search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 113362"

    • சத்தியபிரியா 2-வதாக கருவுற்றதாக தெரிகிறது.
    • கரு வளர்ச்சி குறைவாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது

    கோவை,

    கோவை பெத்தநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் சரத்குமார். இவரது மனைவி சத்தியபிரியா(24). இவர்களுக்கு திருமணமாகி 3 வருடம் ஆகிறது. இந்த தம்பதிக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது.இந்த நிலையில் சத்தியபிரியா 2-வதாக கருவுற்றதாக தெரிகிறது.

    இதையடுத்து, கணவன் மனைவி 2 பேரும் டாக்டரிடம் சிகிச்சைக்கு சென்றனர். அப்போது கரு வளர்ச்சி குறைவாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் சத்தியபிரியா கடந்த சில நாட்களாகவே மனவேதனையுடன் காணப்பட்டார்.

    சம்பவத்தன்று வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் வீட்டில் தூக்கில் தொங்கினார். இதை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இதுகுறித்து கோவில்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காரமடை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    • மாணவர்களிடமிருந்து இருந்து 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    கோவை,

    மேட்டுப்பாளையம் காரமடை அருகே பெரியபுத்தூரில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவல் அறிந்த காரமடை போலீசார் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது காரமடை, பெரியபுத்தூர் பகுதியில் 2 வாலிபர்கள் சந்தேகத்திற்கி டமாக நின்றிருந்தனர். அவர்களை போலீசார் பிடித்து சோதனை செய்தனர். அப்போது அவர்களிடம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த வாலிபர்களை பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் கெம்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த பூபதி (வயது20), சந்தோஷ்குமார் (20) என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    இதேபோல் பெரியநாயக்கன்பாளையம் எல்.எம்.டபிள்யூ பிரிவு பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததாக ஒத்தகால் மண்டபம் மயிலேரிபாளையத்தை சேர்ந்த சூரியா (19) மற்றும் பெரியநாயக்கன்பாளையம் எல்.எம்.டபிள்யூ பிரிவு பகுதியை சேர்ந்த முத்துகுமார் (21) கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 400 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • மனைவி இறந்ததை நினைத்து மன வேதனை அடைந்து வந்தார்.
    • இது தொடர்பாக உக்கடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை,

    திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அமந்தகடவை சேர்ந்தவர் முருகன்(49). கூலி தொழிலாளி. இவருக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். அவர்கள் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த ஆண்டு அவரது மனைவி இறந்து விட்டார். முருகன் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார். இவர் கடந்த 5 ஆண்டுகளாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

    அதற்காக அடிக்கடி கோவை வந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதேபோல், நேற்று முன்தினம் முருகன் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக கோவை வந்தார். தெற்கு உக்கடம் சிஎம்சி காலனியில் உள்ள தனது உறவினர் மாரிசாமி என்பவரது வீட்டில் தங்கினார்.

    இதற்கிடையே நேற்று முன்தினம் முருகன் மனைவியின் முதலாவது ஆண்டு நினைவு தினம் என்பதால், தனது மனைவியை நினைத்து மன வேதனை அடைந்துள்ளார். அவரது இறப்பை தாங்கி கொள்ள முடியாமல் அழுது புலம்பியுள்ளார். மேலும் தனது உறவினரான பழனிசாமி என்பவரிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசி உள்ளார். அப்போது ''எனது மனைவி இறந்து ஓராண்டு ஆகி விட்டது. அவரது நினைவை என்னால் மறக்க முடியவில்லை, அவரது நினைவு நாளில் நானும் அவருடன் செல்கிறேன்'' என உருக்கமாக தெரிவித்துள்ளார். அவரது உறவினரும் அவரை தேற்றியுள்ளார்.

    இருப்பினும் மனைவியின் நினைவு வாட்டியதால் வாழ்க்கையில் விரக்தியடைந்த முருகன் உறவினரது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த உக்கடம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது தொடர்பாக உக்கடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவியின் முதலாவது ஆண்டு நினைவு நாளில் கூலி தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவரது உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • மேட்டுப்பாளையம் நகராட்சியில் மொத்தமாக 33 வார்டுகள் உள்ளன.
    • பவானி ஆறு மாசடைந்து வருவதால் தூய்மையான குடிநீர் வழங்க வேண்டும்.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார்பாடி நேரில் ஆய்வு செய்தார்.

    மேட்டுப்பாளையம் நகராட்சியில் மொத்தமாக 33 வார்டுகள் உள்ளன. இப்பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு குடிநீரானது பவானி ஆற்றில் இருந்து எடுத்து வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக பவானி ஆறு மாசடைந்து வருவதால் தூய்மையான குடிநீர் வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

    மக்களின் தொடர் கோரிக்கையை அடுத்து கடந்த சட்டசபை கூட்டத்தொடரின் போது உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு இத்திட்டத்திற்காக ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்து அறிவித்தார். இதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு அரசின் மூலமாக குழுவினர் திட்ட மதிப்பீடு செய்து அந்த அறிக்கையினை நகராட்சி நிர்வாக இயக்குனருக்கு சமர்ப்பித்துள்ளனர்.

    மேலும் இப்பகுதியில் அமைய உள்ள புதிய நீரேற்று நிலையம் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்வதற்காக 3.5 ஏக்கரில் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த இடத்தினை நேற்று கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார்பாடி நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது இத்திட்டத்தை செயல்படுத்துவது குறித்து நகராட்சி ஆணையர் வினோத்திடம் கேட்ட றிந்தார்.

    பின்னர் சத்தியமூர்த்தி நகர் சாலையில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் மற்றும் திருப்பூர் மாநகராட்சி குடிநீர் திட்டப்பணி களுக்காக தோண்டப்பட்ட குழிகளால் பழுதடைந்த சாலையினையும் பார்வை யிட்டார். அப்போது மக்களின் குறைகளை கேட்டறிந்து இன்னும் ஒரு வார காலத்திற்குள் சாலையை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். பின்னர் மேட்டுப்பாளையம் நகராட்சி சார்பில் மணி நகரில் கலைஞர் நகர்புறம் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 87 லட்சத்து 39 மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய அறிவு சார் மைய கட்டிட கட்டுமான பணிகளையும் ஆய்வுபார்வையிட்டார்.

    ஆய்வின் போது மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் மாலதி, நகர் மன்றத்தலைவர் மெஹரீபா பர்வீன், துணைத்தலைவர் அருள்வடிவு, நகராட்சி ஆணையர் வினோத் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

    • 29 சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் இன்று முதல் உயர்ந்துள்ளது.
    • இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100க்கும் மேற்பட்டவர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

    நீலாம்பூர்,

    தமிழகத்தில் 29 சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் இன்று முதல் உயர்ந்துள்ளது. இந்த கட்டண உயர்வு நள்ளிரவு 12 மணி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடந்து வருகிறது.

    கோவை மாவட்டம் சூலூர் கணியூர் சோதனை சாவடியில் சுங்க கட்டண உயர்வை கண்டித்து கோவை லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கோவை, திருப்பூர் மாவட்டத்தைச் சார்ந்த லாரி உரிமையாளர்கள் மற்றும் மினிலா அறிவு உரிமையாளர்கள் 100க்கும் மேற்பட்டவர் கணியூர் டோல்கேட் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    மத்திய அரசு உடனடியாக கட்டணத்தை திரும்ப பெற வேண்டும். தொடர்ந்து கட்டண உயர்வை அதிகரித்து வரும் மத்திய அரசு பொதுமக்கள் மற்றும் லாரி உரிமையாளர்களை பேணி காக்க வேண்டும் எனவும் கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர்.

    லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் முருகேசன் பேசும்போது, ஐந்திலிருந்து 25 சதவீதம் அளவிற்கு இந்த கட்டணம் உயர்ந்துள்ளது.

    இந்த கட்டணம் உயர்ந்துள்ளதால் லாரி தொழில் செய்பவ ர்கள் மிகுந்த அளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். உடனடியாக இதனை திரும்ப பெற வேண்டும் உரிமையாளர்களுக்கு நல வாரியம் அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

    • கோஷ்டி மோதலில் புவனேஸ்வரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
    • கல்லூரி மாணவர் சந்தோஷ்குமார், சஞ்சய் ஆகியோர் காயம் அடைந்தனர்.

    பீளமேடு,

    கோவை ஆர்.ஜி.புதுரை சேர்ந்தவர் புவனேஸ்வரன்(23). இவருக்கும் அதே பகுதியை வாலிபர்கள் சிலருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இரு தரப்பினரும் அடிக்கடி மோதலில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று அந்த கும்பல், புவனே ஸ்வரனிடம் பேச வேண்டும் என கூறி சின்னியம்பாளையத்துக்கு அழைத்துள்ளனர். அதன்படி அவரும் தனது நண்பர்களுடன் அங்கு சென்றார்.

    அப்போது அங்கு 6 பேர் நின்றிருந்தனர். அவர்கள் அனைவரும் நின்று பேசி கொண்டிருந்தனர். அப்போது ஒரு வாலிபர் மற்றொரு வாலிபரின் தாயாரை தகாத வார்த்தைகளால் பேசி திட்டி உள்ளார்.

    இதனால் அவர்களுக்கிடையே அடிதடி ஏற்பட்டது. மேலும் இது கோஷ்டி மோதலாக மாறி ஒருவரையொருவர் தாக்கி உள்ளனர். வாக்குவாதம் முற்றவே 6 பேர் கும்பல் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து புவனேஸ்வரன் மற்றும் அவரது நண்பர்களை குத்தினர்.

    இதில் பலத்த காயம் அடைந்த புவனேஸ்வரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கல்லூரி மாணவர் சந்தோஷ்குமார் (22), சஞ்சய் ஆகியோர் காயம் அடைந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கல்லூரி மாணவரை குத்தி கொன்றது அதே பகுதியை சேர்ந்த ஜெகத்தரி, சாந்தகுமார், பாலாஜி, தினேஷ், சதீஷ், மாதவன், உள்பட 6 பேர் என்பது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் மாதவன் உள்பட 2 பேர் கைது செய்தனர். தப்பியோடிய மற்ற 4 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள். கோவையில் கோஷ்டி மோதலில் வாலிபர் கத்தியால் குத்தி கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    • சதாம் உசேன், அந்த பெண்ணுடன் உள்ள உறவை கைவிட்டு விடுமாறு முகமது ஆசாத்தை கண்டித்துள்ளார்.
    • உக்கடம் போலீசர் 3 பேரை கைது செய்தனர்.

    கோவை,

    கோவை கரும்புக்கடை ஆசாத் நகரை சேர்ந்தவர் சதாம் உசேன்(வயது 29).

    இவர் காந்திபுரத்தில் உள்ள செல்போன் கடையில் வேலை பார்த்து வருகிறார். இவரது நண்பரின் உறவுக்கார இளம்பெண் ஒருவருக்கும், கரும்புக்கடை அண்ணா காலனியை சேர்ந்த முகமத் ஆசாத்(28) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்தது.

    இந்த விவகாரத்தை அறிந்த சதாம் ஹூசைன், அந்த பெண்ணுடன் உள்ள உறவை கைவிட்டு விடுமாறு முகமது ஆசாத்தை கண்டித்துள்ளார்.

    ஆனால் அவர் அந்த இளம்பெண்ணுடனான தொடர்பை தொடர்ந்து வந்தார். இதன் காரணமாக இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

    சம்பவத்தன்று சதாம் உசேன் உக்கடம் -சுங்கம் பைபாஸ் ரோட்டில் உள்ள ஒரு பேக்கரி அருகே நின்று கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு காரில் முகமத் ஆசாத் உட்பட 3 பேர் வந்தனர். அவர்கள் மீண்டும் சதாம் உசேனிடம் தகராறில் ஈடுபட்டனர்.

    இதில் வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த 3 பேரும் சேர்ந்து தகாத வார்த்தைகளால் பேசி சதாம் உசேனை தாக்கினர். பின்னர் அவரை மிரட்டி விட்டு சென்றனர்.

    இது குறித்து அவர் உக்கடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து சதாம் உசேனை தாக்கிய கரும்புக்கடை அண்ணா காலனியை சேர்ந்த ஏசி மெக்கானிக் முகமத் ஆசாத்(28), போத்தனூர் நஞ்சுண்டாபுரம் ரோட்டை சேர்ந்த லியோ ஜோசப்(32), குறிச்சி பிரிவை சேர்ந்த சுரேஷ் கிருஷ்ணா(32) ஆகிய 3 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • கணவன்-மனைவி இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
    • வாழ்க்கையில் விரக்தியடைந்த ஞானப்பிரகாஷ் கடந்த சில நாட்களாகவே யாருடனும் பேசாமல் இருந்து வந்தார்.

    குனியமுத்தூர்,

    கோவை குனியமுத்துரை அடுத்த சுகுணாபுரம் கிழக்கு பகுதியை சேர்ந்தவர் ஞானப்பிரகாஷ்(39).

    இவர் ஒப்பணக்கார வீதியில் உள்ள ஜவுளி கடையில் சமையல் வேலை செய்து வருகிறார். கடந்த 2011-ம் ஆண்டு இதே கடையில் வேலை செய்து வரும் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த ஜெயந்தி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 10 வயதில் ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

    பலமுறை ஞானப்பிரகாஷ் தனது மனைவியை தன்னுடன் வாழ வருமாறு அழைத்தும் அவர் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால்

    இந்த நிலையில் சம்பவத்தன்று மாலை இவரது வீட்டின் உரிம யாளர், இவரை காண்பதற்கு வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டிற்குள் ஞானபிரகாஷ் தூக்கில் தொங்கி கொண்டிருப்பதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தார்.

    உடனே அவரது பெற்றோர் மற்றும் அண்ணன் பிளாரன்ஸ் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தார். மேலும் குனியமுத்தூர் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார்.

    போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஞானபிரகாஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • டாஸ்மாக்கடை அருகே குடிபோதையில் தகராறு செய்து கொண்டிருந்தனர்.
    • போலீஸ்காரர் ஒருவர் கண்டித்ததால் அவரையும் தாக்கினர்.

    கோவை,

    கோவை ரத்தினபுரி போலீசார் சம்பவத்தன்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    சங்கனூரில் உள்ள ஒரு டாஸ்மாக் கடை அருகே சென்றபோது சில வாலிபர்கள் அங்கு குடிபோதையில் தகராறு செய்து கொண்டிருந்தனர்.

    போலீசார் அவர்களை எச்சரித்து அங்கிருந்து செல்லுமாறு கூறி விட்டு புறப்பட்டு சென்றனர்.

    பின்னர் சிறிது நேரத்துக்கு பின் போலீசார் அதே பகுதிக்கு ரோந்து வந்தனர். அப்போது முன்பு நின்றிருந்த அதே வாலிபர்கள் மீண்டும் குடிபோதையில் தகராறு செய்து கொண்டிருந்தனர்.

    இதனை போலீஸ்காரர் ஒருவர் கண்டித்தார். இதில் ஆத்திரமடைந்த குடிபோதை ஆசாமிகள் 2 பேர் தகாத வார்த்தைகளால் பேசி அவரை கீழே தள்ளி தாக்கினர்.

    இது குறித்து ரத்தினபுரி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில், மிரட்டல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

    அதில், குடிபோதையில் போலீசாரை தாக்கியது சிவானந்தா காலனியை சேர்ந்த பெயிண்டர் மணி(27), மற்றும் அவரது தம்பி விஷ்ணு(23), ஆகியோர் என்பது தெரியவந்தது. போலீசார் இருவரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • சமையல் எண்ைணயை மறுசுழற்சி செய்து பயோ டீசலாகவோ, லூப்ரிகண்டாகவோ பயன்படுத்தும் திட்டம்.
    • பொது நிகழ்வுகளில் கைப்படாத உணவு உபரியாக இருப்பின் 9087790877 என்ற எண்ணில் அழைத்து தகவல் தெரிவிக்கலாம்.

    கோவை,

    கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறையின் சார்பில் மாவட்ட அளவிலான ஆலோசனை கூட்டம் கலெக்டர் கிராந்திகுமார் பாடி தலைமையில் நடந்தது.

    பின்னர் கலெக்டர் கூறியதாவது:-

    சுந்தராபுரம், வடவள்ளி உழவர் சந்தைகளுக்கு சுத்தமான காய்கறி, பழச்சந்தை சான்று பெறப்பட்டுள்ளது.

    இதுதவிர ஆர்.எஸ்.புரம், சிங்காநல்லூர், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, சூலூர், குறிச்சி உழவர் சந்தைகள் இதேபோன்று சான்று பெற நடவடிக்கை எடுக்க வேளாண் வணிக துணை இயக்குனருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    உணவகங்கள், ஓட்டல்கள், இனிப்பு, கார வகை தயாரிப்பாளர்கள், தொழிற்சாலை கேண்டீன்களில் உணவு பொருட்களை தயாரிக்கும் போது சில இடங்களில் சமையல் எண்ணையை பலமுறை தொடர்ந்து பயன்படுத்துகின்றனர்.

    இதனால் உணவு செரிமான தன்மை குறைவு, கெட்ட கொழுப்பு, குடல் பாதிப்புகள் போன்ற உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

    எனவே உபயோகித்த சமையல் எண்ணை உணவு பாதுகாப்பு துறையின் அங்கீகாரம் பெற்ற நிறுவனங்கள் மூலம் பெற்று மறுசுழற்சி செய்து பயோ டீசலாகவோ, லூப்ரிகண்டாகவோ பயன்படுத்தும் திட்டம் கோவையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த திட்டத்தின் மூலம் நடப்பு நிதியாண்டில் 2022 ஏப்ரல் 2023 பிப்ரவரி வரை 3.79 லட்சம் லிட்டர் உபயோகப்படுத்தப்பட்ட சமையல் எண்ணை பெறப்பட்டுள்ளது.

    இத்திட்டத்துக்கு பதிவு செய்து வழங்க அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் முகவர்களை தொடர்பு கொள்ளலாம். உபரி உணவை வீணாக்காமல் பகிர்வோர் திட்டம், நோ புட் வேஸ்ட் என்ற தன்னார்வ அமைப்பின் உதவியுடன் கோவையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    எனவே திருமண விழாக்கள் உள்ளிட்ட வீட்டு விஷேசங்கள், பொது நிகழ்வுகளில் கைப்படாத உணவு உபரியாக இருப்பின் 9087790877 என்ற எண்ணில் அழைத்து தகவல் தெரிவிக்கலாம்.

    தரம் குறைவான உணவு, கலப்பட டீத்தூள், கலப்பட எண்ணை, அளவுக்கு அதிகமான செயற்கை வண்ணம் கலந்த உணவுகள், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் போன்றவற்றை விற்பனை செய்வது தெரிந்தால் பொதுமக்கள் 94440 42322 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த கூட்டத்தில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் தமிழ்செல்வன், ஓட்டல், பேக்கரி உரிமையாளர்கள், சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வடகோவை-கோவை ரெயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது.
    • ஏப்ரல் 2, 3, 4, 7, 8, 9 ஆகிய தேதிகளில் ரெயில் ரத்து.

    கோவை,

    கோவை-மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்படும் 2 ரெயில்கள் 6 நாட்களுக்கு முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக சேலம் கோட்ட ரெயில்வே அலுவலகம் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வடகோவை-கோவை ரெயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளதால் கோவையில் இருந்து ஏப்ரல் 2, 3, 4, 7, 8, 9 ஆகிய தேதிகளில் பிற்பகல் 3.45 மணிக்கு மேட்டுப்பாளையம் புறப்பட்டு செல்லும் ரெயில் (எண்.06816) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

    மேலும் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஏப்ரல் 2,3,4,7,8,9 ஆகிய தேதிகளில் மாலை 4.45 மணிக்கு கோவை புறப்பட்டு ரெயில்(எண்:06817) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

    வருகிற 4-ந் தேதி பிற்பகல் 3.42 மணிக்கு கோவை வர வேண்டிய, பிலாஸ்பூர்-எர்ணாகுளம் இடையிலான வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில்(எ ண்:22815) கோவைக்கு பதில் இருகூர்-போத்தனூர் மாற்றுப்பாதையில் இயக்கப்படும்.

    இந்த ரெயில் போத்தனூருக்கு பிற்பகல் 3.42 மணிக்கு வந்தடைந்து, பிற்பகல் 3.45 மணிக்கு புறப்பட்டு செல்லும்.

    திருச்சி பாலக்காடு நகரம் இடையிலான தினசரி ரெயில்(எண்:16843) ஏப்ரல் 2, 3, 4, 7, 8, 9 ஆகிய தேதிகளில் தேவையான இடத்தில் 15 நிமிடங்கள் நிறுத்தி வைத்து இயக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    சேலம் கோட்ட ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள மற்றொரு செய்திகுறிப்பில், கோவை-திருப்பூர் வழித்தடத்தில் பல்வேறு இடங்களில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டி இருப்பதால் கோவையில் இருந்து காலை 9.05 மணிக்கு சேலம் புறப்பட்டு செல்லும் மெமு ரெயில்(எண்:06802) இன்று முதல் வருகிற 30-ந் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மலை ெரயிலை யுனெஸ்கோ நிறுவனம் கடந்த 2005-ம் ஆண்டு உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்தது.
    • சிறப்பு மலை ரெயிலை இயக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு தினசரி நீலகிரி மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

    மலை ரெயிலில் தமிழகம் மட்டுமல்லாது கர்நாடகா, கேரளா உள்ளிட்ட உள்நாடுகள் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணம் செய்து மலைப்பகுதியில் உள்ள இயற்கை எழில் காட்சிகளை கண்டு ரசித்து வருகின்றனர்.

    123 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த மலை ெரயிலை யுனெஸ்கோ நிறுவனம் கடந்த 2005-ம் ஆண்டு உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்தது.

    இயற்கை எழில் கொஞ்சும் மலைகளை தாண்டி, இதமான சூழலில் மலை முகடுகளிடையே பல்வேறு குகைகளை தாண்டி, சிற்றருவிகளை ரசித்துக்கொண்டே இம்மலை ெரயிலில் பயணம் செய்ய சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகை தருவர்.இந்த நிலையில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதாலும், மலை ரெயிலில் பயணம் செய்ய வரும் சுற்றுலா பயணிகளில் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது.

    மேலும்,ஊட்டியில் தற்போது குளுகுளு சீசன் துவங்கியுள்ளதாலும், கல்வி நிறுவனங்களுக்கு கோடை விடுமுறை அளிக்க உள்ளதாலும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுகிறது.

    மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு காலை 7.10 மணிக்கு செல்லும் மலை ரெயிலில் பயணம் செய்ய சீட்டு கிடைக்காதவர்கள் தினசரி ஏமாற்றத்துடன் திரும்பி சென்று வருகின்றனர்.

    மேலும், மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே கோடை கால சிறப்பு மலை ரெயிலை இயக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் ெரயில்வே நிர்வாகத்திற்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதனை கருத்தில் கொண்டு மேட்டுப்பாளையம் - ஊட்டி இடையே சிறப்பு மலை ெரயிலை இயக்க ெரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

    இதனைத்தொடர்ந்து மேட்டுப்பாளையத்தில் இருந்து வருகிற 15-ந் தேதி முதல் ஜூன்.24-ந் தேதி வரை 11 ட்ரிப் சனிக்கிழமைகளிலும், மறுமார்க்கமாக ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு வருகிற ஏப்.16 முதல் ஜூன்.25-ந் தேதி வரை 11 ஞாயிற்றுக்கிழமைகளிலும் சிறப்பு மலை ரெயில் இயக்கப்பட உள்ளது.மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு காலை 9.10 மணிக்கு புறப்பட்டு செல்லும் இந்த சிறப்பு மலை ெரயில் மதியம் 2.25 மணிக்கு ஊட்டியை சென்றடைகிறது. அதே போல் ஊட்டியில் இருந்து காலை 11.25 மணிக்கு புறப்படும் மலை ரெயில் மாலை 4.20 மணிக்கு மேட்டுப்பாளையம் வந்தடைகிறது. இதற்கான அறிவிப்பை தென்னக ெரயில்வே நிர்வாகம் வெளியிட்டு ள்ளது.

    ×