search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 105098"

    • திரளான பக்தர்கள் பங்கேற்பு
    • விநாயகருக்கு தேங்காய் பழம் படைத்து "திருக்கணம்" சாத்தி வழிபட்டனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்த கேந்திர வளாகத்தில் ஏகாட்சர மகா கணபதி கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 22-ந்தேதி முதல் கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடை பெற்றது.

    விழாவையொட்டி தின மும் காலையில் யாக சாலை பூஜையும் அதைத் தொடர்ந்து அபிஷேகமும் பின்னர் அலங்கார தீபாராதனையும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குதலும் நடந்தது. இரவு யாகசாலை பூஜையும் அலங்கார தீபாராதனையும் பக்தர்களுக்கு அருட்பிர சாதம் வழங்குதலும் நடை பெற்றது.

    10-ம்திருவிழாவான நேற்று காலையில் விநாயகர் சதுர்த்தி விழா நடந்தது. இதையொட்டி நேற்று காலை சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா கும்பாபிஷேகம் நடந்தது. இரவு 7 மணிக்கு பல வண்ண மலர்களால்அலங்கரிக்கப்பட்ட மூஷிக வாகனத்தில் விநாயகர் எழுந்தருளி மேளதாளங்கள் முழங்க வீதி உலா வந்த நிகழ்ச்சி நடந்தது. அப்போது வழிநெடுகிலும் பக்தர்கள் விநாயகருக்கு தேங்காய் பழம் படைத்து "திருக்கணம்" சாத்தி வழிபட்டனர். மறுநாளான இன்று காலை விவேகானந்தபுரம் கடற்கரையில் விநாயகருக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது.

    இந்த தீர்த்தவாரி நிகழ்ச்சியை சிவஸ்ரீ டாக்டர் சங்கர் பட்டர் தலைமையில் 6 அர்ச்சகர்கள் நடத்தினார்கள். இந்த நிகழ்ச்சியில் கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர தலைவர் பால கிருஷ்ணன், துணைத் தலைவர்கள் அனுமந்தராவ், நிவேதிதா, பொதுச் செயலாளர் பானுதாஸ், நிர்வாகச் செயலாளர் ராதாகிருஷ்ணன், மூத்த ஆயுட்கால ஊழியர்கள் அங்கிராஷ், கிருஷ்ணமூர்த்தி, நிர்வாக அதிகாரி அனந்த ஸ்ரீ பத்மநாபன், உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • ஊர்வலத்திற்கு கடும் கட்டுப்பாடுகள்
    • ஊர்வலத்தின் போது பிற மதத்தை புண்படுத்தும் வகையில் பேசக்கூடாது.

    நாகர்கோவில்:

    விநாயகர் சதுர்த்தி விழா நேற்று மாவட்ட முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

    இந்து முன்னணி, இந்து மகா சபா, பாரதிய ஜனதா, சிவசேனா மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் மாவட்டம் முழுவதும் 1200-க்கும் மேற்பட்ட பொது இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அரை அடி முதல் 10 அடி வரை உயரத்திற்கு விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டது.

    வீடுகளிலும், கோவில்களி லும் பொதுமக்கள் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்துள்ளனர். பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளுக்கு பொரி கொழுக்கட்டை படைத்தும் வழிபாடு செய்தனர். இன்று காலையில் விநாயகர் சிலைகளுக்கு பூஜைகள் செய்யப்பட்டது. காலை மாலை இரு வேளை களிலும் பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் போலீ சார் தீவிர கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.

    மாவட்டம் முழுவதும் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் நாளை முதல் 3 நாட்கள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நீர்நி லைகளில் கரைக்கப்படு கிறது. சிலைகளை கரைப்ப தற்கு மாவட்ட நிர்வா கம் 10 இடங்களில் அனுமதி வழங்கி யுள்ளது. கன்னியாகுமரி சொத்தவிளை, சங்குத்துறை, பள்ளிகொண்டான் தடுப் பணை, குழித்துறை தாமிர பரணி ஆறு, திற்பரப்பு, மணவாளக்குறிச்சி, சின்ன விளை, மண்டைக் காடு, வெட்டுமணி, தேங்காய் பட்டிணம் மற்றும் மிடாலம் ஆகிய பகுதிகளில் சிலைகளை கரைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    சிலைகள் கரைக்கப்பட உள்ள பகுதிகளில் முன்னேற்பாடு பணிகளை பேரூராட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகம் மேற்கொண்டு உள்ளது. அந்த பகுதிகளில் மின்விளக்கு வசதி உட்பட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு உள்ளது. சிவசேனா சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் நாளை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர் நிலைகளில் கரைக்கப்படுகிறது.

    நாகர்கோவில் நாகராஜா திடலில் இருந்து புறப்படும் விநாயகர் சிலை ஊர்வலம் கோட்டார், இடலாக்குடி, சுசீந்திரம், வழுக்கம்பாறை, ஈத்தங்காடு, கொட்டாரம் வழியாக கன்னியாகுமரிக்கு கொண்டு செல்லப்படுகிறது. பின்னர் கடற்கரையில் விநாயகர் சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய் யப்பட்டு அதன் பிறகு கடலில் கரைக்கப்படும். இதே போல் மேற்புறத் திலிருந்து கொண்ட செல்லப் படும் விநாயகர் சிலைகள் குழித்துறை ஆற்றிலும் கரைக்கப்படுகிறது.

    நாளை மறுநாள் 3-ந்தேதி இந்து மகா சபா சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகள் நாகராஜா திடலில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு சொத்த விளை கடலில் கரைக்கப்படுகிறது. இதே போல் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் இருந்து சிலைகள் ஊர்வல மாக எடுத்துச் செல்லப் பட்டு கரைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    4-ந்தேதி இந்து முன்னணி சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் நாகராஜா திடலில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு சங்குத்துறை கடலில் கரைக் கப்படுகிறது. இதே போல் மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதி களில் வைக்கப் பட்டுள்ள விநாயகர் சிலைகள் ஆங் காங்கே இருந்து ஊர்வல மாக எடுத்து செல்லப்பட்டு கரைக்க ஏற்பாடுகள் செய் யப்பட்டு வருகிறது.

    சிலைகள் ஊர்வலம் நடைபெறும் பகுதியில் உள்ள டாஸ்மார்க் கடை களை மூடுவதற்கும் நடவ டிக்கையை எடுக்கப்பட்டுள் ளது. விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். விநாயகர் சிலைகளை அதற்காக ஒதுக்கப்பட்ட வழியாக மட்டுமே ஊர்வலமாக எடுத்துச் செல்ல வேண்டும்.

    ஊர்வலத்தின் போது கூம்பு வடிவ ஒலிபெருக்கி களை பயன்படுத்தக்கூடாது. பிற மதத்தை புண்படுத்தும் வகையில் பேசக்கூடாது. விநாயகர் சிலைகளை மினி டெம்போக்கள் மற்றும் டிராக்டர்கள் மட்டுமே கொண்டு செல்ல வேண்டும். விநாயகர் சிலைகளுக்கு அணிவிக்கப்பட்ட பூ மற்றும் மாலைகள் துணிகள் அழகு சாதன பொருட்களை கரைப்பதற்கு முன்னதாக பிரிக்கப்பட வேண்டும்.

    விநாயகர் சிலை ஊர்வ லத்தின்போது பட்டாசு கள் வெடிக்க தடை விதிக்கப் பட்டு உள்ளது. மேலும் சிலைகளை குறிப்பிட்ட நேரத்திற்குள் கிடைக்கும் இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பது உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

    • முக்குறுணி விநாயகருக்கு முக்குறுணி அரிசியால் மெகா கொழுக்கட்டை செய்து வழிபடுவது வழக்கம்.
    • முக்குறுணி என்பதால், 18 படி பச்சரிசியால் கொழுக்கட்டை செய்து படைத்து வழிபாடு நடக்கிறது.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள பொற்றாமரைக் குளத்தின் தென்மேற்கு கரையில் முக்குறுணி விநாயகர் தனிச் சன்னதியில் வீற்றிருக்கிறார். அம்மன் சன்னதியில் இருந்து சொக்கநாதராகிய சுந்தரேஸ்வரரை தரிசிக்கச் செல்லும் வழியில் தெற்கு பார்த்த வண்ணம் எட்டு அடி உயர 'முக்குறுணி விநாயகர்' எழுந்தருளி உள்ளார்.

    திருமலை நாயக்க மன்னர் அரண்மனை கட்டுவதற்காக, வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம் அருகே மண் எடுக்கப்பட்டது.

    அப்போது மண்ணுக்கடியில் இருந்து 8 அடி உயரமுள்ள 4 கரங்களுடன் முக்குறுணி விநாயகர் கிடைத்ததாகவும், பின்னர் மன்னர் திருமலை நாயக்கர் முக்குறுணி விநாயகரை, மீனாட்சி அம்மன் கோவிலில் பிரதிஷ்டை செய்து வழிபட்டதாகவும் வரலாறு கூறுகிறது.

    ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி அன்று, முக்குறுணி விநாயகருக்கு முக்குறுணி அரிசியால் மெகா கொழுக்கட்டை செய்து வழிபடுவது வழக்கம். 'குறுணி' என்றால் 6 படியாகும். முக்குறுணி என்பதால், 18 படி பச்சரிசியால் கொழுக்கட்டை செய்து படைத்து வழிபாடு நடக்கிறது. இதன்படி விநாயகர் சதுர்த்தியான நேற்று காலை முக்குறுணி விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்து வெள்ளிக்கவசம் சாத்தப்பட்டது.

    பின்னர் 18 படி அரிசியில் செய்யப்பட்ட பெரிய கொழுக்கட்டையை காலை 9.30 மணிக்கு மேல் விநாயருக்கு படைக்கப்பட்டு சிறப்பு தீபாராதனையுடன் பூஜை நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    கொரோனா காரணமாக கடந்தாண்டு பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படாததால் இந்தாண்டு விநாயகரை காண பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

    • விநாயகருக்கு பாலாபிஷேகம், புனித தீர்த்தத்தால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
    • கோவில் யானை தும்பிக்கையை தூக்கி விநாயகரை வணங்கியது.

    நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதே போல் அகில இந்திய புண்ணிய தலங்களில் ஒன்றாக கருதப்படும் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் நந்தி மண்டபம் எதிரில் உள்ள விநாயகருக்கு நேற்று பாலாபிஷேகம் மற்றும் புனித தீர்த்தத்தால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று வெள்ளி கவசம் சாத்தப்பட்டு கொழுக்கட்டை படையல் வைக்கப்பட்டு சிறப்பு மகா தீபாராதனை பூஜைகள் நடைபெற்றன.

    தொடர்ந்து கோவிலில் இருந்து விநாயகர் வெள்ளி மூஷிக வாகனத்தில் எழுந்தருளி தெற்கு ரத வீதி, மேற்கு ரத வீதி, நடுத்தெரு, திட்டக்குடி சாலை, ராமத்தீர்த்தம், சீதா தீர்த்தம் சாலை வழியாக பஸ் நிலையம் அருகே உள்ள காட்டுப் பிள்ளையார் கோவிலுக்கு வந்தடைந்தார்.

    வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகர் எழுந்தருளிய போது கோவில் யானை ராமலட்சுமி தன் தும்பிக்கையை விநாயகரை நோக்கி தூக்கிய படி வணங்கியது. அப்போது இந்த காட்சியை கோவிலுக்கு வந்த ஏராளமான பக்தர்கள் மிகுந்த ஆச்சரியத்துடன் பார்த்து செல்போனிலும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

    அதுபோல் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ராமேசுவரம் நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள விநாயகர் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

    • பல இடங்களில் பல்வேறு தோற்றத்தில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளது.
    • 501 கிலோ லட்டால் லட்சுமி தாயாருடன் அமைந்துள்ள விநாயகர் சிலை அமைக்கப்பட்டது.

    குடியாத்தம் நகரம் மற்றும் சுற்றுப்புற கிராமப் பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட சிலைகள் வைத்து பொதுமக்கள் வழிபட்டு வருகின்றனர். இதில் பல இடங்களில் பல்வேறு தோற்றத்தில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளது.

    குடியாத்தம் நெல்லூர் பேட்டை பாவோடும்தோப்பு பகுதியில் ஸ்ரீஜோதி லட்டு விநாயகர் கோவிலில் 555 கிலோ லட்டால் சிவன் தோற்றத்தில் விநாயகர் சிலை அமைக்கப்பட்டது. லட்டு விநாயகரை காண காலை முதலே அப்பகுதி மற்றும் சுற்றுப்புற பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து தரிசனம் செய்தனர். மாலையில் ஸ்ரீ தேவி மாசுபடா அம்மன் கோவிலுக்கு லட்டு விநாயகர் ஊர்வலமாகச் சென்றார்.

    இதேபோல குடியாத்தம் காமாட்சியம்மன் பேட்டை அயல் தெரு மற்றும் சுங்கானி குப்புசாமி தெரு மத்தியில் உள்ள வலம்புரி சக்தி கணபதி கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு 501 கிலோ லட்டால் லட்சுமி தாயாருடன் அமைந்துள்ள விநாயகர் சிலை அமைக்கப்பட்டது. இங்கும் ஏராளமானோர் வந்து லட்டு விநாயகரை தரிசனம் செய்தனர்.

    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு குடியாத்தம் மற்றும் சுற்றுப்புற பகுதி விநாயகர் கோவில்களில் காலை முதலே சிறப்பு அபிஷேகம், பூஜைகள், மகாதீப ஆராதனை நடைபெற்றது.

    • முக்குறுணி விநாயகருக்கு ராட்சத கொழுக்கட்டை படையல் செய்யப்பட்டது.
    • வீடுகள், பொதுஇடங்களிலும் மக்கள் சிறப்பு வழிபாடு செய்தனர்.

    மதுரை

    இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி விழா கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பொது இடங்களில் கொண்டாடப்படவில்லை. அந்த சமயத்தில் வீடுகளில் பொதுமக்கள் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்தி னர்.

    இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை பொது இடங்களில் கொண்டாட கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன. கோவில்கள் உள்ளிட்ட வழிபாட்டு தலங்களிலும் பக்தர்கள் பங்கேற்புடன் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் பூஜைகள் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    விநாயகர் சதுர்த்தியை உற்சாகத்துடன் கொண்டாட பொதுமக்கள் சிறிது முதல் பெரிய அளவிலான விநாயகர் சிலைகளை ஆர்வத்துடன் வாங்கினர். மதுரை மாட்டுத்தாவணி மற்றும் மார்க்கெட்டுகளில் விநாயகர் சிலைகள் விற்பனை அமோகமாக நடந்தது.

    சதுர்த்தி பூஜையின் முக்கிய அங்கமான அரு கம்புல், எருக்கம் மாலைகள், வண்ண வண்ண மலர்கள் விற்பனையும் அதிக அளவில் இருந்தது. மார்க்கெட்டு களில் பொது மக்களும் திரண்டு பூஜைக்கு தேவையான வாழைக்கன்று, அவல், பொரி, ஆப்பிள், கொய்யா, வாழைப்பழம், பேரிக்காய், தேங்காய் மற்றும் பூஜை பொருட்களையும் ஆர்வத்துடன் வாங்கினர்.

    இன்று விநாயகர் சதுர்த்தியையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள முக்குறுணி விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தப்பட்டது. அப்போது 18 படி அரிசியில் தயாரிக்கப்பட்ட ராட்சத கொழுக்கட்டையை சுமந்து வந்து விநாயகருக்கு படையல் செய்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரை தரிசித்தனர்.

    மதுரையில் உள்ள அனைத்து விநாயகர் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    வீடுகளிலும் பொது மக்கள் உற்சாகத்துடன் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடி வருகிறார்கள். விநாயகர் சிலைகளை பூஜை அறையில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். முக்கிய இடங்களில் பெரிய அளவிலான விநாயகர் சிலைகளை பொதுமக்கள், இந்து அமைப்புகள் வைத்து வழிபாடு நடத்துகிறார்கள். விநாயகர் சதுர்த்தியை யொட்டி மதுரையின் முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பும் பலப் படுத்தப்பட்டு இருந்தது.

    விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர் நிலைகளில் கரைப்பதற்கு தேவையான முன்னேற்பாட்டு நட வடிக்கைகளிலும் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    விநாயகர் சிலைகளை கரைப்பதற்கான நீர்நிலை கள் பற்றிய விவரமும் அறிவிக்கப்பட்டுள்ளது.பொதுஇடங்களில் விநாய கர் சிலைகள் வைக்க சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் முன் அனுமதி பெற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மதுரையில் வழக்கமான உற்சாகத்துடன் விநாயகர் சதுர்த்தி விழா களை கட்டி உள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • எல்லா செயல்களிலும் வெற்றியைஅளிப்பவர் விநாயகர் .
    • வீடுகளில் பிள்ளையார் அகவல், காப்பு, புராணம் போன்றவற்றைப் படித்து வரலாம்.

    பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை

    நாலும் கலந்துனக்கு நான் தருவேன்-கோலம் செய்

    துங்கக் கரிமுகத்துத் தூமணியே! நீ எனக்கு

    சங்கத் தமிழ் மூன்றும் தா!

    ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தியில் வருவது விநாயகர் சதுர்த்தி. இது விநாயகரின் அவதார தினம் வருகிற 31-ந்தேதி (புதன்கிழமை) விநாயகர் சதுர்த்தி தினமாகும்.

    சிவனார் அபிஷேகப்பிரியர், திருமால் அலங்காரபிரியர், பிள்ளையாரோ நைவேத்தியப்பிரியர். எனவே விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அவருக்கு பிடித்த அவல், பொரி, கடலை கொழுக்கட்டை, கரும்பு போன்ற நிவேதனப் பொருட்களை ஏழை-எளியோருக்கு தானம் செய்தால் நல்லது.

    விநாயகர் சதுர்த்தி அன்று அதிகாலையிலேயே எழுந்து, நற்சிந்தனையோடு நன்னீரில் குளித்துப் பூஜைக்கு வேண்டிய பொருள்களைச்சேகரிக்க வேண்டும். களிமண்ணில் செய்த பிள்ளையாரைப் பல்வேறு விதமான இலைகள், பூக்களில் (21 வகையான) அருகம் புல்லையும் இரண்டு இரண்டாகச் சேர்த்துப்பூஜிக்க எடுத்து வைத்து கொள்ளலாம்.

    வீடுகளில் பிள்ளையார் அகவல், காப்பு, புராணம் போன்றவற்றைப் படித்து வரலாம். பிள்ளையார் வழிபாடு என்ற அத்தியாயத்தில் கூறியுள்ள படி அவருக்கு உபச்சரங்களான ஆவாகனம், ஆசனம், ஸ்தாபனம், பாத பூஜை, நீர் அளித்தல், பால், தயிர், மோர் அளித்தல், பஞ்சாமிருதம், துணிகள், சந்தனம், குங்குமம், ஆபரணங்கள், மலர், அட்சதை, தூபம், தீபம், குடை, தாம்பூலம், சுற்றி வணங்குதல், தரையில் வீழ்ந்து வணங்குதல், சாமரம் வீசுதல், போன்ற சேவைகளைச் செய்தல் வேண்டும்.

    வீட்டில் இது போல் நம்மால் செய்ய முடியாதவர்கள் கோவில் சென்று சிறப்பாக சேவை செய்தல், பாடல் கேட்டல், காப்பு, அகவல், படிப்பதும் நல்ல பயன் தரும். பூஜையில் வைத்த பிள்ளையார் பிம்பத்தை அடுத்த நாளோ ஓரிருநாட்களிலோ ஆற்றிலோ கடலிலோ கரைத்தல் வேண்டும். அவ்வையார் விநாயகருக்கு பாலும், தெளிதெனும் பாகும், பருப்பும் கொடுத்தார்.

    அருணகிரிநாதர் விநாயகப் பெருமானுக்கு உகந்த தாக கனியு-ம், அப்பம், அவல், பொரி, அமுது, இளநீர், எள்ளுருண்டை, வெள்ளரி, விளாம்பழம், நாவற்பழம் போன்ற பல பொருள்களைத் திருப்புகழில் குறிப்பிடுகின்றார். 'வி' என்றால் "இதற்கு மேல் இல்லை" எனப்பொருள். நாயகர் என்றால் தலைவர் எனப்பொருள். இவருக்கு மேல் பெரியவர் யாருமில்லை என்ற பொருள்பட விநாயகர் என்று பெயரிடப்பட்டது.

    விநாயகருக்கு அர்ச்சிக்கும் போது, "ஓம் அநீஸ்வராய நம" என்பர். "அநீஸ்வராய" என்றால் தனக்கு மேல் ஒரு ஈஸ்வரனே இல்லை என்று பொருள். கணபதி எனும் சொல்லில் 'க' என்பது ஞானத்தைக் குறிக்கிறது. 'ண' என்பது ஜீவர்களின் மோட்சத்தைக் குறிக்கிறது. 'பதி' என்னும் பதம் தலைவன் எனப் பொருள்படுகிறது. பரப்பிரும்ம சொரூபமாயிருப்பவன் கணபதி. மோட்சத்திற்கும் அவனே தலைவன்.

    தடைகளை விலக்கி நாம் தொடங்கும் எல்லா செயல்களிலும் வெற்றியைஅளிப்பவர் விநாயகர் . நல்ல அறிவையும் புகட்டுபவர். மாணவர்களால் மனம் உருக வணங்கப்படுபவர். நாம் தொடங்கும் ஒவ்வொரு செயலுக்கும் இவருக்கே முதல் வழிபாடு செய்ய வேண்டும் என்ற மரபு பல காலமாக உள்ளது. எதனை எழுதுவதற்கு முன்பும் இவரை நினைத்து பிள்ளையார் சுழி போட்டு தான் எழுத தொடங்குவார்கள். சாலை ஓரங்களில், இரண்டு சாலைகள் கூடும் இடங்களில் கணபதி சிலை வைக்கப்பட்டு வணங்கப்படுகிறது. இந்து கடவுளர்களில் மிகவும் பிரசித்தமான கடவுளாக விளங்குபவர் கணபதியே.

    பஞ்சாயதன பூஜையில் அதாவது சிவன் அம்பாள், விஷ்ணு, சூரியன், விநாயகர் என்பதில்முதலில் வருபவர் கணபதி. கணபதியினை வணங்கும் மதத்திற்கு காணாபத்யம் என்று பெயர். இதனை பின்பற்றுபவர்கள் கணபதியை உலகினை படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழிலையும் செய்பவராகவும் பிரம்மா, விஷ்ணு, சிவன் என்று மூன்று வடிவங்களிலும் இவர் விளங்குபவராகவும் கருதுகின்றனர்.

    பிரம்மவைவர்த்த புராணத்தில் கணபதியே தான் ஸ்ரீகிருஷ்ணன் என்று சொல்லப்படுகிறது. எனவேஇவர் வைணவர்களாலும் வணங்கப்படுகிறார். விநாயகப்பெருமானுக்கு பூஜைகள் செய்யும் போது அருகம்புல்லும், வன்னி இலைகளும், மந்தாரைப் பூவும் அவசியம் இருக்க வேண்டும்.

    அப்பம், அவல், அமுது, அவரை, இளநீர், எள்ளுருண்டை, கரும்பு, கல்கண்டு, வள்ளிக்கிழக்கு, வெண்பொங்கல், சர்க்கரைப் பொங்கல், மிளகு சாதம், தேன், தினைமாவு, நெய், பச்சரிசி, பால்,பாகு வெல்லம், பணியாரம், கொழுக்கட்டை, பிட்டு, லட்டு, வடை, வெண்ணெய், விளாம்பழம், நாவல் பழம், வாழைப்பழம், மாம்பழம், பலாப்பழம், ஆகியவற்றை நைவேத்தியமாக படைக்கலாம்.

    விநாயகருக்கு அபிஷேகம் செய்ய சந்தனாதித் தைலம், மாப்பொடி, மஞ்சள்பொடி, திரவியப்பொடி, ரசபஞ்சாமிர்தம்,பழப்பஞ்சாமிர்தம், நெய், தேன், பால், தயிர், கருப்பஞசாறு, இளநீர், சந்தனம், பழ ரசங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தலாம். விநாயகப் பெருமானுக்குரிய அபிஷேகப் பொருட்களை வாங்கித் தந்து, தரிசனம் செய்து வணங்குவதன் மூலம் சகல நலன்களையும் பெறலாம்.

    • வீடுகளில் அவரவர் சக்திக்கு தக்கவாறு வழிபாடுகளை செய்யலாம்.
    • பிள்ளையாருக்கு பாயாசம், வடை, அப்பம், கொழுக்கட்டை பிடித்தமானது.

    வீடுகளில் நாம் அவரவர் சக்திக்கு தக்கவாறு வழிபாடுகளை செய்யலாம். கோலம் போட்டமனையில் அச்சுமண் பிள்ளையாரை வாங்கி வந்து, அதனை மண்டபத்தில் சின்ன வாழைக்கன்று கட்டி, மாவிளை தோரணங்கள் கட்டி, மலர்களால் அலங்காரம் செய்வார்கள்.

    பின்னர் மண் பிள்ளையாருக்கு சந்தனம், குங்குமம் இட்டு, எருகம்பூ மாலை, அருகம்புல் மாலை ஆகியவை அணிவித்து அலங்காரம் செய்வார்கள். விநாயகருக்கு மிகவும் பிரியமான பத்ரம், வன்னிபத்ரம், அருகம்புல் இவைகள் கொண்டு அர்ச்சனை செய்தால் அதற்கான பலன் ஏராளம் என சொல்லப்படுகிறது.

    மேலும் 21 வகையான இலைகளால் அர்ச்சித்தல் சிறப்பு. அந்த இலைகளின்பெயர், அர்ச்சனை செய்தால் கிடைக்கும் பலன்கள் விவரம் வருமாறு:-

    1) முல்லை-அறம்,

    2) கரிசலாங்கண்ணி-இல்வாழ்க்கைக்குத் தேவையானபொருள்,

    3) வில்வம்- இன்பம்; விரும்பியவை அனைத்தும்,

    4) அருகம்புல் - அனைத்துப் பாக்கியங்களும்,

    5) இலந்தை - கல்வி,

    6) ஊமத்தை -பெருந்தன்மை,

    7) வன்னி - இவ்வுலகில் வாழும் காலத்திலும் சொர்க்கத்திலும் பல நன்மைகள்,

    8) நாயுருவி - முகப்பொலிவு, அழகு,

    9) கண்டங்கத்திரி - வீரம்,

    10) அரளி-வெற்றி.

    11) எருக்க கருவில் உள்ள சிசுவுக்கு பாதுகாப்பு,

    12) மருதம் - குழந்தை பேறு,

    13) விஷ்ணுக்ராந்தி - நுண்ணறிவு,

    14) மாதுளை-பெரும்புகழ்,

    15) தேவதாரு - எதையும் தாங்கும் இதயம்,

    16) மருவு - இல்லறசுகம்,

    17) அரசு - உயர் பதவி, மதிப்பு,

    18) ஜாதி மல்லிகை - சொந்த வீடு, பூமி பாக்கியம், 19) தாழம் இலை - செல்வச்செழிப்பு,

    20) அகத்திக் கீரை - கடன் தொல்லையில் இருந்து விடுதலை,

    21) தவனம் - நல்ல கணவன்-மனைவி அமைதல்.

    இந்த 21 இலைகளைத் தவிர நெல்லி, மருக்கொழுந்து, நோச்சி, கரிசலாங்கண்ணி, மாவிலை, துளசி, பாசிப்பச்சை ஆகிய இலைகளாலும் விநாயகருக்கு அர்ச்சனை செய்யலாம். அர்ச்சனை செய்தபின் பலவிதமான கனிகள், முக்கியமாக நாவல் பழம், மாதுளம் பழம், கொய்யாப்பழம், விளாம்பழம் ஆகியவையால் நைவேத்யம் செய்ய வேண்டும்.

    மேலும் பிள்ளையாருக்கு பாயாசம், வடை, அப்பம் ஆகியவைகளும் முக்கியமாக கொழுக்கட்டை பிடித்தமானது.

    • விடியற்காலை பிரம்ம முகூர்த்தத்தில் கணபதி ஹோமம் நடைபெறும்.
    • துளசி இலைகள் விநாயகர் சதுர்த்தி அன்று மட்டும் பூஜைக்கு உகந்தது.

    விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு எல்லா விநாயகர் கோவிலிலும் விசேஷ பூஜைகள் நடைபெறும். விடியற்காலை பிரம்ம முகூர்த்தத்தில் கணபதி ஹோமம் நடைபெறும்.

    விக்கினங்கள் விலகவும், நன்மைகள் ஓங்கவும் இவைகள் செய்யப்படுகின்றன. இந்த ஹோமத்தில் 108 மூலிகைகள், வாசனைத் திரவியங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

    கணபதி ஹோமத்திற்குரிய திரவியங்கள் எட்டு. அவை மோதகம், அவல், நெய்,பொரி, சத்துமா, கரும்பு, கொப்பரைத் தேங்காய், சுத்தமான எள், வாழைப்பழம், இதை தவிர அருகம்புல், விளாம்பழம், நாவல்பழம், மாதுளம்பழம் இவைகளையும் ஹோம நிவேதனமாக செய்ய வேண்டும்.

    முதலில் தைலக்காப்பு, பிறகு மாகாப்பு (அரிசி மாவு) பஞ்சாமிர்தம், தேன், நெய், பால், பழ வகைகள், தயிர், கரும்புச்சாறு, விபூதி, சந்தனம், பன்னீர் அபிஷேகங்கள் செய்யப்படும். மாலையில் விநாயகருக்கு சந்தனக்காப்பு, விபூதிக்காப்பு, பூவலங்காரம் நடைபெறும். துளசி இலைகள் விநாயகர் சதுர்த்தி அன்று மட்டும் பூஜைக்கு உகந்தது.

    • நாளை விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.
    • 21 வகையான இலைகளால் அர்ச்சித்தால் கிடைக்கும் பலாபலன்கள் பின்வருமாறு:

    விநாயக சதுர்த்தியன்று 21 வகையான இலைகளைக்கொண்டு ஜபத்திரகனை அர்ச்சிப்பது சிறந்தது எனப்படுகின்றது. வகைக்கு 21 பதிரங்களைத் தேர்ந்து எடுத்து கொள்வது நலம்பல பயக்கும் என்பர். அவ்வாறான பத்திரங்களும், அவற்றைக்கொண்டு அர்ச்சிப்பதனால் அடையக்கூடிய பலாபலன்கள் பற்றிய விபரங்களும் வருமாறு:

    1.முல்லை இலை பலன்:- அறம் வளரும்

    2.கரிசலாங்கண்ணி இலை பலன்:- இல்வாழ்க்கைக்குத் தேவையான பொருள் சேரும்.

    3.வில்வம் இலை பலன்:- இன்பம். விரும்பியவை அனைத்தும் கிடைக்கும்.

    4. அருகம்புல் பலன்:- அனைத்து சவுபாக்கியங்களும் கிடைக்கும்.

    21 அருகம் புற்களைக் கொண்டு அர்ச்சிப்பது அதி விசேஷ மானது.

    5.இலந்தை இலை பலன்:- கல்வியில் மேன்மையை அடையலாம்.

    6.ஊமத்தை இலை பலன்:- பெருந்தன்மை கைவரப்பெறும்.

    7.வன்னி இலை பலன்:- பூவுலக வாழ்விலும், சொர்க்க வாழ்விலும் நன்மைகள் கிடைக்கப்பெறும்.

    8. நாயுருவி பலன்: முகப் பொலிவும், அழகும் கூடும்.

    9.கண்டங்கத்தரி பலன்:- வீரமும், தைரியமும் கிடைக்கப்பெறும்.

    10.அரளி இலை பலன்:- எந்த முயற்சியிலும் வெற்றி கிட்டும்.

    11.எருக்கம் இலை பலன்: -கருவில்உள்ள சிசுவுக்கு பாதுக்காப்புக் கிட்டும்.

    12.மருதம் இலை பலன்:- மகப்பேறு கிட்டும்.

    13.விஷ்ணுகிராந்தி இலை பலன்: நுண்ணறிவு கைவரப்பெறும்.

    14.மாதுளை இலை பலன்:- பெரும் புகழும், நற்பெயரும் கிட்டும்.

    15.தேவதாரு இலை பலன்:- எதையும் தாங்கும் மனோ தைரியம் கிட்டும்.

    16.மருக்கொழுந்து இலை பலன்:- இல்லற சுகம் கிடைக்கப்பெறும்.

    17. அரசம் இலை பலன்:- உயர்பதவியும், பதவியால் கீர்த்தியும் கிட்டும்.

    18. ஜாதிமல்லி இலை பலன்:- சொந்த வீடு, மனை, பூமி பாக்கியம் கிடைக்கப்பெறும்.

    19. தாழம் இலை பலன்: செல்வச் செழிப்புக் கிடைக்கப்பெறும்.

    20.அகத்தி இலை பலன்:- கடன் தொல்லையில் இருந்து விடுதலை கிடைக்கும்.

    21.தவனம் ஜகர்ப்பூரஸ இலை பலன்:- நல்ல கணவன்- மனைவி அமையப்பெறும்.

    • அரிசி மாவு சுவைற்றதாக உள்ளது.
    • அதனுள் இருக்கும் பூரணம் சுவையானது.

    அரிசி மாவுக்குள் பூரணம் வைத்து கொழுக்கட்டை தயாரித்து விநாயகருக்குப் படைக்கப்படுவது அனைவரும் அறிந்ததே. இதன் பொருள் என்ன தெரியுமா?

    அரிசி மாவு சுவைற்றதாக உள்ளது. ஆனால் அதனுள் இருக்கும் பூரணம் சுவையானது.

    சுவையில்லாத அரிசி மாவு சுவையுள்ள வெல்லத்துடன் சேரும் போது எவ்வாறு விருப்பமுடன் உண்ணும் திண்பண்டமாக மாறுகிறதோ அது போல பக்தி கலந்தவாழ்க்கையே சுவையுள்ளதாக இருக்கும் என்று உணர்த்துகிறது இந்த மோதக தத்துவம்.

    • தூத்துக்குடி ஆறுமுக மங்கலத்தில் இந்த கோவில் அமைக்கப்பட்டுள்ளது.
    • கி.மு. 2300 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதென்று வரலாறு கூறுகிறது.

    கடவுள் ரூபங்களில் முதன் முதலாக வணங்கப்பட்ட விநாயகர் என்றும் தமிழகத்தில் முதலில் எழுப்பப்பட்ட விநயாகர் கோவில் என்றும் சொல்லப்படுவது தூத்துக்குடி எல்லைக்குட்பட்ட ஆறுமுக மங்கலத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆயிரத்தெண் விநாயகர் கோவில்.

    கி.மு. 2300 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதென்று இந்த ஆலயத்தின் வரலாறு கூறுகிறது. கி.மு. 4-ம் நூற்றாண்டில் வாழ்ந்த கோமார வல்லபன் என்ற அரசன் நர்மதை நதிக்கரையில் இருந்து ஆயிரம் வேத பண்டிதர்களை அழைத்து இங்கு மிகப்பெரிய யாகம் ஒன்றை நடத்திட முடிவு செய்தான். ஆனால் அங்கு வந்தவர்களோ 999 பேர்தான் ஒரு பண்டிதர் குறைந்ததால் மன்னனின் மனதில் கவலை ஏற்பட்டது.

    பிரார்த்தனை செய்பவர் போல வடிவம் கொண்டுவிநாயகரே பண்டிதராக வந்து யாகத்தை நிறைவுசெய்தார். இதனால் இங்குள்ள விநாயகர் ஆயிரத்தெண் விநாயகப்பெருமான் என்று அழைக்கப்படுகிறது. யக்ஞம் முடிந்த உடன் ஆறுமுக மங்கலத்தையே கிராமதானமாக பெற்றுக்கொண்டு அங்கேயே தங்கிவிட்டதாக வரலாற்று ஏடு தெரிவிக்கிறது.

    தொடக்க காலத்தில் இந்த கிராமத்தின் தெற்கு கரையில் பல அந்தணர்கள் ஆயிரத்தெண் விநாயகரை ஸ்தாபித்து வழிபட்டார்கள். பின்னர் காளஹஸ்தீஸ்வரர் கல்யாணி தேவி சன்னதிகளோடு மகா மண்டபம் அமைக்கப்பட்டது. தேர், கொடிமரம், 10 நாட்கள் உற்சவங்களோடு திருவிழா காணும் முக்கிய விநாயகர் கோவில்களில் இதுவும் ஒன்றாக கூறப்படுகிறது.

    5 நிலை ராஜகோபுரத்துடன் கூடிய இந்த கோவிலில் ஒரு சமயம் ஆதிசங்கரருக்கு வயிற்று வலி ஏற்பட்டபோது, இங்கே கணேச பஞ்சரத்ன கீர்த்தனம் பாடி பிறகு திருச்செந்தூருக்கு சென்று முருகன்சன்னதியில் சுப்ரமணிய புஜங்கம் பாடியபின் நோய் வலி நீங்கப்பெற்றார் என்பது இங்கே நடந்த முக்கிய செய்தி.

    வாகன விபத்து, பயண பிரச்சினை, வழக்கு இழுபறி ஆகியவை சுமூகமாக முடிய இந்த விநாயகரை வேண்டினால் நடந்துவிடும் என்று நம்பும் பக்தர்கள் அப்படி நடந்த பிறகு 1008,108 தேங்காய் களை உடைத்து 108 தீபங்களும் ஏற்றி வழிபடுகிறார்கள்.

    சித்திரை மாதத்தில் 10 நாட்கள் பிரம்மோற்சவம் நடைபெறும்போது 7-ம் திருநாளன்று ஸ்ரீநடராஜ மூர்த்தியுடன் பஞ்சமுக கணபதி திரு வீதி உலா வருவார்.

    நெல்லையில் இருந்து 50 கி.மீ. தொலைவில் உள்ள ஏரலில் இருந்து அடுத்த 4 கி.மீட்டரில் வடக்கு திசையில் ஆறுமுக மங்கலத்தை அடையலாம்.

    ×