என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "உல்லாசம்"
ஆண்டிப்பட்டி:
கேரள மாநிலம் மூணாறு பகுதியைச் சேர்ந்த பேச்சிமுத்து மகன் அனீஸ் குமார் (வயது 25). இவர் கேரள அரசு போக்குவரத்து கழக பணிமனையில் தற்காலிக தினக்கூலி மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது பெற்றோருடன் நாகர்கோவிலுக்கு சென்றார்.
பின்னர் மீண்டும் அவர்கள் மூணாறு திரும்பிக் கொண்டு இருந்தனர். வரும் வழியில் அனீஸ்குமார் ஆண்டிப்பட்டியில் உள்ள தனது நண்பரை பார்த்து விட்டு வருவதாக இறங்கி விட்டார்.
பஸ் நிலையம் அருகே நின்று கொண்டு இருந்தபோது 3 வாலிபர்கள் அவரிடம் வந்து அழகான பெண் உல்லாசத்துக்கு இருப்பதாகவும் பணம் கொடுத்தால் அவருடன் சந்தோசமாக இருக்கலாம் என ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.
அதனை நம்பி அனீஸ்குமார் அவர்களுடன் சென்றார். ரெயில்வே கேட் அருகே வந்ததும் திடீரென அவர்கள் அனீஸ்குமாரை பீர் பாட்டிலால் தாக்கினர். பின்னர் அவர் அணிந்திருந்த மோதிரம், செயின், செல்போன் மற்றும் பணத்தை பறித்துக் கொண்டு கொலை மிரட்டல் விடுத்து அனுப்பி விட்டனர்.
படுகாயங்களுடன் ஊருக்கு சென்ற அனீஸ்குமார் பின்னர் மீண்டும் திரும்பி வந்து ஆண்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் தேனி அல்லி நகரத்தைச் சேர்ந்த கார்த்திக் (வயது 23), முல்லை நகரத்தைச் சேர்ந்த மனோ ஆனந்த் (32), போடியைச் சேர்ந்த மாரிமுத்து (24) ஆகிய 3 பேர் தான் அனீஸ்குமாரிடம் பணம் மற்றும் நகையை கொள்ளையடித்தது என தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்து கொள்ளையடித்த பொருட்களையும் பறிமுதல் செய்து அனீஸ்குமாரிடம் ஒப்படைத்தனர்.
மாரிமுத்துவும், கார்த்தியும் ஆட்டோ டிரைவர்களாக உள்ளனர். அவர்களுடன் கூட்டு சேர்ந்த மனோ ஆனந்த் பல வழிப்பறிகளில் ஈடுபட்டு வந்துள்ளது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
செஞ்சி:
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ளது. பெரும்புகை கிராமம். இந்த பகுதியை சேர்ந்தவர் தேவேந்திரன்(வயது 25). கரும்பு வெட்டும் தொழிலாளி. இவரது மனைவி கலைச்செல்வி இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன.
அதே பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி. இவரது மனைவி குட்டியம்மாள்(43). இந்த நிலையில் தேவேந்திரனுக்கும், குட்டியம்மாளுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அது கள்ளக்காதலாக மாறியது. அவர்கள் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தனர்.
கடந்த 18-ந் தேதி குட்டியம்மாள் ஆடு மேய்க்க சென்றார். அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் கவலையடைந்த அவரது மகன் கார்த்திக் பல இடங்களில் தேடினார். பின்பு அங்குள்ள மலை அடிவாரத்துக்கு சென்றார். அங்கு தனது தாய் குட்டியம்மாள் உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். யாரோ? அவரை கொலை செய்து பிணத்தை மலை அடிவாரத்தில் வீசியிருக்கலாம் என்று சந்தேகம் அடைந்தார்.
இது குறித்து கார்த்திக் செஞ்சி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் மலைப்பகுதிக்கு சென்று குட்டியம்மாள் பிணத்தை மீட்டனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர்.
அதில் குட்டியம்மாளுக்கும், தேவேந்திரனுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருப்பது தெரியவந்தது. அதன்பேரில் போலீசார் தேவேந்திரனை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்குபின் முரணாக பதில் கூறினார்.
போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியதில் குட்டியம்மாளை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
குட்டியம்மாளை கொலை செய்து பிணத்தை மலையின் உச்சியில் வீசியதாக தெரிவித்தார்.
அதன்பேரில் போலீசார் தேவேந்திரனை கைது செய்தனர். மேலும் அவரிடம் செஞ்சி துணை போலீஸ் சூப்பிரண்டு வீமாராஜ் விசாரணை நடத்தியபோது மேலும் ஒரு இளம்பெண்ணை கொன்று பிணத்தை மலையில் வீசிய தகவல் தெரியவந்தது.
போலீசில் தேவேந்திரன் அளித்த வாக்குமூலம் வருமாறு:-
செஞ்சி நாட்டார் மங்கலத்தை சேர்ந்த ஏழுமலையின் மனைவி சுமதி(33) என்பவருக்கும், எனக்கும் 2 ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. நாங்கள் தனிமையில் சந்தித்து பேசி வந்தோம்.
இதனைத்தொடர்ந்து அடிக்கடி எங்கள் வீட்டுக்கு சுமதி வந்தார். இதனால் என் மனைவி கலைச்செல்வி சந்தேகம் அடைந்து என்னை கண்டித்தார். மேலும் சுமதியிடம் உள்ள பழக்கத்தை கைவிடுமாறு அடிக்கடி கூறி வந்தாள். இல்லையென்றால் நான் என் பெற்றோர் வீட்டுக்கு சென்று விடுவேன் என்று கூறி என்னை மிரட்டி வந்தாள்.
இதனால் கவலையடைந்த நான் சுமதியிடம் இனிமேல் என் வீட்டுக்கு வராதே என்னையும் சந்திக்காதே என்று பலமுறை கூறினேன். இருப்பினும் சுமதி தொடர்ந்து என் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தாள். அப்போது சுமதி என்னைப்பார்த்து உன்னை பிரிந்து என்னால் இருக்க முடியவில்லை. என்னை அடிக்கடி சந்திக்க வேண்டும் என்று தொந்தரவு செய்தாள்.
இதனால் சுமதி மீது எனக்கு வெறுப்பு ஏற்பட்டது. மேலும் அவளை கொலை செய்ய திட்டமிட்டேன். இதனைத்தொடர்ந்து அவரை மலைப்பகுதி சென்று உல்லாசமாக இருக்கலாம் என்று கூறி அழைத்தேன். அவளும் வந்தாள். அங்கு நாங்கள் உல்லாசமாக இருந்தோம். அப்போது சுமதி நீ என்னை கைவிட்டு விடக்கூடாது நான் அழைக்கும்போது எல்லாம் நீ கண்டிப்பாக வரவேண்டும் என்று கட்டளை இட்டாள்.
இதனால் நான் ஆத்திரம் அடைந்தேன். உன்னால் என் மனைவி அடிக்கடி என்னிடம் கோபித்துக்கொண்டு பெற்றோர் வீட்டுக்கு சென்று விடுகிறாள் என்று கூறி அவளை திட்டினேன். அப்போது எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் கோபம் அடைந்து சுமதியின் கழுத்தை நெரித்து கொன்றேன்.
பின்பு பிணத்தை மலையில் வீசினேன். மேலும் நான் இறந்துபோன சுமதியின் உடலை செல்போனில் வீடியோ எடுத்து பதிவு செய்துகொண்டேன். பின்பு நான் வீட்டுக்கு சென்றேன். அப்போது வீட்டில் இருந்த என் மனைவி கலைச்செல்வியிடம் இனிமேல் சுமதி வீட்டுக்கு வரமாட்டாள் அவளை அடித்து கொலை செய்துவிட்டேன். என்று கூறினேன். சுமதியின் பிணத்தை வீடியோ எடுத்த காட்சியையும் தனது மனைவியிடம் காண்பித்தேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதைத்தொடர்ந்து போலீசார் தேவேந்திரன் வீட்டில் சோதனையிட்டனர். அப்போது போலீசாரிடம் ஒரு ‘மெமரிகார்டு’ சிக்கியது. அதனை போலீசார் செல்போனில் போட்டு பார்த்தபோது, தேவேந்திரன் ஒரு பெண்ணின் பிணத்தை வீடியோ எடுத்தபடி, ‘நான் சொல்லியதை கேட்காமல் எனது வீட்டுக்கு அடிக்கடி வந்ததால் தான் நீ இப்போது பிணமாக கிடக்கிறாய்’ என்று கூறும் காட்சி பதிவாகி இருந்தது. இதைகண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் தேவேந்திரன் கூறிய மலை பகுதிக்கு சென்று சுமதியின் உடலை தேடினர். அங்கு எலும்புக்கூடாக கிடந்த சுமதியின் உடலை மீட்டனர். அந்த எலும்புக்கூட்டை புதுவை அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தநிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், செஞ்சி துணைபோலீஸ் சூப்பிரண்டு வீமாராஜ் ஆகியோர் 2 பெண்கள் கொலை செய்யப்பட்டு வீசப்பட்ட மலையை பார்வையிட்டனர்.
2 பெண்களை ஆசை வார்த்தை கூறி உல்லாசம் அனுபவித்துவிட்டு கொலை செய்த காமகொடூரன் தேவேந்திரன் மேலும் பல பெண்களை உல்லாசம் அனுபவித்துவிட்டு கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர்.
மேலும் செஞ்சி பகுதியில் கடந்த 2 ஆண்டுகளில் இளம்பெண்கள் மாயமானதாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளதா? அவர்கள் யார்? யார் மீட்கப்பட்டுள்ளனர். எந்த பகுதியை சேர்ந்தவர்கள் என்றும் தங்களது விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர்.
2 பெண்களை கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட காமகொடூரன் தேவேந்திரன் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். மேலும் இவன் பல பெண்களை கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளதால் தேவேந்திரனை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து போலீசார் கோர்ட்டில் மனுதாக்கல் செய்து விரைவில் அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்தப்படலாம் என்று தெரிகிறது.
கள்ளத்தொடர்பில் இருந்த 2 பெண்களை அடித்துக் கொன்று மலையடிவாரத்தில் வீசியதும், அதில் ஒரு பெண்ணின் பிணத்தை வீடியோவாக பதிவு செய்து மனைவியை சமாதானப்படுத்திய சம்பவமும் செஞ்சி அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பண்ருட்டி:
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள காந்தல்வாடி கிராமத்தை சேர்ந்தவர் பரசுராமன் (வயது 28). இவருக்கு திருமணமாகி விட்டது. டிராக்டர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.
இவரது மாமியார் வீடு கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள சிறுகிராமத்தில் உள்ளது. அங்கு பரசுராமன் வேலை விஷயமாக அடிக்கடி சென்று வந்தார்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த கனிமொழி (26) என்ற இளம் பெண்ணுக்கும், பரசுராமனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.
அப்போது பரசுராமன் ஆசைவார்த்தை கூறி கனிமொழியிடம் பலமுறை உல்லாசமாக இருந்துள்ளார். இதில் கனிமொழி கர்ப்பமானார். தற்போது அவர் 4 மாத கர்ப்பிணியாக உள்ளார்.
இந்த நிலையில் கனிமொழியை சந்தித்து பேசுவதை பரசுராமன் தவிர்த்து வந்தார். இது குறித்து பண்ருட்டி அனைத்து மகளிர் போலீசில் கனிமொழி புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரேவதி வழக்குப்பதிவு செய்து பரசு ராமனை கைது செய்தார்.
திருப்பூர்:
திருப்பூர் கே.வி.ஆர். நகர் அருகே உள்ள அண்ணா நகரை சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மனைவி கோமதி (வயது 30). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கணவன்-மனைவி இருவரும் செல்வம் நகரில் உள்ள பிரிண்டிங் கம்பெனியில் ஊழியராக வேலை பார்த்து வந்தனர்.
வேலைக்கு செல்லும் மூர்த்தி தினசரி மது குடித்து விட்டு வீட்டுக்கு வருவார். இதனை கோமதி கண்டித்தார். இதனால் அடிக்கடி கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு மூர்த்தி குடித்து விட்டு வீட்டுக்கு வந்து மனைவியிடம் தகராறு செய்தார். இதனால் மனவேதனை அடைந்த கோமதி கணவரிடம் கோபித்துக்கொண்டு அருகே உள்ள தாய் ஜோதி வீட்டுக்கு குழந்தைகளை அழைத்து சென்று வசித்து வந்தார். பின்னர் மூர்த்தி மனைவியை சந்தித்து இனிமேல் குடிக்க மாட்டேன் என கூறினார். எனவே கோமதி தனது கணவரை தாய் வீட்டில் சேர்ந்து வசிக்க சம்மதித்தார்.
நேற்று வேலைக்கு சென்ற மூர்த்தி நேற்று இரவு மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். பின்னர் நள்ளிரவு கோமதியை உல்லாசத்துக்கு அழைத்துள்ளார். அவர் வர மறுத்து விட்டார். இதனால் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.
இதில் ஆத்திரம் அடைந்த மூர்த்தி வீட்டில் இருந்த கத்தியை எடுத்து கோமதியின் வயிறு, மார்பு பகுதியில் சரமாரியாக குத்தினார்.
இதில் நிலைகுலைந்த அவர் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். மகளின் சத்தம் கேட்டு வந்த கோமதியின் தாய் ஜோதி மூர்த்தியை தடுக்க முயன்றார். அவரையும் மூர்த்தி கத்தியால் சரமாரியாக குத்தினார். பின்னர் அங்கு இருந்து தப்பி ஓடினார்.
சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய கோமதி, ஜோதி ஆகியோரை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே கோமதி பரிதாபமாக இறந்தார்.
படுகாயம் அடைந்த ஜோதிக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இது குறித்து திருப்பூர் மத்திய போலீசார் வழக்குப்பதிவு செய்து மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தலைமறைவான மூர்த்தியை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தாராபுரம்:
தாராபுரம் நஞ்சியாம் பாளையத்தில் உள்ள உப்பாற்றுபாலத்தில் கடந்த மாதம் 25-ந்தேதி அன்று சாக்குமூட்டையில் இளம்பெண் பிணம் கிடந்தது. இது குறித்து தாராபுரம் இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.
பிணமாக கிடந்த பெண்ணின் கழுத்தில் கிடந்த தாலியில் பி.ஜே. என்ற ஆங்கில எழுத்து பொறிக்கப்பட்டிருந்தது. ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியில் இதுகுறித்து விசாரித்தபோது கடை உரிமையாளர் இந்த தாலி இங்கு செய்யப்பட்டது தான் என்று கூறினார்.
இதனையடுத்து கவுந்தப்பாடி போலீஸ் நிலையத்தில் மாயமான பெண்கள் குறித்து விசாரித்தபோது முருகன் என்பவரது மனைவி முத்துலட்சுமி (வயது 45) மாயமானது குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. விசாரணையில் பிணமாக கிடந்தது மாயமான முத்துலட்சுமி என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கொலையாளிகள் குறித்து விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் நேற்று தாராபுரம் கிராம நிர்வாக அலுவலர் சந்திரசேகர் முன்பு கொலை செய்யப்பட்ட முத்துலட்சுமியின் தங்கை கணவர் வேலுச்சாமி (45) மற்றும் அவரது அக்காள் மகன் குமரேசன் (21) ஆகியோர் நேற்று சரணடைந்தனர். முத்துலட்சுமியை கொலை செய்ததை வேலுச்சாமி ஒப்புக் கொண்டார். இதனையடுத்து தாராபுரம் போலீசில் இருவரும் ஒப்படைக்கப்பட்டனர்.
நான் குடும்பத்துடன் கவுந்தப்பாடியில் வசித்து வருகிறேன். எங்களுடன் எனது மனைவியின் அக்காள் முத்துலட்சுமி அவரது கணவர் முருகனுடன் வசித்து வந்தனர்.
எனக்கும் மனைவியின் அக்காளுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்தது. சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் முத்துலட்சுமி யை உல்லாசத்துக்கு அழைத்தேன். பேரன், பேத்திகள் வந்துவிட்டனர். இனிமேலும் உல்லாசத்துக்கு வரமுடியாது என்று மறுத்தார். இதனால் ஆத்திரம் ஏற்பட்டது. எனது அக்காள் மகன் குமரேசன் உதவியுடன் வேனில் முத்துலட்சுமியை கடத்தினேன்.
கவுந்தப்பாடி- சித்தோடு இடையே சென்றபோது உல்லாசம் குறித்து எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த நான் முத்துலட்சுமியை துண்டால் கழுத்தை இறுக்கி கொலை செய்தேன். கொய்யா வியாபாரம் செய்யும் என்னிடம் இருந்த சாக்கில் உடலை கட்டி தாராபுரம் உப்பாற்று பாலத்தில் வீசினோம்.
முத்துலட்சுமியின் கணவர் முருகன் மனைவி மாயமானது குறித்து புகார் அளித்தார். போலீஸ் எங்களை நெருங்கி விட்டதை அறிந்து சரணடைந்தோம் என்று கூறினார். இதனையடுத்து வேலுச்சாமியையும் அவரது அக்காள் மகன் முருகன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை:
மதுரை ஆனையூர் ஜெ.ஜெ.நகரில் உள்ள முத்தாலம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மகள் காஜல் (வயது 18). திருமணமான இவர், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து தந்தை வீட்டில் வசித்து வருகிறார்.
காஜல் அதே பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடியில் பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் அவர் கூடல்புதூர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதில், நான் பல்பொருள் அங்காடியில் வேலை பார்த்தபோது எனக்கும், சஞ்சீவி நகரைச் சேர்ந்த சுருளிவேல் மகன் சுர்ஜித் குமார் (21) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் காதலாக மாறியது.
என்னை திருமணம் செய்வதாக கூறி சுர்ஜித்குமார் பலமுறை நெருங்கி பழகினார். தற்போது திருமணம் செய்து கொள்ள மறுக்கிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுர்ஜித்குமாரை கைது செய்தனர்.
பண்ருட்டி:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள நல்லூர்பாளையத்தை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 25). இவர் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.
பண்ருட்டியை அடுத்த வாணியம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோதண்டபாணி. இவரது மகள் ரம்யா (23). இவருக்கும், விஜயகுமாருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அவர்களது திருமணம் வருகிற 20-ந் தேதி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து இருவீட்டாரும் திருமண பத்திரிகை அச்சடித்து உறவினர்களுக்கு கொடுத்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 13-ந் தேதி வீட்டில் இருந்த ரம்யா திடீரென்று காணாமல் போனார். இதனால் கவலையடைந்த கோதண்டபாணி தனது மகளை பல இடங்களில் தேடிப்பார்த்தார். எங்கும் அவரை காணவில்லை.
இதனை தொடர்ந்து அவர் புதுப்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான ரம்யாவை தேடி வந்தனர்.
இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள இருந்தை கிராமத்தில் உள்ள விவசாயி கிணற்றில் 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் பிணமாக கிடப்பதாக அப்பகுதி பொதுமக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தியதில், கிணற்றில் பிணமாக கிடந்த பெண் மாயமான ரம்யா என்பது தெரியவந்தது.
மேலும் விசாரணையில் ரம்யாவை, விஜயகுமார் மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றதும் தெரிய வந்தது. உடனே போலீசார் விஜயகுமாரை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அவர் ரம்யாவை கற்பழித்து கிணற்றில் வீசி கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். அதைத்தொடர்ந்து விஜயகுமாரை போலீசார் கைது செய்தனர்.
போலீசாரிடம் விஜயகுமார் கொடுத்த வாக்கு மூலம் வருமாறு:-
நான் திருப்பூரில் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறேன். எனக்கும், ரம்யாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
எங்களது திருமணம் 20-ந் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டது. திருமணம் நிச்சயதார்த்தம் முடிந்ததும் ரம்யாவுடன் நான் செல்போனில் அடிக்கடி பேசி வந்தேன். அப்போது அவரது செல்போன் பெரும்பாலும் பிசியாக இருந்து வந்தது.
இது தொடர்பாக அவரிடம் கேட்டேன். அப்போது அவரது செல்போன் பழுதாகி இருப்பதாக கூறினார். இதைத் தொடர்ந்து அவருக்கு புதிய செல்போன் வாங்கி கொடுத்தேன். அதன் பின்னரும் ரம்யாவின் செல்போன் அடிக்கடி பிசியாக இருந்தது. யாரிடம் பேசி கொண்டு இருக்கிறாய்? என்று கேட்டதற்கு உறவினர்களிடம் பேசியதாக கூறினார். இதனால் அவர் மேல் சந்தேகம் அடைந்தேன்.
கடந்த 13-ந் தேதி இரவு ரம்யாவுடன் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினேன். நாம் தனிமையில் சந்தித்து பேச வேண்டும் என்று கூறி அழைத்தேன். வீட்டில் யாருக்கும் தெரியாமல் ரம்யா வெளியே வந்தார். மோட்டார் சைக்கிளில் ரம்யாவை அழைத்துச் சென்றேன்.
இருந்தையில் உள்ள விளை நிலத்துக்கு சென்றோம். அப்போது அங்கு நாங்கள் 2 பேரும் பேசி கொண்டிருந்தோம். அப்போது நாம் உல்லாசமாக இருக்கலாம் என்று கூறினேன். அதற்கு ரம்யா மறுத்து விட்டார். இதனால் எங்களுக்குள் இடையே தகராறு ஏற்பட்டது.
அப்போது ஆத்திரம் அடைந்த நான், ரம்யாவின் கன்னத்தில் ஓங்கி அறைந்தேன். இதில் அவர் மயங்கி விழுந்தார். மயக்க நிலையில் இருந்த ரம்யாவை கற்பழித்தேன்.
இதையடுத்து அருகில் உள்ள கிணற்றுக்கு ரம்யாவை தூக்கி சென்றேன். பின்னர் அவளை கிணற்றில் தூக்கிப் போட்டேன். சிறிது நேரத்தில் ரம்யா இறந்து விட்டார். இதையறிந்ததும் நான் ஒன்றும் தெரியாதது போல் எனது வீட்டுக்கு சென்று விட்டேன். ஆனால், போலீசார் நடத்திய விசாரணையில் நான் சிக்கி கொண்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
கைதான விஜயகுமாரை போலீசார் திருக்கோவிலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து விஜயகுமார் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்