search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பீகார்"

    • 9 ஆண்டுகளுக்குமுன் தொடங்கப்பட்ட பாலத்தின் கட்டுமானப் பணி ஆமை வேகத்தில் நடத்து வருகிறது.
    • கட்டப்பட்டுக் கொண்டிருக்கும்போதே கடந்த ஆண்டுகளில் 2 முறை இடிந்து விழுந்தது

    பீகாரில் கங்கை ஆற்றின் குறுக்கே 9 ஆண்டுகளாக கட்டப்பட்டு வரும் பாலம் 3 வது முறையாக இடிந்து விழுந்ததுள்ளது. பீகார் மாநிலம் கஹரியா மாவட்டத்தில் சுல்தான்கஞ்ச் - குவானி கட் பகுதிகளை இணைக்கும் வகையில் கங்கை ஆற்றின் குறுக்கே இந்த பாலம் கட்டப்பட்டு வருகிறது. 9 ஆண்டுகளுக்குமுன் தொடங்கப்பட்ட பாலத்தின் கட்டுமானப் பணி ஆமை வேகத்தில் நடத்து வருகிறது.

    கட்டப்பட்டுக் கொண்டிருக்கும்போதே கடந்த ஆண்டுகளில் 2 முறை இடிந்து விழுந்த இந்த பாலத்தின் பகுதி இன்று 3 வது முறையாக இடிந்து கங்கை ஆற்றில் விழுந்தது.

    இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சமீப காலங்களாகவே பீகாரில் அடுத்தடுத்து பாலங்கள் இடிந்து வரும் நிலையில் தற்போது இந்த பாலம் கங்கை ஆற்றில் இடிந்து விழும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

    • பாம்பும் கீரியும் சண்டையிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
    • தாக்குதலில் இருந்து தற்காத்து கொள்ள பாம்பு படமெடுத்து கொத்தியது.

    பாம்புக்கும் கீரிக்கும் இடையே தீராத பகை உள்ளது. பாம்புக்கும் கீரிக்கும் இடையேயான சண்டையை பற்றி நாம் பல கதைகளில் படித்திருப்போம்.

    இந்நிலையில், உண்மையிலேயே பாம்பும் கீரியும் சண்டையிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

    பீகாரின் பாட்னா விமான நிலையத்தின் ஓடுதளப் பாதையில் இருந்த ஒரு பாம்புடன் 3 கீரிகள் சண்டையிட்டு கொண்டது.

    ஒரு பாம்பை 3 கீரிகள் சூழ்ந்து கொண்டு தாக்குதல் நடத்தியதால், தாக்குதலில் இருந்து தற்காத்து கொள்ள பாம்பு படமெடுத்து கொத்தியது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பராபர் மலையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பாபா சித்தேஸ்வர் கோவிலில் சாவன் மாத சிற்பபுப் பூஜைகள் நடந்தன
    • கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் லத்தியால் பக்தர்களை தாக்கியுள்ளனர்.

    பீகார் மாநிலம் பராபர் மலையில் அமைந்துள்ள பாபா சித்தேஸ்வர் கோவிலில் இன்று அதிகாலை  ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 3 பெண்கள் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

     

    பீகாரின் ஜெகன்னாபாத் மாவட்டத்தில் பராபர் மலையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பாபா சித்தேஸ்வர் கோவிலில் வருடந்தோறும் சாவன் புனித மாதத்தில் நடக்கும் சிறப்புப் பூஜைகளில் ஏராளமானோர் கலந்துகொள்வது வழக்கம். அந்த வகையில் இந்த வருடமும் அதிகபடியான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்த நிலையில் பூக்கடை அருகில் சிறிய பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

    இதனைக் கட்டுப்படுத்த போலீசார் லத்தியால் பக்தர்களை தாக்கியுள்ளனர். இதனைத்தொடர்ந்து கூட்டநெரிசல் ஏற்பட்டதாக உயிர்தப்பியவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் இதனை போலீஸ் தரப்பு மறுத்துள்ளது.

     

    இந்த கூட்டநெரிசலில் 3 பெண்கள் உட்பட உயிரிழந்த 7 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கூட்டநெரிசலில் சிக்கி 9 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில் அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  

    • வயலின் நடுவே கட்டப்பட்டுள்ள பாலத்தை கட்டு கிராம மக்கள் குழப்பமடைந்தனர்.
    • தனியார் நிலம் என்பதால் சாலை அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

    பீகார் மாநிலம் அராரியா மாவட்டத்தில் சாலையே இல்லாத இடமான வயல் வெளியில் பாலம் கட்டப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ரூ.3 கோடி செலவில் பாலம் மற்றும் சாலை அமைக்க திட்டமிட்டுள்ளனர். ஆனால் தனியார் நிலம் என்பதால் சாலை அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

    அதே சமயம் அங்கு சாலை அமைக்கப்பட்ட பிறகு, வயலின் ஒரு பக்கத்திலிருந்து மறுபுறம் தண்ணீர் செல்ல பாதை வேண்டும் என்பதால் சாலை அமைக்கும் முன்பே பாலம் காட்டியுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இது எதுவும் தெரியாத கிராம மக்கள் வயலின் நடுவே கட்டப்பட்டுள்ள பாலத்தை கட்டு குழப்பமடைந்தனர். 

    அண்மையில் பீகார் மாநிலத்தில் 10க்கும் மேற்பட்ட பாலங்கள் இடிந்து விழுந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

    • வடமாநிலங்களில் புகழ் பெற்றது கன்வார் யாத்திரை.
    • 3 பேர் படுகாயங்களுடன் தூக்கி வீசப்பட்டனர்.

    வடமாநிலங்களில் புகழ் பெற்ற கன்வார் யாத்திரை நடந்து வருகிறது. நேற்று கன்வார் பக்தர்கள் பீகாரில் சோனாப்பூரில் உள்ள பாபா ஹரிகர்நாத் கோவிலில் ஜலஅபிஷேகம் செய்வதற்காக கார்களில் சென்று கொண்டிருந்தனர்.

    வைசாலி மாவட்டத்தில் அந்த யாத்திரை சென்று கொண்டிருந்த போது சுல்தான்பூர் என்ற கிராமத்தில் மின் வயர்கள் அறுந்து விழுந்தன. மின்சார வயர் ஒரு காரின் மீது விழுந்ததில் அந்த காரில் இருந்த 9 பேர் மின்சாரம் தாக்கி பலியானார்கள்.

    3 பேர் படுகாயங்களுடன் தூக்கி வீசப்பட்டனர். இதுகுறித்து வைசாலி மாவட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • இரவில் நுழையும்போது ராஜேஷின் பெற்றோர் அவனை பார்த்துவிட்டனர்
    • குஷ்பு வை சந்திக்க சந்தான் பல இரவுகளில் இதுபோல வந்து சென்றது பின்னர் தெரியவந்துள்ளது.

    பீகார் மாநிலத்தில் உள்ள ராம்நகர் கிராமத்தில் ராஜேஷ் குமார் [26] என்பவர் தனது மனைவி குஷ்பு [22], 2 வயது மகன் மற்றும் தாய் தந்தையுடன் வாழ்ந்து வந்தார். ஒரு நாள் குஷ்பூவை சந்திக்க அவரது சிறுவயது காதலன் சந்தான் [24] அவர்களது வீட்டுக்குள் நடு இரவில் நுழையும்போது ராஜேஷின் பெற்றோர் அவனை பார்த்துவிட்டனர்.

    குஷ்பு வை சந்திக்க சந்தான் பல இரவுகளில் இதுபோல வந்து சென்றது பின்னர் தெரியவந்துள்ளது. இதை அறிந்த ராஜேஷ் குமார் கோபப்படாமல் தனது மனைவியை அவரது பால்ய கால காதலனுக்கே, முன் நின்று திருமணம் செய்து வைத்துள்ளார்.

    தற்போது குஷ்பு , சந்தான் வீட்டில் புது வாழவைத் தொடங்கியுள்ளார். இதுகுறித்து ஊடகத்துக்குப் பேட்டியளித்த குஷ்பு தனது காதலை புரிந்துகொண்ட முன்னாள் கணவர் ராஜேஷ் குமாருக்கு தான் நன்றிக்கடன் பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். அரிதினும் அரிதான இந்த சம்பவம் ராம் நகர் கிராம மக்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது.  

    • செயின்ட் ஜோன் போர்டிங் பள்ளியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
    • துப்பாக்கியால் சுட்டதால் 10 வயது மாணவனின் கையில் காயம் ஏற்பட்டுள்ளது.

    தனது பையில் துப்பாக்கியை மறைத்து பள்ளிக்கு எடுத்துச்சென்ற 5 வயது மாணவன் 3ம் வகுப்பு மாணவனை சுட்ட சம்பவம் பீகாரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பீகார் மாநிலம் சுபால் மாவட்டத்தில் உள்ள செயின்ட் ஜோன் போர்டிங் பள்ளியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

    துப்பாக்கியால் சுட்டதால் 10 வயது மாணவனின் கையில் காயம் ஏற்பட்டுள்ளது. தற்போது அந்த மாணவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த விவகாரம் தொடர்பாக தனியார் பள்ளி முதல்வரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் துப்பாக்கியால் சுட்ட மாணவன் மற்றும் அவரது தந்தையை போலீசார் தேடி வருகின்றனர்.

    சிறுவன் கையில் துப்பாக்கி எப்படி வந்தது? என விசாரணை மேற்கொண்டு வருவதாக சுபால் மாவட்ட எஸ்.பி. தகவல் தெரிவித்துள்ளார். மேலும் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளில் மாணவர்களின் பைகளை சோதனையிட போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். 

    • இன்று டெல்லியில் நிதி ஆயோக் கூட்டம் நடைபெற்றது.
    • இந்த கூட்டத்தை எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில முதல் மந்திரிகளில் பலர் புறக்கணித்துள்ளனர்

    நடப்பு நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை சமீபத்தில் பாராளுமன்றத்தில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் ஆந்திரா மற்றும் பீகார் மாநிலங்களுக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கப்பட்டது.

    தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்கள் பெயர் கூட பட்ஜெட்டில் வாசிக்கப்படவில்லை. இதனால் எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்ததுடன் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    இன்று டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மாநில முதல் மந்திரிகள் கலந்துகொள்ளும் நிதி ஆயோக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தை புறக்கணிப்பதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில முதல் மந்திரிகளில் பலர் புறக்கணித்துள்ளனர்

    அதே சமயம் எதிர்க்கட்சிகளில் இருந்து ஒரே முதல்வராக நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்ட மம்தா பானர்ஜியும் வெளிநடப்பு செய்தார்.

    இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான நிதி ஆயோக் கூட்டத்தில் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் பங்கேற்கவில்லை என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

    நிதிஷ்குமாருக்கு பதிலாக பீகாரின் துணை முதலமைச்சர்கள் சாம்ராட் சௌத்ரி, விஜய் குமார் சின்ஹா ஆகியோர் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அங்கு நின்றிருந்த முகமது பர்கானை கான்ஸ்டபிள்கள் இருவரும் சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.
    • பர்கான் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி இணையத்தில் கண்டனங்களைக் குவித்து வருகிறது.

    பீகாரில் ரயில்வே போலீஸ் சரமாரியாக அடித்ததில் பயணியின் குடலே வெளியில் வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன் தினம் வியாழக்கிழமை பீகாரில் உள்ள சீதாமாரி மாவட்டத்தில் உள்ள  பூப்ரி ரெயில் நிலையத்தில் மும்பைக்கு செல்லும் கர்மபூமி விரைவு ரெயிலில் உறவினரை ஏற்றி விடுதற்காக முகமது பர்கான் என்ற 25 வயது இளைஞர் வந்துள்ளார்.

    நடைமேடையில் ரெயில் வந்து நின்றதும் முன்பதிவில்லாத பெட்டிகளில் ஏறி சீட் பிடிப்பதற்கு அங்கு கூடிருந்த பயணிகளிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் கூட்டநெரிசலைக் கட்டுப்படுத்த அங்கு வந்த ரெயில்வே போலீஸ் [GRP] கான்ஸ்டபிள்கள் இருவர் பயணிகள் மீது தடியடி நடத்தத்தொடங்கினர். அப்போது அங்கு நின்றிருந்த முகமது பர்கானை கான்ஸ்டபிள்கள் இருவரும் சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.

    பார்கானின் வயிற்றில் பலமுறை அவர்கள் அடித்த நிலையில், அவரது குடல் வெளியே வந்தது. சில நாட்களுக்கு முன்பே பர்கானுக்கு வயிற்றில் அறுவை சிகிச்சை நடந்துள்ளதால் காவலர்கள் அடித்ததில் அவரது குடல் தையல் வழியாக வெளியே வந்துள்ளது. இதனைத்தொடர்ந்து பர்கான் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக ரெயில்வே எஸ்.பி உட்பட இரண்டு கான்ஸ்டபிள்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையில் இந்த பர்கான் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி இணையத்தில் கண்டனங்களைக் குவித்து வருகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நாட்டின் பகுதிகளை யூனியன் பிரதேசங்களாக மாற்ற வேண்டும் என்று மக்களவையில் கூறியுள்ளது கருத்து விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
    • நான் சொல்வது தவறு என்று நிரூபித்தால் எனது பதவியை கூட ராஜினாமா செய்துவிடுகிறேன்

    ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்.பி நிஷிகாந்த் துபே நேற்று  பீகார்  ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்காளத்தில் உள்ள பகுதிகளை யூனியன் பிரதேசங்களாக மாற்ற வேண்டும் என்று மக்களவையில் கூறியுள்ளது கருத்து விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

    நேற்று நடந்த மக்களவை பட்ஜெட் கூட்டத்தில் பேசிய அவர், வங்காளதேசத்தில் இருந்து வரும் ஊடுருவல்காரர்களால், ஜார்கண்ட்,மேற்கு வங்காளம் மற்றும் பிகார்  பகுதிகளில் இஸ்லாமிய மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனால் உள்ளூர் மக்களின் எண்ணிக்கை குறைந்த வண்ணம் உள்ளது.

    வங்காளதேசத்தில் இருந்து வந்து பழங்குடியின சமூகங்கள் அதிகம் வாழும் குடியேறிய இஸ்லாமியர்கள் பழங்குடியின பெண்களை திருமணம் செய்து கொள்வதால் , இந்து மதத்தினர் வாழும் கிராமங்கள் முற்றிலுமாக காலியாகும் சூழல் உள்ளது. இது மிகவும் தீவிரமான விஷயம்.

    நான் சொல்வது தவறு என்று நிரூபித்தால் எனது பதவியை கூட ராஜினாமா செய்துவிடுகிறேன். எனவே வங்க தேசத்தினர் நாட்டுக்குள் நுழையும் பகுதிகளான மேற்கு வங்கத்தில் உள்ள மால்டா, முருஷிதாபாத் மாவட்டங்களையும், பிகாரில் உள்ள கிஷன்கஞ்ச், ஆராரியா, கதிஹார் மாவட்டங்களையும், ஜார்கண்ட் பகுதிகளையும்   பிரித்து யூனியன் பிரதேசங்களாக அறிவிக்க வேண்டும். இதை செய்யவில்லை என்றால் இந்துக்கள் மறைந்துபோவார்கள். மேலும் வெளிநாட்டினர் ஊடுருவலைத் தடுக்கும் தேசிய குடிமைகள் பதிவேடான NRC யை நாட்டில் அமல்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். 

    • நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
    • நேற்று பீகார் மாநிலத்தில் சட்டசபை கூடியது.

    பீகார் மாநிலத்தில் நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து அம்மாநிலத்தில் போட்டி தேர்வுகளின் வினாத்தாள்களை கசிய விடுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கும் மசோதாவை தாக்கல் செய்ய பீகார் அமைச்சரவை முடிவு செய்தது.

    நேற்று பீகார் மாநிலத்தில் சட்டசபை கூடியது. அப்போது சட்டசபை விவகாரத்துறை அமைச்சர் விஜய்குமார் சவுத்ரி வினாத்தாள் கசிவு தொடர்பான மசோதாவை தாக்கல் செய்தார். இதனையடுத்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்த நிலையில் மசோதா நிறைவேற்றப்பட்டது.

    போட்டித் தேர்வு மற்றும் அரசுப் பணியாளர் தேர்வில் வினாத்தாளை கசிய விடுபவர்களுக்கு இனிமேல் 10 ஆண்டுகள் சிறை, ₹1 கோடி அபராதம் விதிக்கப்படும் என்றும் குற்றவாளிகளின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என்று அந்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • இன்று அரசுத் தேர்வுகளில் வினாத்தாள் கசிவைத் தடுக்க சிறப்பு மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
    • நிதிஷ் குமாரின் இந்த கருதினால் அவையில் அமளி எழுந்தது

    பீகார் மாநில சட்டமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியுள்ள நிலையில் இன்று அரசுத் தேர்வுகளில் வினாத்தாள் கசிவைத் தடுக்க சிறப்பு மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் ஏற்கனவே நடந்த சாதிவாரி கணக்கெடுப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதம் நடந்தது. 

    அப்போது லாலு பிரசாத் யாதவின் ஆர்.ஜே.டி கட்சியைச் சேர்ந்த பெண்  எம்.எல்.ஏ ரேகா தேவி, ஆளும் ஜனதா தள அரசின் பெண்கள் தொடர்பான கொள்கைகள் குறித்து விமர்சித்துப் பேசிக்கொண்டிருந்தார். திடீரென கோபமடைந்த முதல்வர் நிதிஷ் குமார், நீங்கள் ஏன் பேசுகிறீர்கள், நீங்கள்  ஒரு பெண், உங்களுக்கு என்ன தெரியும், அமைதியாக உட்கார்ந்து கவனிங்க என்று கோபமாக கூறினார்.

    நிதிஷ் குமாரின் இந்த கருதினால் அவையில் அமளி எழுந்த நிலையில், தொடர்ந்து பேசிய நிதிஷ் குமார், 'நீங்கள் தேவையில்லாத விஷயங்களை பேசிக்கொண்டிருக்கிறீர்கள், நீங்கள்[ஆர்ஜேடி] பெண்களுக்காக என்ன செய்தீர்கள், 2005 க்கு பிறகு நாங்கள் தான் பெண்களை உயர்த்தினோம்.அதனால் தான் நான் சொல்கிறேன். அதனை அமைதியாக கவனியுங்கள், கவனிக்காவிட்டால் அது உங்களின் தவறுதான்' என்று தெரிவித்துள்ளார். 

    ×