search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 103912"

    சோழவரத்தில் காதலிக்க மறுத்த பெண்ணை கொன்ற வாலிபருக்கு ஆயுள்தண்டனை விதித்து திருவள்ளூர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
    திருவள்ளூர்:

    சோழவரம் சோலையம்மன் நகரை சேர்ந்தவர் ஆறுமுகம். ஆட்டோ டிரைவர். இவரது மனைவி கற்பகம். இவர்களது மகள் லதா (வயது 17).

    இவர்களது வீட்டுக்கு புதுச்சேரி தன்வந்திரி நகரை சேர்ந்த எழிலரசன் (26) அடிக்கடி வந்து சென்றார். அப்போது லதாவை அவர் ஒருதலையாக காதலித்து வந்தார்.

    கடந்த 7.4.2011 அன்று, ஆறுமுகம் மனைவியுடன் ஆஸ்பத்திரிக்கு சென்று இருந்தார். வீட்டில் லதாவும், அவரது தங்கையும் இருந்தனர்.

    அப்போது வீட்டுக்கு வந்த எழிலரசன், லதாவிடம், நான் உன்னை காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன் என்று கூறினார். லதா மறுப்பு தெரிவித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த எழிலரசன், லதாவை கத்தியால் குத்தி கொலை செய்தார்.

    சோழவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து எழிலரசனை கைது செய்தனர். இந்த வழக்கு திருவள்ளூர் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

    வழக்கை விசாரித்த நீதிபதி பரணிதரன் தீர்ப்பு அளித்தார். அதில், கொலை, ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டதால் எழிலரசனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

    மேலும் அபராதத் தொகையை கட்டத்தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என கூறினார். இதைத்தொடர்ந்து சோழவரம் போலீசார் எழிலரசனை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். #tamilnews
    சூளகிரி அருகே எலக்ட்ரீசியனை சரமாரியாக கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    சூளகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியை அடுத்த சின்னாறு அருகே உள்ள பந்தரகுட்டை பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 32). எலக்ட்ரீசியன். இவர் நேற்று முன்தினம் இரவு, சின்னாறு பஸ் நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது, பெங்களூருவில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி மோட்டார்சைக்கிளில் சென்ற 8 பேர், சின்னாறு பஸ் அருகே மோட்டார்சைக்கிளை நிறுத்தி விட்டு மது குடித்தனர். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. கோவிந்தன் அவர்களை சமாதானம் செய்ய முயன்றார். இதில் ஆத்திரம் அடைந்த பெங்களூரு நெலமங்களா பகுதியை சேர்ந்த மது (19) என்பவர், கோவிந்தனின் வயிறு மற்றும் கழுத்து பகுதியில் கத்தியால் சரமாரியாக குத்தினார். இதில் அவர் படுகாயம் அடைந்தார்.

    அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக, கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுதொடர்பான புகாரின் பேரில் சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து மதுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 
    சென்னை விமான நிலையத்தில் ரூ.5½ கோடி மதிப்பிலான போதைப்பொருளை கடத்திய போர்ச்சுகல் நாட்டை சேர்ந்த வாலிபரை கைது செய்த மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்தனர்.
    ஆலந்தூர்:

    சென்னை விமான நிலையத்தில், பிரேசிலில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.5½ கோடி மதிப்பிலான போதைப்பொருளை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக போர்ச்சுகல் நாட்டை சேர்ந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து பெரும் அளவில் போதைப்பொருள் கடத்தப்பட்டு வருவதாக மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    பிரேசில் நாட்டில் இருந்து துபாய் வழியாக சென்னைக்கு விமானத்தில் வந்த பயணிகளை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது, அந்த விமானத்தில் போர்ச்சுகல் நாட்டை சேர்ந்த மெண்டஸ் அபோசன் டோம்மிங்கோஸ் (வயது 28) என்பவர் சுற்றுலா விசாவில் சென்னை வந்திருந்தார்.

    அவர் மீது சந்தேகம் அடைந்த போதை பொருள் தடுப்புப்பிரிவு அதிகாரிகள் அவரிடம் விசாரித்தனர். மெண்டஸ் அபோசன் டோம்மிங்கோஸ் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். அவரது உடைமைகளை சோதனை செய்தபோது, அதில் உணவு பெட்டிகள் இருந்தது.

    அவற்றை பிரித்து பார்த்தபோது உயர்ரக போதை பொருளான கொக்கைன் இருந்தது தெரியவந்தது. அவற்றின் மதிப்பு, ரூ.5½ கோடி ஆகும். இதையடுத்து மெண்டஸ் அபோசன் டோம்மிங்கோசை கைது செய்த அதிகாரிகள், அவரிடம் இருந்த 1 கிலோ 800 கிராம் கொக்கைன் போதை பொருளை கைப்பற்றினர்.

    விசாரணையில், வேலை இல்லாத காரணத்தால் போதைப்பொருளை கடத்தி வந்ததாக அவர் தெரிவித்தார். பிரேசிலில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட போதைப்பொருளை யாருக்கு கொடுக்க இருந்தார்? இவருக்கும், சர்வதேச கடத்தல் கும்பலுக்கும் தொடர்பு உள்ளதா? என்றும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 
    மனைவியை விசாரணைக்கு அழைத்து செல்ல எதிர்ப்பு தெரிவித்து போலீசார் கண்முன்னே வாலிபர் பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். அவருக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    ஆலந்தூர்:

    சென்னையை அடுத்த துரைப்பாக்கம் கண்ணகி நகர் பகுதியை சேர்ந்தவர் குப்பன்(வயது 30). கஞ்சா விற்றதாக கைது செய்யப்பட்ட இவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். இவருடைய மனைவி தீபிகா.

    இவர், அந்த பகுதியில் சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபடுவதாக வந்த புகாரின்பேரில் நேற்று முன்தினம் கண்ணகி நகர் போலீசார், தீபிகாவை விசாரணைக்காக போலீஸ் நிலையம் வரும்படி அழைத்தனர்.

    அதற்கு எதிர்ப்பு தெரிவித்த குப்பன், “அடிக்கடி என்னையும், எனது குடும்பத்தையும் தொல்லைபடுத்தி வருகிறீர்கள்” என்று கூறி மனைவியை விசாரணைக்கு அழைத்து செல்லக்கூடாது என்றார். ஆனால் அதை போலீசார் கண்டுகொள்ளாமல் தீபிகாவை விசாரணைக்கு அழைத்துச்செல்ல முயன்றனர்.

    இதனால் ஆத்திரம் அடைந்த குப்பன், திடீரென போலீசார் கண் முன்னே தன்னிடம் இருந்த பிளேடால் தனது கழுத்தை அறுத்துக்கொண்டார். இதில் ரத்தம் கொட்டியது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார், குப்பனை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. #tamilnews
    தேனாம்பேட்டையில் திருமண வரவேற்பு பேனர் வைத்தது தொடர்பான தகராறில் வாலிபர் கொலை செய்யப்பட்டதில் 6 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    சென்னை:

    சென்னை தேனாம்பேட்டை சத்தியமூர்த்தி நகரை சேர்ந்தவர் மதன் (வயது 27). இவர் சவுண்ட் சர்வீஸ் தொழில் செய்து வந்தார். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

    இவரது நண்பர் ஒருவருக்கு நடந்த திருமணம் தொடர்பாக மதனும், அவரது மற்றொரு நண்பர் தீபக்கும் சேர்ந்து சத்தியமூர்த்தி நகரில் திருமண வரவேற்பு பேனர் வைத்திருந்தனர். பேனர் வைத்ததற்கு அந்த பகுதியை சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையொட்டி நேற்று முன்தினம் இரவு மோதல் ஏற்பட்டது.

    நேற்று பகலில் எதிர்தரப்பை சேர்ந்தவர்கள் மதனையும், தீபக்கையும் சமாதான பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். பேச்சுவார்த்தையில் மதனும், தீபக்கும் கலந்துகொண்டனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் மதனை சிலர் ஓடஓட விரட்டி அரிவாளால் வெட்டினார்கள். தடுக்க முயன்ற தீபக் மீதும் அரிவாள் வெட்டு விழுந்தது.

    பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிய இருவரும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி மதன் பரிதாபமாக இறந்தார். தீபக் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

    தகவல் அறிந்த தேனாம்பேட்டை போலீஸ் உதவி கமிஷனர் முத்தழகு, இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஆகியோர் போலீஸ் படையோடு கொலை நடந்த சத்தியமூர்த்திநகர் பகுதிக்கு சென்றனர். அங்கு கொலை செய்யப்பட்ட மதனின் ஆதரவாளர்கள் திரண்டு எதிர்தரப்பினரின் வீடுகளுக்குள் புகுந்து தாக்க முற்பட்டனர்.

    உடனே போலீசார் தலையிட்டு அவர்களை அமைதிப்படுத்தினார்கள். தொடர்ந்து அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    தேனாம்பேட்டை போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்த நிலையில்  6 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    செவ்வாப்பேட்டை அருகே மர்மமான முறையில் உயிரிழந்த வாலிபர் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    செவ்வாப்பேட்டை:

    செவ்வாப்பேட்டை அடுத்த அரண்வாயல் அருகே பூந்தமல்லி-திருப்பதி நெடுஞ்சாலை ஓரத்தில் வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். அவரது உடலில் காயங்கள் இருந்தது. போலீசார் அங்கு வந்து பார்த்த போது வாலிபர் உடல் அருகே வி‌ஷ பாட்டில்கள் 5-க்கு மேற்பட்டவை மற்றும் மது பாட்டில்கள் இருந்தது.

    அவரது சட்டை பையில் இருந்த ஓட்டுனர் உரிமத்தை ஆய்வு செய்த போது பல்லாவரத்தை அடுத்த பொழிச்சலூரை சேர்ந்த ஜெயக்குமார் என்பது தெரிய வந்தது. இது பற்றி அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    ஜெயக்குமாரை யாரேனும் கொலை செய்து சடலத்தை வீசி சென்றனரா அல்லது காதல் தோல்வியால் அவரே வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×