என் மலர்
நீங்கள் தேடியது "கொலை முயற்சி"
- தாக்குதலாக இருக்கலாமோ என்ற கேள்வியை எழுப்பியது.
- தீயை கட்டுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டனர்.
ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை கான்வாயில் சென்ற வாகனங்களில் ஒன்று தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், வாகனம் தீப்பிடித்து எரிந்ததை அடுத்து இந்த சம்பவம் அதிபர் புதினை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலாக இருக்கலாமோ என்ற கேள்வியை எழுப்பியது.
இந்த சம்பவம் மாஸ்கோவில் உள்ள உளவுத்துறை தலைமையகமான எஃப்.எஸ்.பி. அருகே நடைபெற்றுள்ளது. இது தொடர்பாக சமூக வலைதளங்களில் வைரலான வீடியோக்களில் கார் தீப்பிடித்து எரிவதும், அங்கிருந்தவர்கள் தீயை கட்டுப்படுத்தும் பணிகளில் ஈடுபடும் காட்சிகளும் இடம்பெற்று இருக்கிறது.
அதிபர் கான்வாயில் இடம்பெற்று இருந்த ஔரஸ் செனட் லிமோசின் ரக கார் ஒன்றின் எஞ்சின் பகுதியில் தீ ஏற்பட்டு, பிறகு முகப்பு பகுதி முழுக்க பரவியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் காரின் பெரும்பாலான பகுதி சேதமடைந்துள்ளது. தீப்பிடித்து எரிந்த காரில் இருந்தது யார் என்பது பற்றி எந்த தகவலும் இல்லை.
+2
- உள்ளூர் மக்கள் சிலர் அங்கு சென்று, பெண்கள் மீது கொட்டப்பட்ட மண்ணை அகற்றி, இருவரையும் மீட்டனர்.
- குடும்பச் சொத்தில் உரிய பங்கை கேட்டதால கொல்ல முயன்றதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டினர்
ஆந்திராவில் சொத்து பிரச்சனை தொடர்பாக போராட்டம் நடத்திய பெண்களை உயிரோடு புதைக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஸ்ரீகாகுளம் மாவட்டம் ஹரிபுரம் கிராமத்தைச் சேர்ந்த தாளம்மா மற்றும் அவரது மகள் சாவித்ரி ஆகியோருக்கும், அவர்களின் உறவினர்களான ஆனந்தராவ், பிரகாஷ் ராவ், ராமராவ் ஆகிருக்குமிடையே பூர்வீக நிலத்தின் உரிமை தொடர்பாக தகராறு உள்ளது. குடும்ப சொத்தில் தங்களுக்கு உரிய பங்கை தரக்கோரி இரண்டு பெண்களும் 2019ம் ஆண்டு முதல் போராடிவந்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று இரண்டு பெண்களும் போராட்டம் நடத்தும்போது, டிராக்டரில் வந்த ராமராவ் மண்ணைக் கொட்டி உயிருடன் புதைத்து கொலை செய்ய முயன்றுள்ளனர். இதைப் பார்த்த உள்ளூர் மக்கள் சிலர் அங்கு சென்று, பெண்கள் மீது கொட்டப்பட்ட மண்ணை அகற்றி, இருவரையும் மீட்டனர். இதுதொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
குடும்பச் சொத்தில் தங்களுக்கு உரிய பங்கைக் கேட்டபோது தங்கள் மீது மண்ணைக் கொட்டி கொல்ல முயன்றதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டினர்.
பிரச்சனைக்குரிய நிலத்தில் ராமராவ், கட்டிடம் கட்டுவதற்காக மண் மற்றும் கிராவலை கொட்டி உள்ளார். இதைப் பார்த்த தாளம்மா மற்றும் அவரது மகள் சாவித்ரி இருவரும் அங்கு சென்று அந்த இடத்தில் தங்களுக்கும் பங்கு இருப்பதாக கூறி, மண் கொட்டுவதை தடுத்துள்ளனர். எனினும் ராமராவ் மண்ணை கொட்டியுள்ளார். அப்போது பெண்கள் இருவரும் அங்கு அமர்ந்து தர்ணா செய்துள்ளனர். ஆனால் எதைப்பற்றியும் கவலைப்படாத ராமராவ், அவர்கள் மீது மண்ணை கொட்டி உள்ளார்.
தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், பாதிக்கப்பட்ட பெண்களிடம் இருந்து வாக்குமூலம் பெற்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
- கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரியா குடும்பத் தகராறில் கணவரை பிரிந்து பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.
- கடந்த சில ஆண்டுகளாக மனைவி தனக்கு உணவில் விஷம் கலந்து கொடுத்திருப்பதாக பாறசாலை போலீசில் சுதீர் புகார் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
திருவனந்தபுரம்:
கேரள மாணவருக்கு காதலி குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்த சம்பவம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் இருந்து மீள்வதற்குள் கள்ளக்காதலுக்காக கணவருக்கு மனைவியே விஷம் கொடுத்தள்ளதாக புகார் எழுந்துள்ளது.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் பாறசாலை அருகே உள்ள முறியங்கரை பகுதியைச் சேர்ந்தவர் சுதீர் (வயது 49). கேரள அரசு போக்குவரத்துக் கழக டிரைவர். இவரது மனைவி பிரியா. இவர் தமிழகத்தின் விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்தவர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரியா குடும்பத் தகராறில் கணவரை பிரிந்து பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக மனைவி தனக்கு உணவில் விஷம் கலந்து கொடுத்திருப்பதாக பாறசாலை போலீசில் சுதீர் புகார் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
இதற்கு ஆதாரமாக வீட்டின் பீரோவில் இருந்து கைப்பற்றப்பட்ட அம்மோனியம் பாஸ்பேட் மற்றும் சிரிஞ்சை அவர் காண்பித்துள்ளார். மனைவி பிரியாவுக்கும் திருநெல்வேலியைச் சேர்ந்த முருகன் என்பவருக்கும் கள்ளக்காதல் இருந்துள்ளது என்றும் அவர் தான் விஷத்தை கொரியர் மூலம் அனுப்பி இருக்கிறார் என்றும் சுதீர் கூறினார். மேலும் கடந்த 10 ஆண்டுகளாக எனக்கு வீட்டில் சாப்பிட்டால் உடல் நலக்குறைவு ஏற்பட்டு வந்தது. இதற்கு காரணம் மனைவி உணவில் விஷம் கலந்து கொடுத்தது தான் என்றும் அவர் கூறியுள்ளார்.
அதன்பேரில் விசாரணை நடத்திய பாறசாலை போலீசார், பிரியா, முருகன் ஆகியோர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கள்ளக்காதலனுடன் உல்லாச வாழ்க்கை வாழ, கணவருக்கு மனைவி விஷம் கொடுத்ததாக கூறப்படும் இந்த சம்பவம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
- தேங்காய் வியாபாரி தனது கள்ளக்காதலுக்கு மனைவி இடையூறாக இருப்பதாக நினைத்தார்.
கோவை:
கோவை மலுமச்சம்பட்டி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 29 வயது தேங்காய் வியாபாரி. இவருக்கு கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. தற்போது 1½ வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
கடந்த 6 மாதங்களுக்கு முன் தேங்காய் வியாபாரிக்கு அவரது மனைவியின் தங்கையான திருமணமாகாத இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தனர்.
இந்த கள்ளக்காதல் விவகாரம் அக்கம் பக்கத்தினர் மூலமாக தேங்காய் வியாபாரியின் மனைவிக்கு தெரியவந்தது.
அவர் தனது கணவரை கண்டித்தார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனையடுத்து தேங்காய் வியாபாரி தனது கள்ளக்காதலுக்கு மனைவி இடையூறாக இருப்பதாக நினைத்தார். எனவே அவரை கொஞ்சம் கொஞ்சமாக கொல்லும் விஷத்தை கொடுத்து தீர்த்து கட்ட முடிவு செய்தார். அதன்படி ஆன்லைன் மூலமாக தனது மனைவியை கொல்வதற்கு விஷத்தை வாங்கி உள்ளார். பின்னர் அதனை வீட்டில் மறைத்து வைத்தார்.
இந்தநிலையில் கடந்த அக்டோபர் மாதம் 17-ந் தேதி தேங்காய் வியாபாரி தனது கள்ளக்காதலியுடன் ஓட்டம் பிடித்தார். இது குறித்து அவரது மனைவி மாயமான தனது கணவர் மற்றும் தங்கையை கண்டுபிடித்து தரும்படி செட்டிப்பாளையம் போலீசில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மனைவியின் தங்கையுடன் ஓட்டம் பிடித்த தேங்காய் வியாபாரியை தேடி வந்தனர்.
இந்தநிலையில் 2 பேரும் மதுரை ஜெய்ஹிந்புரத்தில் தங்கி இருப்பது தெரியவந்தது. அங்கு விரைந்து சென்ற போது போலீசார் மனைவியின் தங்கையுடன் குடும்பம் நடத்தி வந்த தேங்காய் வியாபாரியை பிடித்தனர். பின்னர் அவரை கோவைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- வடிவேல் முருகனின் ரத்த மாதிரியை ஆய்வு மையத்திற்கு அனுப்பியுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- அதன் முடிவு வந்த பின்பு என்ன வகையான மருந்து அல்லது விஷம் கொடுக்கப்பட்டுள்ளது என தெரியவரும் என தெரிவித்தனர்.
இரணியல்:
கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே உள்ள ஆழ்வார் கோயில் பகுதியைச் சேர்ந்தவர் வடிவேல் முருகன் (வயது 32), கட்டுமான தொழிலாளி. இவரது மனைவி சுஜா. இவர்களுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 31-ந்தேதி திருமணம் நடைபெற்றது.
கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வடிவேல் முருகன், திடீரென இரவில் வீட்டில் மயங்கி விழுந்தார். இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். தற்போது மீண்டும் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்துள்ள வடிவேல் முருகன், தனது மனைவி மீது புகார் கூறி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளார்.
தனது மனைவிக்கு திருமணத்துக்கு முன்பு வாலிபர் ஒருவருடன் காதல் இருந்ததாகவும் தற்போது அவருடன் சேர்ந்து தனக்கு மெல்லக் கொல்லும் விஷத்தை மனைவி கொடுத்ததால் உடல் நலம் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் வடிவேல் முருகன் வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பலருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
அந்த வீடியோவில் வடிவேல் முருகன் தனது மனைவியின் செல்போனை தற்செயலாக பார்த்த போது தான் கொலை சதி பற்றி தெரிய வந்ததாகவும் தனது மனைவி கள்ளக்காதலனுடன் உரையாடிய வாட்ஸ்அப் ஆதாரம் தனக்கு கிடைத்து இருப்பதாகவும் கூறுகிறார்.
இந்த உண்மை தனக்கு சரியான நேரத்தில் தெரியாமல் இருந்தால், தான் கொல்லப்பட்டு இருப்பேன் என்றும், அல்லது விபத்தில் சிக்கி இருப்பேன் என்றும் கூறியுள்ளார்.
தனது கணவனுக்கு அளித்த மருந்தில் ஏதோ கலந்து கொடுத்ததாக முன்னாள் காதலனுடன் சுஜா பேசிக்கொண்ட தகவல் வாட்ஸ்-அப்பில் பதிவாகி உள்ளதாக தெரிகிறது.
இதுகுறித்து வடிவேல்முருகன் போலீசிலும் புகார் அளித்தார். தனது மனைவியையும் அவரது காதலனையும் கைது செய்து தனக்கு அளித்த மருந்தை அறிந்து அதற்குரிய சிகிச்சை அளிக்க காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் அவர் கூறியிருந்தார்.
இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்ட போது... வடிவேல் முருகனின் ரத்த மாதிரியை ஆய்வு மையத்திற்கு அனுப்பியுள்ளோம். அதன் முடிவு வந்த பின்பு என்ன வகையான மருந்து அல்லது விஷம் கொடுக்கப்பட்டுள்ளது என தெரியவரும் என தெரிவித்தனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குமரி மாவட்டத்தில் காதலன், மாணவர் மெல்லக் கொல்லும் விஷத்தால் கொல்லப்பட்டதாக ஏற்கனவே வழக்குகள் உள்ள நிலையில் தற்போது மனைவியே கணவனுக்கு விஷம் கொடுத்து கொல்ல முயன்றதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கொலை முயற்சியில் தொடர்புடையவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிகப்பட்டார்.
- மேற்கண்ட தகவலை தெற்குவாசல் காவல் நிலைய ஆய்வாளர் முத்துபிரேம்சந்த் தெரிவித்துள்ளார்.
மதுரை
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகா, கோவிலாங்குளம் மு.வில்லேனேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் முத்துராமலிங்கம் (வயது 34). இவர் மதுரை தெற்குவாசல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தில் 2014-ம் ஆண்டு ஊழியர்களை கட்டி போட்டு நகைகளை கொள்ளையடித்து விட்டு தப்பும் போது போக்குவரத்து காவலர் ஜீவானந்தத்தை தாக்கி கொல்ல முயன்றார்.
இந்த வழக்கில் முத்தராமலிங்கம் கைதாகி ஜாமீனில் வெளியே சென்றவர் கடந்த 8 ஆண்டுகளாக வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாகி விட்டார். அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும் கோர்ட்டில் ஆஜராகாததால் முத்துராமலிங்கத்தை தேடப்படும் குற்றவாளியாக மதுரை மாவட்ட குற்றவியல் நீதித்துறை நீதிபதி அறிவித்துள்ளார். இந்த வழக்கில் வாய்தாவிற்கு வருகிற 21-ந் தேதி முத்துராமலிங்கம் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மேற்கண்ட தகவலை தெற்குவாசல் காவல் நிலைய ஆய்வாளர் முத்துபிரேம்சந்த் தெரிவித்துள்ளார்.
- சரியான சமயத்தில் தோழி தடுத்திருக்காவிட்டால் தலையில் வெட்டு விழுந்து உயிருக்கே ஆபத்தாகியிருக்கும்
- போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளியை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
கொச்சி:
கேரளாவின் கொச்சி நகரில் இன்று பட்டப்பகலில் பெண்ணை கத்தியால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கொச்சி ஆசாத் சாலையில் இன்று காலை 11 மணியளவில் ஒரு வாலிபருக்கும், இரண்டு பெண்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது அந்த வாலிபர் மறைத்து வைத்திருந்த வெட்டுக்கத்தியை எடுத்து திடீரென ஒரு பெண்ணை நோக்கி வெட்டுவதற்கு ஓங்கி உள்ளார். அப்போது உடனிருந்த மற்றொரு பெண் லாவகமாக கையால் தடுத்துள்ளார். இதில் அந்த பெண்ணுக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. சரியான சமயத்தில் தடுத்திருக்காவிட்டால் அந்த பெண்ணின் தலையில் வெட்டு விழுந்து உயிருக்கே ஆபத்தாகியிருக்கும்.
பாதிக்கப்பட்ட பெண், உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தப்பி ஓடிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த தாக்குதல் தொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது. குற்றவாளி விட்டுச் சென்ற கத்தியை போலீசார் கைப்பற்றினர். அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளியை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
- அமல்ராஜ் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து சொந்தமாக கடல் தொழில் செய்து வருகிறார்.
- 4 பேர் கும்பல் அமல்ராஜை செங்கலால் தாக்கி கொல்ல முயன்று உள்ளனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி தருவைகுளம் நவமணி 2-வது தெருவை சேர்ந்தவர் அமல்ராஜ் (வயது29) இவரது அண்ணன் அந்தோணி மிக்கேல் (31) மற்றும் குடும்பத்தினர் சேர்ந்து சொந்தமாக கடல் தொழில் செய்து வருகின்றனர்.
நேற்று மாலை தாள முத்துநகர் திரேஸ்நகர் பகுதியில் அமல்ராஜ் வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு அவருடன் முன்பு வேலை செய்தவர் உட்பட 4 பேர் குடிபோதையில் தகராறில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
இதனைக் கண்ட அமல்ராஜ் அதனை தடுத்து நிறுத்தி விலக்கி விட்டு அவர்களை சத்தம் போட்டார். இதில் ஆத்திரமடைந்த 4 பேரும் சேர்ந்து அமல்ராஜை அடித்து உதைத்துள்ளனர்.
வீட்டுக்கு வந்த அமல்ராஜ் நடந்த சம்பவத்தை குடும்பத்தினரிடம் கூறியுள்ளார் அவர்கள் காயம் பட்ட இடத்தில் மருந்து போட்ட பின்னர் பேசிக்கொள்வோம் என்று கூறியுள்ளனர். இந்நிலையில் இரவு வீட்டுக்கு வெளியே அமல் ராஜ் வரும்போது அங்கு வந்த அதே 4 பேர் கும்பல் அமல்ராஜை மீண்டும் செங்கலால் தாக்கி அவரை கொல்ல முயன்று உள்ளனர்.
இதனைக்கண்ட அக்கம் பக்கத்தினர் சத்தம் போடவே அவர்கள் அங்கிருந்து ஓடி விட்டனர். கும்பலால் தாக்கப்பட்டு பலத்த காயமடைந்த அமல்ராஜ் தூத்துக்குடி அரசு மருத்துவமனை சிகிச்சைக்காக அனு மதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து அவரது அண்ணன் அந்தோணி மிக்கேல் அளித்த புகாரின் பேரில் தாளமுத்து நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்.
அதில் தாக்குதலின் ஈடுபட்டது டி.சவேரி யார்புரத்தை சேர்ந்த தாமஸ்,செண்பகராஜ், சந்தோஷ், மில்டன் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்
- ஓட்டலில் இருந்தவர்கள் அன்சரை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- சம்பவம் குறித்து திருப்பத்தூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து பைரோஸை தேடி வருகின்றனர்.
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் டவுன் ஆரிப் நகர் பகுதியைச் சேர்ந்த அப்துல் சலீம் மகன் அன்சர் (38). இவர் புதுப்பேட்டை சாலையில் உள்ள ஓட்டலில் சப்ளையராக பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில் பெரியார் நகர் பகுதியை சேர்ந்த பைரோஸ் (40) நேற்று மதியம் மது போதையில் ஓட்டலுக்கு வந்து 2 ஸ்பெஷல் புரோட்டா வாங்கி சாப்பிட்டார். அதற்கான பில் தொகை ரூ.120 ஐ அன்சர் கேட்டார்.
அப்போது மது போதையில் இருந்த பைரோஸ் அவரிடம் வாய் தகராறில் ஈடுபட்டு பணத்தை கொடுக்காமல் அங்கிருந்து சென்றார்.
பின்னர் மீண்டும் இரவு சுமார் 10 மணி அளவில் பைரோஸ் ஓட்டலுக்கு வந்தார். அப்போது அனைவரின் முன்பும் என்னிடம் பணம் கேட்கிறாயா என்று கூறி அன்சரிடம் திரும்பவும் வாய் தகராறில் ஈடுபட்டார்.
அப்போது தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அன்சரின் கழுத்தை அறுத்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதில் ரத்த வெள்ளத்தில் அவர் மயங்கி சரிந்தார்.
ஓட்டலில் இருந்தவர்கள் அன்சரை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து திருப்பத்தூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து பைரோஸை தேடி வருகின்றனர்.
- துப்பறிவாளர்கள் நடத்திய நேர்காணலில் பேசிய ஜேக்கப் தனது தாயை பலமுறை கத்தியால் குத்தியதாக கூறினான்.
- தாயை கொல்வதற்கு துப்பாக்கி வேண்டும் என ஜேக்கப் தன் நண்பரிடம் கேட்டுள்ளான்.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் புளோரிடாவில் ஜேக்கப் ப்ரூவர் என்ற 17 வயது சிறுவன், தன் அம்மாவை கொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஜேக்கப்பிடம் அவனது அறையை சுத்தமாக வைத்திருக்கும்படி அவனது தாய் கூறியிருக்கிறார். தொடர்ந்து இவ்வாறு அறிவுறுத்தியதால் ஆத்திரமடைந்த ஜேக்கப், தாயுடன் வாக்குவாதம் செய்துள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில், கத்தியால் தாயை குத்தி உள்ளார். அத்துடன் பாத்திரத்தால் தலையில் அடித்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த தாய் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய ஜேக்கப்பை கைது செய்து சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் சிறார் சிறையில் அடைக்கப்பட்டான். துப்பறிவாளர்கள் நடத்திய நேர்காணலில் பேசிய ஜேக்கப் தனது தாயை பலமுறை கத்தியால் குத்தியதாக கூறினான்.
தாயை கொல்வதற்கு துப்பாக்கி வேண்டும் என ஜேக்கப் தன் நண்பரிடம் கேட்டு மெசேஜ் அனுப்பி உள்ளான். அவன் துப்பாக்கி கொண்டு வர முடியாது என்று கூறியதுடன், கத்தி கொண்டு வருவதாகவும் கூறி கத்தியை கொண்டு வந்து கொடுத்திருக்கிறான். மேலும், அந்த நண்பர் ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது.
- கிருஷ்ணமூர்த்தி ஏற்கனவே 2 திருமணம் செய்து மனைவிகளை விவாகரத்து செய்தவர்.
- 3-வதாக கிருஷ்ணமூர்த்தி கவுரியை திருமணம் செய்தார். கவுரிக்கும் இது 2-வது திருமணம் ஆகும்.
பொள்ளாச்சி:
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள நேரு காலனியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 39). பெயிண்டர். இவரது மனைவி கவுரி (32). இவர்களுக்கு 1 வயதில் ஒரு மகன் உள்ளார்.
கிருஷ்ணமூர்த்தி, கவுரியை கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.
கிருஷ்ணமூர்த்தி ஏற்கனவே 2 திருமணம் செய்து மனைவிகளை விவாகரத்து செய்தவர். 3-வதாக அவர் கவுரியை திருமணம் செய்தார். கவுரிக்கும் இது 2-வது திருமணம் ஆகும்.
சிறிது காலம் மகிழ்ச்சியாக சென்ற இவர்களது வாழ்வில் கிருஷ்ணமூர்த்தியின் சந்தேக புத்தியால் பிரச்சினை ஏற்பட தொடங்கியது. கவுரியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கிருஷ்ணமூர்த்தி அடிக்கடி தகராறு செய்தார்.
சம்பவத்தன்று இரவு மீண்டும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் கவுரி தூங்க சென்றார். ஆத்திரத்தில் இருந்த கிருஷ்ணமூர்த்தி தனது மனைவியை கொலை செய்ய திட்டமிட்டார். அதன்படி வீட்டில் இருந்த பெயிண்டிங் கலக்க பயன்படுத்தப்படும் எண்ணையை எடுத்து தூங்கிக் கொண்டு இருந்த கவுரியின் மீது ஊற்றினார். பின்னர் தீப்பற்ற வைத்தார். பின்னர் அங்கு இருந்து தப்பிச் சென்றார்.
கண்ணிமைக்கும் நேரத்தில் அவரது உடல் முழுவதும் தீ பரவியது. இதில் வலி தாங்க முடியாமல் அவர் சத்தம் போட்டார். இதனை கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று தீயில் இருந்து கவுரியை மீட்டனர். பின்னர் அவரை பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இதுகுறித்து பொள்ளாச்சி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து மனைவியை தீ வைத்து எரித்து கொலை செய்ய முயன்ற கிருஷ்ண மூர்த்தியை தேடி வருகிறார்கள்.
- ரெயில் வருவதற்குள் ஒரு நபர் குழந்தையை பாதுகாப்பாக இழுத்து பிளாட்பாரத்திற்கு அழைத்துச் சென்றார்.
- குழந்தையை தள்ளிவிட்ட பெண் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் ஒரேகான் மாநிலத்தில், ரெயில் நிலைய பிளாட்பாரத்தில் தன் தாயுடன் நின்றுகொண்டிருந்த 3 வயது குழந்தையை பின்னால் இருந்த ஒரு பெண், ஈவு இரக்கமின்றி தண்டவாளத்தில் தள்ளிவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த மாதம் 28ம் தேதி நடந்த இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி பதிவை மல்ட்னோமா கவுண்டி மாவட்ட வழக்கறிஞர் அலுவலக இணையதளத்தில் போஸ்ட் செய்யப்பட்டுள்ளது.
தாக்குதல் நடத்திய பெண், 32 வயது நிரம்பிய பிரியன்னா லேஸ் வொர்க்மேன் என அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர் குழந்தையை தள்ளிவிட்டு எந்த குற்ற உணர்ச்சியும் இன்றி மீண்டும் இருக்கையில் அமர்ந்தார்.
பிளாட்பாரத்தில் நின்றிருந்த மற்றவர்கள் இதைப் பார்த்து பதறிப்போனார்கள். உடனடியாக நடவடிக்கையில் இறங்கி, தண்டவாளத்தில் இருந்து குழந்தையை தூக்க ஓடினர். ரெயில் வருவதற்குள் ஒரு நபர் குழந்தையை பாதுகாப்பாக இழுத்து பிளாட்பாரத்திற்கு அழைத்துச் சென்றார். இதனால் மிகப்பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தண்டவாளத்தில் விழுந்ததில் குழந்தைக்கு லேசான காயம் ஏற்பட்டது. பிளாட்பாரத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் இந்த காட்சிகள் பதிவாகி உள்ளது.
இந்த சம்பவத்தைப் பார்த்த பயணிகள் அச்சத்தில் உறைந்தனர். இந்த கொடூரமான செயலுக்கு மன்னிப்பே கிடையாது, அந்த பெண் ஏன் அப்படிச் செய்தார்? என்று புரியவில்லை என ஒரு பயணி குறிப்பிட்டார்.
குழந்தையை தள்ளிவிட்ட பெண் கைது செய்யப்பட்டு, அவர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜாமீன் வழங்காமல் அவரை காவலில் வைக்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் அரசுத் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.