தலைப்பட்சமாக செயல்படுகிறார். எனவே தான் நீதிமன்றம் சென்றோம். மீண்டும் சபாநாயகர் சொன்ன தீர்ப்பு சரிதான் என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது வருந்தத்தக்கதாக உள்ளது.
எங்களுக்கு நியாயமான தீர்ப்பு கிடைக்க வேண்டும். உச்ச நீதிமன்றத்தை நாட உள்ளோம். மக்களுக்காக நல்ல திட்டங்கள் அனைத்தும் சென்று சேர நல்ல தீர்ப்பு கிடைக்க வேண்டும்.
உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ள நிலையில் தேர்தல் அறிவித்தால் நிச்சயம் அ.ம.மு.க. கட்சி போட்டியிடும். 18 தொகுதிகளிலும் நிச்சயம் வெற்றி பெறுவோம்.
தேர்தலின் போது முதல்-அமைச்சர், உள்ளிட்ட அமைச்சர்கள் யாரும் தொகுதிக்குள் சென்று பிரச்சாரம் செய்யக் கூடாது. எந்த தலைவரும் தொகுதிக்குள் செல்லாமல் வேட்பு மனு தாக்கல் செய்து விட்டு தேர்தலை சந்தித்தால் அ.ம.மு.க. அமோக வெற்றி பெறும். எடப்பாடி-ஓ.பி.எஸ். பக்கம் செல்லமாட்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
தகுதி நீக்கம் செய்யப்பட்ட மற்றொருவரான கோதண்டபாணி (திருப்போரூர் தொகுதி) நிருபரிடம் கூறியதாவது:-
தகுதி நீக்கம் செல்லும் என நீதிமன்றம் தீர்ப்பளித்ததில் என் மனதளவில் வருத்தம் தான். ஏன் என்றால் ஒன்றரை ஆண்டுகளாக என் தொகுதி மக்களுக்கு எதுவும் செய்ய முடியாமல் இருந்தது. அது மீண்டும் தொடர்கிறதே என்ற வருத்தம் இருக்கிறது.
எடப்பாடி அரசு பசுமாட்டை அறுத்து பாலை கறக்கிறது. அந்த வலி பசு மாட்டுக்குத்தான் தெரியும். நாங்கள் பசுவாக பலமுறை பாதிக்கப்பட்டு விட்டோம். நானும் உணர்ந்து விட்டேன்.
இவ்வளவு வலியை வைத்து விட்டு எப்போதும் எடப்பாடி-ஓ.பி.எஸ். பக்கம் போகமாட்டேன். தலைவர் தினகரன் என்ன சொல்கிறாரோ அதன்படி செயல்படுவேன். மறு தேர்தல் வைத்தாலும் மீண்டும் இதே தொகுதியில் நின்று நான் பட்ட கஷ்டங்களை கூறி வெற்றி பெறுவேன்.
இவ்வாறு அவர் கூறினார். #EdappadiPalaniswami #OPanneerselvam
அ.தி.மு.க.வின் உறுப்பினர் சேர்க்கை நடந்து வருகிறது. இதையடுத்து உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நடந்தது.
ஸ்மார்ட் கார்டாக உருவாக்கப்பட்ட உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு அவைத்தலைவர் மதுசூதனன் தலைமை தாங்கினார். துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் முன்னிலை வகித்தனர்.
இருவரும் அவர்களது உறுப்பினர் அட்டையை ஒருவரிடமிருந்து ஒருவர் பெற்றுக் கொண்டனர். பின்னர் நிர்வாகிகளுக்கு உறுப்பினர் அட்டை மற்றும் புதிதாக சேர்ந்தவர்களுக்கு அட்டைகள் வழங்கப்பட்டன.
ஸ்மார்ட் உறுப்பினர் அடையாள அட்டையில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த அட்டையில் பார்கோடு ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அதில் உறுப்பினரின் முழு விவரங்கள் இடம் பெற்றுள்ளன. #ADMK #EdappadiPalaniswami #OPanneerselvam
சென்னை:
சென்னை மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவராக இருப்பவர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி. அ.தி.மு.க. பிரமுகரான இவர், சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தார்.
அதில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பற்றி தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ. வான வெற்றிவேல் தகாதவார்த்தைகளால் பேசியுள்ளார்.
இருவரையும் ஒருமையில் மிகவும் தரக்குறைவாக பேசியது லட்சக்கணக்கான தொண்டர்களை வேதனை அடைய செய்துள்ளது. நானும் வேதனை அடைந்துள்ளேன். எனவே அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இதனை தொடர்ந்து வெற்றிவேல் மீது நடவடிக்கை எடுப்பது பற்றி போலீசார் ஆலோசித்து வருகிறார்கள். அவர்மீது சட்ட நடவடிக்கை பாய்கிறது. இது தொடர்பாக சட்ட நிபுணர்களுடன் போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி உள்ளனர். தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில்தான் வெற்றிவேல் அவதூறு கருத்துக்களை கூறியுள்ளார்.
எனவே இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுப்பது பற்றி ஆலோசனை நடத்தி முடிவு எடுக்க உள்ளதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். வெற்றிவேல் மீது விரைவில் வழக்கு பதிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #EdappadiPalaniswami #OPanneerselvam #Vetrivel
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அதில், 1.3.2018 முதல் 31.5.2018-ந் தேதி வரை பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை தலைமைக் கழகத்தில் செலுத்தி, ரசீது பெற்றுள்ள அனைவருக்கும் வருகின்ற 8.10.2018 (திங்கட்கிழமை) முதல் புதிய உறுப்பினர் உரிமைச் சீட்டுகள் வழங்கப்படும்.
கழக உடன்பிறப்புகள், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை 1.3.2018 முதல் 31.5.2018-ந் தேதி வரை தலைமைக் கழகத்தில் சேர்ப்பித்து, அதற்கான ரசீதுகளைப் பெற்றுள்ளவர்கள் அதனைக் கொண்டுவந்து காண்பித்து, அந்தந்த ரசீதுகளுக்குரிய உறுப்பினர் உரிமைச் சீட்டுகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
புதிய உறுப்பினர் உரிமைச் சீட்டுகளைப் பெற்றுள்ள கழக உடன்பிறப்புகள் மட்டுமே, நடைபெற உள்ள கழக அமைப்புத் தேர்தலில் போட்டியிடுவதற்கும், வாக்களிப்பதற்கும் தகுதி உடையவர் ஆவார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #ADMK #EdappadiPalaniswami #OPS
திண்டுக்கல்லில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன் மற்றும் கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி கூட்டாக நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 7 பேரையும் தமிழக ஆளுநர் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். இல்லையென்றால் தமிழகத்தில் புரட்சி வெடிக்கும். மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசை கண்டு எடப்பாடி அரசு பயப்படுகிறது. எச்.ராஜா காவல்துறை மற்றும் நீதித்துறை பற்றி அவதூறாக பேசினார். இது தொடர்பாக அவர் மீது வழக்கு பதிவு செய்த பின்பும் போலீஸ் துணையுடன் பொதுக்கூட்டத்திற்கு வருகை தருகிறார். அவரை கைது செய்யாமல் தமிழக அரசு ஏன் மவுனம் காத்து வருகிறது? அரசை மக்கள் கேவலமாக பார்க்க மாட்டார்களா அ.தி.மு.க. அரசை மக்கள் கூடிய விரைவில் தூக்கி எறிவார்கள்.
இவ்வாறு அவர்கள் கூறினர். #ThangaTamilSelvan #Pugalenthi #OPS
ஒட்டன்சத்திரத்தில் நடந்த அ.ம.மு.க. பொதுக் கூட்டத்தில் பங்கேற்று ஊர் திரும்பிய நிர்வாகிகள் 4 பேர் விபத்தில் சிக்கினர். அவர்கள் காயத்துடன் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களை கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன் சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் பொதுக்கூட்டம் நடத்துவது என்றால் அதற்கு போலீசார் அனுமதி அளிக்க மறுக்கின்றனர். ஒவ்வொரு கூட்டத்துக்கும் நாங்கள் கோர்ட்டுக்கு சென்றே அனுமதி பெற வேண்டியது உள்ளது.
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் குறித்து தீர்ப்பு வரும் வரை ஆட்சியை காப்பாற்றிக் கொள்ள முதல்வரும், துணை முதல்வரும் ஒற்றுமையாக இருக்கின்றனர். அவர்களை பொறுத்தவரையில் மக்கள் நலன் குறித்த அக்கறை கிடையாது. பதவி சுகத்துக்காகவே ஒற்றுமையாக இருப்பது போல் காட்டிக் கொள்கின்றனர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார். #Thangatamilselvan
கேரளாவிலும் பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியிலும் பெய்து வரும் பலத்த மழை காரணமாக பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடி வரை எட்டியது. பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் வைகை அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. வைகை அணையின் முழு கொள்ளவான 71 அடியில் நேற்று 68.60 அடி நிரம்பியது. இதையடுத்து கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
வைகை அணை திறக்கப்பட்டுள்ளதால் தேனி, மதுரையில் வைகை ஆறு கரையோரத்தில் வசிக்கும் பொதுமக்கள் ஆற்றை கடக்கவோ அல்லது குளிக்கவோ வேண்டாம். ஆற்றின் அருகே கால்நடைகளின் மேய்ச்சலை தவிர்க்கவேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார். #VaigaiDam
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்