என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "விருதுநகர்"
விருதுநகர் பழைய அருப்புக்கோட்டை சாலையில் உள்ள செந்திவிநாயகபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். பருப்பு மில் தொழிலாளி.
இவரது மனைவி கலைச்செல்வி. இவர்களது மகன்கள் ஹரிகரன் (வயது 14), ஆதிசேஷன் (10) இருவரும் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 9 மற்றும் 5-ம் வகுப்பு படித்து வந்தனர்.
விருதுநகரில் தற்போது பங்குனி பொங்கல் திருவிழா நடைபெற்று வருகிறது. இதற்காக கலைச்செல்வியின் தம்பி சோலைமுருகன் (40) மதுரையில் இருந்து வந்திருந்தார்.
அவர் இன்று காலை மருமகன்கள் 2 பேரையும் அழைத்துக்கொண்டு விருதுநகர் குல்லூர்சந்தை அணைக்கு சென்றார். அங்கு சிலர் குளித்துக் கொண்டிருந்தனர். அதனை பார்த்ததும் சோலைமுருகன் உள்பட 3 பேரும் குளிக்க ஆசைப்பட்டனர்.
அதன்படி சோலை முருகன், ஹரிகரன், ஆதிசேஷன் அகியோர் தண்ணீரில் இறங்கி குளித்தனர். அப்போது ஆழமான இடத்திற்கு சென்றதால் 3 பேரும் தண்ணீரில் மூழ்கினர்.
அவர்களை அங்கு குளித்துக்கொண்டிருந்தவர்கள் மீட்க முயன்றனர். ஆனால் அதற்குள் சோலை முருகன் உள்பட 3 பேரும் நீரில் மூச்சு திணறி இறந்தனர். அவர்களது உடலையே மீட்க முடிந்தது. பலியான சோலைமுருகன், மதுரையில் பேக்கரியில் வேலை பார்த்து வந்தார். சூழக்கரை போலீசார் உடல்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். #DrowningDeath
விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் பணியாற்றும் 10 சப்-இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
வீரசோழனில் பணியாற்றிய திருக்கண்ணன் மல்லாங்கிணறு போலீஸ் நிலையத்திற்கும், வன்னியம்பட்டியில் பணியாற்றிய கார்த்திகேயன் வீரசோழனுக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
நத்தம்பட்டியில் பணியாற்றிய சந்தோஷ் அருப்புக்கோட்டை தாலுகா போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். திருச்சுழி சப்-இன்ஸ்பெக்டர் அசோக், விருதுநகர் மேற்கு நிலையத்திற்கும், வெம்பக்கோட்டை அந்தோணி செல்வராஜ் சூலக்கரைக்கும், ராஜபாளையம் வடக்கு நிலைய சப்- இன்ஸ்பெக்டர் சீனிராஜ் வெம்பக்கோட்டைக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
ராஜபாளையம் தெற்கு சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் அம்மாபட்டிக்கும், அருப்புக்கோட்டை டவுன் செந்தில்வேலன், கூமாபட்டி போலீஸ் நிலையத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
விருதுநகர் பஜார் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் வித்யாலட்சுமி சைபர் கிரைம் பிரிவுக்கும், நெடுஞ்சாலை ரோந்துப்பணி சப்- இன்ஸ்பெக்டர் ராம்குமார் மனித உரிமை பிரிவுக்கும் மாற்றப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவுகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன் பிறப்பித்துள்ளார்.
விருதுநகர்:
தேனியைச் சேர்ந்த நாட்டு மருந்து வியாபாரி ஜெயராமன் (வயது 51). வியாபார விஷயமாக பல்வேறு ஊர்களுக்கு செல்வது வழக்கம்.
நேற்று அவர் விருதுநகர் வந்தார். அங்கு நண்பர்களிடம் மோட்டார் சைக்கிளை வாங்கிக் கொண்டு அருப்புக்கோட்டை சாலையில் சென்றார்.
பெரிய வள்ளிக்குளம் விலக்கு பகுதியில் சென்ற போது, பின்னால் தண்ணீர் வேன் வந்தது. அந்த வேன் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட ஜெயராமன் சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் விருதுநகர் கிழக்கு போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
பலியான ஜெயராமன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். விபத்துக்கு காரணமான வேன் டிரைவர் இருக்கன்குடி மயில்வாணன் (48) கைது செய்யப்பட்டார்.
காரியாபட்டி:
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அண்ணாநகர் வீதியைச் சேர்ந்தவர் ஜோசப் (வயது 62) வியாபாரி. கடந்த சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இவர், அதற்கான சிகிச்சை பெற்றார். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட ஜோசப்புக்கு பன்றி காய்ச்சல் இருப்பது பரிசோதனையில் தெரிய வந்தது.
இதற்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று ஜோசப் பரிதாபமாக இறந்தார்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள மேலக்கோட்டையைச் சேர்ந்த கார்த்திகை செல்வம் மகன் யோகேஸ்வரன் (வயது 18). விருதுநகரில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்த இவர், காய்ச்சலால் அவதிப்பட்டார்.
மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றபோது பன்றி காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மாணவன் யோகேஸ்வரன் இறந்தார்.
மதுரை அரசு ஆஸ்பத் திரியில் இதுவரை பன்றி காய்ச்சலுக்கு மட்டும் 16 பேர் பலியாகி உள்ளனர். இது தவிர, வைரஸ் காய்ச்சலுக்கு 121 பேரும், பன்றி காய்ச்சலுக்கு 4 குழந்தைகள் உள்பட 21 பேரும், டெங்கு காய்ச்சலுக்கு 3 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதற்கிடையில் மதுரை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த தேனி மாவட்டம் கடமலைக்குண்டு பகுதியைச் சேர்ந்த பால் ராஜ் மனைவி ஜீவா (48) என்பவரும் பன்றி காய்ச்சலுக்கு பலியாகி உள்ளார்.
சிவகங்கை பாரதியார் நகரைச் சேர்ந்த ஜெகநாதன் (60) என்பவரும் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, பரிதாபமாக இறந்தார். #Swineflu #Dengue
விருதுநகர்:
விருதுநகர் மேற்கு பாண்டியன் காலனியைச் சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன் (வயது 64). இவர் கீழக் கடைத்தெருவில் பார்பர் ஷாப் நடத்தி வருகிறார். இவரது மருமகள் மாரிச்செல்வி அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
அப்போது சோலைக் கவுண்டன்பட்டியைச் சேர்ந்த கார்த்தி (27) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அவருடன் ஏற்பட்ட தொடர்பால் மாரிச்செல்வி, கார்த்தியுடன் சென்று விட்டார்.
இது குறித்து தெரிய வந்ததும் மாரிச்செல்வியின் கணவர் மாரிச்சாமி, கார்த்தியை சந்தித்து தகராறு செய்துள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த கார்த்தி நேற்று சிவசுப்பிரமணியனிடம், உனது மகன் தேவையில்லாமல் தகராறு செய்கிறார்’ என கூறினார்.
அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் கார்த்தி தன்னை தாக்கியதாக விருதுநகர் பஜார் போலீசில் சிவசுப்பிரமணியன் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி கார்த்தியை கைது செய்தனர்.
அரபிக்கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று காலை மழை சற்று ஓய்ந்து இருந்த நிலையில் மாலையில் பல்வேறு இடங்களில் பரவலாக லேசான முதல் மிதமான மழை பெய்தது.
ராமநாதபுரம் நகர், பரமக்குடி, கமுதி, திருவாடானை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நள்ளிரவு முதல் இன்று காலை வரை விடிய, விடிய மழை பெய்தது.
இதனால் தாழ்வான பகுதியில் தண்ணீர் தேங்கியது. சில இடங்களில் இடியுடன் மழை பெய்ததால் மின்தடை ஏற்பட்டது.
ராமேசுவரத்தில் நள்ளிரவு 2 மணி முதல் இன்று காலை வரை பலத்த மழை பெய்தது. பாம்பன், மண்டபம், தங்கச்சிமடம், தனுஷ்கோடி ஆகிய பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
காளையார்கோவில், காரைக்குடி, கல்லல், திருப்பத்தூர், தேவகோட்டை, இளையான்குடி, மானாமதுரை ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இன்று காலையில் மாவட்டத்தின் பல பகுதிகளில் லேசான சாரல் மழை இருந்தது.
மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
திருப்புவனம்- 148.6
தேவகோட்டை- 2.2
காளையார்கோவில்- 9.8
சிங்கம்புணரி- 13.6
விருதுநகர் மாவட்டத்தில் போதிய மழை இல்லாத போதிலும் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி உள்ள ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் அந்த பகுதிகளில் உள்ள 100-க்கும் மேற்பட்ட நீர்நிலைகளில் 75 சதவீதத்துக்கும் மேல் தண்ணீர் நிரம்பி உள்ளது.
ராஜபாளையத்தில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை விடிய, விடிய மழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த மழை காரணமாக அய்யனார்கோவில் ஆறு, முள்ளி ஆறு, பேயனாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூரில் லேசான மழை இருந்தது.
மாவட்டத்தின் உள்பகுதிகளான விருதுநகர், சிவகாசி, சாத்தூர், அருப்புக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் போதிய மழை இல்லாததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
மதுரை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மழை இல்லாத நிலையில் நேற்று மதியம் முதல் ஆங்காங்கே லேசான முதல் மிதமான மழை பெய்தது. நேற்று நள்ளிரவு 1 மணி முதல் இடியுடன் பலத்த மழை பெய்தது. வாடிப்பட்டி, சமயநல்லூர், சோழவந்தான், மேலூர், நாகமலை புதுக்கோட்டை, அலங்காநல்லூர், பாலமேடு, குமாரம், ஆண்டிப்பட்டி, திருமங்கலம், விரகனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் சில இடங்களில் மின்தடையும் ஏற்பட்டது.
மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கியது. இன்று காலையில் சில இடங்களில் மழை பெய்தது. வானம் மேகமூட்டமாக காணப்படுகிறது.
மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
உசிலம்பட்டி- 26.20
மதுரை தெற்கு- 40.30
விரகனூர்- 110.50
விமான நிலையம்- 21.20
இடையபட்டி- 57.20
புலிப்பட்டி- 8.40
சோழவந்தான்- 30.10
கள்ளிக்குடி- 12.20
மாவட்டத்தில் நேற்று முதல் இன்று காலை வரை 853.70 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் வாயிலாக ஒவ்வொரு மாதமும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. அதன்படி ஆகஸ்டு 2018-ம் மாதத்திற்கான தனியார் வேலைவாய்ப்பு முகாம் நாளை (வெள்ளிக்கிழமை) அன்று விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.
இதற்கு முன்னர் நடைபெற்ற தனியார் வேலை வாய்ப்பு முகாம்களில் பல நிறுவனங்கள் கலந்து கொண்டு ஆயிரத்திற்கும் அதிகமான நபர்களை தேர்வு செய்துள்ளனர்.
நாளை நடைபெற உள்ள தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 6 முன்னணி நிறுவனங்களும் கலந்து கொண்டு 10-ம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ. டிப்ளமோ பி.இ. (சிவில்), மற்றும் தையல் தெரிந்த பெண்களை தேர்வு செய்ய உள்ளனர்.
மேலும் எல்.ஐ.சி நிறுவனத்தில் முகவராக 30 வயது முதல் 45 வயது முடிய உள்ளவர்களையும் தேர்வு செய்ய உள்ளனர்.
இந்த வாய்ப்பினை விருதுநகர் மாவட்ட பணி நாடுநர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கலெக்டர் (பொறுப்பு) உதயகுமார் தெரிவித்துள்ளார்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவை தொடர்ந்து நேற்று இரவே தமிழகம் முழுவதும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன. ஒரு சில கடைகள் மட்டுமே திறந்திருந்தன.
பஸ்கள் ஓடாததால் வெளியூரில் இருந்து உள்ளூர் திரும்பியவர்களும் அவதிப்பட்டனர். பஸ் போக்குவரத்து நேற்று இரவு 7 மணி முதல் படிப்படியாக நிறுத்தப்பட்டது. இன்று காலை பஸ் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது.
சிவகங்கை நகரில் இன்று அனைத்து கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. சிவகங்கை பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. அரசு பஸ்கள், ஆட்டோக்கள் இயக்கப்படவில்லை.
அரண்மனை ரோடு, நேரு பஜார், தினசரி மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் வெறிச்சோடியது. இதே போல் காரைக்குடி, திருப்பத்தூர், காளையார் கோவில், தேவகோட்டை, கல்லல், சருகணி, மானாமதுரை, இளையாங் குடி, திருப்புவனம், சிங்கம்புணரி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது. வெளியூர்களுக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை.
கருணாநிதி மறைவையொட்டி இன்று மாலை சிவகங்கை நகரில் அனைத்து கட்சி சார்பில் மவுன அஞ்சலி ஊர்வலம் நடைபெறுகிறது.
மாவட்டம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பஸ்நிலையம், முக்கிய பகுதிகளில் போலீசார் ரோந்து சுற்றி வந்தனர்.
ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் இன்று அரசு மற்றும் தனியார் பஸ்கள் எதுவும் ஓடவில்லை.
இதேபோல் 3 மாவட்டங்களிலும் கடைகள் எதுவும் திறக்கப்படவில்லை. சிறு சிறு டீக்கடைகள் கூட ஒன்றிரண்டே ஆங்காங்கே திறந்திருந்தன. ஓட்டல்கள் அனைத்தும் மூடப்பட்டே இருந்தன.
இதன் காரணமாக எப்போதும் பரபரப்பாக காணப்படும் கடை வீதிகள் இன்று வெறிச்சோடி காணப்பட்டன. இதனால் வீதிகளில் தங்கி இருந்த மக்கள் பெரும் சங்கடத்திற்கு ஆளானார்கள்.
விருதுநகர் மாவட்டத்தின் முக்கிய வீதிகளில் கருணாநிதிக்கு இரங்கல் தெரிவித்து பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன. ராமநாதபுரம், சிவகங்கை நகர சாலைகளிலும் ஆங்காங்கே கருணாநிதி படம் வைக்கப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் புதன்கிழமை நடக்கும் சந்தை இன்று ரத்து செய்யப்பட்டது. இன்று வெளிநாடுகளுக்கு செல்ல திட்டமிட்டிருந்தவர்கள் நேற்று இரவே ரெயில் மற்றும் பஸ்கள் மூலம் மதுரை, திருச்சி விமான நிலையங்களுக்கு சென்று விட்டனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம் பிரகாஷ்மீனா தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். #Karunanidhideath #Karunanithi #DMK
விருதுநகர் அருகே உள்ள சூலக்கரை காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பால்பாண்டி (வயது 28). இவரும், இவரது சகோதரர் நாகேஸ்வரன் என்பவரும் விருதுநகர்- சாத்தூர் ரோட்டில் சூலக்கரைமேடு அருகே ரோட்டை கடந்து சென்றபோது மதுரையில் இருந்து நாங்குநேரி சென்ற கார் மோதியதில் பால்பாண்டி படுகாயம் அடைந்தார்.
விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார். இது பற்றி நாகேஸ்வரன் கொடுத்த புகாரின் பேரில் சூலக்கரை போலீசார் கார் டிரைவர் மதுரையை சேர்ந்த செல்வம் என்பவரை கைது செய்து வழக்குபதிவு செய்தனர்.
இந்த நிலையில் நேற்று பால்பாண்டியின் உடல் பரிசோதனை முடிந்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அதனை எடுத்து சென்றவர்கள், அதனை நடுரோட்டில் வைத்து மறியலில் இறங்கினார்கள். சூலக்கரை பஸ் நிறுத்தம் அருகே நான்கு வழிச்சாலையில் தடுப்புவேலி வைக்க கோரியும், உயர்கோபுர மின் விளக்கு அமைக்க கோரியும் வலியுறுத்தினர்.
இந்த போராட்டத்தால் பரபரப்பு உருவானது. நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு சங்கர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் மறியல் போராட்டம் முடிவுக்கு வந்தது.
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ளது மாங்குளம். இங்குள்ள செண்பக மூர்த்தி கோவிலில் நாளை களரி திருவிழா நடைபெற உள்ளது. திருவிழாவுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வந்தன.
இந்த நிலையில் 5 பேர் கொண்ட கும்பல் நள்ளிரவில் கோவிலுக்குள் புகுந்து அங்கிருந்த செண்பக மூர்த்தி, ராக்காயி அம்மன் உள்பட 7 சிலைகளை உடைத்து சேதப்படுத்தி விட்டு தப்பிச் சென்று விட்டது.
இன்று காலை கோவிலுக்கு வந்த பூசாரி மற்றும் பக்தர்கள் சிலைகள் உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
சிலை உடைப்பு குறித்து ஆதியூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில் கோவில் சிலைகளை சேதப்படுத்தியது அதே பகுதியைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் ஆபிரகாம் லிங்கன், ராஜா மற்றும் 3 பேர் என்பது தெரியவந்தது.
இவர்களில் ஆபிரகாம் லிங்கன் மட்டும் சிக்கினார். அவரை போலீசார் கைது செய்தனர். மற்றவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். ஆபிரகாம் லிங்கன் மீரட்டிலும், ராஜா நாக்பூரிலும் பணியாற்றி வருகின்றனர்.
கோவில் பூசாரியை மாற்ற வேண்டும் என்று சிலர் கூறி வந்த நிலையில் சிலைகள் உடைத்து சேதப்படுத்தப்பட்டு இருப்பதாக பக்தர்கள் தெரிவித்தனர். #Tamilnews
விருதுநகர் கத்தாளம் பட்டி தெருவை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 48). இவர் சமையல் பாத்திரங்களை வாடைக்கு விடும் தொழில் செய்து வருகிறார்.
இவரிடம் விருதுநகர் ஆணைக்குழாய் தெருவை சேர்ந்த பேச்சியம்மாள் (60), முத்துராமன்பட்டியை சேர்ந்த சக்திவேல் (52) ஆகியோர் நேற்று மதுரையில் நடக்கும் திருமண விழாவுக்கு சமையல் பாத்திரங்கள் வாடகைக்கு வேண்டும் என்று கூறியுள்ளனர்.
இதை நம்பி மாரியப்பன் ரூ. 4½ லட்சம் மதிப்புள்ள சமையல் பாத்திரங்களை கொடுத்து அனுப்பினார். நேற்று இரவு அவர்கள் பாத்திரங்களை திருப்பி தரவில்லை. பல முறை அவர்களை தொடர்பு கொள்ள முயன்றும் முடியவில்லை.
இந்த நிலையில் சமையல் பாத்திரங்களை ஏற்றி சென்ற மினிலாரி டிரைவரிடம் மாரியப்பன் விசாரித்துள்ளார். அப்போது அவர், பேச்சியம்மாள், சக்திவேல் ஆகியோர் மதுரை விரகனூரில் உள்ள ஒரு பாத்திரக்கடையில் பாத்திரங்களை இறக்கியதாக கூறியுள்ளார்.
இதை கேட்டு அதிர்ச்சியடைந்த மாரியப்பன், இதுகுறித்து விருதுநகர் பஜார் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மதுரை விரகனூருக்கு சென்று பாத்திரக்கடையில் விசாரணை நடத்தினர். அப்போது பாத்திரங்களை 2 பேரும் விற்றதாக தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் பேச்சியம்மாள், சக்திவேல் ஆகிய 2 பேரை கைது செய்தனர். #Tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்