என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கடன்"
- வங்கியில் நகை மதிப்பீட்டாளராக சந்திரமோகன் என்பவர் வேலை செய்து வந்தார்.
- வங்கி அதிகாரிகள் புரோட்டூர் போலீசில் புகார் செய்தனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் புரோட்டூர் மைதுகுரு சாலையில் பாரத ஸ்டேட் வங்கி இயங்கி வருகிறது. இந்த வங்கியில் நகை மதிப்பீட்டாளராக சந்திரமோகன் என்பவர் வேலை செய்து வந்தார்.
இவர் அதே ஊரில் உள்ள 39 நபர்களின் பெயரில் கவரிங் நகைகளை தங்கமுலாம் பூசி வங்கியில் அடகு வைத்து ஒரு ஆண்டில் 3.17 கோடி கடன் பெற்று உள்ளார்.
வங்கி அதிகாரிகள் அடகு வைத்த நகைகளை சரி பார்த்தபோது 39 பேர் பெயரில் வைக்கப்பட்ட நகைகள் முலாம் பூசப்பட்ட கவரிங் நகைகள் என்பதை கண்டுபிடித்தனர்.
இது குறித்து வங்கி அதிகாரிகள் புரோட்டூர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் சந்திரமோகன் 3 வங்கிகளில் போலி நகைகளை அடகு வைத்து கடன் வாங்கி இருப்பது தெரியவந்தது. அவரை தேடி வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுவை முத்திரையர் பாளையம் சேரன் நகர் கம்பன் வீதியை சேர்ந்தவர் பூங்காவனம். இவரது மனைவி சுதா. இவர்களது மகள் சூர்யா (வயது 18). கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பூங்காவனம் இறந்து விட்டார். இதனால் சுதா கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்தி வந்தார். இதற்கிடையே சூர்யாவுக்கு திருமண வயது எட்டியதால் அவருக்கு ஒரு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்தார்.
இன்னும் சில நாட்களில் திருமணம் நடைபெற இருந்ததால் திருமண செலவுக்காக சுதா பல இடங்களில் பணம் கடன் கேட்டார். ஆனால், அவர் கேட்ட இடங்களில் எல்லாம் பணம் இல்லை என்று கூறி விட்டனர்.
சம்பவத்தன்று இதுபற்றி சுதா தனது மகள் சூர்யாவிடம் உனது ராசி என்ன ராசியோ கேட்ட இடங்களில் எல்லாம் பணம் தர மறுக்கிறார்கள் என கூறினார்.
தாய் இதுபோன்று கூறியதால் சூர்யா மன முடைந்தார். இதனால் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். வீட்டில் இருந்த எலி மருந்தை (விஷம்) தின்று விட்டார்.
இதில், மயங்கி விழுந்த சூர்யாவை அவரது தாய் சுதா மீட்டு சிகிச்சைக்காக கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சூர்யா நேற்று இரவு பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இனியன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மருத்துவச் செலவு, திருமணச் செலவு போன்றவற்றுக்குப் பணம் தேவை என்னும்போது உடனடியாக கை கொடுப்பது தனிநபர் கடன் ஆகும். இதற்கான வட்டி விகிதமும் 10 முதல் 13 சதவீதம் என்பது மிகவும் அதிகம் என்றாலும், அவசியமாகத் தேவைப்படும்போது பயன்படுத்தலாம்.
ஆனால், எப்படி இருந்தாலும் பின்வரும் காரணங்களுக்காக எல்லாம் தனிநபர் கடனைத் தவிர்ப்பதே நல்லது. அவை பற்றி...
தனிநபர் கடனாகப் பெற்ற பணத்தை பங்குச் சந்தை அல்லது பிற ‘ரிஸ்க்’கான முதலீடுகளில் போடாதீர்கள். அவை போன்ற ரிஸ்க்கான திட்டங்கள் லாபம் அளிக்காமல் முதலீடு செய்ததை விடக் குறைவான மதிப்புக்குச் செல்லவும் வாய்ப்புகள் உள்ளன.
வாகனம் வாங்க அல்லது அதுபோன்ற பிற செலவுகளுக்கு தனிநபர் கடன் வாங்க வேண்டாம். தனிநபர் கடன் எந்த ஓர் உத்தரவாதமும் இல்லாமல் அளிக்கப்படுவதால் வட்டி விகிதம் கூடுதலாக இருக்கும். சொந்தமாக தொழில் தொடங்க, வீடு வாங்க, வாகனம் வாங்க எல்லாம் தனிநபர் கடனை விடக் குறைவான வட்டி விகிதத்தில் கடன் பெற முடியும்.
உங்களுக்கு விருப்பமானவற்றை வாங்க வேண்டும் என்பதற்காகவும் தனிநபர் கடன் வாங்க வேண்டாம். இன்றைய சூழலில் பல நிறு வனங்கள் தங்களது தயாரிப்புகளை வாடிக்கையாளர்கள் வாங்க வேண்டும் என்பதற்காக வட்டியில்லாத ஈ.எம்.ஐ. சேவைகளை எல்லாம் வழங்குகின்றன.
பிறரின் தேவைக்காகக் கடன் பெற்று கொடுத்துவிட்டு அவர்கள் சரியான நேரத்தில் உங்களுக்குப் பணத்தைத் திருப்பி அளிக்கவில்லை என்றால் அதனால் உங்களுக்கு மிகப் பெரிய சிரமம் ஏற்படும். அதுமட்டும் அல்லாமல், நீங்கள் சரியான நேரத்தில் கடனை திருப்பிச் செலுத்தாமல் இருக்கும்போது கிரெடிட் ஸ்கோர் பாதிக்கப்படுவது மட்டுமின்றி, வேறு எந்தக் கடனும் வாங்க முடியாத நிலைக்குத் தள்ளப்படுவீர்கள்.
தொழில் தொடங்க தனிநபர் கடன் பெற வேண்டாம். தனிநபர் கடனை தவிர்த்து தொழில் துவங்க அரசு பலவகைகளிலும் கடன் அளித்து உதவி செய்கிறது. புதியதாகத் துவங்கும் ஒரு தொழிலில் உடனே வருவாய் பெற்றுக் கடனை திருப்பிச் செலுத்திவிடலாம் என்பதும் முடியாத காரியம் ஆகும். எனவே தனிநபர் கடன் என்பது அவசரத் தேவையின்போது உங்களுக்கு உதவ மட்டுமே என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
வீட்டு கடன் பெறுவதற்கு முன்னர் வெவ்வேறு வங்கிகள் அளிக்கும் கடன் பற்றிய விவரங்களை கேட்டு அறிந்து செயல்பட வேண்டும். முன்னதாகவே, கடன் பெற்றிருந்தாலும், மற்ற வங்கிகளின் வட்டி விகிதத்தை ஒப்பிட்டு பார்த்து அவசியம் என்றால் ‘பேலன்ஸ் டிரான்ஸ்பர்’ மூலம் மீதம் உள்ள கடன் தொகையை மாற்றிக்கொள்ளலாம்.
வங்கிகள் 15 முதல் 20 சதவிகித தொகையை டவுன் பேமென்ட் என்ற நிலையில் செலுத்த வங்கிகள் வலியுறுத்துகின்றன. மீதமுள்ள தொகை வீட்டு கடனாக வழங்கப்படும். டவுன் பேமெண்டை முன்கூட்டியே திட்டமிட்டு கூடுதலாக தொகையை இவ்வாறு செலுத்தலாம். இதன் மூலம் நீண்ட கால நோக்கில் வட்டியின் சுமை குறைவதுடன், இன்னொரு கடன் பெறுவதற்கான தகுதி அதிகமாகும்.
வங்கிகள் கடன் கொடுப்பதற்கு முன், கடன் பெறுபவரது கிரெடிட் ஸ்கோரை கவனிக்கின்றன. நல்ல கிரெடிட் ஸ்கோர் இருந்தால், கடனுக்கான வட்டி விகிதம் சாதகமாக அமையும். எனவே, கடனுக்கு விண்ணப்பிக்கும் முன், நல்ல கிரெடிட் ஸ்கோர் இருப்பது நல்லது. அதன் அடிப்படையில், வங்கிகள் தற்போது கணக்கிடும் வட்டி விகிதம் குறித்து, அதிகாரிகளிடம் பேசி வட்டி விகிதத்தில் அல்லது செயல்பாட்டு கட்டணத்தில் சலுகை கேட்கலாம்.
கடன் பெற்று மாதாந்திர தவணையை செலுத்த துவங்கிய நிலையில், ஏதேனும் பண வரவுகள் போனஸ் மற்றும் ஊதிய உயர்வு கிடைக்கும்போது கூடுதலாக பணத்தை செலுத்தி தொகையை செலுத்தி அசல் தொகையை குறைத்துக்கொள்ளலாம். இதன் மூலம், அசல் தொகை குறைந்து கொண்டே வந்து, கடன் விரைவில் செலுத்தி முடிக்கப்படும்.
வடபழனி குமரன் காலனியை சேர்ந்தவர் கோவிந்தம்மாள் (வயது 55). 7 ஆண்டுகளுக்கு முன்பு தனது மகன்களின் திருமணத்திற்காக நெசப்பாக்கம் பாரதி நகரைச் சேர்ந்த பூ வியாபாரி திருலோகசுந்தரியிடம் ரூ.1 லட்சம் பணம் மற்றும் ஒரு பவுன் நகை கடனாக வாங்கினார்.
கடன் பிரச்சினையால் தவித்து வந்த கோவிந்தம்மாள் பணத்தை திருப்பி செலுத்த முடியவில்லை. திருலோகசுந்தரி தொடர்ந்து பணத்தை கேட்டு வந்ததால் மன உளைச்சலில் இருந்த கோவிந்தம்மாள் நேற்று அதிகாலை நெசப்பாக்கத்தில் உள்ள திருலோகசுந்தரியின் வீட்டிற்கு சென்ற கோவிந்தம்மாள் திடீரென மண்எண்ணை ஊற்றி தீக்குளித்தார்.
இதில் படுகாயமடைந்த கோவிந்தம்மாளை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு கோவிந்தம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து எம்.ஜி.ஆர். நகர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
கன்னியாகுமரி அருகே உள்ள ஆரோக்கியபுரத்தை சேர்ந்தவர் ஆரோக்கிய கெபின்ராஜ் (வயது 36) மீனவர். இவரது மனைவி சகாய சிந்துஜா (32). இந்த தம்பதியின் 4 வயது மகன் ரெய்னா.
நேற்று காலை சிறுவன் ரெய்னா தனது வீடு அருகே விளையாடிக்கொண்டு இருந்தான். சிறிது நேரம் கழித்து அவனை பெற்றோர் தேடியபோது அவன் மாயமாகி இருந்தான். இதனால் அக்கம், பக்கத்தினரிடம் பெற்றோர் விசாரித்தனர்.
அப்போது அதே ஊரை சேர்ந்த அந்தோணிசாமி (38)என்பவர் மோட்டார் சைக்கிளில் அங்கு வந்ததாகவும், அவர் தனது மோட்டார் சைக்கிளில் ரெய்னாவை அழைத்துக் கொண்டு சென்றதை பார்த்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், செல்போன் மூலம் அந்தோணிசாமியை தொடர்பு கொண்டனர். மேலும் அவரது வீட்டிற்கு தேடிச் சென்றபோது வீடு பூட்டப்பட்டு இருந்தது. அக்கம், பக்கத்து வீட்டாரிடம் விசாரித்தபோதும் அந்தோணிசாமி மற்றும் மாயமான ரெய்னா பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி போலீசில் ஆரோக்கிய கெபின்ராஜ் புகார் செய்தார்.
அந்தோணிசாமியிடம் ரூ.58 ஆயிரம் கடன் வாங்கி இருந்ததாகவும், அதை உடனே திருப்பிக் கேட்டு அவர் அடிக்கடி தகராறு செய்துவந்ததாகவும், இதனால் தனது மகன் ரெய்னாவை அந்தோணிசாமி கடத்திச் சென்றுவிட்டதாகவும் அவர் புகாரில் கூறியிருந்தார்.
உடனே போலீசாரும் அந்தோணிசாமியின் செல்போன் டவர் மூலம் விசாரணையை தொடங்கினார்கள். அந்தோணிசாமி கேரள மாநிலம் பாலக்காட்டில் இருப்பதாக செல்போன் டவர் மூலம் தெரியவந்தது. உடனடியாக கன்னியாகுமரி போலீசார் பாலக்காடு விரைந்தனர். அங்கு வைத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
ஆனால் அவருடன் சிறுவன் ரெய்னா இல்லை. இதனால் போலீசார், ரெய்னா பற்றி அந்தோணிசாமியிடம் விசாரித்த போது அவன் கொல்லப்பட்ட அதிர்ச்சி தகவல் வெளியானது. தன்னிடம் வாங்கிய கடனை திருப்பி கொடுக்கும்படி கேட்டு ஆரோக்கிய கெபின்ராஜிடம், அந்தோணிசாமி அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.
நேற்றும் அவர் ஆரோக்கிய கெபின்ராஜ் வீட்டுக்கு சென்று கடன் பணத்தை கேட்டு உள்ளார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இதனால் ஆத்திரத்துடன் அங்கிருந்து வெளியே சென்ற அந்தோணிசாமி வீடு அருகே விளையாடிக் கொண்டு இருந்த சிறுவன் ரெய்னாவை பார்த்து உள்ளார். உடனே அவனிடம் நைசாக பேச்சுக் கொடுத்து தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு தென்தாமரைகுளம் அருகே உள்ள கீழ மணக்குடி-முகிலன் குடியிருப்பு இடையே உள்ள கடற்கரையில் உள்ள தென்னந்தோப்புக்கு சென்றார்.
அங்குள்ள தண்ணீர் தொட்டியில் ரெய்னாவை மூழ்கடித்து கொடூரமாக கொலை செய்தார். கடனை திருப்பித்தராத ஆரோக்கிய கெபின்ராஜை பழிவாங்குவதற்காக இந்த கொலையில் ஈடுபட்டதாக போலீசாரிடம் அந்தோணிசாமி தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து அந்தோணிசாமியை போலீசார் கைது செய்தனர். மேலும் சிறுவன் ரெய்னா கொலை செய்யப்பட்ட தென்னந்தோப்பு தென்தாமரைகுளம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதி என்பதால் இந்த தகவலை தென்தாமரை குளம் போலீசாருக்கு கன்னியாகுமரி போலீசார் தெரிவித்தனர்.
தென்தாமரைகுளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நித்யா தலைமையிலான போலீசார் கொலை நடந்த தென்னந்தோப்புக்கு விரைந்தனர். அங்கு உள்ள தண்ணீர் தொட்டியை பார்த்த போது அதில் சிறுவன் ரெய்னா பிணமாக மிதந்தது தெரிய வந்தது. ரெய்னாவின் உடலைப் பார்த்து அவரது பெற்றோர் கதறி அழுதது பார்ப்பவர்களை உருக்குவதாக இருந்தது. போலீசார் ரெய்னாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் கேரளாவில் கைது செய்யப்பட்ட அந்தோணி சாமியை போலீசார் கன்னியாகுமரி கொண்டு வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தந்தை வாங்கிய கடனுக்காக ஒன்றும் அறியாத அப்பாவி சிறுவனை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொடூரமாக கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தற்போதைய காலகட்டத்தில் அரசாங்கம் அறிவித்துள்ள பல திட்டங்களின் மூலம் வீடு வாங்குபவர்களுக்கான பல சலுகைகள் நடைமுறையில் உள்ளன. வங்கிகள் அல்லது வீட்டு வசதி நிதி நிறுவனங்களும் எளிமையான நடைமுறைகளில் வீட்டு கடன்களை வழங்குகின்றன. வீட்டு கடன் பெற விண்ணப்பிக்கும்போது வங்கிகள் பல்வேறு கடன் திட்டங்கள் பற்றி குறிப்பிட வாய்ப்பு உள்ளது. அவற்றில் கவனிக்கத்தக்க இரு வகை கடன் திட்டங்கள் பற்றி ரியல் எஸ்டேட் நிதி ஆலோசகர்கள் தெரிவிப்பதாவது :
* முதலாவது, கடன் பெற்ற முதல் ஒரு சில வருட காலகட்டத்திற்கு குறைவான மாதாந்திர தவணைகளை செலுத்தும் வகையில் உள்ள ‘ஸ்டெப் அப் லோன்’ ஆகும். இது ‘சர்ப்‘ (SURF-Step Up Repayment Facility) கடன் திட்டம் என்றும் சொல்லப்படும்.
* இரண்டாவது கடன் திட்டமானது ஏற்கெனவே வங்கியில் வீட்டு கடன் பெற்று திருப்பி செலுத்தி வரும் நிலையில், வீடு விரிவாக்கம் அல்லது உள் கட்டமைப்பு மாற்றம் ஆகிய காரணங்களுக்காக பெறக்கூடிய ‘டாப் அப் லோன்’ (Top-Up Loan) ஆகும்.
‘ஸ்டெப் அப் லோன்’
சொந்தமாக வீடு வாங்க நினைக்கும் இளைய தலைமுறையினருக்கு மாதாந்திர தவணை தொகை சுமையாக அமையாமல், இந்த திட்டத்தில் முதல் சில வருடங்களுக்கு இ.எம்.ஐ தொகையை குறைவாக கணக்கிடப்படும். பின்னர், காலப்போக்கில் பதவி உயர்வு மற்றும் வருவாய் அதிகரிப்பு ஆகியவற்றுக்கேற்ப மாதாந்திர தவணை தொகையை அதிகமாக திருப்பி செலுத்தலாம்.
ஒப்பீட்டு நோக்கில் கவனிக்கும்போது தற்போது வழங்கப்படும் வீட்டு கடன்களில், இவ்வகை திட்டத்தின் மாத தவணைகள் அதிகமாக இருப்பதுடன், கடனை திருப்பிச் செலுத்தும் காலமும் நீண்டதாக இருக்கும். அதாவது, தொடக்க ஆண்டுகளில் மாத தவணை குறைவாகவும், குறிப்பிட்ட காலம் சென்ற பின்னர் தவணை தொகையை அதிகமாகவும் திருப்பி செலுத்த இயலும்.
தவணை தொகை அதிகரிப்பு எவ்வளவு என்பதை, கடன் பெற்றவருக்கு எதிர்காலத்தில் கிடைக்கும் வருமான உயர்வுகளை பொறுத்து முடிவு செய்யப்படும். கடனுக்கான கால அவகாசத்தை கடன் பெறுபவரின் வயது, கிரெடிட் ஸ்கோர் மற்றும் கடனை திருப்பி செலுத்தும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் வங்கிகள் அல்லது வீட்டு கடன் நிறுவனங்கள் முடிவு செய்கின்றன. இவ்வகை கடன் திட்டம் இளம் வயதினருக்கு நல்ல வாய்ப்பு என்பது பலரது கருத்தாகும்.
‘டாப் அப் லோன்’
ஏற்கெனவே வீட்டு கடன் பெற்று, அதை திருப்பி செலுத்தி வரும் நிலையில் கூடுதலாக கடன் பெறும் வாய்ப்பை அளிப்பது டாப் அப் லோன் திட்டம் ஆகும். இதன் மூலம் வீட்டை புதுப்பித்தல், வீடு விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக கடன் பெறலாம். தனி நபர் கடனுடன் ஒப்பிடும்போது இவ்வகை கடனுக்கு வட்டி விகிதம் குறைவு என்பதையும் நிதி ஆலோசகர்கள் சுட்டிக்காட்டி இருக்கின்றனர்.
இந்த திட்டத்தில் அளிக்கப்படும் கடன் தொகை அளவை, கடன் பெற்றவர் முந்தைய தவணைகளை திருப்பிய செலுத்திய விதம், கடன் மதிப்பு விகிதம், திருப்பி செலுத்தும் திறன் போன்றவற்றின் அடிப்படையில் முடிவு செய்யப்படுகிறது. பொதுவாக, ‘டாப் அப் கடன்’ பிரதான கடனுடன் இணைக்கப்பட்ட தனிப்பட்ட கடனாக கருதப்படும். இதற்கென தனியாக கடன் ஒப்பந்தம் செய்து கொள்ளப்படும். மேலும், இவ்வகை கடன்களுக்கு வருமான வரி விலக்கு கிடைக்காது என்பது கவனிக்கத்தக்கது.
இவ்வகை கடனை வாங்குபவர், கடன் வழங்கும் வங்கி அல்லது நிதி நிறுவனத்தின் வாடிக்கையாளர் என்ற நிலையில் ஆவணங்கள் அளிக்கவேண்டிய செயல்முறைகள் குறைவாக இருக்கும். கடன் விண்ணப்பமும் குறைவான காலகட்டத்திலேயே எளிதில் செயலாக்கம் பெற்றுவிடும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்