search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 107602"

    குழந்தை இல்லாத ஏக்கத்தில் இளம் தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டனர். மனைவி தூக்கில் பிணமாக தொங்குவதை கண்ட கணவர் உடனே தானும் தூக்குப்போட்டு உயிரை மாய்த்த சோக சம்பவம் சென்னையில் நிகழ்ந்துள்ளது.
    சென்னை:

    சென்னை மெரினா நேப்பியர் பாலம் அருகே உள்ள அன்னை சத்யாநகரை சேர்ந்தவர் சந்திரன் (வயது 30). இவரது மனைவி சுகன்யா (28). இந்த தம்பதிக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகியும், குழந்தை பிறக்கவில்லை.

    இதனால் தம்பதியினர் கடும் மன வருத்தத்தில் இருந்தனர். சுகன்யா கடந்த சில நாட்களாக சோகத்தில் இருந்து வந்ததாகவும், அக்கம் பக்கத்தில் இதுகுறித்து தனது சோகத்தை பகிர்ந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

    இந்தநிலையில் நேற்று கணவர் சந்திரன் வீட்டில் இல்லாத நேரத்தில், குழந்தை பிறக்காத ஏக்கத்தில் சுகன்யா தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

    வீடு திரும்பிய சந்திரன் தனது மனைவி வீட்டில் தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்தார். மனைவியின் பிரிவை தாங்க முடியாத அவர் வீட்டிலேயே தூக்குப்போட்டு உயிரை மாய்த்துக்கொண்டார்.

    இந்த சம்பவம் அறிந்த அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின்பேரில் தலைமை செயலகம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து தம்பதியின் உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    குழந்தை இல்லாத ஏக்கத்தில் தம்பதியினர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியையே சோகத்தில் ஆழ்த்தியது. #tamilnews
    போடியில் மனைவி பிரிந்து சென்ற துக்கத்தில் கணவன் தற்கொலை செய்து கொண்டார்.

    மேலசொக்கநாதபுரம்:

    போடி புதூர் பகுதியை சேர்ந்தவர் அண்ணாமலை (வயது30). இவருக்கு கலைச்செல்வி என்ற மனைவியும், 2 மகன், 1 மகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    அக்கம் பக்கத்தினர் சமரசம் பேசியபோதும் குடும்பத்தில் பிரச்சினை தொடர்ந்து ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்றும் கணவன்-மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் கலைச்செல்வி கோவித்துக்கொண்டு தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

    இதனால் மனவேதனையடைந்த அண்ணாமலை தற்கொலை செய்ய முடிவு செய்தார். அதன்படி வீட்டிலேயே தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போடி டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மனைவியுடன் சென்ற கணவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். ஒருதலைக் காதலால் இந்த விபரீத செயலில் இறங்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    பேரையூர்:

    மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள சாத்தங்குடியைச் சேர்ந்த வேலு மகன் கருப்பையா (24). இவர் மைசூரில் தேயிலை ஏஜெண்டாக உள்ளார்.

    இவருக்கும், திருமங்கலத்தை அடுத்த கண்டு குளத்தைச்சேர்ந்த மாரநாடு மகள் திவ்யாவுக்கும் (20) கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

    அதன் பிறகு மைசூரில் கணவருடன் வசித்து வந்தார். தற்போது 5 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

    கடந்த 4 நாட்களுக்கு முன்பு கருப்பையாவும், திவ்யாவும் ஊருக்கு வந்தனர். நேற்று மாலை 2 பேரும் மோட்டார் சைக்கிளில் திருமங்கலம் காய்கறி மார்க்கெட்டுக்கு வந்தனர்.

    அங்கு காய்கறிகள் வாங்கிவிட்டு கண்டுகுளம் நோக்கி புறப்பட்டனர். தாளமுத்தையா கோவில் அருகே சென்ற போது ஒரு வாலிபர் மோட்டார் சைக்கிளில் வந்து வழிமறித்தார்.

    அவர் கண் இமைக்கும் நேரத்தில் கருப்பையா மற்றும் திவ்யாவை சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

    ரத்த வெள்ளத்தில் சாய்ந்த கணவன்-மனைவி இருவரும் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி கருப்பையா பரிதாபமாக இறந்தார். திவ்யா ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து திருமங்கலம் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இதில் கத்தியால் குத்திவிட்டு தப்பியவர், திவ்யாவின் வீடு அருகே வசிக்கும் பாலமுருகன் (23) என தெரியவந்தது. போலீசார் அதிரடியாக செயல்பட்டு அவனை கைது செய்தனர்.

    திவ்யாவை ஒருதலையாக காதலித்ததாவும், அவரை வேறு ஒருவருக்கு திருமணம் செய்து கொடுத்ததால் தன்னால் தாங்கிக் கொள்ள முடியாததால் கத்தியால் குத்தியதாகவும் பாலமுருகன் போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

    திருமங்கலம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில், கடந்த சில ஆண்டுகளாகவே ஒரு தலைக்காதல் சம்பவம் கொலையில் முடிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    சில ஆண்டுகளுக்கு முன்பு ஒருதலைக்காதலில் மாணவி மீது திராவகம் ஊற்றப்பட்டதில் அவர் பலியானார்.

    திருமங்கலம் அருகே உள்ள மேலக்கோட்டையைச் சேர்ந்த சோலைராஜா மனைவி மணிமாலா (27). கணவரை பிரிந்து தனியாக வாழும் இவர், தனியார் மில்லில் வேலை பார்த்து வருகிறார்.

    நேற்று வேலை முடிந்து மணிமாலா வீட்டுக்கு திரும்பியபோது அதே பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து (22) என்பவர் வழிமறித்து கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

    படுகாயத்துடன் ரத்த வெள்ளத்தில் சாய்ந்த மணிமாலா சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆண்டிப்பட்டி அருகே வரதட்சணைக்காக மனைவியை அடித்து விரட்டிய கணவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
    ஆண்டிப்பட்டி:

    ஆண்டிப்பட்டி அருகே உள்ள டி.கோவில்பட்டியைச் சேர்ந்தவர் ஜெயப்பிரகாஷ் (வயது 22). இவருக்கும் ஆர்த்தி (21) என்பவருக்கும் கடந்த 3.7.2017-ந் தேதி திருமணம் நடந்தது. திருமணத்தின் போது 12 பவுன் நகை, ரூ.2 லட்சம ரொக்கம் மற்றும் சீர் வரிசைகள் வரதட்சணையாக வழங்கப்பட்டன.

    திருமணம் முடிந்த பிறகு ஜெயப்பிரகாஷ் எந்த வேலைக்கும் செல்லாமல் தனது மனைவியின் நகை மற்றும் பணத்தை வாங்கி செலவு செய்து விட்டார். மேலும் கூடுதலாக 10 பவுன் நகை, ரூ.2 லட்சம் ரொக்கம் வாங்கி வரச் சொல்லி கொடுமைபடுத்தி வந்துள்ளார்.

    வரதட்சணை வாங்கி வர மறுத்ததால் அவரை வீட்டை விட்டு விரட்டி அடித்தனர். இது குறித்து ஆர்த்தி தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தார். எஸ்.பி. உத்தரவின் பேரில் ஆண்டிப்பட்டி அனைத்து மகளிர் போலீசார் வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்திய கணவர் ஜெயப்பிரகாஷ், அவரது தந்தை மணி, தம்பி அலெக்ஸ் பாண்டி, உறவினர் சிங்காரம் ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.#tamilnews
    குடும்ப தகராறில் மனைவியை சரமாரியாக குத்தி கொலை செய்து விட்டு கணவன் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொள்ள முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    திருநின்றவூர்:

    பட்டாபிராம் சார்லஸ் நகர் அவ்வையார் தெருவில் வசித்து வருபவர் வெங்கடேசன் (26). இவரது மனைவி மதுமிதா(23).

    என்ஜினீயர்களான இருவரும் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றினர்.

    இவர்கள் ஒரு ஆண்டுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டு பட்டாபிராமில் தனி குடித்தனம் நடத்தி வந்தனர்.

    இருவருக்கும் இடையே கருத்து வேறுபாட்டால் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    இந்த நிலையில் இன்று காலை வெங்கடேசன் வீட்டில் இருந்து பயங்கர அலறல் சத்தம் கேட்டது. உடனே அக்கம் பக்கத்தினர் அங்கு சென்று பார்த்த போது மதுமிதா ரத்த வெள்ளத்தில் கீழே கிடந்தார். அவரது உடலில் பல பகுதிகளில் கத்தியால் குத்தப்பட்டு இருந்தது.

    அவர் அருகே வெங்கடேசன் கழுத்தை அறுத்தபடி ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் போலீஸ் மற்றும் ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். இருவரையும் மீட்டு சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு மதுமிதாவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த வெங்கடேசனை கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    குடும்ப தகராறில் வெங்கடேசன், மதுமிதாவை சரமாரியாக குத்தி கொலை செய்து விட்டு தானும் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொள்ள முயன்று உள்ளது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இருவருக்கும் இடையே எந்த பிரச்சினையால் தகராறு ஏற்பட்டது என்று போலீசார் விசாரிக்கிறார்கள்.

    இக்கொலை சம்பவத்தால் பட்டாபிராம் பகுதியில் பரபரப்பு நிலவியது.#tamilnews
    ஸ்ரீபெரும்புதூர் அருகே குழந்தை இல்லாததால் ஏற்பட்ட தகராறில் மனைவியை கழுத்து அறுத்து கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.
    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூரை அடுத்த புதுநல்லூர், புதுநகர் பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (வயது 27). இருங் காட்டு கோட்டை பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார்.

    இவர் அதே பகுதியை சேர்ந்த பானுபிரியா (24) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு திருமணம் ஆகி 8 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை. சதீஷ் மாமியார் வீட்டில் தங்கி இருதார்.

    குழந்தை இல்லாதது தொடர்பாக சதீசுக்கும் மனைவி பானுபிரியாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. நேற்று மாமியார் கடைக்கு சென்று இருந்த போது கணவன்-மனைவிக்கு இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த சதீஷ், மனைவி பானுபிரியாவை சரமாரியாக தாக்கி பெல்டால் கழுத்தை நெறித்தார். பின்னர் அருகே இருந்த கத்தியால் பானு பிரியாவின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் டி.எஸ்.பி. (பொறுப்பு) பஞ்சாட்சரம், இன்ஸ்பெக்டர் அசோகன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் பானு பிரியா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த நிலையில் சோமங்கலம் பகுதியில் பதுங்கி இருந்த சதீசை போலீசார் கைது செய்தனர். அவரை ஸ்ரீபெரும்புதூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
    நெட்டப்பாக்கம் அருகே மது பழக்கத்தை மனைவி கண்டித்ததால் கூலித்தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    சேதராப்பட்டு:

    நெட்டப்பாக்கம் அருகே கல்மண்டபம் அந்தராசிக் குப்பம் தேவகி நகரை சேர்ந்தவர் சதாசிவம் (வயது 42). கூலித்தொழிலாளி. இவரது மனைவி நாகலட்சுமி. இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    சதாசிவத்துக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. இதனை அவ்வப்போது அவரது மனைவி நாகலட்சுமி கண்டிப்பது வழக்கம்.

    நேற்று முன்தினம் இரவும் சதாசிவம் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்த போது நாகலட்சுமி கண்டித்தார். இதனால் சதாசிவம் மனமுடைந்தார். அவர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.

    நேற்று அதிகாலை நாகலட்சுமி முதல் ஷிப்டு வேலைக்கு சென்று விட்டார். மகன்களும் வெளியே விளையாட சென்ற நிலையில் சதாசிவம் வீட்டில் மின்வயரில் தூக்குபோட்டு தொங்கினார்.

    காலை உணவு சாப்பிட நாகலட்சுமி வீட்டுக்கு வந்த போது கணவன் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கணவரை மீட்டு கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் சதாசிவம் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் நெட்டப்பாக்கம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    குஜராத் மாநிலத்தில் கார் விபத்தில் சிக்கிய கிரிக்கெட் வீரர் ரவிந்திர ஜடேஜாவின் மனைவியை தாக்கிய போலீஸ் கான்ஸ்டபிள் சஞ்சய் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். #RavindraJadeja #Rivaba #Jadejawifeassault
    ராஜ்கோட்:

    இந்திய கிரிக்கெட் அணியின் பிரபல சுழற்பந்து வீச்சாளரான ரவீந்திர ஜடேஜா தற்போது ஐ.பி.எல். போட்டியில் விளையாடி வருகிறார். குஜராத் ஜாம்நகரில் இவருடைய குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    ஜடேஜாவின் மனைவி ரீவா நேற்று முன்தினம் தனது தாயார் பிரபுல்லபாவுடன் ஜாம் நகரில் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் சென்ற கார், அங்கு வேகமாக வந்த போலீஸ்காரர் சஞ்சய் அகிர் என்பவரின் மோட்டார் சைக்கிள் மீது லேசாக மோதிவிட்டது.

    இதனால் ஆத்திரமடைந்த போலீஸ்காரர், ரீவாவுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர், அவரது கூந்தலை பிடித்து இழுத்து, தலையை கார் கண்ணாடி மீது பலமாக மோத வைத்து 3 முறை கன்னத்திலும் அறைந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த உடன் இருந்த அவரது தாயார் போலீசில் புகார் செய்தார்.

    இதற்கிடையே டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகம் மற்றும் மாநில முதல்-மந்திரி அலுவலகம் உள்ளூர் எம்.எல்.ஏ. தர்மேந்திரசிங்கை தொடர்பு கொண்டு இது தொடர்பாக குறிப்பு அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொண்டன.

    இதையடுத்து, ஜாம்நகர் மாவட்ட போலீஸ் நிர்வாகம் ஜடேஜாவின் மனைவியை தாக்கிய போலீஸ்காரர் மீது வழக்குப் பதிவு செய்தது. நேற்று அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் மாவட்ட போலீஸ் நிர்வாகம் சஞ்சய் அகிரை பணியிடை நீக்கம் செய்தும் உத்தரவிட்டது.  #RavindraJadeja #Rivaba #Jadejawifeassault
    திருச்சியில் மனைவியை துப்பாக்கியால் சுட்ட ராணுவ வீரர், தன்னையும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருடைய மனைவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    திருச்சி:

    திருச்சி ரெயில்வே கட்டுப்பாட்டு அறையில் ஊழியராக பணியாற்றி வருபவர் ரஜினிகுமாரி(வயது 33). இவர் கல்லுக்குழி சுப்பராயன் தெருவில் வசித்து வருகிறார். ரஜினிகுமாரியின் கணவர் ரஞ்சித்குமார். இவர் ராணுவத்தில் பணிபுரிந்து வந்தார். நேற்று மாலை ரஞ்சித்குமார், ரஜினிகுமாரி வீட்டிற்கு வந்தார். அப்போது அவர்கள் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ரஞ்சித்குமார் தான் மறைத்து வைத்திருந்த கைத்துப்பாக்கியை எடுத்து ரஜினிகுமாரியை சுட்டார். இதில் ரஜினிகுமாரியின் கழுத்தில் குண்டு பாய்ந்தது. இதனால் அவர் மயங்கி கீழே விழுந்தார்.

    அப்போது ரஞ்சித்குமார் துப்பாக்கியால் தன்னுடைய தலையில் சுட்டுக்கொண்டார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் பரிதாபமாக இறந்தார். சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம், பக்கத்தினர் நடந்த சம்பவத்தை அறிந்து அதிர்ச்சியடைந்தனர். மேலும் உயிருக்கு போராடிய ரஜினிகுமாரியை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கண்டோன்மெண்ட் போலீசார், ரஜினிகுமாரியின் வீட்டிற்கு சென்று ரஞ்சித்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சியில் ராணுவ வீரர் மனைவியை துப்பாக்கியால் சுட்டுவிட்டு, தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
    மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் டிரைவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
    ஈரோடு:

    கரூர் கிருஷ்ணராயபுரம் சிந்தலவாடி வீரணாம்பட்டியை சேர்ந்தவர் கருப்பணன். இவருடைய மகன் திருப்பதி (வயது 23). பொக்லைன் டிரைவராக உள்ளார். இவர் புதுக்கோட்டை மாவட்டத்தில் வேலைக்காக சென்றபோது அங்குள்ள ஒரு வங்கியில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்த சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த சிவசங்கிரி (21) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.

    அவர்கள் 2 பேரும் கடந்த 4-6-2014 அன்று ஈரோடு மாவட்டம் கொடுமுடி மகுடேஸ்வரர் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். அதன்பின்னர் ஈரோடு திண்டல் மாருதி நகரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தனர்.

    திருப்பதிக்கு குடிப்பழக்கம் உண்டு. இதனால் அடிக்கடி அவர் மது குடித்துவிட்டு வீட்டிற்கு செல்வதால் அவருக்கும், சிவசங்கிரிக்கும் இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டது. கடந்த 7-1-2015 அன்று வழக்கம்போல் திருப்பதி மதுஅருந்திவிட்டு வீட்டிற்கு சென்றார். அப்போது மீண்டும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இந்த பிரச்சினையில் மனவேதனை அடைந்த சிவசங்கிரி தனது உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.

    இதுகுறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். மேலும், ஈரோடு ஆர்.டி.ஓ. நர்மதாதேவியும் மேல்விசாரணை நடத்தினார். அதைத்தொடர்ந்து சிவசங்கிரியை தற்கொலைக்கு தூண்டியதாக திருப்பதியை போலீசார் கைது செய்தனர்.

    திருப்பதியின் மீது ஈரோடு மகளிர் கோர்ட்டில் போலீசார் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி (பொறுப்பு) ராமகிருஷ்ணன் நேற்று தீர்ப்பு கூறினார். அந்த தீர்ப்பில், சிவசங்கிரியை தற்கொலைக்கு தூண்டிய குற்றத்துக்காக திருப்பதிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், அபராதத்தை செலுத்த தவறினால் கூடுதலாக ஒரு ஆண்டு சிறை தண்டனையும் அனுபவிக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் அரசு வக்கீல் ஜி.டி.ஆர்.சுமதி ஆஜரானார். 
    திண்டுக்கல் அருகே போலீசில் புகார் செய்த மனைவியை கணவர் வெட்டி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் சவேரியார் பாளையம் ஜீவாநகர் 4-வது தெருவை சேர்ந்தவர் அருண்குமார். இவர் இறைச்சி கடையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் தனசீலி (வயது30) என்பவருக்கும் கடந்த 14 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    இவர்களுக்கு தருண் (12), வருண் (10), தர்ஷினி (8), ஆரோவ் (6) ஆகிய 4 குழந்தைகள் உள்ளனர். அருண்குமார் குடிபழக்கத்திற்கு அடிமையானவர். குடித்து விட்டு வீட்டிற்கு பணம் தராமல் மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளார். இதனால் தனசீலி தனது தாய் புஷ்பாவுடன் குழந்தைகளை வைத்து வளர்த்து வந்தார். கணவர் வருமானம் இல்லாததால் பழைய இரும்பு கடைக்கு வேலைக்கு சென்று வந்துள்ளார்.

    அவ்வப்போது குடித்து விட்டு மனைவியுடன் பிரச்சினை செய்து வந்ததால் கடந்த 15 நாட்களுக்கு முன்பு திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். தனது கணவரால் தானும் குழந்தைகளும் மிகவும் கஷ்டப்பட்டு வருவதாக கூறி இருந்தார்.

    இதனால் மனைவி மீது அருண்குமார் மேலும் ஆத்திரத்தில் இருந்து வந்தார். இன்று காலை வேலைக்கு செல்வதற்காக தனசீலி நன்னப்பாநகர் வழியாக நடந்து வந்து கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த அருண்குமார் தான் மறைத்து வைத்திருந்த இறைச்சி வெட்டும் கத்தியால் தனசீலியை பல இடங்களில் வெட்டினார். இதில் தனசீலி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவர் இறந்ததை பார்த்ததும் அருண்குமார் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    இது குறித்து நகர் தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கொலை செய்யப்பட்ட தனசீலியின் உடலை திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அவரது மகன்கள் தருண் மற்றும் வருண் ஆகிய 2 பேரும் விடுமுறைக்காக ஊருக்கு சென்றிருந்தனர்.

    தர்ஷினி மற்றும் ஆரோவ் ஆகிய 2 பேர் மட்டுமே பாட்டி வீட்டில் இருந்தனர். தனது தாய் வெட்டி படுகொலை செய்யப்பட்டதை அறிந்ததும் குழந்தைகள் கதறி அழுதது காண்பவர்களின் கண்களை குளமாக்கியது.

    இதனிடையே போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த அருண்குமாரை பிடித்து விசாரித்து வருகின்றனர். பட்டபகலில் நடந்த இந்த படுகொலை சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.#tamilnews
    சூடான் நாட்டில் வலுக்கட்டாயமாக கற்பழித்த கணவரை கொலை செய்த மனைவிக்கு அந்த நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது.
    ஓம்துர்மன்:

    சூடான் நாட்டை சேர்ந்தவர், நவுரா உசேன். 16 வயதான நிலையில் இந்தப் பெண்ணை ஒருவருக்கு கட்டாய திருமணம் செய்து வைத்தனர். ஆனால் இந்தப் பெண்ணுக்கோ படிப்பு முடித்து ஆசிரியை ஆக வேண்டும் என்பது கனவாக இருந்தது.

    திருமணத்துக்கு பின்னர் 3 ஆண்டு காலம் நவுரா தன் அத்தை வீட்டில் தஞ்சம் அடைந்தார். அதன்பின்னர் தன் வீட்டுக்கு தந்திரமாக அழைத்துச் செல்லப்பட்ட அவர், பின்னர் கணவரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

    அங்கு சென்ற சில நாட்களில், அவரை உறவினர்கள் துணையுடன் கணவர் வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்தார்.

    மறுநாளும் அவர், மனைவியை பலாத்காரம் செய்ய முயற்சித்தார். ஏற்கனவே ஆத்திரத்தின் உச்சத்தில் இருந்த அந்தப் பெண், கணவரை கத்தியால் குத்தி படுகொலை செய்தார். அதன்பின்னர் அவர் தாய் வீட்டுக்கு போய்விட்டு, அங்கிருந்து போலீஸ் நிலையம் சென்று சரண் அடைந்தார்.

    இது தொடர்பாக அந்தப் பெண் மீது ஓம்துர்மன் நகர கோர்ட்டில் இஸ்லாமிய சட்டப்படி வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கில் அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது. இஸ்லாமிய சட்டதிட்டப்படி, கொலையாளியிடம் இருந்து, கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்தினர் இழப்பீடு பெற சம்மதித்தால் கொலையாளி தண்டனைக்கு தப்பலாம், இழப்பீட்டை அவர்கள் ஏற்காவிட்டால், கொலையாளிக்கு மரண தண்டனை விதிக்கப்படும்.

    இந்த வழக்கைப் பொறுத்தவரையில், நவுரா உசேனின் கணவர் குடும்பத்தினர் இழப்பீடு பெற முன்வரவில்லை. அவர்கள் அந்தப் பெண்ணுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து விட்டனர்.

    இதையடுத்து அந்தப் பெண்ணுக்கு கோர்ட்டு மரண தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது.

    தண்டனையை எதிர்த்து நவுரா உசேன் மேல் முறையீடு செய்வதற்கு 15 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் மனித உரிமை அமைப்புகள், அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று ஒருமித்த குரலில் வலியுறுத்தி வருகின்றன. #tamilnews
    ×