search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 105298"

    • 96-ம் ஆண்டு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது
    • பக்தர்கள் பறவை அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    வடவள்ளி,

    கோவை சிறுவாணி சாலை ஆலந்துறையில் ஸ்ரீ காமாட்சி அம்மன் திருக்கோவில் உள்ளது. 24 மனை தெலுங்கு செட்டியார்கள் சமூகத்தினரின் கோவிலான இக்கோவிலில் 96-ம் ஆண்டு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்தத் திருவிழாவை வான வேடிக்கைகளுடன், மேளதாளங்கள் முழங்க பிரம்மாண்டமாக கொண்டாடினர்.

    இதில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். கடந்த மாதம் 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய கோவில் திருவிழாவில் ஒவ்வொரு நாளும் சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்று காமாட்சி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாளித்தார்.

    நேற்று கோமாரி பூஜை செய்யப்பட்டு இரவு சத்தி கிரகம் எடுத்து அம்மன் ஊர்வலம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து முக்கிய நிகழ்வான இன்று அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.

    இதில் காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மாலையில் 501 பக்தர்கள் பூவோடு எடுத்தனர். மேலும் பறவை வாகனத்தில் அலகு குத்துதல், ஆணி கால் செருப்பு, பால்குடங்கள் போன்ற நேர்த்திக்கடன்கள் செலுத்தப்பட்டது.

    இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் சிலர் காந்தாரா போன்ற காவல் தெய்வங்களின் அலங்காரத்துடன் ஊர்வலம் மேற்கொண்டனர். தொடர்ந்து வண்ணமிகு வான வேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை ஏராளமான பொதுமக்கள் கண்டுகளித்தனர். நாளை மாவிளக்கு வழிபாடு, முளைப்பாரி வழிபாடு ஆகியவை நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து மஞ்சள் நீராட்டு விழாவுடன் நிகழ்ச்சி நிறைவடைகிறது.

    • செந்தில் நகரில் மகா காளியம்மன் கோவில் திருத்தேர் பெருவிழா நடைபெற்று வருகிறது.
    • அக்னி குண்டம் இறங்கிய பின் சாமி முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா வந்தது.

    தருமபுரி,

    தருமபுரி அடுத்த இலக்கியம்பட்டி எல்லாத்தையும் பட்டி பஞ்சாயத்து செந்தில் நகரில் ஸ்ரீ மகா காளியம்மன் கோவில் 123-வது ஆண்டு திருத்தேர் பெருவிழா நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த கடந்த 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து நேற்று காலை காளியம்மன், மாரியம்மன் சாமிகளின் வீதி உலா நடைபெற்றது. திருவிழாவின் ஒரு பகுதியாக குண்டம் இறங்குதல் நிகழ்வானது நடைபெற்றது. இரவு நடைபெற்ற இந்த நிகழ்வில் தலைமை கோவில் பூசாரி முதலவதாக பூமிதித்து நிகழ்வை தொடங்கி வைத்தார். அதன் பின் ஆண்களும், பெண்களும் திரளாக கலந்து கொண்டு பூ மிதி திருவிழாவில் பங்கேற்றனர்.

    அக்னி குண்டம் இறங்கிய பின் சாமி முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா வந்தது. சாமி வரும் பொழுது பக்தர்கள் குழந்தைகள் பாக்கியம் வேண்டியும், திருமணம் நடைபெற வேண்டி தரையில் படுத்துக்கொண்டனர். இவர்களை சாமி தாண்டி சென்றால் நினைத்தது நிறைவேறும் என்ற நம்பிக்கையில் நீண்ட தூரம் படுத்து கொண்டனர் இவர்களை சாமி தாண்டி சென்று கோயிலை அடைந்தது . கோயிலில் உள்ள ஊஞ்சலில் சாமியை வைத்து தாலாட்டு பாடும் உற்சவம் நடைபெற்றது. வருகிற 5-ந் தேதி மகா காளியம்மன் தேர் திருவிழா நடைபெறுகிறது.

    விழாவில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

    • கொடியேற்று விழா நிகழ்ச்சியில் கோட்டாறு மறை மாவட்ட ஆயர் நசரேன் சூசை கலந்து கொள்கிறார்.
    • 13-ந் தேதி இரவு தேர் பவனி நடைபெறுகிறது.

    நாகர்கோவில் :

    தென் தமிழகத்தில் புகழ்பெற்ற திருத்தலங்களில் ராஜாவூர் புனித மிக்கேல் அதிதூதர் திருத்தலமும் ஒன்று. இந்த ஆலயத்தில் நாளை (5-ம் தேதி) திருவிழா தொடங்குகிறது. வருகிற 14-ந்தேதி வரை விழா நடக்கிறது.

    திருவிழா நாட்களில் தினமும் திருப்பலி, ஆண்டு விழா, சிறப்பு ஜெப வழிபாடு, அன்பில் விருந்து, மறைக்கல்வி மன்ற ஆண்டு விழா தொழிலாளர்கள் நடத்தும் கலை நிகழ்ச்சிகள், திருவிருந்து திருப்பலி, நற்கருணை பவனி, திருமுழுக்கு திருப்பலி, சிறப்பு மாலை ஆராதனைகள், மலையாள திருப்பலி ஆகியவை நடை பெறுகிறது.

    கொடியேற்று விழா நிகழ்ச்சியில் கோட்டாறு மறை மாவட்ட ஆயர் நசரேன் சூசை கலந்து கொள்கிறார்.

    மேலும் 13-ந் தேதி இரவு தேர் பவனி நடைபெறுகிறது. 10-ம் திருவிழா நாளில் பகல் 12 மணிக்கு ஆடம்பர தேர் பவனியும், மாலை 7 மணிக்கு தேர் திருப்பலியும் நடைபெறுகிறது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை அருட்தந்தை ஸ்டான்லி சகாயம், துணைத் தலைவர் அலெக்சாண்டர், செயலாளர் ராஜபாலன், துணைச் செயலாளர் கலாமேரி, பொருளாளர் ஆன்றோ சசி மற்றும் பங்கு இறை மக்கள், அருட் சகோதரிகள், பங்கு அருட்பணி பேரவை, பங்கு இணை தந்தையர்கள் செய்து வருகின்றனர். திருவிழாவையொட்டி அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் விழாக்கால சிறப்பு பேருந்து இயக்கப் படுகிறது.

    • கருப்பர் கோவிலில் மது எடுப்பு திருவிழா நடைபெற்றது.
    • பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்தும் வழிபட்டனர்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ காசாம்பு நீலமேனி கருப்பர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 8 நாட்களுக்கு முன்பு காப்பு கட்டுதளுடன் திருவிழா தொடங்கியது. தொடர்ந்து எட்டு நாட்களும் மண்டகப் படிதாரர்களால் கோவிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. திருவிழாவின் கடைசி நாளான நேற்று முக்கிய நிகழ்வான மது எடுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கறம்பக்குடி தட்டாவூரணி தென்நகர் அக்ரஹாரம் குலகாரன் தெரு மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தங்களது இல்லங்களில் குடங்களை வைத்து அதில் தென்னம்பாளைகளை வைத்து அலங்கரித்து தலையில் சுமந்தபடி கறம்பக்குடி சீனி கடை மூக்கில் உள்ள முருகன் கோவிலில் இருந்து ஊர்வலமாக சென்றும், பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்தும் அருள்மிகு காசாம்பு நீலமேனி கருப்பர் கோவிலில் தங்களது நேர்த்திக் கடனை செலுத்தி வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை கறம்பக்குடி காவல் நிலைய ஆய்வாளர் செந்தூர் பாண்டியன் தலைமையில் செய்திருந்தனர்.

    • கடந்த 18-ந் தேதி வாஸ்து பூஜையுடன் திருவிழா தொடங்கியது.
    • தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    கவுண்டம்பாளையம்,

    கோவை துடியலூர் அடுத்துள்ள பன்னிமடை ஊராட்சி தாளியூரில் உள்ள மாகாளியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா நடைபெற்றது. கடந்த 18-ந் தேதி வாஸ்து பூஜையுடன் தொடங்கிய விழாவில் கணபதி ஹோமம், பூச்சாட்டுதல், கொடி ஏற்றுதல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    தொடர்ந்து பொன்னூத்து, அனுவாவி, மருதமலை ஆகிய கோவில்களில் இருந்து புனித நீர் கொண்டு வருதல், சக்தி கரகம் ஊர்வலம், அம்மனுக்கு திருக்கல்யாணம், வாஸ்து, புஷ்ப மற்றும் மலர் அலங்கார பூஜைகள், விளக்கு பூஜை நடை பெற்றது.

    தொடர்ந்து நேற்று குண்டம் கண் திறப்பு, கரும்பு வெட்டுதல், வாண வேடிக்கை உள்ளிட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையடுத்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான குண்டம் திருவிழா இன்று காலை தொடங்கியது.

    இதில் அம்மனுக்கு வெண்ணை சாற்றிஉருகி வழிந்ததும், பூச்செண்டை குண்டத்தில் உருட்டி பூசாரி, சக்தி கரகம், துணை கரகங்கள், அணிக்கூடை, வேல் ஏந்திய பக்தர்கள், ஊர் பெரியவர்கள் என ஒவ்வொருவராக பூக்குண்டத்தில் இறங்கினர்.

    தொடர்ந்து பக்தர்கள் மற்றும் குழந்தைகள் பூக் குண்டத்தில் இறங்கினர். அப்போது பக்தர்கள் ஓம் சக்தி, பராசக்தி என கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    • மகுடஞ்சாவடி மாரியம்மன் கோவில் தேர்த் திருவிழா கடந்த 19-ந்தேதி பூச்சாட்டுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
    • 10-ந்தேதி ஊர் மெரவனையும் நடைபெற உள்ளது.

    மகுடஞ்சாவடி:

    சேலம் அருகே மகுடஞ்சாவடி மாரியம்மன் கோவில் தேர்த் திருவிழா கடந்த 19-ந்தேதி பூச்சாட்டுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று மகுடஞ்சாவடி மளிகை கடைக்காரர்கள் சங்கம் சார்பில் மெரவணை நடைபெற்றது.

    இன்று பருத்தி வியாபாரிகள் சங்கம் சார்பிலும், நாளை (வியாழக்கிழமை) சிம்ம வாகனத்தில் அம்மனுக்கு மெரவணை நடைபெற உள்ளது. நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) அதிகாலையில் அம்மனுக்கு திருக்கல்யாணமும், மாலை பொங்கல் பண்டிகை, ரத உற்சவம் நடைபெற உள்ளது. 7-ந்தேதி வெற்றிலை வியாபாரிகள் சங்கம் சார்பிலும், 8-ந்தேதி அகரம் வெள்ளம் செட்டியார் சங்கம் மற்றும் அரிசி வியாபாரிகள் சங்கம் சார்பிலும், 10-ந்தேதி ஊர் மெரவனையும் நடைபெற உள்ளது. 11-ந்தேதி மஞ்சள் நீராட்டமும் அம்மன் குடிபுகுதலும் நடைபெற உள்ளது. இவ்விழாவிற்கான ஏற்பட்டினை தர்மகர்த்தாக்கள், அறங்காவலர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.

    • மானாமதுரை சித்திரை திருவிழாவில் ராட்டினங்களை இயக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.
    • வைகை ஆற்று பரப்பு முழுவதும் ஜொலிக்கும்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் சித்திரை திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. மதுரைக்கு அடுத்தபடியாக மானாமதுரை சித்திரை திருவிழாவை காண பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவார்கள்.

    மானாமதுரையில் 10 நாட்கள் திருவிழாவும் வைகைஆற்றில் நடைபெறு வதால் வைகை ஆற்று பகுதி களைகட்டிவிடும். ஆற்றில் எங்கு பார்த்தாலும் பொது மக்கள் குடும்பத்துடன் வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.

    பொதுமக்கள் கூடுவதை முன்னிட்டு ஆற்றில் பொழுதுபோக்குக்காக ஜெயன்ட் வீல், டோரா டோரா, குட்டி ரெயில், பட்டர் பிளை ராட்சத பலூன், ராட்டினங்கள், கப் ராட்டிணங்கள் என ஏராள மான அம்சங்கள் இடம் பெறும். ராட்டிணங்கள் அமைப்பாளர்களால் அமைக்கபட்ட அலங்கார மின்விளக்குகளால் வைகை ஆற்று பரப்பு முழுவதும் ஜொலிக்கும்.

    இந்நிலையில் இந்தாண்டு திருவிழாவில் ஒருசில ராட்டினங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது. தொட்டி ராட்டிணம் இயக்கப்படாததால் பொதுமக்களும், குழந்தைகளும் ஏமாற்றமடைந்துள்ளனர். எனவே போதிய பாதுகாப்பு அம்சங்களுடன் அனைத்து வகை ராட்டினங்களையும் இயக்க வேண்டும் என பொதுமக்கள் வலி யுறுத்தியுள்ளனர். இந்த தொழிலில் ஏராளமானோர் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு திருவிழாவில் ராட்டிணங்களை அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    • கோவில் திருவிழாவில் திருடிய 2 பேர் சிக்கினர்.
    • போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே அத்திப்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது. இங்கு சாமி கும்பிடுவதற்காக அழகன்ராஜ் (வயது 63) என்பவர் நடந்த வந்து கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர் அவர் சட்டை பையில் வைத்திருந்த ரூ.3 ஆயிரத்தை பறித்து கொண்டு தப்பி செல்ல முயன்றார்.

    சுதாரிக் கொண்ட அழகன்ராஜ் அங்கிருந்தவர்கள் உதவி யுடன் அந்த நபரை பிடித்து சாப்டூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். விசாரணையில் அவர் மதுரை நாகமலை புதுக்கோட்டையை சேர்ந்த பிச்சைபாண்டி (51) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.

    அதே திருவிழாவிற்கு வந்திருந்த மாரியப்பன் (47) என்பவரிடம் ரூ.5 ஆயிரத்தை வழிப்பறி செய்து ஒரு வாலிபர் தப்பி செல்ல முயன்றார். அங்கிருந்தவர்கள் அவரை பிடித்து போலீசில் ஒப்படை த்தனர். விசாரணையில் அவர் உசிலம்பட்டி அருகே உள்ள அய்யன்கோ வில்பட்டியை சேர்ந்த ரமேஷ் (40) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.

    • மாலையில் முளைப்பாரி எடுத்துச்செல்கின்றனர்
    • விழா நாட்களில் பக்தர்களுக்கு தினமும் அன்னதானம் வழங்கப்படுகிறது.

    நாகர்கோவில் :

    புலவர்விளை தேவி ஸ்ரீ முத்தாரம்மன் கோவிலில் சித்திரை கொடை விழா மற்றும் சித்ரா பவுர்ணமி விழா கடந்த 23-ந்தேதி தொடங்கியது. விழாவை முன்னிட்டு தினமும் அம்பாளுக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.

    9-ம் திருநாளான இன்று (திங்கட்கிழமை) காலை சக்திஹோமம், லட்சுமி பூஜை போன்றவை நடைபெற்றன. தொடர்ந்து பக்தர்கள் பால்குடம் ஊர்வலம் நடைபெற்றது. நாகராஜா கோவிலில் இருந்து பால்குடத்துடன் பக்தர்கள் ஊர்வலமாக புறப்பட்டனர்.

    ஊர் தலைவர் செல்வராஜன் உள்ளிட்ட நிர்வாக குழுவினர் மற்றும் பொதுமக்கள் இதில் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது. மாலையில் பக்தர்கள் முளைப்பாரி எடுத்து மேளதாளம் முழங்க ஊர்வலமாக செல்கின்றனர்.

    நாளை (2-ந்தேதி) ஒழுகினசேரி ஆற்றில் இருந்து அம்மன் யானை மீது பவனி வருதல் மற்றும் பெண்கள் மாவிளக்கு ஏற்றி அம்பாளுடன் கோவிலை சுற்றி வலம் வருதல் போன்றவை நடக்கிறது.

    மறுநாள் (3-ந்தேதி) பூப்படைப்பு பூஜை, மஞ்சள் நீராட்டுதல், தேவி ஸ்ரீ முத்தாரம்மன் தங்க பூந்தொட்டிலில் திருத்தா லாட்டு போன்றவை நடக்கிறது.

    5-ந்தேதி சித்ரா பவுர்ணமி பொங்கல் வழிபாடு நடைபெறுகிறது. ஏராளமான பெண்கள் இதில் பங்கேற்று, அம்பாள் சன்னதியில் பொங்கல் வைக்கின்றனர். இரவில் சிம்ம வாகனத்தில் அம்மன் வீதி உலா மற்றும் பவுர்ணமி சிறப்பு பூஜை நடைபெற உள்ளது.

    விழா ஏற்பாடுகளை ஊர் தலைவர் செல்வராஜன் மற்றும் நிர்வாக குழுவினர் செய்துள்ளனர். விழா நாட்களில் பக்தர்களுக்கு தினமும் அன்னதானம் வழங்கப்படுகிறது.

    • மானாமதுரை வீர அழகர் கோவில் சித்திரை திருவிழா தொடங்கியது.
    • வீர அழகரை வரவேற்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வைகைஆற்றில் பிரசித்தி பெற்ற வீர அழகர் கோவிலில் சித்திரைத் திருவிழா இன்று காலை தொடங்கியது. இந்த திருவிழா வருகிற 11-ந்தேதிவரை நடக்கிறது. விழாவையொட்டி கோவிலில் உள்ள சுந்தரராஜ பெருமாளுக்கு காப்பு கட்டும் பூஜைகள் நடந்தன.

    தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவின் போது தினமும் இரவு பன வீர அழகர் என்ற நாமத்துடன் அழைக்கப்படும் சுந்தரராஜப் பெருமாள் மண்டகப்படிகளில் எழுந்தருளி, பின்னர் வீதி உலா நடைபெறும். முக்கிய நிகழ்ச்சியாக ஆற்றில் அழகர் இறங்கும் வைபவம் வருகிற 5-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 6.25 மணியில் இருந்து 7.25 மணி வரை நடைபெறுகிறது. மறுநாள் (சனிக்கிழமை) இரவு மானாமதுரை கிராமத்தார் மண்டகபடி நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    இதில் பக்தர்கள் வீர அழகருடன் வைகைஆற்றில் நிலாசோறு சாப்பிடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இன்று முதல்நாள் நிகழ்ச்சி மானாமதுரை நகராட்சி நிர்வாகம் சார்பில் நடைபெறுகிறது. நகராட்சி அலுவலகத்தில் வீர அழகரை வரவேற்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    • தெப்பம் 3 முறை உலா வரும்போது மரபுபடி வடம் பிடித்து இழுப்பது வழக்கம்
    • தீயணைப்பு வீரர்கள் ரப்பர் படகுகளில் தெப்பக்குளத்தை சுற்றி வந்து கொண்டிருந்தனர்

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில் களில் ஒன்றான சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் சித்திரை தெப்பத்திருவிழா கடந்த மாதம் 21-ந்தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது.

    திருவிழாவையொட்டி தினமும் வாகன பவனி, சப்பர ஊர்வலம், சமய சொற்பொழிவு, பக்தி இன்னிசை, பக்தி மெல்லிசை, பரதநாட்டியம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது.

    9-ம் திருவிழாவான நேற்று முன்தினம் (சனிக்கிழ மை) தேரோட்டம் நடந்தது. இதில் அம்மன் தேர், சப்பரத்தேர், பிள்ளையார் தேர் என 3 தேர்தல் உலா வந்தன. 10-ம் திருவிழாவான நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கோவில் தெப்பக்குளத்தில் தெப்பத்திருவிழா நடந்தது.

    அதையொட்டி நேற்று இரவு 8 மணியளவில் சாமியும், அம்பாளும், பெரு மாளும், இரு தட்டு வா னத்தில் மேளதா ளத்துடன் கோவிலில் இருந்து எழுந்த ருளி தெப்பக்குளத்தில் உள்ள தெப்பத்தில் எழுந்த ருளினர்.

    முன்னதாக தெப்பக்கு ளத்தை சுற்றி உள்ள அகல் விளக்குகளில் தீபம் ஏற்றப்பட்டு தெப்பக்குளம் ஜொலித்து கொண்டிருந்தது. ஜொலிக்கும் தெப்பக்குளத்தில் தெப்பம் 3 முறை உலா வந்தது. தெப்பம் 3 முறை உலா வரும்போது மரபுபடி வடம் பிடித்து இழுப்பது வழக்கம். அதுபோல் தெப்பத்தின் முதல் சுற்றை காக்கமூர் இளைஞர்களும், 2-வது சுற்றை மேல தெரு இளை ஞர்களும், 3-வது சுற்றை கீழதெரு இளைஞர்களும் வடம் பிடித்து இழுத்து வந்தனர். 3-வது சுற்று திருவாவடுதுறை ஆதீனம் அருகே வந்தபோது வாண வேடிக்கை நடத்தப்பட்டது.

    விழாவையொட்டி பாதுகாப்பு கருதி தீயணைப்பு வீரர்கள் ரப்பர் படகுகளில் தெப்பக்கு ளத்தை சுற்றி வந்து கொண்டிருந்தனர்.

    தெப்பத்திருவிழா முடிந்த பிற்பாடு சாமி, அம்பாள், பெருமாள் மீண்டும் தட்டு வாகனங்களில் எழுந்தருளி 4 ரத வீதிகளில் உலா வந்தன. அப்போது பக்தர் கள் தங்கள் வீடுகளின் முன் திருக்கண் சாத்தி வழிபாடு செய்தனர். நள்ளிரவு 12 மணிக்கு ஆராட்டு விழா நடந்தது.

    • கடந்த 14-ந்தேதி சீதளாதேவி மாரியம்மனுக்கு காப்பு கட்டி பக்தர்கள் விரதம் இருந்தனர்.‌
    • மாரியம்மனுக்கு பால், இளநீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா, செம்பனார்கோயில் அருகே நெடுவாசல் கிராமத்தில் உள்ள ஶ்ரீ சீதளாதேவி மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது.

    வேண்டிய வரத்தை அள்ளித்தரும் நெடுவாசல் சீதளாதேவி மாரியம்மன் கோவில் 20 -ம் ஆண்டு தீமிதி திருவிழாவை தொடர்ந்து கடந்த 14-ம் தேதி சீதளாதேவி மாரியம்மனுக்கு காப்பு கட்டி பக்தர்கள் விரதம் இருந்தனர்.

    இதனை தொடர்ந்து 15 ஆம் நாள் நேற்று கடலி ஆற்றாங்கரையில் இருந்து கரகம், பால் காவடி, அலகு காவடிகள் புறப்பட்டு, வாணவேடிக்கை, மேளதாளம் முழங்க முக்கிய வீதி வழியாக கோயிலை வந்தடைந்தது.

    சீதளாதேவி மாரியம்மனுக்கு பால், இளநீர், பன்னீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர்.

    இக்கோயிலின் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீ குண்டத்தில் விரதம் இருந்த ஏராளமான பக்தர்கள் தீ குண்டத்தில் இறங்கி தங்க ளது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

    இதற்கான விழா ஏற்பாடுகளை நெடுவாசல், கொங்கராயன்மண்டபம், பட்டாவரம் கிராமவாசிகள் செய்திருந்தனர்.

    திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு மா விளக்கு போட்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

    இதில் பஞ்சா யத்தார்கள் , விழா குழுவி னர்கள் கலந்து கொண்டனர்.

    ×