search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 108818"

    • 68 மனுக்கள் வரப்பெற்றதில் 26 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.
    • உதவித்தொகையான மாதம் ரூ. 1000க்கான உத்தரவு நகலை வழங்கினார்.

    பல்லடம்  : 

    பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் தொங்குட்டி பாளையம் ஊராட்சியில் தமிழக அரசின் மக்கள் தொடர்பு முகம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், ஊராட்சி மன்ற தலைவர் பிரியா நடராஜன் வரவேற்றார். பொங்கலூர் ஒன்றிய குழுத் தலைவர் வக்கீல் எஸ். குமார், துணைத் தலைவர் அபிராமி அசோகன், ஒன்றிய கவுன்சிலர் ஜோதிபாசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட சப்- கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் தலைமை தாங்கி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் மொத்தம்68 மனுக்கள் வரப்பெற்றதில் 26 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. மீதம் 42 மனுக்கள் பரிசீலனையில் உள்ளது. நிகழ்ச்சியின் போது விபத்தில் காயம் அடைந்த தொங்குட்டி பாளையத்தைச் சேர்ந்த சாமிநாதன் (வயது 61) என்பவர் ஆட்டோவில் இருந்து இறங்கி வர முடியாமல் அங்கேயே அமர்ந்திருந்தார். இதனை அறிந்த சப் கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் நேரடியாக ஆட்டோவின் அருகில் சென்று அவருக்கு விபத்து உதவித்தொகையான மாதம் ரூ. 1000க்கான உத்தரவு நகலை வழங்கினார். தொடர்ந்து அவர் முகாமில் கலந்து கொண்டு பேசும்போது, கல்வியின் அவசியம் குறித்து பெற்றோர்கள் குழந்தைகளுக்கு தெரிவிப்பதுடன் அவர்களை தினசரி கண்காணித்து ஊக்கப்படுத்த வேண்டும். குப்பை இல்லாத ஊராட்சியாக மாற்றுவதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று தெரிவித்தார். இந்த மக்கள் தொடர்பு முகாமில் ஒன்றிய கவுன்சிலர் பாலுசாமி, ஊராட்சி துணைத் தலைவர் பத்மா ஆனந்தன், பொங்கலூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர். சுந்தரவேல், தனி தாசில்தார் (ஊட்டச்சத்து) கோவிந்தராஜ், (சமூக பாதுகாப்பு திட்டம்) பாபு, வருவாய் ஆய்வாளர் மா.கருணாநிதி, கிராம நிர்வாக அலுவலர் ரமேஷ், ஊராட்சி செயலர் ஆனந்த் மற்றும் கால்நடை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மை துறை, சுகாதாரத்துறை உட்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • தகாத வார்த்தை களால் திட்டி கொலை வெறி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
    • மாவட்ட காவல் கண்காணிப் பாளர் அலுவலகம் மற்றும் கலெக்டர் அலுவலகத்திலும் புகார் மனு அளித்தனர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் மொரப்பூர் ஊராட்சி ஒன்றியம் தாசரஹள்ளி ஊராட்சியில் ராமதாஸ் என்பவர் ஊராட்சி செயலாளராக இரண்டரை ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்.

    கடந்த 17-ம் தேதி காலை அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது தாசர ஹள்ளி ஊராட்சியை சேர்ந்த பெண் வார்டு உறுப்பினரின் கணவரான அம்மாசி என்பவர் ஊராட்சி அலுவலகத்தில் நுழைந்து ஊராட்சி செயலாளர் ராமதாசை தகாத வார்த்தை களால் திட்டி கொலை வெறி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. மேலும் அவரை அலுவலகத்தின் உள்ளே வைத்து கதவை பூட்டிவிட்டு சென்று விட்டதாகவும் தெரிகிறது.

    இந்த தாக்குதல் குறித்து மொரப்பூர் காவல் நிலையத்தில் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி ஊராட்சி செயலாளர்கள் கூட்டமைப்பு சார்பில் மாவட்ட காவல் கண்காணிப் பாளர் அலுவலகம் மற்றும் கலெக்டர் அலுவலகத்திலும் புகார் மனு அளித்தனர்.

    மேலும் இந்த கொலைவெறி தாக்குதலால் ஊராட்சி செயலாளர்கள் அலுவலகங்களில் பணி செய்ய முடியாத சூழல் உள்ளதால் இது போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது தக்க நடவடிக்கை எடுத்து ஊராட்சி செயலர்களுக்கு அச்சத்தை போக்கி மீண்டும் பணி செய்ய தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மனுவில் தெரி வித்துள்ளனர்.

    மேற்கு மண்டல தலைவர் செல்வம், மாநில இணை செயலாளர் சர வணன், மாநில துணை தலை வர் திரு வருட் செல்வன், மாவட்ட தலைவர் முத்து மற்றும் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் மனு கொடுக்க வந்திருந்தனர்.

    • பட்டா வழங்க கோரி கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது
    • 120 குடும்பங்களுக்கு வழங்கவேண்டும்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் கலெக்டர் அலுவகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் குட்டத்தில் நரிக்குறவர் சங்க நிர்வாகிகள் கணேசன், நம்பியார் ஆகியர் தலைமையில் நரிக்குறவர் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியாவிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது,

    எறையூர் நரிக்குறவர் காலனியில் நாங்கள் கடந்த சுமார் 46 ஆண்டுகள்களுக்கு மேலாக உழுது பயிர்செய்து வந்த 353 ஏக்கர் நிலத்தை தற்பொழுது தாங்கள் சிப்காட் தருவதாக கூறியுள்ளீர்கள். எம்.பி. ஆ.ராசா 150 ஏக்கர் நிலத்தை 150 பேருக்கு தருவதாக கூறினார் ஆனால் இன்னும் வழங்க வில்லை, நீங்கள் சிப்காட்க்கு எந்த நிலத்தையும் தரகூடாது. அவற்றை ரத்து செய்ய வேண்டும். எங்களின் பணிவான கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு ஒரு குடும்பத்திற்கு 2 ஏக்கர் வீதம் நிலமும், பட்டாவும் 120 குடும்பங்களுக்கு வழங்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அடிப்படை வசதி

    பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஒன்றியம், வயலூர் கிராம பொதுமக்கள் சார்பில் கலெக்டரிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில், வயலூர் கிராமத்தில் கழிவுநீர் வசதி இல்லை, சாலைகள் மிகவும் பழுதடைந்துள்ளன. எனவே இக்கிராமத்தில் அடிப்படை வசதியான சாலைவசதி, கழிவுநீர்வடிக்கால் வசதி போன்றவைற்றை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்
    • 3 நாட்களாக சர்வர் பிரச்சனை

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் கலெக்டரிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி மூலம் சிக்னல் பெற்று செட்டாப் பாக்ஸ்கள் மூலம் கடந்த 10 ஆண்டுகளாக கேபிள் டிவி இணைப்பு வழங்கி சேவை செய்து வருகிறோம். சில மாதங்களாக செட்டாப் பாக்ஸ்கள் வழங்காமல் பல வாடிக்கையாளர்களை இழந்து வருகிறோம். இந்நிலையில் கடந்த 19ம்தேதி அதிகாலை 5மணி முதல் 3 நாட்களாக இதுவரை சர்வர் பிரச்சனையில் கேபிள் டிவி கனெக்சன் கிடைக்கவில்லை.

    இதனால் அரசு கேபிள் டிவி கனெக்சன் பெற்றுள்ள வாடிக்கையாளர்கள் டிவி பார்க்க முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால் எங்களது வாழ்வாதாரமும் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சர்வர் பிரச்சனையை சரி செய்து அரசு கேபிள் டிவி கனெக்சன் கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெரிவித்துள்ளனர்.

    • காவிரி பழைய இரும்பு பாலத்தை திறக்க கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது
    • பள்ளி மாணவர்களின் நலன் கருதி

    திருச்சி,

    திருச்சி திருவானைக்கோவில் பர்மா காலனி பகுதியைச் சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் விஜயலட்சுமி கணவர் பத்மநாபன் கலெக்டர் பிரதீப் குமாரை சந்தித்து இன்று ஒரு புகார் மனு அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது;- ஸ்ரீரங்கம் திருவானைக்கோவில் பகுதிகளில் வசிக்கும் பள்ளி மாணவ மாணவிகள் காவேரி பாலத்தை கடந்து சென்று கல்வி பயின்று வருகின்றனர். மேலும் அன்றாட பிழைப்புக்காக தினசரி கூலி வேலை செய்பவர்கள் இந்த காவிரி பாலத்தை கடக்க வேண்டி இருக்கின்றது. இதில் அதிகம் குடும்பத் தலைவிகளும் பெண்களும் இளைஞர்களும் தினசரி பணிக்கு செல்ல காவேரி பாலத்தை கட்டாயமாக கடக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.

    இந்த நிலையில் தற்போது தமிழக அரசின் மூலம் காவிரி பாலத்தில் உள்ள தார் சாலைகளை அகற்றிவிட்டு கான்கிரீட் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சீரமைப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் முதலில் ஓரமாக இரு சக்கர வாகனங்கள் கடந்து செல்வதற்கு வழி விடப்பட்டது. இப்போது பாலத்தை முழுமையாக மூடிவிட்டார்கள். இதனால் மாணவ மாணவிகள் கல்லணை ரோடு வழியாக ஓயாமாரி சுடுகாடு வழியாக அண்ணா சாலையை கடந்து செல்ல வேண்டி இருக்கிறது. எனவே மாம்பழச் சாலையில் இருந்து அண்ணா சாலைக்கு செல்வதற்கு பழைய காவிரி இரும்பு பாலத்தினை திறந்து இருசக்கர வாகனம் மட்டும் அனுமதித்தால் பள்ளி கல்வி தடைப்படாமல் இருக்கும். அது மட்டுமல்லாமல் பாலம் அடைக்கப்பட்டுள்ளதால் பள்ளி மாணவர்கள் மூன்று கிலோ மீட்டருக்கு மேல் சுற்றிவர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது முழு ஆண்டு தேர்வு பொது தேர்வுகளில் கவனம் செலுத்த முடியாமல் போய்விடும் சூழ்நிலை உள்ளது.

    ஆகவே பழைய காவிரி இரும்பு பாலத்தை திறந்து அதில் இருசக்கர வாகனங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • பொதுமக்களுக்கு அச்சுறுத்தல், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை.
    • சாலை வழியாக பயணம் செய்ய இயலாத சூழ்நிலை.

    வீரபாண்டி:

    திருப்பூர் குன்னாங்கல்பாளையம் பாரதிதாசன் நகர் ,அம்மன் நகர் பொதுமக்கள் மற்றும் கரைப்புதூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி கோவிந்தராஜ் ஆகியோர் சார்பில் திருப்பூர் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது: - எங்கள் பகுதியில் சுமார் 2000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறோம். திருப்பூரிலிருந்து டிகேடி. மில் வழியாக செல்லும் சாலை போக்குவரத்து நிறைந்த சாலையாகும். இந்த வழியாகத்தான் பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு சென்று வருகின்றனர் . பாரதிநகர் ,கெம்பே நகர் இடையே உள்ள பகுதியில் தனியார் மதுபான கடை அமைக்க சிலர் முயன்று வருவதாக தகவல் வருகிறது. கெம்பே நகர் அருகில் தேவாலயமும் தனியார் பள்ளியும் உள்ளது. இங்கு மதுக்கடை அமைந்தால் பெரும் பாதிப்பு ஏற்படும்.

    பொதுமக்கள் அந்த சாலை வழியாக பயணம் செய்ய இயலாத சூழ்நிலை ஏற்படும் . மேலும் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்படும். எனவே மதுபான கடை அமைக்க அனுமதிக்க கூடாது. இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • மனுவின்மீது விசாரித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக வட்டாரவளர்ச்சி அலுவலர் கந்தசாமி தெரிவித்தார்.
    • உடுமலைஊராட்சி ஒன்றிய பி.டி.ஓ.விடம் மனுகொடுக்கப்பட்டது.

    உடுமலை:

    உடுமலைஒன்றியம் செல்லப்பம்பாளையம் ஊராட்சியில் ஊராட்சிக்கு சொந்தமான ஆழ்துளைக்கிணறை சேதப்படுத்தி ஆழ்துளைகுழாய்களை உடைத்தெறிந்துள்ள சமூகவிரோத கும்பல்மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். நீர்வளமிக்க ஆழ்துளைக்கிணற்றை பயன்படுத்தி மக்களுக்கு தண்ணீர்விநியோகம் செய்திடவேண்டும் என மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சிசார்பில் உடுமலைஊராட்சி ஒன்றிய பி.டி.ஓ.விடம் மனுகொடுக்கப்பட்டது. இதில் சிபிஐ. எம்., செல்லப்பம்பாளையம் கிளைச்செயலாளர் பிரபுராம், உடுமலைஒன்றியச் செயலாளர் கி.கனகராஜ்,டிஓய்எப்ஐ. செயலாளர் தமிழ்த்தென்றல், மாதர்சங்க செயலாளர் சித்ரா, விவசாயிகள் சங்கதலைவர்கள் ராஜகோபால், பரமசிவம் ஆகியோர் பங்கேற்றனர். மனுவின்மீது விசாரித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக வட்டாரவளர்ச்சி அலுவலர் கந்தசாமி தெரிவித்தார்.

    • 4-வது வார்டு பகுதியில் குடியிருக்கும் தங்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கக் கோரி நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க செயலாளர் மனு அளித்தனர்.
    • வீட்டுமனை பட்டா வழங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பொத்தனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட வெங்கமேடு 4-வது வார்டு பகுதிகளில் வசித்து வரும் பொதுமக்கள், தாங்கள் குடியிருக்கும் வீடுகளுக்கு இதுவரை வீட்டுமனை பட்டா வழங்கப்படவில்லை.

    எனவே 4-வது வார்டு பகுதியில் குடியிருக்கும் தங்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கக் கோரி நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க செயலாளர் மதுரா செந்திலிடம் மனு அளித்தனர்.

    மனுவைப் பெற்றுக் கொண்ட மாவட்ட செயலாளர் மதுரா செந்தில், வீட்டுமனை பட்டா வழங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

    அப்போது பரமத்தி ஒன்றிய செயலாளர் தனராசு, பொத்தனூர் பேரூர் செயலாளரும்,பேரூராட்சி தலைவருமான கருணாநிதி, பேரூராட்சி துணைத் தலைவர் அன்பரசு, வார்டு கவுன்சிலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    • உதவித்தொகை, உதவி உபகரணங்கள் மற்றும் இதர கோரிக்கைகளை மனுக்களாக அளிக்கலாம்.
    • ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து மனு அளிக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சை மாவட்டம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கு எண் 10 -ல் நாளை (வியாழக்கிழமை ) காலை 11 மணிக்கு மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. அன்றைய கூட்டத்தில் மாற்றுத்தி றனாளிகளுக்கான உதவித்தொகை, உதவி உபகரணங்கள் மற்றும் இதர கோரிக்கைகளை மனுக்களாக நேரடியாக அளிக்கலாம். மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கை மனுக்கள் அனைத்தும் உதவிகள் வாரியாக சம்பந்தப்பட்ட அலுவலர்களால் பரிசீலிக்கப்பட்டு தகுதியின் அடிப்படையில் உதவிகள் வழங்கிட தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    எனவே, இந்த வாய்ப்பினை அனைத்து மாற்றுத்திறனாளிகளும் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    மேற்படி குறைதீர்க்கும் நாளில் மனுக்கள் அளிக்க விரும்பும் மாற்றுத்திறனாளிகள் தங்களது மாற்றுத்தி றனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையின் நகல், இருப்பிடத்திற்கான ஆதாரமாக குடும்ப அட்டையின் நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் -1 மற்றும் ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து மனு அளிக்க வேண்டும்.

    எனவே தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெறும் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளிக்க விரும்பும் மாற்றுத்திறனாளிகள் நாளை காலை 10 மணிக்குள் நேரில் வந்து மனுக்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக தொலைபேசி எண் 04362-236791-ல் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தார் சாலை அமைக்க கோரி மனு அளிக்கப்பட்டது.
    • மண் பாதை சேதமடைந்து மோசமாக காட்சியளிக்கிறது.

    பெரம்பலூர்

    வேப்பந்தட்டை தாலுகா, தொண்டமாந்துறை கிராம ஊராட்சி 10-வது வார்டுக்கு உட்பட்ட புதுப்பட்டி காட்டுக்கொட்டைகையை சேர்ந்த விவசாயிகள் கலெக்டரிடம் ஒரு மனு அளித்தனர். அதில், புதுப்பட்டி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த விவசாயிகளில் 60 பேர் தங்களது விவசாய நிலங்களில் குடும்பத்துடன் வசித்து வருகிறோம். நாங்கள் போக்குவரத்துக்கு பயன்படுத்தும் தொண்டமாந்துறை-விஜயபுரம் சாலையின் அருகே உள்ள அரசமர பிரிவு சாலையில் இருந்து பச்சைமலை நோக்கி செல்லும் பெரியசாமி கோவில் வரை 2 கிலோ மீட்டர் தூரமுள்ள மண் பாதை சேதமடைந்து மிகவும் மோசமாக காட்சியளிக்கிறது. இதனால் மாணவ-மாணவிகள், விவசாயிகள், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துடன் அந்த வழியாக சென்று வருகின்றனர். எனவே அப்பகுதியில் புதிதாக தார் சாலை அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.

    • மாசுக் காற்றை சுவாசிப்பதால் நெஞ்சு எரிச்சல் மற்றும் மூச்சு திணறல் போன்ற பல உபாதைகள் ஏற்படுகிறது.
    • விவசாய பயிர்கள் பாழடைகிறது. கால்நடைகள் பருகும் தண்ணீர் வீணாகிறது.

     திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம், காங்கயம் சிவன்மலை சிக்கரசம்பாளையம், ஜீவா காலனி, ராமபட்டிணம் ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் இன்று திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

    நாங்கள் வாழும் பகுதிக்குஅருகில் இயங்கும் கல் குவாரிகள் செயல் பாடுகளால் அதீத வாழ்வியல்பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இக்குவாரிகளின் செயல் பாடுகள் விதிகளை மீறி சட்டத்திற்குப் புறம்பாக வெடிகளை பயன்படுத்துவதால் அதிக ரசாயன மாசு ஏற்படுகிறது.

    மாசுக் காற்றை சுவாசிப்பதால் நெஞ்சு எரிச்சல் மற்றும் மூச்சு திணறல் போன்ற பல உபாதைகள் ஏற்படுகிறது. மேலும் முறையாக புகை மாசுகளை கட்டுப்படுத்தக் கூடிய எந்த ஒரு நடவடிக்கையும்மேற்கொள்ளாத காரணத்தால் அதிக மாசு மற்றும் குழந்தைகள் வெடிச்சத்தம் கேட்டு அழுது கொண்டும் விரக்தியிலும்உள்ளார்கள். விவசாய பயிர்கள் பாழடைகிறது. கால்நடைகள் பருகும் தண்ணீர் வீணாகிறது.கிணற்றின் சுற்றுச்சுவர்கள் சேதமடைகிறது. ஆகவே உடனடியாக நடவடிக்கைஎடுத்து மேற்கண்ட குவாரிகளில் இயக்கத்தை நிறுத்தி உரிமத்தை ரத்துசெய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.

    • எல்.ஐ.சி முகவர்கள் கோரிக்கை மனு
    • கலெக்டரிடம் அளித்தனர்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியாவிடம் எல்ஐசி முகவர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

    பெரம்பலூர் கிளை எல்ஐசி முகவர் சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் பார்த்தசாரதி தலைமையில் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியாவிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில், எல்ஐசி முகவருக்கான கமிஷன் தொகையை குறைக்க கூடாது, பாலிசிதாரர்கள் பெரும் கடனுக்கான வட்டியை அதிகரிக்கக் கூடாது உட்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டிருந்தது.

    மனு அளிப்பின்போது, கோட்ட இணை செயலாளர் முருகானந்தம், சங்க தலைவர் சுத்தாங்காத்து, செயலாளர் செந்தில்குமார், பொரு ளாளர் கருப்பை யா, துணைத்தலைவர் ஆசைதம்பி, ஆலோ சனைக்குழு உறுப்பினர் முத்துசாமி ஆகியோர் உடனிருந்தனர்.

    ×