search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "படுகொலை"

    பழனி அருகே ஒரே நாளில் 2 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.
    பழனி:

    பழனி அருகே ஆயக்குடியை சேர்ந்தவர் சுல்தான். இவருக்கு 3 மனைவிகள். 3-வது மனைவியின் மகன்கள் தாஜூதீன் (வயது45), கமருதீன் (40), ஜாகீர்உசேன் (38). தாஜூதீன் ஆயக்குடியில் பிரியாணி கடை நடத்தி வருகிறார்.

    மற்ற 2 பேரும் வேலைக்கு செல்லாமல் பூர்வீக சொத்தை அனுபவித்து வந்துள்ளனர். இதனால் அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. முதல் மனைவியின் மகன் ஜாபர் அலி. இவர் கமருதீன் மற்றும் ஜாகீர்உசேனிடம் சொத்தை பிரித்து தரக்கோரி சமரசம் பேசி உள்ளார்.

    இதனால் ஆத்திரத்தில் இருந்த 2 பேரும் நேற்று இரவு உன்னால்தான் இந்த பிரச்சினை என்று தாஜூதீனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தாஜூதீனை சரமாரியாக குத்தினர். ரத்த வெள்ளத்தில் சரிந்த தாஜூதீன் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இதுகுறித்து ஆயக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள ஜாகீர்உசேன், கமருதீன் ஆகியோரை தேடி வருகின்றனர்.

    மற்றொரு சம்பவம்...

    பழனி அடிவாரம் அருகே உள்ள மருத்துவ நகரை சேர்ந்தவர் சங்கர் (30). இவர் அமரப்பூண்டியில் உள்ள ஒரு வீட்டில் தாய், தந்தையுடன் வசித்து வந்தார். நேற்று இரவு திடீரென மின் தடை ஏற்பட்டது. அப்போது காரில் வந்த 3 மர்ம நபர்கள் சங்கரை சரமாரியாக அரிவாளால் வெட்டி கொலை செய்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த ஆயக்குடி போலீசார் விரைந்து சென்று சங்கரின் உடலை கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். டி.எஸ்.பி. விவேகானந்தன் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தார். முதற்கட்ட விசாரணையில் இந்த கொலை பழிக்கு பழியாக நடந்தது தெரிய வந்துள்ளது.

    கடந்த 2014-ம் ஆண்டு பாலசமுத்திரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் ஒருவர் கொலை செய்யப்பட்டார். அந்த கொலை வழக்கில் சிறைக்கு சென்ற சங்கர் கடந்த 15 நாட்களுக்கு முன்புதான் வெளியே வந்துள்ளார்.

    இதனை அறிந்த மர்ம கும்பல் அவரை பழிக்கு பழியாக வெட்டி கொன்றது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். ஒரே நாளில் 2 கொலைகள் நடந்துள்ளது பழனி பகுதி பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.

    சவுதி அரேபியாவை சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி சவுதி அதிகாரிகளால் திட்டமிடப்பட்டு கொலை செய்யப்பட்டதாக ஐநா வெளியிட்ட அறிக்கையில் தெரிய வந்துள்ளது. #JamalKhashoggi #MohammedBinSalman #UN
    நியூயார்க்:

    சவுதி அரேபியாவை சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி, துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி துணை தூதரகத்திற்கு கடந்த ஆண்டு அக்டோபர் 2-ந்தேதி, சென்றபோது படுகொலை செய்யப்பட்டார். இதில் சவுதி அரசுக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு உள்ளது. ஆனால் சவுதி அரசு இதனை மறுக்கிறது.

    இந்த நிலையில் ஜமால் கசோக்கியின் கொலை குறித்து விசாரணை நடத்த ஐ.நா சபையின் சிறப்பு அறிக்கையாளர் ஆக்னஸ் கலாமார்ட், கடந்த மாதம் 28-ந்தேதி துருக்கி சென்றார். அங்கு அவர் கடந்த 3-ந்தேதி வரை பல்வேறு கட்ட விசாரணைகளை நடத்தினார். அதனை தொடர்ந்து தனது விசாரணை குறித்த முதல் அறிக்கையை நேற்று முன்தினம் வெளியிட்டார்.



    அந்த அறிக்கையில், “சவுதி அரேபிய அதிகாரிகளால் முன்னதாகவே திட்டமிடப்பட்டு மிருகத்தனமாக ஜமால் கசோக்கி கொலை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக குற்றவாளிகள் என்று 11 பேர் கைது செய்யப்பட்டு நடைபெற்று வரும் விசாரணையில் வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மை கவலை அளிப்பதாக உள்ளது. இது சம்பந்தப்பட்ட ஆதாரங்களை பெறுவதற்காக, சவுதி அரேபியாவிற்கு அதிகாரப்பூர்வமாக செல்ல அனுமதி கேட்டுள்ளேன். ஜமால் கசோக்கியின் கொலை தொடர்பான விசாரணையின் இறுதி அறிக்கை வரும் ஜூன் மாதத்தில் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலிடம் சமர்ப்பிக்கப்படும்”

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #JamalKhashoggi #MohammedBinSalman #UN
    தூதரகத்துக்குள் ஜமால் கசோக்கி கொலை செய்யப்பட்டபோது, பதிவான ஆடியோ பதிவு குறித்து டெலிவிஷனில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. #JamalKhashoggi #Saudi
    வாஷிங்டன்:

    துருக்கி தலைநகர் இஸ்தான்புலில் உள்ள சவுதி அரேபிய துணை தூதரகத்துக்கு கடந்த அக்டோபர் மாதம் 2-ந் தேதி சென்ற சவுதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி, அங்கு கொலை செய்யப்பட்டார். முதலில் இதனை மறுத்த சவுதி அரேபியா பின்னர் ஒப்புக்கொண்டது.

    இந்த நிலையில், தூதரகத்துக்குள் ஜமால் கசோக்கி கொலை செய்யப்பட்டபோது, பதிவான ஆடியோ பதிவு குறித்து சி.என்.என். டெலிவிஷனில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:-

    அந்த ஆடியோ டேப்பில், ‘என்னால் மூச்சு விட முடியவில்லை’ என ஜமால் கசோக்கி கூறியதை கேட்க முடிகிறது. மேலும் ஜமால் கசோக்கியின் கடைசி நிமிடங்கள் குறித்து கொலையாளிகள் தொடர்ந்து செல்போனில் தகவல் தெரிவித்துக்கொண்டே இருந்ததும் தெரிகிறது. ஜமால் கசோக்கி இறந்த பின்னர் அவரது உடலை ரம்பம் மூலம் அறுத்து கூறுபோடும் சத்தமும் ஆடியோவில் பதிவாகி இருக்கிறது. இந்த ஆடியோ பதிவு மூலம் ஜமால் கசோக்கி திட்டமிட்டே படுகொலை செய்யப்பட்டார் என்பது உறுதியாகி இருப்பதாக அமெரிக்கா தரப்பில் கூறப்படுகிறது. மேலும் ஜமால் கசோக்கியின் கடைசி தருணம் பற்றி தகவல்கள் பரிமாறப்பட்ட செல்போன் அழைப்புகள் அனைத்தும் சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் உள்ள உயர் அதிகாரிகளிடம் இருந்து வந்ததை துருக்கி உளவுத்துறை அமைப்புகள் உறுதி செய்து உள்ளன.

    இவ்வாறு சி.என்.என். டெலிவிஷனில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இதற்கிடையே, ஜமால் கசோக்கி கொலையில் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சால்மானின் நெருங்கிய கூட்டாளிகள் 2 பேரை துருக்கிக்கு நாடு கடத்த வேண்டும் என துருக்கி அதிபர் தயீப் எர்டோகன் விடுத்த கோரிக்கையை சவுதி அரேபியா நிராகரித்து விட்டது.
    லிபியாவில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கடத்தி பணயக் கைதிகளாக வைத்திருந்த 6 பேரை ஐஎஸ் பயங்கரவாதிகள் படுகொலை செய்துள்ளனர். #ISMilitants #Libya
    திரிபோலி:

    லிபியாவில் முக்கிய நகரங்களை இணைக்கும் ஜாப்ரா மாவட்டம் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் கட்டுப்பாட்டில் இருந்தது. அந்த பகுதியை கடந்த ஆண்டு ராணுவம் கைப்பற்றியது. ஐஎஸ் அமைப்பினர் விரட்டியடிக்கப்பட்டனர். அதன்பின்னர் அந்த பகுதியில் அவ்வப்போது ஐஎஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அவ்வகையில் கடந்த அக்டோபர் மாதம் ஜாப்ரா மாவட்டத்தின் புகா பகுதியில் ஐஎஸ் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர்.



    இதில் 5 பேர் கொல்லப்பட்டனர். தாக்குதலுக்குப் பிறகு 10 பேரை பயங்கரவாதிகள் சிறைபிடித்துச் சென்றனர். நகரை விட்டு வெளியேறும் முன்பாக பல்வேறு ராணுவ வீரர்களை கொன்றதாகவும், சிலர் கடத்திச் சென்றதாகவும் ஐஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், கடத்தப்பட்ட 10 பேரில் 6 பேரை பயங்கரவாதிகள் படுகொலை செய்துள்ளனர். இதனை மாவட்ட அதிகாரி உறுதி செய்தார்.

    ஐஎஸ் அமைப்பிடம் உள்ள பணயக் கைதிகள் மற்றும் ராணுவத்திடம் உள்ள பயங்கரவாதிகளை பரஸ்பரம் பரிமாற்றம் செய்வது தொடர்பாக மூத்த தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் மாவட்ட அதிகாரி தெரிவித்தார். #ISMilitants #Libya
    கசோக்கி கொலையில் குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தி தண்டிக்கப்படுவார்கள் என சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் கருத்து தெரிவித்துள்ளார். #JamalKhashoggi #MohammedBinSalman
    ரியாத்:

    சவுதி அரேபிய மன்னராட்சியையும், இளவரசர் முகமது பின் சல்மானையும் விமர்சித்து கட்டுரைகள் எழுதி வந்த பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி (வயது 60), துருக்கியில் சவுதி தூதரகத்தில் கடந்த 2-ந் தேதி மாயமான நிலையில், அவர் அங்கேயே படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்ற தகவல், உலக அரங்கை உலுக்கி உள்ளது.

    இந்த விவகாரத்தில் சவுதி அரேபியா மிக மோசமான முறையில் கசோக்கியை கொலை செய்து மூடி மறைத்து விட்டது என்று அமெரிக்கா கருதுகிறது. அமெரிக்காவின் நட்பு நாடாக சவுதி அரேபியா திகழ்ந்தபோதும் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் அமெரிக்கா உறுதியாக உள்ளது.



    இது தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ‘வால் ஸ்டிரீட் ஜர்னல்’ பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், “நடைமுறையில் சவுதி அரேபியாவை ஆளுகிறவர், பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான்தான். எனவே கசோக்கி மரணத்துக்கு காரணமான நடவடிக்கைக்கு இறுதி பொறுப்பை அவர்தான் ஏற்க வேண்டும்” என்று கூறினார்.

    இது பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுக்கு டிரம்ப் கொடுத்த அழுத்தமாக அமைந்துள்ளது.

    இந்த விவகாரத்தில் இதுவரை மவுனம் காத்து வந்த முகமது பின் சல்மான், இப்போது தனது மவுனத்தை கலைத்துக்கொண்டு வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார்.

    ரியாத்தில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு விட்டு முகமது பின் சல்மான் இதுபற்றி கூறும்போது, “கசோக்கி கொலையில் குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தி தண்டிக்கப்படுவார்கள்” என குறிப்பிட்டார். மேலும், “கசோக்கி படுகொலையை தொடர்ந்து எழுந்துள்ள பரபரப்பு, சவுதி அரேபியாவின் சீர்திருத்த நடவடிக்கைகளை தடம் புரளச்செய்து விட முடியாது” எனவும் கூறினார்.  #JamalKhashoggi #MohammedBinSalman 
    பாரிஸ் அருகே மர்ம நபர் நடத்திய கத்தி தாக்குதலில் 2 பேர் பரிதாபமாக பலியானார்கள. #KnifeAttack #ParisAttack
    பாரீஸ்:

    பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீசில் 2015-ம் ஆண்டு நவம்பர் 13-ந் தேதி பயங்கரவாதிகள் கொடூரமான தாக்குதல்கள் நடத்தினர். அதில் 130 பேர் கொல்லப்பட்டனர். தாக்குதல் நடத்திய 7 பயங்கரவாதிகளும் சுட்டுக்கொல்லப்பட்டனர். அதனைத் தொடர்ந்து பிரான்ஸ் பயங்கரவாத தாக்குதல்களுக்கு ஆளாவது தொடர்கிறது.



    இந்த நிலையில் அங்கு பாரீஸ் புறநகரில் உள்ள ஒரு தெருவில் ஒருவர் நேற்று காலை 3 பேரை கத்தியால் சரமாரியாக குத்தி ரத்த வெள்ளத்தில் வீழ்த்தினார். இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது.

    உடனே போலீஸ் படை அவரை சுற்றி வளைத்து சுட்டுக்கொன்றது.

    அவர் கத்தியால் குத்தியதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர். அவர்கள், அவரது தாயும், சகோதரியும் ஆவர் என தகவல்கள் கூறுகின்றன.

    இந்த சம்பவத்தில் மேலும் ஒருவர் படுகாயம் அடைந்தார். அவர் உடனடியாக மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

    இந்த கத்திக்குத்து சம்பவத்துக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பு ஏற்று உள்ளது.

    பெண் எழுத்தாளர் கவுரி படுகொலை பற்றி ஸ்ரீராம்சேனா அமைப்பின் தலைவர் பிரமோத் முத்தலிக் கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. #GauriLankesh #Murder #PramodMuthalik
    பெங்களூரு:

    இந்துத்துவா அமைப்புகளை கடுமையாக விமர்சித்து கட்டுரை எழுதிய பிரபல கர்நாடக பெண் எழுத்தாளர் கவுரி லங்கேஷ் கடந்த ஆண்டு மர்ம நபர்களால் பெங்களூருவில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கொலை நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த படுகொலை தொடர்பாக பிரதமர் மோடி கருத்து தெரிவிக்காதது ஏன்? என்று அண்மையில் காங்கிரஸ் தலைவர் மணிஷ் திவாரி கேள்வி எழுப்பி இருந்தார்.



    இதுபற்றி ஸ்ரீராம் சேனா அமைப்பின் தலைவர் பிரமோத் முத்தலிக் நேற்றுமுன்தினம் பெங்களூருவில் கூறும்போது, “இடது சாரி ஆதரவு அறிவாளிகள் கவுரி லங்கேஷ் கொலை பற்றி பிரதமர் மோடி ஏன் மவுனம் சாதிக்கிறார் என்று தொடர்ந்து கேள்வி எழுப்புகின்றனர். கர்நாடகாவில் சாகும் ஒவ்வொரு நாய்க்காகவும் மோடி பதில் அளிக்க வேண்டுமா?” என்று கேள்வி எழுப்பினார்.

    அவருடைய இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மேலும், கொலை செய்யப்பட்ட கவுரி லங்கேஷை இழிவு படுத்துவதுபோல் உள்ளது என்று கடும் எதிர்ப்பும் எழுந்தது.

    இதற்கு நேற்று பதில் அளித்த பிரமோத் முத்தலிக் கூறும்போது, “கவுரி லங்கேஷை நாயுடன் நான் ஒப்பிடவில்லை. அவரை இழிவுபடுத்தும் எண்ணமும் கிடையாது. மாநிலத்தில் நடக்கும் ஒவ்வொரு இறப்புக்கும் பிரதமர் மோடி பதில் அளிக்கவேண்டுமா? என்பதைத்தான் சுட்டிக்காட்டினேன்” என்றார்.  #GauriLankesh #Murder #PramodMuthalik  #tamilnews
    சிவகங்கையில் 3 பேர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து கரூரில் புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    கரூர்:

    சிவகங்கை மாவட்டம் திருப்பாசேத்தி கச்ச நேத்தம் கிராமத்தில் ஒரு சமூகத்தை சேர்ந்த 3 பேர் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். இதனை கண்டித்து புதிய தமிழகம் கட்சியின் கரூர் மாவட்டம் சார்பில் கரூர் ஆர்.எம்.எஸ். அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் பி. அசோகன் தலைமை தாங்கினார். 

    மாவட்ட துணை செய லாளர் தினேஷ்குமார், நகர செயலாளர் பூபதி, ராஜே ந்திரன், ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன் மற்றும் திரளானோர் பங்கேற்றனர். இதில் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. 

    மேலும் கொலையாளிகளை உடனே கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
    பாளை அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    நெல்லை:

    பாளையை அடுத்த தியாகராஜநகர் அருகேயுள்ள டி.வி.எஸ்.நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் ஞானப்பிரகாசம். இவர் ஒரு தனியார் திருமண மண்டபத்தில் காவலாளியாக உள்ளார். இவரது மனைவி அந்தோணியம்மாள்(வயது 79). இவர்களுக்கு 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். அவர்கள் திருமணமாகி வெளியூர்களில் வசித்து வருகின்றனர்.

    அவர்களில் ஒரு மகன் பால்பிரான்சிஸ் அரசு போக்குவரத்து கழகத்தில் ஊழியராக உள்ளார். இவர் பாளை கே.டி.சி.நகரில் வசித்து வருகிறார். ஞானப்பிரகாசமும், அந்தோணியம்மாளும் டி.வி.எஸ்.நகரில் வசித்து வந்தனர். நேற்று இரவு ஞானப்பிரகாசம் பணிக்கு சென்றுவிட்டார். அந்தோணியம்மாள் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.

    அப்போது மகன் பால் பிரான்சிஸ் தனது தாய்க்கு போன் செய்தார். வெகுநேரம் போன் அடித்தும் போனை எடுக்கவில்லையாம். இதனால் சந்தேகம் அடைந்த பால் பிரான்சிஸ் வீட்டுக்கு வந்து பார்த்தார். அங்கு அந்தோணியம்மாள் பலத்த காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடைந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    இதுபற்றி பெருமாள்புரம் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) தில்லைநாகராஜன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அந்தோணியம்மாளை கொலை செய்தவர்கள் யார்? எதற்காக அவர் கொலை செய்யப்பட்டார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சம்பவத்தின்போது அந்தோணியம்மாள் கழுத்தில் கிடந்த நகைகள் கொள்ளை போகவில்லை. இதனால் நகைக்காக கொலை நடக்கவில்லை என போலீசார் உறுதி செய்தனர். நிலத்தகராறு அல்லது வேறு பிரச்சினைகளில் அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    இதுபற்றி தொடர்ந்து விசாரணை நடக்கிறது. கொலை பற்றி விசாரணை நடத்தவும், கொலையாளிகளை பிடிக்கவும் போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் இதுபற்றி விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த கொலை சம்பவம் பாளை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இங்கிலாந்து நாட்டின் மிடில்ஸ்பரோ நகரில் இந்திய வம்சாவளி பெண் மருந்தாளுநர் ஒருவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.

    லண்டன்:

    இங்கிலாந்து நாட்டின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள மிடில்ஸ்பரோ நகரில் லின்தோர்ப் புறநகரில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஜெசிகா பட்டேல் (வயது 34) வசித்து வந்தார். இவரது கணவர் மிதேஷ் (வயது 36). இவர்கள் இருவரும் மான்செஸ்டர் நகரில் உள்ள பல்கலைகழகத்தில் படித்தபொழுது சந்தித்து கொண்டனர். ஜெசிகா தனது கணவருடன் வீட்டின் அருகிலேயே கடந்த 3 ஆண்டுகளாக மருந்து கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார்.

    இந்நிலையில், ஜெசிகா தனது வீட்டில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. உடனடியாக அப்பகுதிக்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த வழக்கில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. இதில் தொடர்புடைய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

    இதுபற்றி ஜெசிகாவின் வீட்டிற்கு அருகில் வசித்து வரும் ஒருவர் கூறுகையில், அவர்கள் இனிமையான, நட்புடன் பழக கூடிய தம்பதி. அவர்கள் மருந்து கடையை நடத்த தொடங்கியதில் இருந்து இந்த பகுதியில் நன்கு பிரபலம் ஆனவர்கள் என கூறினார். #tamilnews
    மீஞ்சூர் அருகே மனைவியிடம் நகை பறித்த கொள்ளையர்களை தடுத்த கணவரை கொள்ளையர்கள் வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    பொன்னேரி:

    மீஞ்சூரை அடுத்த வேலூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 65). இவரது மனைவி விஜயா. நேற்று இரவு கணவன்-மனைவி இருவரும் திருவெள்ளைவாயில் உள்ள பஜாருக்கு மளிகை பொருட்கள் வாங்க சென்றனர். பின்னர் அவர்கள் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தனர்.

    திருவெள்ளைவாயிலை தாண்டி சிறிது தூரத்தில் வந்த போதுமோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் ஜெயராமனையும், விஜயாவையும் வழி மறித்தனர். திடீரென விஜயா அணிந்து இருந்த 10 பவுன் நகையை பறித்தனர்.

    அதிர்ச்சி அடைந்த ஜெயராமன் கொள்ளையர்களை தடுக்க முயன்றார். இதனால் ஆத்திரம் அடைந்த கொள்ளையர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ஜெயராமனை வெட்டினர். மேலும் விஜயாவையும் சரமாரியாக தாக்கினர்.

    அவர்களது அலறல் சத்தம் கேட்டு அவ்வழியே மோட்டார் சைக்கிளில் வந்த தேவதானம் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் அங்கு வந்தார். அவரையும் கொள்ளை கும்பல் தாக்கி விட்டு 10 பவுன் நகையுடன் தப்பி சென்று விட்டனர்.

    இந்த தாக்குதலில் ஜெயராமனின் தலையில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டது. அவரது மனைவி விஜயா மற்றும் ஆறுமுகம் ஆகியோரும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர்.

    அவ்வழியே சென்றவர்கள் 3 பேரையும் மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ஜெயராமன் பரிதாபமாக இறந்தார். விஜயாவின் நிலைமை மோசமாக உள்ளது. ஆறுமுகத்துக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இதுகுறித்து காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொள்ளையை தடுத்த முதியவர் வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் மீஞ்சூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×