search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேல்முருகன்"

    மதுராந்தகம் அருகே உள்ள சுங்கச்சாவடியில் ஊழியர்களுடன் மோதலில் ஈடுபட்டதையடுத்து வேல்முருகன் மீது 3 பிரிவில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. #Velmurugan
    மதுராந்தகம்:

    தமிழக வாழ்வுரிமை கட்சித்தலைவர் வேல்முருகன் நேற்று காலை காரில் வந்த போது மதுராந்தகம் அருகே உள்ள ஆத்தூர் சுங்கச்சாவடியில் ஊழியர்களுடன் மோதலில் ஈடுபட்டார்.

    இதனை அறிந்த கட்சி நிர்வாகிகள் அங்கு திரண்டனர். அச்சிறுப்பாக்கம் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தனர்.

    இந்த நிலையில் இதுபற்றி சுங்கச்சாவடி ஊழியர் விநாயகமூர்த்தி என்பவர் அச்சிறுப்பாக்கம் போலீசில் புகார் செய்துள்ளார்.

    இதையடுத்து தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    அவர் மீது கொலை மிரட்டல், ஆபாச பேச்சு, காயம் ஏற்படுத்தும் வகையில் தாக்குதல் ஆகிய 3 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    இதேபோல் வேல்முருகனின் கார் டிரைவர் பாஸ்கரன் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருக்கிறார்கள். #Velmurugan
    மேல்மருவத்தூர் அருகே தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகனுக்கும் சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் மோதல் ஏற்பட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
    மதுராந்தகம்:

    தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் இன்று காலை கார் மூலம் சென்னை நோக்கி வந்துக் கொண்டிருந்தார். டிரைவர் பாஸ்கர் காரை ஓட்டினார்.

    மேல்மருவத்தூர் அருகே உள்ள ஆத்தூர் சுங்கச் சாவடியை கார் கடந்தபோது அங்கிருந்த ஊழியர்களுக்கும், டிரைவர் பாஸ்கருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதையடுத்து வேல்முருகன் சுங்கச்சாவடி ஊழியர்களுடன் கடும் வாக்குவாதம் செய்து மோதலில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுபற்றி அறிந்ததும் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஏராளமானோர் அங்கு திரண்டனர். போலீசார் விரைந்து வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர்.

    இது தொடர்பாக சுங்கச்சாவடி ஊழியர்கள் 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இச்சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கடந்த ஆண்டு உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியை தமிழக வாழ்வுரிமை கட்சியினர் அடித்து நொறுக்கியது குறிப்பிடத்தக்கது.
    பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தலில் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணிக்கு தமிழக வாழ்வுரிமை கட்சி ஆதரவு அளிக்கும் என வேல்முருகன் இன்று தெரிவித்துள்ளார். #LSPolls #DMK #Congress #MKStalin #Velmurugan
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன.

    இந்நிலையில், பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தலில் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணிக்கு தமிழக வாழ்வுரிமை கட்சி ஆதரவு அளிப்பதாக அதன் தலைவர் வேல்முருகன் இன்று தெரிவித்துள்ளார்.

    தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் இன்று இரவு அண்ணா அறிவாலயம் சென்றார். அங்கு அவர் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசினார். அப்போது, தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு தமிழக வாழ்வுரிமை கட்சி ஆதரவு அளிக்கும் என தெரிவித்துள்ளார். #LSPolls #DMK #Congress #MKStalin #Velmurugan
    பாராளுமன்ற தேர்தலில் தமிழகம், புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் தமிழக வாழ்வுரிமை கட்சி தனித்து போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் அறிவித்துள்ளார். #LSPolls #TamizhagaVazhvurimaiKatchi #Velmurugan

    வடலூர், மார்ச்.11-

    தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநில சிறப்பு பொதுக்குழு கூட்டம் வடலூரில் நடைபெற் றது.

    கட்சி தலைவர் வேல்முருகன் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இருப்பினும் செல்போன் மூலமாக அவர் பேசியது, கூட்டத்தில் ஒலிபரப்பப்பட்டது. அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    உடல் நலம் சரியில்லாத காரணத்தினால் என்னால் கூட்டத்திற்கு வர முடியவில்லை. விரைவில் உங்கள் அனைவரையும் சந்திப்பேன். பாராளுமன்ற தேர்தலில் தமிழகம், புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் தமிழக வாழ்வுரிமை கட்சி தனித்து போட்டியிடும். ஒரு சீட்டுக்காக யாரிடமும் விலை போக மாட்டேன். தொடர்ந்து தமிழர்களின் வாழ்வுக்காகவும், உரிமைக்காகவும் குரல் கொடுப்பேன்.

    இவ்வாறு அவர் கூறி னார். பின்னர் கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் தொடர்பான அனைத்து முடிவுகளையும் எடுக்கும் அதிகாரத்தை கட்சியின் தலைவர் வேல்முருகனுக்கு வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டது.

    கூட்டத்தில் தேர்தல் கமிட்டி தலைவர் ஜம்புலிங்கம், அமைப்பு செயலாளர் சின்னதுரை, மாநில இளைஞரணி அமைப்பாளர் ஜெரோன்குமார், நகர செயலாளர் அய்யப்பன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவித்தபிறகு கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் என்று வேல்முருகன் கூறியுள்ளார். #Velmurugan

    இண்டூர்:

    தருமபுரி மாவட்டம் இண்டூரில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் பொதுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்துகொண்ட அந்த கட்சியின் நிறுவன தலைவர் வேல்முருகனிடம் யாருடன் கூட்டணி அமைப்பீர்கள் என்று நிருபர்கள் கேட்டனர்.

    அதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:-

    தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவராக உள்ள நான், 150க்கும் மேற்பட்ட தமிழக அமைப்புகள், தமிழர் இயக்கங்கள், பெரியார் உள்ளிட்ட அமைப்புகளின் மாநில ஒருங்கிணைப்பாளராகவும் உள்ளேன். எங்களுக்கு என்று குறைந்தபட்ச செயல்திட்டங்கள் உண்டு. எங்கள் திட்டங்களையும், கோரிக்கைகளையும் ஏற்கும் கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிடுவதா? அல்லது ஆதரவு கொடுப்பதா என்பது குறித்து பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவித்தபிறகு எங்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் முடிவெடுத்து அறிவிப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மேலும் அவர் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் 60 ஆயிரம் பேருக்கு பணி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இதில் ஒரு தமிழனுக்கு கூட பணி வாய்ப்பு இல்லை.அனைவரும் வடநாட்டைச் சேர்ந்தவர்கள். மத்திய அரசு பணி தமிழர்களுக்கு எட்டாக்கனியாகவே உள்ளது.

    யூ.பி.எஸ்.சி. தேர்வில் கோடிக்கணக்கில் ஊழல் நடைபெறுகிறது. கேள்வித்தாள்களை தனியாரிடம் விடுவதிலும் முறைகேடு நடைபெறுகிறது. எனவே தமிழ்நாட்டில் மத்திய அரசு பணிகளில் 90 சதவீதம் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு பணி நியமனம் வழங்க வேண்டும்.

    தமிழகத்தில் உள்ள அலுவலகங்களில் 100 சதவீத பணியை தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கே வழங்கவேண்டும். தமிழக அரசு ஆந்திரா, கர்நாடகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் சட்டம் இயற்றி உள்ளதைப் போல வேலை உறுதி அளிப்பு சட்டம் இயற்ற வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி வரும் 28-ந் தேதி கோட்டையை நோக்கி பேரணி செல்ல உள்ளோம்.

    ராஜீவ்காந்தி வழக்கில் 7 பேரின் விடுதலையில் கவர்னர் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை மீறி நடந்துகொள்கிறார். தமிழக அமைச்சரவையின் தீர்மானத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இல்லையேல் தொடர்ந்து போராடுவோம். மத்திய அரசின் பட்ஜெட் மக்கள் நலனில் அக்கறை இல்லாத பட்ஜெட். எனவே தமிழக அரசின் பட்ஜெட் மக்கள் நலனை கருத்தில் கொண்டதாக அமைய வேண்டும்.

    தர்மபுரி-மொரப்பூர் ரெயில் பாதை திட்டம் தேர்தல் அறிவிக்கும் போது மட்டும் அறிவிப்பு வரும். அதற்கு இனிப்பு வழங்கி பட்டாசு வெடிக்கின்றனர். இதைச் செய்யாமல் கோரிக்கையை நிறைவேற்றினால் நல்லது.

    இவ்வாறு அவர் கூறினார். #Velmurugan

    பண்ருட்டியில் மணல் குவாரி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட வேல்முருகன் உள்பட பலர் மீது புதுப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த எனதிரி மங்கலம் கிராமத்தில் உள்ள தென் பெண்ணை ஆற்றில் அரசு மணல் குவாரி செயல்பட்டு வருகிறது.

    இந்த மணல் குவாரியில் அளவுக்கு அதிகமாக மணல் அள்ளபடுவதால் அந்த பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து தண்ணீர் தட்டுபாடு ஏற்படுவதாகவும் உடனடியாக மணல் குவாரியை மூட கோரி அந்த பகுதி பொது மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்த நிலையில்நேற்று முன்தினம் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தலைமையில் மணல் குவாரியை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.

    இதில் கட்சி நிர்வாகிகள் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் போராட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது அவர், அரசு உடனடியாக மணல் குவாரியை மூட வேண்டும். இல்லையென்றால் கலெக்டர் அலுவலகம், அவரது வீடு முன்பு முற்றுகை போராட்டம் நடத்தப்படும்.

    அதன் பிறகும் அரசு செவிசாய்க்கவில்லை எனில் தலைமை செயலகம் மற்றும் முதல்வர் பழனிசாமி வீட்டின் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தப்படும்.

    அதன் பின்பும் நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதி மன்றத்தில் சிறந்த நீதிபதியின் பார்வைக்கு இப்பிரச்சனை கொண்டு செல்லப்படும் என்றார்.

    மணல் குவாரி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட வேல்முருகன் உள்பட பலர் மீது புதுப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
    கடந்த மாதம் 26-ந்தேதி சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய பேச்சு தொடர்பாக வேல்முருகன் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. #TamizhagaVazhvurimaiKatchi #Velmurugan
    சென்னை:

    தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல் முருகன் மீது சுங்கச் சாவடியை தாக்கியதாக ஏற்கனவே வழக்கு உள்ளது. இதில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பின்னர் ஜாமீனில் விடுதலையானார்.

    இந்த நிலையில் வேல் முருகன் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் 26-ந்தேதி சேப்பாக்கத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் வேல்முருகன் பேசினார்.

    அவரது பேச்சை அடிப்படையாக வைத்தே திருவல்லிக்கேணி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    கலவரத்தை தூண்டும் வகையில் பேசியது, பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தது, அரசுக்கு எதிராக குற்றம் செய்ய தூண்டுதல் உள்ளிட்ட 3 சட்ட பிரிவுகளின் வேல்முருகன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. #TamizhagaVazhvurimaiKatchi #Velmurugan
    மோடி அரசின் சூப்பர் முதல்வராக தமிழக கவர்னர் ஆட்சி செய்கிறார் என்று வேல்முருகன் குற்றம் சாட்டியுள்ளார். #velmurugan #tngovernor #tnchiefminister

    நாகர்கோவில்:

    தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், சுங்கச்சாவடி தாக்குதல் வழக்கில் ஜாமீன் பெற்று நாகர்கோவில் கோட்டார் போலீஸ் நிலையத்தில் கையெழுத்து போட்டு வருகிறார். இன்று 5-வது நாளாக அவர் கையெழுத்து போட்டார். அப்போது அவரை வெளிமாவட்ட கட்சி நிர்வாகிகள் சந்தித்து பேசினர்.

    அதன்பின் வேல்முருகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    தேர்தல் ரீதியாக மக்களை சந்திப்பதற்கு தமிழக அரசு பயப்படுகிறது. இந்த ஆட்சியில் மீனவர்கள், மாணவர்கள், விவசாயிகள் என்று பலரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். மக்கள் விரோத ஆட்சியாக தற்போதுள்ள ஆட்சி நடைபெறுகிறது.

    மோடி அரசின் சூப்பர் முதல்வராக தமிழக கவர்னர் ஆட்சி செய்கிறார். தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடக்காது. சட்டசபைக்கு தேர்தல் நடந்தால் அ.தி.மு.க. படுதோல்வி அடையும். தேர்தல் வந்தால் எந்த சாதனையை கூறி அவர்களால் ஓட்டு கேட்க முடியும்.

    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு, டெல்டா விவசாயிகள் தற்கொலை, ஒகி புயலால் மீனவர்கள், விவசாயிகள் பாதிப்புபோன்றவற்றை அவர்களால் சாதனைகளாக சொல்லி ஓட்டு கேட்க முடியுமா? மத்திய அரசு கொண்டு வந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் பொதுமக்களுக்கு எந்த லாபமும் இல்லை. பெரும் பணக்காரர்கள், பன்னாட்டு நிறுவனங்கள் தான் லாபம் அடைந்துள்ளன.

    இந்த விவகாரத்தில் மத்திய அரசு பொதுமக்களுக்கு துரோகம் செய்து விட்டது. இதன் காரணமாக ஏ.டி.எம்.களில் காத்து கிடந்த பலர் உயிரை விட்டனர்.

    தமிழகத்தில் சொந்த நாட்டிலேயே மக்கள் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். எங்கும் மக்களின் அழுகுரல், கூக்குரல் தான் கேட்கிறது. தமிழக வாழ்வுரிமை கட்சி 150 அமைப்புகளை ஒருங்கிணைந்து செயல்படுகிறது. தேர்தல் நேரத்தில் அரசியல் கூட்டணி பற்றி முடிவு செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #velmurugan #tngovernor #tnchiefminister

    சுங்கச்சாவடி தாக்குதல் மற்றும் என்.எல்.சி முற்றுகை வழக்கில் ஜாமின் கிடைத்ததை அடுத்து தமிழக வாழ்வுரிமை கட்சித்தலைவர் வேல் முருகன் புழல் சிறையில் இருந்து இன்று விடுதலை செய்யப்பட்டார். #VelMurugan
    சென்னை:

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கடந்த ஏப்ரல் மாதம் உளுந்தூர்பேட்டை அருகே செங்குறிச்சியில் உள்ள சுங்கச்சாவடி தாக்கப்பட்டது. இந்த போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கடந்த மாதம் 26-ம் தேதி போலீசாரால் கைது செய்யப்பட்டார். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

    இரண்டு நாட்கள் சிறையில் உண்ணாவிரதம் இருந்ததன் காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிறுநீரக கோளாறும் இருப்பதால் அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.

    இதற்கிடையே, இந்திய இறையான்மைக்கு எதிராக பேசியதால் நெய்வேலி தெர்மல் காவல் நிலையத்தில் வேல்முருகன் மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

    சுங்கச்சாவடி தாக்கப்பட்ட வழக்கில் ஜாமின் கோரி வேல்முருகன் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவை இன்று விசாரித்த நீதிபதி, நாகர்கோவில் கோட்டார் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமின் வழங்கினார்.

    இதனை அடுத்து, மாலை புழல் சிறையில் இருந்து வேல்முருகன் விடுதலை செய்யப்பட்டார். 
    ஜாமீன் கேட்டு வேல் முருகன் தாக்கல் செய்த மனுக்களுக்கு பதில் அளிக்கும்படி போலீசாருக்கு சென்னை ஐகோர்ட்டு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டுள்ளது. #Velmurugan #HighCourt
    சென்னை:

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி மத்திய அரசை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கடந்த ஏப்ரல் மாதம் போராட்டம் நடந்தது.

    அப்போது, நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தை (என்.எல்.சி.யை) தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் தலைமையில், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் கடந்த ஏப்ரல் 10-ந்தேதி முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

    இதுகுறித்து நெய்வேலி அனல் மின்நிலையம் போலீசார் வேல்முருகன் உள்பட பலர் மீது வழக்குப் பதிவு செய்தனர். அவர்கள் மீது இரு பிரிவினர்களிடையே மோதலை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டியிருந்தனர்.

    அதேபோல, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி கடந்த ஏப்ரல் 1-ந்தேதி நடைபெற்ற போராட்டத்தில் உளுந்தூர்பேட்டை சுங்கச் சாவடியை சிலர் தாக்கினர்.

    இதுகுறித்து உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கிலும் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் உள்பட பலர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

    இந்த இரு வழக்குகளில் வேல்முருகன் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். அவர் சார்பில் ஜாமீன் கேட்டு உளுந்தூர்பேட்டை கோர்ட்டிலும், கடலூர் கோர்ட்டிலும் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

    இதையடுத்து சென்னை ஐகோர்ட்டில் வேல்முருகன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனுக்கள் நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

    மனுவை விசாரித்த நீதிபதி, ‘ஜாமீன் மனுக்களுக்கு பதில் அளிக்கும்படி நெய்வேலி அனல்மின் நிலையம் போலீஸ் இன்ஸ்பெக்டர், உளுந்தூர்பேட்டை போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ஆகியோருக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார். விசாரணையை வருகிற 18-ந் தேதிக்கு தள்ளிவைத்தார். #Velmurugan #HighCourt
    உளுந்தூர்பேட்டை செங்குறிச்சியில் உள்ள சுங்கசாவடியை சேதப்படுத்திய வழக்கில் வேல்முருகனுக்கு வருகிற 22-ந்தேதி வரை காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
    விழுப்புரம்:

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், சுங்க சாவடி கட்டணத்தை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஏப்ரல் 1-ந் தேதி தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தலைமையில் கட்சியினர் உளுந்தூர்பேட்டை செங்குறிச்சியில் உள்ள சுங்கசாவடியை அடித்து நொறுக்கினர்.

    இந்த வழக்கு தொடர்பாக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனை கடந்த 26-ந் தேதி கைது செய்து திருக்கோவிலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வேல்முருகனை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க கோர்ட்டு உத்தரவிட்டது. பின்னர் அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

    இந்த வழக்கில் ஜாமீன் வழங்கக்கோரி வேல்முருகன் சார்பில் விழுப்புரம் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுமீதான விசாரணை நேற்று நடந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி சரோஜினிதேவி உத்தரவிட்டார்.

    இந்த நிலையில் வேல்முருகனின் 15 நாள் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிந்தது. இதையடுத்து அவரை விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக சென்னை புழல் சிறையில் இருந்து விழுப்புரத்துக்கு தனி வேனில்பலத்த பாதுகாப்புடன் போலீசார் அழைத்து வந்தனர்.

    இன்று மதியம் 12 மணிக்கு வேல்முருகனை விழுப்புரம் கோர்ட்டுக்கு கொண்டு வந்தனர். பின்னர் நீதிபதி லதா முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அவரை வரும் 22-ந் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதை தொடர்ந்து போலீசார் பலத்த பாதுகாப்புடன் வேல்முருகனை சென்னைக்கு கொண்டு சென்றனர்.

    இதற்கிடைய வேல்முருகனை விழுப்புரம் கோர்ட்டுக்கு அழைத்து வரும் தகவல் அறிந்ததும் அவரது ஆதரவாளர்கள் கோர்ட் முன்பு திரண்டனர். வேல்முருகனை விடுதலை செய்ய கோரி அவர்கள் கோ‌ஷம் எழுப்பினர். இதையொட்டி அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.  #velmurugan

    உளுந்தூர்பேட்டை செங்குறிச்சியில் உள்ள சுங்கச்சாவடியை சேதப்படுத்திய வழக்கில் கைதான வேல்முருகனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    விழுப்புரம்:

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், சுங்கச்சாவடிகளை நிரந்தரமாக அகற்றக்கோரியும் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை செங்குறிச்சியில் உள்ள சுங்கச்சாவடியை கடந்த ஏப்ரல் மாதம் 1-ந் தேதி தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தலைமையில் கட்சியினர் முற்றுகையிட்டனர்.

    பின்னர் சுங்கச்சாவடியை அவர்கள் அடித்து நொறுக்கி சேதப்படுத்தினார்கள். இதுதொடர்பாக வேல்முருகன் உள்பட 13 பேர் மீது 7 பிரிவுகளின் கீழ் உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் கடந்த 26-ந் தேதி வேல்முருகனை போலீசார் கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

    இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தனது வக்கீல் காந்தி குமார் மூலம் விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த 28-ந் தேதி மனுதாக்கல் செய்தார்.

    இந்த மனு விழுப்புரம் மாவட்டம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று மதியம் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சரோஜினிதேவி ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். #Velmurugan
    ×