என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 111452"
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் அருகே உள்ள சத்திரக்குடி மஞ்சக்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் வன்னியாத்தாள் (வயது 75).
இவர் நேற்று மாலை விவசாய வேலை முடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தார். வன்னி கருப்பணசாமி கோவில் அருகே நடந்து சென்று கொண்டிருந்த போது இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் வன்னியாத்தாள் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பினார்.
இதுகுறித்து வன்னியாத்தாள் சத்திரக்குடி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் சாமுவேல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
பரமக்குடி அருகே உள்ள கஞ்சியானந்தல் கிராமத்தை சேர்ந்தவர் பானுமதி (வயது 40). நேற்று வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்று விட்டார். இரவு வீடு திரும்பியபோது கதவு உடைக்கப்பட்டு வீட்டுக்குள் இருந்த 3¼ பவுன் தங்க நகை திருட்டு போனது தெரியவந்தது.
இதுகுறித்து போலீசில் புகார் அளித்தார். பரமக்குடி தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் பேபி இசக்கி பிரகதாம்பாள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று மாலை முதல் பரவலாக சாரல் மழை பெய்தது. இரவு வரை நீடித்த இந்த மழையால் ராமநாதபுரம் நகரின் சாலையில் மழை நீர் குழம்போல் தேங்கியது. சில இடங்களில் மின் தடையும் ஏற்பட்டது.
இதேபோல் பரமக்குடி, மண்டபம், உச்சிப்புளி, கமுதி, தொண்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை பெய்தது. கடந்த ஒரு வாரமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதோடு விவசாயத்துக்காக வைகையாற்றில் தண்ணீர் திறக்கப்பட்டதாலும் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
வறட்சி மாவட்டமாக அறியப்படும் ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில வாரமாக விட்டு, விட்டு பெய்து வரும் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதனால் குடிநீர் பிரச் சினை தீரும் என அவர்கள் தெரிவித்தனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் அளவு மில்லிமிட்டரில் வருமாறு:-
கமுதி -18.40, முதுகுளத்தூர் -6.20, பாம்பன் -1.40, பரமக்குடி -5.20, பள்ளமோர்குளம்-4.50, வாலிநோக்கம் -1.60 மாவட்டத்தின் மொத்த மழையின் அளவு 143.70 மில்லிமிட்டர் ஆகும்.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் அருகே உள்ள வாலாந்தரவை கிராமத்தை சேர்ந்தவர்கள் கார்த்திக் (வயது 37), விக்கி என்ற விக்னேஷ். இவர்கள் மீது கொலை, மிரட்டல் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.
கடந்த மே மாதம் வாலாந்தரவையை சேர்ந்த விஜய், பூமி ஆகிய 2 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக கார்த்திக் உள்பட 20 பேரை போலீசார் கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர்.
கைதானவர்கள் கோர்ட்டில் மேல் முறையீடு செய்ததை தொடர்ந்து குண்டர் சட்டதில் கைதானது ரத்து செய்யப்பட்டது. நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
அதன்படி கார்த்திக் தினமும் கேணிக்கரை போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தார்.
நேற்று மாலை கார்த்திக் தனது கூட்டாளி விக்கியுடன் கேணிக்கரை போலீஸ் நிலையத்துக்கு சென்று விட்டு நடந்து வந்து கொண்டு இருந்தார்.
அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் 2 பேரை ஓட, ஓட விரட்டி வெட்டியும், வெடிகுண்டு வீசியும் படுகொலை செய்தது.
அங்கிருந்து தப்பிய கொலையாளிகள் சிறிது நேரத்திலேயே நயினார் கோவில் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தனர். அவர்கள் வாலாந்தரவையை சேர்ந்த ரூபன் (25), முரளி (27), பாஸ்கரன் (40), அர்ச்சுணன்(25), முருகேசன்(37) என தெரிய வந்தது. இவர்கள் ஏற்கனவே கொலை செய்யப்பட்ட விஜய், பூமியின் உறவினர்கள் ஆவார்கள்.
சரணடைந்த 5 பேரிடமும் தனிப்படை போலீசார் விடிய, விடிய விசாரணை நடத்தினர். அப்போது பழிக்குப்பழியாக இந்த கொலை நடந்தது தெரிய வந்தது.
கொலை செய்யப்பட்ட 2 பேரின் உடல்களும் பிரேதபரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு அவர்களது உறவினர்கள் 100-க்கும் மேற்பட்டோர் திரண்டனர்.
எனவே அசம்பாவித சம்பவம் ஏற்படாமல் இருக்க அரசு ஆஸ்பத்திரியில் 300-க் கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். வஜ்ரா வாகனமும் நிறுத்தப்பட்டுள்ளது.
வாலாந்தரவையில் பதட்டமான சூழ்நிலை உள்ளதால் அரசு பஸ் இயக்கப்பட வில்லை. கடைகளும் மூடப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் போலீசார் அதிக அளவில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். #bombing #Murder
ராமநாதபுரம் புதிய பஸ் நிலைய வளாகத்தில் இருந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை சார்பில் புதிய பஸ்கள் தொடக்க விழா மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் தலைமையில் நடந்தது. விழாவில் அமைச்சர் டாக்டர் மணிகண்டன் கலந்து கொண்டு புதிய பஸ்களை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் பேசியதாவது:- தமிழ்நாடு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி போக்குவரத்து துறையின் சார்பில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக புதிய பஸ்களை தொடங்கி வைத்தார். அவற்றில் காரைக்குடி மண்டலத்திற்கு 19 பஸ்களும், ராமநாத புரம் மாவட்டத்திற்கு 12 பஸ்களும் வழங்கப்பட்டு உள்ளன.
புதிதாக தொடங்கி வைக்கப்பட்டுள்ள இந்த பஸ்களில் ராமநாதபுரம் - மதுரை வழித்தடத்தில் 3 பஸ்களும், ராமேசுவரம் - மதுரை வழித்தடத்தில் 2 பஸ்களும், ராமேசுவரம்- திருப்பூர், முதுகுளத்தூர்- கோவை, முதுகுளத்தூர் - மதுரை, பரமக்குடி - சிதம்பரம், பரமக்குடி - மதுரை, ஏர்வாடி - குமுளி, ஏர்வாடி - ஈரோடு ஆகிய வழித்தடங்களில் தலா ஒரு பஸ் வீதம் மொத்தம் 12 பஸ்களும் இயக்கப்படுகின்றன. இவ்வாறு அவர் பேசினார்.
இதில் அரசு போக்குவரத்து கழக பொதுமேலாளர் கோமதி செல்வகுமார், கோட்ட மேலாளர்கள் சிவலிங்கம், சரவணன், போக்குவரத்து கழக கிளை மேலாளர்கள் பத்மகுமார், தெய்வேந்திரன், பாலமுருகன், தமிழ்மாறன், ரவி, இருளப்பன் உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
அரபிக்கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று காலை மழை சற்று ஓய்ந்து இருந்த நிலையில் மாலையில் பல்வேறு இடங்களில் பரவலாக லேசான முதல் மிதமான மழை பெய்தது.
ராமநாதபுரம் நகர், பரமக்குடி, கமுதி, திருவாடானை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நள்ளிரவு முதல் இன்று காலை வரை விடிய, விடிய மழை பெய்தது.
இதனால் தாழ்வான பகுதியில் தண்ணீர் தேங்கியது. சில இடங்களில் இடியுடன் மழை பெய்ததால் மின்தடை ஏற்பட்டது.
ராமேசுவரத்தில் நள்ளிரவு 2 மணி முதல் இன்று காலை வரை பலத்த மழை பெய்தது. பாம்பன், மண்டபம், தங்கச்சிமடம், தனுஷ்கோடி ஆகிய பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
காளையார்கோவில், காரைக்குடி, கல்லல், திருப்பத்தூர், தேவகோட்டை, இளையான்குடி, மானாமதுரை ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இன்று காலையில் மாவட்டத்தின் பல பகுதிகளில் லேசான சாரல் மழை இருந்தது.
மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
திருப்புவனம்- 148.6
தேவகோட்டை- 2.2
காளையார்கோவில்- 9.8
சிங்கம்புணரி- 13.6
விருதுநகர் மாவட்டத்தில் போதிய மழை இல்லாத போதிலும் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி உள்ள ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் அந்த பகுதிகளில் உள்ள 100-க்கும் மேற்பட்ட நீர்நிலைகளில் 75 சதவீதத்துக்கும் மேல் தண்ணீர் நிரம்பி உள்ளது.
ராஜபாளையத்தில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை விடிய, விடிய மழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த மழை காரணமாக அய்யனார்கோவில் ஆறு, முள்ளி ஆறு, பேயனாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூரில் லேசான மழை இருந்தது.
மாவட்டத்தின் உள்பகுதிகளான விருதுநகர், சிவகாசி, சாத்தூர், அருப்புக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் போதிய மழை இல்லாததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
மதுரை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மழை இல்லாத நிலையில் நேற்று மதியம் முதல் ஆங்காங்கே லேசான முதல் மிதமான மழை பெய்தது. நேற்று நள்ளிரவு 1 மணி முதல் இடியுடன் பலத்த மழை பெய்தது. வாடிப்பட்டி, சமயநல்லூர், சோழவந்தான், மேலூர், நாகமலை புதுக்கோட்டை, அலங்காநல்லூர், பாலமேடு, குமாரம், ஆண்டிப்பட்டி, திருமங்கலம், விரகனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் சில இடங்களில் மின்தடையும் ஏற்பட்டது.
மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கியது. இன்று காலையில் சில இடங்களில் மழை பெய்தது. வானம் மேகமூட்டமாக காணப்படுகிறது.
மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
உசிலம்பட்டி- 26.20
மதுரை தெற்கு- 40.30
விரகனூர்- 110.50
விமான நிலையம்- 21.20
இடையபட்டி- 57.20
புலிப்பட்டி- 8.40
சோழவந்தான்- 30.10
கள்ளிக்குடி- 12.20
மாவட்டத்தில் நேற்று முதல் இன்று காலை வரை 853.70 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
அரபிக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் அனைத்து மாவட்டங்களிலும் மழை நீடித்து வருகிறது.
தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட சில மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு பின்னர் அது வாபஸ் பெறப்பட்டது. இருப்பினும் அந்த மாவட்டங்களில் நேற்று மழை நீடித்தது.
ராமேசுவரத்தில் நேற்று இரவு 8 மணிக்கு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ததால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
ராமநாதசுவாமி கோவில் அருகே உள்ள வடக்கு மற்றும் கிழக்கு வீதிகளில் தண்ணீருடன் சேர்ந்த கழிவுநீர் கோபுரவாசல் வழியாக கோவிலுக்குள் புகுந்தது. இதனால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து தெரிந்ததும் ஊழியர்கள் விரைந்து செயல்பட்டு மழைநீரை அகற்றினர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் இன்று காலை 7 மணி வரை 457.80 மில்லி மீட்டர் மழை பெய்ததாக பதிவாகி உள்ளது.
கேரளாவை யொட்டியுள்ள லட்சத்தீவு பகுதியில் ஏற்பட்டுள்ள வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகம் முழுவதும் நேற்று முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.
வளிமண்டல சுழற்சி காரணமாக நேற்று முன்தினம் முதல் மதுரை நகரில் பரவலாக மழை பெய்து வருகிறது. மாலை நேரங்களில் சாரல் மழையும் பெய்து வருவதால் தண்ணீர் சாலைகளில் தேங்கி குளம் போல் காட்சி அளிக்கிறது.
நேற்று இரவு முதல் இன்று காலை வரை மதுரை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக சோழ வந்தானில் 53.10 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.
ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, திருவாடானை, சாயல்குடி, திருத்தங்கல், மண்டபம் உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் தொடர் மழை காரணமாக நேற்று இரவு முதல் சாரல் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ராமநாதபுரம் நகரில் சாலையில் மழை நீர் தேங்கியது. சில இடங்களில் மின் தடையும் ஏற்பட்டது. காலையில் பெய்த மழையால் பள்ளி மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்வோர் சிரமப்பட்டனர்.
ராமேசுவரத்தில் விடிய விடிய மழை பெய்தது. இதனால் ராமநாதசாமி கோவில் பிரகாரத்தில் மழை நீர் தேங்கியது. மழை காரணமாக சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்தது. ராமேசுவரத்தில் நேற்று இரவு மின் தடை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.
பலத்த காற்றுடன் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால், ராமேசுவரம், மண்டபம், பாம்பன் பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. காற்று காரணமாக பாம்பன் பாலத்தில் ரெயில் குறைந்த அளவு வேகத்தில் இயக்கப்பட்டது.
சிவகங்கை மாவட்டத் திலும் நல்ல மழை பெய்து வருகிறது. காரைக்குடி, தேவகோட்டை, கல்லல், காளையார்கோவில், மானாமதுரை ஆகிய பகுதிகளில் மழை காரணமாக கண்மாய் ஏரிகளுக்கு நீர் வரத்து ஏற்பட்டுள்ளது. இன்று காலையும் மழை தொடர்வதால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் அய்யனார் கோவில் ஆறு, முள்ளி ஆறு, பேயனாறுகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக 6-வது மைல் குடிநீர் தேக்க ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
ஸ்ரீவில்லிபத்தூர், சிவகாசி, சாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.
மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக தொடர் மழை பெய்து வருவதால் நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து ஏற்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கண்மாய், ஏரிகளில் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவை தொடர்ந்து நேற்று இரவே தமிழகம் முழுவதும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன. ஒரு சில கடைகள் மட்டுமே திறந்திருந்தன.
பஸ்கள் ஓடாததால் வெளியூரில் இருந்து உள்ளூர் திரும்பியவர்களும் அவதிப்பட்டனர். பஸ் போக்குவரத்து நேற்று இரவு 7 மணி முதல் படிப்படியாக நிறுத்தப்பட்டது. இன்று காலை பஸ் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது.
சிவகங்கை நகரில் இன்று அனைத்து கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. சிவகங்கை பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. அரசு பஸ்கள், ஆட்டோக்கள் இயக்கப்படவில்லை.
அரண்மனை ரோடு, நேரு பஜார், தினசரி மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் வெறிச்சோடியது. இதே போல் காரைக்குடி, திருப்பத்தூர், காளையார் கோவில், தேவகோட்டை, கல்லல், சருகணி, மானாமதுரை, இளையாங் குடி, திருப்புவனம், சிங்கம்புணரி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது. வெளியூர்களுக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை.
கருணாநிதி மறைவையொட்டி இன்று மாலை சிவகங்கை நகரில் அனைத்து கட்சி சார்பில் மவுன அஞ்சலி ஊர்வலம் நடைபெறுகிறது.
மாவட்டம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பஸ்நிலையம், முக்கிய பகுதிகளில் போலீசார் ரோந்து சுற்றி வந்தனர்.
ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் இன்று அரசு மற்றும் தனியார் பஸ்கள் எதுவும் ஓடவில்லை.
இதேபோல் 3 மாவட்டங்களிலும் கடைகள் எதுவும் திறக்கப்படவில்லை. சிறு சிறு டீக்கடைகள் கூட ஒன்றிரண்டே ஆங்காங்கே திறந்திருந்தன. ஓட்டல்கள் அனைத்தும் மூடப்பட்டே இருந்தன.
இதன் காரணமாக எப்போதும் பரபரப்பாக காணப்படும் கடை வீதிகள் இன்று வெறிச்சோடி காணப்பட்டன. இதனால் வீதிகளில் தங்கி இருந்த மக்கள் பெரும் சங்கடத்திற்கு ஆளானார்கள்.
விருதுநகர் மாவட்டத்தின் முக்கிய வீதிகளில் கருணாநிதிக்கு இரங்கல் தெரிவித்து பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன. ராமநாதபுரம், சிவகங்கை நகர சாலைகளிலும் ஆங்காங்கே கருணாநிதி படம் வைக்கப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் புதன்கிழமை நடக்கும் சந்தை இன்று ரத்து செய்யப்பட்டது. இன்று வெளிநாடுகளுக்கு செல்ல திட்டமிட்டிருந்தவர்கள் நேற்று இரவே ரெயில் மற்றும் பஸ்கள் மூலம் மதுரை, திருச்சி விமான நிலையங்களுக்கு சென்று விட்டனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம் பிரகாஷ்மீனா தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். #Karunanidhideath #Karunanithi #DMK
ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதிகளில் இருந்து மன்னார் வளைகுடா கடல் வழியாக இலங்கைக்கு கள்ளத்தோணியில் கடல் அட்டைகள் கடத்த இருப்பதாக ராமநாதபுரம் கடலோர காவல் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது
இதனையடுத்து மண்டபம் கடலோர காவல் படை உதவி ஆய்வாளர் ராஜ்குமார் தலைமையில் அதிகாரிகள் இன்று கடலோர பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டனர்.
உச்சிப்புளி தோப்பு வலசை பகுதியில் அவர்கள் சென்றபோது ஒரு நாட்டுப்படகில் இருந்து சிலர் கடலில் குதித்து தப்பினர்.
இதனை தொடர்ந்து படகை சோதனை செய்த போது அதில் 58 மூடைகளில் 600 கிலோ தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் மறைத்து வைத்து இருந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து நாட்டு படகையும், கடல் அட்டைகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். கடல் அட்டைகள் இலங்கைக்கு கடத்த இருந்தது விசாரணையில் தெரியவந்தது. அதனை கடத்த முயன்றவர்கள் யார்? தப்பி ஓடியது யார்? என தனிப்படை அமைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகளின் சர்வதேச மதிப்பு சுமார் ரூ.10 லட்சம் ஆகும்.
கடந்த சில மாதங்களாக பாக்ஜலசந்தி மற்றும் மன்னார்வளைகுடர் கடல் பிராந்தியங்கள் வழியாக ராமநாதபுரம் கடலோர பகுதிகளில் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள், போதைப் பொருட்கள் 24 மணி நேர தீவிர கண்காணிப்பையும் மீறி இலங்கைக்கு கடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
ராமநாதபுரம் வெளிபட்டினம் பகுதியில் அமைந்துள்ளது திரவுபதி அம்மன் திருக்கோவில். இந்த கோவிலை சுற்றி உள்ள பகுதியில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக பலர் குடியிருந்து வருகின்றனர். இந்த நிலையில் கோவிலை சுற்றி உள்ள பகுதி நீர்நிலை புறம்போக்கு பகுதி என்று அந்த இடத்தை காலி செய்ய நகரசபை அதிகாரிகள் உத்தரவிட்டனர். கோர்ட்டு உத்தரவின்படி நீர்நிலை புறம்போக்கு பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுஉள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதன்படி நேற்று காலை ஆக்கிரமிப்புகளை அகற்ற நகரசபை அதிகாரிகள் போலீசாருடன் வந்தனர். இதற்கு அப்பகுதியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளையும், ஜே.சி.பி. எந்திரத்தையும் முற்றுகையிட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ள வீடுகளில் குடியிருப்பவர்கள் உடனடியாக காலி செய்ய அவகாசம் வழங்கிய அதிகாரிகள் திங்கட்கிழமை மீண்டும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்று அறிவித்து சென்றனர்.
இந்த பகுதியில் குடியிருப்பவர்கள் கோவில் நிலத்தில் கோவிலுக்கு வாடகை செலுத்தி முறையாக குடியிருந்து வருவதாகவும், சிலர் தங்களுக்கு சொந்தமான இடம் என்றும் தெரிவித்து வாதிட்டனர். அதற்கு நகரசபை அதிகாரிகள், அலுவலக பதிவேடுகளின்படி மேற்கண்ட இடங்கள் ஊருணி நீர்நிலை புறம்போக்கு பகுதி என்று இருப்பதால் மாவட்ட கலெக்டர் உத்தரவின்படி ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர்நிலைகளை மீட்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தனர்.
ராமநாதபுரம்:
டாஸ்மாக் ஊழியர்களின் பணிவரன்முறை, காலமுறை ஊதியம், மாற்றுப்பணி உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை நடப்பு சட்டமன்ற கூட்டத் தொடரில் நிறைவேற்றி அறிவித்திட வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ராமநாதபுரம் அரண்மனை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யூ. டாஸ்மாக் பிரிவு மாவட்ட செயலாளர் தனுஷ்கோடி தலைமை வகித்தார். எல்.பி.எப். மாவட்ட செயலாளர் ராஜா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.
எஸ்சி,எஸ்டி. பிரிவு மாவட்ட செயலாளர் செல்வக்குமார், மாவட்ட தலைவர் சோமசுந்தரம், மின்வாரிய தொழிலாளர் முன்னேற்ற சங்க மாநில துணை பொதுச் செயலாளர் மோகன், சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் சிவாஜி, துணை தலைவர் குருவேல் உள்பட பலர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் அருகே உள்ள தெக்கூர் கிராமத்தைச் சேர்ந்த பொன்னுக் கிளி மகன் சிவா என்ற சிவக் குமார் (வயது 22).
இவர் இன்று காலை அங்குள்ள கடைக்குச் சென்று பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த முனியாண்டி மகன் வைத்தீஸ்வரன் (20) மோட் டார் சைக்கிளில் வந்தார்.
அவர், சிவாவுடன் வாக்குவாதம் செய்தார். திடீரென தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து சிவாவின் கழுத்தை அறுத்துவிட்டு தப்பி ஓடிவிட்டார்.
ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்த சிவா சம்பவ இடத்திலேயே பரிதாபமா இறந்தார்.
இது குறித்த தகவல் கிடைத்ததும் கேணிக்கரை போலீசார் விரைந்து சென்று உடலைக் கைப் பற்றி விசாரணை நடத் தினர். கொலையான சிவாவும், வைத்தீஸ்வரனும் உறவினர்கள் தான். எனவே முன் விரோத தகராறில் கொலை நடந்திருக்கலாமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்