search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 105298"

    • மேலூர் அருகே கம்பூரில் நடந்த மீன் பிடி திருவிழாவில் கிராம மக்கள் போட்டி போட்டு பிடித்தனர்.
    • வசாயம் செழிக்கும் என்பது இந்த பகுதி மக்களின் நம்பிக்கை.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூரை அடுத்துள்ள கம்பூரில் தேனக்குடிப்பட்டி செல்லும் சாலையில் மருதன் கண்மாய் உள்ளது. இந்த கண்மாய் தண்ணீர் விவசாயத்திற்காக பயன்படுத்தப்படுகிறது.

    விவசாய பணிகள் முடிவடைந்த நிலையில் இன்று இந்த கண்மாயில் பாரம்பரிய மீன்பிடித் திருவிழா நடந்தது. இதையொட்டி சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான கிராம மக்கள் இன்று காலை முதல் குவிந்தனர். கிராம முக்கி யஸ்தர்கள் அதிகாலையில் வெள்ளை துண்டு வீசியதும் சுற்றி இருந்த கிராம மக்கள் கண்மாய்க்குள் இறங்கி வலைகள் மற்றும் மீன்பிடி சாதனங்களை வைத்து போட்டி போட்டு மீன்களைப் பிடித்தனர்.

    இதில் நாட்டு மீன்களான குறவை, கட்லா, ஜிலேபி மற்றும் விராமீன்களும் அதிக அளவில் கிடைத்தன. இந்த மீன்கள் சுமார் 3 கிலோ வரை இருந்தது. மீன்களை பிடித்த கிராமமக்கள் வீடுகளுக்கு கொண்டு சென்று சமைத்தும், மீதமுள்ள மீன்களை விற்காமல் உறவி னர்களுக்கு கொடுத்தனர்.

    மீன்பிடித் திருவிழாவின் மூலம் வரும் ஆண்டில் நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்கும் என்பது இந்த பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது.

    • ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர் திருவிழாவை முன்னிட்டு இன்று முகூர்த்த கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது
    • வருகிற 19-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது

    திருச்சி:

    108 திவ்யதேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என அழைக்கப்படுவதுமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு விதமான திருவிழாக்கள் நடைபெறும். இந்நிலையில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் 10 நாட்கள் விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம்.அதன்படி இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா நாளை (11-ந்தேதி) அதிகாலை கொடி ஏற்றத்துடன் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.இதனைத் தொடர்ந்து இன்று காலை கிழக்கு சித்திரை வீதியில் உள்ள சித்திரை தேரில் முகூர்த்தக்கால் நடும் விழா வைபவம் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து , அர்ச்சகர் சுந்தர் பட்டர் ஆகியோர் கலந்து கொண்டனர். இன்றைய தினம் முதல் அடுத்து வரும் 10 உற்சவ நாட்களுக்கு தினமும் காலை மற்றும் மாலை வேளையில் நம்பெருமாள் கற்பக விருட்ச வாகனம், சிம்ம வாகனம், கருட வாகனம், யானை வாகனம், தங்க குதிரை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் வருகிற 19-ந்தேதி அன்று நடைபெற உள்ளது. இது குறித்து ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சித்திரை தேர் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற உள்ளது. இந்த திருவிழாவிற்கு ஒரு லட்சத்திற்கும் மேலான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது மேலும் தற்போது கொரோனா நோய் தொற்று அதிகரித்து வருவதை தொடர்ந்து தமிழக அரசு அறிவிக்கும் வழி நெறிமுறைகளை பயன்படுத்தி சித்திரை தேர் திருவிழா நடைபெறும் என தெரிவித்தார்.


    • மதுரை தெப்பக்குளம் மாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா நாளை தொடங்குகிறது.
    • வருகிற 15-ந் தேதி பால்குடம், தீச்சட்டி ஊர்வலம் நடக்கிறது.

    மதுரை

    மதுரை காமராஜர் சாலை தெப்பக்குளம் பகுதியில் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இது மீனாட்சி அம்மன் கோவிலை சார்ந்ததாகும். இந்த கோவிலில் பங்குனி திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது.

    இந்த ஆண்டு பங்குனி திருவிழா நாளை 11-ந்தேதி தொடங்கி 20-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. விழாவையொட்டி மாரியம்மன் இன்று (திங்கட்கிழமை) கோவிலில் இருந்து புறப்பாடாகி மீனாட்சி அம்மன் கோவிலை வந்த டைகிறார். அங்கு கோவிலில் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்து தீபாராதனை நடைபெறும்.

    நாளை (11-ந்தேதி) மாலை 6 மணிக்கு சிம்ம வாகனத்தில் மாரியம்மன் எழுந்தருளி காட்சி அளிப்பார். அப்போது மீனாட்சி சுந்தரேசுவரரிடம் இருந்து கொடிபட்டத்தை பூசாரி பெற்று கொண்டு அவர் யானை மீது அமர்ந்து 4 சித்திரை வீதிகள் வழியாக வலம் வந்து தெப்பக்குளம் கோவிலுக்கு சென்ற டைவார்.

    அங்கு இரவு 11மணிக்கு மேல் மாரியம்மன் கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றம் நடைபெறும். அப்போது அம்மனுக்கு சக்தி கரகம் எடுத்தல், காப்பு கட்டுதல், முளைப்பாரி முத்து பதித்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

    5-ம் நாளான 15-ந்தேதி இரவு 7.25 மணிக்கு மேல் பக்தர்கள் பால்குடம், தீச்சட்டி எடுத்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்து வார்கள். அன்று மாரியம்மன் குதிரை வாகனத்தில் எழுந்தருளி தெப்பக்குளத்தை சுற்றி வலம் வந்து காட்சி அளிப்பார்.

    7-ம் நாளான 17-ந்தேதி திருவிளக்குபூஜையும், பங்குனி விழாவில் சிகர நிகழ்ச்சியான பூப்பல்லக்கு 18-ந்தேதியும் நடக்கிறது. 19-ந்தேதி மாலை 4.30 மணிக்கு மேல் சட்டத்தேரில் மாரியம்மன் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி தருவார்.

    20-ந்தேதி காலை 6 மணி முதல் மாவிளக்கு எடுத்தும், பொங்கல் வைத்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்வு நடைபெறும். பின்னர் இரவு 7.25 மணிக்கு மேல் தீர்த்தவாரியுடன் பங்குனித்திருவிழா நிறைவு பெறுகிறது.

    • தம் சீடர்களுக்கும் விருந்து வழங்கி வழிபட்ட நாள்
    • மாலை 6 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடையும், 7 மணிக்கு இனிப்பு தர்மம் வழங்குதலும் நடைபெற்றது.

    கன்னியாகுமரி :

    ஐம்பதிகளில் அகிலத்திரட்டு அம்மானை வழங்கிய மூலப்பதியான தாமரைகுளம் பதியின் முதல் குருவான குரு.பொன்னணைஞ்சவன் உடையகுட்டி நாடார் அய்யாவுக்கும், அவர் தம் சீடர்களுக்கும் விருந்து வழங்கி வழிபட்ட நாளை ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை விருந்துண்ட திருநாளாக கொண்டாடப்படுகிறது.

    பங்குனி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமையான நேற்று அதிகாலை 5.30 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடையும், காலை 7 மணிக்கு பால் மற்றும் இனிப்பு தர்மம் வழங்குதலும், 11 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடையும்,

    11.30 மணிக்கு உச்சிப்படிப்பும், நண்பகல் 12.30 மணிக்கு அன்னதானமும், மாலை 6 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடையும், இரவு 7 மணிக்கு இனிப்பு தர்மம் வழங்குதலும் நடைபெற்றது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை தாமரைகுளம் பதி தக்கார், பதி பரம்பரை குருமார்கள் மற்றும் அய்யாவழி பக்தர்கள் செய்திருந்தனர்.

    • காளியம்மன் கோவில் முளைப்பாரி திருவிழா காப்புகட்டுதலுடன் தொடங்கியது.
    • 1000-க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரியை தலையில் சுமந்துக்கொண்டு ஊர்வலமாக சென்றனர்.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள தலைவ நாயக்கன்பட்டி கிராமத்தில் பங்குனி பொங்கல் திருவிழா காப்புகட்டுதலுடன் தொடங்கியது. பெண்கள், ஆண்கள், சிறுவர்கள் என ஏராளமானோர் காப்புகட்டி விரதத்தை தொடங்கினர். தினமும் அம்மனுக்கு விஷேச பூஜைகள் நடந்தன. முக்கிய நாளான நேற்று அதிகாலை அக்னிச்சட்டி திருவிழா நடந்தது. இதில் 300-க்கு மேற்பட்ட பத்தர்கள் அக்னிச்சட்டி எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர். ஏராளமானோர் மாவிளக்கு எடுத்தும், மொட்டையடித்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று மாலை கோவில் முன்பு முளைப்பாரியை வைத்து பெண்கள் பாட்டு பாடி, கும்மி அடித்தனர். பின்னர் 1000-க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரியை தலையில் சுமந்துக்கொண்டு ஊர்வலமாக சென்றனர். கோவிலில் இருந்து தொடங்கிய முளைப்பாரி ஊர்வலம் கரகாட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம் மற்றும் வானவேடிக்கை, மேள தாளங்களுடன் நகர் வலம் வந்து கண்மாயில் முளைப்பாரியை கரைத்தனர்.

    • உறையூர் வெக்காளியம்மன் கோவில் சித்திரை திருவிழா தொடங்கியது
    • வருகிற 14-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது

    திருச்சி:

    தமிழகத்தில் உள்ள சிறந்த சக்தி ஸ்தலங்களில் திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோவிலும் ஒன்றாகும். மண்மாரியில் இருந்து உறையூரையும், மக்களையும் காப்பாற்றிய அன்னை வெக்காளியம்மன் கோவில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக் கம்.அதன்படி, இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதை–யொட்டி நேற்று முன்தினம் மாலை விநாயகர் வழிபா–டும், வாஸ்து சாந்தி–யும் நடைபெற்றது.

    இதைத் தொடர்ந்து நேற்று காலை 8 மணிக்கு மேல் காப்புகட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 13-ந்தேதி வரை தினமும் பகல் 12 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார வழிபாடு நடைபெறுகிறது. மேலும், 13-ந்தேதி வரை இரவு 7 மணிக்கு முறையே பூதவாகனம், கயிலாய வாக–னம், காமதேனு வாகனம், சிம்ம வாகனம், யானை வாகனம், அன்னவாகனம், குதிரை வாகனம் ஆகிய–வற்றில் அம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 9-ம் திருநாளான வருகிற 14-ந்தேதி காலை 10 மணிக்கு நடைபெற உள் ளது. முன்னதாக அன்று காலை 9 மணிக்கு அம்மன் திருத்தேரில் எழுந்தருளல் நடக்கிறது. அன்று மாலை 6 மணிக்கு, சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். முத்துப் பல்லக்கில் வீதி உலா 10-ம் திருவிழாவான 15-ந் தேதி இரவு 7 மணிக்கு முத்துப்பல்லக்கில் அம்மன் வீதியுலா நடைபெறுகிறது.

    16-ந்தேதி மதியம் 12 மணிக்கு மகா அபிஷேகமும், இரவு 7 மணிக்கு கேட–யத்தில் வீதியுலா காட்சியும் நடைபெறுகிறது. அன்று இரவு 8 மணிக்கு காப்பு கலைத்தல் மற்றும் விடை–யாற்றி உற்சவத்துடன் சித்திரை திருவிழா நிறைவு பெறும்.விழாவுக்கான ஏற்பாடு–களை கோவில் உதவி ஆணையர் லெட்சுமணன், துணை ஆணை–யர் ஞான–சேகரன் மற்றும் கோவில் பணியா–ளர்கள் செய்து வருகிறார்கள்.


    • சமயபுரம் மாரியம்மன் கோவிலில் 9-ந்தேதி சித்திரை திருவிழா கொடியேற்றம் நடைபெறவுள்ளது
    • இன்று பந்தக்கால் நடப்பட்டது

    மண்ணச்சநல்லூர்:

    அம்மன் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோவில் ஆகும். இக்கோவி–லில் உள்ள அம்மனை வேண்டினால் நினைத்தது நடக்கும், செல்வம்பெருகும், குடும்பத்தில் அமைதி நில–வும் என்பது பக்தர்களின் அசைக்கமுடியாத நம்பிக் கையாகும்.இதன் காரணமாக இக் கோவிலுக்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளி–லிருந்தும் அம்மனை தரிசனம் செய்வ–தற்காக தினமும் கார், வேன், பஸ் போன்ற வாக–னங்கள் மூலமாகவும், பாத–யாத்திரையாகவும் ஆயி–ரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வார்கள்.

    உலக பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம் மன் கோவில் தமிழர் களை மட்டுமின்றி வெளிநாட்டி–னரையும் தன்வசம் ஈர்த்துக் கொண்டிருக்கிறது.இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் தேர்த்திருவிழா வெகு விம–ரிசையாக நடைபெறு–வது வழக்கம்.அனைவரும் போற்றும் சமயபுரம் மாரியம் மன் கோவிலின் சித்திரை திரு–விழாவை இந்த ஆண்டு வெகு சிறப்பாகக் கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் கல்யாணி மற்றும் கோவில் பணியாளர்கள் பணிகள் துவங்குவதற்கான பந்தக் கால் நடும் விழா இன்று நடைபெற்றது.சிறப்பு பூஜைகளுடன் நடைபெற்ற இந்த விழாவை தொடர்ந்து சித்திரை திருவிழாவிற்கான ஏற்பாடுகள் துவங்கப்பட் டுள்ளது. நாளை மறுநாள் (9-ந்தேதி, ஞாயிற்றுக்கிழமை) காலை கொடியேற்றம் நடைபெறு–கிறது.


    • பழைய மார்க்கெட் பகுதியில் அமைந்துள்ள சக்தி காளி யம்மன், சக்தி மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது.
    • 29-ந் தேதி இரவு, சாமிக்கு திருக்கல்யாணம் மற்றும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் பழைய மார்க்கெட் பகுதியில் அமைந்துள்ள சக்தி காளி யம்மன், சக்தி மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது.

    விழாவை முன்னிட்டு கடந்த 21-ந் தேதி கொடி யேற்றுதல் மற்றும் பூச்சாற்று தல், நந்தா தீபம் ஏற்றுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. 29-ந் தேதி இரவு, சாமிக்கு திருக்கல்யாணம் மற்றும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    4-ந் தேதி காவிரி ஆற்றில் இருந்து முப்போடு அழைத்தல், 5-ந் தேதி காவிரி ஆற்றில் இருந்து சக்தி அழைத்தல், பால்குடம் மற்றும் தீர்த்த குடம் எடுத்து வந்து சூரசம்காரம் செய்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    தொடர்ந்து பக்தர்கள் கருவறைக்குள் சென்று தாங்களாக அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை காவிரி ஆற்றில் இருந்து அக்னி கிரகம், மாவிளக்கு எடுத்து வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நேற்று காலை பூ மிதித்தல் மற்றும் சாமிக்கு பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி நடை பெற்றது. இரவு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட புஷ்ப அலங்காரத்துடன் சாமி திருவீதி உலா மற்றும் வான வேடிக்கை நடைபெற்றது.

    திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தர்மகத்தா குப்புசாமி தலைமையில் கோவில் நிர்வாக கமிட்டினர் சிறப்பாக செய்திருந்தனர்.

    • பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் தேரில் எழுந்தருளப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
    • திருத்தேர் பவனியில் சுற்றுவட்டார கிராம பகுதியில் இருந்து ஏராளமாக மக்கள் கலந்து கொண்டனர்.

    பூதலூர்:

    பூதலூர் தாலுகாவில் உள்ள கோவிலடி அப்பால ரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவை ஒட்டி திருத்தேர் வீதி உலா நடைபெற்றது.

    கோவிலில் பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.அதனை தொடர்ந்து பக்தர்கள் வடம்பிடித்து தேரை இழுத்து வந்தனர்.

    கோவிலை சுற்றியுள்ள தெருக்களின் வழியாக வந்த திருத்தேர் கோவில் நிலையை அடைந்ததும் தேரின் மேல் இருந்த உற்சவமூர்த்திகள் கோயில் கொண்டு செல்லப்பட்டு திருத்தேர் பவனி நிறைவு பெற்றது.

    திருத்தேர் பவனியில் சுற்றுவட்டார கிராம பகுதியில் இருந்து ஏராளமாக மக்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    தேர் பவனி ஏற்பாடுகளை கோவில் இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் ஜனனி, செயல் அலுவலர் சிவேந்திரராஜா மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

    • பங்குனி உத்திர திருவிழாவில் தி.மு.க.வினர் அன்னதானம் வழங்கினர்.
    • நகர்மன்ற உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் பங்குனி உத்தர திருவிழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம், பழச்சாறு மற்றும் மோர் வழங்கும் நிகழ்ச்சி தி.மு.க. சார்பில் நடந்தது. மாவட்ட செயலாளர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ.யின் அறிவுரையின்படி நடந்த இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. செயற்குழு உறுப்பினர் குணசேகரன், அவரது மகன் அருண் குணசேகரன், ராமநாதபுரம் கார்மேகம், நகர்மன்ற துணைத்தலைவர் பிரவீன் தங்கம், முன்னாள் நகர்மன்ற தலைவர் ஜெகநாதன், முன்னாள் நகரச்செயலாளர் மங்களேஸ்வரன், தகவல் தொழில்நுட்ப அணி பழ.பிரதீப் பழனிவேல், நகர்மன்ற உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • விழாவின் முக்கிய நாளான நேற்று பங்குனி உத்திர திருவிழா நடைபெற்றது.
    • பஞ்சமூர்த்தி சுவாமிகள் எழுந்தருளி பங்குனி உத்திர தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது.

    கும்பகோணம்:

    திருவிடைமருதூர் அருகே திருமங்கலக்குடி மங்களநாயகி சமேத பிராணநாத சுவாமி கோயில் பங்குனி உத்திரப் திருவிழா விக்னேஸ் வர பூஜை வாஸ்து சாந்தி போன்ற பூர்வாங்க பூஜைகளுடன் மார்ச் 25-ம் தேதி தொடங்கப்பட்டது. இதைய டுத்து மறுநாள் 26-ம் தேதி சிறப்பு அபி ஷேக, ஆராதனைகள் செய்து கோயில் கொடி மரத்தில் ரிஷப கொடியேற்றம் நடந்தது.

    இதைத் தொடர்ந்து தினமும் காலை, மாலை நேரங்களில் சிறப்பு அலங்காரத்துடன் வெவ்வேறு வாகனங்களில் வீதியுலா புறப்பாடு நடந்தது. விழாவின் சிறப்பம்சமாக 30-ம் தேதி சகோபுர காட்சியும், , 3-ம் தேதி திருத்தேரோட்டமும் நடந்தது.விழாவின் முக்கிய நாளான நேற்று பங்குனி உத்திர திருவிழா நடை பெற்றது.

    இதை ஒட்டி விநாயகர், சுப்பிரமணியர், சுவாமி, அம்பாள், சண் டிகேஸ்வரர் மற்றும் அஸ்திரதேவர் சகிதமாக பஞ்சமூர்த்தி உற்சவர் சுவாமிகள் சிறப்பு மலர் அலங்காரத்தில் வீதி உலா எழுந்தருளினர். காலை 11 மணி அளவில் காவிரி ஆற்றில் பஞ்சமூர்த்தி சுவாமிகள் எழுந்தருளி பங்குனி உத்திர தீர்த்த வாரி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • திருவிழா கடந்த 28-ந் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.
    • அக்னி சட்டி, சக்தி கரகம் எடுத்து வந்த பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்து சென்றனர்.

    வடவள்ளி,

    கோவை தொண்டாமுத்தூர் அடுத்த கெம்பனூர் அண்ணா நகரில் வீரமாஸ்தியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

    இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 28-ந் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடர்ந்து முகூர்த்தங்கால் நடுதல், காப்பு கட்டுதல், அக்னி கம்பம் நடும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    நேற்று சக்தி கரகம், அக்னி சட்டி ஊர்வலம், அம்மனை ஆற்றில் இருந்து அழைத்துவரும் நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சக்தி கரம் எடுத்தும், அக்னி சட்டி எடுத்து வந்தும் அம்மனை தரிசனம் செய்து சென்றனர்.

    இன்று மாவிளக்கு பூஜை முளைப்பாரி , அம்மனுக்கு சீர் தட்டுகள் கொண்டுவருதல் நிகழ்ச்சி நடக்கிறது. அதனை தொடர்ந்து நாளை அம்மனுக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடக்க உள்ளது. தொடர்ந்து 108 திருவிளக்கு வழிபாடும் நடைபெற உள்ளது.

    விழாவின் இறுதியாக அக்னி கம்பம் ஆற்றுக்கு எடுத்து செல்லுதல், மறுபூஜை , மஞ்சள் நீராட்டு விழாவுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. இந்த திருவிழா கோவை ஆதீனம் ஸ்ரீலாஸ்ரீ பாலமுருகனடிமை சுவாமிகள் அருளாசியுடன் நடைப்பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கெம்பனூர் அண்ணா நகர் ஊர்பொதுமக்கள், விழா கமிட்டியினர் செய்துள்ளனர்.

    ×