search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 105298"

    • மதுரைவீரன் கோவிலில் சித்திரை திருவிழா நடைபெற்றது
    • இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    கரூர்:

    கரூர் வேலாயுதம்பாளையம், அண்ணா நகரில் பிரசித்தி பெற்ற மதுரை வீரன் கோவில் உள்ளது. இக்கோவிலில் சித்திரை திருவிழா 2 நாட்கள் நடைபெற்றது. முதல்நாள் நிகழ்ச்சியாக திரளான பக்தர்கள் காவிரி ஆற்றில் இருந்து தீர்க்குடம் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். 2-ம் நாள் நிகழ்ச்சியாக நேற்று காலையில் கோவில் பூசாரி அருள்வந்து ஆடி அரிவாள் மீது ஏறி நின்று ஆண், பெண்கள் மீது சாட்டையால் அடிக்கும் நிகழ்ச்சி (பேய் விரட்டும் நிகழ்ச்சி) நடந்தது. அதன் பின் கிடா விருந்து நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர்.


    • 20 வெளி மாநிலங்களை சேர்ந்த கலைஞர்கள், தங்களது படைப்புகளை 83 அரங்குகளில் காட்சிக்கு வைத்திருந்தனர்.
    • மண்பானை செய்வது எப்படி? என்பது குறித்து மண்பாண்ட தொழிலாளர்கள் செய்து காண்பித்தனர்.

    சென்னை:

    சென்னை தீவுத்திடலில் கைத்தறி, கைவினை பொருட்கள் திருவிழாவை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.

    தமிழக சுற்றுலாத்துறை மற்றும் சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் சென்னை தீவுத்திடலில் 'சென்னை விழா-2023' என்ற பெயரில் கைத்தறி மற்றும் கைவினை பொருட்கள் திருவிழாவுக்காக 300-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

    இதில் 30 அரங்குகளில் வங்காளம், பூடான், ஈரான், நேபாளம், நைஜீரியா, தென் ஆப்பிரிக்கா, இலங்கை, உகாண்டா, கிர்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய 10 வெளிநாடுகளை சேர்ந்த கைவினை கலைஞர்கள் தங்களது நாட்டு பொருட்களை காட்சிப்படுத்தி இருந்தனர்.

    இதுதவிர 20 வெளி மாநிலங்களை சேர்ந்த கலைஞர்கள், தங்களது படைப்புகளை 83 அரங்குகளில் காட்சிக்கு வைத்திருந்தனர்.

    அதேபோன்று தமிழக கைத்தறி நெசவாளர்கள் உற்பத்தி செய்த நெசவு துணி வகைகள், பட்டு சேலைகள், கைத்தறி கூட்டுறவு சங்கத்தின் கோ-ஆப்-டெக்ஸ் துணி வகைகள், பூம்புகார் கைவினைப் பொருட்கள் உள்ளிட்டவை 70 அரங்குகளில் இடம் பெற்றிருந்தன.

    ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் மகளிர் சுய உதவிக் குழு உற்பத்தி பொருட்களும் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தன.

    இதன் தொடக்க விழா சென்னை தீவுத்திடலில் நேற்று நடந்தது.

    தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இந்த திருவிழாவை தொடங்கி வைத்து கண்காட்சியை திறந்து வைத்தார்.

    இதன்பின்பு, கண்காட்சியில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு அரங்குகளுக்கும் நேரில் சென்று அங்குள்ள பொருட்களை பார்வையிட்டு அவற்றின் முக்கியத்துவம் குறித்து கேட்டறிந்தார்.

    கண்காட்சி அரங்கில் மண்பானை செய்து விற்பனை செய்யப்பட்டது. மண்பானை செய்வது எப்படி? என்பது குறித்து மண்பாண்ட தொழிலாளர்கள் செய்து காண்பித்தனர். அதனை ஆர்வமுடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் செய்து பார்த்தார். இதேபோன்று கண்காட்சி அரங்கிலேயே மஞ்சள் பை தயாரித்து வழங்கப்பட்டது. பிளாஸ்டிக்கை தவிர்த்து துணிப்பையை பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் மீண்டும் மஞ்சள் பை என்ற வாசகம் பொறிக்கப்பட்ட துணிப்பையை தூக்கி காண்பித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    விழாவில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, ஆர்.காந்தி, கா.ராமச்சந்திரன், மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், தமிழக சுற்றுலாத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் பி.சந்திரமோகன், சுற்றுலாத்துறை இயக்குனர் சந்தீப் நந்தூரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இந்த கண்காட்சியை பொதுமக்கள் தினமும் காலை 11 மணி முதல் இரவு 10 மணி வரை கண்டுகளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கடந்த 14-ந் தேதி மகா கணபதி பூஜை செய்து கம்பம் நடுதல், கங்கணம் கட்டுதல், முளைப்பாரி இடுதல் நிகழ்ச்சிகளுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
    • விழாவை முன்னிட்டு இன்று மாலை 6 மணிக்கு விளக்கு பூஜை நடக்கிறது.

    சேலம்:

    சேலம் சாமிநாதபுரம், மருதநாயகம் தெருவில் உள்ள ஸ்ரீ ஸ்வர்ண காளியம்மன் கோவில் திருவிழா, கடந்த 14-ந் தேதி மகா கணபதி பூஜை செய்து கம்பம் நடுதல், கங்கணம் கட்டுதல், முளைப்பாரி இடுதல் நிகழ்ச்சிகளுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    விழாவை முன்னிட்டு இன்று மாலை 6 மணிக்கு விளக்கு பூஜை நடக்கிறது. தொடர்ந்து, நாளை முதல் 3 நாட்கள் திருவிழா விமரிசையாக நடைபெற உள்ளது.

    அதன்படி, நாளை மாலை 7 மணிக்கு சக்தி அழைத்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 30-ந் ேததி காலை 7 மணிக்கு கோவில் வளாகத்தில் ெபாங்கல் வைத்தல் நிகழ்ச்சியும், மதியம் 12 மணிக்கு திருமஞ்சன திருவீதி உலா, பூங்கரகம், அக்னி கரகம், சக்தி கரகம் எடுத்து செல்லும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. பின்னர் பால் அபிஷேகத்துடன் சிறப்பு பூஜை நடக்கிறது.

    மாலை 4 மணிக்கு மேல், விளையாட்டு போட்டிகள் நடைபெறும். மாலை 6 மணிக்கு கும்ப பூஜை செய்யப்பட்டு, இசக்கி அம்மன் குழந்தையுடன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்கிறார்.

    மே 1-ந் தேதி மதியம் 12 மணிக்கு இளந்தென்றல் நண்பர்கள் குழு சார்பாக 1000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட உள்ளது. விழாவிற்கான ஏற்பாடு களை கோவில் நிர்வாகத்தி னர் செய்து வருகின்றனர். 

    • கடந்த 31-ந் தேதி காப்பு கட்டி மின் அலங்காரத்துடன் அய்யனார் வீதியுலா நடந்தது.
    • 23-ந் தேதி சக்தி கரகம், படுகளம் நிகழ்ச்சி நடந்தது.

    கபிஸ்தலம்:

    பாபநாசம் அருகே மாத்தூரில் அய்யனார், வடிவுள்ள அம்மன், வடுகநாதர், மதுரை வீரன் கோவிலில் வடிவுள்ள அம்மனுக்கு பால்குடம், காவடி, தேர்வலம் வருதலை முன்னிட்டு அய்யனாருக்கு கடந்த 31-ந் தேதி காப்பு கட்டி மின் அலங்காரத்துடன் அய்யனார் வீதியுலா சிறப்பாக நடந்தது.

    விழாவிற்கு சிறப்பு விருந்தினராக தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து தொடங்கி வைத்தார்.

    இதனையொட்டி கடந்த 11-ந் தேதி இரவு எல்லை பிடாரிக்கு காப்பு கட்டுதல், அடுத்தநாள் வடிவுடைய அம்மனுக்கு காப்பு கட்டுதல், 23-ந் தேதி சக்தி கரகம், படுகளம், 25-ந்தேதி காலை பால்குடம், காவடி, கரகம், தொட்டி வெள்ளை விநாயகர் கோவிலில் இருந்து புறப்பாடு நிகழ்ச்சியும், இரவு வாணவேடிக்கை நிகழ்ச்சியும் நடந்தது.

    தொடர்ந்து, 26-ந் தேதி வடிவுடையம்மன், வடுகநாதர், மதுரை வீரன் ஆகிய 3 தேரை சிட்டி யூனியன் வங்கி தலைவர் பாலசுப்பிரமணியனும் வடம்பிடித்து தொடங்கி வைத்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்தனர். சுண்டக்குடி சுவாமிநாதன் மற்றும் மதியழகன் குழுவினரின் சரித்திர நாடக நிகழ்ச்சியும் நடந்தது.

    விழா ஏற்பாடுகளை கிராம நாட்டாண்மைகள், கிராமமக்கள் மற்றும் மாத்தூர் மேற்கு கிராம பக்தர்கள் செய்திருந்தனர்.

    • துக்கியாம்பாளையம் ஊராட்சி மேலுார் சக்தி மாரியம்மன் கோவிலில் 9 ஆண்டுக்கு பின் தேர்த்திருவிழா நடைபெறுகிறது.
    • இன்று மஞ்சள் நீராட்டு விழாவும் சத்தாபரண நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.

    வாழப்பாடி:

    வாழப்பாடி அருகே துக்கியாம்பாளையம் ஊராட்சி மேலுார் சக்தி மாரியம்மன் கோவிலில் 9 ஆண்டுக்கு பின் தேர்த்திருவிழா நடைபெறுகிறது. இதையொட்டி பொதுமக்கள் கருப்பனார், மாரியம்மன் உள்ளிட்ட அனைத்து காவல் தெய்வங்களுக்கும் பொங்கல் வைத்து சிறப்பு பூஜை வழிபாடு செய்தனர்.

    தொடர்ந்து பிரமாண்டமான மரத்தேர் கலைநயமிக்க வண்ண சேலைகளால் அலங்கரிக்கப்பட்டு ராஜவீதிகளில் தேரோட்டம் நடைபெற்றது. துக்கியாம்பாளையம், மேலுார், மாரியம்மன் புதுர், மன்னாயக்கன்பட்டி மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    நுாற்றுக்கணக்கான பக்தர்கள், வேண்டுதல் நிறைவேற்றிய அம்மனுக்கு, உடலில் அலகு குத்தியும், பூங்கரகம், அக்னிகரகம் எடுத்தும், உருளதண்டம் போட்டும் நேர்த்திக்கடன் செலுத்தினர். இன்று மஞ்சள் நீராட்டு விழாவும் சத்தாபரண நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.

    தேரோட்டத்தில் பங்கேற்ற பக்தர்கள்.

    • மகா சக்தி விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.
    • நாட்டுப்புற கலைஞர்கள் புலி வேஷ நடனம் ஆடியவாறு சென்றனர்.

    கோத்தகிரி கடைவீதியில் மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதையொட்டி தினமும் பல்வேறு உபயதாரர்கள் சார்பில், திருவீதி உலா நிகழ்ச்சி நடந்து வருகிறது. இதில் திருவிழாவின் 15-வது நாளான நேற்று காலை 9 மணிக்கு டானிங்டன் மகா சக்தி விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

    இதில் ஏராளமான பெண்கள் பால்குடங்களை தலையில் ஏந்தியவாறு கடைவீதி மாரியம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர். இதில் ஏராளமான நாட்டுப்புற கலைஞர்கள் பொய்க்கால் நடனம், புலி வேஷ நடனம் ஆடியவாறும், அம்மன் வேடமணிந்தும் ராம்சந்த் சதுக்கம், காமராஜர் சதுக்கம், பஸ் நிலையம் வழியாக மாரியம்மன் கோவில் முக்கிய சாலைகள் வழியாக சென்றடைந்தனர்.

    மதியம் 12 மணிக்கு அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டு, அலங்கார பூஜை நடந்தது. மாலை 3 மணிக்கு கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் ஓதுவார் மூர்த்தி, தேவார இசைமணி ஞானசம்பந்தன் ஓதுவார் கலந்துகொண்டு தேவார திருப்புகழ் பண்ணிசை நிகழ்ச்சியை நடத்தினர். மாலை 6 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தாமரை வாகனத்தில் அம்மன் எழுந்தருளி நகரின் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர் 

    • 30-ந்தேதி தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது
    • சக்கர தீவட்டியுடன் அம்மன் பவனி போன்றவை நடக்கிறது.

    நாகர்கோவில் :

    கூட்டாலுமூடு பத்ரேஸ்வரி அம்மன் கோவில் சித்திரை திருவிழா வருகிற 30-ந்தேதி தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது. புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி, தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி, மதுரை ஆதீனம் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கின்றனர்.

    முதல் நாள் காலையில் 4.30 மணிக்கு மேல் 5.15 மணிக்குள் தேவஸ்தான மேல்சாந்தி உன்னி கிருஷ்ணன் போற்றி முன்னி லையில், தந்திரி சங்கரன் நம்பூதிரி திருக்கொடியேற்று கிறார். தொடர்ந்து நேர்ச்சை வாணவேடிக்கையும், பொங்கல் வழிபாடும் நடை பெறும். மாலையில் இந்து சமய மாநாடு தொடக்க விழா நடக்கிறது.

    முன்னாள் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் தலைமை தாங்குகிறார். புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி மாநாட்டை தொடங்கி வைக்கிறார். சுவாமி சைதன்யானந்தஜி மகராஜ் ஆசியுரை வழங்கு கிறார்.

    இரண்டாம் நாளில் காலை யில் சந்தனக்குட பவனியும், மாவட்ட அளவிலான பஜனை போட்டியும், மாலை யில் விபாக் சேவா பிரமுக் ஈஸ்வரன்ஜி தலைமையில் இந்து சமய மாநாடும் இரவு அம்மன் பவனியும் மேஜிக் பேலஸ் நிகழ்ச்சியும், மூன்றாம் நாள் காலையில் சந்தனக்குட பவனியும் சூலினி துர்கா ஹோமமும், மாவட்ட அளவி லான வினாடி-வினா போட்டியும் மாலையில் அனந்தபுரி மருத்துவமனை நிர்வாக இயக்குனர் பத்மஸ்ரீ டாக்டர் மார்த்தாண்டம் பிள்ளை தலைமையில் இந்து சமய மாநாடும் நடைபெறுகிறது.

    4-ம் நாள் காலையில் சந்தனக்குட பவனியும், இரவு இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் அரசு ராஜா தலைமையில் இந்து சமய மாநாடும், 5-ம் நாள் மாலையில் மாவட்ட பாரதிய ஜனதா தலைவர் தர்மராஜ் தலைமையில் இந்து சமய மாநாடு நடக்கிறது. இதில் மதுரை ஆதீனம் ஆசியுரை வழங்குகிறார்.

    6-ம் நாள் காலையில் நவக்கிரக ஹோமமும், இரவு அம்சி மது தலைமையில் இந்து சமய மாநாடு நடக்கிறது. கோலாகலம் ஸ்ரீனிவாசன் சிறப்புரையாற்றுகிறார்.

    7-ம் நாள் காலையில் நவக்கிரக ஹோமமும், 9 மணிக்கு மாவட்ட அளவி லான பரதநாட்டிய போட்டி யும், இரவு எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. தலைமை யில் இந்து சமய மாநாடு நடக்கிறது. தமிழக கவர்னர் ஆர்.என். ரவி நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரையாற்று கிறார்.

    8-ம் நாள் காலையில் மாநில அளவிலான பேச்சு, கட்டுரை, கவிதை பாட்டு போட்டிகள் நடக்கிறது. இரவு முனைவர் சபிதா ராஜேஷ் தலைமையில் இந்து சமய மகளிர் மாநாடும், அம்மன் பவனியும் நடக்கிறது.

    9-ம் நாள் காலையில் மார்த்தாண்டம் நல்லூர் குறும்பேற்றி பகவதி அம்மன் கோவிலில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் பால்குடம் ஏந்தி வரும் நிகழ்வும், பாலமுருகனுக்கு நல்லெண்ணெய் அபிஷேகமும், பால் அபிஷேகமும், 10-ம் நாள் காலையில் பக்தி இன்னிசையும், அம்மன் பவனியும் இரவு கோவில் திருமடங்கள் தென்பாரத அமைப்பாளர் சரவணன் கார்த்திக் தலைமையில் இந்து சமய மாநாடு நடக்கிறது. இரவு திருக்கொடி இறக்குதல் நிகழ்வுக்கு பின்னர் மாபெரும் வானவேடிக்கை நடக்கிறது.விழா நாட்களில் தினமும் காலை, மாலைகளில் சிறப்பு பூஜைகள், அபிஷேகம், மலர் நிவேத்யம், மகா கணபதி ஹோமம், நவக பஞ்ச கவ்ய கலச பூஜை, புஷ்பாபிஷேகம், அலங்கார தீபாராதனை, இரவு முளபூஜை, 8 மணிக்கு அத்தாழ பூஜை, சக்கர தீவட்டியுடன் அம்மன் பவனி போன்றவை நடக்கிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தலைவர் குமார், செயலாளர் துளசிதாஸ், பொருளாளர் சவுந்தராஜன், துணை தலைவர் முருகன் உட்பட செயற்குழு உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.

    • எமனை வதம் செய்து மீண்டும் எமனை உயிர்ப்பித்த தலம்.
    • கொடிமரத்திற்கு அபிஷேகங்கள் செய்யப்பட்டு ரிஷப கொடியேற்றப்பட்டது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான உலகப் புகழ்வாய்ந்த ஸ்ரீ அபிராமி உடனாகிய ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது.

    இங்கு மார்க்கண்டேயர் உயிரைக் காப்பாற்று வதற்காக இறைவன் கால சம்ஹார மூர்த்தியாக எழுந்தருளி எமனை வதம் செய்து மீண்டும் எமனை உயிர்ப்பித்த தலம்.

    மார்க்கண்டேயர் என்றும் 16 (சிரஞ்சீவி) என்ற வரத்தை இவ்வாலயத்தில் பெற்றதால் இக்கோயிலில் ஆயுள் விருத்தி வேண்டி வயதான தம்பதிகள் ஆயுள்சிய ஹோமம் செய்து திருமணங்கள் மற்றும் பூஜைகள் நடைபெறுவது சிறப்பம்சமாகும்.

    பல்வேறு சிறப்புகள் உடைய தலங்களில் ஒன்றான இவ்வாலயத்தில் இறைவன் கால சம்ஹார மூர்த்தியாக எழுந்தருளி எமனை வதம் செய்யும் ஐதீக நிகழ்வு நடைபெறும்.

    இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.

    சென்னையை சேர்ந்த இராஜேந்திரன், வாசுகி, ராஜராஜன் ஆகியோர் கொடியேற்று விழாவி ற்க்கான உபயதாரர்கள் ஆவார்கள். விநாயகர், முருகன், அமிர்தகடேஸ்வரர், அபிராமி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகள் கொடி மரத்தின் முன்பு எழுந்தருளினர்.

    புனித நீர் அடங்கிய கடங்கள் பூஜிக்கப்பட்டது.

    கொடி மரத்திற்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பொருள்களால் பல்வேறு அபிஷே கங்கள் செய்யப்பட்டு ரிஷபக் கொடியேற்றப்பட்டது.

    இவ்விழாவில் ஸ்ரீமத் சுப்ரமணிய கட்டளை தம்பிரான் சுவாமிகள், கோயில் நிர்வாகத்தினர், கோயில் குருக்கள்கள், ஒன்றிய குழு துணை தலைவர் மைனர் பாஸ்கர், ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமாலதி சிவராஜ், மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    மேலும் தொடர்ந்து விழா நாட்களில் பல்வேறு அவதார வாகனங்களில் சாமி வீதி உலா நிகழ்ச்சியும், விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகின்ற 27-ம் தேதி அபிராமி உடனுறை அமிர்தகடேஸ்வரர் சாமி திருக்கல்யாணம், 30-ஆம் தேதி

    (ஞாயிற்றுக் கிழமை) இரவு காலசம்ஹாரமூர்த்தி

    எமனை வதம் செய்யும் ஐதீக திருவிழாவும்,மே 2-ஆம் தேதி காலை 8 மணிக்கு தேரோட்டமும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • சீதளாதேவி மாரியம்மனுக்கு பால், இளநீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
    • 11 தாம்பூலத்தில் பழங்கள், மங்கள பொருட்களுடன் சீர்வரிசை எடுத்து வந்து அம்மனை வழிப்பட்டனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் அருகே ஆக்கூரில் பழமைவாய்ந்த சீதளாதேவி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த ஆண்டு தீமிதி திருவிழா கடந்த 17 -ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் நேற்று தீமிதி திருவிழாவை முன்னிட்டு சீதளாதேவி மாரியம்மனுக்கு பால், இளநீர், பன்னீர், பஞ்சாமிர்தம், வாசனை திரவியங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    பின்னர் இரட்டை குளகரையிலிருந்து பால் காவடி, அலகு காவடி, பறவைக் காவடிகள் உடன் கரகம் புறப்பட்டு, வாணவேடிக்கை, மேளதாளம் முழங்க கடைவீதி வழியாக கோயிலை வந்தடைந்தது. கோயில் முன்பு அமைக்கபட்டியிருந்த தீ குண்டத்தில் பக்தர்கள் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்தனர்.

    அப்போது பட்டாமணியார் குடும்ப வம்சத்தினர் 11 தாம்பால தட்டுகளில் பல்வேறு வகையான பழங்களுடன் மங்கள பொருட்களுடன் சீர்வரிசை எடுத்து வந்து அம்மனை சிறப்பித்து வழிப்பட்டனர். பின்னர் காத்த வீரன் முன் செல்ல சீத்தாளதேவி மாரியம்மன் வீதி உலா நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை ஊராட்சி மன்ற தலைவர் சந்திரமோகன், இந்து அறநிலைத் துறை செயல் அலுவலர், விழா குழுவினர் மற்றும் கிராமத்தினர் செய்தனர்.

    இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர்கள் சாந்தி வேல்முருகன், ராஜ் கண்ணன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சுதா கணபதி, கட்சி பிரமுகர்கள் பக்தர்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.

    • கொன்னைபட்டியில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது
    • பொதுமக்கள் தண்ணீரில் உற்சாகத்துடன் இறங்கிய போது தண்ணீருக்குள் இருந்த மீன்கள் துள்ளி குதித்து தரையில் விழுந்தது

    பொன்னமராவதி:

    பொன்னமராவதி அருகே உள்ள கொன்னைபட்டியில் மழை வளம் பெருகி, விவசாயம் செழிக்க வேண்டி, மீன் பிடி திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் கடந்து 15 வருடங்களாக மீன்பிடி திருவிழா நடத்தப்படவில்லை. இந்நிலையில் இந்தாண்டு மீன் பிடி திருவிழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டதை கேட்டு பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 15 ஆண்டுகளுக்கு பிறகு கொன்னைகம்மாயில் மீன் பிடி திருவிழா நடைபெற்றதை தொடர்ந்து கம்மாயில் குவிந்த பொதுமக்கள் கொன்னைபட்டி மடை கருப்பர் கோவிலில் வழிபாடு நடத்தி சாமி கும்பிட்டனர்.

    அதன் பின்னர் மீன்பிடித் திருவிழாவை முக்கியஸ்தர்கள் தொடங்கி வைத்தனர். பொதுமக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் தண்ணீரில் துள்ளி குதித்தோடி மீன் பிடித்தனர். பொதுமக்கள் தண்ணீரில் உற்சாகத்துடன் இறங்கிய போது தண்ணீருக்குள் இருந்த மீன்கள் துள்ளி குதித்து தரையில் விழுந்தது. இதனை கண்டு மகிழ்ச்சி அடைந்த பொதுமக்கள் தரையில் துள்ளிய மீன்களை போட்டி போட்டுக்கொண்டு பிடித்தனர். கம்மாய் தண்ணீரில் இருந்து நாட்டு வகை மீன்களான ஜிலேபி, கெண்டை, சிசி ,போட்ல,ரோகு,விரால் உள்ளிட்ட மீன்களை ஒரு கிலோ முதல் 20 கிலோ வரை எடை கொண்ட மீன்களை பிடித்து மகிழ்ச்சியில் உற்சாகமடைந்தனர்.

    இந்த மீன் பிடி திருவிழாவில் கலந்து கொள்வதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்தவர்கள் இது பற்றி கூறும்போது.... வழக்கமாக மீன் பிடி திருவிழாவில் சில பேருக்கு மீன்கள் கிடைக்காது. ஆனால் இந்த வருடம் அப்படி இல்லாமல் அனைவரும் மீன் கிடைத்துள்ளது, எல்லா தரப்பினரையும் மகிழ்ச்சியடைய செய்துள்ளது என்று கூறினர்.

    • சித்திரை திருவிழா காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
    • மேளதாளங்கள் முழங்க பால்குடங்களை சுமந்து வந்து மழைமுத்து மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த விழுந்தமாவடி கிராமத்தில் ஸ்ரீ மழைமுத்து மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது .

    இந்த கோவிலில் சித்திரை திருவிழா காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 501 பால்குட ஊர்வலம் நடைபெற்றது.

    காப்புக்கட்டி விரதமிருந்த பக்தர்களின் பால்குட ஊர்வ லமானது கன்னித்தோப்பு சௌந்தரராஜ பெருமாள் ஆலயத்தில் இருந்து புறப்பட்டு சுமார் 2 கிலோமீட்டர் தூரம் நடந்து முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த ஏராளமான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் மேளதாளங்கள் முழங்க பால்குடங்களை சுமந்து வந்து மழைமுத்து மாரியம்ம னுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பால் அபிஷேகம் நடைபெற்றது. இதில் பாரம்பரிய கலையான தம்பிரான்குடியிருப்பு இறையருள் கலைக்குழுவினரின் சிறுவர் சிறுமியர்களின் கோலாட்டம் நிகழ்ச்சி நடை பெற்றது.

    சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

    • சமூக நல்லிணக்க திருவிழா 4 நாட்கள் நடக்கிறது.
    • இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும்.

    கீழக்கரை

    கீழக்கரை வடக்கு தெரு ஜமாத் நிர்வாக சபை தலைவர் ரத்தின முகம்மது, உதவி தலைவர் அப்துல் ஹமீத் செல்ல வாப்பா ஆகியோர் கூறியதாவது:-

    கீழக்கரையில் ஆண்டுதோறும் வடக்கு தெருவில் உள்ள மணல்மேட்டில் ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம் சமூக நல்லிணக்க ஒன்று கூடும் திருவிழாவாக நடந்து வருகிறது. இந்த கொண்டாட்டத்தில் பள்ளி, கல்லூரியில் படித்த அனைத்து சமுதாய பெண்கள் சமூக நல்லி ணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் கல்லூரி தோழிகளை சந்தித்து ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்து, நலம் விசாரித்து வருவது பல ஆண்டுகளாக நடந்து வருகிறது.

    வழக்கம் போல் இந்த ஆண்டும் மணல்மேடு பண்டிகை கால கொண்டாட்டத்தை நடத்த வடக்குத்தெரு ஜமாத் நிர்வாக சபை முடிவு செய்துள்ளது. அதன்படி நாளை(22-ந்தேதி) முதல் 25-ந்தேதி வரை மாலை 4 மணி முதல் இரவு 10.30 வரை ரம்ஜான் பண்டிகை விழா நடைபெறும். பொதுமக்கள் எவ்வித சிரமமும் இல்லாமல் வந்து செல்லும் வகையில் ஆண்க ளுக்கும், பெண்களுக்கும் தனித்தனி பாதைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

    அனைவரும் கண்டு களிக்கும் வகையில் பல்வேறு பொழுது போக்கு நிகழ்ச்சிகள் நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதுதவிர கூடுதலாக மக்களுக்கு உணவு கிடைக்கும் வகையில் கடைகளும் ஏற்படுத்தப்படும். திடல் முழுவதும் கண்காணிப்பு காமிரா பொருத்தப்பட்டு சமூக விரோதிகளின் நடமாட்டத்தை கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் அறிவித்தபடி அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×