search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 113362"

    • அப்புசாமி லேஅவுட் பகுதியில் உள்ள வீட்டிற்கு பெயிண்டிங் வேலைக்கு சென்றார்.
    • அஜாக்கிரதையாக செயல்பட்ட வீட்டின் உரிமையாளர் மீது வழக்குபதிவு செய்துள்ளனர்.

    கோவை,

    கோவை புலியகுளம் சவுரிபாளையம் ரோடு பகுதியை சேர்ந்தவர் பத்மநாபன்(58). பெயிண்டிங் வேலை செய்து வருகிறார்.

    சம்பவத்தன்று இவர் கோவை அப்புசாமி லேஅவுட் பகுதியில் உள்ள வீட்டிற்கு பெயிண்டிங் வேலைக்கு சென்றார். அப்போது அங்கு ரிமோட் கண்ட்ரோல் மூலம் கட்டுப்படுத்தப்படும் ஒரு இரும்பு கேட்டில் வேலை செய்து கொண்டிருந்தார்.

    அப்போது எதிர்பாராதவிதமாக பத்மநாபன் மீது இரும்பு கேட் விழுந்தது. இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் உடனடியாக மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து அவரது மகன் விஷ்னு கோபால் (28) ராமநாதபுரம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் போலீசார் அஜாக்கிரதையாக செயல்பட்ட வீட்டின் உரிமையாளர் மீது வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • கோவை மாவட்டத்திலும் கொரோனா மற்றும் வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து உள்ளது.
    • ஆஸ்பத்திரியில் ஆங்காங்கே முகக் கவசம் அணிய வேண்டும் என நோட்டீஸ்கள் ஒட்டப்பட்டுள்ளது.

    கோவை,

    தமிழகத்தில் கொரோனா மற்றும் வைரஸ் காய்ச்சல் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்து சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    கோவை மாவட்டத்திலும் கொரோனா மற்றும் வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து உள்ளது. இதனால் காய்ச்சல் பாதிப்பு காரணமாக அரசு ஆஸ்பத்திரிகளுக்கு சிகிச்சைக்கு வருவோர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.

    மேலும் காய்ச்சல் பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளை கண்டறிந்து முகாம்களும் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு வருபவர்கள் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டார்.

    இதனையடுத்து கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு வரும் அனைவரும் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும். சிகிச்சைக்கு வருபவர்கள் உடன் வருபவர்கள் உள்நோயாளிகள், புறநோயாளிகள் டாக்டர்கள் என அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள் ளது.

    மேலும் ஆஸ்பத்திரியில் ஆங்காங்கே முகக் கவசம் அணிய வேண்டும் என நோட்டீஸ்கள் ஒட்டப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் இன்று காலை கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்த டாக்டர்கள், நோயாளிகள் உள்பட அனைவருமே முக கவசம் அணிந்து வந்திருந்தனர். இருப்பினும் பலர் முக கவசம் அணியாமல் வந்திருந்தனர்.

    ஆனால் அவர்களை காவலாளிகள் நுழைவு வாயிலிலேயே தடுத்து நிறுத்தினர். முக கவசம் அணிந்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்க முடியும் என தெரிவித்தனர்.

    இதையடுத்து பலரும் அருகே இருந்த கடைகளுக்கு சென்று முக கவசங்களை வாங்கி அணிந்து கொண்டு ஆஸ்பத்திரிக்குள் சென்றனர்.

    தொடர்ந்து யாராவது முககவசம் அணியாமல் ஆஸ்பத்திரிக்குள் சுற்றுகிறார்கள் என்பதையும் கண்காணித்து வருகின்றனர்.

    • கஞ்சாவை ஒழிக்க வேண்டும் என்றால், ரவுடியிசத்தை ஒழிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
    • கடந்த சில வாரங்களாக ரவுடிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    கோவை,

    கோவை அரசு கலைக்கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.

    விழாவில் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் உத்தரவுபடி தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரிகளில் போதை பொருள் ஒழிப்பு குழுக்கள் ஆரம்பிக்கப்ப ட்டுள்ளது. அந்த வகையில் இந்த கல்லூரியிலும் போதை பொருள் ஒழிப்பு குழு தொடங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

    கோவை மாநகர போலீஸ் சார்பில் கல்லூரிகளுடன் இணைந்து, போதை பொருளின் தீமை குறித்து விளக்கமாக எடுத்து கூறி வருகிறோம்.

    போதை என்பது எவ்வளவு பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது என்பது அனைவருக்கும் தெரியும். எதிர்கால சமுதாயத்தின் நலன் கருதி நாம் அனைவரும் தற்போது இது குறித்து பேசி வருகிறோம். இதனை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    போதை பொருளாக இருந்தாலும் சரி, ரவுடியிசமாக இருந்தாலும் சரி போலீஸ் பார்த்து கொண்டு இருக்காது. அதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தொடர்ந்து போதை பொருட்களை பயன்படுத்தும் போது, நமது இளமை முற்றிலுமாக பாதிக்கப்படுகிறது. எனவே நீங்களே இந்த பழக்கம் உங்களுக்கு தேவையா என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள். கஞ்சாவை ஒழிக்க வேண்டும் என்றால், ரவுடியிசத்தை ஒழிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

    அதன்படி கோவையில் கடந்த சில வாரங்களாக ரவுடிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். முதலில் ஆண்கள் தான் ரவுடி மற்றும் போதை பழக்கத்தில் இருந்தனர். தற்போது ஒரு சில பெண்களும் ரவுடியிசம் மற்றும் போதை பழக்கத்தில் ஈடுபடுகிறார்கள். இது மிகவும் வருந்ததக்க கூடிய விஷயமாகும்.போதை மற்றும் ரவுடியிசம் என வந்துவிட்டால் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் ஒரே நடவடிக்கை தான். அதில் எந்தவித பாகுபாடும் பார்க்காமல் சட்டம் தன் கடமையை செய்யும்.கோவையில் அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டு கண்காணித்து வருகிறோம். யார் யார் கஞ்சா விற்பனையில் ஈடுபடுகிறார்கள் என்ற விபரமும் சேகரித்து வைத்துள்ளோம்.

    அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

    • புதிதாக மாமன்ற உறுப்பினர் வார்டு மேம்பாடு திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
    • ஒரு புதிய நூலக வளாகம் ரூ.30 லட்சம் மதிப்பில் இயக்கப்படும்.

    கோவை,

    கோவை மாநகராட்சி பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதில் இடம் பெற்ற முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:-

    கோவை மாநகராட்சி கவுன்சிலர்களிடம் அவரவர் வார்டுகளில் உள்ள பொதுமக்கள் பல்வேறு வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் விதமாகவும், மக்களுக்கான வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள புதிதாக மாமன்ற உறுப்பினர் வார்டு மேம்பாடு திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

    இந்த திட்டத்தின் மூலம் ஒவ்வொரு உறுப்பினருக்கு தலா ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ள ப்படும்.

    கோவை மாநகராட்சயில் 17 மேல் நிலைப்பள்ளிகள், 10 உயர் நிலைப்பள்ளிகளில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டு மாணவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். இதற்கு என ரூ.50 லட்சம் மதிப்பில் மாநகராட்சி பள்ளிகளில் சி.சி.டி.வி காமிரா பொருத்தப்படும்.

    மாநகராட்சி மாணவ, மாணவிகளுக்கு சுகாதாரமான சுத்தமான குடிநீர் வழங்கும் விதமாக அனைத்து பள்ளிகளிலும் நவீன குடிநீர் சுத்திகரிப்பு கருவி ரூ.1 கோடியில் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள நவீன சுத்திகரிப்பு கருவிகளை ரூ.20 லட்சம் செலவில் வருகிற கல்வியாண்டில் பழுதுபார்த்து பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

    பொது அறிவை மேம்படுத்தவும், வசதியற்றோர் மற்றும் மூத்தகுடிமக்கள் பயன்பெறும் வகையில் மாநகராட்சியில் 2022-23-ம் ஆண்டில் ஒரு பிரத்யேக மக்களை தேடி நூலகம் இயக்கப்பட்டு இதுவரை 4800 மாணவர்கள் மற்றும் 440 பொதுமக்கள் பயன் பெற்றுள்ளனர்.

    இது பொதுமக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளதால் இந்த நிதியாண்டில் கூடுதலாக ஒரு புதிய நூலக வளாகம் ரூ.30 லட்சம் மதிப்பில் இயக்கப்படும்.

    மாநகராட்சி பள்ளிகளில் 12 வகுப்பு படிக்கும் மாணவ, மாணவர்களில் பள்ளி இறுதி பொதுத்தேர்வில் குறைந்தபட்சம் ஒரு பாடத்தில் 100 விழுக்காடு மதிப்பெண்கள் பெரும் மாணவ, மாணவிகளுக்கு ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும். இதேபோல மாநகராட்சி பள்ளிகளில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொது தேர்வில் 100 விழுக்காடு தேர்ச்சி பெற செய்யும் வகுப்பின் ஆசிரியர்களுக்கும் ரூ.5 ஆயிரம் ஊக்க தொகையாக வழங்கப்படும்.

    மக்கள் குறைதீர்க்கும் கூட்டங்களின் போதும், மேயரின் கள ஆய்வின் போதும் பொதுமக்களை கூறப்படும் குறைகளை சரி செய்யும் விதமாக மாண்புமிகு மேயர் விருப்ப நிதி இந்த நிதியாண்டில் அறிமுகப்படுத்தப்படும். இதற்கென இந்த நிதியாண்டில் ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் இடம் பெற்றுள்ளது.

      குனியமுத்தூர்,

      கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டை பகுதியில் இந்து முன்னணி, பாரதீய ஜனதா, ஆர்.எஸ்.எஸ். மற்றும் விஸ்வகர்மா இளைஞர்கள் இணைந்து நடத்தும் ராம நவமி விழாவில் விஸ்வ பிரம்மா ஜெகத்குரு ஸ்ரீல ஸ்ரீ பாபுஜி சுவாமிகள் பங்கேற்றார். அவருக்கு மங்கலம் பேட்டை விஸ்வகர்மா சமுதாய சங்கத்தின் சார்பாக பரிவட்டம் கட்டி மரியாதை செலுத்தப்பட்டது.

      தமிழ்நாடு, பாண்டிச்சேரி விஸ்வகர்மா சமூக சங்கங்கள் கூட்டமைப்பின் வடக்கு மாநில பொறுப்பாளர் மணிகண்டன் ஆச்சாரியார், மாணிக்க முருகன்குருஜி விக்கி ஆச்சாரியார், பாலு ஆச்சாரியார் ராஜேந்திரஆச்சாரியார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஜெகத்குரு ஸ்ரீ பாபுஜி சாமி, ராமநவமி குறித்து சொல்லும் மனித உருவில் இந்த பூவுலகில் மகாவிஷ்ணு ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியாக அவதாரம் செய்து தர்மத்தின் படி வாழ்ந்து சத்தியத்தின் வழி நடந்தார். சத்தியமே ஜெயதே என்றும், வாய்மையே வெல்லும் என்று ஜகத்குரு ஸ்ரீ பாபுஜி சாமிகள் மக்களுக்கு அருளாசி வழங்கினார்.

      • பூட்டு பாதி உடைந்தும், பாதி உடைக்கப்படாத நிலையிலும் இருந்தது.
      • மதுபாட்டில்களை கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

      கோவை,

      கோவை சின்னியம்பாளையம் - இருகூர் ரோட்டில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு மதுபாட்டில்களை அருகே உள்ள இருப்பு அறையில் வைத்து செல்வது வழக்கம்.

      சம்பவத்தன்று டாஸ்மாக் கடை ஊழியர் ஒருவர் இருப்பு அறையை திறந்து மதுபாட்டில்களை எடுப்பதற்காக சென்றார். அப்போது அறை கதவின் பூட்டு பாதி உடைந்தும், பாதி உடைக்கப்படாத நிலையிலும் இருந்தது.

      நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர்கள் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக இது குறித்து பீளமேடு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில், போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். இது குறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து டாஸ்மாக் கடை இருப்பு அறையில் மதுபாட்டில்களை கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

      • சிறுமுகை இலுப்பநத்தம் சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
      • 4 நாட்களுக்கு தொழிற்சாலை செயல்பட தடை விதித்து தாசில்தார் மாலதி உத்தரவிட்டார்.

      மேட்டுப்பாளையம்,

      கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த சிறுமுகை அருகே உள்ள இலுப்பநத்தம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான காளான் உரம் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.

      உரத்தொழிற்சாலையில் உரம் தயாரிக்க மூலப்பொருட்களை மக்க வைக்கும் போது அதில் இருந்து வெளியேறும் துர்நாற்றத்தால் பொதுமக்களுக்கு சுவாச பிரச்சினை ஏற்படுவதாகவும், பொதுமக்கள் சருமநோய் கூட ஏற்படுவதாக குற்றம்சாட்டி இந்த காளான் உரத்தொழிற் சாலையிலையை மூட வேண்டும் என கடந்த ஓராண்டாக அதிகாரிகளிடம் புகார் தெரிவித்து வந்துள்ளனர்.

      ஆனால் இதுவரை எந்த நட வடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று தொழிற்சாலைக்கு உரம் தயாரிக்க மூலப்பொருட்களை ஏற்றி வந்த லாரியை சிறைப்பிடித்து சிறுமுகை இலுப்பநத்தம் சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

      அதிகாரிகள் வந்து தங்களக்கு உரிய தீர்வு காணும் வரை லாரியை செல்ல அனுமதிக்கமாட்டோம் என போராட்ட த்தில் ஈடுபட்டனர்.

      இதனையடுத்து மேட்டுப்பாளையம் தாசில்தார் மாலதி மற்றும் சிறுமுகை போலீசார் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

      அப்போது சம்பந்தப்பட்ட தொழிற்சாலையில் இருந்து துர்நாற்றம் வீசுவதை தாசில்தார் மாலதி உறுதி செய்ய ப்பட்டதால் மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு சோதனை நடத்த பரிந்துரை செய்ததுடன் மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆய்வு அறிக்கை வரும் வரை 4 நாட்களுக்கு தொழிற்சாலை செயல்பட தடை விதித்து தாசில்தார் மாலதி உத்தரவிட்டார். தாசில்தாரின் இந்த அதிரடி உத்தரவை தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

      மேலும் அறிவிப்பை மீறி செயல்பட்டால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எச்சரித்தார்.

      இந்நிலையில் இன்று காலை மீண்டும் காளான் உரத் தொழிற்சாலையில் லாரியில் எடுத்து வரப்பட்ட மூலப் பொருட்களை இறக்கி வேலை பார்த்து கொண்டிருந்தனர். இதனை பார்த்த கிராம மக்கள் மீண்டும் தொழிற்சாலையின் முன் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

      இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து லாரியை பறிமுதல் செய்து போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். மேலும் தாசில்தார் மாலதி தொழிற்சாலைக்கு 4 நாட்களுக்கு பூட்டு போட்டு நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

      • மேட்டுப்பாளையம் தாலுகா அலுவலகம் முன்பு நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.
      • மேட்டுப்பாளையம் வட்ட தலைவர் மூர்த்தி சிறப்புரையாற்றினார்.

      மேட்டுப்பாளையம்,

      பழைய ஓய்வூதியத்திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும், ஈட்டிய விடுப்பு உடனடியாக வழங்க வேண்டும்,பயணப்படியை உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

      அதன் ஒருபகுதியாக மேட்டுப்பாளையம் தாலுகா அலுவலகம் முன்பு நேற்று மாலை மாவட்ட பிரச்சார செயலாளர் ரவிக்குமார் தலைமையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

      மேட்டுப்பாளையம் வட்ட தலைவர் மூர்த்தி சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தின் போது பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்,ஈட்டிய விடுப்பு,மத்திய அரசுக்கு இணையான அகவிலைப்படி உள்ளிட்டவற்றை உடனடியாக வழங்க வேண்டும், பயணப்படியினை ரூ.2000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும், கருணை அடிப்படையில் பணி நியமனம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர்களுக்கு காலதாமதம் இன்றி பணி வரன்முறை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களும் எழுப்பப்பட்டன.

      ஆர்ப்பாட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் கார்த்திகேயன், தனபால், மலர் மணி, செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் வி.ஏ.ஓ. யாசர் அராபத் நன்றி கூறினார். 

      • கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறி வைத்து போதை மாத்திரை விற்றனர்.
      • வாலிபர்களிடமிமுருந்து 258 போதை மோத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

      கோவை,

      கோவை மாநகரில் கல்லூரிகள் மற்றும் நிறுவனங்கள் ஏராளமாக உள்ளன. இங்கு வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் வந்து கோவையில் தங்கி கல்லூரிகளில் படித்தும், தனியார் நிறுவனங்களில் வேலை பார்த்தும் வருகின்றனர்.

      கொரோனா கால கட்டத்துக்கு பிறகு கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் வலி நிவாரணி மாத்திரைகளை, போதை மாத்திரையாக பயன்படுத்தும் பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போதைக்கு அடிமையாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

      இதனை தடுக்க மாநகர போலீசார் கல்லூரிகளில் போதை பழக்கம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள். மேலும் போதை மாத்திரைகளை மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறி வைத்து விற்பனை செய்யும் கும்பலையும் கைது செய்து வருகின்றனர். இது வரை கோவை மாநகரில் மட்டும் 40-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். தொடர்ந்து போலீசார் கண்காணிப்பு பணியினை மேற்கொண்டு வருகிறார்கள்.

      இந்தநிலையில் மசக்காளிப்பளையம் மாநகராட்சி பள்ளி அருகே சிலர் போதை மாத்திரைகளை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து சிங்காநல்லூர் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் கஸ்தூரி தலைமையிலான போலீசார் தகவல் வந்த இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறி வைத்து போதை மாத்திரைகளை விற்பனை செய்து கொண்டு ரத்தினபுரியை சேர்ந்த சியாம் என்ற யாசின் (வயது 28), போத்தனூர் திருமறை நகரை சேர்ந்த அன்வர் சாதிக் (28), கரும்புக்கடையை சேர்ந்த சுல்தான் பாட்ஷா (27) என்பது தெரிய வந்தது. இவர்களிடம் இருந்து 258 போதை மோத்திரைகள், சோடியம் குளோரைடு பாட்டில் 32, 10 ஊசி, சிரஞ் 14 ஆயிவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட 3 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

      • காமராஜர் வீதியில் சப் இன்ஸ்பெக்டர் ஜெயசங்கர் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
      • சந்தன மரங்களை வெட்டி துண்டுகளை கைப்பையில் போட்டு எடுத்து வந்தது தெரியவந்தது

      கோவை,

      கோவை சாய்பாபா காலனி போலீசார் மேட்டுப்பாளையம் ரோடு காமராஜர் வீதியில் சப் இன்ஸ்பெக்டர் ஜெயசங்கர் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

      அப்போது அந்த வழியாக 3 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அதில் 2 வாலிபர்கள் போலீசாரை பார்த்ததும் மோட்டார் சைக்கிள் இருந்து இறங்கி தப்பியோடி விட்டனர். மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபரை மட்டும் போலீசார் மடக்கி பிடித்தனர். பின்னர் அவர் வைத்திருந்த கைப்பையை சோதனை செய்தனர். அதில் 12 சந்தன மர துண்டுகள் இருந்தது. போலீசார் வாலிபரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.

      விசாரணையில், அவர் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் கொம்ப நாயக்கன் பாளையத்தை சேர்ந்த மாரிமுத்து(32) என்பதும், வடவள்ளி மடத்துக்குளம் மாரியம்மன் கோவில் அருகே சந்தன மரங்களை வெட்டி துண்டுகளை கைப்பையில் போட்டு எடுத்து வந்தது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் தப்பியோடிய அவரது நண்பர்களான விஜய், சசிகுமார் ஆகியோரை தேடி வருகிறார்கள்.

      • படுகாயம் அடைந்த கார்த்தியை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரில் சேர்த்தனர்.
      • பெரிய கடை வீதி போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் ஜெயிலில் அடைத்தனர்.

      கோவை,

      கோவை தியாகராய நகரை சேர்ந்தவர் கோபிநாத் (வயது32) ஜிம் பயிற்சியாளர். இவரது மனைவி கார்த்தி (32).இவர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஆனால் குழந்தைகள் இல்லை.

      இந்த நிலையில் கோபிநாத்துக்கு உக்கடம் புல்லுக்காட்டைச் சேர்ந்த மகாலட்சுமி என்ற இளம்பெண்ணுடன் கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. இந்தப் பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதனை கார்த்தி கண்டித்தார். இதன் காரணமாக கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

      சம்பவத்தன்று கோபிநாத் தனது மனைவியிடம் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவர் வீட்டுக்கு திரும்பி வரவில்லை.

      இதனை அடுத்து கார்த்தி தனது கணவரின் செல்போனுக்கு தொடர்பு கொண்டார். ஆனால் அவர் செல்போனை எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர் தனது கணவர், கள்ளக்காதலியின் வீட்டிற்கு சென்றிருக்கலாம் என சந்தேகித்தார். உடனடியாக கார்த்தி புல்லுக்காட்டில் உள்ள கணவரின் கள்ளக்காதலி வீட்டிற்கு தனது கணவரை தேடி சென்றார்.

      அப்போது வீட்டிற்குள் தனது கணவர் இருப்பதை பார்த்ததும், தன்னுடன் வருமாறு அழைத்தார். ஆனால் அவர் வர மறுப்பு தெரிவித்ததுடன், மனைவியை கள்ளக்காதலியுடன் சேர்ந்து தாக்கினார்.

      இதில் படுகாயம் அடைந்த கார்த்தியை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரில சேர்த்தனர்.

      இதுகுறித்து பெரிய கடை வீதி போலீசார் வழக்குப்பதிவு செய்து கள்ளக்காதலி வீட்டில் இருந்த கணவரை அழைத்த இளம்பெண்ணை தாக்கிய அவரது கணவர் கோபிநாத் மற்றும் அவரது கள்ளக்காதலி மகாலட்சுமி ஆகியோர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

      பின்னர் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

      • மேம்பாலம் மூலம் மாணவர்கள் மட்டுமின்றி, பொதுமக்களும் பயன்பெற்று வந்தனர்.
      • மாணவ மாணவிகள் இது எங்களின் அடையாளச் சின்னமாக விளங்கியது என தெரிவித்தனர்.

      பீளமேடு.

      கோவை அவிநாசி ரோடு உப்பிலிபாளையத்தில் இருந்து சின்னியம்பாளையம் வரை சுமார் 1610 கோடி செலவில் நான்கு வழி உயர்மட்ட மேம்பாலங்கள் அமைக்க பணிகள் வேகமாக நடந்து வருகிறது.

      இதில் பீளமேட்டில் உள்ள பி.எஸ் ஜி கல்லூரியை இருபுறமும் இணைப்பதற்காகவும், மாணவ, மாணவிகள் நடந்து செல் லும் வகையில் அவினாசி ேராட்டின் குறுக்கே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடைபாதை மேம்பாலம் அமைக்கப்பட்டது.

      இந்த பாலம் மூலம் மாணவர்கள் மட்டுமின்றி, பொதுமக்களும் பயன்பெற்று வந்தனர்.

      இந்த நிலையில் அவினாசி ரோட்டில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதால் இந்த நடைபாதை மேம்பாலத்தினை அகற்றுவதற்கு நெடுஞ்சாலைத்துறையினர் திட்டமிட்டனர்.

      அதன்படி மேம்பாலத்தின் அருகிலேயே தூண்கள் அமைக்கப்பட்டது. இதனால் இப்போது ஓடுதளம் அமைக்கும் பணிக்காக இந்த நடைபாதை மேம்பாலம் அகற்றப்படுகிறது.

      இந்த நடைபாதை. மேம்பாலம் கோவை பீளமேட்டின் அடையாளமாகவும் விளங்கி வந்தது. இதனால் ஏராளமான கல்லூரி மாணவ, மாணவிகளும் பொதுமக்களும் பயன்பெற்று வந்தனர். தற்போது இந்த நடைபாலம் அகற்றப்படுவதால் அதன் முன்பு நின்று ஏராளமானோர் புகைப்படம் எடுத்து வருகின்றனர்.

      இந்த மேம்பாலம் அகற்றப்படுவது குறித்து கல்லூரி மாணவ, மாணவிகள் கூறும் போது, கல்லூரியின் ஒருபுறம் இருந்து மறுபுறம் செல்வதற்கு சாலையின் குறுக்கே செல்லாமல் நேரடியாக கல்லூரியின் வகுப்புகளுக்கு நடைபாதையில் சென்று வந்தோம்.

      இது எங்களின் அடையாளச் சின்னமாகவே இருந்தது. இப்போது அதனை அகற்றுவது எங்களுக்கு மிகுந்த மனவேதனை தருவதாக உள்ளது. என தினந்தோறும் பாலத்தை பயன்படுத்திய மாணவ மாணவிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.

      ×