என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 103425
நீங்கள் தேடியது "இழப்பீடு"
- சுமார் 200 ஏக்கரில் கோடை முன்பட்ட சாகுபடி செய்யப்பட்டிருந்தது.
- மழையினால் சாய்ந்து முற்றிலும் சேதமடைந்துள்ளது.
தஞ்சாவூா்:
தஞ்சாவூா் மாவட்ட கலெக்டருக்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்ட செயலாளர் என்.வி.கண்ணன் அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது :-
தஞ்சாவூா் மாவட்டம் பாபநாசம் தாலுகா அம்மாபேட்டை ஒன்றியம், ராராம்புத்திரக்கோட்டை கிராமத்தில் சுமார் 200 ஏக்கரில் கோடை முன்பட்ட சாகுபடி செய்யப்பட்டிருந்தது.
தற்போது கதிர்வந்த பருவத்தில் உள்ள நெல் பயிர் எதிர்பாராமல் ஏற்பட்ட சூறாவளி காற்றுடன் பெய்த மழையினால் சாய்ந்து முற்றிலும் சேதம டைந்துள்ளது.
இதுபோன்று அம்மா பேட்டை பகுதிகளிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
எனவே உடனடியாக சம்பந்தப்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்து உரிய இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
போயிங் விமான விபத்தில் தனது கணவரை இழந்த பிரான்சை சேர்ந்த பெண் தனது கணவரின் மரணத்திற்கு 276 மில்லியன் அமெரிக்க டாலர் இழப்பீடு கேட்டு போயிங் நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.
பாரீஸ்:
எத்தியோப்பியன் ஏர்லைன்சுக்கு சொந்தமான போயிங் 737 மேக்ஸ் ரக விமானம் எத்தியோப்பியா நாட்டின் தலைநகர் அடிஸ் அபாபாவில் கடந்த மார்ச் மாதம் விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் விமானத்தில் பயணம் செய்த 157 பேரும் உயிர் இழந்தனர். இதே ரக விமானம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்தோனேசியாவில் விபத்துக்குள்ளானதில் 189 பேர் பலியாகினர்.
5 மாதங்களில் அடுத்தடுத்து விபத்துகளில் சிக்கியதால், நாடு முழுவதும் போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்கள் இயக்க தடை விதிக்கப்பட்டது. இதற்கிடையில் விமானத்தின் முக்கியமான மென்பொருளில் குறைபாடு இருந்ததை போயிங் நிறுவனம் ஒப்புக்கொண்டது.
இந்த நிலையில், எத்தியோப்பியாவில் நடந்த விபத்தில் தனது கணவரை இழந்த பிரான்சை சேர்ந்த நாடெஜ் டூபோஸ் சீக்ஸ் என்கிற பெண் தனது கணவரின் மரணத்திற்கு 276 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ.1,925 கோடியே 30 லட்சத்து 70 ஆயிரம்) இழப்பீடு கேட்டு போயிங் நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.
போயிங் நிறுவனத்தின் தலைமையகம் அமைந்துள்ள அமெரிக்காவின் சிகாகோ நகர கோர்ட்டில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.
எத்தியோப்பியன் ஏர்லைன்சுக்கு சொந்தமான போயிங் 737 மேக்ஸ் ரக விமானம் எத்தியோப்பியா நாட்டின் தலைநகர் அடிஸ் அபாபாவில் கடந்த மார்ச் மாதம் விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் விமானத்தில் பயணம் செய்த 157 பேரும் உயிர் இழந்தனர். இதே ரக விமானம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்தோனேசியாவில் விபத்துக்குள்ளானதில் 189 பேர் பலியாகினர்.
5 மாதங்களில் அடுத்தடுத்து விபத்துகளில் சிக்கியதால், நாடு முழுவதும் போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்கள் இயக்க தடை விதிக்கப்பட்டது. இதற்கிடையில் விமானத்தின் முக்கியமான மென்பொருளில் குறைபாடு இருந்ததை போயிங் நிறுவனம் ஒப்புக்கொண்டது.
போயிங் நிறுவனத்தின் தலைமையகம் அமைந்துள்ள அமெரிக்காவின் சிகாகோ நகர கோர்ட்டில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கோத்ரா கலவரத்தின்போது ஒரு கும்பலால் கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு, வேலை, வீடு வழங்க குஜராத் அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. #SupremeCourt #GujaratRiotsVictim #BilkisBano
புதுடெல்லி:
குஜராத் மாநிலம் கோத்ராவில் 2002-ம் ஆண்டு கலவரம் ஏற்பட்டது. அப்போது ஒரு கும்பல் ஒரு பெண்ணின் குடும்பத்தை சேர்ந்த 7 பேரை கொலை செய்துவிட்டு, அந்த பெண்ணையும் கற்பழித்தது. இந்த வழக்கில் தனிக்கோர்ட்டு 2008-ம் ஆண்டு ஜனவரி 21-ந் தேதி தீர்ப்பு வெளியிட்டது.
அதில், 11 பேருக்கு ஆயுள் தண்டனையும், சில போலீசார், டாக்டர்கள் உள்பட 7 பேரை விடுதலை செய்தும் தீர்ப்பு வழங்கப்பட்டது. பின்னர் பாம்பே ஐகோர்ட்டிலும் இதுதொடர்பான மேல்முறையீட்டு வழக்கு நடைபெற்றது.
பாம்பே ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. முன்னதாக இந்த வழக்கில் தவறு இழைத்த ஐ.பி.எஸ். அதிகாரி உள்பட போலீஸ் அதிகாரிகள் மீது 2 வாரத்துக்குள் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது.
மனுதாரர் தரப்பில், குஜராத் மாநில அரசு தனக்கு வழங்குவதாக அறிவித்த ரூ.5 லட்சம் இழப்பீட்டை ஏற்க முடியாது. தனக்கு கூடுதல் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கைவிடப்பட்டது.
இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் தீபக் குப்தா, சஞ்சீவ் கன்னா ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது:-
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு குஜராத் மாநில அரசு ரூ.50 லட்சம் இழப்பீடு, வேலை மற்றும் வீடு வழங்க வேண்டும். குஜராத் மாநில அரசு தவறு இழைத்த போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களுக்கு ஓய்வூதிய பலன்களை வழங்கக்கூடாது. பாம்பே ஐகோர்ட்டால் தண்டனை விதிக்கப்பட்ட ஐ.பி.எஸ். அதிகாரியை 2 தகுதிகள் பதவி இறக்கம் செய்ய வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர். #SupremeCourt #GujaratRiotsVictim #BilkisBano

இலங்கையில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பில் உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு தலா 10 லட்சம் ரூபாயும் காயமடைந்தவர்களுக்கு 3 லட்சம் ரூபாய் வரையும் இழப்பீடாக அரசு அறிவித்துள்ளது. #SriLankablast #blastvictimscompensation
கொழும்பு:
இலங்கையில் நேற்று நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களில் பலியானவர்களின் எண்ணிக்கை 290 ஆக உயர்ந்துள்ளது. படுகாயமடைந்த 400-க்கும் அதிகமானவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், நேற்றைய தொடர் குண்டுவெடிப்பில் உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு தலா 10 லட்சம் ரூபாயும் காயமடைந்தவர்களுக்கு ஒரு லட்சம் முதல் 3 லட்சம் ரூபாய் வரையும் இழப்பீடாக அரசு அறிவித்துள்ளது.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்று வெளியிட்ட இலங்கை அரசின் செய்தி தொடர்பாளர் ரஜிதா சேனரத்னே இறந்தவர்களின் இறுதிச்சடங்குகளுக்காக கூடுதலாக ஒரு லட்சம் ரூபாயும் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இலங்கையின் ஒரு லட்சம் ரூபாய் இந்தியாவின் 40 ஆயிரம் ரூபாய்க்கு சமம் என்பது குறிப்பிடத்தக்கது. #SriLankablast #blastvictimscompensation
இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு எதிரான வழக்கில் தோல்வியை சந்தித்ததால் இழப்பீடு தொகை ரூ.11 கோடியை இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு வழங்கி விட்டோம் என்று பாக். கிரிக்கெட் வாரிய தலைவர் இஷான் மணி தெரிவித்துள்ளார்.
கராச்சி:
இந்திய கிரிக்கெட் வாரியம், தங்கள் நாட்டு கிரிக்கெட் வாரியத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி இரு நாடுகள் இடையிலான போட்டி தொடரில் விளையாடவில்லை. எனவே இந்த போட்டி தொடர்கள் நடைபெறாததால் தங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புக்கு நஷ்ட ஈடாக இந்திய கிரிக்கெட் வாரியம் தங்களுக்கு ரூ.481 கோடி வழங்க வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சார்பில் கடந்த ஆண்டு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) பிரச்சினை தீர்ப்பாய கமிட்டியில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இதனை விசாரித்த ஐ.சி.சி. தீர்ப்பாய கமிட்டி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் மனுவை தள்ளுபடி செய்ததுடன், இந்த விவகாரத்தில் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு ஏற்பட்ட வழக்கு உள்ளிட்ட செலவுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு எதிரான வழக்கில் தோல்வியை சந்தித்ததால் வழங்க வேண்டிய இழப்பீடு தொகை ரூ.11 கோடியை இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு வழங்கி விட்டோம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் இஷான் மணி தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் குற்றம் செய்யாமலே 39 ஆண்டுகள் தண்டனை அனுபவித்தவருக்கு ரூ.150 கோடி இழப்பீடு வழங்கப்பட்டது. #CraigColey
கலிபோர்னியா:
அமெரிக்காவில் கலிபோர்னியாவை சேர்ந்தவர் கிரைக் கோலே (71). கடந்த 1978-ம் ஆண்டு தனது காதலி ரோன்டா விச்ட். அவரது 4 வயது மகன் டொனால்டு ஆகிய 2 பேரை கொலை செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. தான் குற்றவாளி இல்லை என அவர் வாதிட்டார்.
இருந்தும், அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் பரோல் எதுவுமின்றி தண்டனை அனுபவித்தார். இந்த நிலையில் 39 ஆண்டுகளுக்கு பிறகு அவரை கலிபோர்னியா கவர்னர் ஜெர்ரி பிரவுன் கருணை அடிப்படையில் கடந்த 2017-ம் ஆண்டில் விடுதலை செய்தார்.
அதன்பின்னர் அவர்தான் குற்றம் அற்றவர் என்பதை நிரூபிக்க ஆதாரங்களை திரட்டி வாதாடினார். அதில் அவர் குற்றமற்றவர் என்றும், செய்யாத குற்றத்துக்கு தண்டனை அனுபவித்தவர் என்றும் தெரிய வந்தது.
அதைத்தொடர்ந்து அவருக்கு ரூ.150 கோடி (21 மில்லியன் டாலர்) இழப்பீடு வழங்க நஷ்டஈடு வாரியம் உத்தரவிட்டது. எனவே அவருக்கு அந்த தொகை வழங்கப்பட்டது. #CraigColey

போபால் விஷவாயு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதலாக ரூ.7,800 கோடி இழப்பீடு கேட்டு மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. #BhopalGas #Victims #Compensating #SupremeCourt
புதுடெல்லி:
மத்திய பிரதேசத்தின் போபாலில் செயல்பட்டு வந்த யூனியன் கார்பைடு நிறுவனத்தில் இருந்து கடந்த 1984-ம் ஆண்டு டிசம்பர் 2-ந் தேதி நள்ளிரவில் மெத்தில் ஐசோசயனேட் என்ற விஷவாயு கசிந்தது. இதை சுவாசித்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் செத்து மடிந்தனர். 1 லட்சத்துக்கும் அதிகமானோர் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
மிகப்பயங்கர பேரழிவாக கருதப்படும் இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கொடிய சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு யூனியன் கார்பைடு நிறுவனம் ரூ.715 கோடியை இழப்பீடாக வழங்கியது. அமெரிக்காவை சேர்ந்த இந்த நிறுவனத்தை தற்போது டவ் கெமிக்கல்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது.
இந்த நிலையில் விஷவாயு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்க யூனியன் கார்பைடு மற்றும் பிற நிறுவனங்களுக்கு உத்தரவிடக்கேட்டு மத்திய அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. ஏற்கனவே வழங்கிய ரூ.715 கோடிக்கு மேல் கூடுதலாக ரூ.7,844 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.
தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மற்றும் நீதிபதி சஞ்சிவ் கண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவை நீதிபதிகள் விசாரணைக்கு ஏற்பதாக அறிவித்தனர். இந்த மனு மீது ஏப்ரல் மாதம் விசாரணை நடத்தப்படும் என்றும் அவர்கள் கூறினர். #BhopalGas #Victims #Compensating #SupremeCourt

கேரளாவில் நடந்த விபத்து வழக்கில் ஒருவருக்கு ரூ.2.63 கோடி நஷ்டஈடு வழங்க கோர்ட்டு உத்தரவிட்டிருப்பது இதுவே முதல் முறையாகும்.
திருவனந்தபுரம்:
திருவனந்தபுரத்தை அடுத்த வேளி பகுதியைச் சேர்ந்தவர் ஹரிகுமார், தனியார் நிறுவன ஊழியர்.
ஹரிகுமார் கடந்த 2014-ம் ஆண்டு திருவனந்தபுரம் கவடியார்மடம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது பின்னால் வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ஹரிகுமார் படுகாயம் அடைந்தார்.
ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட ஹரிகுமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. என்றாலும் அவரது உடலில் ஒரு பகுதி செயல் இழந்தது. இதனால் அவர், படுக்கையில் இருக்கும் நிலை ஏற்பட்டது.
விபத்தில் படுகாயம் அடைந்து உடல் செயல் இழந்த ஹரிகுமாருக்கு இழப்பீடு கேட்டு திருவனந்தபுரம் மோட்டார் வாகன கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு, ஹரிகுமாருக்கு ரூ.1 கோடியே 99 லட்சம் இழப்பீடும், இந்த தொகைக்கு வழக்கு தொடரப்பட்ட 2015-ம் ஆண்டு முதல் வட்டியும் சேர்த்து வழங்க வேண்டும். அதோடு கோர்ட்டு செலவு உள்ளிட்டவைகளையும் அளிக்கவேண்டும் என்று உத்தரவிட்டது.
கோர்ட்டு உத்தரவு மூலம் ஹரிகுமாருக்கு ரூ.2.63 கோடி இழப்பீடு கிடைக்கும். இதனை இன்சூரன்ஸ் நிறுவனம் 1 மாதத்தில் வழங்க வேண்டு மென்று கோர்ட்டு கூறி உள்ளது. #tamilnews

பாபநாசம் அருகே சமரச மையம் மூலம் கணவரை இழந்த பெண்ணுக்கு 10 பவுன் நகை மற்றும் ரூ.15½ லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது.
பாபநாசம்:
பாபநாசம் அருகே சரபோஜி ராஜபுரம் கிராமத்தில் வசித்து வந்தவர் கிருஷ்ணசாமி. இவரது மனைவி செல்வி. இவர்களுக்கு கோகுல் என்ற மகன் உள்ளார்.
கிருஷ்ணசாமி உடல் நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார். கணவரை இழந்த செல்வி மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் வாழ்ந்து வந்தார். பின்னர் செல்வி பாபநாசம் நீதிமன்றத்தில் இயங்கி வருகின்ற சமரச மையத்தில் மனு கொடுத்துள்ளார்.
இம்மனுவினை விசாரித்த பாபநாசம் வட்ட சட்ட பணிகள் குழுவின் தலைவரும், மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவருமான ராஜசேகர் செல்வியின் மாமியார் கண்ணம்மாளை அழைத்து பேசி விசாரணை மூலம் உடனடி தீர்வு காணப்பட்டு சமரசம் செய்து வைத்தார்.
இந்நிலையில் கண்ணம்மாளிடம் இருந்து 10 பவுன் நகையும், ரூ.15 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கமும் பெற்று செல்வியிடம் நீதிபதி வழங்கினார். இதில் அரசு வழக்கறிஞர் சரவணன், பாபநாசம் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் பாஸ்கரன், பாபநாசம் வட்ட, சட்ட பணிகள் குழுவின் தன்னார்வ சட்ட பணியாளர்கள் ராஜேந்திரன், தனசேகரன் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் கலந்து கொண்டனர். #tamilnews

விபத்தில் உயிரிழந்த டிரைவர் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்காததால் திருவண்ணாமலையில் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருகே வாசுதேவன்பட்டு பகுதியை சேர்ந்தவர் நடராஜன் (வயது 50). இவர் காரம், இனிப்பு பலகாரம் ஏற்றி செல்லும் சரக்கு ஆட்டோவின் டிரைவராக பணியாற்றி வந்தார். கடந்த 2009-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 23-ந் தேதி இவர் சரக்கு ஆட்டோவில் அவலூர்பேட்டை கொட்டப்பட்டு கிராமத்தின் அருகில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த சேலம் கோட்டத்திற்கு உட்பட்ட அரசு பஸ் சரக்கு ஆட்டோ மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து அவலூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையில் நடராஜனின் மனைவி ஆதிலட்சுமி இழப்பீடு வழங்கக்கோரி திருவண்ணாமலை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதுகுறித்து கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 17-ந் தேதி விசாரணை நடத்திய நீதிபதி, விபத்தில் உயிரிழந்த நடராஜன் குடும்பத்திற்கு ரூ.10 லட்சத்து 55 ஆயிரத்து 647 இழப்பீடு வழங்க சேலம் போக்குவரத்து கழகத்திற்கு உத்தரவிட்டார்.
ஆனால் சேலம் போக்குவரத்து கழகம் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க காலதாமதம் ஏற்படுத்தி வந்துள்ளது. தற்போது வட்டியுடன் ரூ.12 லட்சத்து 57 ஆயிரத்து 948 இழப்பீடு வழங்க வேண்டி உள்ளதாக கூறப்படுகிறது.
இழப்பீடு வழங்க காலதாமதம் செய்து வந்ததால் சேலம் கோட்டத்திற்கு உட்பட்ட அரசு பஸ்சை ஜப்தி செய்ய திருவண்ணாமலை மாவட்ட தலைமை குற்றவியல் நீதிபதி உத்தரவிட்டார். அதன்பேரில் நேற்று மதியம் திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த அரசு பஸ்சை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.
இதனால் பஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. #tamilnews

வெஸ்ட்இண்டீஸ் வீரர் கெய்லுக்கு பேர்பேக்ஸ் நிறுவனம் ரூ.1.52 கோடியை இழப்பீடாக வழங்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. #ChrisGayle #DefamationCase
2015-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடந்தது. இந்த போட்டியில் பங்கேற்ற வெஸ்ட்இண்டீஸ் அணியின் உதவி மசாஜ்தெரபிஸ்டாக பணியாற்றிய பெண், சிட்னியில் அந்த அணியினர் தங்கி இருந்த அறைக்குள் சென்ற போது கிறிஸ் கெய்ல் தான் உடுத்தி இருந்த துண்டை கழற்றி விட்டு இங்கு எதை பார்க்க வந்தாய்? என்று ஆபாசமாக பேசியதாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த பேர்பேக்ஸ் மீடியா குழுமம் செய்தி வெளியிட்டது.
இதனை அடுத்து கெய்ல், ஆஸ்திரேலிய உச்ச நீதிமன்றத்தில் பேர்பேக்ஸ் மீடியா குழுமம் மீது மான நஷ்ட வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மெக்கல்லம் பேர்பேக்ஸ் மீடியா குழுமம் கெய்ல் மீது குற்றம்சாட்டி வெளியிட்ட செய்தியை உண்மை என்று நிரூபிக்கவில்லை என்று கடந்த அக்டோபர் மாதம் தனது தீர்ப்பில் தெரிவித்து இருந்தார். ஆனால் இழப்பீடு தொகை விவரம் வெளியிடப்படவில்லை.
இந்த நிலையில் இழப்பீடு தொகை நேற்று அறிவிக்கப்பட்டது. கெய்லுக்கு பேர்பேக்ஸ் நிறுவனம் ரூ.1.52 கோடியை இழப்பீடாக வழங்க வேண்டும் என்று நீதிபதி அறிவித்துள்ளார். இந்த தீர்ப்பை எதிர்த்து உடனடியாக அப்பீல் செய்யப்போவதாக பேர்பேக்ஸ் மீடியா குழுமம் தெரிவித்துள்ளது.

ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக விளக்கம் கேட்காமல் விவாதத்தை ஒளிபரப்பிய ஆங்கில தொலைக்காட்சி மீது ரூ.10,000 கோடி இழப்பீடு கேட்டு ரிலையன்ஸ் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது. #Rafale #Reliance
புதுடெல்லி:
ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்து இருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டி வருகிறார். இதற்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்தபின்பும் தொடர்ந்து புகார் கூறப்படுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ரபேல் ஒப்பந்தத்தில் உதிரி பாகங்கள் சப்ளை செய்வதற்கான ஒப்பந்தம் தொழில் அதிபர் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டு உள்ளது. மத்திய அரசின் சிபாரிசு இல்லாமல் ரபேல் நிறுவனமே ரிலையன்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் கூறப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக ஒரு ஆங்கில தொலைக்காட்சியில் ‘உண்மையும் மீறலும்’ என்ற தலைப்பில் விவாதம் நடந்தது. இதில் பேசிய பிரபலங்கள் ரிலையன்ஸ் நிறுவனத்தை தேர்வு செய்ய நெருக்குதல்கள் கொடுக்கப்பட்டதாக தெரிவித்தனர்.
இதில் ரிலையன்ஸ் நிறுவனத்திடம் இருந்து விளக்கம் கேட்காமலேயே ஒளிபரப்பப்பட்டதாக அந்த நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது. இதுதொடர் பாக ஆங்கில தொலைக்காட்சி மீது ரிலையன்ஸ் நிறுவனம் ரூ.10,000 கோடி நஷ்டஈடு கேட்டு ஆமதாபாத் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தது.
இந்த மனுவை நீதிபதி விசாரணைக்கு ஏற்றுக் கொண்டார். வருகிற 26-ந்தேதி விசாரணை நடைபெறும் என்று அறிவித்தார். #Rafale #Reliance

×

X