search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 108818"

    • ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி கோட்டாட்சியரிடம் மனு அளித்தனர்.
    • கோட்டாட்சியர் தங்களுக்கு அனுமதி வழங்க நடவடிக்கை மேற்கொள்கிறேன் என்றார்

    கரூர்:

    குளித்தலை அருகே தோகைமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ராச்சாண்டர் திருமலை பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ விரையாச்சிலை, ஈஸ்வரர் சமேத ஸ்ரீ பெரியநாயகி அம்மன் மற்றும் ஸ்ரீ கோலமாவயிரம் கொண்ட பிடாரியம்மன், ஸ்ரீ கரையூர் மற்றும் ஸ்ரீ நீலமேகம் கோவில் ஊர் பொதுமக்கள் சார்பாக கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக ஜல்லிக்கட்டு விழா நடத்தியுள்ளனர், கடந்த இரண்டு ஆண்டுகள் கொரோனா காலகட்டங்கள் என்பதால் ஜல்லிக்கட்டு நடத்த முடியவில்லையென கூறுகின்றனர். இந்த ஆண்டு கொரோனா இல்லாத நிலையில், வரும் பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு விழா வருகின்ற 17.01.2023 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு குளித்தலை கோட்டாட்சியர் புஷ்பா தேவியிடம் அனுமதி மற்றும் பல்வேறு ஆலோசனைகள் வழங்க கோரிக்கை மனுவை ஊர் பொதுமக்கள் சார்பாக ஜல்லிக்கட்டு குழுவினர் வழங்கினர். மனுவை பெற்றுக்கொண்ட கோட்டாட்சியர் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு தங்களுக்கு அனுமதி வழங்க நடவடிக்கை மேற்கொள்கிறேன் என்று கூறியுள்ளார். சுமார் 30க்கும் மேற்பட்டவர்கள் இதில் கலந்து கொண்டனர்.


    • வாட்ஸ் அப் குரூப் ஆட்டோ டிரைவர்களை தொடர்ந்து தொழில் நடத்த கோரிக்கை
    • ஆட்டோ டிரைவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்

    திருச்சி:

    திருச்சியில் ஆன்லைன் நிறுவனங்களுக்கு ஓட்டும் ஆட்டோ டிரைவர்களுக்கும் அதிலிருந்து பிரிந்து தனியாக வாட்சப் குரூப் ஆரம்பித்து இயங்கும் மீட்டர் ஆட்டோ டிரைவர்களுக்கும் இடையே தொழில் போட்டி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்றைய தினம் ஆன்லைன் நிறுவன ஆட்டோ டிரைவர்கள், வாட்ஸ் அப் குரூப்பை எதிர்த்து கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இந்த நிலையில் இன்று 500க்கும் மேற்பட்ட வாட்ஸ் அப் குரூப் ஆட்டோ டிரைவர்கள், திருச்சி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர். அதில் ஆன்லைன் நிறுவனங்களுக்கு ஆட்டோ ஓட்டும்போது பொதுமக்களிடம் அதிக கட்டணம் வசூலிக்க வேண்டி வருகிறது. அதுமட்டுமல்லாமல் கணிசமான தொகையினை அந்த நிறுவனங்களுக்கு கமிஷனாக கொடுக்க வேண்டி இருக்கிறது. எனவே எங்களது வாட்ஸ் அப் குரூப் ஆட்டோ டிரைவர்களை தொடர்ந்து தொழில் நடத்த கலெக்டர் அனுமதிக்க வேண்டும் தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என அதில் கூறியிருந்தனர்.


    • மாற்றுத்திறனாளி உதவித்தொகை வழங்க கோரி மூதாட்டி மனு அளித்தார்.
    • கலெக்டரிடம் மனு அளித்தார்

    அரியலூர்

    உடையார்பாளையம் தாலுகா நடுவெளி கிராமத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளியான ஜெயலட்சுமி(வயது 70), உதவித்தொகையை மீண்டும் வழங்கக்கோரி கலெக்டரிடம் மனு அளித்தார். மேலும் அவர் கூறுகையில், எனக்கு வழங்கப்பட்டு வந்த மாற்றுத்திறனாளி உதவித்தொகை கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நிறுத்தப்பட்டு விட்டது. அதனை மீண்டும் வழங்கக்கோரி 3 முறை மனு அளித்துள்ளேன். ஆனால் உதவித்தொகையை மீண்டும் வழங்கவில்லை. ஒவ்வொரு முறை மனு அளிக்க வரும்போதும் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. எனது கணவர் 10 ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார். இதனால் உதவித்ெதாகையை கொண்டே வாழ்க்கை நடத்தி வந்தேன். எனவே எனக்கு மாற்றுத்திறனாளி உதவித்தொகையை மாவட்ட கலெக்டர் மீண்டும் பெற்றுத்தர வேண்டும் என்று மனு அளித்துள்ளதாக கண்ணீர் மல்க கூறினார். 

    • கப்பலூர் டோல்கேட் எதிர்ப்பு குழுவினர் முதல்-அமைச்சரை சந்தித்து மனு அளித்தனர்.
    • இது குறித்து போலீசார் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    திருமங்கலம்

    மதுரை அருகே உள்ள கப்பலூரில் டோல்கேட் விதிமுறைகளை மீறி அமைக்கப்பட்டுள்ளது. இதை அகற்ற வலியுறுத்தி டோல்கேட் எதிா்ப்பு ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டு அவர்கள் தலைமையில் போராட் டங்கள் நடந்து வருகிறது.

    இந்த கோரிக்கையை வலியுறுத்தி கடந்த மாதம் 22-ந் தேதி திருமங்கலம் நகர் முழுவதும் கடைய டைப்பு போராட்டம் நடந்தது. மதுரை வந்த முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கப்பலூர் டோல்கேட் எதிர்ப்பு ஒருங்கிணைப்பு குழுவினர் கப்பலூர் டோல்கேட் அகற்ற வலியுறுத்தி மனு கொடுத்தனர்.

    இதுகுறித்து கப்பலூர் டோல்கேட் எதிர்ப்பு ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த தலைவர் ஜெயராமன் கூறியதாவது:-

    மனுவை பெற்று கொண்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். பாராளுமன்றத்தில் கப்பலூர் டோல்கேட் பிரச்சினை குறித்து மாணிக்கம்தாகூர் எம்.பி. பேசியுள்ளார். மத்திய மந்திரி நிதின்கட்கரியை டெல்லியில் சந்திக்க எம்.பி. ஏற்பாடு செய்துள்ளார்.

    சமீபகாலமாக கப்பலூர் டோல்கேட் நிர்வாகம் சார்பில் அவர்களது எல்லை தொடக்கம் முதல் முடிவு வரையில் நான்கு வழிச்சாலையில் கடை அல்லது வீடு கட்டினால் ரவுடிகளை வைத்து மிரட்டி பணம் கேட்பதாக பலரும் புகார் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து போலீசார் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது டோல்கேட் ஒருங்கி ணைப்பு குழுவை சேர்ந்த வழக்கறிஞர் கனகராஜ், அனிதாபால்ராஜ், கண்ணன், செல்வம், ஆனந்தன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

    • பால் உற்பத்தியாளர்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்
    • பால் விற்பனையில் பழைய நடைமுறை

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பொதுமக்கள், வாடிக்கையாளர்கள், சங்க உறுப்பினர்கள், பணியாளர்கள் ஆகியோர்களின் நலனை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றது. அரியலூர் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் கடந்த 75 ஆண்டுகளுக்கு மேலாக பொதுமக்களின் நலனை கருதியே சிறப்பாக செயல்பட்டு வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பால்வளத்துறை ஒரு சுற்று அறிக்கையை அனுப்பி உள்ளது. அந்த சுற்றறிக்கையை பின்பற்றினால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது, அதனால் பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்கள், சங்கப் பணியாளர்கள் நலன் கருதி எப்போதும் உள்ளது போல் பால் விற்பனையில் பழைய நடைமுறையை செயல்படுத்த வேண்டும், எனக்கோரி மாவட்ட கலெக்டரிடம் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் இணையம், பால் உற்பத்தியாளர் சங்க பணியாளர்கள் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

    • தேசிய நெடுஞ்சாலையில் கோபி-தாராபுரம் சாலையும் சந்திக்கும் இடத்தில் பேருந்து நிறுத்தம் உள்ளது.
    • நூற்றுக்கணக்கான வாகன ஓட்டிகள் வந்து செல்லும் மையமாகவும் உள்ளது.

    பெருமாநல்லூர் :

    திருப்பூர் மாவட்ட கலெக்டரிடம் செங்கப்பள்ளி பகுதி பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது :- திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி வட்டம், செங்கப்பள்ளி பேருந்து நிறுத்தம் பிரதான தேசிய நெடுஞ்சாலையில் கோபி-தாராபுரம் சாலையும் சந்திக்கும் இடத்தில் உள்ளது. ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியத்தின் மையப் பகுதியாகவும், கோவை- ஈரோடு- சேலம், கோபி-ஊத்துக்குளி-திருப்பூர், வழித்தடத்தில் பயணிக்கும் நூற்றுக்கணக்கான பேருந்து பயணிகள் ஏறி இறங்கி செல்லும் மையமாக செங்கப்பள்ளி பேருந்து நிறுத்தம் உள்ளது. வாரச்சந்தைக்கு வந்து செல்லும் மக்களுக்கும், நூற்றுக்கணக்கான வாகன ஓட்டிகள் வந்து செல்லும் மையமாகவும் உள்ளது. மணிக்கணக்கில் பயணம் செய்து செங்கப்பள்ளி வரும் பயணிகளுக்கும், பொதுமக்களுக்கும், இயற்கை உபாதைகளை கழிக்க ஒரு பொது கழிப்பிடம் இல்லை. ஆகவே செங்கப்பள்ளி பேருந்து நிறுத்த பகுதியில் ஒரு பொது கழிப்பிடம் அமைக்க வேண்டும் என செங்கப்பள்ளி ஊராட்சிக்கும், அரசுக்கும் பொதுமக்களும், பேருந்து பயணிகளும் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வந்துள்ளனர்.

    இதையடுத்து செங்கப்பள்ளி ஊராட்சி நிர்வாகம் பேருந்து நிறுத்தம் அருகில் அரசு திட்ட பணியில் நிதி ஒதுக்கீடு பெற்று பொதுக் கழிப்பிடம் கட்ட 28.11.22 அன்று ஊராட்சி தலைவர், ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், கட்டிட ஒப்பந்ததாரர்கள் முன்னிலையில் அஸ்திவாரப் பணிகளை துவக்கி உள்ளனர்.

    அஸ்திவாரப் பணிகளை துவக்கி செய்து கொண்டிருந்தபோது ஒரு சிலர் அந்த பணியை தடுத்து நிறுத்தியதோடு மட்டுமல்லாமல், திட்ட பணியை சீர்குலைக்கும் நோக்கில் எந்திரங்களை வைத்து தோண்டப்பட்ட அஸ்திவாரங்களை அராஜகமான முறையில் மூடி அரசு திட்டப்பணிகளை தடுத்து நிறுத்தி உள்ளார்கள். இதனால் பொதுக்கழிப்பிட பணி தற்போது நின்று போய் உள்ளது. ஆயிரக்கணக்கான மக்களுக்கு பயன்படும் வகையில் ஊராட்சி நிர்வாகத்தால் நல்ல நோக்கத்தோடு செய்யப்பட்ட பணியை சிலர் சுயநல நோக்கோடு தடுத்துள்ள செயல் பொதுநலன் விரும்பும் யாவரும் ஏற்றுக் கொள்ள முடியாது. செங்கப்பள்ளிக்கு வரும் மக்கள் இயற்கை உபாதையை கழிக்க அன்றாடம் படும் சிரமத்தை அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    ஆகவே மாவட்ட நிர்வாகம், ஊராட்சி ஒன்றிய நிர்வாகம், ஊராட்சி நிர்வாகம், ஏற்கனவே பொதுமக்கள் வைத்து வந்த கோரிக்கையின் அடிப்படையில் செங்கப்பள்ளி ஊராட்சி நிர்வாகத்தால் பொது நலன் கருதி தொடங்கப்பட்ட பொது கழிப்பிட பணியை திட்டமிட்ட அடிப்படையில் செங்கப்பள்ளி பேருந்து நிறுத்தம் அருகிலேயே விரைவில் முடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சுயநல நோக்கோடு பொதுக் கழிப்பிட திட்டப் பணியை தடுக்கின்ற எந்த ஒரு நபர் மீதும் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    • இஸ்லாமிய கூட்டமைப்பினர் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
    • இஸ்லாமிய இளைஞர்களை அச்சுறுத்தும் நடவடிக்கைகளை தடுக்க வேண்டும்

    திருச்சி:

    திருச்சி மாவட்ட இஸ்லாமிய கூட்டமைப்பின் தலைவர் ஹபீபுர் ரகுமான், துணைத் தலைவர் உதுமான் அலி ஆகியோர் கலெக்டர் பிரதீப் குமாரை சந்தித்து ஒரு புகார் மனு அளித்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது;- தமிழகம் முழுவதும் கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து இஸ்லாமிய இளைஞர்கள் என்.ஐ.ஏ. மற்றும் காவல் துறையின் விசாரணை என்ற பெயரில் அச்சுறுத்தப்படுகிறார்கள். தவறான செய்திகளை தந்து அவர்கள் கைது செய்யப்படுவதால் இஸ்லாமிய சமூக மக்களிடையே ஒருவித பதட்டம் ஏற்பட்டுள்ளது. மேலும் பொது சமூகத்தில் இருந்து இஸ்லாமிய மக்களை தனிமைப்படுத்தும் நிகழ்வாகவே இது இருக்கிறது. இதனால் இஸ்லாமிய இளைஞர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது. ஒருவேளை இஸ்லாமிய இளைஞர்கள் மீது ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதை முறையாக கூட்டமைப்பு நிர்வாகிகளிடம் தெரிவித்தால் நாங்களே விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்கிறோம். ஆகவே இஸ்லாமிய இளைஞர்களை தொடர்ந்து அச்சுறுத்தும் காவல்துறை நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த வேண்டும் இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. 

    • வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் வணிகவரித்துறை இணை ஆணையரிடம் மனு வழங்கப்பட்டது
    • கோவிந்தராஜூலு தலைமையில் வழங்கப்பட்டது

    திருச்சி:

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜூலு இன்று, திருச்சி வணிகவரித்துறை இணை ஆணையர் சுவாமி நாதனை சந்தித்து ஒரு கோரிக்கை மனு அளித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் அண்மைக்காலமாக வணிகவரித்துறையினர் டெஸ்ட் பர்ச்சேஸ் என்ற பெயரில் சில்லறை வணிகத்தில் ஈடுபட்டு வரும் வியாபாரிகளின் கடைகளுக்கு சென்று தாங்களே பொருட்களை வாங்கி பின்னர் அதற்குரிய வரி செலுத்தாமல் விற்பனை செய்யப்படுகிறது என குற்றம் சாட்டி வணிகர்களிடம் பெரும் தொகையை அபராதமாக வசூலித்து வருகின்றனர்.

    இதைத்தொடர்ந்து பேரமைப்பின் அவசர ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி டெஸ்ட் பர்சேஸ் நடைமுறையை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி முதற்கட்டமாக அனைத்து மாவட்டங்களிலும் உள்ள வணிகவரி உயர் அதிகாரிகளிடம் பேரமைப்பின் சார்பில் கோரிக்கை மனு அளிப்பது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி இன்று பேரமைப்பின் திருச்சி மாவட்ட பேரமைப்பு சார்பில் எனது தலைமையில் இணை ஆணையரை சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளோம். சில்லரை வணிகர்களை பாதிக்கும் டெஸ்ட் பர்சேஸ் நடைமுறையை நிறுத்த திரும்ப பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மனு அளித்தபோது திருச்சி மண்டல தலைவர் எம்.தமிழ்செல்வம், மாவட்ட தலைவர் ஸ்ரீதர், பேரமைப்பின் மாநில இணை செயலாளர் ராஜாங்கம், மாநில துணைத்தலைவர்கள் சின்னசாமி, சுப்பிரமணியன், கந்தன், ரங்கநாதன், எஸ்.ஆர்.வி.கண்ணன், கே.எம்.எஸ். ஹக்கீம், ஆர்.எம்.ரவிசங்கர், பெமினா அபுபக்கர்,

    ஆறுமுகப்பெருமாள், செல்வா ரங்கராஜன், உமாநாத், மாதுளை இணைச் செயலாளர்கள் பத்மா ரமேஷ், அப்பா குமரன், குணா சின்னசாமி, கருப்பையா, ராஜா முகமது, காமராஜ், ஜானகிராமன், கமருதீன், பழனி, மாவட்ட செயலாளர் காதர் மொய்தீன், பொருளாளர் செந்தில் என்.பாலு, இளைஞரணித் தலைவர் தங்கராஜ், அப்துல் ஹக்கீம் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    • சி.பி.சி.ஐ.டி. விசாரணை கோரி முதல்-அமைச்சரிடம் மனு கொடுத்தனர்
    • திருச்சி கல்லூரி மாணவி விஷம் கொடுத்து கொலை

    திருச்சி

    திருச்சியை அடுத்த திருவெறும்பூர் பெல் பகுதியை சோ்ந்தவர் வித்யா லட்சுமி. இவர் திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் 2-ம் ஆண்டு இளங்கலை வணிகவியல் பயின்று வந்தார். கடந்த மே மாதம் 12-ந்தேதி மாலை 6 மணியளவில் இவர் கல்லூரி முடிந்து வீடு திரும்பியவர், அருகில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது அவரை பின் தொடர்ந்து 3 பேர் சென்றனர். இதில் ஒருவர் வித்யா லட்சுமி அணிந்திருந்த துப்பட்டாவை இழுத்துள்ளார்.

    மற்றொரு வாலிபர் அவரது கையை இழுத்து பிடித்து கொண்டார். 3-வது நபர் விஷம் கலந்த குளிர்பானத்தை அவருடைய வாயில் வலுக்கட்டாயமாக ஊற்றினார். பின்னர் 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இந்த சம்பவம் குறித்து மாணவியின் தாய் சாந்தி (45) கொடுத்த புகாரின் அடிப்படையில் பெல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.

    இந்தநிலையில் மாணவி வித்யாலட்சுமி சிகிச்சை பலனின்றி இறந்தார். இன்று திருச்சி வருகை தந்த தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து மாணவி வித்யா லட்சுமி படுகொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என தேவேந்திர குல வேளாளர்கள் பேரமைப்பு சார்பில் அதன் தலைவர் ம.அய்யப்பன், பொதுச் செயலாளர் வழக்கறிஞர் கோ.சங்கர் மற்றும் மாணவி வித்யா லெட்சுமியின் குடும்பத்தினர் மனு அளித்து முறையிட்டனர்.

    • இறந்தவர்களை அடக்கம் செய்ய இடம் கேட்டு இஸ்லாமியர்கள் மனு கொடுத்தனர்
    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினர்

    திருச்சி:

    திருச்சி திருவெறும்பூர் பாப்பாக்குறிச்சியில் இன்று பள்ளி மாணவர்களுக்கான வானவில் மன்றம் தொடக்க விழா நடைபெற்றது. இதனை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். பின்னர் பெரம்பலூருக்கு புறப்பட்டு சென்ற அவருக்கு அரியமங்கலம் சோதனை சாவடி பகுதியில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது, திருச்சி வடக்கு காட்டூர் பாப்பாக்குறிச்சி ரோடு அர் ரகுமான் மஸ்ஜித் பள்ளிவாசல் அமைப்பின் நிர்வாகிகள் முஸ்லிம் உரிமை பாதுகாப்புக் கழக தலைவர் பொதுச்செயலாளர் இடிமுரசு இஸ்மாயில் தலைமையில் முதலமைச்சர் இடம் ஒரு கோரிக்கை மனு அளித்தனர்.

    அதில் திருச்சி திருவெறும்பூர் காட்டூர் பகுதியில் இஸ்லாமிய மக்கள் 500 குடும்பத்தினர் வாழ்ந்து வருகிறோம். நாங்கள் மிகவும் ஏழைகளாக இருக்கிறோம். எங்களில் இறப்பவர்களை அடக்கம் செய்திட 

    • பழைய காவேரி பாலத்தில் இருசக்கர வாகனங்கள் செல்ல வழிவகை செய்ய கோரி மனு அளிக்கப்பட்டது
    • கலெக்டரிடம் காங்கிரஸ் பொதுச் செயலாளர் அளித்தார்

    திருச்சி:

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வக்கீல் எம். சரவணன், கலெக்டர் பிரதீப் குமாரை சந்தித்து ஒரு மனு அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது;- திருச்சி காவேரி ஆற்று பாலத்தில் பராமரிப்பு பணிகள் நடப்பதால் கடந்த சில தினங்களுக்கு முன்பு இரு சக்கர வாகனம் உள்ளிட்ட அனைத்து வாகனங்களுக்கும் பாலத்தில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    ஸ்ரீரங்கம் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதியில் இருந்து தினமும் பணி நிமித்தமாகவும், பள்ளிகளுக்கும் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. இவர்கள் தற்போது பைபாஸ் சாலையில் வாகன நெரிசலில் சிக்கி ஆபத்தான நிலையில் பயணிக்க வேண்டி இருக்கிறது. மேலும் ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா தொடங்க இருக்கிறது.

    ஆகவே பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் நலன் கருதி அந்தப் பகுதியில் உள்ள பழைய பாலத்தை சீர் செய்து இருசக்கர வாகனங்கள் செல்ல வழிவகை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். மேலும் இதுகுறித்து தமிழக முதலமைச்சரிடமும் மனு கொடுக்க உள்ளதாக வழக்கறிஞர் சரவணன் தெரிவித்தார்.

    • மயிலாடுதுறை மாவட்டத்தில் மட்டும் ரூ.150 கோடி பயிர் காப்பீட்டு தொகை செலுத்தப்பட்டது.
    • ஒரு கரும்புக்கு ரூ.3.5 அறிவிக்கப்பட்டும் விவசாயிகளுக்கு ரூ.15 மட்டுமே கிடைத்தது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் லலிதா தலைமை யில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் கனமழையால் பாதித்த மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம், வேலை இன்றி தவிக்கும் விவசாய தொழிலாளர்களுக்கு ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும்.

    கடந்த ஆண்டு மயிலாடுதுறை மாவட்டத் தில் மட்டும் ரூ.150 கோடி பயிர் காப்பீட்டு தொகை செலுத்தப்பட்டது.

    ஆனால் காப்பீட்டு நிறுவனம் இழப்பீட்டு தொகையாக ரூ.16 கோடி மட்டுமே வழங்கியுள்ளது.

    எனவே காப்பீட்டு வழங்கும் முறையை மாற்றி பாதிக் கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் இழப்பீட்டு தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பொங்கல் பரிசுக்கு தேவையான கரும்புகளை விவசாயிகளிடம் அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும்.

    கடந்த ஆண்டு ஒரு கரும்புக்கு ரூ.3.5 அறிவிக்கப்பட்டும் விவசாயிகளுக்கு ரூ.15 மட்டுமே கிடைத்தது.

    எனவே இடைத்தரகர் கள் இன்றி நேரடியாக அரசு விவசாயிகளிடம் இருந்து நேரடி கொள்முதல் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை கலெக்டரிடம் அளித்தனர்.

    இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் லலிதா கூறினார்.

    கூட்டத்தில் மாவட்ட வரு வாய் அலுவலர் முருகதாஸ், பொதுப்பணித்துறை காவிரி வடிநிலக் கோட்ட செயற் பொறியாளர் சண்முகம், வேளாண்மை இணை இயக்குனர் சேகர், ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் மஞ்சுளா, செம்பனார்கோயில் வேளாண்மை துணை இயக்குனர் தாமஸ், மயிலாடுதுறை அட்மா திட்ட தொழிற்நுட்ப மேலாளர் திருமுருகன், உள்பட அரசு அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனர்.

    ×