search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 108818"

    • பல்லடம் அருகே உள்ள கரடிவாவி ஊராட்சியில் சுமார் 4000 மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
    • பள்ளி நேரங்களில் மாணவ, மாணவியருக்கு போதுமான பஸ் வசதி இல்லை. எனவே பஸ் வசதி செய்து தர வேண்டும்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே கரடிவாவியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் மாவட்ட கலெக்டர் வினீத் கலந்துகொண்டு ரூ.41.79 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் வினீத்திடம் கரடிவாவி ஊராட்சி மன்ற தலைவர் ரஞ்சிதா பகவதி கிருஷ்ணன் கொடுத்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:- பல்லடம் அருகே உள்ள கரடிவாவி ஊராட்சியில் சுமார் 4000 மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு மக்களின் பயன்பாட்டிற்காக சமுதாய நலக்கூடம் அமைக்க வேண்டும். கடந்த 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி1.35 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. அதனை 4 லட்சம் லிட்டராக அதிகப்படுத்தி வழங்க வேண்டும். மேலும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்குவதற்கு கரடிவாவி ஸ்ரீநகர் பகுதியில் ஒரு லட்சம் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டி அமைக்கவேண்டும். அதே போல குடிநீர் குழாய் விஸ்தரிப்பு செய்ய வேண்டும். பள்ளி நேரங்களில் மாணவ, மாணவியருக்கு போதுமான பஸ் வசதி இல்லை. எனவே பஸ் வசதி செய்து தர வேண்டும். மருத்துவமனையை 24 மணி நேரமும் செயல்படும் வகையில் மாற்றி அமைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • உதவி போலீஸ் சூப்பிரண்டு அர்விந்த்திடம் மனு ஒன்றை அளித்தனர்.
    • சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.

    ஓசூர்,

    ஓசூர் அருகே நல்லூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி யில் தலைமையாசிரியையாக பணி புரிந்து வருபவர் தர்மசம்வர்த்தினி. இந்த நிலையில், காழ்ப்புணர்ச்சி காரணமாக கீழ்த்தரமாகவும், தனது பள்ளி மேம்பாட்டு செயல்பாடுகளை தவறாகவும்,பொய்யாகவும் சித்தரித்து ஒரு நபர் வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்பி தனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி வருவதாகவும், சம்பந்தப்பட்ட நபர் மீது மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தர்மசம்வர்த்தினி மனு அளித்திருந்தார்.

    இதனைத் தொடர்ந்து, இந்த தலைமையாசிரியைக்கு ஆதரவாக நல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் ராதா, குமார் மற்றும் மாணவ, மாணவியரின் பெற்றோர் நேற்று ஓசூர் ஏ.எஸ்.பி. அலுவலகத்திற்கு திரண்டு சென்று, உதவி போலீஸ் சூப்பிரண்டு அர்விந்த்திடம் மனு ஒன்றை அளித்தனர். அதில் பள்ளி வளர்ச்சிக்காக பாடுபட்டு வரும் தலைமையாசிரியை தர்மசம்வர்த்தினி குறித்து கீழ்த்தரமாகவும் அவரது பள்ளி பணிகளை பாதிக்கும் வகையிலும் பொய்யாக வீடியோ பரப்பி வரும் நபர் மீது உடனடியாக சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.

    • பால் கொள்முதல் விலையை ரூ.10 உயர்த்த வேண்டும் என்று விவசாய சங்கத்தினர் சேலம் கலெக்டரிடம் இன்று மனு கொடுத்தனர்.
    • பால் விலையை லிட்டருக்கு ரூ. 10 உயர்த்தி தர பரிசீலனை செய்யுமாறு தமிழக கால்நடை வளர்ப்போர் சங்கம் சார்பில் கோரிக்கை வைத்துள்ளனர்.

    சேலம்:

    தமிழக இயற்கை விவ சாயிகள் முன்னேற்ற சங்கம் சார்பில் இன்று காலை கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-

    கடந்த 3 ஆண்டாக பருத்திக் கொட்டை, புண்ணாக்கு, தவிடு போன்ற பொருட்கள் கடுமையான விலை ஏற்றம் அடைந்து உள்ளது. ஆட்கள் கூலியும் அதிகரித்து உள்ளதால், பால் கொள்முதல் விலையை உயர்த்த பால் உற்பத் தியாளர்கள், விவசாய சங்கத்தினர் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம்.

    ஆனால் லிட்டருக்கு ரூ.3 உயர்த்தி உள்ளது வருத்தம் அளிக்கிறது. எனவே பால் உற்பத்தியாளர் சங்கங்கள், விவசாய சங்கங்கள் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தி, பால் விலையை லிட்டருக்கு ரூ. 10 உயர்த்தி தர பரிசீலனை செய்யுமாறு தமிழக கால்நடை வளர்ப்போர் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்து உள்ளனர். 

    • கூட்டத்தில் 22 பொருட்களுக்கான வரவு செலவு கணக்கு குறித்து விவாதங்கள் நடைபெற்றது.
    • இந்த நிலையில் காமலாபுரம் பகுதி கவுன்சிலர் செல்வி தனது பகுதியில் வாய்க்கால் தூர் வாரியதாக கூறி 15 லட்சம் பணம் எடுத்துள்ளனர்.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய கவுன்சிலர்களுக்கு சாதாரண கூட்டம் நேற்று அதிமுக ஒன்றிய குழுத்தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் ஓமலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் கருணாநிதி, ஒன்றிய துணைச் சேர்மன் செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த கூட்டத்தில் 22 பொருட்களுக்கான வரவு செலவு கணக்கு குறித்து விவாதங்கள் நடைபெற்றது. மேலும் கவுன்சிலர்களின் வார்டுகளில் பல்வேறு திட்டங்கள் நடைபெறாமல் இருப்பதும், புதிய திட்டங்கள் தொடங்குவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

    இந்த நிலையில் காமலாபுரம் பகுதி கவுன்சிலர் செல்வி தனது பகுதியில் வாய்க்கால் தூர் வாரியதாக கூறி 15 லட்சம் பணம் எடுத்துள்ளனர். தூர்வாராமலேயே செலவு செய்ததாக பெயர் பலகை வைத்துள்ளனர். மேலும் 10 ஆண்டுகளாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு இதுவரை செயல்பாட்டுக்கு வரவில்லை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினார்.

    அப்போது கவுன்சிலர் செல்வியின் கணவர் ராஜா திடீரென பல மாதங்களாக கோரிக்கை விடுத்தும் எவ்வித கோரிக்கைகளையும் நிறைவேற்றவில்லை என கோரிக்கை மனுக்களை ஒன்றிய குழு தலைவர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் முகத்தில் கிழித்து வீசியதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் அதிமுக மற்றும் திமுக கவுன்சிலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் நரிக்குறவர்கள் மனு அளித்தனர்
    • அடிப்படை வசதிகள் ேகாரி

    பெரம்பலூர்:

    அகரம்சீகூர் அடுத்து குன்னம் தாலுகா, வேப்பூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சிறுமத்தூர் ஊராட்சி நரி ஓடை கிராமத்தில் நரிக்குறவர் காலணியில் சுமார் 150 குடும்பங்கள் உள்ளன. இந்த பகுதியில் கடந்த சில தினங்களாக பெய்த மழையில் குடியிருப்பு வீடுகள் மற்றும் தெருக்கள் மழைநீர் மற்றும் கழிவு நீரால் சூழப்பட்டு சுகாதாரமற்று நிலை உள்ளது. மேலும் குடிநீரில் கழிவு நீர் கலந்து வருகிறது. தெரு மின்விளக்குகள் எரியவில்லை. இது குறித்து சிறுமத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் இடம் பலமுறை எடுத்து கூறியும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. தங்களுக்கு அடிப்படை வசதிகள் வேண்டி 50க்கும் மேற்பட்டோர் வேப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு கொடுக்க வந்தனர். ஆனால் அவர் இல்லாததால் வேறு அதிகாரிகளிடம் மனு அளித்து அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டுகோள் விடுத்தனர். அவருடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேப்பூர் வடக்கு ஒன்றிய துணை செயலாளர் சிறுத்தை சிவா உடனிருந்தனார்.

    • சேவை கட்டண உயர்வை கண்டித்து மனு கொடுக்கும் போராட்டம்.
    • மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் சுவாமிமலை சுவாமிநாதசாமி கோவிலில் தரிசனம்.

    சுவாமிமலை:

    சுவாமிமலை சுவாமிநா தசாமி கோவிலில் தற்போது சேவை கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது.

    இதனை திரும்ப பெற வேண்டும் எனவும், கட்டண உயர்வை கண்டித்தும் இந்து மக்கள் கட்சி சார்பில் மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் தலைமையில் நேற்று சுவாமிமலை சுவாமிநாதசாமி கோவிலில் மனு கொடுக்கும் போரா ட்டத்தில் ஈடுபட்டனர்.

    மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் கோவிலில் தரிசனம் செய்துவிட்டு மனுக்களை உண்டியலில் போட வரும்போது அறநிலைய த்துறை துணை ஆணையர் உமாதேவி, கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு அசோகன், சுவாமிமலை இன்ஸ்பெக்டர் சிவ. செந்தி ல்குமார் ஆகியோர் கேட்டுக்கொ ண்டதற்கினங்க மனுக்களை அவர்கள் கைகளில் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் மாநில பொதுச்செயலாளர் குருமூர்த்தி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • வாகன ஓட்டிகளுக்கும் இடையூறாக எந்நேரமும் ஆடுகள்மாடுகள் சுற்றித் திரிகின்றன.
    • குடிநீர், தெருவிளக்கு போன்ற பிரச்சினைக்கு தீர்வு அளிக்க வேண்டும் என கோரிக்கை அளித்தனர்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி, நகராட்சி 19 வது வார்டில் பகுதி சபை கூட்டம் நகர மன்ற உறுப்பினர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது

    இதில் நகர மன்ற தலைவர் கவிதா பாண்டியன், நகராட்சி ஆணையர் அப்துல் ஹாரிஸ்நகர மன்ற தலைவரின் நேர்முக உதவியாளர்கள், வார்டு பொறுப்பாளர்கள் அனைத்து கட்சியை சேர்ந்த வார்டு பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

    இதில் 19-வது வார்டு இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் கூறுகையில் சாலைகளில் பொதும க்களுக்கும்,வாகன ஓட்டிகளுக்கும் இடையூறாக எந்நேரமும் ஆடுகள்மாடுகள் சுற்றித் திரிகின்றன.

    இதனை பிடித்து அப்புறப்படுத்துவதோடு அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும். மேலும் 19-வது வார்டில் அனைத்து அடிப்படை வசதிகளையும் முறையாக, உடனடியாக செய்து தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

    மேலும் ஜவுளி கடை தெரு, பாரதியார் தெரு, வேதை தெருவில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் பகுதியில் குடிநீர், சாலை, தெருவிளக்கு போன்ற பிரச்சனைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கைகளை தெரிவித்தனர்

    அப்போது நகரசபை தலைவர் கவிதா பாண்டியன் பொதுமக்களின் கோரிக்கையை மனுக்களாக பெறப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

    மற்றும் பிடாரி குளம், தச்சங்குளத்சுதை சுத்தம் செய்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருமாறு கேட்டுக்கொ ள்ளப்பட்டது. இதற்கும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

    • கழிவுநீர் கால்வாய் ஆலங்குளம் யூனியன் அலுவலகம் முதல் ஊர்மடை வரை அமைய உள்ளது.
    • அமைச்சரை நேரில் சந்தித்து இது குறித்த கோரிக்கையினை சிவ பத்மநாதன் முன் வைத்திருந்தார்.

    தென்காசி:

    தென்காசி - நெல்லை நான்கு வழிச்சாலையில் ஆலங்குளம் எல்கைக்கு உட்பட்ட இடங்களில் சாலையின் வடபுறம் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த கழிவுநீர் கால்வாய் ஆலங்குளம் யூனியன் அலுவலகம் முதல் ஊர்மடை வரை அமைய உள்ளது.

    இந்த கழிவுநீர் கால்வாய் வாகனங்கள் நிறுத்துவதற்கு வசதியாக அமைய வேண்டும் என்று ஆலங்குளம் வியா பாரிகள் சங்கம் சார்பாக தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதனிடம் தெரிவித்திருந்தனர்.

    அதன்படி சில நாட்களுக்கு முன் நெடுஞ்சாலை துறை அமைச்சரை சென்னையில் நேரில் சந்தித்து இது குறித்த கோரிக்கையினை சிவ பத்மநாதன் முன் வைத்திருந்தார். இதைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து சாலையின் கழிவுநீர் கால்வாய் குறித்து மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் வரைபடம் மூலம் காண்பித்து விளக்கி னார்.

    கோரிக்கையின் முக்கிய த்துவம் குறித்து கலெக்டர் ஆகாஷ் சம்பந்தப்பட்ட அதிகாரி களை அழைத்து ஆய்வு செய்ய உத்தரவு பிறப்பித்தார். இந்நிகழ்வின் பொழுது ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா, நெல்சன்,தொழிலதிபர் மணிகண்டன் மற்றும் வியா பாரிகள் சங்க நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • திருமாந்துறை சுங்கச்சாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக அ.தி.மு.க.வினர் மனு அளித்தனர்
    • 31-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, திருமாந்துறை சுங்கச்சாவடியில் பணிநீக்கப்பட்டோர்களை மீண்டும் பணியமர்த்த வேண்டும் என அ.தி.மு.க. வலியுறுத்தியுள்ளது.

    திருமாந்துறை சுங்கச்சாவடியில் பணிபிரிந்து வந்த 28 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ஒப்பந்த தனியார் நிறுவனத்தை கண்டித்தும், பணிநீக்கம் செய்த ஊழியர்களை மீண்டும் பணியமர்த்த கோரியும் அந்த ஊழியர்களும், சுங்கச்சாவடியில் பணிபுரியும் ஊழியர்களும் கடந்த 1-ந் தேதி முதல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    31-வது நாளாக தொடர்ந்து நடைபெறும் இந்த போராட்டத்திற்கு அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், முன்னாள் துணை சபாநாயகருமான வரகூர் அருணாசலம் தலைமையில் அ.தி.மு.க.வினர் நேரில் சென்று போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஊழியர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்து கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

    பின்னர் அ.தி.மு.க. சார்பில் பெரம்பலூர் எஸ்பி அலுவலகம் வந்து எஸ்பி மணியிடம் கோரிக்கை மனு அளித்தனர், அம்மனுவில் திருமாந்துறை சுங்கச்சாவடியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும், பணியில் இருந்து நீக்கப்பட்ட ஊழியர்களை மீண்டும் பணியில் அமர்த்தி அவர்களின் பொருளாதாரத்தை நல்ல முறையில் அமைத்துத் தர காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

    நிகழ்ச்சிகளில் முன்னாள் எம்பிக்கள் மருதராஜா, சந்திரகாசி, முன்னாள் எம்எல்ஏ பூவைசெழியன், மாவட்ட நிர்வாகிகள் குணசீலன், ராஜாராம், ராஜேஸ்வரி, நகரசெயலாளர் ராஜபூபதி, ஒன்றிய செயலாளர்கள் கர்ணன், செல்வகுமார்,சி வப்பிரகாசம், செல்வமணி மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகளுக்கான மாதாந்திர குறைதீா் கூட்டம் நடைபெற்றது.
    • சப்- கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் தலைமை வகித்தாா்.

    திருப்பூர் :

    திருப்பூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகளுக்கான மாதாந்திர குறைதீா் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு சப்- கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் தலைமை வகித்தாா். இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் எஸ்.ஆா்.மதுசூதனன், செயலாளா் ஆா்.குமாா் ஆகியோா் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:-

    கால்நடை தீவனங்களான பருத்திக் கொட்டை, தவிடு, பிண்ணாக்கு உள்ளிட்டவற்றின் விலை அண்மையில் கடுமையாக உயா்ந்துள்ளது. விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யும் பாலுக்கான கொள்முதல் விலையை ஆவின் நிறுவனம் கடைசியாக கடந்த 2019 ஆம் ஆண்டு உயா்த்தியது. இந்த நிலையில், ஆவின் நிறுவனத்துக்கு பால் ஊற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் உற்பத்தி செய்யும் பாலுக்கான கொள்முதல் விலையை உயா்த்திக் கொடுக்கக் கோரி ஆங்காங்கு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. பசும்பால் லிட்டருக்கு ரூ.42, எறுமைப்பால் லிட்டருக்கு ரூ.51 கொள்முதல் விலையாக நிா்ணயித்து ஆவின் நிறுவனம் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.கூட்டத்தில் வட்டாட்சியா்கள் ராஜேஷ், கனகராஜ், கோவிந்தராஜ், சைலஜா உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனா்.

    • முக்குலத்து புலிகள் கட்சியின் நிறுவனத் தலைவர் ஆறு.சரவணத்தேவர் எஸ்.பி. ஜவகரிடம் மனு அளித்தார்.
    • குருபூஜை விழா பங்கேற்க உரிய பாதுகாப்பு மற்றும் அனுமதி சீட்டு ஆகியவைகள் வழங்க வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    முக்குலத்து புலிகள் கட்சியின் நிறுவனத் தலைவர் ஆறு.சரவணத்தேவர் மற்றும் கட்சியினர் நாகை மாவட்ட எஸ்.பி. ஜவகரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது,

    ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் அக்டோபர் 30ம் தேதி பசும்பொன் முத்துராமலிங்கம் தேவர் ஜெயந்தி விழா, அக்டோபர் 24ம் தேதி சுதந்திர போராட்ட வீரர்கள் மருதுபாண்டியர் குருபூஜை விழா மற்றும் வாளுக்குவேலி அம்பலம் பெருவிழா நடைபெற உள்ளது.

    முக்குலத்து புலிகள் கட்சியினர் வருடாவருடம் கலந்து கொள்ளும் இவ்விழாவில் பங்கேற்க உரிய பாதுகாப்பு மற்றும் அனுமதி சீட்டு ஆகியவைகள் வழங்க வேண்டும் என கலெக்டர் அருண்தம்புராஜ, மற்றும் எஸ்.பி ஜவகரிடம் மனு அளித்தனர்.

    கட்சியின் தலைவர் ஆறு.சரவணன் தேவர் அக்டோபர் 30 மற்றும் 24ம் தேதிகளில் உரிய பாதுகாப்பை உடனடியாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

    • விசாரணையில் 9 பேரிடமிருந்து பெறப்பட்ட மனுக்களின் மீது உடனடியாக நடவடிக்கை.
    • கைதிகளுக்கு வழங்கப்படும் சட்ட அறிவுரை மற்றும் நீதிமன்றம் சார்ந்த சட்ட உதவிகள் பற்றி எடுத்துரைத்தார்.

    கும்பகோணம்:

    சென்னை உயர் நீதிமன்ற தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் உத்தரவு படியும், தஞ்சாவூர் மாவட்ட நீதிமன்ற சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் செயலர் வழிகாட்டுதல்படி, கும்பகோணம் வட்ட சட்டப் பணிகள் குழுவின் தலைவரும் மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவருமான.சண்முகப்பிரியா ஜெயில் அதாலத் என்று அழைக்கப்படும் சிறைச்சாலை நீதிமன்றம், தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் நடத்திட நீதிபதிகளை நியமித்து உத்தரவிட்டார்கள்.

    அதன்படி திருவிடைமருதூர் கிளைசிறைச்சாலையில் மாவட்ட உரிமை இயல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர்சிவபழனி சிறைச்சாலை நீதிமன்றத்தை நடத்தினார்.

    விசாரணை கைதிகளாக இருந்த சிறைவாசிகள் 49 பேரிடம் அவர்களின் வழக்கு விபரம் குறித்து நேரடியாக உரையாடி, அவர்களில் யாருக்கேனும் வட்ட சட்டப் பணிகள் குழு மூலம் வழக்கறிஞர் நியமனம் தேவைப்படுகிறதா என்று கேட்டறிந்தார்கள். அவ்வாறு மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் 9 பேரிடமிருந்து பெறப்பட்ட மனுக்களின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு சட்டப்படி தகுதியுள்ள இருவரிடம் மட்டும் ஜாமீன் மனுக்கள் எழுதிப் பெறப்பட்டு அதற்கான நடவடிக்கை மேற்கொள்ள பரிந்துரை செய்தார்.

    முடிவில் வட்ட சட்டப் பணிகள் குழு மூலம் விசாரணை கைதிகளுக்கு வழங்கப்படும் சட்ட அறிவுரை மற்றும் நீதிமன்றம் சார்ந்த சட்ட உதவிகள் பற்றி எடுத்துரைத்தார்.

    கும்பகோணம் கிளை சிறையில் பாரதிதாசன், நீதித்துறை நடுவர் எண்1 ஏற்று நடத்தினார். 51 விசாரணை கைதிகளிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சிறைவாசிகள் 4 பேர் மட்டும் வழக்கறிஞர் நியமனம் கோரி மனு அளித்தனர்.

    அதில் இருவர் மனுக்கள் மட்டும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு வழக்கறிஞர் நியமித்திட பரிந்துரை செய்தார்.

    ஏற்பாடுகளை நீதிமன்ற ஊழியர்கள், சிறைச்சாலை அதிகாரிகளுடன் இணைந்து கும்பகோணம் சட்டப் பணிகள் குழுவின் தன்னார் வலர்கள்ராஜேந்திரன் மற்றும்குணசீலன் செய்திருந்தனர். 

    ×