என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சஸ்பெண்டு"
ஆம்பூர் நகராட்சி கமிஷனர் பார்த்தசாரதி (45), வாணியம்பாடி நகராட்சி கமிஷனர் பொறுப்பையும் கவனித்து வந்தார். இவர் உயர் அதிகாரிகளை அவதூறாக பேசியதாக நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் அலுவலகத்துக்கு புகார் சென்றது.
இதுகுறித்து, விசாரணையில் பார்த்தசாரதி மீதான புகார் நிரூபணமாகியுள்ளது.
இதையடுத்து பார்த்த சாரதியை சஸ்பெண்டு செய்து நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்த ஆணை சென்னையில் இருந்து பேக்ஸ் மூலம் ஆம்பூர் நகராட்சி அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
நகராட்சி கமிஷனர் சஸ்பெண்டு செய்யப்பட்ட சம்பவம் ஆம்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியது. #Suspend
காஞ்சீபுரம் நகராட்சியில் கமிஷனராக பணியாற்றி வந்தவர் சர்தார். இவர் கடந்த 2016-ம் ஆண்டு ஊட்டி நகராட்சியில் கமிஷனராக வேலை பார்த்த போது, கட்டிட அனுமதி, வரைபட அனுமதி போன்றவற்றில் முறைகேடு நடந்ததாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார்கள் வந்தன.
அப்போது அதே அலுவலகத்தில் மேலாளராக பார்வதி பணியாற்றினார். தற்போது அவர் கூடலூர் 2-ம் நிலை நகராட்சியில் கமிஷனராக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் காஞ்சீபுரம் நகராட்சி அலுவலகம் மற்றும் சர்தாரின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.
அதேபோல் பார்வதி தங்கி இருந்த நகராட்சி குடியிருப்பிலும் சோதனை நடத்தப்பட்டது. இதுபற்றி விரிவான விசாரணை நடத்தி லஞ்ச ஒழிப்புத்துறை அரசுக்கு அறிக்கை அனுப்பியது.
அதன்படி காஞ்சீபுரம் கமிஷனர் சர்தார், கூடலூர் நகராட்சி கமிஷனர் பார்வதி ஆகிய இருவரையும் சஸ்பெண்டு செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
காஞ்சீபுரம் நகராட்சி பொறுப்புக்கு செயற் பொறியாளர் மகேந்திரன் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
கூடலூர் நகராட்சி கமிஷனர் பார்வதியிடம் விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் சார்பில் அனுமதி கோரப்பட்டு உள்ளதால் விசாரணைக்கு ஏதுவாக அவர் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளதாக நகராட்சிகளின் மண்டல நிர்வாக இயக்குனர் சுல்தான் தெரிவித்து உள்ளார்.
எனவே பார்வதியிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விரைவில் விசாரணை நடத்துவார்கள் என கூறப்படுகிறது. இதேபோல் சர்தாரிடமும் விசாரிக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். #tamilnews
கோவை மாவட்டம் வால்பாறையில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது.
சம்பவத்தன்று இப்பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் மாணவர்கள் பள்ளி மைதானத்தில் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென மாணவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த மாணவர்கள் மோதலில் ஈடுபட்டு ஒருவரையொருவர் அடித்து உதைத்து தாக்கிக் கொண்டனர்.
இதையறிந்த தலைமை ஆசிரியர் சிவன்ராஜ், மோதலில் ஈடுபட்ட மாணவர்களிடம் விசாரித்தார். அவர்களின் பெற்றோர்களையும் அழைத்து பேசினார். பின்னர் மாணவர்களின் பெற்றோர்கள் இனிமேல் இதுபோன்று நடக்காது என எழுத்து மூலம் தெரிவித்தனர்.
இந்நிலையில் பள்ளி மாணவர்களுக்கு போலீசாரின் உதவியுடன் உரிய அறிவுரைகள் வழங்கி அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கப்பட்டது. இருந்தாலும் பிற மாணவர்களுக்கு கட்டுப்பாடும், ஒழுக்கமும் வர வேண்டும் என்பதற்காக பள்ளியின் சார்பில் 12 மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மோதலில் ஈடுபட்ட பிளஸ்-2 மாணவர்கள் 12 பேரையும் 10 நாட்களுக்கு இடைநீக்கம்(சஸ்பெண்டு)செய்து தலைமை ஆசிரியர் சிவன்ராஜ் உத்தரவிட்டார்.
இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அய்யண்ணன் கூறுகையில், பிற மாணவர்களுக்கு கட்டுப்பாடும், ஒழுக்கமும் வர வேண்டும் என்பதற்காக மட்டுமே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்களது தவறை உணர்ந்துள்ளதால் அடுத்த வாரம் முதல் மீண்டும் வகுப்புக்கு செல்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றார். #tamilnews
இலங்கை கிரிக்கெட் அணி சூதாட்ட பிரச்சினையில் சிக்கி தவிக்கிறது.
அந்நாட்டின் முன்னாள் அதிரடி வீரரும், முன்னாள் தேர்வுக்குழு தலைவருமான ஜெயசூர்யா மீது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஊழல் புகாரை கூறி இருந்தது. இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு உத்தரவிட்டது.
அதைத்தொடர்ந்து கடந்த 31-ந்தேதி இலங்கை முன்னாள் வேகப்பந்து வீரரும், அணியின் பந்துவீச்சு பயிற்சியாளருமான நுவன் சொய்சா சிக்கினார். சூதாட்டத்தில் ஈடுபட்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு சஸ்பெண்டு செய்யப்பட்டார். இந்த நிலையில் இலங்கை முன்னாள் வீரர் தில்கரா லோகுதிகே மீதும் மேட்ச் பிக்சிங் புகார் கூறப்பட்டு அவரை ஐ.சி.சி. சஸ்பெண்டு செய்துள்ளது.
கடந்த ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்சில் 10 ஓவர் ‘லீக்’ போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டியில் ஆல்ரவுண்டரான தில்கரா சூதாட்டத்தில் ஈடுபட்டார். இது தொடர்பாக ஐ.சி.சி. ஊழல் தடுப்புக்குழு விசாரித்தது.
ஆட்டத்தின் போக்கை மாற்றி முடிவை நிர்ணயம் செய்தல், வீரர்களை நேரடியாக தொடர்பு கொண்டு விதிமீறலில் ஈடுபட வலியுறுத்தியது போன்ற புகார்கள் அடிப்படையில் அவரை சஸ்பெண்டு செய்து உள்ளது.
ஆட்டத்தில் விளையாடாமலேயே தில்கரா முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார். இந்த சூதாட்ட குற்றச்சாட்டு குறித்து அவர் 14 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க ஐ.சி.சி. அவகாசம் வழங்கி உள்ளது.
38 வயதான தில்கரா 9 ஒருநாள் ஆட்டம் மற்றும் இரண்டு 20 ஓவர் சர்வதேச போட்டியில் விளையாடி இருக்கிறார். #ICC #DilharaLokuhettige
வேலூர்:
வேலூர்- திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் (ஆவின்) வேலூர் சத்துவாச்சாரியில் செயல்பட்டு வருகிறது. இங்கு பொதுமேலாளராக (பொறுப்பு) பணியாற்றி வந்தவர் கே.எஸ்.முரளிபிரசாத் (வயது 55). இவர் தனக்கு கீழ் பணியாற்றும் தொழிலாளர்கள் 11 பேரிடம், அவர்களுக்கு கிடைக்கப்பெற்ற சம்பள நிலுவை தொகையில் கமிஷன் கேட்டுள்ளார்.
அதற்கான கமிஷனை செயலர் (பொறியியல்) சேகர் என்பவர் வசூல் செய்து நேற்று முன்தினம் பொது மேலாளர் அலுவலகத்தில் வழங்கியதாக தெரிகிறது. இதுகுறித்து முன்கூட்டியே தகவல் அறிந்த வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் அங்கு சென்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது முரளிபிரசாத் காரில் இருந்த ரூ.11 லட்சம், சேகரிடம் இருந்து ரூ.2 லட்சத்து 85 ஆயிரம், அருகில் தோட்டத்தில் அனாதையாக கிடந்த ரூ.1 லட்சம் என ரூ.14 லட்சத்து 85 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.
இந்த சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் முரளிபிரசாத்தை சென்னை ஆவின் நிர்வாக இயக்குனர் காமராஜ் சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார். #Vigilance
இலங்கை கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் நுவான் ஜோய்சா. முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான இவர் மீது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) சூதாட்ட குற்றச்சாட்டை பதிவு செய்தது. இதையடுத்து அவரை சஸ்பெண்டு செய்து ஐ.சி.சி. உத்தரவிட்டுள்ளது.
நுவான் ஜோய்சா மீது மேட்ச் பிக்சிங் மற்றும் அணியின் தகவல்களை பலருக்கு பரிமாறியதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அவர் இன்றிலிருந்து 14 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க ஐ.சி.சி. உத்தரவிட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் ஊழலில் சிக்கி திணறி வருகிறது. ஏற்கனவே முன்னாள் கேப்டனும், தேர்வுக்குழு தலைவருமான ஜெய சூரியா மீது ஊழல் குற்றச்சாட்டு கூறப்பட்டது. அவர் சூதாட்டம் தொடர்பான விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்று கூறப்பட்டது.
இதே போல் காலே மைதான ஆடுகள பராமரிப்பாளர் ஜெயநந்தா வர்ண வீராவுக்கு ஊழல் தடுப்பு விசாரணைக்கு சரியாக ஒத்துழைக்காத காரணத்தால் 3 ஆண்டு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இலங்கை அணியின் பந்து வீச்சு பயிற்சியாளரும் ஊழல் குற்றச்சாட்டில் சஸ்பெண்டு செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. #ICC #NuwanZoysa
போரூர்:
கோயம்பேடு பஸ்நிலைய போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருபவர் கலைவாணன். கடந்த 18-ந் தேதி இவர் கோயம்பேடு 100 அடி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டார்.
அப்போது பட்டாசு ஏற்றி வந்த மினி லாரியை நிறுத்தி விசாரித்தார். போதிய ஆவணங்கள் இல்லை என்று கூறி லாரியில் இருந்த ரூ. 15 ஆயிரம் மதிப்புள்ள பட்டாசு பண்டல்களை போலீஸ்காரர் கலைவாணன் எடுத்து சென்று விட்டார்.
இது குறித்து லாரி உரிமையாளர், கோயம்பேடு உதவி கமிஷனரிடம் புகார் அளித்தார். விசாரணையில் போலீஸ்காரர் கலைவாணன், லாரி டிரைவரை மிரட்டி பட்டாசு பண்டல்களை எடுத்து சென்றது தெரிந்தது.
இதையடுத்து போலீஸ்காரர் கலைவாணனை சஸ்பெண்டு செய்து அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
ஹாங்காங் நாட்டு கிரிக்கெட் வீரர்கள் நதீம் அகமது, இர்பான் அகமது (சகோதரர்கள்), ஹசீப் அம்ஜத் ஆகியோர் சூதாட்ட குற்றச்சாட்டில் சிக்கி உள்ளனர்.
இவர்கள் 3 பேரும் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டது உறுதியானது. இதை தொடர்ந்து இந்த 3 வீரர்களையும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ‘சஸ்பெண்டு’ செய்துள்ளது.
இர்பான், நதீம் ஆகியோர் 2016-ம் ஆண்டு 20 ஓவர் உலககோப்பையிலும் சூதாட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர். இதில் நதீம் அகமது சமீபத்தில் நடந்த ஆகிய கோப்பை கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடியவர் ஆவார்.
பாகிஸ்தானை சேர்ந்த இந்த 3 வீரர்களும் 2 வார காலத்துக்கு சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளனர். #ICC #MatchFixing
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பீலேரு பகுதியை சேர்ந்தவர் சம்யுக்தா (வயது 27). இவருக்கும் இவரது கணவருக்கும் இடையே குடும்ப பிரச்னை நிலவியது. இதனால் கணவரின் குடும்பத்தார் மீது பீலேரு போலீஸ் நிலையத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சம்யுக்தா புகார் அளித்தார்.
அப்போது அங்கு இன்ஸ்பெக்டர் தேஜோமூர்த்தி இருந்தார். புகாரை பெற்ற இன்ஸ்பெக்டர் இளம்பெண்ணின் செல்போன் நம்பரை வாங்கி கொண்டார்.
அதன் பின்பு இளம்பெண்ணுக்கு போனில் பேசிய இன்ஸ்பெக்டர் உனக்கு சாதகமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால் என்னுடைய ஆசைக்கு இணங்க வேண்டும் என்று செல்போனில் பேசி வந்தார். வாட்ஸ்- அப்பிலும் தகவல் அனுப்பியுள்ளார். வீட்டுக்கும் சென்று அடிக்கடி செக்ஸ் தொல்லை கொடுத்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று காலை இளம்பெண்ணை செல்போனில் தொடர்பு கொண்ட தேஜோமூர்த்தி திருமலை பிரம்மோற்சவ விழா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளேன். அதனால் எனக்கு இங்கு ரூம் கொடுத்து உள்ளனர். உடனே புறப்பட்டு திருமலைக்கு வரவேண்டும் என கட்டாயப்படுத்தி உள்ளார்.
இன்ஸ்பெக்டரின் தொல்லை அதிகரித்ததால் ஆவேசமடைந்த சம்யுக்தா திருப்பதிக்கு வந்து டி.ஐ.ஜி. சீனிவாசராவை சந்தித்து இன்ஸ்பெக்டர் செல்போனில் பேசிய ஆடியோ மற்றும் வாட்ஸ் அப்பில் அனுப்பிய தகவலை கொடுத்து புகார் செய்தார்.
இதுகுறித்து விசாரணை நடத்திய டி.ஐ.ஜி. சீனிவாசராவ் இன்ஸ்பெக்டர் தேஜோ மூர்த்தியை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார். இதுபற்றி தகவல் அறிந்த இன்ஸ்பெக்டர் தலைமறைவாகி விட்டார். #tamilnews
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பட்டு கோணம்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 35 மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள்.
பள்ளியின் தலைமை ஆசிரியராக பாபு (வயது51) என்பவர் இருந்து வருகிறார். இவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாகவும், மாணவ, மாணவிகளை தகாத வார்த்தைகளால் திட்டியும் அடித்தும் வந்துள்ளதாகவும் 1077 என்ற அவசர எண்ணுக்கு புகார் வந்தது. அதன் அடிப்படையில், முதன்மை கல்வி அதிகாரி ராமசாமி, மாவட்ட கல்வி அதிகாரியான குழந்தைவேலுவை விசாரிக்க உத்தரவிட்டார்.
நேற்று பாப்பி ரெட்டிப்பட்டி வட்டார கல்வி அதிகாரி, உமாதேவி மற்றும் அதிகாரிகள் ஆகியோர் பள்ளிக்கு சென்று அங்கு படிக்கும் 35 மாணவ, மாணவிகளிடம் விசாரணை நடத்தினர். அக்கம் பக்கத்தில் உள்ள பொதுமக்களிடமும், மாணவிகளின் பெற்றோரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில் தலைமை ஆசிரியர் பாபு (வயது51) மாணவிகள் சிலரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது.
மேலும் அவர் வகுப்பறையில் புகையிலை பயன்படுத்தி வந்ததும் தெரியவந்தது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி மாணவ, மாணவிகளின் பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டும் போராட்டம் நடத்தினார்கள்.
அதைத் தொடர்ந்து விசாரணை நடத்திய குழுவினர் முதன்மை கல்வி அதிகாரி ராமசாமியிடம் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தனர். இதையடுத்து தலைமை ஆசிரியர் பாபுவை சஸ்பெண்ட் செய்ய அவர் உத்தரவிட்டார்.
இது பற்றி முதன்மை கல்வி அதிகாரி ராமசாமி கூறியதாவது:-
எங்களுக்கு வந்த புகாரின் அடிப்படையில் தலைமை ஆசிரியரின் நடவடிக்கை குறித்து மாணவிகளிடம் தனித்தனியே விசாரணை நடத்தப்பட்டது. இதில் பாலியல் தொல்லையில் அவர் ஈடுபட்டது உண்மையென தெரியவந்தது. இதையடுத்து அவரை சஸ்பெண்ட் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளேன். இன்று அதற்கான கடிதம் தலைமை ஆசிரியர் பாபுவிடம் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
வேலூர் சத்துவாச்சாரியில் வேலூர் மண்டல நகர் ஊரமைப்பு துணை இயக்குனர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு மனைப்பிரிவுகளுக்கு அங்கீகாரம் அளித்தல், தொழிற்சாலைகள், நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் போன்றவற்றிற்கு கட்டிட வரைபட ஒப்புதல் வழங்குதல் உள்பட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த அலுவலகத்தில் முறையற்ற பணப்பரிமாற்றம் நடைபெறுவதாக வந்த தகவலை தொடர்ந்து கடந்த 7-ந் தேதி இரவு லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ரூ.3 லட்சத்து 28 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
மேலும் துணை இயக்குனர் சுப்பிரமணியன் வள்ளலார் டபுள்ரோடு பகுதியில் வாடகைக்கு ஒரு வீடு எடுத்து அலுவலக பணிகளை மேற்கொண்டு வந்ததும் தெரியவந்தது. அந்த வீட்டிலும் சில ஆவணங்களை போலீசார் கைப்பற்றினர். இந்த நிலையில் ரூ.3 லட்சத்து 28 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது மற்றும் தனியாக அலுவலகம் நடத்தியது தொடர்பாக துணை இயக்குனர் சுப்பிரமணியன், அலுவலக மேற்பார்வையாளர் சதாசிவம் ஆகிய இருவரும் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இதில் பாலாஜி உள்ளாடையில் மறைத்து வைத்து கஞ்சா கடத்தி வந்ததும், அதனை சிறையில் உள்ள கைதிக்கு கொடுக்க இருந்ததும் தெரியவந்தது.
இது குறித்து புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலாஜியை கைது செய்தனர். விசாரணையில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள போதைப்பொருள் கடத்தல் கும்பல் ஏஜெண்டாக செயல்பட்ட அருண் செல்வராஜ் என்பவரிடம் ரூ.2 ஆயிரம் வாங்கிக் கொண்டு காவலர் பாலாஜி கஞ்சா கடத்தி வந்தது தெரிந்தது.
இதற்கிடையே சிறைக் காவலர் பாலாஜியை ‘சஸ்பெண்டு’ செய்து ஜெயில் சூப்பிரண்டு செந்தாமரைக் கண்ணன் உத்தரவிட்டுள்ளார். பாலாஜியின் சொந்த ஊர் வேலூர் மாவட்டம் வாணியம்பாடி ஆகும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்