search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காணிக்கை"

    • மீனாட்சி அம்மன் கோவிலில் காணிக்கை எண்ணும் பணி நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.
    • கோவில் துணை ஆணையர் அருணாசலம் முன்னிலையில் இன்று காலை தொடங்கி நடந்து வருகிறது.

    மதுரை

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 நாள் சித்திரை திருவிழா நடந்து முடிந்தது. இந்த நிலையில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி, கோவில் துணை ஆணையர் அருணாசலம் முன்னிலையில், இன்று காலை தொடங்கி நடந்து வருகிறது.

    மீனாட்சி அம்மன் கோவில் மட்டுமின்றி தெப்பக்குளம் மாரியம்மன் கோவில், முக்தீஸ்வரர் கோவில், செல்லூர் திருவாப்புடையார் கோவில், திருவாதவூர் திருமறைநாதர் சுவாமி கோவில் ஆகிய 10 கோவில்களிலும் உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை என்னும் பணி நடந்து வருகிறது.

    இதற்கான பணிகளில் கோவில் தக்கார் பிரதிநிதி, கண்காணிப்பாளர்கள், அலுவலர்கள், பணியா ளர்கள், பக்தர் பேரவையினர் மற்றும் ஒய்வு பெற்ற வங்கி அலுவலர்கள் உள்பட சுமார் 250-க்கும் மேற் பட்டோர் கலந்து கொண்டனர்.

    மீனாட்சி அம்மன் ேகாவில் மற்றும் உப கோவில்களில் காணிக்கை என்னும் பணி, இணையதள யூ-டியுப் வாயிலாக நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.

    பெங்களூரைச் சேர்ந்த தொழில் அதிபர், பகவதி அம்மனுக்கு காணிக்கையாக 24 பவுன் எடை கொண்ட தங்க கனகமணி மாலையை காணிக்கையாக வழங்கி உள்ளார்.
    கன்னியாகுமரி:

    பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கிறார்கள். கோவிலுக்கு வரும் பக்தர்கள் காணிக்கையாக ரூபாய், தங்கம், வெளிநாட்டு பணம் என உள்ளிட்டவற்றை வழங்கி வருகிறார்கள்.

    இந்தநிலையில் பெங்களூரைச் சேர்ந்த தொழில் அதிபர் முருகன், பகவதி அம்மனுக்கு காணிக்கையாக 24 பவுன் எடை கொண்ட தங்க கனகமணி மாலையை காணிக்கையாக வழங்கி உள்ளார்.

    நேற்று அந்த தங்க மாலை கோவிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. பின்னர் கோவில் மேலாளர் ஆறுமுக நயினாரிடம், தொழில் அதிபர் முருகன், தங்க மாலையை ஒப்படைத்தார். தொடர்ந்து அந்த மாலை பகவதி அம்மனுக்கு அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன.

    நிகழ்ச்சியில் தலைமை கணக்காளர் ஸ்ரீராமச்சந்திரன், மேல் சாந்திகள் மணிகண்டன் போற்றி, பத்மநாபன் போற்றி, ராதாகிருஷ்ணன் போற்றி, விட்டல் போற்றி, வனஜா, விஜயா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    பகவதி அம்மன் கோவிலில் வைகாசி திருவிழா நேற்று முன்தினம் தொடங்கி நடந்து வருகிறது. 2-ம் திருவிழாவான நேற்று மாலை 6 மணிக்கு சமய உரை, 8 மணிக்கு பக்தி பஜனை, 9 மணிக்கு கிளி வாகனத்தில் தேவி உலா வருதல் நிகழ்ச்சிகள் நடந்தன.

    3-ம் திருவிழாவான இன்று காலை 5 மணிக்கு அபிஷேகம், 7 மணிக்கு அன்ன வாகனத்தில் தேவி வீதி உலா வருதல் நிகழ்ச்சி நடந்தது.

    8 மணிக்கு கன்னியாகுமரி வடக்கு தெரு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. மதியம் 12 மணிக்கு அன்னதானம் நடந்தது.

    இன்று மாலை 6 மணிக்கு முருக பக்தர்கள் நடத்தும் பஜனை நிகழ்ச்சி, இரவு 9 மணிக்கு அன்ன வாகனத்தில் தேவி திருவீதி உலா வருதல் நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரூ.30 லட்சம் காணிக்கை செலுத்தி பக்தர்களுக்கு 3 வேளை உணவளிக்கலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. #TirupatiDevasthanam
    திருமலை:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு தினமும் 3 வேளை அன்னதானம் வழங்கப்படுகிறது. அந்த திட்டத்துக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் காணிக்கைகளை வாரி வழங்கி வருகின்றனர்.

    சாதாரண நாட்களில் 60 ஆயிரத்தில் இருந்து 70 ஆயிரம் பக்தர்களுக்கும், விழா நாட்களில் லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கும் இலவச உணவு வழங்கப்படுகிறது. அன்னதானத்துக்கு தினமும் 14-ல் இருந்து 16½ டன் அரிசி, 6½-ல் இருந்து 7½ டன் காய்கறிகள் பயன்படுத்தப்படுகின்றன. இதற்கு முன்பு ஒருநாளைக்கு அன்னதானத்துக்கு ரூ.26 லட்சம் செலவாகியது. தற்போது விலைவாசி உயர்வால் ஒருநாளைக்கு ரூ.30 லட்சம் செலவாகிறது என தேவஸ்தான கணக்குத்துறை அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர்.



    எனவே திருமலையில் பக்தர்களுக்கு ஒருநாளைக்கு இலவசமாக அன்னதானம் செய்ய ரூ.26 லட்சத்தில் இருந்து ரூ.30 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு அன்னதானம் செய்ய விரும்புவோர் ரூ.30 லட்சத்தை காணிக்கையாக செலுத்த வேண்டும். அவர்களின் பெயரில் பக்தர்களுக்கு 3 வேளை இலவசமாக உணவு வழங்கப்படும். ஒருநாளைக்கு செலவாகும் தொகையை செலுத்த முடியாதவர்கள் 3 வேளையில் ஏதேனும் ஒரு வேளை உணவை மட்டும் பக்தர்களுக்கு அளிக்கலாம்.

    அதில் காலை ஒரு வேளை மட்டும் உணவளிக்க ரூ.7 லட்சத்தை காணிக்கையாக செலுத்தலாம். மதியம் ஒரு வேளை மட்டும் உணவளிக்க ரூ.11½ லட்சத்தை காணிக்கையாக செலுத்த வேண்டும். இரவு ஒரு வேளை மட்டும் உணவளிக்க ரூ.11½ லட்சத்தை காணிக்கையாக செலுத்தலாம். ஒருநாளைக்கு பக்தர்களுக்கு உணவளிக்க ரூ.30 லட்சத்தை காணிக்கையாக செலுத்தும் திட்டம் இந்த மாதம் (மே) 1-ந் தேதியில் இருந்து அமலுக்கு வந்துள்ளது.

    ஸ்ரீவெங்கடேஸ்வரா நித்ய அன்னதானத்திட்ட அறக்கட்டளைக்கு இதுவரை 4 லட்சத்து 76 ஆயிரம் பேர் காணிக்கை வழங்கி உள்ளனர். அதன் மூலம் இதுவரை ரூ.1,071 கோடி காணிக்கையாக பெறப்பட்டுள்ளது. அந்த காணிக்கை தொகை, அரசு வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. அதில் கிடைக்கும் வட்டி தொகையில் இருந்து தான் தினமும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. #TirupatiDevasthanam
    மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சீரடி சாய்பாபா கோவிலில் 3 நாட்கள் நடந்த சமாதி நூற்றாண்டு சிறப்பு பூஜையின்போது 5 கோடியே 97 லட்சம் ரூபாயை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தினர். #Saibabatemple #Saibabasamadhicentenary
    மும்பை:

    மராட்டிய மாநிலம் சீரடியில் பிரசித்தி பெற்ற சாய்பாபா கோயில் அமைந்துள்ளது. இங்கு திரளான பக்தர்கள் வந்து சாய்பாபா அருள் பெற்று செல்வது வழக்கம். 

    இதற்கிடையே, சீரடி சாய்பாபா சமாதி நிலையை அடைந்த நூற்றாண்டு விழா இந்த ஆண்டு சீரடியில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

    கடந்த 17-ம் தேதி தொடங்கி 19-ம் தேதி வரையிலான மூன்று நாட்களில் நடைபெற்ற பூஜையின்போது உண்டியல் வருமானமாக 2.52 கோடி ரூபாயும், ஆன்லைன் முன்பதிவு உள்பட பல்வேறு கவுன்ட்டர்களில் ரசீது விற்பனை மூலமாக சுமார் 83 லட்சம் ரூபாயும் வசூலானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    ஆன்லைன் மூலமாகவும் காசோலை, கேட்போலை மூலமாக ரூ.1.41 கோடி நன்கொடை கிடைத்துள்ளது. இதுதவிர அகமத்நகர் மாவட்டத்தில் உள்ள சாய்பாபா கோயில் மூலம் ரூ.1.46 கோடி ரொக்க நன்கொடை கிடைத்தது.

    மேலும், தங்கம் மற்றும் வெள்ளி நகைகளாக ரூ.28.24 லட்சம், வெளிநாட்டுப் பணமாக ரூ.24.55 லட்சம், கட்டண தரிசனம் மூலம் ரூ.78 லட்சம், ஆன்லைன் நுழைவுச்சீட்டு மற்றும் லட்டு விற்பனை மூலம் ரூ.28.52 லட்சம் என இந்த 3 நாட்களில் சாய்பாபா சமிதி நிர்வாகத்துக்கு 5 கோடியே 97 லட்சம் ரூபாய் நன்கொடையாக சேர்ந்ததாக சாய்பாபா சன்ஸ்தான் அறக்கட்டளையின் தலைமை செயல் அலுவலர் ருபல் அகர்வால் தெரிவித்துள்ளார். #Saibabatemple #Saibabasamadhicentenary 
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் 9 நாட்களில் உண்டியல் வருமானமாக மொத்தம் ரூ.17 கோடியே 55 லட்சம் வசூலாகியுள்ளது. #TirupatiTemple
    திருமலை:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா கடந்த 10-ந்தேதி தொடங்கி 18-ந்தேதி வரை கோலாகலமாக நடந்தது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    கோவிலில் மூலவரை தரிசனம் செய்யும் பக்தர்கள், கோவில் வளாகத்தில் உள்ள பிரதான உண்டியலில் காணிக்கை செலுத்தி வருகின்றனர்.

    அந்த காணிக்கைகள் கோவில் வளாகத்திலேயே உடனுக்குடன் எண்ணப்பட்டு வருகின்றன.

    10-ந் தேதியில் இருந்து 18-ந்தேதி வரை நடந்த நவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் 9 நாட்களில் உண்டியல் வருமானமாக மொத்தம் ரூ.17 கோடியே 55 லட்சம் வசூலாகியுள்ளது. 6 லட்சத்து 54 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். 29 லட்சத்து 30 ஆயிரம் லட்டு விற்பனை யாகியுள்ளது.

    தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை என்பதால் திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இலவச தரிசனத்தில் அனைத்து குடோன்களும் நிரம்பி வழிகின்றன. பக்தர்களுக்கு தேவையான அடிப்படை விதிகளை தேவஸ்தானம் செய்துள்ளது. #TirupatiTemple
    நெருப்புக் குழம்பை கக்கும் எரிமலையில் ஏறி ஆடு, மாடு, கோழி ஆகியவற்றை காணிக்கை செலுத்தும் விநோத விழாவை இந்தோனேசியாவின் பழங்குடி மக்கள் கொண்டாடுகின்றனர்.
    ஜகார்த்தா:

    இந்தோனேசியாவில் எரிமலைகள் அதிகம். அதை பார்க்கவே சுற்றுலா பயணிகள் அங்கு அதிக அளவில் செல்கின்றனர். ஒரு வருடத்தில் சராசரியாக 3 கோடி பேர் அங்கு சுற்றுலா சென்று தீவுகளை சுற்றி பார்க்கிறார்கள்.

    அவற்றில் மவுண்ட் பரோமா என்ற எரிமலையில் ஜூலை மாதம் வினோதமான திருவிழா நடக்கிறது. அப்போது பல்வேறு நாடுகளில் இருந்து வரும் மக்கள் மவுண்ட் பரோமா எரிமலை மீது ஏறி காணிக்கை செலுத்துகிறார்கள்.

    எரிமலை வெடிக்கும் நிலையில் இருக்கும் போது கூட அதன் மீது ஏறி நின்று வழிபாடு நடத்துகிறார்கள்.

    இந்தோனேசியாவின் ரோரோ ஆண்டங் என்ற மன்னன் வாரிசு இல்லாமல் கஷ்டப்பட்டான். கடவுளிடம் வேண்டி வாரிசு பெற்ற அவன் இந்த எரிமலைக்கு காணிக்கை அளிப்பதாக சத்தியம் செய்தான்.


    அதில் இருந்து மக்களும் இந்த எரிமலைக்கு காணிக்கை அளித்து வருகிறார்கள். முக்கியமாக அந்த பகுதியில் உள்ள டேன்ஜர் இன பழங்குடி மக்கள் காணிக்கை செலுத்தும் வழக்கத்தை கொண்டுள்ளனர்.

    பயிர்கள், பழங்கள், காசு என வித்தியாசமான காணிக்கைகள் வழங்கப்படுகிறது. அதே போன்று ஆடு, மாடு, கோழி போன்ற உயிருள்ள பொருட்களும் காணிக்கையாக செலுத்தப்படுகிறது.
    சக்தி தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோவிலாகும். இங்கு பக்தர்கள் உண்டியல்களில் செலுத்திய காணிக்கை ரூ.79 லட்சம் கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
    திருச்சி:

    சக்தி தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோவிலாகும். இங்கு பக்தர்கள் உண்டியல்களில் செலுத்தப்படும் காணிக்கைகளை கோவில் நிர்வாகம் சார்பில் மாதம் இரு முறை எண்ணப்படுவது வழக்கம். அதன்படி இந்த மாதம் நேற்று உண்டியல் காணிக்கை எண்ணும் பணி கோவில் இணை ஆணையர் குமரதுரை, கோவில் மேலாளர் ஹரிஹர சுப்பிரமணியன், மண்ணச்சநல்லூர் பகுதி கோவில் ஆய்வாளர் தமிழ்ச்செல்வி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. 

    இதில் காணிக்கையாக 79 லட்சத்து 26 ஆயிரத்து 870 ரூபாய் ரொக்கமும், 2 கிலோ 564 கிராம் தங்கமும், 11 கிலோ 80 கிராம் வெள்ளியும், மேலும் அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, சவுதி அரேபியா, ஓமன், கத்தார், யூரோ, குவைத், பிரான்ஸ், சீனா ஆகிய நாடுகளில் உள்ள பணம் 97-ம் கிடைத்துள்ளதாகவும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

    உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் திருச்சி ஐயப்பா சேவா சங்கம், அம்மன் அருள், ஆத்ம சங்கம் ஆகியவற்றை சேர்ந்த தன்னார்வலர்களும், தனியார் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.
    உத்தரகாண்டில் உள்ள பத்ரிநாதருக்கு 4 கிலோ எடையுள்ள தங்க குடையை பக்தர் ஒருவர் காணிக்கையாக வழங்கியுள்ளார். #Badrinath #GoldUmbrella
    புதுடெல்லி:

    உத்தரகாண்ட் மாநிலத்தில் இந்து மக்களின் பிரபல வழிபாட்டு ஸ்தலங்களான கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் ஆலயங்கள் அமைந்துள்ளன. இவற்றில் கி.பி. ஏழாம் நூற்றாண்டில் உருவான பத்ரிநாத் ஆலயம் கடல் மட்டத்தில் இருந்து 10,170 அடி உயரத்தில் அமைந்துள்ளது.

    இந்நிலையில், பத்ரிநாதர் கோவிலுக்கு குவாலியரில் வசிக்கும் ராஜ வம்சத்தினர் புதிய தங்க குடை ஒன்றை காணிக்கையாக அளித்துள்ளனர்.



    குவாலியர் மகாராணி அஹில்யா பாய் சோல்கர் காணிக்கையாக அளித்த 4 கிலோ எடையுள்ள தங்க குடை பத்ரிநாத்துக்கு கொண்டு வரப்பட்டது.

    பத்ரிநாதர் கோவிலுக்கு கொண்டு வரப்பட்ட தங்க குடைக்கு, வேத மந்திரங்கள் முழங்க முறைப்படி பூஜைகள் செய்யப்பட்டு பத்ரிநாத பெருமாளுக்கு சாத்தப்பட்டது.

    இதற்காக நடந்த சிறப்பு பூஜையில் குவாலியரை சேர்ந்த ராஜ குடும்பத்தினரும், குடையை செய்தவர்களின் குடும்பத்தினரும் பங்கேற்றனர் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். #Badrinath #GoldUmbrella
    ×