search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆறுதல்"

    கோவை துடியலூரில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சிறுமியின் பெற்றோரை நேரில் சந்தித்து கமல்ஹாசன் ஆறுதல் கூறினார். #KamalHaasan #GirlHarassment
    கோவை:

    நடிகர் கமல்ஹாசன் தனது மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நேற்று தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.

    தென் சென்னை பகுதிகளில் நேற்று பிரசாரம் செய்த அவர் இன்று மத்திய சென்னை மற்றும் வட சென்னை பகுதிகளில் பிரசாரம் செய்ய திட்டமிட்டு இருந்தார்.

    இந்நிலையில் கோவை துடியலூரில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டது 2 நாட்களாக கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

    இதனால் இன்றைய பிரசாரத்தை ரத்து செய்த கமல் விமானம் மூலம் கோவை சென்றார். அங்கு இருந்து துடியலூர் சென்ற கமல், சிறுமியின் வீட்டுக்கு சென்று அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூறினார்.

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன்,  ‘வீட்டின் அருகே 20 அடி தள்ளி குழந்தைகள் விளையாடக் கூடிய சூழல் இல்லாவிடில் நல்ல தமிழகமாக இருக்காது. சிறுமி வழக்கில் காவல்துறை தன் கடமையைச் செய்யும் என நம்புகிறேன்’ என்றார். #KamalHaasan #GirlHarassment
    புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த கயத்தாறு வீரர் குடும்பத்துக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல் கூறினார். #PulwamaAttack #CRPF #Subramaniyan #MKStalin
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலை திருச்சியில் இருந்து தனி விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார்.

    அவருக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இதை தொடர்ந்து அவர் வல்லநாடு, கே.டி.சி.நகர், சங்கர்நகர், கங்கைகொண்டான் வழியாக கயத்தாறு அருகே உள்ள சவலாப்பேரிக்கு சென்றார். அங்கு காஷ்மீர் பயங்கரவாதிகள் தாக்குதலில் வீரமரணம் அடைந்த துணை ராணுவ வீரர் சுப்பிரமணியன் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

    சுப்பிரமணியன் குடும்பத்தினருக்கு தி.மு.க. சார்பாக ரூ.2 லட்சம் நிதி வழங்கினார். இதை தொடர்ந்து அவர் தூத்துக்குடி அருகே உள்ள மேலக்கூட்டுடன் காடு பகுதியில் நடைபெற்ற ஊராட்சி சபை கூட்டத்தில் பங்கேற்றார். பின்பு மங்களகிரி விலக்கில் நடைபெறும் தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.



    மாலை 4 மணிக்கு தெற்கு வேம்பார் ஊராட்சி சபை கூட்டத்திலும், 6 மணிக்கு விளாத்திகுளம், மதுரை ரோட்டில் நடைபெறும் தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்திலும் கலந்து கொண்டு பேசுகிறார்.

    இரவு 7 மணிக்கு நாகலாபுரம், பந்தல்குடி வழியாக மதுரை சென்று அங்கிருந்து விமானம் மூலம் சென்னை செல்கிறார். மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி அவர் வரும் வழியில் வரவேற்பு வளைவுகள், டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. வழியெங்கும் அவருக்கு தி.மு.க. தொண்டர்கள் திரண்டு நின்று உற்சாக வரவேற்பு அளித்தார்கள். #PulwamaAttack #CRPF #Subramaniyan #MKStalin
    காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் அரியலூர் மாவட்டம் கார்குடி கிராமத்தை சேர்ந்த துணை ராணுவ வீரர் சிவச்சந்திரன் குடும்பத்தினரை வைகோ நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். #PulwamaAttack #Vaiko
    அரியலூர்:

    காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் அரியலூர் மாவட்டம் கார்குடி கிராமத்தை சேர்ந்த மத்திய பாதுகாப்பு படை வீரர் சிவச்சந்திரன் வீரமரணம் அடைந்தார். அவரது குடும்பத்திரை ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பயங்கரவாதிகள் கிள்ளி எறியப்பட வேண்டும். வேரோடு அழிக்கப்படவேண்டும். சிவச்சந்திரன் தனது மகனை ஐ.பி.எஸ். ஆக்க வேண்டும் என ஆசைப்பட்டுள்ளார். ஏற்கனவே ஒரு மகனை இழந்த சிவச்சந்திரனின் பெற்றோர் இவரை வேலைக்கு செல்ல வேண்டாம் எனக் கூறிய போதும் நாட்டுக்காக செல்கிறேன் என கூறியுள்ளார்.

    எனவே சிவச்சந்திரனின் மனைவி காந்திமதிக்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நல்ல அரசு வேலையை வழங்க வேண்டும். மேலும் சிவச்சந்திரனுக்கு சிலை அமைத்து நினைவு சின்னம் ஏற்படுத்த வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதையும் அரசு நிறைவேற்ற வேண்டும் என்றார்.

    தொடர்ந்து சிவச்சந்திரன் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு சென்று வைகோ மலரஞ்சலி செலுத்தினார். இதேபோல் திரைப்பட நடிகர் தாமுவும் சிவச்சந்திரனின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். #PulwamaAttack #Vaiko
    உ.பி. வன்முறையின்போது போராட்டக்காரர்களால் படுகொலை செய்யப்பட்ட இன்ஸ்பெக்டரின் குடும்பத்தினருக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆறுதல் கூறினார். #BulandshahrViolence #YogiAdityanath
    லக்னோ:

    உத்தர பிரதேச மாநிலம் புலந்த்சாகர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தின் அருகில் பசுக்கள் இறந்து கிடந்ததால், அங்கு பசுவதைக் கூடம் செயல்படுவதாக கூறி இந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். திடீரென சாலை மறியலில் ஈடுபட்ட அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது போலீசார் மீது போராட்டக் குழுவினர் தாக்குதல் நடத்தினர். போலீசார் தடியடி நடத்தியும், துப்பாக்கி சூடு நடத்தியும் கூட்டத்தை கலைத்தனர்.

    இந்த வன்முறையில், போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபோத் சிங் கொல்லப்பட்டார். அவர் மீது போராட்டக் கும்பல் கற்களை வீசி தாக்கியதும், துப்பாக்கியால் சுட்டதும் தெரியவந்து. வன்முறை தொடர்பாக போலீசார் சிலரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.



    இந்நிலையில், புலந்த்சாகர் வன்முறையில் கொல்லப்பட்ட இன்ஸ்பெக்டர் சுபோத் சிங்கின் மனைவி மற்றும் குடும்பத்தினர் முதல்வர் யோகி ஆதித்யநாத்தை இன்று அவரது இல்லத்தில் சந்தித்தனர். அப்போது இன்ஸ்பெக்டரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய முதல்வர், அவர்களின் குடும்பத்திற்கு அரசு தேவையான உதவிகளை செய்வதாகவும், அவர்களுக்கு உரிய நீதி கிடைக்கும் என்றும் உறுதி அளித்தார். முதல்வருடன் டிஜிபி ஓபி சிங் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

    புலந்த்சாகர் வன்முறையின்போது இன்ஸ்பெக்டர் கொல்லப்பட்டது தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாக டிஜிபி ஓபி சிங் தெரிவித்தார். #BulandshahrViolence #YogiAdityanath

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை மதுரை வருகிறார். அமைச்சர் செல்லூர் ராஜூ குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுகிறார். #cmEdappadipalanisamy #ministersellurraju

    மதுரை:

    அமைச்சர் செல்லூர் ராஜூவின் தாயார் ஒச்சம்மாள் (வயது 90) நேற்று முன்தினம் மரணம் அடைந்தார். அவரது இறுதிச் சடங்கு நேற்று மதியம் நடந்தது.

    தமிழக துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அ.தி.மு.க. மற்றும் பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகளும் திரளாக கலந்து கொண்டு மறைந்த ஒச்சம்மாள் உடலுக்கு அஞ்சலி செலுத்தி அமைச்சர் செல்லூர் ராஜூவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.

    அமைச்சர் செல்லூர் ராஜூவின் குடும்பத்துக்கு ஆறுதல் கூற முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை 6 மணிக்கு மதுரை வருகிறார்.

    சேலத்தில் இருந்து காரில் வரும் எடப்பாடி பழனிசாமி மதுரை செல்லூர் பாலம் ஸ்டேசன் ரோட்டில் உள்ள அமைச்சர் செல்லூர் ராஜூ வீட்டுக்குச் செல்கிறார்.

    அங்கு மறைந்த ஒச்சம்மாள் படத்துக்கு மலர் அஞ்சலி செலுத்தும் எடப்பாடி பழனிசாமி அமைச்சர் செல்லூர் ராஜூ மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுகிறார்.

    பின்னர் காரில் மதுரை விமான நிலையம் சென்று அங்கிருந்து விமானத்தில் சென்னை செல்கிறார். முதல்-அமைச்சர் வருகையையொட்டி மதுரையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. #cmEdappadipalanisamy #ministersellurraju

    சென்னை விருகம்பாக்கத்தில் தி.மு.க.வினரால் தாக்குதல் நடத்தப்பட்ட பிரியாணி கடைக்கு மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். #DMK #MKstalin
    சென்னை:

    சென்னை விருகம்பாக்கம் ஆர்.ஆர்.அன்பு பிரியாணி கடையில் ஓசியில் பிரியாணி கேட்டு தி.மு.க. பிரமுகர் யுவராஜ் பாக்சிங் குத்து விட்டு தாக்குதலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

    கடந்த 28-ந்தேதி இரவு தி.மு.க. பிரமுகர்கள் யுவராஜ், திவாகர் உள்ளிட்ட 11 பேர் கும்பலாக பிரியாணி கடைக்கு சென்று பிரியாணி கேட்டனர். அப்போது கடை உரிமையாளரான பிரகாஷ், பிரியாணி தீர்ந்து விட்டதாக கூறியுள்ளார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த யுவராஜ், பிரியாணி இல்லாம ஏன்டா கடையை திறந்து வைத்திருக்கிறீர்கள்? என்று கேட்டு மோதலில் ஈடுபட்டார். கடையில் உள்ள பொருட்களை தூக்கி வீசிய அவர் உரிமையாளரான பிரகாசின் முகத்தில் சரமாரியாக குத்து விட்டார்.

    பாக்சரான இவர் மேடைகளில் குத்துச் சண்டை போட்டியில் பங்கேற்பது போல குதித்து குதித்து குத்து விட்டார். அவருடன் வந்தவர்களும் சரமாரியாக தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டனர்.

    இதில் பிரகாஷ், கடை ஊழியர்களான கருணாநிதி, நாகராஜ் ஆகிய 3 பேர் பலத்த காயம் அடைந்தனர். இவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். பின்னர் இதுபற்றி விருகம்பாக்கம் போலீசில் புகார் செய்யப்பட்டது. வடபழனி உதவி கமி‌ஷனர் சங்கர், இன்ஸ்பெக்டர் ராஜூ பிரின்ஸ் ஆரோன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.


    நேற்று காலையில் யுவராஜின் பாக்சிங் தாக்குதல் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து யுவராஜும் அவரது நண்பர் திவாகரும் தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டனர். இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் கட்சியினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரித்தார்.

    இந்த நிலையில் மு.க.ஸ்டாலின் இன்று காலை விருகம்பாக்கத்தில் உள்ள பிரியாணி கடைக்கு நேரில் சென்றார். கடை உரிமையாளரை சந்தித்து நடந்த விவரங்கள் பற்றி அவர் கேட்டறிந்தார். தாக்குதலில் காயம் அடைந்த ஊழியர்கள் யார்-யார் என்பது பற்றியும் விசாரித்தார். அவர்களையும் அழைத்து நலம் விசாரித்தார். மு.க.ஸ்டாலினுடன் முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ. உள்ளிட்ட தி.மு.க. நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.

    இந்த நிலையில் பிரியாணி கடை தாக்குதல் தொடர்பாக சுரேஷ் மற்றும் ராம்கிஷோர், கிஷோர், கார்த்திக், மற்றொரு கார்த்திக் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் சுரேஷ் கல்லூரி மாணவர் ஆவார். மாங்காட்டில் உள்ள ஒரு கல்லூரியில் எம்.சி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

    யுவராஜ், திவாகர் உள்ளிட்ட மேலும் சிலர் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். அனைவரையும் கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க உயர் போலீஸ் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

    பிரியாணி கடைக்குள் தாக்குதல் நடத்தி விட்டு யுவராஜும், அவரது கூட்டாளிகளும் வெளியே வந்தபோது கடையின் சீருடையில் இருந்த ஊழியரான அருள் ஜஸ்டினையும் தாக்கி உள்ளனர்.

    இதுதொடர்பாக தனியாக புகார் செய்யப்பட்டுள்ளது. இதில் யுவராஜ், திவாகர், அவரது தம்பி ருத்ரகுமார் ஆகியோர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த வழக்கில் ருத்ரகுமார் கைது செய்யப்பட்டுள்ளார். இது யுவராஜ் மீது போடப்பட்டுள்ள 2-வது வழக்காகும்.

    பிரியாணி கடையில் தாக்குதல் நடத்திய தி.மு.க. வினர் மீது நடவடிக்கை எடுத்ததற்காக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நன்றி தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக சங்கத்தின் பொதுச்செயலாளர் கோவிந்தராஜூலு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    பிரியாணி கடையில் தி.மு.க.வினர் அராஜகச் செயலில் ஈடுபட்டுள்ளனர் என்பதை ஊடகங்கள் வாயிலாக அறிந்து, உடனடியாக தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களை அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து உடனடியாக நீக்கி இருப்பதை வணிகர் சங்கங்களின் பேரமைப்பு பாராட்டி வரவேற்கிறது. இதற்காக பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா, மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #DMK #MKStalin
    ஆந்திராவில் தாக்கப்பட்ட தமிழக மீனவர்களுக்கு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
    சென்னை:

    நாகப்பட்டினத்தை சேர்ந்தவர் வீரமுத்து (வயது 46). மீனவர். இவர் தனது சக மீனவர்களான காத்தலிங்கம் (48), ஜெகதீசன் (26) உள்பட 9 மீனவர்களுடன் கடந்த 8-ந்தேதி மீன்பிடிக்க கடலுக்கு சென்றார்.

    நேற்று முன்தினம் ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்த போது நடுக்கடலில் ஆந்திர மீனவர்கள் இவர்களை சுற்றிவளைத்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் வீரமுத்து, காத்தலிங்கம், ஜெகதீசன் உள்பட 6 பேருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் இருந்த அவர்களை சக மீனவர்கள் மீட்டு நெல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுபற்றிய தகவல் அறிந்ததும் மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெறும் மீனவர்களுக்கு ஆறுதல் கூறினார். மேலும் மீனவர்கள் மீதான தாக்குதல் குறித்து விசாரணை நடத்தவும் உத்தரவிட்டார்.
    பட்டினப்பாக்கத்தில் கடல் அலையால் வீடுகள் இழந்தவர்களை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் சந்தித்து ஆறுதல் கூறினார்.#KamalHaasan #MakkalNeethiMaiyam
    சென்னை:

    பட்டினப்பாக்கத்தில் கடல் அலையால் வீடுகள் இழந்தவர்களை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் சந்தித்து ஆறுதல் கூறினார். ‘மீனவர்களை இடம் மாற சொல்வது சரியல்ல’ என அவர் தெரிவித்தார்.

    சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் கடற்கரையோர பகுதிகளில் கடல் அலை சீற்றம் ஏற்பட்டு மண் அரிப்பால் வீடுகள் சேதம் அடைந்தன. நேற்று வரை 50-க்கும் மேற்பட்ட வீடுகள் கடல் அலை சீற்றத்தில் சிக்கி கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டன.

    கடல் அலை சீற்றத்தால் ஏற்பட்ட பாதிப்புகளையும், பாதிக்கப்பட்ட மக்களையும் பார்வையிட்டு ஆறுதல் சொல்ல மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் கடற்கரை பகுதிக்கு வந்தார். பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட அவர் வீடுகளை இழந்த மக்களுக்கு ஆறுதல் கூறினார்.

    பின்னர் கமல்ஹாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மய்யம் விசில் செயலியில் இதுதொடர்பான செய்தியை தாமதமாகவே தெரிவித்து இருக்கிறார்கள். அதனால் தான் நாங்கள் வருவதற்கு தாமதம் ஆகிவிட்டது. நான் ஒரு நடிகனாக ஸ்டூடியோ அருகில் இருக்க ஆசைப்படுவேன்.

    விவசாயி, வயல்வெளி அருகில் வசிக்க ஆசைப்படுவார். மீனவர்கள், கடற்கரை அருகில் இருக்க தான் ஆசைப்படுவார்கள். அவர்களுக்கு மாற்று இடம் காஞ்சீபுரத்தில் கொடுத்தால், அவர்கள் எப்படி மீன்பிடிக்க இங்கு வருவார்கள்?.

    கடலுக்கு அருகில் இருந்தால் தான் அவர்களுக்கு வசதியாக இருக்கும். அவர்களை இடம் மாற்றுவது, தொழிலை மாற்றுவதற்கு சமம். மண் அரிப்பை தடுக்க நடவடிக்கை எடுக்காமல், இடம் மாற சொல்வது சரியல்ல. இதற்கென தனித்துறை இருக்கிறது. அந்த துறை இதற்கு நல்ல தீர்வு சொல்ல வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #KamalHaasan #MakkalNeethiMaiyam  #Tamilnews
    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளால் கடத்தி கொலை செய்யப்பட்ட ராணுவ வீரர் அவுரங்கசீப்பின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் ஆறுதல் கூறினார். #NirmalaSitharaman #JammuKashmir #Aurangzeb
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் ராணுவ வீரராக பணிபுரிந்து வந்த வீரர் அவுரங்கசீப். இவர் ரம்ஜான் விடுமுறை அன்று தனது சொந்த ஊருக்கு சென்றுள்ளார். அப்போது அவரை துப்பாக்கி முனையில் கடத்திய பயங்கரவாதிகள், பின் அவரை சுட்டுக் கொலை செய்துள்ளனர்.

    இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.



    இந்நிலையில், உயிரிழந்த ராணுவ வீரரின் குடும்பத்தினரை ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இதுகுறித்து பேசிய அவர், ராணுவ வீரரின் குடும்பத்தினருடைய பொறுமையும், தைரியமும் பிரமிக்க வைப்பதாகவும், மறைந்த ராணுவ வீரர் மற்றும் அவரது குடும்பத்தினர் ஒட்டுமொத்த நாட்டுக்கும் முன் உதாரணமாக விளங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.

    முன்னதாக, ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் இந்த குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது. #NirmalaSitharaman #JammuKashmir #Aurangzeb
    ‘ஒரு மகனை போல் விஜய் எனக்கு ஆறுதல் கூறினார்’ என்று தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியான மாணவி ஸ்னோலினின் தாய் கூறினார்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கடந்த 22-ந்தேதி பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த பேரணியாக சென்றனர். அப்போது ஏற்பட்ட கலவரத்தில் போலீசார் நடத்திய தடியடி மற்றும் துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள்.

    100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தார்கள். இவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களை பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் சந்தித்து வருகிறார்கள்.

    இதையடுத்து காயமடைந்தவர்களை பார்த்து நலம் விசாரிக்கவும், பலியானவர்கள் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுவதற்காக நடிகர் விஜய் நேற்று நள்ளிரவு விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார். பின்னர் துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி ரூ. 1 லட்சம் நிதியுதவி வழங்கினார். அரசு மருத்துவமனைக்கு சென்று அங்கு சிகிச்சை பெறுபவர்களிடம் நலம் விசாரித்தார்.

    இது குறித்து மாணவி ஸ்னோலினின் தாய் வனிதா கூறியதாவது:-

    நேற்று நள்ளிரவு 2 மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்களிடம் யார் என்று கேட்ட போது நான் விஜய் என்று கூறினார். ஆனால் அவர் நடிகர் என்று சொல்லவில்லை. அவருடன் வந்தவர்கள் தான் நடிகர் விஜய் பலியானவர்கள் குடும்பத்தினரை பார்த்து ஆறுதல் கூற வந்துள்ளார் என்றனர்.

    அப்போது விஜய் எனது கைகளை பிடித்து கண்ணீர் மல்க ஆறுதல் கூறினார். பின்னர் நாற்காலியை கொடுத்து அமரச் சொன்னேன் அதற்கு மறுத்த அவர் தரையில் உட்கார்ந்தார். அவர் மிகவும் எளிமையாக இருந்தார். பகலில் வராமல் இரவில் ஏன் வந்தீர்கள் என்று கேட்டதற்கு பகலில் வந்தால் வருவது தெரிந்து கூட்டம் அதிகமாக வருவார்கள் பாதுகாப்பிற்காக போலீசார் வருவார்கள். ஏற்கனவே நீங்கள் மனவேதனையில் உள்ளீர்கள் அது உங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். கூட்டம் கூடுவதை நான் விரும்பவில்லை என்றார். ஒரு மகனை போல் விஜய் எனக்கு ஆறுதல் கூறினார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியான 13 பேர் குடும்பத்தினரையும் சந்தித்து ஆறுதல் கூறிய ச.ம.க. தலைவர் சரத்குமார் ரூ.50 ஆயிரம் நிதி வழங்கினார்.#ThoothukudiFiring #Sarathkumar
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்களில் பலர் காயம் குணமடைந்து வீட்டிற்கு திரும்பி விட்ட நிலையில் 48 பேர் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர்.

    எதிர்ப்பு காரணமாக பலியானர்களின் குடும்பத்தினரை பெரும்பாலான கட்சி தலைவர்கள் சந்திக்க முடியவில்லை. நடிகர் ரஜினிகாந்த் மட்டும் பலியான 9 பேரின் குடும்பத்தினரை தூத்துக்குடி வந்திருந்த போது தான் தங்கியிருந்த ஓட்டலுக்கு வரவழைத்து ஆறுதல் கூறி நிதியுதவி வழங்கினார்.

    இந்நிலையில் ச.ம.க. தலைவர் சரத்குமார் துப்பாக்கி சூட்டில் காயமடைந்து தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுபவர்களை நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் துப்பாக்கி சூட்டில் பலியானோரின் வீட்டிற்கு சென்று அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

    தூத்துக்குடி பகுதியில் உள்ள 11 பேர் வீட்டிற்கும் நேற்று சென்று சந்தித்து ரூ.50 ஆயிரம் நிதிஉதவி வழங்கினார். அவர்களில் தூத்துக்குடி மாசிலாமணிபுரம் 1-வது தெருவைச் சேர்ந்த சண்முகம் குடும்பத்தினர் மட்டும் நிதியை பெறவில்லை. மற்றவர்கள் சரத்குமார் வழங்கிய நிதியை பெற்றுக்கொண்டனர்.

    இன்று காலை ஓட்டப்பிடாரம் அருகே உள்ள குறுக்குசாலை பகுதியை சேர்ந்த தமிழரசன் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறி நிதி வழங்கினார். பின்பு உசிலம்பட்டியில் உள்ள ஜெயராமன் வீட்டிற்கும் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். #ThoothukudiFiring #Sarathkumar
    துப்பாக்கி சூட்டில் காயமடைந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. இன்று சந்தித்து ஆறுதல் கூறினார்.
    தூத்துக்குடி:

    துப்பாக்கி சூட்டில் காயமடைந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. இன்று சந்தித்து ஆறுதல் கூறினார்.

    வார்டு வாரியாக சென்று அவர் காயமடைந்தவர்களை பார்த்து விபரங்களை கேட்டறிந்தார்.

    அப்போது அவருடன் மாவட்ட செயலாளர்கள் ஹென்றிதாமஸ், சுந்தர் ராஜன், தென்மண்டல பொறுப்பாளர் மாணிக்க ராஜா, முன்னாள் எம்.எல்.ஏ. உமாமகேஸ்வரி, முன்னாள் மேயர் அந்தோணிகிரேஸ், துணை செயலாளர் பாலன் உள்பட பலர் உடன் சென்றனர்.
    ×