search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சொத்து"

    வீட்டு வேலைக்கார பெண்ணின் வங்கி கணக்கில் ரூ.700 இருந்தது, 32 மாதங்களில் சொத்து மதிப்பு ரூ.75 லட்சமாக அதிகரித்துள்ளது. அந்த பெண், அவருக்கு வேலை கொடுத்த சென்னை அரசு அதிகாரி மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.
    புதுடெல்லி:

    இது ஏதோ கடின உழைப்பால் உயர்ந்த ஒருவரின் கதை போல இருக்கலாம் என நீங்கள் கருதினால் ஏமாந்துபோவீர்கள். இது, தான் தப்பித்துக்கொள்வதற்காக கள்ளத்தனமாக சேர்த்த சொத்துகளை வேலைக்கார பெண்ணின் பெயரில் வாங்கிய ஒரு அரசு அதிகாரியின் செயல்.

    சென்னையில் உள்ள மத்திய அரசு நிறுவனமான பெட்ரோலியம் வெடிபொருள் மற்றும் பாதுகாப்பு அமைப்பில் இணை தலைமை வெடிபொருள் கட்டுப்பாட்டாளராக பணியாற்றியவர் ஏ.கே.யாதவ். இவர் இந்த பதவியில் 2015-ம் ஆண்டு ஆகஸ்டு 12-ந்தேதியில் இருந்து 2018-ம் ஆண்டு ஏப்ரல் 7-ந்தேதி வரை பணியில் இருந்தார். பின்னர் அவர் ஓய்வுபெற்றார்.

    இந்த காலகட்டத்தில் அவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சி.பி.ஐ.க்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுபற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்தியதில் யாதவ் ரூ.98.89 லட்சம், அதாவது அவரது சட்டபூர்வ வருமானத்தைவிட 311.30 சதவீதம் அதிகமான சொத்து வைத்துள்ளதாக தெரியவந்தது.

    ஓய்வுபெறும்போது அவரது சொத்து மதிப்பு ரூ.1.37 கோடி. அவை அவரது பெயரிலும், அவரது வீட்டில் வேலை செய்துவந்த பெண் சரிதா என்பவர் பெயரிலும் இருந்தது. யாதவின் சட்டபூர்வ வருமானம் ரூ.31.76 லட்சம் மட்டும் தான். இதில் அவரது செலவுகள் போக ரூ.98.89 லட்சம் வருமானத்துக்கு அதிகமாக சொத்து உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.



    சரிதா 2015-ம் ஆண்டு வேலைக்கு சேர்ந்தபோது அவரது வங்கி கணக்கில் ரூ.700 இருந்தது. 32 மாதங்களில் அவரது அசையா சொத்துகள் ரூ.44.35 லட்சமாகவும், அசையும் சொத்துகள் ரூ.30.94 லட்சமாகவும் இருந்தது. இதில் வங்கியில் இருப்பு தவிர 2 இடங்களில் வீட்டுமனை, ஒரு வீடு, 547 கிராம் தங்கம் ஆகியவையும் அடங்கும். ஆனால் சரிதாவின் வருமானம் மாதம் ரூ.8,300 சம்பளம் வீதம் இந்த காலகட்டத்தில் மொத்தம் ரூ.2.66 லட்சம் மட்டுமே.

    இதுதவிர இதர சொத்துகள் ஏ.கே.யாதவ் மற்றும் அவரது மனைவி புஷா பெயரிலும் இருந்தன. இதிலிருந்து யாதவ் தனது வீட்டு வேலைக்கார பெண் பெயரில் சொத்துகளை வாங்கி தப்பிக்க நினைத்தது தெரியவந்தது. யாதவின் ஏஜெண்டாக டி.வி.கே.குமரேசன் என்பவர் செயல்பட்டு வந்ததும் சி.பி.ஐ. விசாரணையில் தெரிந்தது.

    இதனைத்தொடர்ந்து சி.பி.ஐ. அதிகாரிகள் ஏ.கே.யாதவ், குமரேசன், சரிதா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
    போடி அருகே போலி ஆவணங்கள் மூலம் சொத்துக்களை அபகரித்த 9 பேருக்கு சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
    மேலசொக்கநாதபுரம்:

    போடி அருகே உள்ள தேவாரம் டி.கே.வி. பள்ளி தெருவை சேர்ந்தவர்கள் ஜெயராமன்(65), தங்கராஜ் (53), பாபு (39). இவர்களுக்கு தேவாரம் வட்ட ஓடை புலத்தில் புஞ்சை நிலம் இருந்துள்ளது.

    அந்த நிலத்தை தேவாரம் பகுதியை சேர்ந்த ராஜா (37), இவரது தந்தை ஈஸ்வரன் (60), இதே பகுதியை சேர்ந்த ஜெயராமன் (62), ராஜகோபால் (70), கனகராஜ் (54), ராகவன் (60), பாஸ்கரன் (60), தங்கம் (60), மாணிக்கம் (60) ஆகியோர் சேர்ந்து பத்திர எழுத்தர் முருகன் (50) என்பவர் மூலம் போலி ஆவணங்கள் தயாரித்து கடந்த 2011-ம் ஆண்டு ராஜாவின் பெயரில் பத்திரம் பதிவு செய்து சொத்துக்களை அபகரித்துள்ளனர்.

    இதுகுறித்து ஜெயராமன் தரப்பினர் தேவாரம் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் பேரில் தேவாரம் போலீசார் 10 பேர் மீதும் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு போடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதன் இறுதி தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. இதில் இந்த வழக்கில் தொடர்புடைய மாணிக்கம் இறந்து விட்டார். மீதியுள்ள 9 பேரும் குற்றவாளிகள் என்பது உறுதி செய்யப்பட்டது.

    இதனையடுத்து நீதிபதி மணிவாசகன் தனது தீர்ப்பில், போலியான ஆட்கள், ஆவணங்கள் மூலம் சொத்தை அபகரிக்க முயன்ற ராஜாவுக்கு நான்கு பிரிவுகளின் கீழ் தலா இரண்டு ஆண்டுகள் வீதம் 8 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், ஈஸ்வரன், கனகராஜ் ஆகியோருக்கு மூன்று பிரிவுகளின் கீழ் 2 ஆண்டுகள் வீதம் 6 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதமும், ஜெயராமன், ராஜகோபால், ராகவன், பாஸ்கரன், முருகன், தங்கம் ஆகியோருக்கு மூன்று பிரிவுகளின் கீழ் தலா 4 ஆண்டுகள் மற்றும் கூடுதலாக 6 மாதம் சிறை தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். #tamilnews
    சொத்துக்களை வாங்குபவர்கள் இனி 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல் ரொக்கம் செலுத்தி பணப்பரிவர்த்தனை செய்தால் வருமான வரித்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. #ITDept ##ITnotice #cashransaction
    புதுடெல்லி:

    கணக்கில் வராத பணம், கருப்புப்பணம் மற்றும் சட்டவிரோதமான பண பரிவர்த்தனைகளை தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.



    அவ்வகையில், இனிமேல் சொத்துக்களை வாங்குபவர்கள் இனி 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல் ரொக்கம் செலுத்தி பணப்பரிவர்த்தனை செய்தால் வருமான வரித்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. #ITDept ##ITnotice #cashransaction #propertypurchase
    பாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரி ஊழல் வழக்கில் சிக்கியதையடுத்து அவரது சொத்துக்களை முடக்க சுப்ரீம் கோர்ட் பரிந்துரை செய்துள்ளது. #AsifAliZardari
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரி. பதவி வகித்த போது ரூ.22 ஆயிரம் கோடி அளவுக்கு ஊழல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு ஒரு விசாரணை குழு அமைத்தது.

    அந்த குழு சர்தாரி, அவரது சகோதரி பர்யால்தர்புர் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தியது.

    அதுகுறித்த அறிக்கை நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி சர்தாரி, அவரது தங்கை பர்யால் தர்பூர் மற்றும் சர்தாரி குரூப் சொத்துக்களை முடக்க பரிந்துரை செய்துள்ளது.

    அவற்றில், சர்தாரி, பெயரில் உள்ள வங்கி கணக்குகள், கராச்சி, லாகூர் மற்றும் இஸ்லாமாபாத்தில் உள்ள புகழ் பெற்ற பிலாவல் ஹவுசுக்கு சொந்தமான 5 பிளாட்டுகள், அமெரிக்கா மற்றும் துபாயில் உள்ள சொத்துக்கள் அடங்கும். #AsifAliZardari
    அசையா சொத்தை வாங்கும்போது கவனிக்க வேண்டிய அம்சங்கள் நிறைய இருக்கின்றன. இதில் கவனமாக இல்லையென்றால், பல்வேறு சிக்கல்களை சந்திக்க நேரிடும்.
    நிலத்தில் முதலீடு செய்வது தான் இன்றைக்கு நல்ல முதலீடாக கருதப்படுகிறது. ஆனால், அசையா சொத்தை வாங்கும்போது கவனிக்க வேண்டிய அம்சங்கள் நிறைய இருக்கின்றன. இதில் கவனமாக இல்லையென்றால், பல்வேறு சிக்கல்களை சந்திக்க நேரிடும்.

    அப்படியென்றால், சொத்தை வாங்கும்போது எந்தெந்த வி‌ஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்? சொத்தின் உரிமையாளர் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருந்தால், அந்த சொத்தை நேரடியாக வாங்க முடியாது. நீதிமன்றத்தின் அனுமதி கட்டாயம் தேவை. அதிகாரம் பெற்ற முகவரிடம் (பவர்) சொத்து வாங்குவதாக இருந்தால், நிலத்தை அல்லது சொத்தை விற்பதற்கான அதிகாரம் அவருக்கு இருக்கிறதா என்பதை முதலில் உறுதி செய்து கொள்ளுங்கள். சில நேரம் விற்பனை ஒப்பந்தம் மேற்கொள்வதற்கு மட்டும் ஒருவருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டு இருக்கலாம்.

    எனவே, ஆவணத்தை கவனமாகப் படிக்கவும். அதிகாரம் கொடுத்தவர் உயிருடன் இல்லையென்றால், அந்த அதிகாரம் செல்லுபடியாகாது. நிலத்தின் உரிமையாளர் உயிருடன் இல்லையென்றால், அனைத்து வாரிசுதாரர்களின் சம்மதத்துடன் சொத்து விற்கப்படுகிறதா என்று பார்க்கவும். வாரிசு சான்றிதழ் மூலம் யாரெல்லாம் வாரிசுகள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும். வாரிசுதாரர்களில், சொத்துக்கு உரிமையுள்ளவர்கள் 18 வயதுக்கு உட்பட்டவராக இருந்தால், உயர் நீதிமன்றம் நியமிக்கும் காப்பாளர் மூலம் தான் சொத்துப் பரிமாற்றம் நிகழ வேண்டும்.



    எப்போதும் சொத்தின் மூல ஆவணத்தை மட்டுமே நம்ப வேண்டும். எனவே, மூல ஆவணத்தைப் பார்க்காமல் முன்பணம் செலுத்த வேண்டாம். மூல ஆவணம் இல்லை என்றால் சொத்து அடமானத்தில் வைக்கப்பட்டிருக்க வாய்ப்புண்டு. அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடு வாங்கும்போது, மூல ஆவணம் அடமானத்தில் இருந்தாலும்கூட, நீங்கள் வாங்கும் வீட்டின் மீது வங்கிக்கு எந்த உரிமையும் இல்லையென்று சான்றிதழ் பெற்றுக்கொள்ள வேண்டும்.

    அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டுவதற்கான அனுமதி, வரைபட அனுமதி உள்பட அனைத்து விதமான அனுமதிகளையும் சரிபார்க்க வேண்டும். அனுமதி பெற்ற வரைபடத்தை மீறி கட்டிடம் கட்டப்பட்டிருந்தால், பின்னாளில் பிரச்சினைகள் எழும். சலுகை விலையில் கிடைக்கிறது என கருதி அவசர அவசரமாக வாங்கி, அவதிப்படுவதை தவிருங்கள். பிரச்சினை வரும் போது பார்த்துக்கொள்ளலாம் என இந்த வி‌ஷயத்தில் அலட்சியமாக இருக்க வேண்டாம்.

    அனுமதிக்கப்பட்ட அளவைவிட அரையடி அதிகம் இருந்தாலும் பிரச்சினைதான். பத்திரப்பதிவுக்கு கால அவகாசம் தேவைப்படும் பட்சத்தில், விற்பனை ஒப்பந்தம் செய்து கொள்வது நல்லது. விற்பனை ஒப்பந்தத்தில் முன்பணம், விற்பனை தொகை, கால அவகாசம், நீட்டிப்புக்கான நிபந்தனைகள், விற்பனை தவறும் பட்சத்தில் தரப்பட வேண்டிய இழப்பீடு ஆகிய அனைத்தையும் குறிப்பிட வேண்டும்.

    நிறுவனங்களிடம் இருந்து சொத்து வாங்கும்போது உரிமை, உடைமைகளுடன், அந்த நிறுவனத்தின் விதிமுறைகளை பற்றியும் தெரிந்துக்கொள்ள வேண்டும். அதேபோல வில்லங்கச் சான்றிதழ் 30 ஆண்டுகளுக்கு எடுத்துக் கொள்வது உத்தமம்.
    சொத்துக்களை பெற்றுக்கொண்டு பெற்றோரை மகன்கள் தவிக்கவிட்டனர். இதையடுத்து பத்திரப்பதிவை ரத்து செய்து கலெக்டர் கந்தசாமி நடவடிக்கை எடுத்தார்.
    திருவண்ணாமலை :

    திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் தாலுகா வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 75), விவசாயி. இவரது மனைவி பூங்காவனம் (63). இவர்களது மகன்கள் பழனி (40), செல்வம் (37). பழனி அரசு பஸ் கண்டக்டராகவும், செல்வம் கட்டிட தொழிலாளியாகவும் வேலை செய்து வருகின்றனர். இருவருக்கும் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர்.

    கண்ணன் தனது 5 ஏக்கர் நிலத்தை கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு 2 மகன்களுக்கும் சரி பாதியாக பிரித்து வழங்கி ‘செட்டில்மென்ட்’ பத்திரப்பதிவு மூலம் எழுதி வைத்தார்.

    அதன்பிறகு மகன்களின் நடவடிக்கைகள் மாறி, பெற்றோருக்கு சாப்பாடு போடாமல் தவிக்கவிட்டு உள்ளனர். இளைய மகன் செல்வம் அவரது தந்தையை அடித்து துன்புறுத்தியதாகவும் தெரிகிறது.

    இதனால் மனமுடைந்த கண்ணனும், அவரது மனைவி பூங்காவனமும் கடந்த வாரம் நடந்த மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் கலெக்டர் கந்தசாமியிடம் புகார் மனு அளித்தனர். இந்த மனு குறித்து விசாரிக்க உதவி கலெக்டர் (பொறுப்பு) உமாமகேஸ்வரியிடம் கலெக்டர் வழங்கினார். பின்னர் அவர் கண்ணனின் 2 மகன்களையும் அழைத்து விசாரணை நடத்தினார்.

    அப்போது மூத்த மகன் பழனி மட்டும் பெற்றோருக்கு ஜீவனாம்சம் தருவதாக தெரிவித்து உள்ளார். இளைய மகன் செல்வம் சொத்துக்களை தர மறுத்துவிட்டார். இதுதொடர்பான அறிக்கையை கலெக்டரிடம் உதவி கலெக்டர் ஒப்படைத்தார்.

    இதையடுத்து பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலச்சட்டத்தின் கீழ் கண்ணன் அவரது மகன்களுக்கு தான செட்டில்மென்ட் பத்திரப்பதிவு செய்ததை ரத்து செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். அதன்படி, பத்திரப்பதிவு ரத்து செய்யப்பட்டது. இளைய மகன் செல்வம் வேறொருவருக்கு விற்ற நிலத்தின் உரிமமும் ரத்து செய்யப்பட்டது.

    இதையடுத்து மீண்டும் 5 ஏக்கர் நிலமும் விவசாயி கண்ணன் பெயரில் 2.15 ஏக்கரும், பூங்காவனம் பெயரில் 2.85 ஏக்கரும் பட்டா மாற்றம் செய்யப்பட்டது.

    தொடர்ந்து கண்ணன், அவரது மனைவி பூங்காவனத்திடம் நிலத்தின் உரிமைக்கான பட்டாவை கலெக்டர் வழங்கினார். கண்ணீர்விட்டு அழுத இருவரும், கலெக்டரிடம் நன்றி தெரிவித்தனர். அப்போது உங்கள் மகன்களால் ஏதேனும் தொந்தரவு ஏற்பட்டால் உடனடியாக தெரிவிக்குமாறு ஆறுதல் கூறினார்.

    பின்னர் கலெக்டர் கூறியதாவது:-

    வயது முதிர்ந்த காலத்தில் பெற்றோரை பாதுகாப்பது மகன்களின் கடமை. பெற்றோரை தவிக்கவிடும் மகன்களுக்கு இது ஒரு பாடமாக அமைய வேண்டும். நிலம் கிடைத்தால் உழைத்து வாழ்வோம் என்ற முதியவர்களின் தன்னம்பிக்கை பாராட்டுக்குரியது. சட்டப்படி சொத்துக்களை மீட்டு ஒப்படைத்திருக்கிறோம். உரிய பாதுகாப்பும் அவர்களுக்கு வழங்கப்படும்.

    இதன்பிறகு தாங்கள் விரும்பும் நபர்களுக்கு இந்த சொத்துக்களை வழங்கும் உரிமை பெற்றோருக்கு கிடைத்திருக்கிறது.

    முதிர்வயதில் இதுபோன்ற துயரத்தில் தவிப்போர் புகார் அளித்தால் உரிய சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும்

    இவ்வாறு அவர் கூறினார். 
    சேர்ந்தமரம் அருகே சொத்தை எழுதி தராததால் மலையில் இருந்து விழுந்து வாலிபர் உயிரை மாய்த்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    புளியங்குடி:

    சுரண்டை அருகே உள்ள கடையாலூருட்டியை சேர்ந்த மகாராஜன் மகன் சேர்ம செல்வன் (வயது20). இவர் கேரளாவில் ஒரு பிளாஸ்டிக் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். நேற்று இவர் சேர்ந்தமரத்தை அடுத்த வீரசிகாமணி விலக்கில் இருந்து பாம்புகோவில் செல்லும் வழியில் மலைக்குன்றின் கீழே ரத்தக்காயங்களுடன் பிணமாக கிடந்தார்.

    இதுபற்றி சேர்ந்தமரம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சேர்மசெல்வன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தினார்கள். சேர்மசெல்வனின் தந்தைக்கு 2 மனைவிகள், 4 மகன்கள் உள்ளனர்.

    இந்த நிலையில் சேர்ம செல்வனின் தந்தை அப்பகுதியில் 10 சென்ட் இடம் வாங்கினாராம். அதில் 5 சென்ட் இடத்தை தனக்கு எழுதி தருமாறு சேர்ம செல்வன் தந்தையிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் மறுத்ததாக தெரிகிறது.

    இதனால் ஏற்பட்ட பிரச்சினையில் வாழ்க்கையில் வெறுப்படைந்து சேர்ம செல்வன் மலையில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. சேர்மசெல்வன் தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    பெங்களூரில் சொத்துக்காக கணவரை கொலை செய்ய திட்டமிட்ட மனைவி மற்றும் 2 மகன்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஓசூர்:

    பெங்களூரு எச்.ஏ.எல். பகுதிக்குட்பட்ட காளப்பா லேஅவுட் பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரா(48). இவரது மனைவி முனிரத்தினம்மா(45). இவர்களுக்கு சேதன்(20), அபிஷேக்(19) என்ற இரு மகன்கள் உள்ளனர். ராமச்சந்திரா, சரக்கு வேன் டிரைவர் ஆவார்.

    இந்த நிலையில், பெங்களூரு அருகே கித்தேகானஹள்ளி என்ற இடத்தில், ராமச்சந்திரா 8 வீடுகளை கட்டி வாடகைக்கு விட்டார். இந்த சொத்தை, மனைவி முனிரத்தினம்மா தங்களுக்கு தருமாறு கணவரிடம் கேட்டார்.

    இதுதொடர்பாக கணவன்-மனைவியிடையே பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து, முனி ரத்தினம்மா கோபித்துக் கொண்டு, தனது 2 மகன்களையும் அழைத்துக் கொண்டு தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். அத்துடன் சொத்துக்காக, நீதிமன்றத்தில் வழக்கும் போட்டார்.

    கடந்த 5-ந் தேதி இரவு, சில மர்ம நபர்கள், ராமச்சந்திராவை தொடர்பு கொண்டு, வாடகைக்கு வேன் வேண்டும் என்றும், எச்.ஏ.எல். கேட் அருகே வருமாறும் கூறினார்கள். இதையடுத்து அங்கு சென்ற ராமச்சந்திராவின் கை, கால்களை கட்டிப்போட்டும், தடி மற்றும் இரும்பு கம்பியால் தாக்கியும் வேனில் கொண்டு சென்றனர்.

    பின்னர், கித்தேகானஹள்ளியில் உள்ள ஒரு வீட்டில் அவரை அடைத்து வைத்து சொத்தை முனிரத்திம்மாவின் பெயரில் எழுதி தருமாறு கொலை மிரட்டல் விடுத்து, சித்ரவதை செய்தனர்.

    நேற்று முன்தினம் இரவு, ராமச்சந்திராவின் கதறல் சத்தம் கேட்டு அந்த வழியாக சென்ற ஒருவர், ராமச்சந்திரா அடைத்து வைக்கப்பட்டிருப்பது கண்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து அங்கு விரைந்து வந்த எச்.ஏ.எல். போலீசார், ராமச்சந்திராவை மீட்டனர். மேலும் அவர் தன்னை கொலை செய்ய திட்டமிட்டதாக புகார் அளித்ததன்பேரில், மனைவி முனிரத்தினம்மா மற்றும் 2 மகன்கள், உறவினர் சிவகுமார்(42) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.

    இச்சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. #tamilnews
    மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி வழக்கு தொடர்பாக மெகுல் சோக்சியின் சொத்துகளை முடக்கும் நடவடிக்கை தொடரும் என நிதி மோசடி தடுப்பு சட்ட ஆணையம் தெரிவித்துள்ளது. #PNBFraud #MehulChoksi #PMLA
    புதுடெல்லி:

    மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளை மூலம் பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி மற்றும் அவரது உறவினரும், தொழிலதிபருமான மெகுல் சோக்சி ஆகியோர் ரூ.13 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டனர். இது தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை அமைப்புகள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.



    இதில் நிதி மோசடி தடுப்பு சட்டத்தின் (பி.எம்.எல்.ஏ.) கீழ் இருவரின் சொத்துகளையும் அமலாக்கத்துறை முடக்கி வருகிறது. இதில் மெகுல் சோக்சியின் அடுக்குமாடி வீடுகள், அலுவலகங்கள், நிலம் என ரூ.1,210 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டன. இந்த நடவடிக்கையை பி.எம்.எல்.ஏ. ஆணையம் விசாரித்தது.

    இதில் அமலாக்கத்துறை அளித்த சான்றுகள் மற்றும் விண்ணப்பங்களை பரிசீலித்த இந்த ஆணையம், முடக்கப்பட்ட மெகுல் சோக்சியின் சொத்துகள் அனைத்தும் பணமோசடி சொத்துகள் தான் என்ற முடிவுக்கு வந்துள்ளதாக அறிவித்து உள்ளது. எனவே இந்த முடக்க நடவடிக்கை தொடர வேண்டும் என உத்தரவிடுவதாகவும் ஆணையம் அறிவித்தது.

    மெகுல் சோக்சியின் முடக்கப்பட்ட சொத்துகளில், விழுப்புரத்தில் உள்ள நிலமும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.  #PNBFraud #MehulChoksi #PMLA
    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் வெளி மாநிலத்தவர்கள் சொத்து வாங்குவதை தடுக்கும் 35-ஏ சட்டப்பிரிவை நீக்குவது தொடர்பான வழக்கு விசாரணையை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது. #Article35A #SCpostshearing
    புதுடெல்லி:

    இந்திய ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் கடந்த 1954-ம் ஆண்டு இந்திய அரசியலமைப்பு  சட்ட சாசனத்தில் 35-ஏ என்னும் சட்டப்பிரிவு இணைக்கப்பட்டது. 

    இந்தப் பிரிவின் மூலம் ஜம்மூ- காஷ்மீர் மாநிலத்தைச் சேராதவர்கள் அங்கு நிலம் வாங்க முடியாதென்று விதியுள்ளது. அதேபோல, அம்மாநில பெண்கள் வெளி மாநில ஆண்களை திருமணம் முடித்தால், அங்கு சொத்துரிமை கோர முடியாது என்றும் விதி வகுக்கப்பட்டுள்ளது. 

    இந்த 35-ஏ பிரிவை நீக்குவது தொடர்பாக தொடுக்கப்பட்டுள்ள வழக்கு சுப்ரீம் கோர்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்ததில் இருந்தே அம்மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. 

    இதற்கிடையில், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பஞ்சாயத்து மற்றும் உள்ளாட்சி தேர்தல்கள் விரைவில் நடைபெறவுள்ளதால் இந்த வழக்கின் விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என அம்மாநில அரசின் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த வழக்கு தலைமை நீதிபதி திபக் மிஸ்ரா, ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோரை கொண்ட அமர்வின் முன்னர் விசாரணைக்கு வந்தபோது காஷ்மீர் அரசின் கோரிக்கை தொடர்பாக மத்திய அரசு மற்றும் வழக்கு தொடர்ந்தவர்களின் கருத்தை சுப்ரீம் கோர்ட் கேட்டிருந்தது. 

    அவர்களின் கருத்தை இன்று பரிசீலித்த நீதிபதிகள் இவ்வழக்கி மறுவிசாரணையை ஜனவரி மாதம் இரண்டாம் வாரத்துக்கு ஒத்திவைத்தனர். #Article35A #SCpostshearing
    பாகிஸ்தானில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் முகமது உசேனின் சொத்து மதிப்பு ரூ.40 ஆயிரத்து 300 கோடி என தனது வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளார். #MohammedHussain #Pakistanelections
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் வருகிற ஜூலை 25-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடக்கிறது. அதில் முஷாபர்கார் என்.ஏ.-182 தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக முகமது உசேன் என்கிற முன்னா ஷேக் போட்டியிடுகிறார்.

    இவர் தனது வேட்பு மனுவில் சொத்து மதிப்பு ரூ.40 ஆயிரத்து 300 கோடி என குறிப்பிட்டுள்ளார். அதில் 300 ஏக்கர் நிலம், மற்றும் தோட்டங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    3 வீடுகள் மற்றும் இதற்கான வீட்டு உபயோக பொருட்கள் இருப்பதாகவும், இவற்றுக்கு இதுவரை வரி செலுத்தவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. இவரைப்போன்று எந்த ஒரு அரசியல்வாதியும் தனது சொத்து விவரத்தை வெளிப்படையாக கூறியதில்லை.



    இதுகுறித்து அவர் கூறும்போது, “தேர்தலில் போட்டியிடும் அரசியல்வாதிகள் தங்களது சொத்து மதிப்பை பொதுமக்களிடம் தெரிவிக்க வேண்டும். அதன்படி நான் எனது உண்மையான சொத்து விவரத்தை வெளிப்படையாக கூறியிருக்கிறேன்.

    அதுபோன்று பாகிஸ்தானில் உள்ள அனைத்து அரசியல்வாதிகளும் தங்களது சொத்து விவரங்களை வெளியிட தலைமை நீதிபதி மியான் சாகிப் நிசார் உத்தரவிட வேண்டும்’ என கோரிக்கை விடுத்துள்ளார். #MohammedHussain #Pakistanelections
    வெளிநாடுகளில் உள்ள சொத்துகள் தொடர்பாக கணக்கு சமர்ப்பிக்காத கார்த்தி சிதம்பரத்தின் மீது வருமான வரித்துறை விசாரித்து வரும் வழக்கில் அவருக்கு சென்னை ஐகோர்ட் முன் ஜாமின் அளித்துள்ளது. #KarthiChidambaram #anticipatorybail #BlackMoneycase
    சென்னை:

    சட்டத்தை மீறிய வகையில் வெளிநாடுகளில் சொத்து வாங்கியது தொடர்பாக கணக்குகளை சமர்ப்பிக்காத கார்த்தி சிதம்பரத்தின் மீது வருமான வரித்துறை அதிகாரிகள் கருப்புப் பண தடுப்பு சடத்தின்கீழ் கடந்த ஆண்டு நடவடிக்கை எடுத்தனர்.

    இந்த விவாகரம் தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் முன்னிலையில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்குமாறு மூன்று முறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராக தவறியதால் பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டதாக தெரிகிறது.

    இதையடுத்து, போலீசார் தன்னை கைது செய்யாமல் இருக்க நேற்று நள்ளிரவு சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி வீட்டுக்கு சென்ற கார்த்தி சிதம்பரம் தனது வக்கீல்கள் ஏ.ஆர்.எல். சுந்தரேஷ், சதிஷ் பராசரன் 
    மூலம் முன் ஜாமின் மனு தாக்கல் செய்தார்.

    கார்த்தி சிதம்பரத்தின் சார்பில் முன் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்ட தகவல் அறிந்து வருமான வரித்துறை வக்கீலும் அதிகாரிகளும் நள்ளிரவு நேரத்தில் நீதிபதியின் வீட்டுக்கு வந்து சேர்ந்தனர்.

    வெளிநாடு செல்ல சுப்ரீம் கோர்ட் கடந்த மாதம் 18-ம் தேதி அனுமதி அளித்து உத்தரவிட்டிருந்த நிலையில், தனது மனைவி, குழந்தைகளுடன் இன்று (ஞாயிற்றுக்கிழமை) புறப்பட்டுச் செல்ல தயாராகும் நிலையில் தனக்கெதிராக பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக நீதிபதியிடம் கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.

    வெளிநாட்டு பயணம் முடிந்து இந்தியா திரும்பியதும், வரும் 28-ம் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் முன்னிலையில் ஆஜராக தயாராக இருப்பதாகவும் கார்த்தி சிதம்பரம் குறிப்பிட்டார். 

    இதையே எழுத்துமூலமான வாக்குறுதியாக பதிவு செய்யுமாறு கூறிய நீதிபதி இந்திரா பானர்ஜி, கார்த்தி சிதம்பரம் வெளிநாட்டில் இருந்து திரும்பி வரும்வரை அவருக்கு எதிராக பிறப்பித்த பிடி வாரண்டை நிறுத்தி வைக்குமாறு வருமான வரித்துறை வக்கீல்களுக்கு உத்தரவிட்டார். பிடி வாரண்ட் நிறுத்தப்பட்டதை சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு தெரிவிக்குமாறும் அறிவுறுத்தினார். #KarthiChidambaram #anticipatorybail  #BlackMoneycase
    ×